Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

495930073_9854309577961272_6125753755860

சென்னைல மீன் மார்கெட்டுக்கு போய் மீன் வாங்க போறீங்களா அப்ப இந்த அஞ்சு ரூல்ஸ பாலோவ் பண்ணுங்க.

ரூல் நம்பர் 1 ; என்ன மீன் வாங்கனும்ன்கிறத வீட்லயே முடிவுபண்ணிட்டு போங்க... இல்லன்னா அங்க போய் என்ன மீன் வாங்குறதுன்னு முழிச்சீங்கன்னா என்ன அப்படியே மீன் அல்லாத்தையும் வாங்குறமேரி நிக்கிற ஒன்னு வாங்குனா வாங்கு இல்ல இடத்த காலி பண்ணுன்னு மீன் விக்கிற அக்கா சவுண்டு விடும்....

ரூல் நம்பர் 2 ; மீன எடபோட்டு வாங்குற வரைக்கும் மீன கைல தொடக்கூடாது அப்படி மீறித் தொட்டா அந்த அக்காங்களுக்கு சண்டாலமா கோபம்வரும் பேண்டு சட்டயில்லாம் போட்டு ரீசண்டா கீரியே மீன எப்படி கைல தொடலாம்னு சண்டைக்கு வரும்...

ரூல் நம்பர் 3 : எக்காரணம் கொண்டும் பேரம் பேசாதீங்க... அப்புறம் அந்த அக்காங்க மம்மி பாவம் தாத்தா பாவம்... ஆதாம் ஏவா பாவம் அளவுக்கு தர லோக்கலுக்கு இறங்கி திட்டுவாங்க... வேணும்னா எட போடும்போது ஒரு மீன சேத்து போடுங்கன்னு கேட்டா போடுவாங்க அதுக்காக ஒரு வஞ்சீரத்த வாங்கிட்டு இன்னொரு வஞ்சிரத்த ஃபிரியா போடுன்னு கேட்டுறாதீங்க அப்புறம் எத்தன லிக்குட் சோப் ஊத்தி கழுவினாலும் காது தீஞ்சது தீஞ்சதுதான்... தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே மீன் விக்கிற அக்கா நாவினால் சுட்ட வடு...

ரூல் நம்பர் 4: நீங்க ரெகுலரா மீன் வாங்குற ஆளா இருந்தா ஒரே அக்காட்ட வாங்குற பழக்கத்த வச்சுக்குங்க... அப்படி ஒரே ஆள்ட்ட மீன் வந்குறதால மீன் விலை கம்மியாலாம் கிடைக்காது... ஓரளவு நல்ல மீன் கிடைக்கும் நீங்க தேர்ந்தெடுக்கிற மீன் சரியில்லன்னா அவங்களே ரிஜெக்ட் பண்ணி அய்யே நல்ல மீனா எயித்து போடுன்னு சொல்லுவாங்க...

ரூல் நம்பர் 5 : மீன் வாங்கிட்டீங்கன்னா அப்புறம் நடுவுல வீட்டுக்கு வர்ற வழில சைக்கிள்ல, கூடையில மீன் வித்துட்டு போறவங்ககிட்ட மீன் விலைய கேட்டு கிராஸ் செக் பண்ணாதீங்க... அப்புறம் நாம அறுநூறு ரூபாய்க்கு வாங்குன மீன அவங்க நானுறுன்னு சொல்லி நமக்கு ஹார்ட்அட்டாக்கை வரவச்சிடுவாங்க...

பொம்மையா முருகன்

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே டபிள் மீன் (னிங் ) பேச்செல்லாம் கிடையாது . ....... நேரடியா ஒரே மீன் பேச்சுத்தான் ......... ! ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

அங்கே டபிள் மீன் (னிங் ) பேச்செல்லாம் கிடையாது . ....... நேரடியா ஒரே மீன் பேச்சுத்தான் ......... ! ☹️

அவர்களின் பேச்சை கேட்பதற்காகவே... வேண்டும் என்று எதையாவது வில்லங்கமாக கேட்டு, ரசிப்பதுண்டு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

சென்னைல மீன் மார்கெட்டுக்கு போய் மீன் வாங்க போறீங்களா அப்ப இந்த அஞ்சு ரூல்ஸ பாலோவ் பண்ணுங்க.

