Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -

Published By: RAJEEBAN

13 JUN, 2025 | 06:52 AM

image

ஈரான்மீது தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஈரான் ஆளில்லா விமானதாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என்பதால் அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

இஸ்ரேல் பெருமளவு அணுசக்தி அணுவாயுத இலக்குகளையும் இராணுவ இலக்குகளையும் தாக்குவதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் முன்கூட்டிய தாக்குதலை தொடர்ந்து ஈரான் ஆளில்லா விமான தாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/217320

ஈரானின் புரட்சிகர காவல்படையின் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி

13 JUN, 2025 | 07:59 AM

image

ஈரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதலில் இறந்த பல மூத்த தலைவர்களில் அவரும் ஒருவர்.

அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அப்பாசியும் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

https://www.virakesari.lk/article/217321

Edited by கிருபன்

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் நட்டான்ஸ் அணுஉலையில் வெடிப்பு சம்பவம்

Published By: RAJEEBAN

13 JUN, 2025 | 08:20 AM

image

ஈரானின் நட்டான்ஸ் அணுஉலையில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் தலைநகரிலிருந்து தென்பகுதியில் இந்த அணுஉலை அமைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/217322

இஸ்ரேல் தாக்குதல்- ஈரானின் இரண்டு அணுவிஞ்ஞானிகள் பலி

13 JUN, 2025 | 08:33 AM

image

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் இரண்டு அணுவிஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானின் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் பெரடுன் அப்பாசி இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.இந்த அமைப்பே ஈரானின் அணுஉலைகளிற்கு பொறுப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2001 இல் இவர் ஈரான் தலைநகரில் கொலைமுயற்சியிலிருந்து உயிர் தப்பினார். தெஹ்ரானின் இஸ்லாமிய ஆசாத் பல்கலைகழகத்தின் தலைவரும் கொல்லப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217323

ஈரான் இராணுவத்தின் தளபதியும் பலி

13 JUN, 2025 | 10:23 AM

image

ஈரானின் அணுஉலைகள் பாதுகாப்பு இலக்குகளை முன்வைத்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் ஈரானின் இராணுவதளபதியும் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் மற்றும் பாதுகாப்பு இலக்குகளை குறிவைத்து மேற்கொண்ட முன்கூட்டிய தாக்குதலில் ஜெனரல் முகமட் பகேரி கொல்லப்பட்டுள்ளார்.

ஈரானின் அரசதொலைக்காட்சி இதனை உறுதி செய்துள்ளது.

https://www.virakesari.lk/article/217330

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 2 அணு விஞ்ஞானிகள், முக்கிய தலைவர் பலி - அமெரிக்கா என்ன செய்கிறது?

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

13 ஜூன் 2025, 02:20 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரானின் அணுசக்தி திட்டங்களை குறி வைத்து தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 2 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என்று அதன் வெளியுறவு செயலர் ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஆனாலும், இந்த தாக்குதலை அமெரிக்காவின் ஆதரவுடன்தான் இஸ்ரேல் நடத்தியிருப்பதாக இரான் குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன், இஸ்ரேல் தங்களது பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் இரான் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், டெஹ்ரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவைப்பட்டால் தாக்குதல்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுஎச்சரித்துள்ளார்.

இரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன சொல்கிறார்?

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தகவல்

டெஹ்ரானில் இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து இரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, நகரத்தின் மீது வான் பாதுகாப்பு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலில் மூத்த அணு விஞ்ஞானிகள் 2 பேர் கொல்லப்பட்டதாக இரானிய அரசு தொலைக்காட்சி கூறுகிறது.

அதன்படி, ஒருவர் இரான் அணுசக்தி அமைப்பின் (AEOI) முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அபாசி ஆவர். இரானின் அணுசக்தி நிலையங்களுக்கு அந்த அமைப்பே பொறுப்பு.

2010-ஆம் ஆண்டில் டெஹ்ரான் தெருவில் நடந்த ஒரு படுகொலை முயற்சியில் அபாசி உயிர் தப்பினார்.

மற்றொருவர் டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தின் தலைவர் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி ஆவார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

புரட்சிகர காவல்படை தலைவர் இறந்தார் - இரானிய அரசு ஊடகங்கள்

இரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், அதன் தாக்குதல்கள் "இரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பிற இராணுவ இலக்குகளை" குறிவைத்ததாகக் கூறினார்.

புரட்சிகர காவல்படை தலைமையகம் மீது தாக்குதல் - இரானிய அரசு ஊடகம்

டெஹ்ரானில் உள்ள புரட்சிகர காவல்படை தலைமையகம் இஸ்ரேலிய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இரான் ஆயுதப்படைகளின் ஒரு கிளை மட்டுமின்றி, நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாகும்.

மேலும், டெஹ்ரானுக்கு அருகில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெஹ்ரானின் வடகிழக்கில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு நடத்தும் நூர் நியூஸை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. வெடிப்புகளுக்கான காரணம் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.

டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை இஸ்ரேல் தாக்கியதாக இரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெஹ்ரானில் உள்ள மக்களிடமிருந்தும் வெடிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரானிய அரசு ஊடகங்களின்படி, டெஹ்ரானின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

டெஹ்ரானின் இமாம் காமனெயி சர்வதேச விமான நிலையம் இரானிய தலைநகரிலிருந்து தென்மேற்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இஸ்ரேல் - இரான், நெதன்யாகு

பட மூலாதாரம்,REUTERS

"தாக்குதல்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்"

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இரானின் ஆயுதத் திட்டத்தின் 'இதயத்தை' குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறினார்.

இரான் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தின் மையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார். இரான் தலைநகரான டெஹ்ரானிலிருந்து 225 கி.மீ தெற்கே உள்ள நடான்ஸ் என்ற நகரில் உள்ள இரானின் முக்கிய செறிவூட்டல் நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக நெதன்யாகு கூறினார்.

ஏப்ரல் 2021-இல், அதே வசதியின் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தியதாக இரான் குற்றம் சாட்டியது.

"அணுகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள" இரானிய விஞ்ஞானிகளை இஸ்ரேல் குறிவைத்ததாக கூறியுள்ள நெதன்யாகு, தாக்குதல்கள் "எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்" என்று எச்சரித்தார்.

இஸ்ரேல் - இரான், நெதன்யாகு

இஸ்ரேல், அமெரிக்காவுக்கு இரான் எச்சரிக்கை

இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த தாக்குதல்களுக்காக 'பெரும் விலை' கொடுக்கும் என்று இரான் எச்சரித்துள்ளது.

இரான் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களுக்கு 'பெரும் விலை' கொடுக்கும் என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

"இந்த சியோனிச தாக்குதலுக்கு ஆயுதப்படைகள் நிச்சயமாக பதிலடி கொடுக்கும்" என்று இரானிய செய்தித் தொடர்பாளர் அபோல்ஃபாஸ்ல் ஷேகார்ச்சி கூறினார்.

