Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி ஆய்வாளர் ஜம்மு பேபி!!

Featured Replies

செய்தி ஆய்வாளர் ஜம்மு பேபி!!

அன்று நடந்தது என்ன??????

ஒரு ஊரில ஆச்சி வடை சுட்டு கொண்டு இருக்கும் போது காக்கா வந்து வடையை எடுத்து கொண்டு போயிட்டு!! :unsure:

ஏன் அந்த காக்கா வடையை தூக்கினது!!

1)காக்காவிற்கு பசியாக இருக்கலாம்!

2)ஆச்சியின் கவனமின்மை!

3)வடை மேல் காக்காவிற்கு இருந்த ஆசை!

4)காக்காவின் பிண்ணணியில் ஏதோ ஒரு உளவு நிறுவனம் இயங்கி வந்திருக்கலாம் (குறிப்பாக டங்குமாமாவின் புலனாய்வு துறையாக கூட இருக்கலாம்)

*இங்கே நாம் முக்கியமா கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றா காக்கா ஏன் வடையை மட்டும் தூக்கி கொண்டு சென்றது என்பதை மட்டுமே!! :huh:

அடுத்து நடந்தது என்ன????

*காக்கா மரத்தில வைத்து வடையை சாப்பிடுகிறது (இதில் தான் நாம் கவனிக்க வேண்டிய விசயமே இருக்கு ஏன் காக்கா வடையை மரத்தில் வைத்து சாப்பிட வேண்டும் என்பது :blink: ) அந்த வழியால் நரி வருகிறது!!வந்த நரி காக்காவின் வடையை கண்டு ஆசைபடுகிறது!!

இங்கே தான் பல சந்தேகங்கள் மறைந்து நிற்கின்றது!!

1)நரிக்கு பின் ஏதோ ஒரு உளவு நிறுவனம் உதவி புரிகிறது (குறிப்பாக சுண்டல் அண்ணாவின் புலனாய்வு துறையாக கூட இருக்கலாம்) இல்லை எனில் எப்படி நரி அந்த வழியில் வந்தது!!

2)நரி காக்காவை கண்டு ஆசைபடாம வடையை கண்டு ஏன் ஆசைபடுகிறது!!

அதன் பின்னர் நடந்தது என்ன?????

நரி காக்காவை பார்த்து "நீ நல்ல அழகா இருகிறாய்" பாட்டு பாடு என்று சொல்ல காக்காவும் ஏமாந்து போய் "கா கா" என்று பாட வடை கீழே விழ நரி எடுத்து கொண்டு ஒடுகிறது!!

இதில் பல விசயங்கள் மர்மமாகவே இருக்கின்றது!!

1)அதாவது இந்த நரி தனியாக தான் வந்ததா அல்லது ஒரு கூட்டமாக வந்ததோ என்ற பெரிய சந்தேகம்!!

2)பாட்டு பாடினா வடை கீழே விழும் என்றா இராணுவ இரகசியத்தை நரிக்கு யார் சொல்லி கொடுத்தது!!

3)வடை கீழே விழுந்தா பிறகு நரி வடையை எடுத்து கொண்டு ஏன் ஓடுவான் நின்று சாப்பிட்டிருக்கலாம் ஆனா அவ்வாறு செய்யவில்லை!(அப்படியாயின் அந்த வடையில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது)

4)மொத்தத்தில் இது ஒரு திட்டமிடபட்ட செயலாகவே புலபடுகிறது!!

அடுத்து 1974 ஆம் ஆண்டு இதை போல இஸ்ரெலில் ஒரு சம்பவம் நடந்திருகிறது அதனுடன் தொடர்புபடுத்தி பார்க்கும் போது இது திட்டமிடபட்ட ஒரு நடவடிக்கையாகவே இருகிறது!!ஆகவே இது பல ஆண்டுகளாக புலனாய்வு செய்து அதிரடியாக வடையை எடுக்க நரி போட்ட திட்டமாகவே புலபடுகிறது! :huh: !

நரியின் தந்திரம்!!

யாழ் இணைய செய்தி அலசல்

செய்தி ஆய்வாளர் ஜம்மு பேபி!!

டங்கு மாமா -ஜம்மு பேப் பிச்சு போடுவேன் பிச்சு காக்கா வடையை எடுத்தது அதை நரி கொண்டு போயிட்டு ஆனா என்னவோ கண்ணுக்கு முன்னாலே இருந்து பார்த்த மாதிரியும் இல்லை காக்காவிற்கு உதவி செய்த மாதிரியும் அட்லீஸ் நரிக்கு வடையை எடுக்க டிரேயினிங் கொடுத்திருந்தாலும் பரவாயில்லை :wub: !!செய்தி ஆய்வு செய்யிறாவாம் ஜம்மு பேபி இப்படி எனி காமேடி பண்ணிணா நேக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்!! :blink:

ஜம்மு பேபி -டங்கு மாமாவிற்கு எரிச்சல் நான் செய்தி ஆய்வு எழுதி இக்பால் ஜம்மு மாதிரி வந்திடுவேன் என்று அது தான் இப்படி எல்லாம் சொல்லுறார் யாழ்கள மெம்பர்ஸ் நீங்க சொல்லுங்கோ எப்படி செய்தி ஆய்வு இருந்தது என்று அப்ப தான் நானும் இக்பால் ஜம்மு ஆகலாம்! :lol: !

