Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !

ShanaMay 7, 2025

sumanthiran%20(2).jpg

இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது எனஇலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

கடந்த தேர்தல்களிலே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணைகிடைத்திருக்கவில்லை.25வீத வாக்குகளை மாத்திரம் எங்கள் யாழ்;ப்பாணத்திலே பெற்றுவிட்டு தங்களிற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது என அவர்கள் தெரிவித்தது தவறான கருத்து ஆனால் தனியொரு கட்சியாக 2018 இல் தமிழ்தேசிய கூட்டமைப்பாக நாங்கள் போட்டியிட்டு பெற்ற வெற்றியை விட தனியாக இம்முறை நாங்கள் போட்டியிட்டு பெற்ற வெற்றி மேலானது.

நான் கடந்த காலங்களில் கூறிவந்திருக்கின்றேன் ஒரு கட்சி தனியாக போட்டியிடுவதை தவிர்த்து ஒன்றாகயிருக்கின்ற கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு பின்னர்,நிர்வாகங்களை அமைப்பது சாத்தியமானது என. அந்த கணக்கு தற்போது பலருக்கு புரியும் புரியவரும்.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும்.

இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது.

ஆகவே தற்போது தமிழ்தேசிய கூட்டமைப்பிலே இருந்தவர்கள்,தற்போது ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பாக உள்ளனர் அவர்களும் எதிர்காலத்தில் எங்களிற்கு வாய்ப்பளிக்கின்ற போது எல்லா இடங்களிலும் நாங்கள் இவ்வாறான நிலையை சந்திக்ககூடியதாகயிருக்கும்

https://www.battinews.com/2025/05/blog-post_920.html

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபை

தமிழ் தேசிய பேரவை – 12 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 13 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 10 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 04 ஆசனங்கள்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 04 ஆசனங்கள்.

ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம்

ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம்

13 vs 32

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சி இலங்கை பாராளுமன்றில் மூன்றாவது பெரும்பான்மை கட்சியாக இருந்து இப்போ ஐந்தாம் இடத்தில் இருப்பது சுமந்திரனுக்கு தெரியாது போலுள்ளது.

அந்த ஐந்தாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டதும்…சாணக்கியனின் கெட்டித்தனமே தவிர, சுமந்திரன் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வீடு பழசென்றபடியால் இப்பவும் ஸ்ரோங்கா நிற்குது.

தமிழ் கட்சிகள் தனியே ஆட்சியமைக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

தங்களுக்குள் சமரசம் செய்ய முற்படாமல்

அனுராவுடன் கூட்டு சேருகிறார்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து பயணிக்கத் தயார்

#TruthAboutSumanthiran

#PalaliLandIssue #JusticeForNorthEast #TamilStruggle #LegalTruths #WhoSpeaksForUs #HumanRightsSriLanka #ExposeTheTruth

மேலும் எனுடன் நேரடியானகருத்துப்பரிமாற்றலுடன் இணைய எனது Whtaspp குழுவிவிலும் இணையலாம்.

WhatsApp.com
No image preview

Truth About Sumanthiran

WhatsApp Group Invite

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02B8zst7AhbqCGcurEr88G8NXu5bH7gysXub7KYmdjfmPBdyyHMux2udD7L6qXts28l&id=100044426436593&mibextid=wwXIfr

கஜேந்திரகுமார் கேட்ட போதே இணைந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

கடந்த தேர்தல்களிலே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணைகிடைத்திருக்கவில்லை.25வீத வாக்குகளை மாத்திரம் எங்கள் யாழ்;ப்பாணத்திலே பெற்றுவிட்டு தங்களிற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது என அவர்கள் தெரிவித்தது தவறான கருத்து ஆனால் தனியொரு கட்சியாக 2018 இல் தமிழ்தேசிய கூட்டமைப்பாக நாங்கள் போட்டியிட்டு பெற்ற வெற்றியை விட தனியாக இம்முறை நாங்கள் போட்டியிட்டு பெற்ற வெற்றி மேலானது.

https://www.battinews.com/2025/05/blog-post_920.html

சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்? தமிழ் தேசிய பேரவையில், கடந்த தேர்தலில் போட்டியிட சீற் கிடைக்காமல் போனதால் திடீரென்று "தேசிய நரம்பில் கரண்ட்" பாய்ந்தவர்கள்😎 பலர் கூட்டாக நின்றார்கள். தமிழரசுக் கட்சி தனியாக ஒரு கட்சியாக நின்றது. தேர்தலின் பின்னர் கொள்கை ஒத்து வந்தால் சேர்ந்து கொள்ளலாம் என்று முன்னர் சொல்லப் பட்டது போல செய்யலாம்.

