Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-200.jpg?resize=750%2C375&ssl

அணு ஆயுத தாக்குதல்; ஈரானின் கூற்றை மறுக்கும் பாகிஸ்தான்!

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் என்ற தெஹ்ரானிய மூத்த அதிகாரியின் கூற்றினை இஸ்லாமாபாத் உடனடியாக மறுத்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டைப் பயன்படுத்தினால், பாகிஸ்தானும் இஸ்ரேலை அணுகுண்டைப் பயன்படுத்தித் தாக்கும் என்று பாகிஸ்தான் எங்களிடம் கூறியுள்ளது என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதியும் ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் உறுப்பினருமான ஜெனரல் மொஹ்சென் ரெசாய் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானும் இஸ்ரேலும் ஏவுகணைத் தாக்குதல்களை தொடங்கும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

எனினும், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் இந்தக் கூற்றை நிராகரித்ததுடன், இஸ்லாமாபாத் அத்தகைய உறுதிமொழியை அளிக்கவில்லை என்றும் கூறினார்.

எவ்வாறெனினும், இஸ்ரேலுடனான பரந்த மோதலில் ஈரானுக்கான பாகிஸ்தானின் ஆதரவினை அவர் வெளிப்படையாக வெளிப்படுத்தினார்.

ஜூன் 14 அன்று, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தேசிய சட்டமன்றத்தில் முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட முஸ்லிம் நாடுகள் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்றும், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு கூட்டு மூலோபாயத்தை உருவாக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ஆசிப் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2025/1435944

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெத்தன்யாஹு யூத இனத்தின் நவீன மீட்பராக வரலாற்றில் இடம்பிடிக்க விரும்புகின்றார். அதற்கு சிந்தித்து செயலாற்றாமல், கசினோவில் சூதாட்டத்தில் கணக்குப் போடும் புத்திசாலித்தனமான மூளையுள்ள அமெரிக்காவின் ட்ரம்பைச் சரியாகப் பாவிக்கின்றார்.

இஸ்ரேல், அமெரிக்கா, மேற்குநாடுகள் ஈரானின் இஸ்லாமிய ஆட்சியை அகற்றச் சொல்லுபவை வெறும் நொண்டிச் சாட்டுகள். ஈரான் பலவீனமாக இருப்பதால், இதுதான் ஆட்சியை மாற்ற சரியான தருணம் என்பதைத் தவிர மிச்சமெல்லாம் அவசரமான காரணங்கள் அல்ல.

ஈரானியர்கள் இஸ்லாமிய ஆயத்துல்லாக்களின் ஆட்சியை வெறுத்தாலும் இஸ்ரேலின் நண்பர்களாக மாறமாட்டார்கள். ஜனநாயக ஆட்சி இப்போதைக்கு வருவதும் சாத்தியமற்றதே.

  • கருத்துக்கள உறவுகள்

508204086_1137245495107088_8088167308771

508205027_1137070138457957_4906631204194

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : ஈரான் அதிரடி

இஸ்ரேல்-ஈரான் மோதல் ஆறாவது நாளாகத் தொடரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்த நிலையில், காமெனி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். 

இன்று இந்தப் போரில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும். அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்பார்க்காத மிகப்பெரிய அதிர்ச்சி தரும் சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என்று அச்சுறுத்தியதையடுத்து, ஈரான் உயரிய தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், "போர் தொடங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனத்தின் மொழிபெயர்ப்பின்படி,  அயோத்துல்லா அலி காமெனி தனது பதிவில் "அலி கைபாருக்குத் திரும்புகிறார்" என்று கூறி உள்ளார். 

அதவாது யூத நகரமான கைபாரை கைப்பற்றிய இஸ்லாமிய வரலாற்றை குறிக்கும் விதமாக அவர் இந்த போஸ்டை செய்துள்ளது. இது ஷியா இஸ்லாத்தின் முதல் இமாம்படி 7-ம் நூற்றாண்டில் யூத நகரமான கைபாரைக் இஸ்லாமியர்கள் கைப்பற்றியதைக் குறிக்கும் விதமாக அவர் இந்த போஸ்டை செய்துள்ளது. 

அந்தப் பதிவில், ஒரு நபர் கையில் வாளுடன் கோட்டை போன்ற வாயிலுக்குள் நுழைவது போன்றும், வானத்தில் தீப்பிழம்புகள் தெரிவது போன்றும் ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், சில நிமிடங்களுக்குப் பிறகு, காமெனி இஸ்ரேலுக்கு மற்றொரு எச்சரிக்கை விடுத்தார். அதில், "பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு நாம் ஒரு வலுவான பதிலடியைக் கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாம் கருணை காட்ட மாட்டோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை உலக நாடுகளே எதிர்பார்த்து இருக்காது என்று ஈரான் கூறி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் ஆறாவது நாளாக நீடித்து வருகிறது. புதன்கிழமை அதிகாலையில் முதல் இரண்டு மணி நேரத்தில் இஸ்ரேலை நோக்கி ஈரான் இரண்டு முறை ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

இதனால் டெல் அவிவ் நகரில் வெடிச்சத்தம் கேட்டது. இதற்கிடையில், டிரம்ப் ஜி7 மாநாட்டிலிருந்து முன்னதாகவே புறப்பட்டு வந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 90 நிமிடங்கள் கலந்துரையாடினார். மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. R

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அமெரிக்காவுக்கு-காத்திருக்கும்-அதிர்ச்சி-ஈரான்-அதிரடி/50-359467

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதல்கள்;- இஸ்ரேலுடன் இணைகின்றது அமெரிக்கா

18 JUN, 2025 | 06:41 AM

image

ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதல்களில் இஸ்ரேலுடன் இணைந்துகொள்வதற்கு அமெரிக்கா தயராகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என சர்வதே ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போர்டோ உட்பட ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான உத்தரவில் டிரம்ப் கைச்சாத்திடுவார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பில் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்கள் மத்தியில் முழுமையான உடன்பாடில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/217770

  • கருத்துக்கள உறவுகள்

காமனெயி, அணுசக்தி திட்டம்: இரானில் இஸ்ரேலின் உண்மையான இலக்கு எது?