இந்த தாக்குதல்கள் இஸ்ரேலின் "மோசமான தன்மையை" வெளிப்படுத்துகின்றன என்று இரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனெயி கூறியுள்ளார். இந்த தாக்குதலின் மூலம் இஸ்ரேல் "தனக்கென ஒரு கசப்பான விதியைத் தேடிக் கொண்டுள்ளது. அதை இஸ்ரேல் நிச்சயமாகப் பெறும்." என்று அவர் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது,

இரான் தலைநகர் டெஹ்ரான் முழுவதும் மீண்டும் வெடிச்சத்தங்கள் கேட்டது என்று மக்கள் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரான் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு

அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் இரானில் தாக்குதல்களை நடத்தியதாக இரான் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலிய தாக்குதல்களை கண்டிக்க சர்வதேச சமூகத்தை ஈரான் அழைக்கிறது

இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டிக்க உலக நாடுகளுக்கு இரான் வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த தாக்குதல் "உலகளாவிய பாதுகாப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது" என்று இரான் வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.

இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளர் என்று அது குறிப்பிடும் அமெரிக்கா, இந்த தாக்குதலின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அது கூறுகிறது. ஆனால், இந்த தாக்குதலில் பங்கேற்கவில்லை என்று அமெரிக்கா முன்பு கூறியது.

இஸ்ரேல் - இரான், நெதன்யாகு

பட மூலாதாரம்,REUTERS

தாக்குதல்கள் குறித்து தனக்கு முன்பே தெரியும் - டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் மீதான இஸ்ரேல் தாக்குதல்கள் பற்றி ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் பேசியுள்ளார்.

இஸ்ரேலின் திட்டங்கள் குறித்து தனக்கு முன்பே தெரியும் என்றும், ஆனால் அமெரிக்க இராணுவம் இந்த நடவடிக்கையில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் என்று அவர் மீண்டும் நம்பிக்கை தெரிவித்தார்.

"இரான் அணு குண்டு வைத்திருக்க முடியாது, நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் திரும்புவோம் என்று நம்புகிறோம். பார்க்கலாம்," என்று அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.

இஸ்ரேல் தாக்குதலில் பல இரானியத் தலைவர்கள் இறந்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்பு தனது நிர்வாகம் மத்திய கிழக்கில் உள்ள ஒரு முக்கிய கூட்டாளியைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாக டிரம்ப் கூறினார். ஆனால், அது எந்த நாடு என்று அவர் கூறவில்லை.

இஸ்ரேல் - இரான், நெதன்யாகு

பட மூலாதாரம்,X@WAHID

அமெரிக்கா கூறுவது என்ன?

இரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா பங்கெடுக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்றிரவு, இஸ்ரேல் இரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுத்தது. இரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடவில்லை, மேலும் எங்கள் முதன்மையான முன்னுரிமை பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும். இந்த நடவடிக்கை அதன் தற்காப்புக்கு அவசியம் என்று அவர்கள் நம்புவதாக இஸ்ரேல் எங்களுக்குத் தெரிவித்தது. அதிபர் டிரம்பும் நிர்வாகமும் எங்கள் படைகளைப் பாதுகாக்கவும், எங்கள் பிராந்திய பங்காளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். நான் தெளிவாகச் சொல்ல வேண்டும்: இரான் அமெரிக்க நலன்களையோ அல்லது பணியாளர்களையோ குறிவைக்கக் கூடாது." என்று குறிப்பிட்டுள்ளார்.

"இஸ்ரேல் தாக்க தயாராக இருந்தது அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியும்"

இரானில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக புதன்கிழமை அமெரிக்க அதிகாரிகளிடம் கூறப்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அமெரிக்க அதிகாரிகளிடம் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கா சில அமெரிக்கர்களை இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியதற்கும், இராக்கில் உள்ள சில அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததற்கும் இதுவே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd62d6nwqe2o

  • கருத்துக்கள உறவுகள்

Iran says six nuclear scientists killed in strikes

Iran’s Tasnim news agency is reporting that six Iranian nuclear scientists were killed in the Israeli strikes.

In a post on X, the agency reported that six scientists – Abdulhamid Minouchehr, Ahmadreza Zolfaghari, Seyyed Amirhossein Faqhi, Motlabizadeh, Mohammad Mehdi Tehranchi and Fereydoun Abbasi – had been killed in the attacks.

“The Zionist regime showed that … it has come to war against our scientists using the tool of terror,” read the post.

aljazeera

பதிலடியை ஆரம்பித்தது ஈரான் - இஸ்ரேலை நோக்கி பெருமளவு ஆளில்லா விமானங்கள்

13 JUN, 2025 | 11:42 AM

image

இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் எவ்வி டெவ்ரின் தெரிவித்துள்ளார்.

ஈரான் சுமார் 100 ஆளில்லா விமானங்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளது அவற்றை செயல் இழக்க செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுமக்களிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் விதத்தில் ஈரான் பதில் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என இஸ்ரேலின் இராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காகவே ஒப்பரேஷன் ரைசிங் லயன் நடவடிக்கையை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

எனினும் இஸ்ரேலிய மக்களே என்னால் வெற்றி குறித்து வாக்குறுதியளிக்க முடியாது, ஈரான் ஆட்சியாளர்கள் பதில் தாக்குதலை மேற்கொள்வார்கள். அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் நாங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகயிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/217337

  • கருத்துக்கள உறவுகள்

Israel claims it killed Iran’s top three military commanders

The Israeli army said it has killed Iran’s “three most senior military commanders” in its surprise overnight attacks.

In a post on X, the Israeli military named the targets of its assassinations as Mohammad Bagheri, chief of staff of the armed forces; Hossein Salami, the commander of the Islamic Revolutionary Guard Corps; and Major-General Gholam Ali Rashid, commander of the Khatam al-Anbiya Central Headquarters.

The army said that during the night, more than 200 Israeli air force fighter jets had attacked more than 100 targets across Iran

Watchdog says no increase in radiation levels at Natanz nuclear site

As we have been reporting, Israeli fighter jets reportedly bombed the Natanz nuclear site during its blitz in the early hours of Friday morning, striking locations across Iran.

Citing information provided by Iranian authorities, the International Atomic Energy Agency (IAEA) has said there is currently no increase in radiation levels at Natanz, Iran’s main uranium enrichment site.

The IAEA added that the Bushehr nuclear power plant was not targeted during the attack.

aljazeera

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் கதை கந்தல்தான். முக்கியமானவர்களையே பாதுகாக்க முடியாத நிலையில் இருந்துகொண்டு இஸ்ரேலின் ஒரு மயிரையும் புடுங்கமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

ஈரானின் கதை கந்தல்தான். முக்கியமானவர்களையே பாதுகாக்க முடியாத நிலையில் இருந்துகொண்டு இஸ்ரேலின் ஒரு மயிரையும் புடுங்கமுடியாது!