என்ன பாஸ் இந்தியாவில போய் ரூல்ஸ் எல்லாம் பேசுறீங்க.

இது வேலைக்காகாது பாஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன பாஸ் இந்தியாவில போய் ரூல்ஸ் எல்லாம் பேசுறீங்க.

இது வேலைக்காகாது பாஸ்.

இலங்கை மீன் சந்தையும், தமிழ் நாட்டு மீன் சந்தையும் ஒரே ரூல்ஸ் தானே... பாஸ். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இலங்கை மீன் சந்தையும், தமிழ் நாட்டு மீன் சந்தையும் ஒரே ரூல்ஸ் தானே... பாஸ். 😂

மீன் சந்தையில எங்க பாஸ் ரூல்ஸ்?

இது தான் எங்கட ரூல்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

தரமான மீனை எப்படி பார்த்து வாங்குகிறது என்கிற யோசனையை தரப்போகிறார் என்று நினைத்தே வாசிக்க ஆரம்பித்தேன். அங்க பாத்தால், ம்ம்..... தனது மீன் விற்பனையியாளின் வசன அலங்காரத்தை கூறுகிறார். இவர் மீன் சந்தைக்கு போகும்போது மனையாளும் கூடப்போவது நல்லது. மனையாள் திட்டினால் பொறுக்காது, மீன்வியாபாரி திட்டினால் ரசிப்பு. வீட்டுக்காரி சரியில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2025 at 15:19, தமிழ் சிறி said:

எத்தன லிக்குட் சோப் ஊத்தி கழுவினாலும் காது தீஞ்சது தீஞ்சதுதான்... தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே மீன் விக்கிற அக்கா நாவினால் சுட்ட வடு...

2004இல “சந்தைக்கு வந்த கிளி” என்ற தலைப்பில் யாழில் எழுதியிருந்தேன். தேடிப் பார்த்தேன் கிளி அகப்படவில்லை.

எனது கிராமம் நகரத்திலிருந்து இரண்டு மைல் தள்ளியே இருந்தது.

எனது கிராமத்திலே ஒன்றுக்கு மூன்று கடைகள் இருந்ததால் எங்கள் தேவை அங்கேயே பூர்த்தியாகிவிடும்.

முக்கியமான பொருட்கள் வாங்குவதாயிருந்தால் அல்லது வங்கி, அஞ்சல் அலுவலகம், சினிமா இப்படி ஏதாவதற்குப் போக வேண்டிய தேவை இருந்தால் மட்டுமே நகரத்துக்குப் போவோம்.

மரக்கறி, மீன்வகைகள்கூட கிராமத்திற்கு வந்துவிடும்.

இதில் மீன் கொண்டுவருபவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கே வருவார்கள். அவர்கள் நகரச் சந்தையில் கொள்வனவு செய்து ஒவ்வொரு கிராமங்களாக விற்று வருவார்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்கப்படாவிட்டால் மீன்கள் பழுதடைந்து விடும். அதானால் எல்லா வியாபாரிகளும் எப்பொழுதும் ஓட்டமும் நடையுமாகவே இருப்பார்கள்.

இதற்குள் வியாபாரிகளுக்குள் போட்டியிருப்பதால் நான் முந்தி நீ முந்தி என்று ஓடியோடியே வியாபாரம் செய்வார்கள்.

இதில் குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால் எல்லா வியாபாரிகளும் பெண்களாகவே இருப்பார்கள்.

ஓலைப் பெட்டியில் மீன்களை வைத்து மூடியபடியே சுமந்து வருவார்கள். மீன்பெட்டியைக் கீழே வைத்து திறந்தவுடன் எல்லோரும் இன்றைக்கு என்ன மீன் என்று ஆவலாக எட்டிப் பார்ப்பார்கள். அதுவரைக்கும் இன்றைக்கு என்ன மீன் சமைக்கலாம் என்பது அவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸாகவே இருந்திருக்கும். நிட்சயமாக நண்டு, இறால், கணவாய் என்பது இவர்களிடம் இருக்காது. அவைகளை வாங்குவதாயின் சந்தைக்குத்தான் போக வேண்டும்.

