Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா? மாநகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் அவர்களுடன் May 18 சிறப்பு நேர்காணல்.

கனடாவில் Toronto நகரிலும், முள்ள...
No image preview

5,110 次播放 · 56 个心情 | கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய...

கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா? மாநகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் அவர்களுடன் May 18 சிறப்பு நேர்காணல்....

https://www.instagram.com/eastfmtamil/reel/DJpmSzJJCy6/

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழின அழிப்புக்கான அடுத்த தூபியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்!

24 MAY, 2025 | 10:48 AM

image

கனடாவின் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை  நினைவுத்தூபியை அமைப்பதற்கான  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

500520615_122196176576124553_86754727319

https://www.virakesari.lk/article/215547

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அது நடக்கவில்லையென மறுக்கப்படும்போது, உலகெங்கும் தமிழ் இந அழிப்புக்கான தூபிகள் எழும். இறுதியில் இலங்கையும் வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொள்ள வைக்கப்படுமா? பொறுத்திருந்து பாப்போம். மனிதர் ஒருவழியை மறுக்கும்போது, பலவழிகள் திறக்கப்படும். விதி எங்கோ அழைத்துச்செல்கிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, satan said:

சாத்தன். இலங்கை இந்தியாவை கொண்டு தடுப்பதற்கு முயற்சித்தால் தடுக்கப்படுமா??

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் தீவிரமடைவதோடு தானாகவே இந்தியா மாட்டிக்கொள்ளும் .இலங்கை, இந்தியாவை கொம்பு சீவுவதுபோல் தெரிகிறது சில விடயங்களைப்பாத்தால். இது இந்தியாவின் யுத்தமென மஹிந்தா, பொன்சேகா  அறிவித்துவிட்டனர். ஆனால் கனடாவில் இந்தியாவின் அச்சுறுத்தல் எல்லாம் வேகாது. அஇந்தியாவுக்கும் சேர்த்துதான் கனடா சொல்லும் செய்தி இந்த நினைவுத்தூபி. இந்தியாவுக்கு கனடாமேல் கடுப்பு இருக்கிறது அதை காட்ட முடியாது. உள்நாட்டில் சில கருத்துக்களை ஈழத்தமிழருக்கெதிராக விடலாம். இந்தியாவும் காலிஸ்தான்,  காஷ்மீர் மக்களை இப்படியொரு நிலையிற்தானே வைத்திருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் வாயை மூடிக்கொண்டிருந்திருந்தால் ஒரு  நினைவுத்தூபியோடு நின்றிருக்கும். இப்போ, வாயைக்கொடுத்து கனடா முழு மாநிலத்திலும் சர்வதேச நாடுகளிலும் தமிழ் இந அழிப்பிற்கு சான்றாக நினவுத் தூபிகள் எழ தூண்டிவிட்டுள்ளது இலங்கையின் அவசியமற்ற, நிஞாயமில்லாத கண்டனம். உண்மையை ஏற்றுக்கொள்ள துணிவில்லை, மனச்சாட்சியில்லை, இதில் வேறு குரைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவின்... வாய்க் கொழுப்பை அடக்க,

ரொறொன்றோவிலும், மொன்ரீயலிலும் பிரமாண்ட நினைவுத் தூபிகள் கட்டப்பட வேண்டும்.

அதனைப் பார்த்து... ஸ்ரீலங்கா கதற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்காவின்... வாய்க் கொழுப்பை அடக்க,

ரொறொன்றோவிலும், மொன்ரீயலிலும் பிரமாண்ட நினைவுத் தூபிகள் கட்டப்பட வேண்டும்.

அதனைப் பார்த்து... ஸ்ரீலங்கா கதற வேண்டும்.

