Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

air-port.jpg?resize=556%2C338&ssl=1

பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு!

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று (08) பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம்  அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து லாகூர் விமான நிலையத்திலும்  வீதிகளிலும்  அபாய ஒலி எழுப்பப்பட்டதால் அச்சமடைந்த மக்கள் அப்பகுதியை விட்டு அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை  உறுதிப் படுத்தியுள்ள பொலிஸார் விமானநிலையத்திற்கு அருகிலுள்ள வோல்டன் வீதியில் குண்டு வெடிப்பு நடந்தது என்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக நள்ளிரவில் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியை மூடியதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், லாகூர் மற்றும் இஸ்லாமா பாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1431260

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-107.jpg?resize=750%2C375&ssl

12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவிப்பு!

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு ஒரே இரவில் 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது.

இவற்றுள் ஒன்று கிழக்கு நகரமான லாகூருக்கு அருகிலுள்ள ஒரு இராணுவ இலக்கைத் தாக்கியது.

இதனால் வீரர்கள் இழப்புக்களை சந்தித்ததாகவும், காயமடைந்ததாகவும் பாகிஸ்தானிய அதிகாரிகள் வியாழக்கிழமை (08)தெரிவித்தனர்.

ஒரு நாள் முன்பு பாகிஸ்தான் இடங்களில் இந்திய ஏவுகணைத் தாக்குதல்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 31 பொது மக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையில், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் இரு நாடுகளின் அதிக இராணுவமயமாக்கப்பட்ட எல்லைக்கு அருகிலுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை இந்தியா வெளியேற்றியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் 26 பேரைக் கொன்றதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

அவர்களில் பெரும்பாலோர் இந்திய இந்து சுற்றுலாப் பயணிகள்.

தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது, ஆனால் இஸ்லாமாபாத் அதை மறுத்துள்ளது.

பாகிஸ்தானில் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் கூறுகையில்,

இந்திய ஆளில்லா விமானம் லாகூர் அருகே இரவு முழுவதும் நான்கு வீரர்களைக் காயப்படுத்தியது மற்றும் ஒரு இராணுவ இலக்கை ஓரளவு சேதப்படுத்தியது.

அதே நேரத்தில் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்த 12 இந்திய ஆளில்லா விமானங்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.

தாக்குதல் குறித்து அவர் மேலும் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

தெற்கு சிந்து மாகாணத்தில், மக்கள் வசிக்கும் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் இடிபாடுகள் விழுந்ததில் ஒரு குடிமகன் உயிரிழந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார் என்று அவர் மேலும் கூறினார்.

இந்திய அதிகாரிகள் இது குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

லாகூரில், இந்திய எல்லையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு விமானநிலையமான வால்டன் விமான நிலையம் அருகே ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தானிய காவல்துறை அதிகாரி மொஹமட் ரிஸ்வான் தெரிவித்தார்.

இந்த விமானநிலையத்தில் இராணுவ நிலைகளும் உள்ளன.

பஞ்சாப் மாகாணத்தின் பிற நகரங்களிலும் இரண்டு கூடுதல் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் தலைநகரம் லாகூர் ஆகும்.

பஞ்சாபின் சக்வால் மாவட்டத்தில், விவசாய நிலத்திற்குள் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதனால், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

மாவட்ட காவல்துறைத் தலைவர் குலாம் மொஹியுதீன் அது யாருடைய ட்ரோன் என்று கூறவில்லை.

அதிகாரிகள் ட்ரோனின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

https://athavannews.com/2025/1431284

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

air-port.jpg?resize=556%2C338&ssl=1

பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு!

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று (08) பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம்  அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து லாகூர் விமான நிலையத்திலும்  வீதிகளிலும்  அபாய ஒலி எழுப்பப்பட்டதால் அச்சமடைந்த மக்கள் அப்பகுதியை விட்டு அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை  உறுதிப் படுத்தியுள்ள பொலிஸார் விமானநிலையத்திற்கு அருகிலுள்ள வோல்டன் வீதியில் குண்டு வெடிப்பு நடந்தது என்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக நள்ளிரவில் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியை மூடியதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், லாகூர் மற்றும் இஸ்லாமா பாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1431260

இந்திய பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

pak-3.jpg?resize=619%2C375&ssl=1

இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு!

இந்தியாவில் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக  பாதுகாப்பு துறை அறிவித்து உள்ளது.

இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலம் மீது பாகிஸ்தான் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. காஷ்மீரின் பாரமுல்லா, உரி பூஞ்ச் பகுதிகளில் கனரக பீரங்கிகளை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.