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு உங்கட ஆராய்ச்சி தேவைதான். ஏன் நரி அந்த வடையை மட்டும் குறி வைத்தது? ஆச்சியிட்ட இருந்து இன்னொரு வடையை எடுத்திருக்கலாம் தானே? மேலும் நரி உடனே ஓடினது மிகுந்த சந்தேகத்துக்குரியது. கண்டுபிடிச்சு சொல்லோணும், சரியா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*இங்கே நாம் முக்கியமா கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றா காக்கா ஏன் வடையை மட்டும் தூக்கி கொண்டு சென்றது என்பதை மட்டுமே!!

காக்காக்கு மட்டும் பலம் இருந்திருந்தால், பாட்டியையோ அல்லது எண்ணைச்சட்டியையோ தூக்கிக்கொண்டு போயிருக்கும்.

நானும் நெக்கிறன் இது வெளிநாட்டுச்சதியெண்டு!

  • தொடங்கியவர்

என்ட ஆராய்ச்சி தேவை என்று சொன்னபடியா நேக்கு சரியான சந்தோசம் சோ ஒவ்வொருகிழமையும் ஒரு ஆய்வை தருகிறேன் :blink: !!ஆமாம் அந்த நரி ஓடினது தான் ஏன் என்று விளங்கவில்லை அதை பற்றி அடுத்த ஆய்வில் விளக்கமாக சொல்லுகிறேன்!! :unsure:

இப்படிக்கு,

உலக புகழ் பெற்ற செய்தி ஆய்வாளர்,

ஜம்மு பேபி.

காக்காக்கு மட்டும் பலம் இருந்திருந்தால், பாட்டியையோ அல்லது எண்ணைச்சட்டியையோ தூக்கிக்கொண்டு போயிருக்கும்.

நானும் நெக்கிறன் இது வெளிநாட்டுச்சதியெண்டு!

நிச்சயமா இதில வெளிநாட்டு சதி இருக்கிறது :huh: !!நீங்க சொன்னா பிறகு தான் நேக்கு யோசணை வருகிறது குறிப்பாக காக்காவை வடையை தூக்குமாறு அமெரிக்கா சொல்லி இருக்கும் அதன் பின் நரியையும் அவர்கள் தான் ஏவி இருப்பார்கள் என்று!! :blink:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடைக்கு ஓட்டை இருக்கிறதால தானே இந்த காகத்தால அதை தூக்கிக்கொண்டு போக முடிஞ்சது. இனிமேல் ஓட்டை போட்ட வடை சுடவேண்டாம் என்று மக்களிடம் எடுத்துரைப்போம்.

ஜம்புபபாவை இப்பிடி எழுதவைத்ததுக்கும் ஒரு வெளிநாட்டு சக்திதான் காரணமாக இருக்கவேணும்.வடைக்கதையை எழுதி களத்தை வேறுபாதையில் இழுத்துசெல்தற்கான முயற்சிபோல் தெரிகிறது.எதற்கும் டண்ணின்ரை புலநாயைவிட்டு ஆராய சொல்லவேணும்.......

ஜம்மு அன்னிய சக்திகளுக்கு விலை போய்விட்டாரோ என்ற சந்தேகம் தவிர்க்கமுடியாமல் எழுகின்றது ... ஜம்முவை கண்காணிக்க யாழ் கழ புலனாய்வாழர்கழுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க நிர்வாகத்திடம் வேண்டுகோழ் விடபடுகின்றது, இதில் நரிக்கும் ஜம்முவிற்கும் உள்ள தொடர்பை கண்டறிய சிறப்பு குழு ஒன்றும் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்

"அதாவது இந்த நரி தனியாக தான் வந்ததா அல்லது ஒரு கூட்டமாக வந்ததோ என்ற பெரிய சந்தேகம்!!"

நரியெல்லாம் தனியா தான் வரும்.பண்ணி(ன்றி)கள் தான் கூட்டம் கூட்டமா வரும் . எங்கோ கேட்ட மாதிரியிலை.

"நரி காக்காவை கண்டு ஆசைபடாம வடையை கண்டு ஏன் ஆசைபடுகிறது!!"

காக்கவின்ரை வடிவிலே காக்காயை கண்டு ஆசை படுறதாக்கும்.

"பாட்டு பாடினா வடை கீழே விழும் என்றா இராணுவ இரகசியத்தை நரிக்கு யார் சொல்லி கொடுத்தது!!"

இது கேள்வி. நிச்சயமாக,ஆணித்தரமாக இச்சபையோரை பார்த்து சொல்கிறேன் அது மகிந்துவின் உளவுப்படை தான்.சந்தேகமே இல்லை.