இஸ்ரேல்-இரான் மோதல், அமெரிக்கா நெதன்யாஹு, இரான், டிரம்ப்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், லைஸ் டூசெ

  • பதவி, தலைமை சர்வதேச செய்தியாளர்

  • 18 ஜூன் 2025, 01:55 GMT

    புதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர்

வெள்ளியன்று இரான் மீது எதிர்பாராத வகையில் தாக்குதல்களை நடத்திய பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடியாக இரானிய மக்களுக்கு உரையாற்றினார். ஆங்கிலத்தில் பேசிய அவர், "கொடிய மற்றும் அடக்குமுறை ஆட்சிக்கு" எதிராக நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனத் தெரிவித்தார்.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள், "நீங்கள் சுதந்திரத்தை அடைவதற்கான பாதையை தெளிவுபடுத்தியுள்ளது" என கூறியுள்ளார்.

தற்போது இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்து, இலக்குகளும் பரவலாகி வரும் நிலையில், இஸ்ரேலின் உண்மையான இலக்கு தான் என்ன என பலரும் கேட்கின்றனர்.

இவை, முதல் தாக்குதல்கள் நடந்த வெள்ளியன்று நெதன்யாகு கூறியதைப் போல, "இரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுற்றுதல்களை" முடிவுக்குக் கொண்டு வருவது மட்டும் தானா?

பொருளாதார தடைகளை நீக்குவதற்கு மாற்றாக, இரானின் அணுசக்தி திறன்களை கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வருவதும் அவரது இலக்கில் உண்டா?

அல்லது சுதந்திரத்துக்கான பாதையை தெளிவுபடுத்தியதாக இரானிய மக்களிடம் கூறிய செய்தி, இரானில் மதகுரு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் பெரிய நோக்கமும் அதில் உள்ளதா?

இஸ்ரேல்-இரான் மோதல், அமெரிக்கா நெதன்யாஹு, இரான், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது

நெதன்யாகுவின் திட்டங்களை அறிந்தவர்கள் யார்?

இஸ்ரேலில் நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமரின் அரசியல் வாழ்க்கை, இரானிய இஸ்லாமியக் குடியரசால் வரப்போகும் ஆபத்துகளை உலகுக்கு எச்சரிக்கும் அவரின் தனிப்பட்ட இலக்கால் உந்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அவர் காட்டிய குண்டுகள் அடங்கிய பெட்டியில் தொடங்கி, கடந்த 20 மாதங்களாக எரிந்துக் கொண்டிருக்கும் பிராந்திய போரால் ஐ.நாவுக்கு செல்லாமல் தவிர்த்தது வரை இரான் தான் அனைத்தையும் விட மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது தான் அவரின் இலக்காக உள்ளது.

கடந்த சில வருடங்களில் பல முறை இரானின் அணுசக்தி தளங்கள் மீது ராணுவ தாக்குதல்களுக்கு நெதன்யாகு உத்தரவிடாமல் அமெரிக்க அதிபர்களும், அவரின் சொந்த தளபதிகளுமே தடுத்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் அனுமதி வழங்கவில்லை எனக் கூறுகிறார். ஆனால் அத்தகைய ஒரு சிறு சமிக்ஞை கூட போதுமானதாக இருக்கும்.

"தற்போது அவர் மோதலை தொடங்கிவிட்டதால், அதில் முழுவதுமாக இறங்கிவிடுவார்" என நெதன்யாகுவின் திட்டத்தை ஒரு மேற்கத்திய அதிகாரி விவரித்தார். இஸ்ரேலின் முதன்மையான நோக்கம் இரானின் அணுசக்தி திட்டத்தை முடக்க வேண்டும் என்பது தான் என்கிற பார்வையையும் அவர் குறிப்பிட்டு காட்டுகிறார்.

இந்த முடிவு பல்வேறு நாடுகளாலும், சர்வதேச அணு சக்தி முகமையாலும் கண்டிக்கப்பட்டுள்ளது. அதன் இயக்குநர் ஜெனரல், "எந்தச் சூழலிலும் அணுசக்தி நிலையங்கள் தாக்கப்படக் கூடாது என்பதை நான் பலமுறை கூறியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டங்களின் கீழ் இது சட்டவிரோதமானது என வாதிடும் சட்ட வல்லுநர்களாலும் இது கண்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது பலரும் இஸ்ரேல் பிரதமர் அவரின் ஆலோசகர்கள் மற்றும் கூட்டாளிகள் பின் தொடரும் அதே இலக்குகளைத் தான் கொண்டுள்ளாரா எனக் கேட்கின்றனர்.

இஸ்ரேல்-இரான் மோதல், அமெரிக்கா நெதன்யாஹு, இரான், டிரம்ப்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலுக்கு தான் ஒப்புதல் வழங்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"நெதன்யாகு தனிப்பட்ட முறையில் ஆட்சி மாற்றத்தின் மீது இலக்கு வைத்துள்ள நிலையில், இஸ்ரேலின் அரசியல் மற்றும் ராணுவ கட்டமைப்பு இரானின் அணுசக்தி திட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதிலே குறியாக இருக்கின்றது" என்கிறார் சாத்தம் ஹவுஸ் ஆய்வு நிறுவனத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா திட்டத்தின் இயக்குநரான முனைவர் சனம் வகில்.

இரண்டாவது இலக்கு கடினமானதாக இருக்கலாம், ஆனால் எட்டக்கூடியது தான் என்று கூறும் அவர், "முதல் இலக்கு, இத்தகைய குறுகிய மற்றும் தீவிரமான மோதலில் எட்டுவது கடினம்" என்றார்.

இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பது தான் நோக்கமா?

இஸ்ரேலின் நடவடிக்கைகளை, தனது இருப்புக்கான அச்சுறுத்தல்களை அழிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற தோற்றத்தை வழங்க நெதன்யாகு முயல்கிறார். இரானின் பதில் தாக்குதல்கள், அணு குண்டு தயாரிப்பதற்கான கடைசிப்படி எனப் பிரகடனப்படுத்துகிறார் நெதன்யாகு.