காஷ்மீரின் குப்வாரா, பூஞ்ச், ரஜோரி, மெந்தார் உள்ளிட்ட நகரங்கள் மீதும் தாக்குதலை நடத்தியது. இந்நிலையில், இதற்கு இந்திய ஆயுதப்படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. எல்லையில் இருந்து ஏறக்குறைய 30 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லாகூரில் இராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதில், லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு பிரிவான எச்.கியூ.-9 தாக்கி அழிக்கப்பட்டது. பீரங்கி கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பாகிஸ்தானின் முயற்சியையும் இந்தியா முறியடித்து உள்ளது. இதேபோன்று டிரோன்களை கொண்டு தாக்க முயன்ற அந்நாட்டு முயற்சியையும் இந்திய ராணுவம் முறியடித்து உள்ளது.

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ரேடார்கள் தகர்க்கப்பட்டன. வான் தடுப்பு பிரிவையும் இந்தியா தாக்கி அழித்தது. காலையில் இருந்து இந்தியாவின் இந்த பதிலடி தொடர்ந்து வருகிறது.

இதில்,ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், சண்டிகார் உள்ளிட்ட 15 நகரங்களை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப்பின் ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், சண்டிகார் ஆகிய நகரங்களிலும், காஷ்மீரின் ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட் உள்ளிட்ட நகரங்களிலும் தாக்குதலை பாகிஸ்தான் தீவிரப்படுத்திய நிலையில், அதனை இந்தியா முறியடித்து உள்ளது.

இந்தியா மீது இதுவரை பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இதுவரை 3 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், ஒப்ரேஷன் சிந்தூர் தொடர்ந்து வருகிறது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

https://athavannews.com/2025/1431308

###################################

இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்திய பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்.

இந்தியப் பயங்கரவாதிகளுக்கு... பாகிஸ்தான் மற்றைய முஸ்லீம் நாடுகளுடனும், சீனாவுடனும் இணைந்து... தலை நிமிர முடியாத அளவிற்கு தாக்குதல் நடத்த வேண்டும். அதற்காக வட இந்தியாவில் 10 அணு குண்டை போட்டாலும் குற்றம் இல்லை. இந்த உலகத்தில்.... இனி இந்தியா என்ற உதவாக்கரை நாடே இருக்கப் படாது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக கூறும் இந்தியா, 25 இந்திய டிரோன்களை வீழ்த்தியதாக கோரும் பாகிஸ்தான்

'25 இந்திய டிரோன்களை அழித்தோம்' என கூறும் பாகிஸ்தான் - இந்தியாவின் பதில் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்

8 மே 2025, 11:23 GMT

புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்

பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, புதன்கிழமை இரவு முதல் 25 இந்திய டிரோன்களை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது.

முன்னதாக, 12 இந்திய டிரோன்களை அழித்ததாக பாகிஸ்தானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் கூற்றுகளுக்கு இந்தியா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

அதே சமயம், 'புதன்கிழமை இரவு, டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பல இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்க முயன்றதாக' இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானின் 'பல இடங்களில்' உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார்களை குறிவைத்து அழித்ததாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஒரு அறிக்கையையும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் மே 7 அதிகாலையில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில், 57 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ''பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து மட்டுமே தாக்குதல்'' நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்டுள்ளது.

மறுபுறம், பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதல்களில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 16 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் உறுதி செய்துள்ளார்.

'25 இந்திய டிரோன்களை அழித்தோம்- பாகிஸ்தான்'

'25 இந்திய டிரோன்களை அழித்தோம்' என்ற பாகிஸ்தானின் கூற்றுக்கு இந்தியாவின் பதில் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இந்திய துணை ராணுவ வீரர் ஒருவர்

பாகிஸ்தானின் வெவ்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்ட 12 இந்திய டிரோன்களை அழித்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃப்டினெண்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி முன்னர் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு, பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியானது. அதில் புதன்கிழமை இரவு முதல், பாகிஸ்தான் ராணுவம் 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியா கூறியது என்ன?

