Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, nochchi said:

ஈரானை அணுகுண்டுத் தயாரிப்புக்கு நெருங்கிவிட்டதாகக்கூறி இஸ்ரேல் தாக்குகிறது. ஆனால் இஸ்ரேல் அணுகுண்டை வைத்திருக்கிறது. இது என்ன நியாயம். ஏன் உலக வல்லாதிக்க சக்திகள் இஸ்ரேலைக் கேட்கவில்லை அல்லது தாக்கவில்லை.

இப்போது மேற்கத்தைய ஊடகங்களில் ஈரானும் ரஷ்யாவும் மட்டுமே உலக அமைதியை கெடுத்துக்கொண்டிருக்கின்றன என்றொரு பிரமாண்டத்தை உருவாக்கிக்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இந்த மேற்குலகு தாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என திரும்பியும் பார்ப்பதில்லை.முன்னோக்கியும் பார்ப்பதில்லை.

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nochchi said:

ஈரானை அணுகுண்டுத் தயாரிப்புக்கு நெருங்கிவிட்டதாகக்கூறி இஸ்ரேல் தாக்குகிறது. ஆனால் இஸ்ரேல் அணுகுண்டை வைத்திருக்கிறது. இது என்ன நியாயம். ஏன் உலக வல்லாதிக்க சக்திகள் இஸ்ரேலைக் கேட்கவில்லை அல்லது தாக்கவில்லை.

ஐநா பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் ஐந்து நாடுகளும் அணு ஆயுதங்கள் தயாரித்த அதே காலத்திலேயே இஸ்ரேலும் அணு ஆயுதங்கள் தயாரித்தது. இன்றுவரை இஸ்ரேல் தன்னுடைய அணு ஆயுத விபரங்களை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆகவே ஏன் இந்த ஐந்து நாடுகளில் எவையும் இஸ்ரேலை கேட்கவில்லை என்ற கேள்வி இல்லாமல் ஆகுகின்றது.

ஆனால் அணு ஆயுதங்கள் தயாரிக்க இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா இந்த மூன்று நாடுகளையும் எப்படி ஐந்து அணு வல்லரசுகளும் விட்டார்கள் என்பது ஒரு விடயமே. இலேசாக அவர்களை விடவில்லை. முழுத்தடைகளை விதித்தார்கள். அதிலும் வட கொரியா, மேற்கு நாடுகளின் தடைகளால் இந்த நாடே பல தசாப்தங்கள் பின்னோக்கிப் போய்விட்டது.

இனி இன்றிருக்கும் அணு ஆயுதங்களால் வரும் அழிவு என்பது மனிதகுலத்தின் அழிவே. ஆகவே அதற்கான நிகழ்தகவைக் குறைக்கும் முயற்சியே இன்று போய்க் கொண்டிருக்கின்றது. என்னதான் வட கொரியா சொன்னாலும், அவர்கள் அணு ஆயுதத்தை பிரயோகிக்கமாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை பொதுவாக இருக்கின்றது. ஆனால் ஈரானின் மீது அந்த நம்பிக்கை பல நாடுகளுக்கு இல்லை. மற்றும் ஈரானுடனான தீவிரவாத இயக்கங்களுக்கு இருக்கும் நெருக்கமான, வெளிப்படையான தொடர்புகளும் இந்த விடயத்தில் ஒரு காரணமாக அமைகின்றது. அணு ஆயுதங்கள் சில குழுக்களுக்கு கைமாறி விடக்கூடாதே என்ற ஒரு கவனம்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

ஈரானை அணுகுண்டுத் தயாரிப்புக்கு நெருங்கிவிட்டதாகக்கூறி இஸ்ரேல் தாக்குகிறது. ஆனால் இஸ்ரேல் அணுகுண்டை வைத்திருக்கிறது. இது என்ன நியாயம். ஏன் உலக வல்லாதிக்க சக்திகள் இஸ்ரேலைக் கேட்கவில்லை அல்லது தாக்கவில்லை.

இது என்ன கேள்வி சகோ. துப்பாக்கி தூக்காதே என்று அணுகுண்டு வைத்திருப்பவன் சொல்வது தான் இயற்கையானது.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரசோதரன் said:

நேற்று இரவு நியூஸ் 18 இல் ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் இருக்கும் இடங்கள் பற்றிய ஒரு சிறிய செய்தி தொகுப்பொன்று போய்க் கொண்டிருந்தது. அதில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் Fordo Plant குறித்த தகவல்கள் பிழையானவை போன்று தெரிந்தது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் தான் செறிவூட்டப்பட்ட யுரேனியம் 60 கிலோகிராம் வரையில் சேமிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இதன் மேற்கூரை மேற்பரப்பிலிருந்து 90 அடிகள் கீழே இருக்கின்றது என்று செய்தியில் சொன்னார்கள். இவை 90 அடிகள் அல்ல, 90 மீட்டர்கள் கீழே என்பதே சரியானது என்று வேறு தகவல்கள் சொல்லுகின்றன.

பி - 2 விமானத்தின், ஜிபியூ - 57 இராட்சதக் குண்டின் ஆழத்தாக்கு திறன் பற்றியும் அவர்களின் தகவல்கள் சரியானது அல்ல. இந்த ராட்சத குண்டுகள் 200 அடிகள் வரை உள்ளே போய், பின்னர் அங்கே வெடிக்கும் திறன் வாய்ந்தவை. 60 அடிகள் என்றே செய்தியில் சொன்னார்கள்.

இதை முடிப்பது தான் அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் முடிவு என்றால், இரண்டு பாரிய தாக்கங்கள் நிகழக்கூடும். முதலாவது, அங்கிருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தாக்கமுற்று அதனால் அந்தப் பிரதேசம் முழுவதும் ஏற்படப் போகும் கதிர்வீச்சு. அந்தப் பிரதேசமே 50 வருடங்களுக்கு மேலே மனிதர்கள் வசிக்க முடியாத வெறும் நிலம் ஆகிவிடும்.

இரண்டாவது, இந்தப் பிரதேசத்தில் அந்த மலையின் கீழே போய்க் கொண்டிருக்கும் fault lines. மிகவும் ஆழத்தில் ஒரு நெருக்கப்பட்ட இடத்தில் சில இராட்சத குண்டுகள் வெடிக்கும் போது, அவற்றின் வீரியம் இன்னும் அதிகமாக, கூர்மையாக இருக்கும். இந்த வீரியத்தால் fault lines அசையக்கூடும். அது பெரிய பூகம்பங்களை அந்தப் பகுதியிலும், சுற்றுப் பிரதேசங்களிலும் ஏற்படுத்தவும் கூடும்.

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது என்று தான் உறுதிமொழி கொடுக்கின்றேன் என்று ரஷ்ய அதிபர் புடின் இன்று சொல்லியிருக்கின்றார். இங்கே சிரிப்பு வந்தால், சிரித்துக் கொள்ளலாம். இது நல்ல ஒரு நகைச்சுவையே.

தற்போதைக்கு ஈரானுக்கு உண்மையில் என்ன தெரிவுகள் இருக்கின்றன............ ஒரே ஒரு தெரிவாக அணு ஆயுத திட்டத்தை தற்காலிகமாகவேனும் நிற்பாட்டிக் கொள்வது தான் உள்ளது. ஒரே ஒரு அணு மின்நிலையமே நாட்டில் இருக்கும் போது, 2000 க்கும் மேற்பட்ட கருவிகளில் யுரேனியத்தை செறிவூட்டும் ஈரானின் நோக்கம் வெளிப்படையே.

12 minutes ago, ரசோதரன் said:

ஐநா பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் ஐந்து நாடுகளும் அணு ஆயுதங்கள் தயாரித்த அதே காலத்திலேயே இஸ்ரேலும் அணு ஆயுதங்கள் தயாரித்தது. இன்றுவரை இஸ்ரேல் தன்னுடைய அணு ஆயுத விபரங்களை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆகவே ஏன் இந்த ஐந்து நாடுகளில் எவையும் இஸ்ரேலை கேட்கவில்லை என்ற கேள்வி இல்லாமல் ஆகுகின்றது.

ஆனால் அணு ஆயுதங்கள் தயாரிக்க இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா இந்த மூன்று நாடுகளையும் எப்படி ஐந்து அணு வல்லரசுகளும் விட்டார்கள் என்பது ஒரு விடயமே. இலேசாக அவர்களை விடவில்லை. முழுத்தடைகளை விதித்தார்கள். அதிலும் வட கொரியா, மேற்கு நாடுகளின் தடைகளால் இந்த நாடே பல தசாப்தங்கள் பின்னோக்கிப் போய்விட்டது.

இனி இன்றிருக்கும் அணு ஆயுதங்களால் வரும் அழிவு என்பது மனிதகுலத்தின் அழிவே. ஆகவே அதற்கான நிகழ்தகவைக் குறைக்கும் முயற்சியே இன்று போய்க் கொண்டிருக்கின்றது. என்னதான் வட கொரியா சொன்னாலும், அவர்கள் அணு ஆயுதத்தை பிரயோகிக்கமாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை பொதுவாக இருக்கின்றது. ஆனால் ஈரானின் மீது அந்த நம்பிக்கை பல நாடுகளுக்கு இல்லை. மற்றும் ஈரானுடனான தீவிரவாத இயக்கங்களுக்கு இருக்கும் நெருக்கமான, வெளிப்படையான தொடர்புகளும் இந்த விடயத்தில் ஒரு காரணமாக அமைகின்றது. அணு ஆயுதங்கள் சில குழுக்களுக்கு கைமாறி விடக்கூடாதே என்ற ஒரு கவனம்.

ஈரான் தீவிர‌வாத‌க் குழுக்க‌ளை வைத்து இருக்கு என்றால்

அமெரிக்கா எத்த‌னை தீவிர‌வாத‌ குழுக்க‌ளை உருவாக்கி ப‌ல‌ நாட்டை நாச‌ம் செய்த‌வை லிஸ் போட்டு சொல்ல‌வா குரு👍

ஈரான் த‌ன‌து நாட்டின் இறையான்மைய‌ பாதுகாக்க‌ அணுகுண்டு செய்வ‌தில் பிழை இருப்ப‌தாக‌ அல்ல‌து த‌வ‌று இருப்பதாக‌ தெரிய‌ வில்லை👍...................

இஸ்ரேல் சில‌ தீவிர‌வாத‌ குழுக்க‌லுக்கு காசுக‌ளை கொடுத்து செய்த‌ நாச‌கார‌ செய‌ல்க‌ளை இந்த‌ உல‌க‌ம் ந‌ங்கு அறியும்...................இன்று கூட‌( ஸ் ) த‌ள‌த்தில் பார்த்தேன் இஸ்ரேல் அமைச்ச‌ர் ஒருத‌ர் ஓவ‌ரா குரைக்க‌ தொட‌ங்கினார் , ஜ‌ப்பான் மீது அணு குண்டு போட்ட‌தை ஈரானுக்கு நினைவூட்ட‌ விரும்புகிறேன் என்றார்

......................எதிரிட்ட‌ இருக்கிர‌ அதே குண்டு ஈரானிட‌மும் இருந்தால் தான் அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடான‌ இஸ்ரேல் மூடிகிட்டு இருப்பான் , இல்லையேன் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளை கொன்று குவிச்ச‌து போல் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இஸ்லாம் நாட்ட‌வ‌ர்க‌ளை கொலை செய்வாங்க‌ள்.....................ஈரான் 2000கிலோ மீட்ட‌ர் தூர‌த்தில் இருந்து அதிவேக‌ மீசேல்க‌ள் மூல‌ம் இஸ்ரேல் த‌லை ந‌க‌ர‌த்த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளை த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆக்கி விட்டின‌ம்

இஸ்ரேல் த‌னிக்கை செய்யுது அவ‌ர்க‌ளின் நாட்டின் அழிவுக‌ளை ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் காட்டாம‌ , இப்போது புது ச‌ட்ட‌ம் போட்டு இருக்கின‌ம் , வீடியோ பிடித்து அதை வ‌ட்சாப் மூல‌ம் அனுப்பினால் சில‌ ஆண்டு சிறையாம்😛😁........................