"டங்கு மாமா -ஜம்மு பேப் பிச்சு போடுவேன் பிச்சு காக்கா வடையை எடுத்தது அதை நரி கொண்டு போயிட்டு ஆனா என்னவோ கண்ணுக்கு முன்னாலே இருந்து பார்த்த மாதிரியும் இல்லை காக்காவிற்கு உதவி செய்த மாதிரியும் அட்லீஸ் நரிக்கு வடையை எடுக்க டிரேயினிங் கொடுத்திருந்தாலும் பரவாயில்லை !!செய்தி ஆய்வு செய்யிறாவாம் ஜம்மு பேபி இப்படி எனி காமேடி பண்ணிணா நேக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்!! "

அது தானே டங்கு மாமா எங்கிருந்தாலும் உடனடியாக ஜம்முவுடன் தொடர்பு கொண்டு அவரின் டவுட்டை கிளியர் பண்ணுங்கோ.

  • தொடங்கியவர்

வடைக்கு ஓட்டை இருக்கிறதால தானே இந்த காகத்தால அதை தூக்கிக்கொண்டு போக முடிஞ்சது. இனிமேல் ஓட்டை போட்ட வடை சுடவேண்டாம் என்று மக்களிடம் எடுத்துரைப்போம்.

இது ஒரு நல்ல முயற்சி தீவிரமாக இதனை மக்களிற்கு பிரசாரம் செய்வோம் 007 உங்கள் தலைமையில் அதாவது எனி வடையில் ஓட்டை போடாம வடையை சுடுவோம் என்று!! :unsure:

ஜம்புபபாவை இப்பிடி எழுதவைத்ததுக்கும் ஒரு வெளிநாட்டு சக்திதான் காரணமாக இருக்கவேணும்.வடைக்கதையை எழுதி களத்தை வேறுபாதையில் இழுத்துசெல்தற்கான முயற்சிபோல் தெரிகிறது.எதற்கும் டண்ணின்ரை புலநாயைவிட்டு ஆராய சொல்லவேணும்.......

வன்னியன் அண்ணா நீங்களே இப்படி சொன்னா நான் அரசியல் ஆய்வல்லோ எழுதுறன் இதற்கும் வெளிநாட்டு சக்திகளுக்கும் காரணம் இல்லை :( ஆனா அந்த வடையை தூக்கி கொண்டு போனதில் வெளிநாட்டு சக்திகளுக்கு காரணம் இருக்கிறது என்பதை தான் இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்க போறேன் :D !! அண்ணா இப்படி சொல்லி இருக்க வேண்டும் அதாவது காலதிற்கேற்ப ஆய்வு தொடரட்டும் உங்கள் பணி என்று நேக்கு எவ்வளவு கவலையா இருக்கு அடுத்த முறை நான் சொல்லி தந்த மாதிரி சொல்ல வேண்டும் சரியா :wub: !!இப்ப ஏன் டங்கு மாமாவை கூப்பிடுறீங்க அவர் பிசி!! :lol:

ஜம்மு அன்னிய சக்திகளுக்கு விலை போய்விட்டாரோ என்ற சந்தேகம் தவிர்க்கமுடியாமல் எழுகின்றது ... ஜம்முவை கண்காணிக்க யாழ் கழ புலனாய்வாழர்கழுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க நிர்வாகத்திடம் வேண்டுகோழ் விடபடுகின்றது, இதில் நரிக்கும் ஜம்முவிற்கும் உள்ள தொடர்பை கண்டறிய சிறப்பு குழு ஒன்றும் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது...

சுபண் அண்ணா ஜம்முவை கண்காணிக்க புலனாய்வு குழு அதற்கு ஒரு சிறப்பு குழு இது ஓவரா தெரியவில்லை :lol: !!அக்சுவலா அந்த நரி எனக்கு வடையில ஒரு பங்கு தரும் என்று சொல்லிவிட்டு தரவில்லை அது தான் இப்படி ஆய்வெல்லாம் செய்யிறேன் இந்த இராணுவ இரகசியத்தை வெளியால சொல்லிடாதையுங்கோ :blink: !!அது சரி நீங்களும் ஒரு ஆய்வு எழுதலாமே!! :lol:

அப்ப நான் வரட்டா!!

"அதாவது இந்த நரி தனியாக தான் வந்ததா அல்லது ஒரு கூட்டமாக வந்ததோ என்ற பெரிய சந்தேகம்!!"

நரியெல்லாம் தனியா தான் வரும்.பண்ணி(ன்றி)கள் தான் கூட்டம் கூட்டமா வரும் . எங்கோ கேட்ட மாதிரியிலை.

"நரி காக்காவை கண்டு ஆசைபடாம வடையை கண்டு ஏன் ஆசைபடுகிறது!!"

காக்கவின்ரை வடிவிலே காக்காயை கண்டு ஆசை படுறதாக்கும்.

"பாட்டு பாடினா வடை கீழே விழும் என்றா இராணுவ இரகசியத்தை நரிக்கு யார் சொல்லி கொடுத்தது!!"

இது கேள்வி. நிச்சயமாக,ஆணித்தரமாக இச்சபையோரை பார்த்து சொல்கிறேன் அது மகிந்துவின் உளவுப்படை தான்.சந்தேகமே இல்லை.