தமிழர் வாழும் நாடுகளெங்கும் நினைவுத்தூபிகள் எழும்பி இந அழிப்பை பறை சாற்ற வேண்டும். அப்போதான் சிங்களம் வாயை மூடிக்கொண்டு இருக்கும். எப்படியும் ஒருநாள் வளமாக சிக்கப்போகிறது. தான் எவ்வளவு மறைத்தாலும், தன்னை யாரும் நம்பவில்லை என்பதை இந்த ஒரு தூபியே சான்று. தெருவெங்கும் அரசியல்வாதிகளும், பிக்குகளும் நின்று தாங்கள் நடத்திய தமிழருக்கு எதிரான கொடுமைகளை சொல்லி இன்னும் அதுபோல் நடவாது ஒதுங்கி இருங்கள் என அச்சுறுத்திக்கொண்டு, சாட்சியம் சொல்லிக்கொண்டும் அவர்களின் நிலங்களில் அத்துமீறல்களை அரங்கேற்றிக்கொண்டும் இந அழிப்பு நடைபெறவில்லை என கூச்சல் போடுவது எந்தளவில் ஏற்றுக்கொள்ளப்படும் என சிந்திக்க தெரியாதவர்களாக இருக்கிறார்களே, இவர்களால் எப்படி சரியானதை சிந்திக்கவும் நாட்டை கட்டியெழுப்பவும் முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

சாத்தன். இலங்கை இந்தியாவை கொண்டு தடுப்பதற்கு முயற்சித்தால் தடுக்கப்படுமா??

தமிழின வளர்சியையும்,எழுச்சியையும் தடுக்க இந்தியா தன் புனிதத்தையே பலிகொடுக்கும் ஆதாரம் உள்ளது.🧐

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்காவின்... வாய்க் கொழுப்பை அடக்க,

ரொறொன்றோவிலும், மொன்ரீயலிலும் பிரமாண்ட நினைவுத் தூபிகள் கட்டப்பட வேண்டும்.

அதனைப் பார்த்து... ஸ்ரீலங்கா கதற வேண்டும்.

யேர்மனியிலும் கணிசமான தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்குள் கணிசமானவர்கள் வாக்களர்களாகவும் இருக்கிறார்கள்தானே.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nochchi said:

யேர்மனியிலும் கணிசமான தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்குள் கணிசமானவர்கள் வாக்களர்களாகவும் இருக்கிறார்கள்தானே.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

ஆமாம் ஆனால் ஒருவரும். அரசியலில் செல்வாக்குடனில்லை மாநில பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினால். கட்டலாம் ....ஆனால் இலங்கை வழக்கு போட்டு நிறுத்தி தடைச் செய்யலாமா ???

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

ஆமாம் ஆனால் ஒருவரும். அரசியலில் செல்வாக்குடனில்லை மாநில பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினால். கட்டலாம் ....ஆனால் இலங்கை வழக்கு போட்டு நிறுத்தி தடைச் செய்யலாமா ???

யேர்மனியத் தமிழர்கள் முயற்சி செய்யாது அரசியலுள் நுளைய முடியாது. சில உள்ளூராட்சி அவைகளில் அங்கத்துவம் பெற்றதாகப் பார்த்த நினைவு. அரசியலில் இருந்தால்தான் கோரமுடியுமா? ஏன் இங்கே நகரத்து ஒரு கழகமெனக் கழங்களும், இரண்டு, மூன்று ஆலயங்களெனவும் உள்ளனவே. அவர்களும் முயற்சிக்கலாமே. இலங்கை வழக்குப்போடுவதிருக்கட்டும்.முதலில் முயற்சியுண்டா?

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, nochchi said:

யேர்மனியத் தமிழர்கள் முயற்சி செய்யாது அரசியலுள் நுளைய முடியாது. சில உள்ளூராட்சி அவைகளில் அங்கத்துவம் பெற்றதாகப் பார்த்த நினைவு. அரசியலில் இருந்தால்தான் கோரமுடியுமா? ஏன் இங்கே நகரத்து ஒரு கழகமெனக் கழங்களும், இரண்டு, மூன்று ஆலயங்களெனவும் உள்ளனவே. அவர்களும் முயற்சிக்கலாமே. இலங்கை வழக்குப்போடுவதிருக்கட்டும்.முதலில் முயற்சியுண்டா?

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

ஏன் கனதூரம் போவான்?

கோயில் வீதிகளில நினைவுத்தூபி வைக்கட்டும் பார்ப்பம். மறந்தும் வைக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கோயில் வீதிகளில நினைவுத்தூபி வைக்கட்டும் பார்ப்பம். மறந்தும் வைக்க மாட்டார்கள்.