இன்று இஸ்ரேல் ம‌ருத்துவ‌ம‌னை மீது ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல் தீவிர‌வாத‌ தாக்குத‌லாம் இஸ்ரேல் அர‌சு..............ப‌ல‌ஸ்தீன‌த்தில் புற்றுநோய் ம‌ருத்துவ‌ம‌னை மீது குண்டை போட்ட‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளுக்கு இப்ப‌ தான் புரியுது ம‌ருத்துவ‌ம‌னை மீது குண்டு போட்டால் அது ப‌ய‌ங்க‌ர‌ வாத‌ம் என‌ ,

இதுவ‌ரை கால‌மும் ஈரானின் மெள‌வுன‌துக்கும் பொறுமைக்கும் கிடைச்ச‌ வெற்றி இது.....................இன்னும் 2000க்கு மேல் ப‌ட்ட‌ மிசேல்க‌ள் ஈரானிட‌ம் இருக்கு அதோட‌ சீனாவில் இருந்து விமான‌ம் மூல‌ம் ஆயுத‌ங்க‌ள் ஈரானை வ‌ந்த‌டையுது........................இது ஒன்றும் 2003கிடையாது ச‌தாமுசேன் அணுகுண்டு வைத்து இருக்கிறார் என்று சொல்லி ஈராக்கை நாச‌ம் செய்த‌து போல் ஈரானை அழிக்க‌ முடியாது ,ஈரானில் அமெரிக்க‌ ப‌டைக‌ள் கை வைத்தால் பின் விலைவுக‌ள் எப்ப‌டி இருக்கும் என்ப‌த‌ அமெரிக்காவும் இஸ்ரேலும் பிற‌க்கு உண‌ருவின‌ம் ஏன் ஈரான் மேல் கைவைத்தோம் என‌............................எல்லாத்துக்கும் கால‌ம் ப‌தில் சொல்லும்.........................

வ‌ட‌ கொரியா இஸ்ரேலுக்கு எதிராக‌ அறிக்கை விட்டு இருக்கு த‌லைவ‌ன் இற‌ங்க‌னும் உல‌க‌த்தில் நில‌ ந‌டுக்க‌ம் ஏற்ப‌டும்

உல‌கில் அமைதிய‌ நிலை நாட்ட‌ப் போகிறேன் என‌ சொல்லி ஆட்சிக்கு வ‌ந்த‌ ர‌ம்ப் இப்போது மூன்றாம் உல‌க‌ போருக்கு அவ‌ரே கார‌ண‌மாய் அமைய‌ போகிறார்.......................

ஈரான் அமெரிக்கா கூட‌ பேச்சு வார்த்தைக்கு இட‌ம் இல்லை என‌ சொல்லி விட்டின‌ம்

ர‌ம்ப் (ஸ் ) த‌ள‌த்தில் இருந்து வீர‌ வ‌ச‌ன‌ம் எழுதுகிறார் அதை ஈரான் அர‌சு காமெடியாக‌ பார்க்குது உந்த‌ மிர‌ட்ட‌லுக்கு எல்லாம் தாங்க‌ள் ப‌ய‌ப்பிட‌ போவ‌து கிடையாது 48ம‌ணி நேர‌ம் கெடு கொடுத்தார் ர‌ம் , இப்ப‌ 60ம‌ணித்தியாள‌த்தை தாண்டி விட்ட‌து.............................

ம‌று ப‌டியும் சொல்லுகிறேன் இஸ்ரேல் மிக‌ப் பெரிய‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடு........................ayatollah ali khamenei இஸ்ரேல் கொலை செய்தால் இஸ்ரேல் என்ர‌ நாடு வ‌ரும் கால‌ங்க‌ளில் நின்ம‌தியாக‌ இருக்க‌ போவ‌து கிடையாது...................அப்ப‌டி இஸ்ரேல் ayatollah ali khamenei கொலை செய்தால் அழிவுக‌ள் ப‌ல‌ கோண‌ங்க‌ளில் வேறு மாதிரி இருக்கும்.............................

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, வீரப் பையன்26 said:

🤣.....................

பையன் சார், நலமா, இந்தப் பக்கம் வருவது குறைவு போல தெரிகின்றது. டிக்டாக்கில் ஒரு ஸ்டார் ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள் போல....................

வட கொரியா அதிபரின் புதுக்கப்பல் கடலில் விட்ட அன்றே இரண்டாகப் பிளந்து போய்விட்டது. மனிதர் கடும் கோபத்தில் சிலரை பிடித்து அடைத்து வைத்திருக்கின்றார். அவர்களை அவர் கொன்று கூட இருக்கலாம். இப்பொழுது அந்தக் கப்பலை ஒட்டுவது தான் அவரது முதல் வேலை. அந்தக் கப்பல் ஒரு துண்டாக கடலில் மிதந்த பின் தான் தலைவன் வெளியே வேறு அலுவல்களுக்கு வருவார்...............🤣.

அதிபர் ட்ரம்ப் தான் ஒரு அமைதி விரும்பி என்று சொல்லுவார். நீங்கள் உட்பட பலரும் அதையே திருப்பிச் சொன்னீர்கள். அதிபர் ட்ரம்ப் விரும்புவது அவரை மட்டுமே என்று நாங்கள் சிலர் எப்போதும் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே............... நாலு வருடங்கள் பட்டுத்தான் பாருங்களேன்.............😜.

நிகழ்வுகளை மூன்று வகைகளாக எழுதலாம் என்றிருக்கின்றது:

  1. எங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுவது

  2. எங்களுக்கு விருப்பமானவற்றை ஊகங்களாக எழுதுவது

  3. எங்களின் அரசியல் தேவைகள் கருதி திரித்து எழுதுவது

நீங்கள் இரண்டாவது வகையில் மிக நல்லாகவே எழுதியிருக்கின்றீர்கள்.....................👍.

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, ரசோதரன் said:

ஆகவே அதற்கான நிகழ்தகவைக் குறைக்கும் முயற்சியே இன்று போய்க் கொண்டிருக்கின்றது.

நிகழ்தகவை குறைக்க எப்படி பாகிஸ்தான் அணுஆயுதத்தை வைக்க மேற்குலகு விட்டது?.இந்தியாவுக்கு செக் வைக்க பாகிஸ்தான் தேவைப்பட்டது மேற்குலகுக்கு.

2 hours ago, ரசோதரன் said:

இனி இன்றிருக்கும் அணு ஆயுதங்களால் வரும் அழிவு என்பது மனிதகுலத்தின் அழிவே. ஆகவே அதற்கான நிகழ்தகவைக் குறைக்கும் முயற்சியே இன்று போய்க் கொண்டிருக்கின்றது.

நிகழ்தகவை குறைக்க இன்னொரு நாட்டை செய்யாமல் தடைசெய்வது ஒரு வகை. ஏன் வைத்திருப்பவர்கள் குறைக்க அல்லது இல்லாமல் செய்ய முடியாது?? நிகழ்தகவை குறைக்க இஸ்ரேல் எந்த வகைக்குள் வரும்???

2 hours ago, ரசோதரன் said:

என்னதான் வட கொரியா சொன்னாலும், அவர்கள் அணு ஆயுதத்தை பிரயோகிக்கமாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை பொதுவாக இருக்கின்றது.

இது அமெரிக்காவை விட சுத்துமாத்து. பலஸ்தீனத்துக்கு ஈரான் உதவுவது தான் மிக மிக முக்கிய காரணம். ஈரானை அடக்கி விட்டால் பலஸ்தீனியர்கள் ஏதிலிகள் ஆகி போராட மாட்டார்கள் என்பதுடன் நாளுக்கு சராசரியாக 50 பேரை கொன்றால் அவர்களின் போராடும் வீரியம் குறையும் என்ற தந்திரமே.

2 hours ago, ரசோதரன் said:

ஆனால் ஈரானின் மீது அந்த நம்பிக்கை பல நாடுகளுக்கு இல்லை

யாரந்த பல நாடுகள்??

2 hours ago, ரசோதரன் said:

மற்றும் ஈரானுடனான தீவிரவாத இயக்கங்களுக்கு இருக்கும் நெருக்கமான, வெளிப்படையான தொடர்புகளும் இந்த விடயத்தில் ஒரு காரணமாக அமைகின்றது

அமெரிக்காவுடனான தலபானின் கொண்டாட்டம், இஸ்ரேலின் ஐ எஸ் எஸ்லின் கொண்டாட்டம், பின்லாடனின் தந்தையின் வெள்ளை மாளிகை சிவப்பு கம்பள வரவேற்பு என கூறிக்கொண்டே போகலாம்.இவை எதற்குள் அடங்கும்??

2 hours ago, ரசோதரன் said:

என்னதான் வட கொரியா சொன்னாலும், அவர்கள் அணு ஆயுதத்தை பிரயோகிக்கமாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை பொதுவாக இருக்கின்றது.

வடகொரியாவின் அணுஆயுத பரிசோதனைகள் அமெரிக்காவின் உற்ற நண்பர்களான ஜப்பானின் அடுப்படியில் விழுகிறது. தென் கொரியாவின் கடற்கரையில் விழுகிறது. என்ன சகோ இப்படி சப்பை கட்டு கட்டுகிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரசோதரன் said:

எங்களுக்கு விருப்பமானவற்றை ஊகங்களாக எழுதுவது

இதை தான் தமிழ் யுரியுப்பர்கள் செய்து கொடுத்து கொண்டிருக்கின்றார்கள். மார்க்கபற்றாளர்களின் கனவுகளை செய்திகளாக தயாரித்து கொடுத்து கொண்டிருக்கின்றார்கள். எனது கவலை எல்லாம் கொமேனி உலகத்திற்கே தனது மதகடமைகள் எவ்வளவோ நிறைவேற்றி உலகை மாற்ற வேண்டிய அவசியம் இருக்க இப்படி பங்கருக்குள் சென்று ஒளித்து கொண்டிருக்க வேண்டி வந்து விட்டதே

ரிஷாட் பதியுதீன் என்ற இலங்கை எம்பி பாராளுமன்றத்தில் பேசி இருக்கின்றாராம் இலங்கை பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் ஈரான் உதவி செய்ததாம் ஆனால் நன்றி கெட்ட தற்போதைய அரசு ஈரானை ஆதரிக்கவில்லை என்று தாக்கி பேசி உள்ளாராம் .இலங்கை பொருளாதார நெருக்கடியில் அதிக உதவி செய்தது இந்தியா காஷ்மீரில் முஸ்லிம் பயங்கரவாதிகள் குண்டு தாக்குதல் நடத்திய போது ரிஷாட் பதியுதீனும் இலங்கை முஸ்லிம்களும் மதத்திற்காக அவர்களை கண்டிக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

வழமையாக ஒற்றை வரியில் கேள்வி கேட்பீர்கள். இன்று எழுதியிருக்கின்றீர்கள்................👍.

நிகழ்தகவை குறைக்க எப்படி பாகிஸ்தான் அணுஆயுதத்தை வைக்க மேற்குலகு விட்டது?.இந்தியாவுக்கு செக் வைக்க பாகிஸ்தான் தேவைப்பட்டது மேற்குலகுக்கு.

இந்தியாவைக் கட்டுப்படுத்தவே பாகிஸ்தானை அனுமதித்தார்கள் என்றால் அதுவும் அணு ஆயுத யுத்த நிகழ்தகவை கட்டுப்படுத்தவே என்று தானே வருகின்றது. இந்தியாவிடம் மட்டுமே இருந்தால், அது இந்தியாவின் மேலாதிக்கத்தை நிறுவும் அல்லவா. சமீபத்தில் இருவரும் இரண்டு நாட்கள் சண்டை போட்டதாகச் சொன்னார்கள். பின்னர் பின்வாங்கிவிட்டார்களே. இஸ்ரேலிடமும். எகிப்திடமும் அணு ஆயுதங்கள் இருந்தால், அந்தப் பிரதேசம் ஓரளவாவது அமைதியாக இருக்கக்கூடும்.

