Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Replies 218
  • Views 9.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Justin
    Justin

    இங்கே வேலன் விசிறிகளாக இருப்போருக்கு விளங்காத ஒரு விடயம்: தனி மனித எல்லைகள் - boundaries. மற்றவன் உணவு, மற்றவனின் மத நம்பிக்கை/ நம்பிக்கையின்மை, மற்றவனின் படுக்கையறையில் யார் போன்ற விடயங்களில் மூக்கை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Sasi_varnam
    Sasi_varnam

    இப்பொழுதுதான் Barista நிறுவனத்தின் தலைமை நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்துப்பேசினேன். என்னுடன் பேசிய விளம்பர பகுதியின் இயக்குனர் Ms.திலந்தி ஏற்கனவே தாங்கள் இந்த நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதாகவும்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

நல்லூருக்கு தீவக பகுதியில் இருந்து 50 வருடத்தில் வாழ வந்தவர்கள் வந்தான் வரத்தான்களே…

இல்லை ஏனெனில் அவர்கள் இலங்கையில் ஒரு இடத்திலுருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து உள்ளார்கள் அதாவது தங்களுடைய நாட்டிலுள். அவர்களின் நாடு இப்போதும் இலங்கை தான் கைதடியில். வடக்கிலிருந்து தெற்க்கும். மேற்கிலிருந்து கிழக்கும் குடிபெயர்வது வநதன்வரத்தான் ஆகுமா ?? இல்லை. அவர்கள் கைதடியில் தான் இருக்கிறார்கள் இதோ போல் இலங்கைக்குள். இடம்பெயர்ந்தாலும் அவர்கள் இலங்கையர்கள். அவர்களை வநதன்வரத்தன் என்று எப்படி அழைக்க முடியும்??

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

இதையே சொன்னது - ஒவ்வொரு கோயிலுக்கும் கலாசாரம், சூழல், நம்பிக்கை வேறுவேறானவை - சமயம் ஒன்றாக இருப்பினும்.

(தூரத்தில் பெரிய வேறுபாடு இல்லாவிட்டாலும்)

அது மதிக்கப்பட வேண்டும்.

வேலன் சாமி ஒரு பக்கத்தால் ஒருமயப்படுத்த முனைவது போல, இங்கே சிலர் அதன் எதிர்ப்பாகத்தால் ஒரு மயப்படுத்த முனைவது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

தமிழர்கள் பின்பற்றும் சமயங்கள் ஒன்றல்ல. இந்துசமயம், சைவசமயம், கிறித்தவ சமயம் என்று பல்வேறு சமயங்களை அவர்கள் பின்பற்றுகின்றனர். அவைகளில் சைவசமயத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் மச்சம், மாமாமிசம் உண்பதில்லை. இருந்தும் தமிழர்கள் எந்தமதத்தவரின் கோவில்களையும் கடந்து செல்லும்போதும் அவைகளுக்குரிய கடவுள்களை வெளிப்படையாக இல்லாவிடினும் நெஞ்சில் கைவைத்து மானசீகமாக வணங்கிச்செல்வார்கள். அந்த வழக்கம் அனேகமாகத் தமிழர் அனைவரிடத்தும் உறைந்து உள்ளது .🙏

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

அவைகளில் சைவசமயத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் மச்சம், மாமாமிசம் உண்பதில்லை.

இது கலாசாரம். சமயம் அல்ல. (சும்மா நாவலரின் பேய்க்காட்டும் கதை.)

சைவசமயம் பிள்ளைக்கறி, மாமிச நைவேத்தியதுக்கு இடம் அளிக்கிறது.

அப்படி உண்ணாதவர்கள் சைவசமயிகளாக இருப்பது வேறு விடயம்.

அப்படி உண்ணாதவர்கள் சைவசமயிகளாக இருப்பது வேறு விடயம்.

சைவம் (உணவு அல்லது உணவு கலாசாரம் என்பதால் ), சைவ சமயம் என்று ஒரு சமயமே இல்லை என்று வரும்.

சைவம் குறிப்பது சிவத்தை.

(சிவனும் ஆரம்ப ஒரு வடிவத்தில் சுடலையில் போசிப்பவன், பூசிப்பவன் - இது இப்போதும் இருப்பது அகோரிகளில்.)