(தமிழ் நாட்டில் ஒரு கட்சி ஒற்றையாக நின்று டிபோசிற் இழக்கும் தருணங்களில், "தனியாக நிக்கிறாங்கள்- அதுவே வெற்றி" என்று வாழ்த்தும் ரசிகர்கள், அதே தியரியை தமிழரசுக்குப் பிரயோகிக்க மாட்டார்களாம்!)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அது உங்கள் கோளாறு. எண்பதற்கு மேல் வாக்கு வங்கியை வைத்திருந்த ஒரு பெரும் கட்சியை ஒரு வாக்கில் தொடங்கி வளரும் இன்னொரு கட்சியுடன் சீண்டு முடியவேண்டிய நிலையில் கருத்து வறுமை வெறுமை அல்லது வஞ்சனை....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

சுமந்திரன் தோற்ற போது உங்களுக்கு ஏன் கறன் பாயவில்லை. இப்போ தமிழ் நாட்டை ஒப்பிட வந்து விட்டீர்கள்?

சாவகச்சேரி , பருத்திதுறை தொகுதிகளில் தமிழரசு கட்சி சேர்ந்து பயணிக்க தயாரா? அல்லது புறணி கூறலா???

  • கருத்துக்கள உறவுகள்

வந்தாரையா நாகரீகக் கோமாளி ..

மல்லி நாமல் பரவாயில்லை .. பத்து வீதம் எடுத்துவிட்டோம் , பல சபாக்களில் கட்டுப்பாட்டைப் பெற்றிருக்கிறோம் என புளகாங்கிதம் ..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அது உங்கள் கோளாறு. எண்பதற்கு மேல் வாக்கு வங்கியை வைத்திருந்த ஒரு பெரும் கட்சியை ஒரு வாக்கில் தொடங்கி வளரும் இன்னொரு கட்சியுடன் சீண்டு முடியவேண்டிய நிலையில் கருத்து வறுமை வெறுமை அல்லது வஞ்சனை....

2 hours ago, nunavilan said:

சுமந்திரன் தோற்ற போது உங்களுக்கு ஏன் கறன் பாயவில்லை. இப்போ தமிழ் நாட்டை ஒப்பிட வந்து விட்டீர்கள்?

சாவகச்சேரி , பருத்திதுறை தொகுதிகளில் தமிழரசு கட்சி சேர்ந்து பயணிக்க தயாரா? அல்லது புறணி கூறலா???

இப்ப ஏன் உங்கள் இருவருக்கும் "உச்சியில் கரண்ட்" பாய்கிறது😂?

உரிய உதாரணம் என்றால் எந்த நாட்டிலிருந்தும் எடுக்கலாம். இதைத் தடுக்கும் விதிகள் எவையும் இருக்கின்றனவா க.க "நிர்வாகி" நுணாவிலான்😎?

தமிழ் நாட்டுக் கட்சி மீள மீள தோற்று டிப்போசிற் இழக்கும் வேளைகளில் "தனிய நின்று இவ்வளவு எடுத்தார்கள்" என்று உச்சி முகர்ந்தவர்கள், தனியாக தமிழரசு , கூட்டை விட வென்றிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுப்பது என்னத்தில் இருக்கும் "வரட்சி"? நிச்சயமாக கருத்தின் வரட்சி இல்லை, அது வேறேதோ "வரட்சி"😂!

  • கருத்துக்கள உறவுகள்

சுத்து மாத்தருக்கு கிடைச்சிருக்கும் கடைசிச் சுற்று வாய்ப்பு இது என பட்சி சொல்கிறது ..