நிகழ்தகவை குறைக்க இன்னொரு நாட்டை செய்யாமல் தடைசெய்வது ஒரு வகை. ஏன் வைத்திருப்பவர்கள் குறைக்க அல்லது இல்லாமல் செய்ய முடியாது?? நிகழ்தகவை குறைக்க இஸ்ரேல் எந்த வகைக்குள் வரும்???

வைத்திருப்பவர்கள் அணு ஆயுத பரம்பல் கட்டுப்பாடு ஒப்பந்தம் மூலம் புதிய அணு ஆயுதங்களை செய்வதை கட்டுப்படுத்திக் கொண்டு தானே இருக்கின்றார்கள். புதிய பரிசோதனைகளுக்கு கூட தடை உள்ளதே. பழைய ஆயுதங்களை பயன்பாட்டில் இல்லாமல் ஆக்குவதும் அவர்களில் ஒப்பந்தத்தில் இருக்கின்றது தானே.

இது அமெரிக்காவை விட சுத்துமாத்து. பலஸ்தீனத்துக்கு ஈரான் உதவுவது தான் மிக மிக முக்கிய காரணம். ஈரானை அடக்கி விட்டால் பலஸ்தீனியர்கள் ஏதிலிகள் ஆகி போராட மாட்டார்கள் என்பதுடன் நாளுக்கு சராசரியாக 50 பேரை கொன்றால் அவர்களின் போராடும் வீரியம் குறையும் என்ற தந்திரமே.

பலஸ்தீனத்துக்கு எவருமே உதவவில்லை. அந்த மக்கள் நிவாரணம் பெற நிற்கும் போது கூட இஸ்ரேல் இராணூவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இங்கே கேட்க நாதியற்ற மக்கள் அவர்கள். ஹமாஸ் குழுவிற்கு ஈரான் உதவுவது பலஸ்தீன மக்களுக்கு உதவுவது அல்ல. ஈரானை அழித்து தான் பலஸ்தீனத்தை அடக்க வேண்டும் என்ற நிலை கிடையாது. இன்றைய காசாவில் ஈரானால் எதுவுமே செய்யமுடியாது.

யாரந்த பல நாடுகள்??

நேட்டோவில் இருக்கும் எந்த நாடும் ஈரானின் அணு அயுத திட்டத்திற்கு ஆதரவு கிடையாது.

அமெரிக்காவுடனான தலபானின் கொண்டாட்டம், இஸ்ரேலின் ஐ எஸ் எஸ்லின் கொண்டாட்டம், பின்லாடனின் தந்தையின் வெள்ளை மாளிகை சிவப்பு கம்பள வரவேற்பு என கூறிக்கொண்டே போகலாம்.இவை எதற்குள் அடங்கும்??

இவை அமெரிக்க அரசின் தன் நலன் கருதிய நடவடிக்கைகள் என்பதற்குள் வரும். இதையே தான் ரஷ்யா செய்கின்றது. சீனா செய்கின்றது. இந்தியா செய்கின்றது. இங்கு எந்த வல்லரசும் இப்படி செய்யாமல் இருப்பதில்லை. ஈரானும் இதையே செய்தாலும், தேர்ந்தெடுத்த ஒரு அரச நிர்வாகப் பொறிமுறைகளில் இருக்கும் கட்டுப்பாடுகள் தேர்ந்தெடுக்கப்படாத சர்வாதிகார அரச நிர்வாகத்தில் கிடையாது. இது தான் ஈரான் அரசுக்கும், அமெரிக்க அரசுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு.

வடகொரியாவின் அணுஆயுத பரிசோதனைகள் அமெரிக்காவின் உற்ற நண்பர்களான ஜப்பானின் அடுப்படியில் விழுகிறது. தென் கொரியாவின் கடற்கரையில் விழுகிறது. என்ன சகோ இப்படி சப்பை கட்டு கட்டுகிறீர்கள்??

அவை அணு ஆயுதப் பரிசோதனைகள் கிடையாது. ஏவுகணைகள். அத்துடன் வட கொரிய மீது அமெரிக்காவும், மேற்குலகும் விதித்திருக்கும் தடைகள் மிகக் கடுமையானவை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

ஈரான் தீவிர‌வாத‌க் குழுக்க‌ளை வைத்து இருக்கு என்றால்

அமெரிக்கா எத்த‌னை தீவிர‌வாத‌ குழுக்க‌ளை உருவாக்கி ப‌ல‌ நாட்டை நாச‌ம் செய்த‌வை லிஸ் போட்டு சொல்ல‌வா குரு👍

ஈரான் த‌ன‌து நாட்டின் இறையான்மைய‌ பாதுகாக்க‌ அணுகுண்டு செய்வ‌தில் பிழை இருப்ப‌தாக‌ அல்ல‌து த‌வ‌று இருப்பதாக‌ தெரிய‌ வில்லை👍...................

இஸ்ரேல் சில‌ தீவிர‌வாத‌ குழுக்க‌லுக்கு காசுக‌ளை கொடுத்து செய்த‌ நாச‌கார‌ செய‌ல்க‌ளை இந்த‌ உல‌க‌ம் ந‌ங்கு அறியும்...................இன்று கூட‌( ஸ் ) த‌ள‌த்தில் பார்த்தேன் இஸ்ரேல் அமைச்ச‌ர் ஒருத‌ர் ஓவ‌ரா குரைக்க‌ தொட‌ங்கினார் , ஜ‌ப்பான் மீது அணு குண்டு போட்ட‌தை ஈரானுக்கு நினைவூட்ட‌ விரும்புகிறேன் என்றார்

......................எதிரிட்ட‌ இருக்கிர‌ அதே குண்டு ஈரானிட‌மும் இருந்தால் தான் அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடான‌ இஸ்ரேல் மூடிகிட்டு இருப்பான் , இல்லையேன் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளை கொன்று குவிச்ச‌து போல் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இஸ்லாம் நாட்ட‌வ‌ர்க‌ளை கொலை செய்வாங்க‌ள்.....................ஈரான் 2000கிலோ மீட்ட‌ர் தூர‌த்தில் இருந்து அதிவேக‌ மீசேல்க‌ள் மூல‌ம் இஸ்ரேல் த‌லை ந‌க‌ர‌த்த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளை த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆக்கி விட்டின‌ம்

இஸ்ரேல் த‌னிக்கை செய்யுது அவ‌ர்க‌ளின் நாட்டின் அழிவுக‌ளை ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் காட்டாம‌ , இப்போது புது ச‌ட்ட‌ம் போட்டு இருக்கின‌ம் , வீடியோ பிடித்து அதை வ‌ட்சாப் மூல‌ம் அனுப்பினால் சில‌ ஆண்டு சிறையாம்😛😁........................

இன்று இஸ்ரேல் ம‌ருத்துவ‌ம‌னை மீது ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல் தீவிர‌வாத‌ தாக்குத‌லாம் இஸ்ரேல் அர‌சு..............ப‌ல‌ஸ்தீன‌த்தில் புற்றுநோய் ம‌ருத்துவ‌ம‌னை மீது குண்டை போட்ட‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளுக்கு இப்ப‌ தான் புரியுது ம‌ருத்துவ‌ம‌னை மீது குண்டு போட்டால் அது ப‌ய‌ங்க‌ர‌ வாத‌ம் என‌ ,

இதுவ‌ரை கால‌மும் ஈரானின் மெள‌வுன‌துக்கும் பொறுமைக்கும் கிடைச்ச‌ வெற்றி இது.....................இன்னும் 2000க்கு மேல் ப‌ட்ட‌ மிசேல்க‌ள் ஈரானிட‌ம் இருக்கு அதோட‌ சீனாவில் இருந்து விமான‌ம் மூல‌ம் ஆயுத‌ங்க‌ள் ஈரானை வ‌ந்த‌டையுது........................இது ஒன்றும் 2003கிடையாது ச‌தாமுசேன் அணுகுண்டு வைத்து இருக்கிறார் என்று சொல்லி ஈராக்கை நாச‌ம் செய்த‌து போல் ஈரானை அழிக்க‌ முடியாது ,ஈரானில் அமெரிக்க‌ ப‌டைக‌ள் கை வைத்தால் பின் விலைவுக‌ள் எப்ப‌டி இருக்கும் என்ப‌த‌ அமெரிக்காவும் இஸ்ரேலும் பிற‌க்கு உண‌ருவின‌ம் ஏன் ஈரான் மேல் கைவைத்தோம் என‌............................எல்லாத்துக்கும் கால‌ம் ப‌தில் சொல்லும்.........................

வ‌ட‌ கொரியா இஸ்ரேலுக்கு எதிராக‌ அறிக்கை விட்டு இருக்கு த‌லைவ‌ன் இற‌ங்க‌னும் உல‌க‌த்தில் நில‌ ந‌டுக்க‌ம் ஏற்ப‌டும்

உல‌கில் அமைதிய‌ நிலை நாட்ட‌ப் போகிறேன் என‌ சொல்லி ஆட்சிக்கு வ‌ந்த‌ ர‌ம்ப் இப்போது மூன்றாம் உல‌க‌ போருக்கு அவ‌ரே கார‌ண‌மாய் அமைய‌ போகிறார்.......................

ஈரான் அமெரிக்கா கூட‌ பேச்சு வார்த்தைக்கு இட‌ம் இல்லை என‌ சொல்லி விட்டின‌ம்

ர‌ம்ப் (ஸ் ) த‌ள‌த்தில் இருந்து வீர‌ வ‌ச‌ன‌ம் எழுதுகிறார் அதை ஈரான் அர‌சு காமெடியாக‌ பார்க்குது உந்த‌ மிர‌ட்ட‌லுக்கு எல்லாம் தாங்க‌ள் ப‌ய‌ப்பிட‌ போவ‌து கிடையாது 48ம‌ணி நேர‌ம் கெடு கொடுத்தார் ர‌ம் , இப்ப‌ 60ம‌ணித்தியாள‌த்தை தாண்டி விட்ட‌து.............................

ம‌று ப‌டியும் சொல்லுகிறேன் இஸ்ரேல் மிக‌ப் பெரிய‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடு........................ayatollah ali khamenei இஸ்ரேல் கொலை செய்தால் இஸ்ரேல் என்ர‌ நாடு வ‌ரும் கால‌ங்க‌ளில் நின்ம‌தியாக‌ இருக்க‌ போவ‌து கிடையாது...................அப்ப‌டி இஸ்ரேல் ayatollah ali khamenei கொலை செய்தால் அழிவுக‌ள் ப‌ல‌ கோண‌ங்க‌ளில் வேறு மாதிரி இருக்கும்.............................

சீனா ஈரானுக்கு ஆயுதங்கள் கொடுக்கின்றது என்பதற்கு என்ன ஆதாரங்கள்? அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

நேட்டோவில் இருக்கும் எந்த நாடும் ஈரானின் அணு அயுத திட்டத்திற்கு ஆதரவு கிடையாது.

வெள்ளை முஸ்லிம் என கன்னை பிரிக்க உங்களுக்கு தெரியாவிட்டாலும் வெள்ளைகளுக்கு 100 வீதம் தாம் யார் என்பது தெரியும்.

5 minutes ago, ரசோதரன் said:

வழமையாக ஒற்றை வரியில் கேள்வி கேட்பீர்கள். இன்று எழுதியிருக்கின்றீர்கள்................👍.

ஈரான் மாதிரி தான்.தேவை என்றால் வெளுப்போம்.🙂

7 minutes ago, ரசோதரன் said:

இவை அமெரிக்க அரசின் தன் நலன் கருதிய நடவடிக்கைகள் என்பதற்குள் வரும்.