ஆனால் இது உலகுக்கு உலக மக்களுக்கு ஆபத்தான சகிம்சை. மக்கள் விரும்பும் தலைவர்களை அழித்து தலைவர்களின் தேர்வு மக்களின் கைகளில் இருந்து ஒரு சிலரின் கைகளுக்கு போய் விடும் ஆபத்திருக்கிறதே.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

"ஈரானிற்குள் ஆளில்லா விமான தளங்களை அமைத்த மொசாட் - தெஹ்ரானின் புலனாய்வாளர்களின் கண்களில் மண்ணை தூவிட்டு ஈரானின் மையப்பகுதியில் செயற்பட்ட விசேட படைப்பிரிவினர் ";- இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அதிகாரிகள் தகவல்

Published By: RAJEEBAN

13 JUN, 2025 | 02:00 PM

image

இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் இராணுவ கட்டமைப்புகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகளிற்காக பலவருடங்களாக திட்டமிடலில் ஈடுபட்டது என அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் டைம்ஸ் ஒவ் இஸ்ரேலிற்கு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் இராணுவ கட்டமைப்புகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகளிற்காக பலவருடங்களாக திட்டமிடலில் ஈடுபட்டது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானிற்குள் ஆளில்லா விமானதளமொன்றை மொசாட் உருவாக்கியது. துல்லியமாக தாக்கும் ஆயுதங்களையும் கொமாண்டோக்களையும் ஈரானிற்குள் கொண்டு சென்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

israel__planes.jpg

இந்த தாக்குதல் திட்டம் வெற்றிபெறுவது மொசாட்டும் இஸ்ரேலிய இராணுவமும் இணைந்து முன்னெடுத்த திட்டமிடலிலேயே தங்கியிருந்தது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானிற்கு அருகில் மொசாட் ஆளில்லா விமானதளமொன்றை ஏற்படுத்தியது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆளில்லா விமானங்களை நேற்றிரவு இஸ்ரேல் பயன்படுத்தியது அதிலிருந்து ஏவுகணைகளை ஈரானின் இலக்குகளை நோக்கி செலுத்தியது.

மேலும் ஆயுத அமைப்புகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் ஈரானிற்குள் கொண்டு செல்லப்பட்டன. இவற்றை பயன்படுத்தி ஈரானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு முறைகளை செயல் இஸ்ரேல் செயல் இழக்க செய்தது.

இது இஸ்ரேலிய விமானங்கள் ஈரானின் வான்பரப்பில் சுதந்திரமாக செயற்படக்கூடிய நிலையை ஏற்படுத்தியது.

மூன்றாவது இரகசிய முயற்சியாக இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாட்டின் கொமான்டோக்கள் மத்திய ஈரானில் உள்ள விமான எதிர்ப்பு நிலைகளிற்கு அருகில் துல்லியமாக தாக்க கூடிய ஏவுகணைகளை நிலைகொள்ளச்செய்திருந்தனர்.

முன்னர் ஒருபோதும் இல்லாத மிகவும் புதுமையான சிந்தனை, மிகவும் துணிச்சலான திட்டமிடல் நவீன தொழில்நுட்பங்களை மிகவும் துல்லியமாக பயன்படுத்துதல், விசேட படைப்பிரிவினர் உள்ளுர் புலனாய்வாளர்களின் கண்களில் மண்ணை தூவிட்டு ஈரானின் மையப்பகுதியில் செயற்பட்ட முகவர்கள் ஆகியவற்றினை இந்த நடவடிக்கை நம்பியிருந்தது என அதிகாரியொருவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/217359

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஆனால் இது உலகுக்கு உலக மக்களுக்கு ஆபத்தான சகிம்சை. மக்கள் விரும்பும் தலைவர்களை அழித்து தலைவர்களின் தேர்வு மக்களின் கைகளில் இருந்து ஒரு சிலரின் கைகளுக்கு போய் விடும் ஆபத்திருக்கிறதே.

ஈரானின் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. ஒரு மாற்றம் அங்கு தேவை.

ஆனால் நெத்தன்யாஹு தனது அதிகாரத்தை தக்கவைக்கத்தான் காஸா மீதும், லெபனான் மீதும், இப்போது ஈரான் மீதும் போர் தொடுத்துள்ளார். குட்டுவைக்க அரபு நாடுகளால் முடியாது! ஆனால் அவரை அகற்றவேண்டும்

இனப்படுகொலையில் உச்சம் தொட்டு இருக்கும் இஸ்ரேலுக்கு ஒரு போதும் நான் ஆதரவளிக்கப் போவதில்லை. அதே வேளை தன்னை எதிர்க்கும் தன் நாட்டு மக்களை கொன்று குவிக்கும், எதேச்சதிகார முல்லாக்களின் தலமை ஈரானில் இருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டும்.

ஈரானுக்கு அடிக்கும் அடி புட்டினது புட்டத்திலும் வலியை ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி தகவல்களை பார்த்தால் ஈரானியர்களில் ஒரு பகுதியினர் இஸ்ரேலுடன் இணைந்து செயற்படுகின்றார்கள் போல் தென்படுகின்றதே. மிகவும் துல்லியமான தகவல்கள் இஸ்ரேலுக்கு தொடர்ந்து கிடைக்கின்றது. ஈரானில் உள்ளே நின்று ஈரானியர்களே தகவல்களை அனுப்புகின்றார்கள் என்றே தோன்றுகின்றது.

அணுவாயுதம் அமைக்கும் ஆசையில்/வெறியில் முழு நாட்டையுமே ஈரானிய அரசு நாசமாக்கின்றது என எண்ண தோன்றுகின்றது.

6 hours ago, கிருபன் said:

ஈரானின் கதை கந்தல்தான். முக்கியமானவர்களையே பாதுகாக்க முடியாத நிலையில் இருந்துகொண்டு இஸ்ரேலின் ஒரு மயிரையும் புடுங்கமுடியாது!

ஈரானின் ***யில் அடி விழுந்துள்ளது. இனி எழுந்து நடக்க முடியுமா என்பதே சந்தேகம். ஆன்மிக தலைவர் காலங்காலமாக எச்சரிக்கை அனுப்புகின்றார். இதைவிட பலமான ஆயுதம் அவர்களிடம் வேறு ஏதும் உள்ளது போல் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஈரானின் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. ஒரு மாற்றம் அங்கு தேவை.

ஆனால் நெத்தன்யாஹு தனது அதிகாரத்தை தக்கவைக்கத்தான் காஸா மீதும், லெபனான் மீதும், இப்போது ஈரான் மீதும் போர் தொடுத்துள்ளார். குட்டுவைக்க அரபு நாடுகளால் முடியாது! ஆனால் அவரை அகற்றவேண்டும்

மன்னிக்கவும்

நான் ஈரான் பற்றி மட்டும் எழுதவில்லை. இவ்வாறு தனி ஒரு இடத்தில் அனைத்து அதிகாரம் மற்றும் திறன் குவிந்து வருவது ஆபத்தானது என்பது என் கவலை.

  • கருத்துக்கள உறவுகள்

Israeli army says it continues to strike Iran

The Israeli army continues to attack targets in Iranian territory, it says in a post on X published a few minutes ago.

It also shared footage of an explosion in an unidentified location.

Netanyahu says attack was originally planned for late April

The Israeli prime minister claims that after the assassination of Hassan Nasrallah, the longtime leader of Hezbollah, Tehran began to develop a nuclear weapon.

In a televised address, the PM said he ordered the elimination of Iran’s nuclear program six months ago and set the date for the operation for the end of April.

Israel had “no choice” but to strike Iran, even in the absence of any US support, he said, adding that the US was notified in advance and what it decides to do now is up to Washington.

Trump says it’s unclear if Iran still has a nuclear program, not concerned about regional war: Report

Trump has told Reuters in a phone interview that it was unclear if Iran still has a nuclear program following Israeli strikes on the country.

Trump said the US still has nuclear talks planned with Iran on Sunday, but that he is not sure if they will still take place. He said it was not too late for Iran to make a deal.