Edited by Kadancha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிறிய வீட்டிற்குள் சாமி அறை ஒரு பக்கம். நாலு காலடி தூரத்தில் இருக்கும் சமையலறையில் பறப்பன,ஊர்வன,நீந்துவன என விதம் விதமான சமையல்கள் தூள் கிளப்பும். 😂

35 minutes ago, Paanch said:

தமிழர்கள் பின்பற்றும் சமயங்கள் ஒன்றல்ல. இந்துசமயம், சைவசமயம், கிறித்தவ சமயம் என்று பல்வேறு சமயங்களை அவர்கள் பின்பற்றுகின்றனர். அவைகளில் சைவசமயத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் மச்சம், மாமாமிசம் உண்பதில்லை. இருந்தும் தமிழர்கள் எந்தமதத்தவரின் கோவில்களையும் கடந்து செல்லும்போதும் அவைகளுக்குரிய கடவுள்களை வெளிப்படையாக இல்லாவிடினும் நெஞ்சில் கைவைத்து மானசீகமாக வணங்கிச்செல்வார்கள். அந்த வழக்கம் அனேகமாகத் தமிழர் அனைவரிடத்தும் உறைந்து உள்ளது .🙏

வேறு எந்த மதங்களிலும் இல்லாதவாறு சைவசமயத்தில் மட்டும் தான்.....

காளி தெய்வத்திற்கும் வைரவர் தெய்வத்திற்கும் மாமிச படையல்கள் இருக்கின்றது.எமது முன்னோர்களின் நினைவு தினங்களுக்கு பிதிர் எனும் நாளில் மச்ச உணவுகள் மிக முக்கியமாக படையலாக படைக்கப்படுகின்றது.

இந்து மதத்தில் தான் அதாவது பார்ப்பனர்களால் அவர்கள் பிழைப்பிற்காக கொண்டுவரப்பட்டது தான் ஒரு சில நடைமுறைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

சைவசமயத்தில்

சைவசமயத்தில் - சைவம் என்று ஒரு தெய்வமும், கடவுளும் இல்லை (அப்படி உணவு முறை, கலாசாரமே இருக்கிறது).

அதில் - சைவசமயத்தில் - சைவம் குறிப்பது சிவத்தை.

நாவலர் குழப்பியதால் வந்த விளைவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Kadancha said:

சைவசமயத்தில் - சைவம் என்று ஒரு தெய்வமும், கடவுளும் இல்லை (அப்படி உணவு முறை, கலாசாரமே இருக்கிறது).

அதில் - சைவசமயத்தில் - சைவம் குறிப்பது சிவத்தை.

நாவலர் குழப்பியதால் வந்த விளைவு.

சிவன் ஒரு புறம் இருக்க.....63 நாயன்மார்களும் ஒரு புறம் இருக்க....

சைவசமயம் இயற்கையோடு ஒட்டிய மதம். சைவர்கள் இயற்கையையும் வழிபடுபவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

அவர்கள் விரும்பினாலும் அவ்வாறு தனிமனித சுதந்திரத்தில் தலையிட முடியாத அளவுக்கு அந்த மதத்தை பின்பற்றும் மக்களிடையே விழிப்புணர்வும் அறிவியலும் மேம்பட்டுள்ளது. அதனால் அவர்களால் தலிபான்களாக மாற முடியாமல் உள்ளது.

ஆனால் எம்மவரிடையே காவியையும பட்டையையும் போட்டாலே வேலன் போன்ற டுபார்கூர் பயல்களாலேயே எளிதாத சொந்த மக்களுக்கே பட்டை நாமம் சூட்டக் கூடிய நிலையே இன்னும் உள்ளது. இந்த தலிபான்களின் வாலும் ஒட்ட நறுக்கப்படல் வேண்டும்.

மன்னிக்கவும்.

வெள்ளை பாவாடை கட்டி கொண்டு, இறைவனை நாடி வரும் சின்னம் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்யும் பாதிரிகளை கடைசி வரை ஒரு அமைப்பாக பாதுகாத்தவர்கள் யார் ?