ஏன் ஈரான் நலனாக இருக்கக்கூடாது??

8 minutes ago, ரசோதரன் said:

அவை அணு ஆயுதப் பரிசோதனைகள் கிடையாது. ஏவுகணைகள்.

ஆம்.ஒரு பரீட்சார்த்தம் என்பது யாருக்குமே புரியும். ஒரு வெருட்டாக கூட எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நத்தனியாகு: தங்களது மருத்துவமனையை தாக்கியது மனிதந்நேயம் அற்ற செயலாகும்.

காசா மக்கள்: எங்களின் அனைத்து மருத்துவமனைகளையும் அழித்தது மனிதநேயம் இல்லையா???

மொத்தமாக 36 மருத்துவமனைகளை அழித்தது (காசாவின்)இஸ்ரேலிய கொலைக்கும்பல்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

வெள்ளை முஸ்லிம் என கன்னை பிரிக்க உங்களுக்கு தெரியாவிட்டாலும் வெள்ளைகளுக்கு 100 வீதம் தாம் யார் என்பது தெரியும்.

ஈரான் மாதிரி தான்.தேவை என்றால் வெளுப்போம்.🙂

ஏன் ஈரான் நலனாக இருக்கக்கூடாது??

ஆம்.ஒரு பரீட்சார்த்தம் என்பது யாருக்குமே புரியும். ஒரு வெருட்டாக கூட எடுக்கலாம்.

மதங்கள் பிரச்சனையே அல்ல. மத அடிப்படைவாதம் தான் பிரச்சனை. இஸ்லாமிய அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம், கிறிஸ்தவ அடிப்படைவாதம், பௌத்த அடிப்படைவாதம்,......... இப்படி எதுவுமே மனிதர்களை ஒன்றாக்குவதில்லை, பிரித்து அழிக்கின்றன. இதற்கு எதிராகவே இது நடைபெறுகின்றது, இன வேறுபாடு அடிப்படையில் அல்ல. மற்றபடி, பல பாகுபாடுகள், துவேஷங்கள் எல்லா மனிதர்களின் உள்ளேயும் இருக்கின்றது. வெள்ளை மனிதர்கள் மட்டும் தான் பிரித்துப் பார்ப்பவர்கள் என்றில்லை, நாங்களுமே பிரித்துப் பார்ப்பவர்கள்தான். ஊருக்குள்ளேயும் பிரிக்கின்றவர்கள் நாங்கள், ஊர் ஊராகவும் பிரிகின்றவர்கள் நாங்கள்.

ஈரானால் முடியாது. பொதுவாக இருக்கும் இஸ்ரேல், அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மையினால், ஈரான் அடிப்பது போன்று பிரமை உருவாக்கப்படுகின்றது. போன வருடம் அவர்களின் ஒரு ஹெலிகாப்டர் விழுந்த போதே, அதை தேட முடியாமல் அவர்கள் தவித்த போது, ஈரானின் நிலை தெரிந்தது. சீனாவோ, ரஷ்யாவோ ஹெலிகாப்டர்கள் கூட கொடுக்கவில்லை.

மற்றைய பலமான நாடுகளைப் போலவே ஈரானும் தன் நலன் கருதியே பல குழுக்களுக்கு உதவி செய்கின்றது. ஆனால் ஈரானின் அடிப்படைவாதமும், சர்வாதிகார அரச நிர்வாகம், அதன் மூலம் குழுக்களுக்கு கிடைக்கும் கட்டற்ற வசதிகள் போன்றனவே பல நாடுகளுக்கு பயத்தை உண்டாக்குகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரசோதரன் said:

ஈரானால் முடியாது. பொதுவாக இருக்கும் இஸ்ரேல், அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மையினால், ஈரான் அடிப்பது போன்று பிரமை உருவாக்கப்படுகின்றது. போன வருடம் அவர்களின் ஒரு ஹெலிகாப்டர் விழுந்த போதே, அதை தேட முடியாமல் அவர்கள் தவித்த போது, ஈரானின் நிலை தெரிந்தது. சீனாவோ, ரஷ்யாவோ ஹெலிகாப்டர்கள் கூட கொடுக்கவில்லை.

57 minutes ago, ரசோதரன் said:

மதங்கள் பிரச்சனையே அல்ல. மத அடிப்படைவாதம் தான் பிரச்சனை. இஸ்லாமிய அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம், கிறிஸ்தவ அடிப்படைவாதம், பௌத்த அடிப்படைவாதம்,......... இப்படி எதுவுமே மனிதர்களை ஒன்றாக்குவதில்லை, பிரித்து அழிக்கின்றன. இதற்கு எதிராகவே இது நடைபெறுகின்றது, இன வேறுபாடு அடிப்படையில் அல்ல. மற்றபடி, பல பாகுபாடுகள், துவேஷங்கள் எல்லா மனிதர்களின் உள்ளேயும் இருக்கின்றது. வெள்ளை மனிதர்கள் மட்டும் தான் பிரித்துப் பார்ப்பவர்கள் என்றில்லை, நாங்களுமே பிரித்துப் பார்ப்பவர்கள்தான். ஊருக்குள்ளேயும் பிரிக்கின்றவர்கள் நாங்கள், ஊர் ஊராகவும் பிரிகின்றவர்கள் நாங்கள்.

இஸ்ரேல் அணு ஆயுதத்தை வைத்துள்ளது. ஏன் அவர்களுக்கு பொருளாதார தடை இல்லை?

அணு ஆயுதம் வரை, பொருளாதார தடை வரை , ஒரு நாளுக்கு 50 ஆக கொன்றால் ஒரு இனத்தை அழிக்கலாம் என்ற குரூரம் யாரிடம் உள்ளது? ஒரு உதாரணம்????

1 hour ago, ரசோதரன் said:

மற்றைய பலமான நாடுகளைப் போலவே ஈரானும் தன் நலன் கருதியே பல குழுக்களுக்கு உதவி செய்கின்றது.

தனது நலம் எப்படி முழு அரபு உலகமும் வேடிக்கை பார்க்கும் போது பலஸ்தீனத்துக்கு மட்டும் உதவ முயல்கிறது. அதுவும் பலஸ்தீனியர்கள் வேறு முஸ்லீம்களாக உள்ள போது??

1 hour ago, ரசோதரன் said:

ஆனால் ஈரானின் அடிப்படைவாதமும், சர்வாதிகார அரச நிர்வாகம், அதன் மூலம் குழுக்களுக்கு கிடைக்கும் கட்டற்ற வசதிகள் போன்றனவே பல நாடுகளுக்கு பயத்தை உண்டாக்குகின்றன.

சி ஐ ஏ ,மொசாட் செய்த கொலைகளை காட்டிலுமா???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முக்கிய முடிவு!

ஈரான் - இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடுவதா? இல்லையா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்வார் என வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது. 

பேச்சுவார்த்தைகளுக்கு கணிசமான வாய்ப்பு இருப்பதாக அவர் நம்புவதாக வௌ்ளை மாளிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. 

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சக்திவாய்ந்த அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது 87 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருப்பதாகவும் இதை 90 சதவீதம் செறிவூட்டினால் அணு குண்டுகளை தயாரிக்க முடியும் என்றும் சர்வதேச அணு சக்தி நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். 

இந்த சூழலில் ஈரானின் அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை கடந்த 13-ம் திடீர் திடீர் தாக்குதலை நடத்தியது. கடந்த 7 நாட்களாக இஸ்ரேல், ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 20 அணு சக்தி தளங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்து உள்ளன. மேலும் ஈரானின் 14 அணு சக்தி விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டு உள்ளனர். 

அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிட்டு,சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்கா திரைமறைவில் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சரண் அடையும் பேச்சுக்கேஇடமில்லை என்று ஈரான் மதத் தலைவர் அயதுல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் களமிறங்கினால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்த சூழலில் சர்வதேச அளவில் இஸ்ரேல், ஈரானுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் அணி திரண்டு வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி,கனடா, அவுஸ்திரேலியா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டை பாதியில் ரத்து செய்துவிட்டு அமெரிக்கா திரும்பினார். ஈரான் மீது நேரடியாக போர் தொடுப்பது தொடர்பாக அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஈரான் மீது போர் தொடுக்க விரும்பவில்லை. எனினும் ஈரானின் அணு சக்தி திட்டத்தை அழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நான் என்ன செய்வேன் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த வாரம் மிகப்பெரிய சம்பவங்கள் நிகழும்" என்று தெரிவித்தார். இது ஈரானுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக கருதப்படுகிறது. 

புளூம்பர்க் ஊடகம் வெளியிட்ட செய்தியில், “அடுத்த சில நாட்களில் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கக்கூடும். இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கில் சன்னி, ஷியா முஸ்லிம்களுக்கு இடையே நேரடி மோதல் நிலவுகிறது. அந்த வகையில் சன்னி முஸ்லிம்கள் அதிகம் வாழும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் விவகாரத்தில் மென்மையான போக்கை பின்பற்றி வருகின்றன. 

ஈரான் ஆதரவு நாடுகள்: ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா,வடகொரியா, வெனிசூலா, ஏமன், லெபனான் உள்ளிட்ட நாடுகள் செயல்படுகின்றன. துருக்கி, அஜர்பைஜான் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகள் ஈரானுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுத தாக்குதலை நடத்தினால் பாகிஸ்தான் நேரடியாக போரில் களமிறங்கும். இஸ்ரேல் மீது பாகிஸ்தான் இராணுவம் அணு குண்டுகளை வீசும் என்று ஈரான் இராணுவ மூத்த அதிகாரி மோசென் ரீஸி அண்மையில் கூறினார். 

ஆனால் ஈரானின் கருத்தை பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜாமுகமது ஆசீப் உடனடியாக மறுத்தார்.“ஈரானுக்கு நாங்கள் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. அணு சக்தி ஒப்பந்தங்களை நாங்கள் கண்டிப்புடன் பின்பற்றுகிறோம். பாகிஸ்தான் மண்ணையும், மக்களையும் காப்பாற்ற மட்டுமே அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம்" என்று அவர் விளக்கம் அளித்தார். 

ஈரானுக்கு ரஷ்யா ஆதரவு: உக்ரைனுக்கு எதிரான போரின்போது ரஷ்யாவுக்கு, ஈரான் பல்வேறு வகைகளில் ஆயுத உதவிகளை வழங்கியது. குறிப்பாக ஈரானின் அதிநவீன ட்ரோன்கள் ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டன. தற்போதைய இக்கட்டான சூழலில் ஈரானுக்கு க்ராசுகா 4 என்ற ஏவுகணை தடுப்பு சாதனத்தை ரஷ்யா வழங்கியிருக்கிறது. இந்த மின்னணு தடுப்பு சாதனம் மூலம் இஸ்ரேலின் அதிநவீன ஏவுகணைகள் நடுவானில் திசை திருப்பப்படுகின்றன. இதன்காரணமாக இஸ்ரேலிய ஏவுகணைகள் மீண்டும் இஸ்ரேலுக்கே திருப்பி சென்று அந்த நாட்டை தாக்குகின்றன. இது இஸ்ரேலுக்கு பேரதிர்ச்சியாக அமைத்திருக்கிறது. 

இதனிடையே ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் செர்ஜி ரயாப்கோவ், மாஸ்கோவில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர்தொடுத்தால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறும் போது, “ஈரான், இஸ்ரேல் இடையே போர்நிறுத்தத்தை ஏற்படுத்த சமரச பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது.எங்களது சமரச திட்டத்தை ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் விளக்கி உள்ளோம். ஈரான், ரஷ்யா இடையே பொருளாதார, ராணுவரீதியாக மிக நெருங்கிய உறவு நீடிக்கிறது" என்று தெரிவித்தார். 

ஈரானின் அணு சக்தி தளங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ரஷ்ய நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேரிடக்கூடாது என்று அமெரிக்கா, இஸ்ரேலிடம் ரஷ்யா ஆணித்தரமாக எடுத்துரைத்து உள்ளது. 