“I tried to save Iran humiliation and death,” Trump said.

He said he is not concerned about a regional war breaking out as a result of Israel’s strikes.

aljazeera

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

நான் ஈரான் பற்றி மட்டும் எழுதவில்லை. இவ்வாறு தனி ஒரு இடத்தில் அனைத்து அதிகாரம் மற்றும் திறன் குவிந்து வருவது ஆபத்தானது என்பது என் கவலை.

மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது.

அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி இல்லை. அமெரிக்கா ஜனநாயகத்தை பணத்தாலும், ஊடகப் பலத்தாலும் வளைத்து ட்றம்ப்பை ஜனாதிபதியாக்கியுள்ளது. ஆனால் அவரால் நாலு வருடத்திற்கு மேல் ஆட்சி செய்யமுடியாவிட்டாலும், உலகை நீண்ட காலம் பாதிக்கும் செயல்களைச் செய்யமுடியும்.

ரஷ்யாவின் புட்டின், சீனாவின் ஷிஜின்பெங், இந்தியாவில் மோடி, வடகொரியவின் கிம் ஜொங் உன் என்று உலகம் முழுவதும் தனிநபர்களிடம் அதிகாரம் குவிந்துள்ளது. கட்டாயம் உலக அழிவுப் பாதையில் கொண்டு செல்லவே இந்த தனிநபர் அதிகாரம் உதவும்

  • கருத்துக்கள உறவுகள்

இரான் அதிஉயர் தலைவருக்கு நெருக்கமான தளபதியை கொன்ற இஸ்ரேல் – அவரது பின்னணி என்ன?

ஜூன் 12 அன்று இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி ஹொசைன் சலாமி.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல், அமெரிக்கா உள்பட இரானின் எதிரிகளுக்கு எதிராகக் கடுமையான அணுகுமுறையை முன்னெடுத்ததற்காக, ஹொசைன் சலாமி அறியப்பட்டார்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கெல்லி என் ஜி

  • பதவி, பிபிசி நியூஸ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமி, வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில், மிக உயர்ந்த பதவியில் இருந்த தலைவராக ஹொசைன் சலாமி கருதப்படுகிறார். 65 வயதான சலாமி, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட இரானின் எதிரி நாடுகள் மீது கடுமையான நிலைப்பாட்டை முன்னெடுத்ததற்காக அறியப்பட்டவர்.

இந்த இரு நாடுகளில் எந்தவொரு நாடு தாக்குதல் நடத்தினாலும், "இரான் நரகத்தின் கதவுகளைத் திறக்கும்" என்று கடந்த மாதம் அவர் கடுமையாக எச்சரித்திருந்தார்.

அமெரிக்கா - இரான் இடையே அணு ஆயுதப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையை பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது எனத் தனது கூட்டாளியான இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து இருந்தபோதிலும், இரானின் அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் ராணுவத் தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் பரந்த அளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈடுபடவில்லை என்று அமெரிக்கா கூறினாலும், இதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் "பெரிய விலையை" கொடுக்க நேரிடும் என்று இரான் எச்சரித்துள்ளது.

இதனால் ஏற்கெனவே பதற்றமாக உள்ள மத்திய கிழக்குப் பகுதியில் முழுமையான போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இரான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான முகமது பாகேரி, துணைத் தளபதி கோலமாலி ரஷீத் மற்றும் பல அணு விஞ்ஞானிகளும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

தாக்குதல்களுக்கு ஒரு நாள் முன்பு, "எந்தவொரு சூழ்நிலைகளுக்கும், நிலைப்பாடுகளுக்கும், நிகழ்வுகளுக்கும் இரான் முழுமையாகt தயாராக உள்ளது" என்று சலாமி கூறியிருந்தார்.

"இஸ்ரேலின் முற்றுகையின் கீழ் இருக்கும் எதிர்த்து சண்டையிட ஆயுதமோ, உதவியோ இல்லாத பாலத்தீனர்களுடன் போராடுவது போல், இரானையும் எதிர்த்துப் போராட முடியும் என்று எதிரி நினைக்கிறார்," என்று கூறிய அவர், "நாங்கள் போரால் சோதிக்கப்பட்டவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள்"என்று குறிப்பிட்டார்.

கடந்த 1980ஆம் ஆண்டில், இரான் - இராக் போரின்போது, இரானிய ஆயுதப் படைகளின் சக்தி வாய்ந்த பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையில் இணைந்தவர் சலாமி. 2009ஆம் ஆண்டில் துணைத் தளபதியான அவர், அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து தளபதியாக உயர்ந்தார்.

இரானின் அணுசக்தி மற்றும் ராணுவத் திட்டங்களில் ஈடுபட்டதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்காவால் அவருக்கு 2000ஆம் ஆண்டில் இருந்து தடை விதிக்கப்பட்டது.

இரானின் ராணுவ திறன்களைப் பற்றி பெருமையாகப் பேசிய சலாமி, ஒரு கட்டத்தில், இரான் "உலகப் பேரரசாக மாறும் வேளை வந்துவிட்டது" என்று அறிவித்தார்.

ஜூன் 13, 2025 அன்று இரானிய தலைநகர் தெஹ்ரானில் நடந்த ஒரு தாக்குதலைத் தொடர்ந்து சேதமடைந்த கட்டிடத்தின் காட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த கட்டடம்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான ராணுவ மோதல் நடப்பதற்கான வாய்ப்பை சலாமி வரவேற்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டில், சிரியாவில் இரானிய இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலாக, சலாமி அரசியல் வரைபடத்தில் இருந்து "யூத ஆட்சியை முற்றிலும் நீக்குவதாக" சபதம் எடுத்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிரியாவில் உள்ள இரானிய தூதரகத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தாக்குதலில், இரண்டு ஜெனரல்கள் உள்பட ஏழு புரட்சிகர காவல் படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, "எங்கள் துணிச்சல் மிக்க வீரர்கள் யூத ஆட்சியைத் தண்டிப்பார்கள்" என்று சலாமி இதேபோல் மற்றொரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த 1979இல் இரானில் நடந்த புரட்சிக்கு முன்பு வரை, இரானும் இஸ்ரேலும் நட்பு நாடுகளாக இருந்தன. அந்த புரட்சிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட ஆட்சி, இஸ்ரேலை எதிர்ப்பதை அதன் கொள்கையின் முக்கிய அங்கமாக எடுத்துக் கொண்டது. இஸ்ரேல் எனும் நாட்டை தற்போதைய இரானிய ஆட்சி ஏற்கவில்லை.

இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா காமனெயி, இஸ்ரேலை "புற்றுநோய்க் கட்டி" என வர்ணித்து, அது "சந்தேகத்திற்கு இடமின்றி பிடுங்கி அழிக்கப்படும்" என்று கூறினார்.

இரான் வெளியிட்ட கருத்துகள் மற்றும் அச்சுறுத்தல்கள், இஸ்ரேலுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாக இஸ்ரேல் கருதுகிறது.

சலாமியும் புரட்சிகர காவல் படையின் பிற மூத்த அதிகாரிகளும் இரானின் அதிஉயர் தலைவருக்கு ஆலோசனை வழங்குவது வழக்கம்.

இரானின் புரட்சிகர காவல் படை என்றால் என்ன?