'25 இந்திய டிரோன்களை அழித்தோம்' என்ற பாகிஸ்தானின் கூற்றுக்கு இந்தியாவின் பதில் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய துணை ராணுவ வீரர்கள்

இன்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மே 07, 2025 அன்று நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இந்தியாவின் பதிலடி 'தெளிவான இலக்கோடு, அளவோடு மற்றும் பதற்றத்தை அதிகரிக்காத வகையில் நடத்தப்பட்டது' என தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவ தளங்கள் குறிவைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டது. இந்தியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பொருத்தமான பதிலடி தரப்படும் என்பதும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது." என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், நேற்றிரவு, அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல ராணுவ தளங்களை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது என பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

பாகிஸ்தானின் இந்த தாக்குதல்கள் ஒருங்கிணைந்த 'கவுண்டர் UAS (ஆளில்லா விமான அமைப்பு) கிரிட்' மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் டிரோன்களின் சிதைந்த பாகங்கள் இப்போது பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருவதாகவும், இது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது என்பதை நிரூபிக்கிறது என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், வியாழக்கிழமை காலை பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை இந்திய ராணுவம் குறிவைத்ததாக இந்தியாவின் அறிக்கை தெரிவித்துள்ளது. "நம்பகமான தகவலின்படி, லாகூரில் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது" என்றும் அமைச்சகம் கூறியது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் தனது துப்பாக்கிச் சூட்டின் தீவிரத்தை மோர்டார் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூடு காரணமாக மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட பதினாறு அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், இதனால் பாகிஸ்தானின் மோர்டார் மற்றும் பீரங்கித் தாக்குதலை நிறுத்த மற்றும் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இருநாடுகளின் கூற்றையும் பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை

'பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி நிச்சயம்'

'25 இந்திய டிரோன்களை அழித்தோம்' என்ற பாகிஸ்தானின் கூற்றுக்கு இந்தியாவின் பதில் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,'நிலைமையை மேலும் மோசமாக்கும் நோக்கம்' இந்தியாவிற்கு இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்

பாகிஸ்தானுடனான 'நிலைமையை மேலும் மோசமாக்கும் நோக்கம்' இந்தியாவிற்கு இல்லை என்றும், ஆனால் இந்தியா மீதான எந்தவொரு ராணுவத் தாக்குதலுக்கும் 'மிகவும் உறுதியான பதிலடி' வழங்கப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 20வது இந்தியா-இரான் கூட்டு ஆணையக் கூட்டத்தில் ஜெய்சங்கர் உரையாற்றினார். அங்கு அவர் வருகை தந்த இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியை வரவேற்றார். இந்தியா-இரான் நட்பு ஒப்பந்தத்தின் 75 ஆண்டுகளை இரு நாடுகளும் கொண்டாடுகின்றன.

"ஒரு காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுக்கும் நேரத்தில் நீங்கள் இந்தியாவுக்கு வருகை தருகிறீர்கள்," என்று ஜெய்சங்கர் கடந்த மாதம் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிப்பிட்டு பேசினார்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் மீதான இந்தியாவின் வான்வழித் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், "நிலைமையை மேலும் மோசமாக்குவது எங்கள் நோக்கமல்ல. இருப்பினும், எங்கள் மீது ராணுவத் தாக்குதல்கள் நடந்தால், அதற்கு மிக மிக உறுதியான பதிலடி வழங்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.

"ஒரு அண்டை நாடு என்ற நோக்கத்திலும், ஒரு நட்பு நாடாகவும், நிலைமையை நீங்கள் நன்கு புரிந்துகொள்வது முக்கியம்" என்று ஜெய்சங்கர், இரானிய வெளியுறவு அமைச்சரிடம் கூறினார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய இரான் முன்பு முன்வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3wd6e0jqqjo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியப் பயங்கரவாதிகளுக்கு... பாகிஸ்தான் மற்றைய முஸ்லீம் நாடுகளுடனும், சீனாவுடனும் இணைந்து... தலை நிமிர முடியாத அளவிற்கு தாக்குதல் நடத்த வேண்டும். அதற்காக வட இந்தியாவில் 10 அணு குண்டை போட்டாலும் குற்றம் இல்லை. இந்த உலகத்தில்.... இனி இந்தியா என்ற உதவாக்கரை நாடே இருக்கப் படாது.

சீனா கொடுத்த புதியவகை ஜெட், மிசைலை கொண்டுதான் ரெபேலுக்கு தண்ணி காட்டி இருக்காங்கள்.

இப்ப அமெரிக்கன், நேட்டோக்கு எல்லாம் வயித்த லேசா கலக்கி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்+

50 வண்டுகள்வீழ்ந்திட்டுதாம்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

சீனா கொடுத்த புதியவகை ஜெட், மிசைலை கொண்டுதான் ரெபேலுக்கு தண்ணி காட்டி இருக்காங்கள்.

இப்ப அமெரிக்கன், நேட்டோக்கு எல்லாம் வயித்த லேசா கலக்கி இருக்கும்.