சீனா எச்சரிக்கை: சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், பெய்ஜிங்கில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் சீனா மிகக் கடுமையாக எதிர்க்கும். சர்வதேச சட்டவிதிகள் மீறப்படுவதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்" என்று தெரிவித்தார். 

சீன அதிபர் ஜி ஜின்பிங் அண்மையில் கூறும்போது, “ஈரான், இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா தலையிடக்கூடாது" என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். வடஅமெரிக்க நாடான வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ கூறும்போது, “ஈரானுக்கு ரஷ்யா, சீனா, துருக்கி, பெர்சிய வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில், இஸ்லாமிய நாடுகள், குளோபல் சவுத் நாடுகள் பகிரங்கமாக ஆதரவு அளிக்க வேண்டும். அப்போதுதான் இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்" என்று அழைப்பு விடுத்துள்ளார். 

வடகொரியாவில் தீவிர ஆயுத உற்பத்தி: இஸ்ரேல், ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மிக முக்கிய முடிவை எடுத்து உள்ளார். வடகொரியாவின் ஆயுத உற்பத்தியை பலமடங்கு அதிகரிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரே நேரடியாக ஆயுத ஆலைகளுக்கு சென்று மேற்பார்வை செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு சுமார் 20,000 கன்டெய்னர்களில் வடகொரியா ஆயுதங்களை அனுப்பி வைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இதேபோல வடகொரியா தரப்பில் ஈரானுக்கும் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதைய சூழலில் இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஒருவேளை உலகப்போர் மூண்டால் பேரழிவு ஏற்படும் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cmc483ybi004nqp4k2fe0j575

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

🤣.....................

பையன் சார், நலமா, இந்தப் பக்கம் வருவது குறைவு போல தெரிகின்றது. டிக்டாக்கில் ஒரு ஸ்டார் ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள் போல....................

வட கொரியா அதிபரின் புதுக்கப்பல் கடலில் விட்ட அன்றே இரண்டாகப் பிளந்து போய்விட்டது. மனிதர் கடும் கோபத்தில் சிலரை பிடித்து அடைத்து வைத்திருக்கின்றார். அவர்களை அவர் கொன்று கூட இருக்கலாம். இப்பொழுது அந்தக் கப்பலை ஒட்டுவது தான் அவரது முதல் வேலை. அந்தக் கப்பல் ஒரு துண்டாக கடலில் மிதந்த பின் தான் தலைவன் வெளியே வேறு அலுவல்களுக்கு வருவார்...............🤣.

அதிபர் ட்ரம்ப் தான் ஒரு அமைதி விரும்பி என்று சொல்லுவார். நீங்கள் உட்பட பலரும் அதையே திருப்பிச் சொன்னீர்கள். அதிபர் ட்ரம்ப் விரும்புவது அவரை மட்டுமே என்று நாங்கள் சிலர் எப்போதும் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே............... நாலு வருடங்கள் பட்டுத்தான் பாருங்களேன்.............😜.

நிகழ்வுகளை மூன்று வகைகளாக எழுதலாம் என்றிருக்கின்றது:

  1. எங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுவது

  2. எங்களுக்கு விருப்பமானவற்றை ஊகங்களாக எழுதுவது

  3. எங்களின் அரசியல் தேவைகள் கருதி திரித்து எழுதுவது

நீங்கள் இரண்டாவது வகையில் மிக நல்லாகவே எழுதியிருக்கின்றீர்கள்.....................👍.

அமெரிக்க‌ன் பெத்துப் போட்ட‌ க‌ள்ள‌க் குழ‌ந்தை தான் இஸ்ரேல்

இந்த‌ போரை ஈரான் ஆர‌ம்பிக்க‌ வில்லை.....................ஹ‌மாஸ் த‌ங்க‌ட‌ நாட்டை தாக்கி விட்டின‌ம் என‌ சொல்லி 2வ‌ருட‌த்துக்குள் 50ஆயிர‌ம் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளை கொன்று குவிச்ச‌ போர் குற்ற‌வாளி தான் நெத்த‌னியாகு , தென் ஆபிரிக்கா தொட்டு இன்னும் சில‌ நாடுக‌ள் ஜ‌க்கிய‌ நாட்டு ச‌வை முன் ஆதார‌த்தோடு ப‌ல‌ உண்மைக‌ளை போட்டு உடைத்த‌வை , ஆனால் அமெரிக்க‌னின் ஆனுவ‌த்தால் அதெல்லாம் நீத்துப் போன‌து...................என்ன‌ கோதாரிக்கு உந்த‌ ஜ‌க்கிய‌ நாட்டு ச‌பைய‌ உருவாக்கின‌வ‌ங்க‌ள் என்று என‌க்கு இன்னும் விடை தெரிய‌ வில்லை ..................அமெரிக்கா எப்ப‌வாவ‌து இந்த‌ ஜ‌க்கிய‌ நாட்டு ச‌வையால் த‌ன்டிக்க‌ப் ப‌ட்டு இருக்கா அப்ப‌டி த‌ன்டிச்சாலும் அதை அமெரிக்கா கேட்டு ந‌ட‌ந்து இருக்கா😛....................உல‌கில் அதி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடு அமெரிக்கா ம‌ற்றும் இஸ்ரேல்......................நூறு வ‌ருட‌த்துக்கு முதல் பிரிடிஷ் கார‌ன் எப்ப‌டி இருந்த‌வை , இப்ப‌ அவ‌ர்க‌ளின் நில‌மைய‌ பாருங்கோ என்ன‌ நினையில் இருக்கின‌ம் என்று😉.........................அமெரிக்காவின் இர‌ட்டை வேட‌ நாட‌க‌த்துக்கு இந்த‌ உல‌கில் யாரோ ஒருத‌ன் முற்றுப் புள்ளி வைப்பான் அமெரிக்காவின் சொல்லை மீறி செய‌லில் ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌க்கும் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில்.......................

அடுத்த நாட்டு வளங்கள் மீது கொள்ளை அடிப்ப‌த‌ற்காக‌ என்ன‌ வேச‌மும் போட‌க் கூடிய‌ நாடு தான் அமெரிக்கா , அதுக்கு ந‌ல்ல‌ உத‌ரான‌ம் 2003 ஈராக்கில் அமெரிக்க‌ன் ப‌டை கால் வைச்ச‌து , ச‌தாம் அணு குண்டு வைச்சு இருக்கிறார் அணு குண்டை மீட்க்க‌ போகிறோம் என‌ சொல்லி போரை தொட‌ங்கின‌ அமெரிக்கா , இதுவ‌ரை ஈராக் நாட்டின் அணுகுண்டு எங்கை என்ர‌ கேள்விக்கு ப‌தில் இல்லை😡.......................

அமெரிக்க‌ன் பெத்துப் போட்ட‌ க‌ள்ள‌க் குழ‌ந்தை இஸ்ரேல் , அந்த‌ குழ‌ந்தை ஈரானால் மெதுமெதுவாய் அழிவ‌தை க‌ண்ணால் பார்க்க‌ முடியுது.....................த‌ங்க‌ட‌ வான் ப‌ர‌ப்பில் ஈ காக்கா கூட‌ ப‌ற‌க்க‌ முடியாது என்று மார் த‌ட்டி சொன்ன‌ இஸ்ரேலில் அவ‌ர்க‌ளின் வான் பாதுகாப்பு க‌ருவி அமெரிக்க‌ன்ட‌ வான்பாதுகாப்பு க‌ருவிய‌ தாண்டி போய் ஈரானின் குண்டுக‌ள் வெடிக்குது என்றால் ஈரானின் மிசேல்க‌ளின் பெரும‌தி கூடி கொண்டே போகுது.................................

இஸ்ரேல் போன‌ கிழ‌மை இந்த‌ போரை தொட‌ங்கின‌தில் இருந்து ப‌ல‌ நாட்டு ஊட‌க‌ங்க‌ள் வ‌ழியாக‌ பார்த்துட்டு தான் இருக்கிறேன்....................ஈரான் என்ர‌ நாட்டுட‌ன் மோத‌ எத்த‌னை நாடுக‌ள் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பின்னால் நிக்கின‌ம்........................இத்த‌னை நாட்டு உத‌வியுட‌ன் ஒரு சின்ன‌ நாட்டுட‌ன் மோதுவ‌து உண்மையில் வெக்க‌க் கேடு , போரை தொட‌ங்கின‌து இஸ்ரேல் ,

அமெரிக்கா ஜ‌க்கிய‌ நாட்டு சைபை தொட்டு ம‌ற்றும் சில‌ விடைய‌ங்க‌ளில் இவ‌ர்க‌ளை ம‌திக்காம‌ செய‌ல் ப‌ட்டு இருக்கு.....................ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ற்றி பேச‌ அமெரிக்கா த‌குதி இல்லாத‌ நாடு............................

புட்டின் கூட‌ நேருக்கு நேர் மோத‌ துணிவு இல்லாம‌ தான் ஜோ பைட‌ன் பின்னால் நின்று உக்கிரேனுக்கு ஆயுத‌ங்க‌ளை ப‌ண‌ங்க‌ளை அள்ளிக் கொடுத்தார்....................அமெரிக்கான்ட‌ வீர‌ம் ஆசியாவில் இருக்கும் சின்ன‌ சின்ன‌ நாடுக‌ள் மீது தான்...........................சோமாலியாவில் அடி வேண்டி அவ‌மான‌ ப‌ட்ட‌ மாதிரி ஈரானிட‌மும் அடி வேண்டி த‌ங்க‌ட‌ நாட்டுக்கு ஓடி போக‌னும் என‌ ம‌ன‌தார‌ விரும்புகிறேன்................................

டிக்டாக்கில் ஒரு ஸ்டார் ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள் போல😁😛😛😛😛😛😛😛............................அப்ப‌டி ஒன்றும் இல்லை இப்ப‌ தான் கையில் இருந்த‌ கொடிய‌ நோய் க‌ட்டிய‌ அக‌ற்றினவை........................ஓய்வு அதிக‌ம் தேவை , யாழை தின‌மும் பார்வையிடுவேன் , பிடித்த‌ க‌ருத்துக்கு விருப்ப‌ புள்ளி குத்துவ‌தோட‌ ச‌ரி அண்ணா ..............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயம் said:

சீனா ஈரானுக்கு ஆயுதங்கள் கொடுக்கின்றது என்பதற்கு என்ன ஆதாரங்கள்? அறிய ஆவல்.

இர‌ண்டு இணைய‌த்தில் காணொளி பார்த்தேன் ஆனால் அது நூற்றுக்கு நூறு உண்மையென‌ சொல்ல‌ முடியாது....................

ர‌ஸ்சியாவுக்கு ரோன்க‌ளை ஏற்றும‌திவ்செய்த‌ நாடு ஈரான்...................ர‌ஸ்சியாவிட‌ம் இருந்தும் ஈரான் சில‌ ஆயுத‌ங்க‌ளை வேண்டி இருக்க‌ கூடும் முன் கூட்டியே.......................இன்று கூட‌ X த‌ள‌த்தில் சீனாவின் விமான‌ம் ஈரானில் வ‌ந்து இற‌ங்கின‌தாக‌ போட்டு இருக்கின‌ம்.......................

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசுவதால் ஏற்படக் கூடிய ஆபத்துகள்

இரானின் நடான்ஸ் அணுசக்தி தளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES/MAXAR TECHNOLOGIES

படக்குறிப்பு,இரானின் நடான்ஸ் அணுசக்தி தளம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரெபேக்கா மோரேல், அலிசன் பிரான்சிஸ் & விக்டோரியா கில்

  • பதவி, பிபிசி நியூஸ் அறிவியல் குழு

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இரானின் அணுசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்து வரும் இஸ்ரேல், இரானின் நிலத்தடி யுரேனியம் செறிவூட்டல் நிலையங்கள் மீது முக்கிய கவனம் செலுத்துகிறது.