ஹொசைன் சலாமி: இஸ்ரேலால் கொல்லப்பட்ட இரானின் புரட்சிகர காவல் படை தளபதி - குறிவைக்கப்பட்டாரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா காமனெயி

இரானின் மதத் தலைவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை (IRGC) நிறுவினார்.

நாட்டின் இஸ்லாமிய முறையைப் பாதுகாப்பதும், வழக்கமான ராணுவத்திற்கு எதிராக ஒரு சமநிலையைப் பேணுவதும் அதன் நோக்கமாக உள்ளன. ஏனெனில் அவர்கள் ராணுவப் படைகள் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. 190,000க்கும் அதிகமான வீரர்களுடன், அதன் சொந்த தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படையை புரட்சிகர காவல் படை கொண்டுள்ளது.

இரானின் மிகவும் சக்திவாய்ந்த இந்தப் படை, மிகவும் வலிமையான, ராணுவ மற்றும் அரசியல் குழுக்களில் ஒன்றாக உள்ளது. இரானின் ராணுவம், அந்நாட்டைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஆட்சியைப் பாதுகாக்க புரட்சிகர காவல் படை அமைக்கப்பட்டது.

இப்படை நேரடியாக அதிஉயர் தலைவரிடம் தனது நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பதால், அதன் அதிகாரம் மற்ற அமைப்புகளால் எளிதில் கட்டுப்படுத்தப்பட்டது. இரானின் முக்கிய ஆயுதங்களைக் கண்காணிக்கும் புரட்சிகர காவல் படை, துணை ராணுவமான பாசிஜ் எதிர்ப்புப் படையைக் கட்டுப்படுத்துகிறது. அந்தப் படை பெரும்பாலும் உள்நாட்டு எதிர்ப்பை அடக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மத்திய கிழக்கின் பிற பகுதிகளில், இந்தக் குழு தங்கள் கூட்டாளிகளாக உள்ள அரசுகளை ஆதரிக்க பணம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கி, தங்களது செல்வாக்கை நிலைநாட்டுகிறது.

புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்கள், அதன் ரகசிய வெளிநாட்டுப் பிரிவான 'குட்ஸ் படையை' இயக்குகிறார்கள்.

இந்தப் பிரிவு ஆப்கானிஸ்தான், இராக், லெபனான், பாலத்தீனிய பிரதேசங்கள் மற்றும் ஏமேன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையதாக உள்ளது.

அரசாங்கம், நாடாளுமன்றம் மற்றும் முக்கிய அரசியல் அமைப்புகளில் அதிகாரம் வாய்ந்த பதவிகளில், முன்னாள் புரட்சிகர காவல் படையைச் சேர்ந்தவர்கள் இன்றும் பதவி வகிக்கின்றனர்.

இவர்களில் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் மற்றும் முன்னாள் சபாநாயகர் அலி லரிஜானி ஆகியோர் உள்ளனர்.

கோ ஈவ்,ரஃபி பெர்க் ஆகியோர் கூடுதல் தகவல்கள் வழங்கியுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2rel1803lo

  • கருத்துக்கள உறவுகள்

இரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், நாட்டின் வான் பாதுகாப்புப் படை இரண்டு இஸ்ரேலி போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், "இந்த போர் விமானங்களில் ஒன்றின் விமானியை கைது செய்யப்பட்டுள்ளார், அவர் ஒரு பெண்" என்றும் கூறப்பட்டுள்ளது.

சில ஈரானிய ஊடகங்களில் இஸ்ரேலிய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டதாக வந்த செய்திகளுக்கு பிறகு, இஸ்ரேலின் படைத்துறை இது உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளது

-bbc.com

  • கருத்துக்கள உறவுகள்

செந்த நாய் நாட்டை விட்டு ஓடி விட்டதாக செய்திகள் ( மேற்கை தவிர) சொல்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

செந்த நாய் நாட்டை விட்டு ஓடி விட்டதாக செய்திகள் ( மேற்கை தவிர) சொல்கின்றன.

யார் அவர்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய ஈரான்

ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது 

ஈரான் "சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது" இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் அரசுத் தகவல் நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது. 

இது, இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட தாக்குதலுக்கான ஈரானின் “தீவிர பதிலடி நடவடிக்கையின் தொடக்கம்” என விளக்கப்பட்டுள்ளது. 

“தற்போதிய நிமிடங்களில், பலவகையான நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன. 

இது இஸ்ரேல் நடத்திய வன்கொடுமையான தாக்குதலுக்கு எதிரான தீர்மானமான பதிலடி நடவடிக்கையின் தொடக்கமாகும்,” என IRNA செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இஸ்ரேல்-மீது-நூற்றுக்கணக்கான-பாலிஸ்டிக்-ஏவுகணைகளை-ஏவிய-ஈரான்/50-359193

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் தொடர்ந்தும் தாக்குகின்றது – இருவர் பலி மேலும் பலஇஸ்ரேலியர்களிற்கு காயம்

14 JUN, 2025 | 09:35 AM

image

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 20 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது.

டெலிகிராவ் இதனை தெரிவித்துள்ளது.

சைரன் எச்சரிக்கைக்கு பின்னர் துணைமருத்துவ குழுவினர் ரொக்கட் தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு அனுப்பப்பட்டனர்,பத்துபேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தலைநகரிலிருந்து ரிசோன் லெசியோன் என்ற பகுதியில் வீடுகளை ஏவுகணைகள் தாக்கின என மகென் டேவிட் அலெம் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/217419

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா இரான்? இஸ்ரேலுக்காக அமெரிக்கா என்ன செய்கிறது?

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், JACK GUEZ/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, இரான் தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சேதமடைந்த கட்டடம்

56 நிமிடங்களுக்கு முன்னர்

இஸ்ரேலும் இரானும் பதிலுக்குப் பதில் தாக்குதல்கள் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரானின் ஏவுகணைகளை இடைமறிக்க இஸ்ரேலுக்கு உதவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.

இரான் தலைநகர் டெஹ்ரானில் விமான நிலையம் ஒன்றில் தீப்பற்றி எரிவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. என்ன நடக்கிறது?

இஸ்ரேல் தாக்குதலும் இரானின் பதிலடியும்

இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி இருப்பதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேலை ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,REUTERS/RONEN ZVULUN

இரான் தாக்குதலில் காயமடைந்த 40 பேர் இஸ்ரேலிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

  • டெல் அவிவில் உள்ள இச்சிலோவ் மருத்துவமனையில் 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  • பெட்டா டிக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனையில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.

  • ராமத் கானில் உள்ள ஷெபா மருத்துவமனையில் 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கேயும் ஒருவர் கவலைக்கிடமாக இருக்கிறார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், ANADOLU VIA GETTY IMAGES

100க்கும் குறைவான ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தகவல்

இஸ்ரேலை நோக்கி 2 அலைகளாக 100க்கும் குறைவான ஏவுகணைகளை இரான் ஏவியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே கூறுகிறார்.

எக்ஸ் தளத்தில் அவர் தனது பதிவில், பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன அல்லது இலக்குகளை அடையத் தவறிவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

"குறைந்த எண்ணிக்கையிலான கட்டடங்கள் தாக்குதலுக்கு இலக்காயின. அவற்றில் சில இரான் ஏவுகணைகளை இடைமறித்த போது வெளிப்பட்ட சிதறல்களால் நேர்ந்தவை," என்று அவர் கூறுகிறார்.