"டங்கு மாமா -ஜம்மு பேப் பிச்சு போடுவேன் பிச்சு காக்கா வடையை எடுத்தது அதை நரி கொண்டு போயிட்டு ஆனா என்னவோ கண்ணுக்கு முன்னாலே இருந்து பார்த்த மாதிரியும் இல்லை காக்காவிற்கு உதவி செய்த மாதிரியும் அட்லீஸ் நரிக்கு வடையை எடுக்க டிரேயினிங் கொடுத்திருந்தாலும் பரவாயில்லை !!செய்தி ஆய்வு செய்யிறாவாம் ஜம்மு பேபி இப்படி எனி காமேடி பண்ணிணா நேக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்!! "

அது தானே டங்கு மாமா எங்கிருந்தாலும் உடனடியாக ஜம்முவுடன் தொடர்பு கொண்டு அவரின் டவுட்டை கிளியர் பண்ணுங்கோ.

நுணாவிலன் அண்ணாவின் ஆய்வை பார்க்கும் போது அவரும் ஒரு சிறந்த செய்தி ஆய்வாளர் போல் இருகிறார் ஆகவே தொடர்ந்து வரும் காலங்களிள் அவரும் பல செய்தி ஆய்வுகளை என்னோடு சேர்ந்து தருவார் என்பதை இத்தால் மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

டாங்ஸ் பேப். கீப் இட் அப்

யூ நோ, வீ நிட்டு அண்டசராண்ட் த பண்டமென்ரல் புறப்பிழம் கியர். தமிழில் சொல்லப்போனால், நாங்கள் அடிப்படை பிரச்சனையை அலசிப்பார்க்க வேணும். அடிப்படை பிரச்சனை என்ன வென்றால், காகத்துக்கும் நரிக்கும் வடை சுட தெரியாது. ஆகவே பாட்டி நரிக்கும் காகத்துக்கும் வடை சுட சொல்லிக் குடுக்க வேணும்...

  • தொடங்கியவர்

அட பொன்னி தாத்தா உதில பன்ரமல புரோபளம் வேற இருக்கா :lol: !!பொன்னி தாத்தா நீங்களும் நல்லதொரு செய்தி ஆய்வாளர் என்பதை நிருபீத்துவிட்டீங்க :blink: !!இதில அடிப்படை பிரச்சினை காகதிற்கும் நரிக்கும் வடை சுட தெரியாது என்பது இல்லை :unsure: !!பாட்டி வடை சுட்டதே அடிப்படை மூல பிரச்சினையாக இருக்கிறது :wub: !!பாட்டி வந்து கட்லட் சுட்டு இருக்கலாம் அல்லது வேறேதாவது சுட்டு இருக்கலாம் ஏன் வடையை சுட்டவா என்பது தான் மிக பெரிய கேள்வி???ஆகவே இதை பற்றிய உங்க ஆய்வு என்ன பொன்னிதாத்தா :wub: (விசேட செய்தி ஆய்வாளர்)

அப்ப நான் வரட்டா!!

அட இங்கை பாரன் ஆராய்ச்சியை. பேபி நல்லா இருக்கு ஆராய்ச்சி. ஹீஹீ

அடடா ..... :unsure:

எனக்கு ஒரு சந்தேகம், பாட்டி வடையை எந்த நாட்டில் சுட்டவா? இது கி.மு அல்லது கி.பியிலா நடந்தது? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேராண்டி.. ஆய்வு சூப்பரோ டூப்பர்.

எல்லாரும் முக்கியமான ஒன்றை ஆய்வில எடுத்துக் கொள்ளேல்ல. அதுதான் ஆச்சியின் பொருளாதார பலம். ஆச்சிக்கு வடை சுட உழுந்து, எண்ணெய்.. தாச்சி.. போன்ற இந்தப் பிரச்சனைக்கு காரணமானவை எப்படிக் கிடைச்சது..??! அவவின்ர பொருளாதாரம் தான் அதுக்கு முக்கிய காரணம். அதை சிதைச்சிருந்தா இந்தப் பிரச்சனையே வந்திராது. ஆக.. ஆச்சிக்கு பொருளாதாரம் கிடைக்கிற வழிகளைக் கண்டறிஞ்சு அதைத் தடுக்கிறதுதான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வாகும். இப்படியே ஆச்சியை வடை சுட அனுமதிச்சா.. காகம் வடையைத் தூக்க.. நரி வர... பிரச்சனை தொடருமே தவிர தீராது. எனவே எல்லோரும் ஆச்சி சுடுற வடைகளைப் புறக்கணியுங்க. வீட்டில நீங்களா சுட்டுச் சாப்பிடுவதன் மூலம் இதை புலம்பெயர்ந்த மக்கள் செய்யலாம்.

ஆச்சியோட ஜம்மு பேபியை மத்தியஸ்தரா வைச்சு ஒரு முக்கோண மேசை பேச்சு (ஆச்சி.. காகம்.. நரி மூன்று கோணங்களில் அமர ஜம்மு பேபி வடையோட நடுவில இருப்பார்) வார்த்தை நடத்திப் பார்க்கலாம். எதுக்கும் ஆச்சியின்ர பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தாமல் பேச்சுக்குப் போய் பிரயோசனம் இல்ல. எனவே இன்றிருந்து எல்லாரும் ஆச்சின்ர வடையை புறக்கணிக்க தொடங்குங்க..! குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களின் கடைகளில் எனி வடைகளை விற்கக் கூடாது என்று பெரும் பிரச்சாரத்தை நாங்கள் இணையம் மூலம் முன்னெடுக்க வேண்டும். அதுதான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முதற் கட்ட நடவடிக்கையாக அமையும் என்று என் மூளையைக் கசைக்கிப் பிழிஞ்ச போது சாறாக வெளிப்படுற உண்மை.

