Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்: 3 அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீச்சு - நேரலை விவரம்

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம்,US AIR FORCE

படக்குறிப்பு, பி-2 குண்டுவீச்சு விமானம்

22 ஜூன் 2025, 01:11 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இரானை உடனடியாக சமாதானத்திற்கு வருமாறும், இல்லாவிட்டால் அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல் பற்றி இரான் கூறுவது என்ன?

'ஓர் அற்புதமான இராணுவ வெற்றி'

இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தினார்.

"இந்த பயங்கரமான அழிவுகரமான தளங்களை அவர்கள் கட்டியெழுப்பும் போது எல்லோரும் பல ஆண்டுகளாக அந்தப் பெயர்களைக் கேட்டனர். இன்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றி என்று நான் உலகிற்கு தெரிவிக்க முடியும். இரானின் முக்கிய அணு செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன" என்று டிரம்ப் தெரிவித்தார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

இரானுக்கு டிரம்ப் மிரட்டல்

இரான் இப்போது சமாதானம் முன்வராவிட்டால், எதிர்காலத்தில் அமெரிக்காவின் தாக்குதல்கள் மிக அதிகமாக இருக்கும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

"அமைதி விரைவில் ஏற்படும் அல்லது கடந்த எட்டு நாட்களில் நாம் கண்டதை விட இரானுக்கு மிகப் பெரிய சோகம் ஏற்படும்" என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

"நினைவில் கொள்ளுங்கள், இன்னும் நிறைய இலக்குகள் உள்ளன. இன்றிரவு அவற்றில் மிகவும் கடினமானதாகவும், மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. ஆனால் அமைதி விரைவில் வரவில்லை என்றால், நாங்கள் துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் மற்ற இலக்குகளை நோக்கிச் செல்வோம்," என்று அவர் கூறினார்.

"இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு குழுவாக செயல்பட்டன"

இரானின் முன்னாள் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக டிரம்ப் கூறுகிறார்.

"இது நடக்க விடமாட்டேன், இது தொடராது என்று நான் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தேன்" என்று குறிப்பிட்ட அவர்,

"இஸ்ரேலுக்கு எதிரான இந்த பயங்கரமான அச்சுறுத்தலை" அழிக்க இஸ்ரேலுடன் ஒரு "குழுவாக" பணியாற்றியதாகக் கூறி, பெஞ்சமின் நெதன்யாகுவை வாழ்த்தினார்.

டிரம்ப் உரை சுமார் நான்கு நிமிடங்கள் நீடித்தது.

இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்

முன்னதாக, "ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதான எங்களது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம். அனைத்து விமானங்களும் இப்போது இரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன," என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் குறிப்பிட்டிருந்தார்.

அனைத்து விமானங்களும் அமெரிக்காவிற்குத் திரும்பி வந்தன என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.

இரான் மீதான அமெரிக்க தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக, அமெரிக்காவின் பி-2 ரக ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்க தீவுப் பகுதியான குவாமுக்கு முன்பே மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊகத்தை அதிகப்படுத்தியிருந்தது.

'ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது'

"ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது" என்ற ஒரு புலனாய்வு பயனரின் பதிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுபதிவு செய்துள்ளார்.

"இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம்" என்று அவர் தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.

"இரான் இப்போது இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அமெரிக்காவுடன்முழு ஒருங்கிணைப்பு - இஸ்ரேல்

இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் அமெரிக்காவுடன் "முழு ஒருங்கிணைப்பில்" இருந்தது என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் இஸ்ரேலிய பொது ஊடகமான கானிடம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம்,GOOGLE EARTH

ஃபோர்டோ - ரகசிய இரானிய அணுசக்தி தளம்

தலைநகரம் டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 60 மைல் (96 கிமீ) தொலைவில் ஒரு மலைப் பகுதியில் ஃபோர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் தளம் அமைந்துள்ளது.

நிலத்தடி வசதி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மைய விலக்கு இயந்திரங்களையும், சிறிய சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் கொண்டிருந்த 2 முக்கிய சுரங்கப்பாதைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

இந்த தளத்தை தாக்குமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஏற்கனவே முறையிட்டது. ஏனெனில், நிலத்தடியில் இருந்த அந்த அணுசக்தி தளத்தை தகர்க்கும் திறன் கொண்ட பங்கர் பஸ்டர் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.

இரான் பதில்

அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு இலக்கான அணுசக்தி தளங்களை தாங்கள் ஏற்கனவே காலி செய்துவிட்டதாக இரானிய அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

இரானின் அரசு ஊடகத்தின் துணை அரசியல் இயக்குநர் ஹசன் அபேதினி அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். இரான் இந்த மூன்று அணுசக்தி தளங்களையும் முன்னதாகவே காலி செய்துவிட்டதாக அவர் கூறினார்.

டிரம்ப் சொல்வது உண்மையாக இருந்தாலும் கூட, இரான் அந்த அணுசக்தி தளங்களில் இருந்த பொருட்களை ஏற்கனவே பாதுகாப்பாக வெளியே எடுத்துவிட்டதால், இந்த தாக்குதலால் பெரிய பின்னடைவு எதையும் சந்திக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதலை உறுதிப்படுத்திய இரான்

இரானில் இருந்த பாதுகாப்பான அணுசக்தி தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை இரான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

கோம் மாகாண நெருக்கடி மேலாண்மைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் மோர்டெசா ஹெய்தாரி, "ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு இலக்கானது" என்று கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், நடான்ஸ், இஸ்பஹான் அணுசக்தி தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இரான் கூறியுள்ளது.