இரான், அணு ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்கிற இவரின் பிரகடனத்தை மேற்கத்திய கூட்டாளிகளும் வழிமொழிகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் நெதன்யாகுவின் அவசரமும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.

அணு குண்டு தயாரிக்கும் திட்டம் தன்னிடம் இல்லை என இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநரான துள்சி கப்பார்ட், 'இரான் அணுகுண்டு தயாரிக்கவில்லை' என்பதை அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன எனத் தெரிவித்திருந்தார்.

சர்வதேச அணுசக்தி முகமையும் (ஐஏஇஏ) அதனுடைய காலாண்டு அறிக்கையிலும் இரான் 60% தூய்மை கொண்ட யுரேனித்தை சேகரித்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது. இது 9 அணு குண்டுகளை தயாரிப்பதற்குத் தேவையான 90% தூய்மை வாய்ந்த ஆயுத ரகத்தை விட தொழில்நுட்ப ரீதியில் சற்று குறைவாகவே உள்ளது.

முதல் சில நாட்களில் நடான்ஸ், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவ் என்கிற இரானின் 3 முக்கிய நிலைகள் குறிவைக்கப்பட்டுள்ளன. நடான்ஸில் விமான எரிபொருள் செறிவூட்டல் ஆலை அழிக்கப்பட்டது என ஐஏஇஏ தெரிவித்துள்ளது.

இஸ்ஃபஹானில் உள்ள நான்கு "முக்கியமான கட்டடங்களும்" சேதமடைந்துள்ளதாக ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இரானுக்கு ஏற்பட்ட சேதம் "மிகப்பெரியது" என இஸ்ரேல் கூறும் நிலையில், அவை மிகவும் குறைவானவை என இரான் தெரிவித்துள்ளது.

தற்போது வரை 9 அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தளபதிகளைக் கொன்றதன் மூலம் இரானின் "அறிவு ஆதாரங்களை" இஸ்ரேல் தாக்குகிறது. ராணுவ நிலைகள், ஏவுகணை ஏவும் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய இஸ்ரேலின் இலக்குகள் தற்போது பொருளாதாரம் மற்றும் எண்ணெய் வளங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.

இரானும் தனது தாக்குதல் இலக்குகளை விஸ்தரித்து வருகிறது. இதனால், இருநாடுகளிலும் பொது மக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இஸ்ரேல்-இரான் மோதல், அமெரிக்கா நெதன்யாஹு, இரான், டிரம்ப்

பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES/ GETTY IMAGES

படக்குறிப்பு, இரானின் மிகப்பெரிய மற்றும் பாதுகாக்கப்பட்ட இடமான ஃபோர்டோவ்

ஆனால், இரானின் அணுசக்தி திட்டத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமென்றால், இரானின் மிகப்பெரிய மற்றும் பாதுகாக்கப்பட்ட இடமான ஃபோர்டோவுக்கு இஸ்ரேல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும். ஒரு மலைக்கு கீழே பாதாளத்தில் அமைந்துள்ள வளாகத்தில், இரான் அணுஆயுதம் தயாரிப்பதற்கு நெருக்கமான, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தேக்கி வைத்திருப்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இஸ்ரேலின் தற்போதைய நோக்கம் அதனை இரானுக்கு கிடைக்க விடாமல் செய்ய வேண்டும் என்பது தான் என இஸ்ரேலிய ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிக அளவிலான பாறைகளை ஊடுருவிச் சென்று ஆழமான இடங்களை அழிக்கும் குண்டுகள் இஸ்ரேலிடம் இல்லை. ஆனால், அமெரிக்க விமானப் படையிடம் உள்ளது. இவை எம்.ஒ.பி என அழைக்கப்படுகின்றன. இவை, மேசிவ் ஆர்ட்னன்ஸ் பெனிட்ரேட்டர் (Massive Ordnance Penetrator) என அழைக்கப்படும். பெரிய பாதிப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் பல நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட வேண்டும்.

"நெதன்யாகு டிரம்பை அழைத்து 'நான் இதையெல்லாம் செய்துவிட்டேன், பி-2 விமானங்களுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை நான் உறுதி செய்துவிட்டேன். ஆனால், என்னால் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாது' எனக் கூறுவது தான் சாத்தியமான சூழ்நிலையாக இருக்கும்" எனத் தெரிவிக்கிறார், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள உலகளாவிய எரிசக்தி கொள்கைக்கான மையத்தில் உள்ள முன்னாள் அமெரிக்க அதிகாரியும் இரான் நிபுணருமான ரிச்சர்ட் நெப்யூ.

"அதிபர் டிரம்ப் எந்த பக்கம் சாய்வார் எனத் தெளிவாக தெரியாது" என மேற்கத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைதி பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க திட்டமா?

டிரம்ப் முன்னும் பின்னுமாக நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இரானை ராணுவ ரீதியாக மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தினார். ஏனென்றால் தாக்குதல் என்பது டிரம்ப் அதிகம் விரும்பும் இரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.

ஆனால், இஸ்ரேல் தாக்கிய பிறகு, அந்த தாக்குதல்களை "சிறப்பானது" என்று பாராட்டியவர் "இனி அதிகம் வரப்போகிறது" என்றும் எச்சரித்திருந்தார். ஆனால், இவை ஒப்பந்தத்தை நோக்கி இரானை நகர்த்தும் என்றும் அவர் கூறுகிறார்.

இதன் பிறகு ஞாயிறன்று அவரின் ட்ரூத் சோசியல் தளத்தில், "நாம் விரைவில் இஸ்ரேல் - இரான் இடையே அமைதியை நிலைநாட்டுவோம். பல அழைப்புகளும் சந்திப்புகளும் தற்போது நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை, இஸ்ரேல் உடனடியாக தாக்குதல் நடத்தாது என்று இரானை நம்ப வைப்பதற்கான சதித்திட்டம் தான் என இரான் சந்தேகிக்கிறது. வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

இஸ்ரேல்-இரான் மோதல், அமெரிக்கா நெதன்யாஹு, இரான், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இரானை ராணுவ ரீதியாக மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தினார் டிரம்ப்.