அதுக்கும் மேல இதை ஒரு பயங்கரவாதப் பிரச்சனையாக சர்வதேச சமூகத்தை பார்க்கச் சொல்ல வேண்டிய கடப்பாடு புலம்பெயர்ந்த மக்களுடையது. அதுக்கான பிரச்சாரங்களை புலம்பெயர்ந்த நாடுகளில் ஜம்மு போன்ற சின்னப் பிள்ளைகள் மத்தியில் எடுத்துச் செல்லும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்களின் கடமை. அதை மறந்து பல ஊடகங்கள் ஆச்சியின் வடைக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன. பலர் வடையின் உருசியைப் பற்றி உளறிக் கொண்டிருக்கினம். ஆச்சிக்கு எதிராக அனைத்துலக தடைகள் கொண்டு வந்தால் தான்.. ஆச்சி அழுத்தத்தின் மத்தியில வடை சுடுவதை நிறுத்துவாங்க. எந்த வகையிலும் ஆச்சி வடை சுடுறதை நிறுத்த நாம் எமது பங்களிப்பை வழங்கனும். வடை சுடப்படும் வரை இந்தப் பிரச்சனை தீராது. :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவானே.... இது ஆக ரூ மச்சா தெரியல்ல?

இந்த பாட்டி, காகம், நரி, வடைப்பிரச்சனை கனகாலத்துக்கு தொடராது ஏனெண்டா, காகமும் நரியும் நொண்வெஜிட்டேரியன்ஸ்.

ஆனால் பாட்டி மட்டும் சிக்கின் 65 சுட்டால்...பிரச்சனை எகிறும்! பாட்டியின் சுடு சுதந்திரத்தை தடுக்க ஏற்பாடுசெய்தல் நன்கு.

அட பொன்னி தாத்தா உதில பன்ரமல புரோபளம் வேற இருக்கா :lol: !!பொன்னி தாத்தா நீங்களும் நல்லதொரு செய்தி ஆய்வாளர் என்பதை நிருபீத்துவிட்டீங்க :blink: !!இதில அடிப்படை பிரச்சினை காகதிற்கும் நரிக்கும் வடை சுட தெரியாது என்பது இல்லை :unsure: !!பாட்டி வடை சுட்டதே அடிப்படை மூல பிரச்சினையாக இருக்கிறது :wub: !!பாட்டி வந்து கட்லட் சுட்டு இருக்கலாம் அல்லது வேறேதாவது சுட்டு இருக்கலாம் ஏன் வடையை சுட்டவா என்பது தான் மிக பெரிய கேள்வி???ஆகவே இதை பற்றிய உங்க ஆய்வு என்ன பொன்னிதாத்தா :wub: (விசேட செய்தி ஆய்வாளர்)

அப்ப நான் வரட்டா!!

வடையா? கட்லட்டா என்பது அல்ல அடிப்படை பிரச்சனை..ஏனெனில், கட்லட் என்பது ஆங்கிலேயர் வருகைக்கு பிறகு வந்த பணியாரம். நமது கருக் கதை சில வருடங்கள் பழமை வாய்ந்தது.

  • தொடங்கியவர்

அட இங்கை பாரன் ஆராய்ச்சியை. பேபி நல்லா இருக்கு ஆராய்ச்சி. ஹீஹீ

நிலா அக்கா ஆராய்ச்சி நல்லா இருக்கா வெகு சீக்கிரத்தில நானும் அப்ப இக்பால் அத்தா போல வந்திடுவேன் என்று சொல்லுங்கோ!! :D

அடடா .....

குட்டி மாமா எங்கே இருந்து வாறீங்க எப்படி சுகம் வடை என்றவுடன் வந்த மாதிரி இருக்கு!! :unsure:

எனக்கு ஒரு சந்தேகம், பாட்டி வடையை எந்த நாட்டில் சுட்டவா? இது கி.மு அல்லது கி.பியிலா நடந்தது?

இப்படி ஒரு சந்தேகம் வேற இருக்கா இதை பற்றி என்னுடைய அடுத்த அரசியல் அலசலில் ஆராய்கிறேன் கவி ஆண்டி!! :lol:

ஜம்மு பேராண்டி.. ஆய்வு சூப்பரோ டூப்பர்.

எல்லாரும் முக்கியமான ஒன்றை ஆய்வில எடுத்துக் கொள்ளேல்ல. அதுதான் ஆச்சியின் பொருளாதார பலம். ஆச்சிக்கு வடை சுட உழுந்து, எண்ணெய்.. தாச்சி.. போன்ற இந்தப் பிரச்சனைக்கு காரணமானவை எப்படிக் கிடைச்சது..??! அவவின்ர பொருளாதாரம் தான் அதுக்கு முக்கிய காரணம். அதை சிதைச்சிருந்தா இந்தப் பிரச்சனையே வந்திராது. ஆக.. ஆச்சிக்கு பொருளாதாரம் கிடைக்கிற வழிகளைக் கண்டறிஞ்சு அதைத் தடுக்கிறதுதான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வாகும். இப்படியே ஆச்சியை வடை சுட அனுமதிச்சா.. காகம் வடையைத் தூக்க.. நரி வர... பிரச்சனை தொடருமே தவிர தீராது. எனவே எல்லோரும் ஆச்சி சுடுற வடைகளைப் புறக்கணியுங்க. வீட்டில நீங்களா சுட்டுச் சாப்பிடுவதன் மூலம் இதை புலம்பெயர்ந்த மக்கள் செய்யலாம்.