இரானில் இருந்து மேலும் ஏவுகணைகள் ஏவப்படலாம் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.

இஸ்ரேலை நோக்கிச் சென்ற இரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் உதவியிருக்கிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் 2 பேர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று உறுதிப்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,MAJID SAEEDI/GETTY IMAGES

2 இஸ்ரேலிய போர் விமானங்கள் வீழ்ந்தனவா?

இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. இந்த கூற்று பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை.

இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு இரண்டு இஸ்ரேலிய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், இந்த போர் விமானங்களில் ஒன்றின் விமானி பிடிபட்டதாகவும் அவர் பெண் விமானி என்றும் இரானின் தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

விமானி பிடிபட்டதாக வெளியான இரானிய ஊடக அறிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. இரானிய ஊடகங்களால் பரப்பப்படும் இந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

இரானில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்?

இரான் தலைநகர் டெஹ்ரானில் மீண்டும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வருகின்றன.

இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொள்ள டெஹ்ரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெஹ்ரானில் உள்ள ஒரு விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. அங்குள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து தீ மற்றும் புகை வெளியேறியதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை அதன் பத்திரிகையாளர்களில் ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

விமான நிலையப் பகுதியில் 'வெடிப்பு' ஏற்பட்டதாகக் கூறிய இரானைச் சேர்ந்த மெஹ்ர் செய்தி முகமை, அப்பகுதியில் இருந்து கனத்த புகை எழுவதைக் காட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1e6w9n0xwno

  • கருத்துக்கள உறவுகள்

இரானை நிலைகுலையச் செய்த தாக்குதல் ஒரு தொடக்கமே - இஸ்ரேலின் இறுதித் திட்டமும் அதீத ஆபத்தும்

இரான் இஸ்ரேல் தாக்குதல், இரான் தாக்குதல், மொசாட், இரான், உலக செய்திகள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஃப்ராங்க் கார்ட்னர்

  • பதவி, பாதுகாப்புத்துறை செய்தியாளர்

  • 14 ஜூன் 2025, 07:36 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆபரேஷன் ரைஸிங் லையன் என்ற பெயரில் இரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் முன் எப்போதும் இல்லாத வகையில் இருக்கிறது.

கடந்த ஆண்டு இரண்டு தரப்பிலும் நடைபெற்ற ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் உட்பட முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் விரிவுபடுத்தப்பட்ட, ஒரு லட்சியத்துடன் நடத்தப்படும் தாக்குதலாக இருக்கிறது.

1980-88 காலங்களில் நடைபெற்ற இரான் - இராக் போருக்குப் பிறகு இரான் மீதான மிகப்பெரிய தாக்குதலாக இது உள்ளது.

விடிவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதல்கள் இரானின் அணுசக்தி மையங்களை மட்டும் இலக்காக கொண்டிருக்கவில்லை. இரானின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தளங்கள் போன்றவற்றையும் இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இரான் பதில் தாக்குதல் நடத்துவதற்கான திறனை கணிசமாக குறைக்கிறது.

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்காக பணியாற்றும் நபர்களின் குழு களத்தில் இந்த தாக்குதலில் முக்கிய அங்கம் வகித்துள்ளது. இந்த குழுவே ராணுவத் தலைவர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகளின் துல்லியமான இடத்தை கண்டறிய உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இரான் இஸ்ரேல் தாக்குதல், இரான் தாக்குதல், மொசாட், இரான், உலக செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரான் இந்த தாக்குதலில் தன்னுடைய ஆறு ஆராய்ச்சியாளர்களை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:

  • இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்ப்படையின் (IRGC) தலைவர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய புரட்சியின் பாதுகாவலர்களாக கருதப்பட்டவர்களில் ஒருவரான இவர் 1979-ஆம் ஆண்டு இரானின் ஷா ஆட்சிக்கு முடிவு கொண்டு வந்தவர்களில் முக்கியமான நபர் ஆவார்.

  • அவர் மட்டுமின்றி ஆயுதப்படைகளின் தலைவர், ஐ.ஆர்.ஜி.சியின் விமானப்படைத் தலைவர் ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

  • இரான் இந்த தாக்குதலில் தன்னுடைய 6 அணு விஞ்ஞானிகளை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இரானின் பாதுகாப்பு அமைப்பின் மையத்திற்குள் வெற்றிகரமாக ஊடுருவி, யாரும் அங்கு பாதுகாப்புடன் இல்லை என்பதை உணர்த்தியுள்ளது மொசாட்.

இரானின் அரசு தொலைக்காட்சி, இந்த தாக்குதலில் இதுவரை 78 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. குழந்தைகள் உட்பட சாதாரண குடிமக்களும் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது. (இது கொல்லப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இல்லை. பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை).

இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக, இரானுக்குள் இருந்தே மொசாட் அமைப்பு டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலின் முதன்மை இலக்குகள் நடான்ஸில் அமைந்திருக்கும் அணு செறிவூட்டும் மையமும், ஐ.ஆர்.ஜி.சிக்கு சொந்தமான தளங்களும் தான். இப்படியான சூழலை இஸ்ரேல் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த தாக்குதல்களால் இரான் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது முதல் அலை மட்டுமே. இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலில் மேலும் பல சாத்தியமான இலக்குகள் உள்ளன. சில எளிதில் அடைய முடியாததாகவும் அதேநேரத்தில் நிலத்திற்கு அடியில் உள்ள தளங்களும் இந்த இலக்குப் பட்டியலில் இருக்கின்றன.

இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தக் காரணம் என்ன? அதை ஏன் இப்போது நடத்துகிறது?

இரானின் அணுசக்தி திட்டத்திற்கு முடிவு

இஸ்ரேலும் சில மேற்கத்திய நாடுகளும், இரான் ரகசியமாக அணு ஆயுத உற்பத்தியில் முன்னேறிச் செல்வதாக சந்தேகித்தன. அணு ஆயுத உற்பத்தியில் இருந்து பின் வாங்குவதற்கு இடமே அளிக்காத 'பிரேக்அவுட் கேபபிலிட்டி' என்ற கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் நினைத்தனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இரான் தொடர்ச்சியாக மறுத்து வந்தது. மக்களின் தேவையை பூர்த்தி செய்யவே அணுசக்தி திட்டத்தை மட்டுமே, ரஷ்யாவின் உதவியோடு உருவாக்கி வருவதாகவும், அது அமைதிக்கான நோக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது என்றும் தெரிவித்தது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக இரானின் இந்த முயற்சியை பல்வேறு வடிவங்களில் தாமதமாக்க இஸ்ரேல் முயற்சி செய்து வந்தது. அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டது.