மற்றவர்கள் இந்த நேரத்தை முக்கியமானதாகப் பார்க்கின்றனர். "இஸ்ரேலின் எதிர்பாராத தாக்குதல்கள் இரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளும் அதிபர் டிரம்பின் சாத்தியங்களை இல்லாமல் ஆக்கவே திட்டமிடப்பட்டவை" என்கிறார் வெளியுறவுக்கான ஐரோப்பிய கவுன்சிலில் உள்ள மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா திட்டத்தின் துணைத் தலைவரான எல்லி ஜெரன்மாயே.

"சில இஸ்ரேலிய அதிகாரிகள், இந்தத் தாக்குதல்கள் ராஜாங்க பாதையில் அமெரிக்க தரப்பை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது என வாதிடுகின்றனர், ஆனால் அதன் நேரமும் அளவும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க வேண்டும் என்பதற்கானது தான் என்பது தெளிவாக உள்ளது" என்றார் அவர்.

"ஒரு ஒப்பந்தம் எட்டும் தூரத்தில் தான் இருந்தது" என இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொடர்புடைய அதிகாரிகள் கடந்த வாரம் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் இவை அனைத்தும், இரான் ஆக்கப்பூர்வ சிவில் திட்டங்களுக்கானதாக இருந்தாலும் ஒற்றை இலக்க அளவில் கூட யுரேனியம் செறிவூட்டலை மேற்கொள்ளக் கூடாது என்ற உச்சபட்ச கோரிக்கையில் இருந்து அமெரிக்கா எவ்வளவு தூரம் இறங்கி வருகிறது என்பதைப் பொறுத்து தான். இரான் இதனை ஏற்க கூடாத ஒன்றாக கருதுகிறது.

டிரம்ப் தனது முதல் ஆட்சியில் நெதன்யாகுவின் இடைவிடாத கோரிக்கைகளுக்கு இணங்க 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு, இரான் 3.67% (அணு மின் நிலையங்களுக்கான எரிபொருளை தயாரிக்கக்கூடிய அளவு) என்கிற அளவில் மட்டுமே அதன் யுரேனியம் செறிவூட்டல் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டில் இருந்து விலகியது.

தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ள இரானுக்கு 60 நாட்கள் கெடு விதித்தார் டிரம்ப். இந்த விவகாரத்தில் அனுபவம் வாய்ந்த மத்தியஸ்தர்கள், இத்தகைய சிக்கலான விவகாரத்துக்கு இது மிகவும் குறைவான காலகட்டம் என உணர்ந்தனர்.

61வது நாளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

பேச்சுவார்த்தைக்கான பாதை தற்போது இல்லாமல் போய் விட்டது எனக் கூறும் வகில், "பதற்றத்தைத் தணிக்க பிராந்திய அளவிலான முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன" என்றார்.

நெதன்யாகு என்ன மனநிலையில் உள்ளார்?

தற்போது அதிகரித்துள்ள பதற்றம் அணுசக்தி கையிருப்புகள், சூப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பற்றியது அல்ல என இரான் நம்புகிறது.

"இவை, ஒரு நாடாக இரானின் திறன்களை அதன் ராணுவ வலிமையை குறைத்து இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான அதிகார சமநிலையை வெகுவாகக் குறைத்து, முடிந்தால் இஸ்லாமியக் குடியரசு ஆட்சியை மொத்தமாக கவிழ்ப்பதற்கான இஸ்ரேலின் திட்டம் என்றே இரான் பார்க்கிறது" என்கிறார், இரான்ஸ் கிராண்ட் ஸ்ட்ராடஜி புத்தகத்தின் ஆசிரியரும் சர்வதேச விவகாரங்களுக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பள்ளியில் மத்திய கிழக்கு படிப்புகள் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பேராசிரியருமான வலி நஸ்ர்.

ஆனால், இரான் பொதுமக்கள் இதற்கு எவ்வாறு பதில் அளிப்பார்கள் என்பது தெளிவாக இல்லை.

இஸ்ரேல்-இரான் மோதல், அமெரிக்கா நெதன்யாஹு, இரான், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பல வருடங்களாக சர்வதேச தடைகள் மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊழலால் தவித்து வருகின்றனர் இரானிய மக்கள்

9 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாடு பல வருடங்களாக சர்வதேச தடைகள் மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊழலால் தவிக்கிறது. விலைவாசி உயர்வு தொடங்கி வேலையில்லா திண்டாட்டம், தண்ணீர் மற்றும் மின்சார தட்டுப்பாடு மற்றும் பெண்களை கண்காணிக்கும் கலாசார காவலர்கள் வரை இரானில் பல விவகாரங்களில் போராட்டங்கள் ஒவ்வொரு வருடமும் தொடங்கி மறைந்திருக்கின்றன. 2022-ல் அதிக சுதந்திரம் வேண்டி எதிர்பாராத அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன. அவையெல்லாம் கடுமையான முறையில் கட்டுப்படுத்தப்பட்டன.

தற்போது பொது மக்களின் மனநிலையை ஆய்வு செய்துள்ளார் நஸ்ர். "தொடக்கத்தில் பிரபலமில்லாத நான்கு, ஐந்து தளபதிகள் கொல்லப்பட்ட போது ஒரு விதமான நிம்மதியுணர்வு இருந்தது. ஆனால் தற்போது குடியிருப்பு கட்டடங்கள் தாக்கப்பட்டு, பொதுமக்கள் கொல்லப்படுகிறர்கள், நாட்டின் எரிசக்தி மற்றும் மின் கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன"

"பெரும்பாலான இரானியர்கள் தங்கள் நாட்டின் மீது குண்டுகளை ஏவி வரும் ஆக்கிரமிப்பாளர் வசம் சாய்ந்து அதனை விடுதலையாகப் பார்க்கும் சூழ்நிலை இருப்பதாக எனக்கு தெரியவில்லை" என்றார்.

ஆனால், நெதன்யாகுவின் கூற்றுகள் பரவலான தாக்குதலைப் பற்றியே உள்ளன.