ஆச்சியோட ஜம்மு பேபியை மத்தியஸ்தரா வைச்சு ஒரு முக்கோண மேசை பேச்சு (ஆச்சி.. காகம்.. நரி மூன்று கோணங்களில் அமர ஜம்மு பேபி வடையோட நடுவில இருப்பார்) வார்த்தை நடத்திப் பார்க்கலாம். எதுக்கும் ஆச்சியின்ர பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தாமல் பேச்சுக்குப் போய் பிரயோசனம் இல்ல. எனவே இன்றிருந்து எல்லாரும் ஆச்சின்ர வடையை புறக்கணிக்க தொடங்குங்க..! குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களின் கடைகளில் எனி வடைகளை விற்கக் கூடாது என்று பெரும் பிரச்சாரத்தை நாங்கள் இணையம் மூலம் முன்னெடுக்க வேண்டும். அதுதான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முதற் கட்ட நடவடிக்கையாக அமையும் என்று என் மூளையைக் கசைக்கிப் பிழிஞ்ச போது சாறாக வெளிப்படுற உண்மை.

அதுக்கும் மேல இதை ஒரு பயங்கரவாதப் பிரச்சனையாக சர்வதேச சமூகத்தை பார்க்கச் சொல்ல வேண்டிய கடப்பாடு புலம்பெயர்ந்த மக்களுடையது. அதுக்கான பிரச்சாரங்களை புலம்பெயர்ந்த நாடுகளில் ஜம்மு போன்ற சின்னப் பிள்ளைகள் மத்தியில் எடுத்துச் செல்லும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்களின் கடமை. அதை மறந்து பல ஊடகங்கள் ஆச்சியின் வடைக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன. பலர் வடையின் உருசியைப் பற்றி உளறிக் கொண்டிருக்கினம். ஆச்சிக்கு எதிராக அனைத்துலக தடைகள் கொண்டு வந்தால் தான்.. ஆச்சி அழுத்தத்தின் மத்தியில வடை சுடுவதை நிறுத்துவாங்க. எந்த வகையிலும் ஆச்சி வடை சுடுறதை நிறுத்த நாம் எமது பங்களிப்பை வழங்கனும். வடை சுடப்படும் வரை இந்தப் பிரச்சனை தீராது.

நெடுக்ஸ் தாத்தா ஆய்வை பாராட்டி இருக்கிறபடியா வரும் காலத்தில இந்த ஆய்வு பல திருப்புமுனையாக கூட அமையலாம்!! :lol:

தாத்தா ஆச்சியின் வடையை நாங்க புறகணித்தாலும் வேறா நாட்டு ஆட்கள் வாங்கி சாப்பிட்டா தாத்தா!!அப்ப மறுபடியும் ஆச்சிக்கு வடை சுட பொருளாதார வசதி வந்துவிடும் அல்லவா!!அல்லது இப்படி செய்யலாம் வீட்டை வடை சுடாமா அந்த வடைக்கு சமனான வடையை நாம் தயாரிக்க வேண்டும்! :lol: !

என்னவோ ஜம்மு பேபியை நடுவில இருத்தி வடையை கையில கொடுத்தா ஜம்மு பேபியின்ட கவனம் எல்லாம் வடையில தான் இருக்கும் ஒழிய பிரச்சினையை தீர்பதிற்காக இருக்காது :blink: !!ஆகவே நெடுக்ஸ் தாத்தா சொல்வது போல ஆச்சியின் வடையை புறகணிப்போம் நாமே வடையை தயாரித்து ஆச்சிக்கு போட்டியா வியாபாரம் நடத்துவோம்!!

ஆகவே நெடுக்ஸ் தாத்தா சொல்லுறமாதிரி ஆச்சி வடை சுடாம இருக்க எம்மாலான முயற்ச்சிகளை பண்ணவேண்டும் அத்துடன் ஆச்சி வடையில் இருந்து கட்லட் சுட போகாம இருக்கவும் எம்மாலான பங்களிப்பை செய்ய வேண்டும் சரியா நெடுக்ஸ் தாத்தா!! :(

நெடுக்காலபோவானே.... இது ஆக ரூ மச்சா தெரியல்ல?

இந்த பாட்டி, காகம், நரி, வடைப்பிரச்சனை கனகாலத்துக்கு தொடராது ஏனெண்டா, காகமும் நரியும் நொண்வெஜிட்டேரியன்ஸ்.

ஆனால் பாட்டி மட்டும் சிக்கின் 65 சுட்டால்...பிரச்சனை எகிறும்! பாட்டியின் சுடு சுதந்திரத்தை தடுக்க ஏற்பாடுசெய்தல் நன்கு.