இரான் ஆராய்ச்சியாளர்கள் சிலர் மர்மமான முறையில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டனர். 2020-ஆம் ஆண்டு டெஹ்ரானில் சாலை ஒன்றில்அணுசக்தி திட்டத்தின் தலைவராக பணியாற்றிய பிரிகேடியர் ஜெனரல் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டார். ரிமோட் மூலமாக இயக்கப்படும் மெஷின் துப்பாக்கி மூலம் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இரான் இஸ்ரேல் தாக்குதல், இரான் தாக்குதல், மொசாட், இரான், உலக செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரானின் ஆயுதப்படையின் தலைவர் முகமது பகேரி (இடது) உள்ளிட்டோர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சைபர் பிரிவு அதிகாரிகள் 'ஸ்டக்ஸ்னெட்' என்ற கணினி வைரஸை, இரானின் அணு ஆய்வுக் கூடத்தின் 'சென்ட்ரிஃபூயூஜஸில்' வெற்றிகரமாக செலுத்தியது. இது அந்த கருவியை கட்டுப்பாடு இல்லாமல் சுழற்றியது.

இந்த வாரம் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), இரான் அதனுடைய அணு ஆயுத பரவல் தடை உத்தரவாதத்தை( non-proliferation obligations) மீறுவதாகக் கண்டறிந்தது. இந்த விவகாரத்தை ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்புவதாகவும் எச்சரித்தது.

60% வரை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (HEU) அளவுக்கு அதிகமாக இரான் சேமித்து வைக்கிறது. இதனால் இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளன. மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் அணுசக்தியை உற்பத்தி செய்வதற்கு தேவையான அளவைக் காட்டிலும் யுரேனியம் அதிகமாக செறிவூட்டப்பட்டுள்ளது.

அணு குண்டை தயாரிப்பதற்கு தேவையான செறிவுக்கு மிக அருகில் யூரேனியம் செறிவூட்டப்பட்டு இரானில் சேமிக்கப்படுகிறது.

இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இது 2015-ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அடுத்து பதவிக்கு வந்த டொனால்ட் டிரம்பால் அது 'உலகில் மிகவும் மோசமான ஒப்பந்தம்' என்ற விமர்சனத்தைப் பெற்றது. அந்த திட்டத்தில் இருந்து அமெரிக்காவை அவர் விலக்கிக் கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து, அந்த ஒப்பந்த விதிமுறைகளுக்கு ஏற்றபடி இரான் நடக்கவில்லை.

இரானைத் தவிர்த்து வேறு யாரும் அந்த நாடு அணு குண்டை வைத்திருப்பதை விரும்பவில்லை. 9.5 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட, நகர்ப்புறங்களில் மக்கள் அடர்த்தியாக இருக்கும், ஒரு சிறிய நாடான இஸ்ரேல், அணு ஆயுதம் கொண்ட இரானை ஒரு அச்சுறுத்தலாக கருதுகிறது.

இரானின் மூத்த தலைவர்கள் பலரும் இஸ்ரேல் அரசை அழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த பல அறிக்கைகளை இஸ்ரேல் சுட்டிக்காட்டுகிறது. சௌதி அரேபியா, ஜோர்டான், மற்றும் பல வளைகுடா அரபு நாடுகள் இரானின் புரட்சிகர இஸ்லாமிய குடியரசு குறித்து அதிக அக்கறை செலுத்தவில்லை. ஆனால் இரான் என்ற ஒரு அண்டை நாட்டுடன் அவர்கள் வாழ பழகிக் கொண்டனர்.

தற்போது அவர்களின் எல்லை வரை பிரச்னை பரவி வருவது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கு நேரம் மிகவும் முக்கியமானது. இரானின் கூட்டாளிகளை லெபனான், சிரியா மற்றும் காஸாவில் தோற்கடித்துவிட்டதால் இரான் ஏற்கனவே பலவீனம் அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது இரானின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் பலவீனம் அடைந்தன.

இரான் இஸ்ரேல் தாக்குதல், இரான் தாக்குதல், மொசாட், இரான், உலக செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தாக்குதலின் ஒரு பகுதியாக மொசாட் இரானுக்குள் இருந்தே டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது

இஸ்ரேலின் திட்டம் என்ன?

ஆபரேஷன் ரைஸிங் லையன் மூலமாக, பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான ஆராய்ச்சிகளில் பின்னடைவை ஏற்படுத்த இஸ்ரேல் விரும்புகிறது. முழுமையாக இதனை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறது.

இது இரானின் தலைமையை மேலும் வலுவிழக்கச் செய்து, ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் என்று இஸ்ரேல் ராணுவம், அரசியல் மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் நம்புகின்றன. இதன் மூலமாக இந்த பிராந்தியத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத தீங்கற்ற ஆட்சி அமையும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள இரானுக்கு இரண்டாவது வாய்ப்பு இருந்ததாகக் கூறினார். இந்த ஞாயிறன்று மஸ்கட்டில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே அணுசக்தி திட்டம் தொடர்பாக ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இந்த பேச்சுவார்த்தை மூலமாக எந்த விதமான பலனுள்ள முடிவுகளும் கிடைக்கும் என்று இஸ்ரேல் நம்பவில்லை.

யுக்ரேன் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற பிம்பத்தை உருவாக்கியதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு உண்டு. தற்போது இரானும் அதையே செய்வதாக இஸ்ரேல் நம்புகிறது.

இரானின் சந்தேகத்திற்குரிய அணு ஆயுத திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர இருக்கும் சிறந்த மற்றும் இறுதியான வாய்ப்பு இது என்று இஸ்ரேல் நம்புகிறது.

"இரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ய டிரம்பிற்கு இருக்கும் வாய்ப்புகளை முறியடிக்கும் வகையில், இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது," என்று எலி கெரன்மாயே தெரிவித்தார். அவர் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஐரோப்பிய கவுன்சிலில் (ECFR) மூத்த கொள்கை ஆராய்ச்சியாளராக உள்ளார்.

"இஸ்ரேல் தாக்குல் நடத்த தேர்ந்தெடுத்த நேரமும், அதன் தன்மையும் பேச்சுவார்த்தைகளை முற்றிலுமாகத் தடம் புரளச் செய்யும் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகிறது."

இந்த தாக்குதலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இரானிடம் அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் பதில் தாக்குதலுக்காக இரான், அந்த பிராந்தியத்தில் உள்ள ஏதேனும் அமெரிக்க தளத்தின் மீது நேரடியாகவோ அல்லது அதன் கூட்டாளிகள் மூலமாகவோ தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் நடைபெறும் மற்றொரு மோதலில் அமெரிக்காவை இழுக்கும் அபாயம் ஏற்படும்.

இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, இந்த தாக்குதலுக்கு கடுமையான எதிர்வினை இருக்கும் என்று கூறியுள்ளார். உண்மையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இரான் மிகவும் வலுவிழந்துள்ளது. பதில் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன.

அணு ஆயுதப் போட்டி

இங்கே மேலும் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. இஸ்ரேலின் இந்த செயல்பாடு, அணு ஆயுத போட்டியைத் தூண்டலாம்.

இரானின் பாதுகாப்புக் கட்டமைப்பில் இருக்கும் தீவிர எண்ணங்களைக் கொண்ட தலைவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். அதாவது எதிர்வரும் காலங்களில் இஸ்ரேல் அல்லது அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களை தடுக்க அணுகுண்டு வைத்திருப்பதே சரியானது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

லிபியா மற்றும் வட கொரியத் தலைவர்களுக்கு நேரிட்ட மாறுபட்ட நிகழ்வுகளை மதிப்பிட்டு இம்முடிவை அவர்கள் எடுத்திருப்பார்கள்.