மக்கள் சகலமும் அறிவர் ..

பாடம் படித்தோரும் , ஆக குறைந்தது படிக்க மெய்யாலுமே அக்கறை காட்டுபவரும் பிழைத்துக் கொள்வர்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சாமானியன் said:

சுத்து மாத்தருக்கு கிடைச்சிருக்கும் கடைசிச் சுற்று வாய்ப்பு இது என பட்சி சொல்கிறது ..

மக்கள் சகலமும் அறிவர் ..

பாடம் படித்தோரும் , ஆக குறைந்தது படிக்க மெய்யாலுமே அக்கறை காட்டுபவரும் பிழைத்துக் கொள்வர்

நிறையப் பேருக்கு உள்ளூராட்சி தேர்தலுக்கும்நாடாளுமன்றத்தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியேலை. உள்ளூராட்சித்தேர்தலில் அந்த வட்டாரத்தில் செல்வாக்கான ஒருவரை எந்தக்கட்சிநிறுத்தினாலும் வெல்லுவார். உதாரணம் எங்கள் ஊரில் காலம் காலமாக தமிழரசுக்கட்சி , தமிழ்த்தேசியக்கூட்டமைப்புதான் வெல்லும் (அவர்களும் செல்வாக்கான ஆளைத்தான்நிறுத்துவார்கள்). ஆனால் இந்த முறை சங்கு தான் வென்றது ஏனென்றால் தமிழரசுக்கட்சி சார்பில் செல்வாக்கான ஒருவரைநிறுத்தவில்லை (காலம் காலமாக தமிழரசுக் கட்சிக்கு போடுபவர்களே போடவில்லை). ஆனால்நாடாளுமன்றத்தேர்தலில் இந்த வாக்குகள் சங்குக்கு கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

இப்ப ஏன் உங்கள் இருவருக்கும் "உச்சியில் கரண்ட்" பாய்கிறது😂?

உரிய உதாரணம் என்றால் எந்த நாட்டிலிருந்தும் எடுக்கலாம். இதைத் தடுக்கும் விதிகள் எவையும் இருக்கின்றனவா க.க "நிர்வாகி" நுணாவிலான்😎?

தமிழ் நாட்டுக் கட்சி மீள மீள தோற்று டிப்போசிற் இழக்கும் வேளைகளில் "தனிய நின்று இவ்வளவு எடுத்தார்கள்" என்று உச்சி முகர்ந்தவர்கள், தனியாக தமிழரசு , கூட்டை விட வென்றிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுப்பது என்னத்தில் இருக்கும் "வரட்சி"? நிச்சயமாக கருத்தின் வரட்சி இல்லை, அது வேறேதோ "வரட்சி"😂!

சீ சீ

சீமான் மீது அவ்வளவு லவ் உங்களுக்கு. எங்கே என்றாலும் உச்சா போக அவர் தான் உங்களுக்கு....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சீ சீ

சீமான் மீது அவ்வளவு லவ் உங்களுக்கு. எங்கே என்றாலும் உச்சா போக அவர் தான் உங்களுக்கு....

தீவிர தமிழ் தேசியர்கள் "உள் முரண்பாட்டின்-cognitive dissonance" முழு வடிவமாக இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். சீமானின் "வாய் வீச்சுக் கட்சியை" தோற்றாலும் கூட தலையில் தாங்கிய படி, உள்ளூரில் ஒரு பழம் பெரும் கட்சி இன்னும் தனியே நிற்பதை "தொண்டையில் முள்" காரணமாகக் கடந்து போகிறார்கள்.

அதே நேரம், சீமான் "லவ்" மிகுந்து விட்டதால், சராசரிக்கும் கீழான அரசியல் வாதியான சீமானை யாராவது குறை சொன்னால், குறை சொன்னவரைத் தான் தாக்குவர். இது தான் "உச்சா" 😂போகும் செயலேயொழிய, நான் எழுதிய எவையும் அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

உச்சா போவதாக குறிப்பிடத்தக்கது எல்லா இடமும் அதை காவித் திரிவதை... சிலது புரியாமல் இருக்காது. கொம்பு மறைத்து விட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

உச்சா போவதாக குறிப்பிடத்தக்கது எல்லா இடமும் அதை காவித் திரிவதை... சிலது புரியாமல் இருக்காது. கொம்பு மறைத்து விட்டிருக்கும்.