பாட்டியின் சுடு சுகந்திரத்தை முற்றாக இல்லாம செய்தால் இப்படி ஒரு பிரச்சினை எனி நடகாது அல்லோ!!

வடையா? கட்லட்டா என்பது அல்ல அடிப்படை பிரச்சனை..ஏனெனில், கட்லட் என்பது ஆங்கிலேயர் வருகைக்கு பிறகு வந்த பணியாரம். நமது கருக் கதை சில வருடங்கள் பழமை வாய்ந்தது.

இல்லை கட்லட் என்பது எமது ஆட்கள் தான் கண்டுபிடித்தவை பல வருடங்களிற்கு முதல் பொன்னி தாத்தா அப்ப அதற்கு பெயர் கட்லி :wub: என்பதே ஆகும் பிறகு வெள்ளைகாரர் வந்து கொஞ்ச வித்தியாசமா செய்து போட்டு "கட்லட்" என்று பெயரை வைத்துவிட்டீனம் ஆகவே கட்லட் வந்து தமிழர்களின் கண்டுபிடிப்பு தாத்தா!!ஆகவே இந்த கதையின் அடிபடை பிரச்சினை வடையாகவே இருக்கு!! :wub:

ஜம்மு பேபி,

உலக புகழ் பெற்ற செய்தி ஆய்வாளர்

*************

Edited by harikalan

  • தொடங்கியவர்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தாய்லாந்தில் நடந்த கூட்டத்திற்கு பின்னர்

அமெரிக்காவின் பயங்கரவாதம் தொடர்பான கேள்விக்கு சொன்னது

அமெரிக்கா என்ற நரி பாட்டுப்பாடச் சொன்னதாம் அதற்கு

அன்ரன் பாலசிங்கம் என்ற காக்கா என்ன செய்ததாம்

வடையை எடுத்து காலில் வைத்து விட்டு பாட்டுப் பாடிச்சுதாம்

தேசத்தின் குரல் மாவீரர் உரைக்கு விளக்க உரையின் போது லண்டனில் கூறியது

கரிகாலன் அங்கிள் உங்களின் தகவலிற்கு மிக்க நன்றி நீங்களும் ஒரு ஆய்வை செய்யலாம் போல இருக்கு!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஆச்சியிட்ட இருந்த வடை காகத்திட்ட போய் பிறகு நரியிட்ட போயிருக்கு.

இப்ப யாரிட்ட இருக்கு என்டு ஆராய்ந்து சொன்னால் நல்லா இருக்குமே... :wub:

செய்தி ஆய்வாளர் ஜம்மு பேபி!!

அன்று நடந்தது என்ன??????

ஒரு ஊரில ஆச்சி வடை சுட்டு கொண்டு இருக்கும் போது காக்கா வந்து வடையை எடுத்து கொண்டு போயிட்டு!!

ஏன் அந்த காக்கா வடையை தூக்கினது!!

1)காக்காவிற்கு பசியாக இருக்கலாம்!

2)ஆச்சியின் கவனமின்மை!

3)வடை மேல் காக்காவிற்கு இருந்த ஆசை!

4)காக்காவின் பிண்ணணியில் ஏதோ ஒரு உளவு நிறுவனம் இயங்கி வந்திருக்கலாம் (குறிப்பாக டங்குமாமாவின் புலனாய்வு துறையாக கூட இருக்கலாம்)

*இங்கே நாம் முக்கியமா கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றா காக்கா ஏன் வடையை மட்டும் தூக்கி கொண்டு சென்றது என்பதை மட்டுமே!!

அடுத்து நடந்தது என்ன????

*காக்கா மரத்தில வைத்து வடையை சாப்பிடுகிறது (இதில் தான் நாம் கவனிக்க வேண்டிய விசயமே இருக்கு ஏன் காக்கா வடையை மரத்தில் வைத்து சாப்பிட வேண்டும் என்பது ) அந்த வழியால் நரி வருகிறது!!வந்த நரி காக்காவின் வடையை கண்டு ஆசைபடுகிறது!!

இங்கே தான் பல சந்தேகங்கள் மறைந்து நிற்கின்றது!!

1)நரிக்கு பின் ஏதோ ஒரு உளவு நிறுவனம் உதவி புரிகிறது (குறிப்பாக சுண்டல் அண்ணாவின் புலனாய்வு துறையாக கூட இருக்கலாம்) இல்லை எனில் எப்படி நரி அந்த வழியில் வந்தது!!

2)நரி காக்காவை கண்டு ஆசைபடாம வடையை கண்டு ஏன் ஆசைபடுகிறது!!

அதன் பின்னர் நடந்தது என்ன?????

நரி காக்காவை பார்த்து "நீ நல்ல அழகா இருகிறாய்" பாட்டு பாடு என்று சொல்ல காக்காவும் ஏமாந்து போய் "கா கா" என்று பாட வடை கீழே விழ நரி எடுத்து கொண்டு ஒடுகிறது!!

இதில் பல விசயங்கள் மர்மமாகவே இருக்கின்றது!!

1)அதாவது இந்த நரி தனியாக தான் வந்ததா அல்லது ஒரு கூட்டமாக வந்ததோ என்ற பெரிய சந்தேகம்!!