சந்தையில் அன்றைக்கு என்ன மீன் வகைகள் மலிவோ அது அவர்கள் பெட்டியில் நிறைந்து இருக்கும். சந்தையிலுள்ள விலையைவிட எப்படியும் இரண்டு மூன்று மடங்கு அதிகமாகவே அவர்கள் விலை சொல்வார்கள். அவர்கள் கூறும் விலைக்கு யாருமே வாங்கமாட்டார்கள். எல்லா அம்மாமார்களும் பேரம் பேசித்தான் வாங்குவார்கள்.

எனது வீட்டுக்கு அருகேயிருக்கும் ஒழுங்கையிலுள்ள அரசமரத்தடிதான் இந்த மினி சந்தை. இல்லத்தரசிகள் அந்த மரத்தடி நிழலில் காத்திருந்து அந்த வழியாகப் போகும் மீன் வியாபாரிகளை மறித்து மீன் வாங்குவார்கள். மரத்தடியில் வாங்குபவர் தொகை குறைவாயிருந்தால் வியாபாரி நிற்கமாட்டார். அவர் அடுத்த கிராமத்திற்குப் போக துரிதம் காட்டுவார்.

நான் பலமுறை அம்மாவுடன் இந்த இடத்திற்குப் போயிருக்கின்றேன். அம்மா பேரம்பேசி மீன் வாங்குவதை ரசித்துப் பார்த்திருக்கிறேன்.

ஒரு சனிக்கிழமை நண்டு வேணும் என்று அம்மாவைக் கேட்டேன். சந்தைக்கு யாரும் போனால் சொல்லிவிடுகிறேன் என்று அம்மா சொன்னா. ஆனால் சந்தைக்குப் யாரும் போவதாகத் தெரியவில்லை. எனவே நானே போய் வாங்கி வருவதாக அம்மாவிடம் சொன்னேன்.

அம்மா சிரித்துக் கொண்டே,

„ என்னாலையே இஞ்சை இவளுகளிட்டை கதைச்சு மீன் வாங்கேலாமலிருக்கு... நீ.. என்னத்தை வாங்கப் போறாய்..? உன்னை ஏமாத்தி பழுதானதெல்லாத்தையும் தந்து விடுவாளுகள்.. பிறகு அடுத்த கிழமை பாப்பம் „ என்றா.

ஆனாலும் நான் நம்பிக்கை தெரிவித்ததால், எனது விருப்பத்துக்கு குறுக்கே நிற்க விருப்பமில்லாமல் பணத்தைத் தந்து வழியனுப்பி வைத்தா.

நகரத்து மீன் சந்தை ஈக்களாலும், ஆட்களாலும் நிறைந்தே இருந்தது. ஏலம் கூறுவது, கூவி விற்பது, பேரம் பேசுவது என்று சந்தை சத்தத்தில் மூழ்கியிருந்தது.

கையில் பையுடன் உள்ளே நுழைகிறேன்.

தரையில் அமர்ந்து பெட்டியின் மூடிமேல் மீன்களை பரப்பி வைத்து பெண்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

நண்டு பரப்பி வைத்திருந்த பெட்டியின் முன்னால் போய் நின்றேன்.

"வா... ராசா.. நண்டு வேணுமே.. நல்ல நண்டு.. பொம்பிளை நண்டு .. மலிவா போட்டுத்தாரன்.. எத்தினை வேணும்..?"

வியாபாரியின் கனிவான பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

அன்பான வரவேற்பு. நண்டுப் பெட்டியின் முன்னால் குந்தினேன்.

ஒரு நண்டின் காலைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தேன். பாரமாகத்தானிருந்தது.

" பாத்தியே.. நல்ல சதையிருக்கு.." சொல்லியபடியே என் கையில் இருந்த நண்டை வாங்கி மீண்டும் பெட்டியில் வைத்தார் வியாபாரி.

" என்ன விலை?"

விலையைச் சொன்னார்.

அம்மா பேரம் பேசி வாங்குவது நினைவுக்கு வந்தது.

வியாபாரி சொன்ன விலையை மனதுக்குள் இரண்டால் வகுத்துக் கொண்டேன்.