இஸ்ரேல்-இரான் மோதல், அமெரிக்கா நெதன்யாஹு, இரான், டிரம்ப்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,எதிர்காலத்தில் அமெரிக்காவால் மட்டுமே இதனை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்றார் டேனியல் லெவி.

சனிக்கிழமை, ஆயதுல்லா அலி காமனெயி அரசின் அனைத்து இடங்களையும், இலக்குகளையும் குறிவைத்து தாக்குவோம் என அவர் எச்சரித்திருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் ஆட்சி மாற்றம் ஒரு அங்கமாக இருக்கிறதா என்கிற கேள்விக்குப் பதிலளித்த இஸ்ரேல் பிரதமர், "அது சாத்தியமான முடிவாக இருக்கும், ஏனென்றால் இரான் அரசு மிகவும் பலவீனமாக உள்ளது" என்றார்.

"நாட்டின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்கிற அரசின் அச்சத்தை உளவியல் போர் தந்திரத்தின் ஓர் அங்கமாக இஸ்ரேல் கையாளப் பார்க்கிறது" என்கிறார் நெதன்யாகு வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் ஆசிரியரும், தி எகனாமிஸ்டின் இஸ்ரேல் செய்தியாளருமான அன்ஷெல் பிஃபர்.

"இரான் அரசின் வீழ்ச்சியை யூகிப்பதோ அல்லது தூண்டுவதோ அர்த்தமற்றது என்பது இஸ்ரேல் உளவு அமைப்பின் ஒருமித்த எண்ணமாக உள்ளது. இது உடனடியாக நடக்கலாம் அல்லது 20 வருடங்களிலும் நடக்கலாம்" என்றார்.

ஆனால், நெதன்யாகுவின் எண்ணம் வேறாக இருக்கலாம் என பிஃபர் நம்புகிறார். "'தாம் திடமான நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக, நெதன்யாகு நம்பும் மனநிலையில் இருக்கும் சாத்தியங்கள் அதிகம்" என அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை இரவில், இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை கொல்லும் இஸ்ரேலின் திட்டத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்துவிட்டார் என ஒவ்வொரு அமெரிக்க ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ராய்ட்டர்ஸ் இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்ட போது இந்தப் பேச்சு தொடங்கியது.

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியன் முதல் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ட்ஸச்சி ஹனெக்பி வரை முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது இலக்கு இரானின் அரசியல் தலைமை இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால், இந்த தருணம் என்பது குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடியது என்று ஹனெக்பி மேலும் கூறினார்.

ஆபத்தான சண்டை மற்றும் கணிக்க முடியாத அமெரிக்க அதிபர் டிரம்பால்தான் இதன் முடிவு தீர்மானிக்கப்படும்.

"இதன் வெற்றி அல்லது தோல்வி என்பது இதற்குள் அமெரிக்காவை இழுக்க முடியுமா என்பதைப் பொறுத்து தான் உள்ளது" என்கிறார், அமெரிக்காவின் மத்திய கிழக்கு திட்ட தலைவரும் இஸ்ரேல் அரசின் முன்னாள் ஆலோசகருமான டேனியல் லெவி.

"எதிர்காலத்தில் அமெரிக்காவால் மட்டுமே இதன் முடிவுகளை தீர்மானித்து, இந்த சண்டையை ஒரு நிறுத்தத்துக்குக் கொண்டு வர முடியும்" என்று அவர் கூறினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce371gq2kv6o

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2025 at 02:25, இணையவன் said:

உக்ரெய்னில் அமெரிக்கா தனது இராணுவ தளபாட வழங்கலைக் குறைத்துக் கொண்டு அவற்றை ஈரானை நோக்கி நகர்த்துவதாக இரு வாரங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ட்றம்ப் உக்ரெயின் போரை நிறு த்த முயற்சித்தது இதற்காகவும் இருக்கலாம்.

தேர்தலின் முன் உக்ரெயின் மற்றும் பலஸ்தீன போர்களை நிறுத்துவேன் என்று கூறிய ட்றம்ப், இரண்டாக இருந்த போர் முனைகளை இப்போது மூன்றாக்கியுள்ளார்.

ஈரான் மேல் அணுஆயுத தாக்குதல் நடைபெறலாம் என பரவலாக கூறுகிறார்கள், ஆனால் அது ஈரானின் எண்ணெய் வளத்தினை பாதிக்கும் என்பதால் அணுவாயுத தாக்குதல் நடத்தப்படுமா என்பதில் சந்தேகமாகவே உள்ளது.

8 hours ago, இணையவன் said:

தாய்வானை அண்டியுள்ள கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்காவின் நிமிற்ஸ் விமானத் தாங்கிக் கப்பலும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் வேகமாக வளைகுடா நோக்கி நகர்கிறன. இன்னொரு விமானத் தாங்கியும் இக் கடல் பகுதிக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் தாக்குதல் விமானங்கள் தயார்படுத்தப்படுகின்றன.

அணு ஆயுதத்தினை எடுத்து சென்று தாக்ககூடிய வல்லமை கொண்ட ஒரு கலமாக இதனை கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை மிகவும் நெருங்கி விட்டது என்னும் தகவல். இது உண்மையில்லாமல் கூட இருக்கலாம். ஈராக்கின் இரசாயன ஆயுதங்கள் போன்ற ஒரு அவசரமான, ஆனால் பிழையான தகவலாகவும் இது இருக்கலாம். முன்னர் ஈராக்கின் அணு ஆயுத முயற்சிகளையும் இஸ்ரேல் அழித்திருந்தது.

உண்மை எனவே கூறப்படுகிறது, IAEA கருத்தின்படி ஈரானிடம் கிட்டத்தட்ட 400 கிலோ 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது இதனடிப்படையில் சில மாதங்களுக்குள்ளாகவே அணுவாயுதத்தினை தயாரிக்க முடியும் (ஈரானிடம் அதற்கான வசதிகள் மற்றும் தொழில்னுட்பம் இருந்தால்) என கருதுகிறேன்.