பல பத்து வருடங்களின் பின் போப்பாண்டவர் பிரான்சிஸ் மன்னிப்புகேட்டார்.

பாவடை எல்லாம் ஒண்டுதான், வெள்ளையோ, காவியோ.

19 hours ago, நிழலி said:

இதில் பாதியளவு தான் உண்மை.

ஐக்கிய அரபு நாட்டில் (UAE) முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு பன்றி இறைச்சி விற்கின்றனர். அதற்கென்றே தனி அறை போன்ற ஒன்றை ஏற்பாடு செய்து ஒரு சில பல்பொருள் அங்காடிகளில் விற்கின்றனர். நான் வாங்கி சமைத்துள்ளேன்.

UAE தவிர கட்டார், பஹ்ரெயின், எகிப்து, ஓமான், லெபனான் ஆகிய அரபு நாடுகளிலும் விற்கின்றனர். முஸ்லிம் நாடுகளில் பெரிய நாடான இந்தோனேசியாவிலும் விற்கின்றனர்.

மலேசியாவிலும்.

7 hours ago, Kandiah57 said:

இல்லை ஏனெனில் அவர்கள் இலங்கையில் ஒரு இடத்திலுருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து உள்ளார்கள் அதாவது தங்களுடைய நாட்டிலுள். அவர்களின் நாடு இப்போதும் இலங்கை தான் கைதடியில். வடக்கிலிருந்து தெற்க்கும். மேற்கிலிருந்து கிழக்கும் குடிபெயர்வது வநதன்வரத்தான் ஆகுமா ?? இல்லை. அவர்கள் கைதடியில் தான் இருக்கிறார்கள் இதோ போல் இலங்கைக்குள். இடம்பெயர்ந்தாலும் அவர்கள் இலங்கையர்கள். அவர்களை வநதன்வரத்தன் என்று எப்படி அழைக்க முடியும்??

அப்போ ஒரு கண்டி மலே முஸ்லிம், கைதடியில் உங்கள் பக்கத்து வீட்டில் வந்து குடியேறினால் அவர் உங்கள் ஊரவரா? இல்லை ஆனால் ஒரே நாடுதானே.

வந்தான் வரத்தான் என்றால் - ஒரு இடத்தில் பரம்பரையாக இன்றி, அண்மையில் குடி வந்தவர்கள்.

நாடு அல்ல, இடம் அதாவது ஊர்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

சூப்பர்….

இப்போ கொஞ்சம் மூளையால் யோசிப்போமா ? (இந்த கருத்து பாஞ் ஐயாவுக்கு அல்ல, வீடியோவை மட்டுமே மேற்கோள் காட்டுகிறேன்).

இணுவில் கோவிலில் மச்சம் ஆக்குகிறார்கள். ஆகவே இந்த கோவிலில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் அல்லது முழு இணுவிலிலும் இனி யாரும் சைவ சாப்பாட்டு கடை போடப்படாது என கூறினால் எப்படி இருக்கும்🤣.

இதை ஒத்த மொக்குதனம்தான் வேலனும், மொக்கராசுகளும் நல்லூரில் கேட்பதும்.

மத அனுஸ்டானம் என்பதை அமல் செய்யும் உரிமை கோவில் எல்லைக்குள் மட்டுமே.

கோவில் சுவர் அல்லது வெளிவீதிக்கு அப்பால் - அது அனைவரும் வாழும் பொதுவான நாடு.

5 hours ago, Paanch said:

தமிழர்கள் பின்பற்றும் சமயங்கள் ஒன்றல்ல. இந்துசமயம், சைவசமயம், கிறித்தவ சமயம் என்று பல்வேறு சமயங்களை அவர்கள் பின்பற்றுகின்றனர். அவைகளில் சைவசமயத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் மச்சம், மாமாமிசம் உண்பதில்லை. இருந்தும் தமிழர்கள் எந்தமதத்தவரின் கோவில்களையும் கடந்து செல்லும்போதும் அவைகளுக்குரிய கடவுள்களை வெளிப்படையாக இல்லாவிடினும் நெஞ்சில் கைவைத்து மானசீகமாக வணங்கிச்செல்வார்கள். அந்த வழக்கம் அனேகமாகத் தமிழர் அனைவரிடத்தும் உறைந்து உள்ளது .🙏

இந்த அந்நியோனயமும், சகிப்புத்தன்மையும் - யாருக்கோ கண்ணை குத்துகிறது.