சர்வதேச அணுசக்தி முகமையின் கூற்றுப்படி (IAEA), இரானின் அணுசக்தி மையத்தில் உள்ள நடான்ஸ் நிலையம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது.

மற்றொரு தளமான ஃபோர்டோ, ஒரு மலையின் ஆழத்தில் அமைந்துள்ளது. அந்த நிலத்தடி அணுசக்தி நிலையத்தை அடைவதற்கு, அமெரிக்காவிடம் மட்டுமே உள்ள சக்திவாய்ந்த 'பங்கர் பஸ்டர்' குண்டுகள் தேவைப்படும்.

ஒருவேளை ஃபோர்டோ மீது குண்டுவீச்சு நடந்தால், அதனால் ஏற்படும் அபாயங்கள் என்னவாக இருக்கும்?

இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் "மிகவும் கவலைக்குரியவை" என்று சர்வதேச அணுசக்தி முகமை விவரித்துள்ளது.

திங்கள் கிழமையன்று, அதன் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி, ராணுவ விரிவாக்கம் "மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான விளைவுகளுடன் கதிரியக்க வெளியீட்டிற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது" என்று கூறினார்.

யுரேனியத்தின் ஒரு குறிப்பிட்ட வகையை (ஐசோடோப்பை) உருவாக்கிச் சேமிக்க, செறிவூட்டல் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சர்ரே பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டன் தேசிய இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பேடி ரீகனின் கூற்றுப்படி, யுரேனியத்தை நிலத்தில் இருந்து தோண்டி எடுக்கும்போது, அது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவை,

பெரும்பகுதியாக, 99.3 சதவிகிதம் யுரேனியம்-238,

அதோடு, 0.7% - அதாவது சுமார் 150 அணுக்களில் ஒரு அணு யுரேனியம்-235

"அணு உலை வேலை செய்யத் தேவையானது இதுதான்" என்று விளக்குகிறார் பேராசிரியர் ரீகன்.

ஆற்றல் வெடிப்பு

இரானில் உள்ள முழுமையடையாத அராக் கனநீர் உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய காட்சிகளை இரானிய அரசு ஊடகம் வெளியிட்டது

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இரானில் உள்ள முழுமையடையாத அராக் கனநீர் உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய காட்சிகளை இரானிய அரசு ஊடகம் வெளியிட்டது

அணுசக்தி செறிவூட்டல் செயல்முறை, அடிப்படையில் யுரேனியம்-235 அளவை அதிகரிப்பதைக் குறிக்கிறது. யுரேனியத்தை அதன் வாயு வடிவத்தில் எடுத்து மைய விலக்குகள் (centrifuges) எனப்படும் இயந்திரங்களில் சுழற்றுவதன் மூலம் இந்தச் செயல்முறை நடைபெறுவதாக விளக்கினார் பேராசிரியர் ரீகன்.

மேலும் யுரேனியம்-238, தேவையான யுரேனியம்-235ஐ விட கனமாக இருப்பதால், அவை சுழலும்போது இரண்டும் பிரிந்து விடுகின்றன. செறிவூட்டலை அதிகரிக்க இந்தச் செயல்முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது.

ஆற்றலை வெளியிடும் கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு வினையை உருவாக்க அணுமின் நிலையங்களுக்குப் பொதுவாக இந்தச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தில் சுமார் 3-5% தேவைப்படுகிறது. ஆனால் அணு ஆயுதம் தயாரிப்பதே நோக்கமாக இருக்கும்போது, யுரேனியம்-235 சுமார் 90% தேவைப்படும்.

அடிப்படையில், யுரேனியம் எவ்வளவு செறிவூட்டப்படுகிறதோ, அந்த அணுக்கள் அனைத்தும் பிளவுபடும்போது ஆற்றல் வெடிப்பும் அதிகமாக இருக்கும்.

இரானின் யுரேனியம் சுமார் 60% செறிவூட்டப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது. அதாவது, அணு ஆயுதம் தயாரிக்கப் போதுமான அளவு செறிவூட்டும் பாதையில் அது முன்னேறிக் கொண்டிருக்கிறது.

ஆனால், முறையாகச் சேமித்து வைக்கப்பட்ட, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மீது ராக்கெட்டை ஏவுவது, ஃபுகுஷிமா அல்லது செர்னோபில் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட பேரழிவுகளைப் போன்ற "அணுசக்தி விபத்தை" ஏற்படுத்தாது.

"அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம், செறிவூட்டப்படாத யுரேனியத்தைவிட மூன்று மடங்கு அதிக கதிரியக்கத் தன்மை கொண்டது. ஆனால், மொத்த அளவில் பார்த்தால், இரண்டுமே அடர்த்தியான கதிரியக்கத் தன்மை கொண்டவை அல்ல. இதனால் பெரியளவில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் அபாயமில்லை," என்று செர்னோபில் பேரழிவின் பின்விளைவுகளை ஆய்வு செய்த போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜிம் ஸ்மித் விளக்குகிறார்.

"யுரேனியம், ஓர் அணு உலை அல்லது வெடிகுண்டில் பயன்படுத்தப்படும்போது பிளவுபடும். இதனால் கதிரியக்க சீசியம், ஸ்ட்ரோன்டியம், அயோடின் போன்ற பிளவுப் பொருட்கள் உருவாகின்றன. இந்தப் பொருட்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் முக்கியக் காரணிகள். அதனால், இவற்றைப் பற்றியே நாங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளோம்," என்கிறார் அவர்.

ஆனால் செறிவூட்டல் தளங்களில் அணுசக்தி எதிர்வினை எதுவும் நடைபெறுவதில்லை. அதனால் ஒரு வெடிகுண்டு வெடித்தாலும் அது எந்த எதிர்வினையையும் தூண்டாது. எனவே, அந்த ஆபத்தான கதிரியக்க "பிளவுப் பொருட்கள்" இருக்காது என்று அவர் கூறுகிறார். ஆனால், வெடிப்பு ஏற்படும்போது, யுரேனியம் அந்த இடத்திற்குள் பரவிச் சிதறக்கூடும்.

அருகில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமா?

இரான் - இஸ்ரேல் மோதல், அணுசக்தி மையங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் டெஹ்ரானில் இருந்து வெளியேறி வருகின்றனர்

நடான்ஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்த பிறகு, ஐ.ஏ.இ.ஏ அந்த இடத்தில் கதிரியக்க மாசுபாட்டைக் கண்டுபிடித்தது. ஆனால் வெளியே உள்ள கதிரியக்கத்தின் அளவுகள் மாறாமல் சாதாரண மட்டங்களில் இருப்பதாக ஐ.ஏ.இ.ஏ குறிப்பிட்டது.

"யுரேனியத்தின் கதிர்வீச்சு உண்மையில் அதிக தூரம் பயணிக்காது" என்கிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் கனிமவியல் மற்றும் கதிரியக்க கழிவு மேலாண்மைத் துறையின் தலைவர் பேராசிரியர் கிளேர் கார்க்ஹில்.

ஆனால் அந்த நிலையத்திற்கு அருகில் இருப்பவர்களுக்கு, உடல்நல அபாயங்கள் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். "மனித உடலுக்கு ஏற்படும் நச்சுத்தன்மையைப் பொறுத்தவரை, நீங்கள் நிச்சயமாக யுரேனியம் துகள்களைச் சுவாசிப்பதோ, உட்கொள்வதோ நல்லதல்ல," என்று அவர் கூறினார்.

"ஏனென்றால் யுரேனியம் துகள்கள் நுரையீரல் அல்லது வயிற்றுக்குள் உள்ள செல்களில் தங்கி, மெதுவாக, கதிரியக்கத்தால் சிதைத்து, சேதத்தை ஏற்படுத்தும்."

கதிரியக்கத் தன்மையுடன் ஏற்படும் ரசாயன வெளிப்பாடும் அருகில் யார் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்கலாம்.

"ஏதேனும் விபத்து ஏற்பட்டு, மையவிலக்குகளில் (centrifuges) அடக்கப்பட்டிருந்த யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைட் (uranium hexafluoride) வாயு வெளியேறினால், அது மிக மோசமான ஒரு ரசாயன விபத்தாக மாறும்," என பாங்கூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அணுப் பொருள் வல்லுநரான பேராசிரியர் சைமன் மிடில்பர்க் தெரிவித்தார்.

"இந்த யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைட் காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் தொடர்புகொண்டால், அது மிகவும் அரிக்கும் தன்மையுடையதாகவும், ஆபத்தானதாகவும் மாறும். ஏனெனில் இது மிக வலிமையான ஓர் அமிலத்தை உருவாக்கக்கூடும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

"ஆனால் அது அந்த உள்ளூர் பகுதிக்கு அப்பால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை."

தங்கள் அவசர மையம் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாகவும், இரானின் அணுசக்தி நிலையங்களின் நிலையும், அதன் தளங்களில் உள்ள கதிர்வீச்சு அளவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyg44glj3xo

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

இப்போது மேற்கத்தைய ஊடகங்களில் ஈரானும் ரஷ்யாவும் மட்டுமே உலக அமைதியை கெடுத்துக்கொண்டிருக்கின்றன என்றொரு பிரமாண்டத்தை உருவாக்கிக்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இந்த மேற்குலகு தாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என திரும்பியும் பார்ப்பதில்லை.முன்னோக்கியும் பார்ப்பதில்லை.

இந்த‌ கூ முட்டைக‌ளுக்கு

ர‌ஸ்சியாவும் ஈரானும் தான் ச‌ரியான‌ ம‌ருந்து

அமெரிக்கா த‌லையிடா விட்டால் உக்கிரேன் போர் எப்ப‌வோ நின்று இருக்கும்

அமெரிக்க‌ன்ட‌ க‌ள்ள‌க் குழ‌ந்தை இஸ்ரேலும் அட‌ங்கி இருப்பாங்க‌ள்....................இஸ்ரேலால் த‌னிய‌ நின்று ஈரானை வெல்ல‌ முடியாது

எரியிர‌ வீட்டுக்கு எண்னைய‌ ஊத்துவ‌து போல் இஸ்ரேல் நீ இற‌ங்கி அடி நாங்க‌ள் ப‌க்க‌ ப‌ல‌மாய் இருக்கிறோம் ஆயுத‌ங்க‌ளை த‌ருகிறோம்.....................இந்த‌ பையித்திய‌ங்க‌ளிட்டை உல‌க‌ ம‌க்க‌ள் ப‌டும் பாடு பெரும் பாடாக‌ இருக்கு............................

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

இஸ்ரேல் அணு ஆயுதத்தை வைத்துள்ளது. ஏன் அவர்களுக்கு பொருளாதார தடை இல்லை?

முதலாவது காரணம், இஸ்ரேல் 1960 ம் ஆண்டுகளிலேயே, மற்றைய ஐந்து அணு ஆயுத நாடுகள் போன்று, அணு ஆயுதங்களை தயாரித்துவிட்டது. அன்று எவரும் எவர் மேலும் தடை விதிக்கும் நிலை உலகில் இருக்கவில்லை.

இரண்டாவது காரணம், அமெரிக்கா - பிரான்ஸ் - இங்கிலாந்து - இஸ்ரேல் என்றும் ஒரே அணியிலேயே இருக்கின்றார்கள். இதில் பிரான்ஸ் மட்டுமே அவ்வப்போது இஸ்ரேலின் கொடுமைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு நாடு. இவர்கள் இஸ்ரேலுக்கு எந்தப் பொருளாதார தடைகளையும் அறிவிக்கமாட்டார்கள் ஏனெனில் நட்பு நாடுகள். ஆனால் ரஷ்யாவும், சீனாவும் கூட்டாக இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தடைகளை அறிவிக்கலாம். இவர்கள் இருவரும் தடைகளை அறிவித்தாலும் எதுவும் ஆகப் போவதில்லை.