இது கீரோசீமாவில் வீசப்பட்ட குட்டிப்பையனை போன்ற 6 - 7 அணுகுண்டுகளை தயாரிக்கலாம் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

உண்மை எனவே கூறப்படுகிறது, IAEA கருத்தின்படி ஈரானிடம் கிட்டத்தட்ட 400 கிலோ 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது இதனடிப்படையில் சில மாதங்களுக்குள்ளாகவே அணுவாயுதத்தினை தயாரிக்க முடியும் (ஈரானிடம் அதற்கான வசதிகள் மற்றும் தொழில்னுட்பம் இருந்தால்) என கருதுகிறேன்.

இது கீரோசீமாவில் வீசப்பட்ட குட்டிப்பையனை போன்ற 6 - 7 அணுகுண்டுகளை தயாரிக்கலாம் என கருதுகிறேன்.

தவறான கருத்தினை பதிந்து விட்டேன் கீரோசீமாவில் வீசப்பட்ட அணுகுண்டு 15 கிலோ 350000 மக்களை சனத்தொகை கொண்ட நகரில் இக்குண்டு வீசப்பட்ட போது 200000 இற்கும் அதிகமான உயிரழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.

நாகசாகாவில் வீசப்பட்ட அணுகுண்டு புளுட்டோனியம் வகையினை சேர்ந்த குண்டு பையந்தான் 64 கிலோ எடை கொண்டது 240000 சனத்தொகை கொண்ட இந்த நகரத்தில் 140000 இற்கும் அதிகமான உயிரழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.

ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இராணுவ மற்றும் அரச உயர்பீடங்கள் இருந்த போதும் இந்த இரு நகரங்களும் தேர்வு செய்யப்பட்டமைக்கான காரணமாக கூறப்படுவதற்கான காரணம் குறித்த ஆண்டில் இரண்டு நாளில் டோக்கியோவில் நடத்தப்பட்ட எரிகுண்டுத்தாக்குதலில் டோக்கியோ பெரும் சேதத்திற்குள்ளாகி இருந்தது அத்துடன் 100000 மக்களும் கொல்லப்பட்டிருந்தனர், இந்த நிலையில் ஏற்கனவே பாதிப்பில்லாத நகரில் இரு வேறுபட்ட இரக குண்டுகளை சோதனை முயற்சியாக இந்த அணுகுண்டு தாக்குதல் 3 நாள்கள் இடைவெளியில் நிகழ்த்தப்பட்டது.

இந்த சோதனை முயற்சியின் படி பார்த்தால் யுரேனிய அணுகுண்டு அதிக அழிவு ஏற்படுத்தும் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் முன்னர் கூறியது போல குட்டிப்பையன் 64 கிலோ.

குண்டு மனிதன் 6.2 கிலோ எடை என கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிற்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் - ஈரான்

18 JUN, 2025 | 12:20 PM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை நிபந்தனையற்ற விதத்தில் சரணடையுமாறும் பொறுமை குறைகின்றது எனவும் எச்சரித்த நிலையில் புதன்கிழமை இஸ்ரேலிற்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

டெல்அவி மக்கள் தாக்குதலிற்கு தயாராகவேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்த அதேவேளை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தனது ஹைபர்சோனிக் பட்டா ஏவுகணைகள் பாதுகாப்பான பதுங்குமிடங்களை உலுக்கிவருகின்றன என தெரிவித்துள்ளது.

fataha_11.jpg

நேர்மையான வாக்குறுதி நடவடிக்கையின் 11வது சுற்றுதாக்குதல்களை பட்டா ஏவுகணைகளை பயன்படுத்தி மேற்கொண்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட ஐந்துமடங்கு அதிகமான வேகத்தில் பயணிக்ககூடியவை. நடுவானில் தங்கள் பயணத்தை மாற்றக்கூடியவை இதனால் அவற்றின் பயணத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

https://www.virakesari.lk/article/217800

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானியர்கள் ஒருபோதும் சரணடைபவர்கள் இல்லை - ஆயத்தொல்லா கமேனி

18 JUN, 2025 | 04:27 PM

image

ஈரானிற்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க தாக்குதலை மேற்கொண்டால் அது மீண்டும் சீர்செய்ய முடியாத சேதத்தை சந்திக்கும் என எச்சரித்துள்ள ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கமேனி ஈரானியர்கள் சரணடைபவர்கள் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் ஆன்மீக தலைவரின் உரை அந்த நாட்டின் தொலைக்காட்சியில் வாசிக்கப்படுகின்றது அதில் கமேனி ஈரானையும் அதன் மக்களையும் வரலாற்றையும் நன்கு அறிந்த புத்திசாலிகள் ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தும் தொனியில் பேசமாட்டார்கள்,ஏனென்றால் ஈரானியர்கள் சரணடைபவர்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/217844

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் ஏவுகனைத்தாக்குதல் எருமளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ஈரானின் மேல் இஸ்ரேல் தங்குதடையின்றி நிகழ்த்தும் விமானத்தாக்குதலில் ஈரானின் ஏவுகணை செலுத்திகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது அதே சிலர் ஈரான் நீண்ட கால நோக்கில் எதிர்வரும் காலத்திற்காக தனது ஏவுகணைகளை சேமித்து வைப்பதற்காக ஏவுகணைதாக்குதலை மட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது, ஆனால் முதலாவது காரணம் என கருதுகிறேன்.

இன்னொரு விடயமும் சுட்டிக்காட்டுகிறார்கள் இஸ்ரேலினால் தொடர்ச்சியாக விமானத்தாக்குதலை தொடரமுடியாது என அதற்கு காரணமாக மனித வலு கூறப்படுகிறது, பொதுவாக ஜெட் விமானிகளுக்கு போதுமான ஓய்வழிக்காவிட்டால் அது பேரழிவினை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது அத்துடன் பராமரிப்பு அணியும் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கலாம் என கூறுகிறார்கள், குறிப்பாக நிமிற்ஸ் போர்க்கப்பல் எதிர் வரும் ஆண்டிலிருந்து பணி நீக்கம் பெறவுள்ள விமானந்தாங்கி கப்பலை போர் பகுதிக்கு அனுப்பியிருப்பதன் மூலம் ஒர் எதிர்த்தாக்குதலை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட முடிவாக இருக்கலாம்.