நீங்கள் ஒரு மாநில அரசின் அனுமதியை பெற்றுத் தாருங்கள்” வைக்க முடியும் அனுமதி இன்றி செய்தால் ஒருபோதும் வைக்க முடியாது எனது நண்பர் ஒருவர் வீடு வேண்டி பத்தி இறக்கினார் அதாவது ஊரில் வீட்டு கோடியில் அல்லது ஏதாகினும் ஒரு பக்கத்தில் கெட்டில் போடுவார்கள் [ கள்ளு கெட்டில் இல்லை 🤣🤣] அதே மாதிரி போட்டு பயன்படுத்தி வந்தார் ஒருநாள் அரச நிர்வாகிகள் வந்து விட்டார்கள் அனுமதி இன்றி கெட்டில். போட்டதுக்கு தண்டம் எழுதி கொடுத்து இரு கிழமைகளில். கெட்டிலை அகற்றுமாறு நோடடீஸ். கொடுத்து கையெழுததும் வேண்டி சென்றார்கள் இதனை அறிவித்தது பக்கத்து வீட்டு ஜேர்மன்காரன். அவனுக்கு ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஆகவே சும்மா துபி வைக்க முடியாது கோயில்கள் எல்லாம் அனுமதி பெற்றுத் தான் நடக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

யேர்மனியத் தமிழர்கள் முயற்சி செய்யாது அரசியலுள் நுளைய முடியாது. சில உள்ளூராட்சி அவைகளில் அங்கத்துவம் பெற்றதாகப் பார்த்த நினைவு. அரசியலில் இருந்தால்தான் கோரமுடியுமா? ஏன் இங்கே நகரத்து ஒரு கழகமெனக் கழங்களும், இரண்டு, மூன்று ஆலயங்களெனவும் உள்ளனவே. அவர்களும் முயற்சிக்கலாமே. இலங்கை வழக்குப்போடுவதிருக்கட்டும்.முதலில் முயற்சியுண்டா?

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

நான் அறிந்த வகையில் இல்லை அதற்கு அதிக காலம் உழைக்க வேண்டும் சுமத்திரனுக்கு கிடைத்தது போல் போன உடன். பதவிகள் கிடையாது எனது பக்கத்து சிற்றியில் ஜெயக்குமார் என்ற தமிழர்,.அவரின் மனைவி ஜேர்மன் அவள் பச்சை கட்சியில். முக்கியமான

நபர் இவருக்கு நகர சபையில் அங்கத்துவம் கிடைத்தது அது விகிதாச்சார முறையில் கிடைத்தது 2005 அளவில் ....இந்த பிரச்சனையை. எங்களின் இளம் தலைமுறையிடம். கையளிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kandiah57 said:

உண்மைதான், ஆனால் தமிழ் இளையோர் தமிழரது அரசியலைப் பார்த்து, யேர்மன் அரசியிலில் ஈடுபாடுகாட்கிறார்களில்லைப்போலும்.... உள்ளக மட்டத்திற்கூட இதுதமிழருக்குப் பாதகமான நிலையே. எதிர்வரும் காலங்களே தீர்மானிக்கும். எமது இளையோர் பல்வேறு முன்னணித் துறைகளில் (யாழ் மனோநிலையில்) முன்னேறி உள்ளனர். அரசியில் ஆரவமற்றநிலையே தொடர்கிறது.

2 hours ago, குமாரசாமி said:

ஏன் கனதூரம் போவான்?

கோயில் வீதிகளில நினைவுத்தூபி வைக்கட்டும் பார்ப்பம். மறந்தும் வைக்க மாட்டார்கள்.

நன்றி, இலண்டனில் ரூற்றிங் அம்மன் கோவில் வைத்திருந்தார்கள். யேர்மனியில் ஸ்ருட்காட் பிள்ளையார் கோவிலிலும் பார்த்த ஞாபகம். ஸ்ருட்காட் கோவிலில் யாராவது பார்த்திருந்தால் பகிரலாம்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

489960255_23968499212745764_326629918372

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kandiah57 said:

இலங்கை வழக்கு போட்டு நிறுத்தி தடைச் செய்யலாமா ???