2)பாட்டு பாடினா வடை கீழே விழும் என்றா இராணுவ இரகசியத்தை நரிக்கு யார் சொல்லி கொடுத்தது!!

3)வடை கீழே விழுந்தா பிறகு நரி வடையை எடுத்து கொண்டு ஏன் ஓடுவான் நின்று சாப்பிட்டிருக்கலாம் ஆனா அவ்வாறு செய்யவில்லை!(அப்படியாயின் அந்த வடையில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது)

4)மொத்தத்தில் இது ஒரு திட்டமிடபட்ட செயலாகவே புலபடுகிறது!!

அடுத்து 1974 ஆம் ஆண்டு இதை போல இஸ்ரெலில் ஒரு சம்பவம் நடந்திருகிறது அதனுடன் தொடர்புபடுத்தி பார்க்கும் போது இது திட்டமிடபட்ட ஒரு நடவடிக்கையாகவே இருகிறது!!ஆகவே இது பல ஆண்டுகளாக புலனாய்வு செய்து அதிரடியாக வடையை எடுக்க நரி போட்ட திட்டமாகவே புலபடுகிறது! !

நரியின் தந்திரம்!!

யாழ் இணைய செய்தி அலசல்

செய்தி ஆய்வாளர் ஜம்மு பேபி!!

டங்கு மாமா -ஜம்மு பேப் பிச்சு போடுவேன் பிச்சு காக்கா வடையை எடுத்தது அதை நரி கொண்டு போயிட்டு ஆனா என்னவோ கண்ணுக்கு முன்னாலே இருந்து பார்த்த மாதிரியும் இல்லை காக்காவிற்கு உதவி செய்த மாதிரியும் அட்லீஸ் நரிக்கு வடையை எடுக்க டிரேயினிங் கொடுத்திருந்தாலும் பரவாயில்லை !!செய்தி ஆய்வு செய்யிறாவாம் ஜம்மு பேபி இப்படி எனி காமேடி பண்ணிணா நேக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்!!

ஜம்மு பேபி -டங்கு மாமாவிற்கு எரிச்சல் நான் செய்தி ஆய்வு எழுதி இக்பால் ஜம்மு மாதிரி வந்திடுவேன் என்று அது தான் இப்படி எல்லாம் சொல்லுறார் யாழ்கள மெம்பர்ஸ் நீங்க சொல்லுங்கோ எப்படி செய்தி ஆய்வு இருந்தது என்று அப்ப தான் நானும் இக்பால் ஜம்மு ஆகலாம்! !

அப்ப நான் வரட்டா!!

சுவார்சியமான ஆய்வாளர் மட்டுமல்ல நீங்கள் வித்தியாசமான புத்திக்கூர்மையும் உங்களிடம் உண்டு. அன்று நரிகள் பரிகளான சுவார்சியமான சமயப்புத்தக கதை உங்கள் ஆய்வை பார்த்ததும் ஞாபகத்துக்கு வருகின்றது. நரி பாட்டு பாட சொல்லி கேட்பதும் தந்திரம் காக்கா வாயில வடையை வைப்பதும் தந்திரம் அதை நீங்கள் ஆய்வில் பொருத்துவது மாக தந்திரம். மிகவும் ரசித்தேன். நன்றி.

Edited by sukan

  • தொடங்கியவர்

ஆச்சியிட்ட இருந்த வடை காகத்திட்ட போய் பிறகு நரியிட்ட போயிருக்கு.

இப்ப யாரிட்ட இருக்கு என்டு ஆராய்ந்து சொன்னால் நல்லா இருக்குமே... :wub:

குட்டி மாமா நல்ல கேள்வி இதை பற்றி ஆராய தான் நெடுக்ஸ் தாத்தாவின் தலைமையில் ஒரு குழுவை ஆராய அனுப்பி இருகிறோம் வெகுவிரைவில் அதை பற்றிய அறிக்கையை நெடுக்ஸ் தாத்தா சமர்பிப்பார் :) அதன் பின் அந்த ஆய்வை எழுதுகிறேன்!!அத்துடன் ஒரு வதந்தி பரவுகிறது அந்த வடை ஜம்மு பேபியிட்ட தான் இருக்கிறது என்று அது உண்மை இல்லை :lol: ஏனேன்றா பேபிக்கு என்னும் பல்லு முளைக்கவில்லை பிறகு எதுக்கு வடை மாமா!! :D

அப்ப நான் வரட்டா!!

சுவார்சியமான ஆய்வாளர் மட்டுமல்ல நீங்கள் வித்தியாசமான புத்திக்கூர்மையும் உங்களிடம் உண்டு. அன்று நரிகள் பரிகளான சுவார்சியமான சமயப்புத்தக கதை உங்கள் ஆய்வை பார்த்ததும் ஞாபகத்துக்கு வருகின்றது. நரி பாட்டு பாட சொல்லி கேட்பதும் தந்திரம் காக்கா வாயில வடையை வைப்பதும் தந்திரம் அதை நீங்கள் ஆய்வில் பொருத்துவது மாக தந்திரம். மிகவும் ரசித்தேன். நன்றி.

நன்றி சுகன் அண்ணா அப்ப இன்னும் பல ஆய்வுகளை எழுதவோ!! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.