அனைத்து அழிவு போர்களும் சமாதானத்தின் பெயரால் நடத்தப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vasee said:

அனைத்து அழிவு போர்களும் சமாதானத்தின் பெயரால் நடத்தப்படுகிறது.

எனக்கு இதில் எந்த மன குழப்பமோ அல்லது சங்கடமோ வருகுதில்லை. அனைவரும் எம் அழிவுகளை ரசித்தவர்கள் உதவியவர்கள். அந்தந்த மக்கள் உட்பட. அவர்களின் கூக்குரலையும் அபாய அறைகூவல்களையும் கேட்டபோதும்......

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் உலகப்போர் வரும் என்று சொன்னார்கள். இது தொடங்கி விட்டதோ?

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

எனக்கு இதில் எந்த மன குழப்பமோ அல்லது சங்கடமோ வருகுதில்லை. அனைவரும் எம் அழிவுகளை ரசித்தவர்கள் உதவியவர்கள். அந்தந்த மக்கள் உட்பட. அவர்களின் கூக்குரலையும் அபாய அறைகூவல்களையும் கேட்டபோதும்......

இறப்பது பொதுமக்கள்தான்.

2 minutes ago, நியாயம் said:

மூன்றாம் உலகப்போர் வரும் என்று சொன்னார்கள். இது தொடங்கி விட்டதோ?

நிச்சயமாக 3 ஆம் உலக போர் நிகழாது என கருதுகிறேன், தோற்கும் அணியினை (ஈரானை) எவரும் ஆதரிக்கமாட்டார்கள் ஆனால் ஈரானில் ஏற்பட போகும் மனித பேரழிவினை உலகம் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்கும், இந்த அழிவிற்கு ஈரானிற்கு அருகில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளும் உடந்தையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரசோதரன் said:

இஸ்ரேல் ஈரானுக்குள் எந்த இடத்தையும், எந்த வேளையிலும் தாக்கி அழிக்கலாம் என்பது ஈரானியர்கள் உட்பட எல்லோருக்குமே ஒரு அதிர்ச்சி.

1 hour ago, vasee said:

இறப்பது பொதுமக்கள்தான்.

நிச்சயமாக 3 ஆம் உலக போர் நிகழாது என கருதுகிறேன், தோற்கும் அணியினை (ஈரானை) எவரும் ஆதரிக்கமாட்டார்கள் ஆனால் ஈரானில் ஏற்பட போகும் மனித பேரழிவினை உலகம் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்கும், இந்த அழிவிற்கு ஈரானிற்கு அருகில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளும் உடந்தையாக இருக்கும்.

கூதிகளுடன் டீலுக்கு போக வேண்டியதன் (US)அர்த்தம் என்ன??

முழு ஊடகமும் ஈரானை நோக்கி உள்ளது. ஆனால் அணுக்கதிர் வீச்சால் இறந்தவர்கள் பற்றி ஏன் தெரிவிக்கவில்லை. அப்படி ஒன்று நடந்ததா? இல்லை உலக செய்தி ஸ்தாபனங்களை கட்டுப்படுத்தும் இஸ்ரேலியர்கள் கோட்டை விட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நிச்சயமாக 3 ஆம் உலக போர் நிகழாது என கருதுகிறேன், தோற்கும் அணியினை (ஈரானை) எவரும் ஆதரிக்கமாட்டார்கள் ஆனால் ஈரானில் ஏற்பட போகும் மனித பேரழிவினை உலகம் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்கும், இந்த அழிவிற்கு ஈரானிற்கு அருகில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளும் உடந்தையாக இருக்கும்.

உண்மை நிலைமையை தெரிவித்துள்ளீர்கள்

ஆனால் தமிழ் யுரியுப்பர்கள் பெரும் தொகையானோரை கவருவதற்காக உங்கள் மீது இரக்கம் காட்ட இனி இடமில்லை சமரசத்துக்கு வாய்ப்பில்லை ராசா என்று கொமேனி இஸ்ரேல அமெரிக்காவிடம் உறுதியாக தெரிவித்துவிட்டார் இனி தான் ஈரானின் அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள் பொக்கிஷங்கள் வெளிவர போகின்றது என்று அடித்துவிட்டு கொண்டே இருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நிச்ச்சயமாக இராணுவம் இறங்க போவதில்லை. டோறா போறாவில் குண்டு வீசிய தருணங்கள் மட்டும் வந்து போகின்றது.

7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை நிலைமையை தெரிவித்துள்ளீர்கள்

ஆனால் தமிழ் யுரியுப்பர்கள் பெரும் தொகையானோரை கவருவதற்காக உங்கள் மீது இரக்கம் காட்ட இனி இடமில்லை சமரசத்துக்கு வாய்ப்பில்லை ராசா என்று கொமேனி இஸ்ரேல அமெரிக்காவிடம் உறுதியாக தெரிவித்துவிட்டார் இனி தான் ஈரானின் அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள் பொக்கிஷங்கள் வெளிவர போகின்றது என்று அடித்துவிட்டு கொண்டே இருப்பார்கள்

இஸ்ரேல் பெரிய பிஸ்தா எனில் ஏன் அமெரிக்கா அழைக்கப்பட்டது என சிந்தித்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இறப்பது பொதுமக்கள்தான்.

நிச்சயமாக 3 ஆம் உலக போர் நிகழாது என கருதுகிறேன், தோற்கும் அணியினை (ஈரானை) எவரும் ஆதரிக்கமாட்டார்கள் ஆனால் ஈரானில் ஏற்பட போகும் மனித பேரழிவினை உலகம் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்கும், இந்த அழிவிற்கு ஈரானிற்கு அருகில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளும் உடந்தையாக இருக்கும்.

உங்களின் உலகப்போர் என்பதன் அர்த்தம் வேறாகலாம். அமெரிக்காவை தாக்க பலர் தருணம் காத்திருக்கிறார்கள். இதோ தருணம் வந்து விட்டது. இரானின் சகாக்கள் யார் எனில் ரஸ்யா,சீனா, வடகொரியா. உதிரிகள் கிஸ்புல்லா மற்றும் குழுக்கள்.