தீவிர தமிழ் தேசியர்களுக்கு தமிழ் மொழியாண்மை கொஞ்சம் குறைவாக இருப்பதும் ஒரு தனியியல்பாகக் கண்டிருக்கிறேன். முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டுவதற்கு தமிழ் நாட்டு சாக்கடை அரசியல் கட்சியை குறிப்பிட வேண்டியது தவிர்க்க இயலாதது! இனியும் தவிர்க்கப் போவதில்லை, எனவே பழகிக் கொள்ளுங்கள்😎!

  • கருத்துக்கள உறவுகள்

புரிந்தது தான்.

தமிழ் தேசிய அலர்ஜியினருக்கு மொழி அறியாண்மை மட்டுமல்ல தனி ஆவர்த்தனமும் பிரிக்க முடியாத வியாதி என்பதும்....

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:

புரிந்தது தான்.

தமிழ் தேசிய அலர்ஜியினருக்கு மொழி அறியாண்மை மட்டுமல்ல தனி ஆவர்த்தனமும் பிரிக்க முடியாத வியாதி என்பதும்....

எனக்கு நீங்கள் நேரடியாக பதில் எழுதாமல் விட்டால் "உவர் தனியாகப் பேசுகிறார்" என்று குதூகலம்! எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறீர்கள்😂!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாதவூரான் said:

நிறையப் பேருக்கு உள்ளூராட்சி தேர்தலுக்கும்நாடாளுமன்றத்தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியேலை. உள்ளூராட்சித்தேர்தலில் அந்த வட்டாரத்தில் செல்வாக்கான ஒருவரை எந்தக்கட்சிநிறுத்தினாலும் வெல்லுவார். உதாரணம் எங்கள் ஊரில் காலம் காலமாக தமிழரசுக்கட்சி , தமிழ்த்தேசியக்கூட்டமைப்புதான் வெல்லும் (அவர்களும் செல்வாக்கான ஆளைத்தான்நிறுத்துவார்கள்). ஆனால் இந்த முறை சங்கு தான் வென்றது ஏனென்றால் தமிழரசுக்கட்சி சார்பில் செல்வாக்கான ஒருவரைநிறுத்தவில்லை (காலம் காலமாக தமிழரசுக் கட்சிக்கு போடுபவர்களே போடவில்லை). ஆனால்நாடாளுமன்றத்தேர்தலில் இந்த வாக்குகள் சங்குக்கு கிடைக்காது.

எமது ஊரிலும் வீடு வென்றுள்ளது.

காரணம் கூடிய உறவினர்கள்.

நல்லவர் என்று பெயரெடுத்தவர்.

இது இரண்டும் காணும் வெல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வாதவூரான் said:

நிறையப் பேருக்கு உள்ளூராட்சி தேர்தலுக்கும்நாடாளுமன்றத்தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியேலை. உள்ளூராட்சித்தேர்தலில் அந்த வட்டாரத்தில் செல்வாக்கான ஒருவரை எந்தக்கட்சிநிறுத்தினாலும் வெல்லுவார். உதாரணம் எங்கள் ஊரில் காலம் காலமாக தமிழரசுக்கட்சி , தமிழ்த்தேசியக்கூட்டமைப்புதான் வெல்லும் (அவர்களும் செல்வாக்கான ஆளைத்தான்நிறுத்துவார்கள்). ஆனால் இந்த முறை சங்கு தான் வென்றது ஏனென்றால் தமிழரசுக்கட்சி சார்பில் செல்வாக்கான ஒருவரைநிறுத்தவில்லை (காலம் காலமாக தமிழரசுக் கட்சிக்கு போடுபவர்களே போடவில்லை). ஆனால்நாடாளுமன்றத்தேர்தலில் இந்த வாக்குகள் சங்குக்கு கிடைக்காது.