இந்தியன் தேவையில்லாமல் செய்த வேலையாலை...

ரபேல் விமானத்தின்ரை பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி , அதன் விற்பனை விலையையையும் பாதியாக குறைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

ஒரு நாளும்... இந்தியனுக்கு ஆயுதம் விற்கக் கூடாது. பாவம் பிரான்ஸ்.

உள்ளதையும் கெடுத்தானாம்... நொள்ளைக் கண்ணன். 😂

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியாவின் உலங்குவானூர்தி ஒன்றை இந்தியரே வெற்றிகரமாக சுட்டுவீழ்த்தியுள்ளனர். 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நன்னிச் சோழன் said:

இந்தியாவின் உலங்குவானூர்தி ஒன்றை இந்தியரே வெற்றிகரமாக சுட்டுவீழ்த்தியுள்ளனர். 😜

பிளடி... அன்ரி இண்டியன், சேம் சைட் கோல் போட்டிருக்கிறான். animiertes-gefuehl-smilies-bild-0090.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

80 விமானங்களை தாக்குதலுக்கு பயன்படுத்தினவர்களாம்!

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2025 at 23:26, goshan_che said:

பாக் ஆக்கிரமிப்பு கஸ்மீரின் கொட்லி, முசபரபாத் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹவல்பூரில் தாக்குதலாம்.

டிஸ்கி

இரெண்டு கிழமையாக ஆ…ஊ…என சீன் போட்ட பிராந்திய வாலரசு….பாகிஸ்தானில் மூன்று குடிசைகை கொழுத்தி விட்டு ஏதோ பெரிய வெற்றி போல் பில்டப் கொடுக்கிறார்கள்.

அதற்கொரு பெயர் வேறு. தூ.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

80 விமானங்களை தாக்குதலுக்கு பயன்படுத்தினவர்களாம்!

அதிலை 5 பரலோகம் போட்டுதாம். இவர்கள்... இஸ்ரேல், ரஷ்யா மாதிரி தொடர்ந்து தாக்கிக் கொண்டு இருக்கலாம் என்று நினைத்து இருப்பார்கள். பாகிஸ்தான் ஏற்கெனவே எல்லாவற்றையும் எதிர்பார்த்து நிர்மூலமாக்கி விட்டார்கள். இனி இந்தியா... தலையில் துண்டைப் போட்டுக் கொண்டுதான் வெளியில் நடமாட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்+
Just now, தமிழ் சிறி said:

அதிலை 5 பரலோகம் போட்டுதாம். இவர்கள்... இஸ்ரேல், ரஷ்யா மாதிரி தொடர்ந்து தாக்கிக் கொண்டு இருக்கலாம் என்று நினைத்து இருப்பார்கள். பாகிஸ்தான் ஏற்கெனவே எல்லாவற்றையும் எதிர்பார்த்து நிர்மூலமாக்கி விட்டார்கள். இனி இந்தியா... தலையில் துண்டைப் போட்டுக் கொண்டுதான் வெளியில் நடமாட வேண்டும்.

வடக்கன் செத்துக்கிடக்கிற காட்சி:

(இந்த மாதிரி முல்லாக்களையும் பாக்கனும்)

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

அதிலை 5 பரலோகம் போட்டுதாம். இவர்கள்... இஸ்ரேல், ரஷ்யா மாதிரி தொடர்ந்து தாக்கிக் கொண்டு இருக்கலாம் என்று நினைத்து இருப்பார்கள். பாகிஸ்தான் ஏற்கெனவே எல்லாவற்றையும் எதிர்பார்த்து நிர்மூலமாக்கி விட்டார்கள். இனி இந்தியா... தலையில் துண்டைப் போட்டுக் கொண்டுதான் வெளியில் நடமாட வேண்டும்.

அமத்தி வாசிங்க அண்ணை, ஏற்கனவே த.வி.பு மீதான தடைக்கு புலம்பெயர் ஆதரவாளர்களின் இந்திய எதிர்ப்பையும் காரணமாக குறிப்பிட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

அமத்தி வாசிங்க அண்ணை, ஏற்கனவே த.வி.பு மீதான தடைக்கு புலம்பெயர் ஆதரவாளர்களின் இந்திய எதிர்ப்பையும் காரணமாக குறிப்பிட்டவர்கள்.

ஏராளன்.... எங்களிடம் இனி இழக்க எதுவும் இல்லை.