கனடாவுக்கு எதிராக கண்டனத்தை  செய்யாமலா விட்டிருக்கும்? வழக்கு என்பது போடமுடியாது, எங்கே போடுவது, ஐ. நாவிலா? அங்கே இவர்களுக்கெதிரான இந ஒடுக்குமுறை பாக்கி இருக்கிறதே? அவர்கள் நாட்டில் எதை கட்டவேண்டும், கட்டக்கூடாது என தீர்மானிப்பது அந்த நாட்டு மக்களும் அரசாங்கமுமே தவிர இந அழிப்பை செய்த இலங்கை அரசாங்கமல்ல. தனது நாட்டில் இந, மத நல்லிணக்கத்தை குழி தோண்டி புதைத்துக்கொண்டு, மற்றைய நாடுகளுக்கு அச்சுறுத்தல், கண்டனம், போதிப்பு. இப்போ கனடா இலங்கையின் மொழியிலேயே பதில் கொடுக்க ஆரம்பித்து விட்டது. அதனால் தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றைய நாடுகளும் இதனை பின்பற்றக்கூடும். ஏனெனில் இந்தப்போரினாலேயே தமிழர் அந்தந்த நாடுகளில் தஞ்சம் புகுந்தனர், அந்த நாடுகளும் அவர்களை ஏற்றுக்கொண்டன. 

  • கருத்துக்கள உறவுகள்

இனவழிப்பு என்பது மட்டுமல்ல, புலிகள் பயங்கரவாதிகளல்லர், அவர்கள் சிங்களத்தின் இந ஒடுக்கலையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து போராடி தமது நிலத்தையும் பண்பாட்டையும்  மக்களையும் விடுவிக்க போராடிய விடுதலை வீரர்கள் என்பதையும் நோக்கி சர்வதேசத்தை நகர்த்துகிறார்கள்.  இவர்கள் விடும் கண்டனம் கோசம் சவால் எல்லாம் நமக்கு ஆதரவாகவே திரும்புகின்றன. இனக்கலவரம் வெடிக்கும், இரத்த ஆறு ஓடும் என எச்சரிப்பது, இவர்களது கடந்தகால வரலாற்றுக்கு சாட்சியம். பயங்கரவாதிகளிடமிருந்து மக்களை காப்பாற்ற நடத்திய மனிதாபிமானப்போர் என்கிறது. அப்படியெனில் மக்களின் பாதுகாப்பை கருதாமல் அவர்கள்மேல் குண்டுகளை பொழிந்து, அவர்களுக்கு வேண்டிய உணவு, மருந்துகளை தடுத்தது ஏன்? அவர்கள் தப்பித்து சென்று உயிர் வாழும் சந்தர்ப்பங்களை மறுத்து, வீதிகளை  அடைத்து கெடுபிடிகளை ஏற்படுத்தியதும்  ஏன்? அவர்கள் உயிர் காக்க தஞ்சமடைந்த இடங்களை அழித்து அவர்களை விரட்டியது ஏன்? சரணடைந்தவர்களை கொன்றது ஏன்? புலிகள் வெற்றிகொள்ளப்பட்ட பின்னும் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்திருப்பது ஏன்? அவர்கள் நிலங்களில் அவர்கள் வாழ்வியலை தடுத்து அவர்களுக்கு பொருத்தமில்லாத விகாரைகளை எழுப்பி அவர்களை சீண்டுவது ஏன்?  மக்கள் இவர்களிடம் புலிகளுக்கெதிராக முறையிட்டார்களா? பாதுகாப்பு கேட்டார்களா? இன்னுமேன் மாவீரர் தினத்தை நினைவு கூர முண்டியடிக்கிறார்கள்? இன்னும் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக  போராடிக்கொண்டுதானே இருக்கிறார்கள். அப்போ எங்கே தவறு புலிகளிலா சிங்களத்திலா? சர்வதேசம் ஒன்றும் முட்டாளல்ல என்பதை சிங்களம் தனது முடிவின்போது கண்டு அதிர்ச்சியுறும்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.