சகல சர்வமும் அறிந்த தாங்கள் திருவாய் மலர்ந்தருளுகையில் , சொன்ன விடயங்கள் சரியாக இருப்பதனை விட வேறெப்படி இருக்க முடியும் , வாதவூரார், எங்கோன்..... 🙂

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2025 at 22:06, Justin said:

இப்ப ஏன் உங்கள் இருவருக்கும் "உச்சியில் கரண்ட்" பாய்கிறது😂?

உரிய உதாரணம் என்றால் எந்த நாட்டிலிருந்தும் எடுக்கலாம். இதைத் தடுக்கும் விதிகள் எவையும் இருக்கின்றனவா க.க "நிர்வாகி" நுணாவிலான்😎?

தமிழ் நாட்டுக் கட்சி மீள மீள தோற்று டிப்போசிற் இழக்கும் வேளைகளில் "தனிய நின்று இவ்வளவு எடுத்தார்கள்" என்று உச்சி முகர்ந்தவர்கள், தனியாக தமிழரசு , கூட்டை விட வென்றிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுப்பது என்னத்தில் இருக்கும் "வரட்சி"? நிச்சயமாக கருத்தின் வரட்சி இல்லை, அது வேறேதோ "வரட்சி"😂!

மிருக வைத்தியருக்கு கறன் பாயும் போது எங்களுக்கு பாயக்கூடாது என்று எந்த விதி சொல்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

மிருக வைத்தியருக்கு கறன் பாயும் போது எங்களுக்கு பாயக்கூடாது என்று எந்த விதி சொல்கிறது?

அர்த்தமில்லாத அலட்டல்களை முன்னகர்த்தும் ஒரு நிர்வாகியாக தொடர்ந்து ஆச்சரியம் தருகிறீர்கள்😂.

சுமந்திரன் சொன்னதைப் பற்றிய என் கருத்தை நான் நிதானமாக எழுதியிருக்கிறேன். கள உறுப்பினர்கள் எவரையும் நோக்கி என் கருத்து இருக்கவில்லை - அரசியல் வாதிகளை நோக்கி மட்டுமே என் முதல் கருத்து இருந்தது👇.

On 7/5/2025 at 16:42, Justin said:

சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்? தமிழ் தேசிய பேரவையில், கடந்த தேர்தலில் போட்டியிட சீற் கிடைக்காமல் போனதால் திடீரென்று "தேசிய நரம்பில் கரண்ட்" பாய்ந்தவர்கள்😎 பலர் கூட்டாக நின்றார்கள். தமிழரசுக் கட்சி தனியாக ஒரு கட்சியாக நின்றது. தேர்தலின் பின்னர் கொள்கை ஒத்து வந்தால் சேர்ந்து கொள்ளலாம் என்று முன்னர் சொல்லப் பட்டது போல செய்யலாம்.

(தமிழ் நாட்டில் ஒரு கட்சி ஒற்றையாக நின்று டிபோசிற் இழக்கும் தருணங்களில், "தனியாக நிக்கிறாங்கள்- அதுவே வெற்றி" என்று வாழ்த்தும் ரசிகர்கள், அதே தியரியை தமிழரசுக்குப் பிரயோகிக்க மாட்டார்களாம்!)

இதற்கு உணர்ச்சி மயப் பட்டு முதல் துலங்கல் வைத்து ,

On 7/5/2025 at 19:57, nunavilan said:

சுமந்திரன் தோற்ற போது உங்களுக்கு ஏன் கறன் பாயவில்லை. இப்போ தமிழ் நாட்டை ஒப்பிட வந்து விட்டீர்கள்?

சாவகச்சேரி , பருத்திதுறை தொகுதிகளில் தமிழரசு கட்சி சேர்ந்து பயணிக்க தயாரா? அல்லது புறணி கூறலா???

இப்போது மிருக வைத்தியர் என்று அவசியமில்லாமல் தொழிலை இழுக்கும் நீங்கள், உண்மையிலேயே நிர்வாகத்திற்குத் தகுதியானவர் என்று நான் கருதவில்லை! அப்படியான மரியாதையை இனி உங்களுக்கு நான் தரப் போவதில்லை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.