ஆகவேதான் வேலன், சச்சி, உமாகரன் இராசைய்யா தரவழி ஓசி சோறுகளை இறக்கி விட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

கையடியில்

🤣🤣🤣 வாசித்து சிரித்து விட்டேன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சிவன் ஒரு புறம் இருக்க.....63 நாயன்மார்களும் ஒரு புறம் இருக்க....

சைவசமயம் இயற்கையோடு ஒட்டிய மதம். சைவர்கள் இயற்கையையும் வழிபடுபவர்கள்.

உங்களுக்கு ராகு கேது மாற்றம் சரியில்லை போல கிடக்கு.

#புரிஞ்சவன் பிஸ்தா

Just now, Kandiah57 said:

🤣🤣🤣 வாசித்து சிரித்து விட்டேன் 🤣

எடிட் பண்றதுகுள்ள பதிலும் போட்டாச்சா🤣

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

மன்னிக்கவும்.

வெள்ளை பாவாடை கட்டி கொண்டு, இறைவனை நாடி வரும் சின்னம் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்யும் பாதிரிகளை கடைசி வரை ஒரு அமைப்பாக பாதுகாத்தவர்கள் யார் ?

பல பத்து வருடங்களின் பின் போப்பாண்டவர் பிரான்சிஸ் மன்னிப்புகேட்டார்.

பாவடை எல்லாம் ஒண்டுதான், வெள்ளையோ, காவியோ

கோஷான், நீங்கள் கூறியது அவர்கள் செய்த குற்றச்செயல். அமைப்பாக பாது காத்ததும் ஒரு குற்றச்செயல். நான் தெரிவித்தது அதை பற்றியதல்ல. மதததின் பெயரால் எதை எவர் கூறினாலும் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட்டாலும் அதை சிந்திக்காது ஏற்றுக்கொள்ளும் ஒரு கூட்டதை பேணிப்பாதுகாப்பது பற்றியது. மற்றப்படி அனைத்துமே ஒரே ரகம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, island said:

இதுவும் அவர்களிடமும் அபரிமிதமாகவே உள்ளது ஐலண்ட்.

எஸ் கிளாசில், இந்தியாவில், 1998 இல் டிரைவர் வைத்து ஓடிய பால் தினகரன் செத்த பின்பு, அவரது மகன் செத்த வீடு செய்ய காசில்லை என கூறியதும் அள்ளி அள்ளி கொடுத்தார்கள்.

நைஜீரியாவில் எல்லாம் பெரிய எடுப்பில் நடக்கிறது.

இவை ஏன், யாழ்ப்பாணத்தில் இன்றுவரை ஒரு கன்னியர் மடத்தில் கிறீஸ்தவர் அல்லாத பிள்ளை தலைமை ஹெட் பிரிவெக்ட் ஆகவில்லை என எண்ணுகிறேன்.

சிஸ்டர்மாரும், பாடசாலையில் அதிகம் இருக்கும் பெற்றாரும், முன்னாள் மாணவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என அடம்பிடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2025 at 00:16, goshan_che said:

எனக்கு எந்த ஊர்ரை இட்டும் எந்த கெத்தும் இல்லை.

சாதி/மாவட்ட கெத்தை போல ஒன்றுதான் இந்த ஊர் கெத்தும்.

யாழில் அந்த ஊரான், இந்த ஊரான் என அல்லது ஏதோ ஒருவகையில் தம் ஊரை இணைத்து பெயர் வைப்போரை பார்க்க சிரிப்பாகவே இருக்கும்.

இன்றுவரை என் சொந்த ஊர், மாவட்டம் பற்றி எதுவும் சொல்வதில்லை.

யாழ் உறுப்பினருக்கும் எனக்கும் இடையான ஒரே பந்தம் நான் ஈழத்தமிழன் என்பது மட்டுமே. அதுவும் கெத்தாக அல்ல. ஒரு அடையாளமாக.