அணு ஆயுதம் வரை, பொருளாதார தடை வரை , ஒரு நாளுக்கு 50 ஆக கொன்றால் ஒரு இனத்தை அழிக்கலாம் என்ற குரூரம் யாரிடம் உள்ளது? ஒரு உதாரணம்????

வேறு இனமோ அல்லது வேறுபாடுகள் கொண்ட மனிதர்களை கொன்று அழிக்கலாம் என்ற கொடூரம் காலம் காலமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதர்களிடம் இருக்கின்றது. ஹிட்லரும், அவரது படையினரும் யூதர்களை இலட்சக் கணக்கில் கொன்று அழித்தார்களே. ஒரு நாளைக்கு 50 அல்ல, ஐம்பதினாயிரம் யூதர்களை ஹிட்லர் கொன்றார். பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட பெரும் பஞ்சத்தால் இந்தியாவில் தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் செத்து விழுந்தார்களே. ருவாண்டாவில் ஒரு இனம் இன்னொரு இனத்தை தினமும் கொன்று அழித்தார்களே. அமெரிக்கப் பழங்குடிகள், ஆஸ்திரேலியப் பழங்குடிகள் என்று கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டார்களே. இப்படி ஆயிரம் நிகழ்வுகள் பூமியில் சில ஆயிரம் வருடங்களாக நடந்து கொண்டேயிருக்கின்றது.

அணு ஆயுதம் இன்றைய உச்ச ஆயுதமாக இருக்கின்றது. நச்சு வாயு ஒரு காலத்தில் இருந்தது. தீக்குண்டம் ஒரு காலத்தில் உச்ச ஆயுதமாக இருந்திருக்கும். கழுமரம் கூட ஒரு காலத்தில் இருந்திருக்கும்.

தனது நலம் எப்படி முழு அரபு உலகமும் வேடிக்கை பார்க்கும் போது பலஸ்தீனத்துக்கு மட்டும் உதவ முயல்கிறது. அதுவும் பலஸ்தீனியர்கள் வேறு முஸ்லீம்களாக உள்ள போது??

பலஸ்தீனத்தில் ஹமாஸிற்கு உதவியது போலவே சிரியாவில் அசாத்துக்கு உதவி செய்தது, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு உதவி செய்தது. ஈராக்கில் ஒரு புரட்சிப்படையை உருவாக்கி உதவி செய்தது, ஹூத்தீஸ் அமைப்பிற்கு உதவி செய்வது என்று பலவற்றை ஈரான் செய்து கொண்டிருக்கின்றது. இது பொதுவான மனிதநலமா அல்லது தன்னலமா என்ற கேள்வி இங்கு எப்படி வருகின்றது?

சி ஐ ஏ ,மொசாட் செய்த கொலைகளை காட்டிலுமா???

சிஐஏ, மொசாட் செய்த கொலைகளை விடவா இலங்கை அரசு செய்து விட்டது என்றும் இலங்கை அரசு சார்பான ஒருவர் கேட்கக்கூடும். அதற்கும், உங்களின் கேள்விக்கும் பதில் ஒன்றே.

  • கருத்துக்கள உறவுகள்

இது பல பரிமாணங்கள் உள்ள பிரச்சனை.

ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கு நெருக்கி விட்டது என்பது திசைதிருப்பும் பொய்.

உண்மையில் நோக்கம், இரான் அரசாங்க அமைப்பை மாற்றுவது,

ஆகப் பிந்தியதும், முந்தியதும், இந்தோ பசிபிக், அதை ஒத்த நவீன பட்டுப் பாதையும். (இதை வேறு திரியில் படம் போடு காட்டினால் கூட பூகோள ராஜதந்திரம் என்னவென்று கேட்பவர்களும் இங்கே இருக்கிறர்கள், மற்றவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று கொக்கு மண்ணுக்குள் தலையை புதைத்த கதையாக)

கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முதல் தான் சீனாவில் இருந்து கசக்ஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஊடக, நேரடியாக ஈரானுக்கு சரக்கு புகையிரத பாதை அமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது உள்ளது.

(அமெரிக்கா / மேற்குக்கு சீன பொருளாதர தளத்தில் மட்டும் வைத்து, வவன்முறை பலத்தையும் சேர்த்து அடித்தது போல அடி. us ஆல் தாங்க முடியாமல் இருக்கிறது, ஏனெனில் கடல் வழியால் தடுத்தால் தரைவழி இப்பொது உள்ளது. மற்றும் பொருளாதார தடை என்று அமெரிக்கா வாலாட்ட முடியாது)

எனவே, இப்பொது இரான் அணு ஆயுதம் என்ற போர்வை எடுக்கப்பட்டு இருக்கிறது, ஈரானில் உள்ள அரசாங்கத்தை அகற்றுவதற்கு.

(டிரம்ப் சும்மா வாய்ச்சவடாலுக்கு சொன்னதே, அவரின் தேசிய புலனாய்வு director சொன்னன இரான் அணுஆயுதத்தை தயாரிப்பதற்கு 3 வருடங்களுக்கு மேல் தேவை என்றதை தான் கேட்கவில்லை என்று. எந்த அதிபராவது அப்படி இருந்தாலும் சொல்லமாட்டார், Trump இன் வாயால் விளாசும் போக்கால் வெளிவந்து உள்ளது. ஆகவே, ஈரான் அணு ஆயுதம் என்ற பிரச்சனை மட்டும் இப்போதைய தாக்குதல் முனைப்பில் மூல காரணம் அல்ல)

இதன் மறுவளம், அமெரிக்காவின், இஸ்ரேல் இன் அந்த இடத்தில உள்ள ஈரான் அந்த பிராந்திய விடயங்களில் தங்களை மீறக்கூடாத நிலையில் ஈரான் இருக்க வேண்டும் என்ற கொள்கையின் விளைவு.

அதுக்குதான் இஸ்ரயேலிடம் மாத்திரம் அணுஆயுதம், அமெரிக்காவின் கொள்கை இஸ்ரேல் ஏ எப்போதும் இராணுவ / பல மேலாண்மை கொண்டு இருக்க வேண்டும் என்பது (இதை QME என்று அமெரிக்கா சொல்கிறது, இஸ்ரேல் qualitative military edge எப்போதும் கொண்டு இருக்க வேண்டும் என்று)

அத்துடன் இஸ்ரேல் இன் zionist சிந்தனையும் - அந்த பிராந்தியத்தில் தாம் சொல்வதே நடக்க வேண்டும், மற்ற நாடுகள், இனமாக அரபுகள், persians கதைக்க, எதிர்க்க கூடாது என்ற கொள்கை.

(அமெரிக்காவின் பொம்மையான ஷாவின் ஆட்சியில் கூட, ஈரானுக்கு அணு சக்தியை வெளியில் இருந்து, US ஏ சகல கட்டுமானக்கனலை வழங்கும், எரிபொருளை வழங்கும், மற்றும் பாவிக்கப்பட்ட அணு எரிபொருளின் பக்க விளைவன புளுடோனியம் கூட ஈரானில் இருந்து அகற்றப்படும் என்பது.

ஷா கூட அதை ஏற்கவில்லை. )

ஆகவே, ஈரான் அணு துறையை வைத்து இருக்க கூடாது என்று அமெரிக்கா / மேற்கு, இஸ்ரேல் நாண்டு பிடிப்பது ஈரானில் உள்ள அரசாங்களால் அல்ல (இங்குள்ள சிலரின் விளக்கப்படி ஈரானில் இப்பொது ஆட்சியில் இருக்கும் முல்லாக்களால் அல்ல)

US, மேற்கின் நடத்தையால், முதலில் செய்த JCPOA ஐ அமெரிக்கா குழப்ப, eu உம் அதாய் எதிர்க்காமல் வேறு பக்கம் பார்வையை திருப்பி கொண்டு நின்றது, இறுதியாக கூட விபரங்கள் பற்றிய பேச்சுவார்த்தைக்கு 2 நாள் இருக்கும் போது இரானின் கவ்வனத்தை திருப்பும் சந்தர்ப்பமாக பாவித்து தாக்குதல் நடத்தியது, அதை முற்றாக அமெரிக்கா அறிந்து ஆமோதித்து என்பது போண்றவைகளும், எந்தவொரு ஒப்பந்தமும், treaty என்றால் கூட சாத்தியம் இல்லாத நிலைக்கு வந்துள்ளது.

தாக்குதலை பொறுத்தவரை, இஸ்ரேல், us, மேற்கு முதலில் தந்திரோபாய அடிப்படையில் இரானை கணிசமாக நிலைகுலைய வைத்து இருந்தாலும்,

24 மணிநேரத்துக்குள் இரான் சுதாகரித்து மீண்டதை இவர்கள் எதிர்பார்க்கவில்லை. காரணம், ஈரனின் அரச, அரசாங்க, படை அமைப்பை மேற்கு, us க்கு இப்போதும் குழப்பமாகவே இருக்கிறது. (மறுவளமாக, அமெரிக்கா வேறு நாடடு படைகளுக்கு உதவி, பயிற்றசை கொடுப்பது, அந்தா படைகளில் பரவி, விரவி அறிவத மூலம் உத்தியோகப்பற்றற்ற செல்வாக்கை உருவாக்குவதுக்கு. ஈரானில், எந்த ஒரு குறித்த வெளிச்சக்தி உதவி இன்றி அதன் படை பலத்தை காட்டி எழுப்பி வைத்து இருக்கிறது, புலிகளை போல, இது அமெரிக்காவுக்கு மூலையில் இருந்து குதி வரை குத்திக் கொண்டு இருக்கிறது)

கேந்திர அடிப்படையில் அமெரிக்கா, இஸ்ரேல், மேற்கு இதில் மாட்டுப்பட்டு உள்ளது.

(இதன் அடிப்படை காரணம் சீன, ரஷ்யா என்ற சகதியில் மறுவளத்தில் போட்டியாக இருப்பதால்)

மாட்டுப்பட்டதன் ஒரு காரணம் பகுதியாக டிரம்ப் இன் வாயால்.

சீனா, ருசியா வெளியில் சொல்வதை வைத்து எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாது. (அவை US ஐ மாட்டிவிட்டு, பின் இரானுக்கு என்ன உதவி செய்யலாம் என்பதை பற்றியே சிந்திக்கும் சந்தர்ப்பம் கூட)

(

சீனாவை பற்றி இவிடயங்களில் அறிவதற்கு, முன்பும் இங்கு சொல்லி இருக்கிறேன்.சீன அரசியல், ராஜதந்திர, இராணுவ சிந்தனையாளர் Sun Zi (ஆங்கிலத்தில் Sun Tzu , காலம் கி.மு 600 - 400) எழுதிய The Art of War என்பதை வாசித்து அறியலாம். (இணையத்தில் பல இடங்களில் இருக்கிறது)

)

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

இஸ்ரேல் அணு ஆயுதத்தை வைத்துள்ளது. ஏன் அவர்களுக்கு பொருளாதார தடை இல்லை?

முதலாவது காரணம், இஸ்ரேல் 1960 ம் ஆண்டுகளிலேயே, மற்றைய ஐந்து அணு ஆயுத நாடுகள் போன்று, அணு ஆயுதங்களை தயாரித்துவிட்டது. அன்று எவரும் எவர் மேலும் தடை விதிக்கும் நிலை உலகில் இருக்கவில்லை.

இரண்டாவது காரணம், அமெரிக்கா - பிரான்ஸ் - இங்கிலாந்து - இஸ்ரேல் என்றும் ஒரே அணியிலேயே இருக்கின்றார்கள். இதில் பிரான்ஸ் மட்டுமே அவ்வப்போது இஸ்ரேலின் கொடுமைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு நாடு. இவர்கள் இஸ்ரேலுக்கு எந்தப் பொருளாதார தடைகளையும் அறிவிக்கமாட்டார்கள் ஏனெனில் நட்பு நாடுகள். ஆனால் ரஷ்யாவும், சீனாவும் கூட்டாக இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தடைகளை அறிவிக்கலாம். இவர்கள் இருவரும் தடைகளை அறிவித்தாலும் எதுவும் ஆகப் போவதில்லை.