லிபியாவின் கர்னல் கடாஃபி 2003-ஆம் ஆண்டு பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை தயாரிப்பதற்கான திட்டத்தை கைவிட்டார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாய் ஒன்றில் இறந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளின் வான்வழி தாக்குதலின் உதவியோடு நடைபெற்ற அரபு எழுச்சியின் முடிவில் கடாஃபி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.

இதற்கு முரணாக, வலிமையான அணு ஆயுதங்களை உருவாக்கவும், கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உருவாக்கவும் வசதியாக வட கொரியா அனைத்து சர்வதேச தடைகளையும் மீறியது. எந்த ஒரு சாத்தியமான தாக்குதலையும் அந்த நாட்டின் மீது நடத்துவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வைக்கும் சூழலை வடகொரியா உருவாக்கியது.

இரான் இஸ்ரேல் தாக்குதல், இரான் தாக்குதல், மொசாட், இரான், உலக செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமையன்று, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள இரானுக்கு இரண்டாவது வாய்ப்பு இருந்ததாகக் கூறுகிறார்

இஸ்ரேலின் தாக்குதலால் எத்தகைய இழப்பை சந்தித்தாலும், இரான் அரசு வீழாமல் தப்பித்தால் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தீவிரப்படுத்தும். அணு குண்டு சோதனை நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன்பும் பல தடைகளை இரான் மீறி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது நிகழும் பட்சத்தில் மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களுக்கான போட்டியை இது உருவாக்கும். சௌதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளும் தங்களுக்கும் அணு ஆயுதம் தேவை என்ற முடிவை எடுக்கக் கூடும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd901z2ynv1o

பலஸ்தீன் தனிநாட்டை ஆதரிக்கும் அதே வேளை இஸ்ரேலுடன் ஈரானுக்கு எதிரான போரில் பிரான்ஸ் பங்குகொள்ளும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி நேற்று அறிவித்திருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் இஸ்ரேலுடனான உறவை துண்டித்ததுடன், ஈரானுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி பார்த்தேன். ஈரான், பாகிஸ்தான் அண்டைய நாடுகள் எனும் வகையில் பார்க்கும்போது, அத்துடன் முஸ்லீம் நாடுகள் எனும் வகையில் ஒன்றிணையும்போது இது போரில் மாற்றத்தை கொண்டு வரும். உடனடியாக இல்லாவிட்டாலும் ஈரானும் ஆயுத வழங்கல்கள் வெளியில் இருந்து கிடைக்கும் என்றே தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கமேனி தொடர்ந்தும் ஏவுகணைகளை ஏவினால் தெஹ்ரான் பற்றி எரியும் - இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர்

14 JUN, 2025 | 04:34 PM

image

ஈரான் தொடர்ந்தும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் எச்சரித்துள்ளார்.

ஈரானின் சர்வாதிகாரி அந்த நாட்டு மக்களை பணயக்கைதிகளாக்குகின்றார்,ஈரான் மக்கள் குறிப்பாக தெஹ்ரானில் வசிப்பவர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலிற்காக பெரும் விலையை செலுத்தும் நிலையை அவர் உருவாக்குகின்றார் என இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கமேனி தொடர்ந்தும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவினால் தெஹ்ரான்பற்றி எரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/217460

இரானுக்குள் இஸ்ரேல் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவுகளை காட்டும் படங்கள்

இரான்- இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு, அமெரிக்கா, அணுசக்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் முக்கிய தலைவர்களைக் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது.

3 மணி நேரங்களுக்கு முன்னர்

வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அதிகாலை இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்தது. 'ஆபரேஷன் ரைசிங் லயன்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இதில் இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், இரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்தது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் தெரிவித்தார்.

இரான்- இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு, அமெரிக்கா, அணுசக்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெஹ்ரானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் அழிக்கப்பட்ட ஒரு குடியிருப்பு கட்டடத்துக்கு வெளியே ஒரு இரானியர்.

இரான்- இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு, அமெரிக்கா, அணுசக்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெஹ்ரானில் குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும், குழந்தைகள் உட்பட பொதுமக்களும் கொல்லப்பட்டதாக இரான் அரசு தொலைக்காட்சி கூறுகிறது.

இரானில் தாக்குதலில் சேதமடைந்த கட்டடத்தில் நடந்த மீட்புப் பணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இரானில் தாக்குதலில் சேதமடைந்த கட்டடத்தில் நடந்த மீட்பு பணி

இரான்- இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு, அமெரிக்கா, அணுசக்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெஹ்ரானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சேதமடைந்த ஒரு கட்டடம்.

இரான்- இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு, அமெரிக்கா, அணுசக்தி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ஆபரேஷன் ரைசிங் லயன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இரான்- இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு, அமெரிக்கா, அணுசக்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜூன் 13 அதிகாலை இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட இரானிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளின் படங்களுடன் கூடிய ஒரு போஸ்டர், இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது.

டெஹ்ரானில் தாக்குதல்களில் சேதமடைந்த கட்டடங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெஹ்ரானில் தாக்குதல்களில் சேதமடைந்த கட்டடங்கள்

இரான்- இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு, அமெரிக்கா, அணுசக்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இரான் மீதான சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்த இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயின் பதிவு செய்யப்பட்ட காணொளியை தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரு இரானியர். (இடம்: டெஹ்ரானில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு)

இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்திருந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன.

இரான் தாக்குதலில் காயமடைந்த 40 பேர் இஸ்ரேலிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இஸ்ரேலை நோக்கி 2 அலைகளாக 100க்கும் குறைவான ஏவுகணைகளை இரான் ஏவியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே கூறுகிறார்.

இஸ்ரேலை நோக்கிச் சென்ற இரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் உதவியிருக்கிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் 2 பேர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று உறுதிப்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.

இரான்- இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு, அமெரிக்கா, அணுசக்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டடங்கள்

இரான்- இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு, அமெரிக்கா, அணுசக்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரான் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்த கட்டடங்களைப் பார்க்கும் இஸ்ரேலியர்கள்.

இரான்- இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு, அமெரிக்கா, அணுசக்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் பதிலடி தாக்குதல்கள் நடத்தியதை அடுத்து, அதைக் கொண்டாடும் விதமாக டெஹ்ரானின் வீதிகளில் கூடிய மக்கள்.

இரான்- இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு, அமெரிக்கா, அணுசக்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெஹ்ரானின் வீதியில் இதைக் கொண்டாடும் மக்கள்.

இரான்- இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு, அமெரிக்கா, அணுசக்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இரான் முழுவதும் பல இலக்குகளைத் தாக்கியுள்ள இஸ்ரேல், இரானின் நடான்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் ஆலையை சேதப்படுத்தியுள்ளது. ஆனால் இரான் தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதிக்கானது என்றும், புஷேர் போன்ற மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை உற்பத்தி செய்ய யுரேனியத்தை செறிவூட்டுவதாகவும் வலியுறுத்துகிறது.

இரான்- இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு, அமெரிக்கா, அணுசக்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெஹ்ரானின் என்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் எதிர்ப்பு போஸ்டர்.

இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.

இரான் தலைநகர் டெஹ்ரானில் மீண்டும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வருகின்றன.

இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொள்ள டெஹ்ரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg7r8m5ln2o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.