சிறப்பு 👌

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

உங்களுக்கு ராகு கேது மாற்றம் சரியில்லை போல கிடக்கு.

#புரிஞ்சவன் பிஸ்தா

ஓ....ராகு கேது பெயர்ச்சியெல்லாம் பார்க்கிறீங்கள் போல.... 😲

புரியவில்லை சொல்லுங்கள். 😁

  • கருத்துக்கள உறவுகள்

தூரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு முடிவுக்கு வருதல் வேலன் சாமிக்கோ (அல்லது அந்த போக்கை எதிப்பவர்களுக்கோ) பொல்லை தூக்கி கொடுப்பது என்ற மிகவும் வெளிப்டையானதை ...

உ.ம். இந்த திரியில் இணைக்கப்பட்டு இருக்கும் அந்த மச்ச படையல் செய்யப்பட்ட கோயிலுக்கும் வேலன் சாமிக்கு இடம் அளிப்பது.

இதனால் தான் ஒவ்வொரு கோயிலையும் தனித்துவமாக கையாள வேண்டும் - அதன் கலாசாரம், சூழல் பண்பாடுகள், வழங்கங்கள், நம்பிக்கைகள், ஏற்கனவே இருக்கும் அமைவிடம், வரலாறு போன்ற பல அடிப்படைகளை கொண்டு.

(நீதிமன்றமும் அப்படியான அணுகுறையே எடுக்கும் என்று எனது நம்பிக்கை.

ஏனெனில், இந்த பிரச்னை எங்கு போக கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை நீதிமன்றம் கருத்தில் எடுக்கும்.

கொண்டுவரப்பட்டு இருக்கும் வழக்கு குறுகிய நல்லூர் - வேலன் சாமி பிரச்சனையாக முக்கியவிடயம் என்றாலும்.)

19 hours ago, குமாரசாமி said:

சைவசமயம் இயற்கையோடு ஒட்டிய மதம். சைவர்கள் இயற்கையையும் வழிபடுபவர்கள்.

6 பிரிவுகளில் - சைவம், வைணவத்துக்கே ஆகமங்கள் இருக்கிறது. (ஆகமங்கள் மனித நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட விதிகள்.)

மிகுதி 4 க்கும் - காணபத்தியம், கெளமாரம், சாக்தம், சௌரம் பிரிவுகளுக்கு ஆகமங்கள் இல்லை - .

சைவம், வைணவதுக்கு ஆகமம் இருப்பதே இயற்கையில் இருந்து விலத்தி, மற்றவற்றோடு ஒப்பிடும் போது.

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_0380.jpeg

பரிஸ்டா உணவமல்ல இது. ஏற்கனவே சைவ முட்டை விற்கப்படுகிறதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, island said:

large.IMG_0380.jpeg

பரிஸ்டா உணவமல்ல இது. ஏற்கனவே சைவ முட்டை விற்கப்படுகிறதாம்.

இது கூவாத சேவல் போட்ட முட்டையாய் இருக்கும்😂.

மூளையால் யோசிக்க தவறுபவருக்கு மீண்டும் ஒரு தரம்.

கோவிலில் இருந்து எத்தனை தூரத்தினுள் மச்சம் விற்கலாம் என நிர்ணயிக்க வேண்டும் என நான் ஒரு போதும் எழுதவில்லை.

கோவில் வளாகம் என கொள்ளப்படும் வெளிவீதி வரைக்குமே கோவில் நியமங்கள் செல்லும். செல்ல வேண்டும்.

அதற்கு அப்பால் அல்ல என்பதே என் நிலைப்பாடு.

அதற்கு அப்பால் அது பொது வெளி. நல்லூரானாக இருந்தாலும், எந்த அப்பாடக்கராக இருந்தாலும்.

இல்லை நல்லூருக்கு தனி வழக்கம் வேண்டும் என வாதாடுவது, உண்மைக்கும், இதுகாறும் இருந்த நடைமுறைக்கு புறம்பானது, ஏனைய எமது கோவில்களை நாமே தரம் தாழ்த்துவது போன்றது, புனித பூமி என சங்கிகள், பெளத்த பிக்குகள் ஆடும் மிலேச்ச ஆட்டம் போன்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.