நாங்கள் இந்தியனுக்கு நல்லெண்ணம் காண்பித்தாலும், அவன் எம்மை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

ஆதலால், கிடைக்கும் சந்தர்ப்பங்களில்.... இந்தியனை துகில் உரிந்து விட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

495911147_9862849840428332_7965952948310

அட... இஞ்ச பார்றா.... யாருக்கு, யார் எச்சரிக்கை விடுக்கிறது.

இவங்களின் காமெடி தாங்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

495570573_1897447467676538_5686781372878

  • கருத்துக்கள உறவுகள்+

58 minutes ago, நன்னிச் சோழன் said:

வடக்கன் செத்துக்கிடக்கிற காட்சி:

(இந்த மாதிரி முல்லாக்களையும் பாக்கனும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரபேலை(களை) வீழ்த்த பாகிஸ்தான் என்ன செய்தது?

  1. ரபேல் 250 கிமி பாயும் மீட்டியோர் மிசைல் உடையது.

  2. வழமையாக சீனா ஏற்றுமதிக்கு 150 கிமி மிசைல்களையே வழங்கும். ஆனால் பாகிஸ்தான் சீனா தான் மட்டும் பாவிக்க என தயாரித்த 300 கிமி பாயும் மிசைலை பெற்று கொண்டது.

  3. ஆனால் பாக்கிஸ்தானிடம் உள்ள மிசைல் ஏவும் JF17 சீன போர் விமானங்கள் 150 கிமி மட்டும் “பார்க்கும்” ரேடார் உடையன.

  4. ஆனால் பாகிஸ்தானிடம் இருக்கும் சுவீடனின் சாப் 2000 ரேடார் விமானம் 400 கிமி வரை பார்க்கும் ரேடார் உடையது. இதில் இருந்து இந்தியாவுக்குள் 400 கிமி தொலைவில் இருந்த ரபேல்களின் லொக்கேசனை கண்டு, அதை சாப் JF17 க்கு கொடுக்க, JF17, “கண்ணை மூடி கொண்டு” அந்த ரபேல்களின் லொக்கேசனை நோக்கி 300 கிமி பாயும் மிசைல்களை ஏவியதாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

495911147_9862849840428332_7965952948310

அட... இஞ்ச பார்றா.... யாருக்கு, யார் எச்சரிக்கை விடுக்கிறது.

இவங்களின் காமெடி தாங்க முடியவில்லை.

நிலமையை மேலும் மோசமாக்குவது…

அதாவது இன்னும் ஐந்து விமானங்களை கயலாங்கடைக்கு அனுப்புவது…

இந்தியாவின் நோக்கம் அல்ல.🤣

ஜெய்சங்கர்


சீனன் குசும்பு 👇

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நிலமையை மேலும் மோசமாக்குவது…

அதாவது இன்னும் ஐந்து விமானங்களை கயலாங்கடைக்கு அனுப்புவது…

இந்தியாவின் நோக்கம் அல்ல.🤣

ஜெய்சங்கர்


சீனன் குசும்பு 👇

சீனாக்காரனின் வில்லுப்பாட்டு நல்லாய் இருக்கு, 😂

அவனும்… எங்களைப் போல் இந்தியா மீது, பயங்கர கடுப்பில் இருக்கின்றான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் வெளில திட்டினாலும் இந்தியா இந்தப்போரில் வெல்லவேணும் எண்டு எட்டி எட்டி நியூஸ் எல்லாம் பாத்துக்கொண்டிருக்கிறன்.. தானாடாவிட்டாலும் தன் தசை ஆடுமாம்… பாகிஸ்தனுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்.. ஆனா இந்தியா.. அதுவும் தமிழ்நாடு எங்கள் வாழ்வோடு பிரிக்கமுடியாதது..

மற்றது அடிப்படைவாத சோனி உலகத்தில் எந்த மூலையிலும் வெல்லக்கூடாது.. உலக அமைதிக்கே கேடு அவர்கள்.. அதுவும் ஒரு பைத்தியக்கார மதவெறியர்களிடம் அணுகுண்டு இருப்பது மனிதகுலத்துக்கே ஆபத்தானது.. மேற்குலக நாடுகள் மட்டும் பலமானதாக இல்லை என்றால் இந்த சோனி நாடுகள் முஸ்லீம் அல்லாத நம்மை எல்லாம் காபீர்கள் என்று எப்பவோ கொன்று புதைத்து அங்கு புல்பூண்டு முளைத்திருக்கும்.. புலிகள் இதில் கெட்டிக்காரர்கள்..

ஜெய்கிந்..😆

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ் சேனல்களின் அலப்பறை தாங்க முடியவில்லை! நடக்கிறதை அப்படியே மாற்றி சொல்கிறார்கள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.