இராணுவத்தை இறக்கிய ஆப்கானிஸ்தானில் நிலை என்ன(அமெரிக்காவின்)

ஈரானில் குண்டு மழை பொழிய நிறைய வாய்ப்புகள் உள்ளன. மக்கள் அழிய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

சதாம் அல்லது கடாபி போல அழிந்து நாட்டை பிடிக்கும் வாய்ப்பு ஏற்படுமா?

ஏன் இஸ்ரேலின் அழிவுகள் பற்றி மேற்கு ஊடகங்கள் தெரிவிக்க மறுக்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் ஈரானுக்குள் எந்த இடத்தையும், எந்த வேளையிலும் தாக்கி அழிக்கலாம் என்பது ஈரானியர்கள் உட்பட எல்லோருக்குமே ஒரு அதிர்ச்சி.

எப்படி அயன் டோம் இஸ்ரேலை தாக்கி அழிக்க முடியவில்லை என சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

ஏன் இஸ்ரேலின் அழிவுகள் பற்றி மேற்கு ஊடகங்கள் தெரிவிக்க மறுக்கின்றன

இஸ்ரேலினுள் ஏற்பட்ட சேதங்கள் பற்றி பிபிசியிலே படங்களோடு போடுகிறார்களே?

16 minutes ago, nunavilan said:

எப்படி அயன் டோம் இஸ்ரேலை தாக்கி அழிக்க முடியவில்லை என சொல்ல முடியுமா?

அயன் டோம் அதைத் தயாரித்த கம்பனியின் தரவுகளின் படி 80% - 90% வினைத்திறனானது. எனவே 100 ஏவுகணைகள் வந்தால் 20 உள்ளே விழும். ஆனால், 20<<100 என்பதால் சேதம் இஸ்ரேலுக்கு இது வரை குறைவு தான்.

53 minutes ago, nunavilan said:

கூதிகளுடன் டீலுக்கு போக வேண்டியதன் (US)அர்த்தம் என்ன??

முழு ஊடகமும் ஈரானை நோக்கி உள்ளது. ஆனால் அணுக்கதிர் வீச்சால் இறந்தவர்கள் பற்றி ஏன் தெரிவிக்கவில்லை. அப்படி ஒன்று நடந்ததா? இல்லை உலக செய்தி ஸ்தாபனங்களை கட்டுப்படுத்தும் இஸ்ரேலியர்கள் கோட்டை விட்டார்களா?

கதிர் வீச்சினால் மக்கள் இறந்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் வரவில்லை. எந்த தகவல் மூலத்தில் இந்த தகவலைப் பார்த்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

இஸ்ரேலினுள் ஏற்பட்ட சேதங்கள் பற்றி பிபிசியிலே படங்களோடு போடுகிறார்களே?

அயன் டோம் அதைத் தயாரித்த கம்பனியின் தரவுகளின் படி 80% - 90% வினைத்திறனானது. எனவே 100 ஏவுகணைகள் வந்தால் 20 உள்ளே விழும். ஆனால், 20<<100 என்பதால் சேதம் இஸ்ரேலுக்கு இது வரை குறைவு தான்.

கதிர் வீச்சினால் மக்கள் இறந்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் வரவில்லை. எந்த தகவல் மூலத்தில் இந்த தகவலைப் பார்த்தீர்கள்?

ஆனால் அணுக்கதிர் வீச்சால் இறந்தவர்கள் பற்றி ஏன் தெரிவிக்கவில்லை. அப்படி ஒன்று நடந்ததா? இல்லை உலக செய்தி ஸ்தாபனங்களை கட்டுப்படுத்தும் இஸ்ரேலியர்கள் கோட்டை விட்டார்களா?

ஏன் ஏன் ஏன்

6 minutes ago, Justin said:

இஸ்ரேலினுள் ஏற்பட்ட சேதங்கள் பற்றி பிபிசியிலே படங்களோடு போடுகிறார்களே?

அயன் டோம் அதைத் தயாரித்த கம்பனியின் தரவுகளின் படி 80% - 90% வினைத்திறனானது. எனவே 100 ஏவுகணைகள் வந்தால் 20 உள்ளே விழும். ஆனால், 20<<100 என்பதால் சேதம் இஸ்ரேலுக்கு இது வரை குறைவு தான்.

கதிர் வீச்சினால் மக்கள் இறந்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் வரவில்லை. எந்த தகவல் மூலத்தில் இந்த தகவலைப் பார்த்தீர்கள்?

எப்படி அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டது என்று செய்திகள் வந்தனவே?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

ஆனால் அணுக்கதிர் வீச்சால் இறந்தவர்கள் பற்றி ஏன் தெரிவிக்கவில்லை. அப்படி ஒன்று நடந்ததா? இல்லை உலக செய்தி ஸ்தாபனங்களை கட்டுப்படுத்தும் இஸ்ரேலியர்கள் கோட்டை விட்டார்களா?

ஏன் ஏன் ஏன்

எப்படி அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டது என்று செய்திகள் வந்தனவே?

அணுக்கதிர் வீச்சால் யாராவது இறந்ததாக எங்கே நீங்கள் கேள்விப் பட்டீர்கள்? இணைப்பை இங்கே தாருங்கள், உண்மையைப் பரிசோதிக்கலாம்.

5 minutes ago, nunavilan said:

எப்படி அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டது என்று செய்திகள் வந்தனவே?

அணு ஆயுதங்கள் அழிக்கப் பட்டதாக யார் சொன்னார்கள்? எந்த ஊடகம்?

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Justin said:

அணுக்கதிர் வீச்சால் யாராவது இறந்ததாக எங்கே நீங்கள் கேள்விப் பட்டீர்கள்? இணைப்பை இங்கே தாருங்கள், உண்மையைப் பரிசோதிக்கலாம்.

அணு ஆயுதங்கள் அழிக்கப் பட்டதாக யார் சொன்னார்கள்? எந்த ஊடகம்?யாரும் இறந்தாக எங்கே கூறினேன்?

யாரும் இறந்தாக எங்கே கூறினேன்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.