அணு ஆயுதம் வரை, பொருளாதார தடை வரை , ஒரு நாளுக்கு 50 ஆக கொன்றால் ஒரு இனத்தை அழிக்கலாம் என்ற குரூரம் யாரிடம் உள்ளது? ஒரு உதாரணம்????

வேறு இனமோ அல்லது வேறுபாடுகள் கொண்ட மனிதர்களை கொன்று அழிக்கலாம் என்ற கொடூரம் காலம் காலமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதர்களிடம் இருக்கின்றது. ஹிட்லரும், அவரது படையினரும் யூதர்களை இலட்சக் கணக்கில் கொன்று அழித்தார்களே. ஒரு நாளைக்கு 50 அல்ல, ஐம்பதினாயிரம் யூதர்களை ஹிட்லர் கொன்றார். பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட பெரும் பஞ்சத்தால் இந்தியாவில் தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் செத்து விழுந்தார்களே. ருவாண்டாவில் ஒரு இனம் இன்னொரு இனத்தை தினமும் கொன்று அழித்தார்களே. அமெரிக்கப் பழங்குடிகள், ஆஸ்திரேலியப் பழங்குடிகள் என்று கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டார்களே. இப்படி ஆயிரம் நிகழ்வுகள் பூமியில் சில ஆயிரம் வருடங்களாக நடந்து கொண்டேயிருக்கின்றது.

அணு ஆயுதம் இன்றைய உச்ச ஆயுதமாக இருக்கின்றது. நச்சு வாயு ஒரு காலத்தில் இருந்தது. தீக்குண்டம் ஒரு காலத்தில் உச்ச ஆயுதமாக இருந்திருக்கும். கழுமரம் கூட ஒரு காலத்தில் இருந்திருக்கும்.

தனது நலம் எப்படி முழு அரபு உலகமும் வேடிக்கை பார்க்கும் போது பலஸ்தீனத்துக்கு மட்டும் உதவ முயல்கிறது. அதுவும் பலஸ்தீனியர்கள் வேறு முஸ்லீம்களாக உள்ள போது??

பலஸ்தீனத்தில் ஹமாஸிற்கு உதவியது போலவே சிரியாவில் அசாத்துக்கு உதவி செய்தது, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு உதவி செய்தது. ஈராக்கில் ஒரு புரட்சிப்படையை உருவாக்கி உதவி செய்தது, ஹூத்தீஸ் அமைப்பிற்கு உதவி செய்வது என்று பலவற்றை ஈரான் செய்து கொண்டிருக்கின்றது. இது பொதுவான மனிதநலமா அல்லது தன்னலமா என்ற கேள்வி இங்கு எப்படி வருகின்றது?

சி ஐ ஏ ,மொசாட் செய்த கொலைகளை காட்டிலுமா???

சிஐஏ, மொசாட் செய்த கொலைகளை விடவா இலங்கை அரசு செய்து விட்டது என்றும் இலங்கை அரசு சார்பான ஒருவர் கேட்கக்கூடும். அதற்கும், உங்களின் கேள்விக்கும் பதில் ஒன்றே.

உல‌கில் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னைக்கு யார் கார‌ன‌மாய் இருப்பார்க‌ள் என்று ஆய்வை ப‌டித்தால் அது அமெரிக்காவில் போய் நிக்குது😛.....................

நீங்க‌ள் ஈரானின் சிறு வ‌கை ஆயுத‌க் குழுக்க‌ளை ப‌ற்றி எழுதுறீங்க‌ள் , உல‌க‌ அள‌வில் அமெரிக்க‌ன் எத்த‌னை தீவிர‌வாத‌ குழுக்க‌ளை உருவாக்கின‌வ‌ர்க‌ள்............................... ஒரு கோடி யூத‌ர்க‌ளுக்காக‌ அமெரிக்கா ஏன் இப்ப‌டி ப‌த‌ருது.........................ஹ‌மாஸ் சிறு தாக்குத‌ல் செய்த‌ போது கூட‌ இதோ அனுப்புகிறேன் என‌து க‌ப்ப‌லை என‌ இஸ்ரேல் ப‌க்க‌ம் அனுப்பி வைச்ச‌வை........................

பிரிடிஷ் கார‌னின் ராஜ்ஜிய‌ம் எப்ப‌டி அட‌க்க‌ப் ப‌ட்ட‌தோ அதே போல் அமெரிக்காவின் கொட்ட‌த்தை இன்னொரு நாட்ட‌வ‌ன் அட‌க்குவான்......................அமெரிக்காவுக்கு இந்த‌ உல‌கை யாரும் ப‌ட்டாவா எழுதி கொடுக்க‌ல‌ உன‌து க‌ட்டு பாட்டின் கீழ் தான் உல‌க‌ம் இருக்க‌னும் என‌..................................அமெரிக்க‌னை விட‌ சீன‌ன் வ‌ள‌ந்து விட்டான் இந்த‌ நூற்றாண்டில் சீன‌ன் ம‌றைமுக‌மாக‌வோ அல்ல‌து நேர‌டியாக‌வோ யார் கூட‌வும் ச‌ண்டைக்கு போன‌து கிடையாது......................தைவானை த‌ங்க‌ளுட‌ன் இணைக்க‌ப் போகிறோம் என‌ அறிக்கை விட்ட‌வை , ர‌ம்ப் க‌ன‌டாவை அமெரிக்கா கூட‌ இணைக்க‌னும் , ஹிரின்லாந்தை அமெரிக்கா கூட‌ இணைக்க‌னும் , ப‌ன‌மா நாட்டை அமெரிக்கா கூட‌ இணைக்க‌னும்....................இப்ப‌டி ப‌ல‌ வீர‌ வ‌ச‌ன‌ம் , ஆனால் சீனா தைவானை த‌ங்க‌ளுட‌ன் இணைக்க‌ போகிறோம் என்று சொன்னால் அது அமெரிக்காவுக்கு பிடிக்காது.........................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

பையன் சார், அமெரிக்கா அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் நினைப்பதில் புதிதாக எதுவும் இல்லை. பலரும் இப்படியே தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் போல. சாதாரண வேலிச் சண்டையிலேயே பக்கத்து வீட்டுக்காரர்களை பாம்பு கடிக்க வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் நாங்கள். இவ்வளவு செய்யும் அமெரிக்காவை விட்டு விடுவோமா என்ன.

அமெரிக்கா போக இன்னொருவர் அந்த இடத்திற்கு வரப் போகின்றார் என்றால், அந்த மாற்றம் நடக்காமலேயே இருக்கலாம். எந்த தனி வல்லரசுமே தர்மம் அற்றது, சுயநலம் மிக்கது. வேற்றுமையில் ஒற்றுமை தேடுவோம் என்ற அடிப்படை சீனாவிடமோ அல்லது ரஷ்யாவிடமோ கிடையாது, அதனாலேயே நாங்கள் அங்கே குடியேறுவது கிடையாது. மேற்கு நாடுகளில் சிலரிடமாவது இந்த இயல்புகள் உண்டு. அதனாலேயே நாங்கள் மேற்கு நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கின்றோம்.

சைனா தனிப்பெரும் வல்லரசாவதும், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக வந்ததும் ஒரே மாதிரியான நிகழ்வுகள். அவலை நினைத்து உரலை இடிப்பது போல...................

அமெரிக்கா எடுத்த‌துக்கை எல்லாம் மூக்கை நுழைக்குதே குரு........................

சீனாவின் நோக்க‌ம் பொருளாதார‌த்தை க‌ட்டி எழுப்புவ‌து , அமெரிக்காவின் நோக்க‌ம் அடுத்த‌வ‌ன் நாட்டில் குழ‌ப்ப‌த்தை உண்டு ப‌ண்ணி குளிர் காய்வ‌து...........................

நான் உங்க‌ளுக்கு முன்பும் ஒரு முறை சொல்லி இருக்கிறேன் அமெரிக்க‌ன் விளையாட்டை நேசிக்கும் அள‌வுக்கு அமெரிக்கா அர‌சிய‌லை முற்றிலுமாய் வெறுக்கிறேன் என‌ அதுக்கு பல‌ கார‌ன‌ங்க‌ள் இருக்கு

ஆமை புகுந்த‌ வீடும் அமெரிக்கா புகுந்த‌ நாடும் இந்த‌ உல‌கில் முன்னேறி இருக்கா😛.........................

ஈரான் என்ர‌ நாட்டை அமெரிக்கா என்ர‌ ந‌ச்சு பாம்பு எவ‌ள‌வு கால‌த்துக்கு வ‌ஞ்சிக்குது..........................அந்த‌ நாட்டின் மீது பொருளாதார‌ த‌டை அதோட‌ அவ‌ர்க‌ள் அந்த‌ குண்டை செய்ய‌க் கூடாது இந்த‌க் குண்டை செய்ய‌க் கூடாது என்று சொல்ல‌ அமெரிக்காவுக்கு யார் அந்த‌ உரிமையை கொடுத்த‌து

இவ‌ர்க‌ள் ம‌ட்டும் உல‌கை அழிக்கும் குண்டுக‌ள் போர் விமான‌ங்க‌ளை செய்து ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு விற்று காசு பாப்பின‌ம்...........................த‌ன‌து நாட்டின் இறையான்மைய‌ பாதுகாக்க‌ ஈரான் அணுகுண்டு செய்வ‌து இவ‌ர்க‌ளுக்கு உருத்துது..............................ஈரான் துணிவோட‌ அமெரிக்காவை தூக்கி எறிந்து விட்டின‌ம் , இனி எல்லாம் நீ சொல்வ‌தை கேட்க்க‌ முடியாது என்று.........................20வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ உல‌க‌ம் வேறு இப்ப‌ இருக்கும் உல‌க‌ம் வேறு.........................ஒரு வ‌ல்ல‌ர‌சு நாடு என்றால் எப்ப‌வும் ந‌டு நிலையா செய‌ல் ப‌ட‌னும் , த‌ன‌க்கு வேண்ட‌ ப‌ட்ட‌வ‌னுக்கு ம‌ட்டும் பின்னால் போய் க‌ழுவி விடுவ‌து தான் அமெரிக்காவின் செய‌ல் , ஒரு கோடி யூத‌ர்க‌ளுக்காக‌ எத்த‌னை கோடி ம‌க்க‌ளின் வெறுப்புக்கு இப்போது அமெரிக்கா ஆளகி இருக்கு.........................ஈரான் மீது அமெரிக்கா கைவைத்தால் ஈரானின் ந‌ட்பு நாடுக‌ள் வேடிக்கை பார்ப்பின‌மா.....................ஈரானின் ந‌ட்பு நாடுக‌ளிட‌மும் அதிக‌ ச‌க்தி வாய்ந்த‌ குண்டுக‌ள் இருக்கு அதை அவ‌ர்க‌ளும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ தொட‌ங்கினால் உல‌கில் அமைதி இருக்குமா.............................

ஹாசாவில் அத்த‌னை ம‌ருத்துவ‌ம‌னைய‌ த‌க‌ற்க்க‌ ஆயுத‌ம் கொடுத்த‌ நாடு அமெரிக்கா , புது வ‌கை ஆயுத‌ங்க‌ளை ஹாசா ம‌க்க‌ள் மீது போட்டு ஆராச்சி ப‌ண்ணின‌வை அந்த‌ குண்டுக‌ள் எப்ப‌டி வெடிக்குது எப்ப‌டி க‌ட்டிட‌ம் இடிந்து விழுகுது என்று பார்க்க‌........................யாராவ‌து புற்றுநோய் ம‌ருத்துவ‌ம‌னையை தாக்குவார்க‌ளா...................மன‌ ந‌ல‌ம் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் அப்ப‌டி செய்வாங்க‌ள் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ந‌ங்கு பொருந்தும்😡.............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.