இப்போ அவர் சொன்ன விலைக்கு பாதி விலை கேட்டேன்.

பெரிதாக இடி விழத் தொடங்கியது.

இடிவிழுந்தால் அர்ச்சுனா.. அர்ச்சுனா.. என்று சொல்லிக் கொண்டு இரண்டு கைகளாலும் காதைப் பொத்த வேண்டும் என்று சொல்வார்கள். இங்கும் காதை இறுகப் பொத்திக் கொண்டு அசிங்கம்.. அசிங்கம் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.

வியாபாரியின் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகள் இதுவரை நான் கேட்காத வார்த்தைகள். அத்தனையும் தமிழில்தான்.

தமிழில் இவ்வளவு கெட்ட வார்த்தைகளா?

கேட்டதில் காது வெட்கப் பட்டது. ஆகவே எழுதுவது இயலாது.

"...................... வந்திட்டார் bagஐயும் தூக்கிக் கொண்டு.................."

பேச்சின் அதிர்ச்சியால், குந்தியிருந்த நான் இப்போ பின்னால் கைகளை ஊன்றி கால்களை நீட்டி தரையில் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

சந்தையின் சத்தம் அடங்கியது போல இருந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற பிரமை.

கூனிக் குறுகியபடி மெதுவாக எழுந்து, காற்சட்டையில் ஒட்டியிருந்த மண்ணைக் கூடத் தட்ட முடியாதவயனாய் சந்தையை விட்டு வெளியே வந்தேன்.

" என்னாலையே இஞ்சை இவளுகளிட்டை கதைச்சு மீன் வாங்கேலாமலிருக்கு... நீ.. என்னத்தை வாங்கப் போறாய்..? ..."

அம்மாவின் வார்த்தைகள் காதில் ஒலித்தன.

ஓங்கி அழவேண்டும் போலிருந்தது. சந்தைக்கு வெளியேயும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவேயிருந்தது. தன்மானம் விடவில்லை அடக்கிக் கொண்டேன்.

பஸ் நிலையத்தில் எனது கிராமம் வழியாகப் போகும் 750 இலக்க பஸ் இற்குப் பின்புறமாக நின்று ஒரு பத்து வயதுச் சிறுவன் கேவிக் கேவி அழுது கொண்டிருந்ததை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kavi arunasalam said:

வியாபாரியின் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகள் இதுவரை நான் கேட்காத வார்த்தைகள். அத்தனையும் தமிழில்தான்.

தமிழில் இவ்வளவு கெட்ட வார்த்தைகளா?

கேட்டதில் காது வெட்கப் பட்டது. ஆகவே எழுதுவது இயலாது.

கவி அருனாசலம் அவர்கள் கவிதை எழுத எங்கு கற்றார் என்பது இப்போது புரிந்தது.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

கவி அருணாசலம் உங்களது முதல் அனுபவம் இப்படி ஒரு சோகத்தில் முடிந்தது கவலை என்றாலும், நல்ல வர்ணனையுடன் மண்வாசனைக்குரிய கதையை கேட்ட திருப்தி ஏற்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Kavi arunasalam said:

ஒரு நண்டின் காலைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தேன். பாரமாகத்தானிருந்தது.

" பாத்தியே.. நல்ல சதையிருக்கு.." சொல்லியபடியே என் கையில் இருந்த நண்டை வாங்கி மீண்டும் பெட்டியில் வைத்தார் வியாபாரி.

" என்ன விலை?"

விலையைச் சொன்னார்.

அம்மா பேரம் பேசி வாங்குவது நினைவுக்கு வந்தது.

வியாபாரி சொன்ன விலையை மனதுக்குள் இரண்டால் வகுத்துக் கொண்டேன்.

இப்போ அவர் சொன்ன விலைக்கு பாதி விலை கேட்டேன்.

பெரிதாக இடி விழத் தொடங்கியது.

மீன்காரி செந்தமிழ்ல அர்ச்சனை செய்ததிலை நியாயமிருக்கு......🤣

கருவாட்டு விலை கேக்கிறதுக்கும் இடம் வலம் நேரம் இருக்கு...😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.