இஸ்பஹானின் பாதுகாப்பு துணை ஆளுநர் அக்பர் சலேஹி, "நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் பல வெடிப்புகள் கேட்டன, இஸ்பஹான் மற்றும் நடான்ஸின் அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் தாக்குதல்களைக் கண்டோம்" என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், டிரம்ப் குறிப்பிட்ட 3 அணுசக்தி தளங்களும் தாக்குதலுக்கு இலக்கானது இரானிய அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

இரானிடம் முன்னறிவித்த அமெரிக்கா

தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே அதுகுறித்து இரானிடம் அமெரிக்கா தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமையன்று இரானை "ராஜதந்திர ரீதியாக" தொடர்பு கொண்டு தாக்குதல் நடத்த மட்டுமே செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், "ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகள் திட்டமிடப்படவில்லை" என்றும் அமெரிக்கா கூறியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி கூறுகிறது.

இந்த வார தொடக்கத்தில், இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியைக் கொல்லும் நெதன்யாகுவின் திட்டத்தை டிரம்ப் நிராகரித்துவிட்டதாக பல அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn0q81z52xzo

  • கருத்துக்கள உறவுகள்

செய்யிறது முழுக்க ஊத்தைவாளி வேலை.

அதுக்குள்ளை, டிரம்புக்கு.... நோபல் பரிசு வேணுமாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தடியில் 200 அடி ஆழம் ஊடுருவி தாக்கும் 13,600 கிலோ வெடிகுண்டு - எவ்வாறு செயல்படும்?

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் வெடிகுண்டு, ஃபோர்டோ அணுசக்தி தளம்

பட மூலாதாரம்,US AIR FORCE

படக்குறிப்பு,US B-2 ஸ்பிரிட் மட்டுமே GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) வெடிகுண்டை ஏவும் வகையில் கட்டமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ

  • பதவி, பிபிசி உலக சேவை

  • 18 ஜூன் 2025

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரானின் பாதுகாப்பான அணுசக்தி தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை இரான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

கோம் மாகாண நெருக்கடி மேலாண்மைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் மோர்டெசா ஹெய்தாரி, "ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு இலக்கானது" என்று கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரான் தலைநகர் டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 60 மைல் (96 கிமீ) தொலைவில் ஒரு மலைப் பகுதியில் ஃபோர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் தளம் அமைந்துள்ளது.

நிலத்தடி வசதி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மைய விலக்கு இயந்திரங்களையும், சிறிய சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் கொண்டிருந்த 2 முக்கிய சுரங்கப்பாதைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

இந்த தளத்தை தாக்குமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஏற்கனவே முறையிட்டது. ஏனெனில், நிலத்தடியில் இருந்த அந்த அணுசக்தி தளத்தை தகர்க்கும் திறன் கொண்ட பங்கர் பஸ்டர் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.

பி-2 ரக அதிநவீன ஸ்டெல்த் ரக குண்டுவீச்சு விமானம் மூலம் அமெரிக்கா இந்த குண்டுகளை ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் மீது வீசியதாக கருதப்படுகிறது.

GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத "பங்கர் பஸ்டர்" ("bunker buster") வெடிகுண்டு அமெரிக்காவிற்கு மட்டுமே உள்ளது.

துல்லியமாக வழிகாட்டப்படும், 30,000 பவுண்ட் (13,600 கிலோ) எடையுள்ள இந்த வெடிகுண்டு, ஒரு மலைக்குள் ஆழமாக புதைக்கப்பட்டுள்ள இரானின் ஃபோர்டோ அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் வளாகத்தை ஊடுருவிச் சென்று தகர்க்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.

GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் ஆயுதம் என்ன செய்யும்? அதன் சவால்கள் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்த முடியும்?

அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, GBU-57A/B என்பது, "ஆழமாக புதைக்கப்பட்ட மற்றும் உறுதியாக கட்டப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய ஊடுருவக்கூடிய ஆயுதம்" என அறியப்படுகின்றது.

இந்த வெடிகுண்டு சுமார் ஆறு மீட்டர் நீளமுடையது. இது வெடிக்கும் முன் சுமார் 200 அடி (61 மீட்டர்) ஆழத்தில் நிலத்தின் உள்ளே ஊடுருவக்கூடியது என நம்பப்படுகிறது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டால், ஒவ்வொரு வெடிப்பும், நிலத்தை ஆழமாக துளையிட்டு, இலக்கைச் சேதப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது.

போயிங்கால் தயாரிக்கப்பட்ட எம்ஓபி (MOP), தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன் முறையாகும். இது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் மிஸைல் ரேஞ்ச் (White Sands Missile Range) என்ற ராணுவ சோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

"அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என அழைக்கப்படும் 21,600 பவுண்ட் (9,800 கிலோ) எடையுள்ள Massive Ordnance Air Blast (MOAB) வெடிகுண்டை விட இது அதிக சக்தி வாய்ந்தது. இந்த MOAB, 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் போருக்காகப் பயன்படுத்தப்பட்டது.

"MOAB போலவே பெரிய அளவிலான ஆயுதங்களை உருவாக்க முயற்சித்த அமெரிக்க விமானப்படை, வெடிபொருளை மிகவும் வலிமையான உலோகப் பெட்டிக்குள் வைத்திருக்கும் வகையில் வடிவமைத்தது. அதன் விளைவாக உருவானது தான் GBU-57A/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்" என்று கூறுகிறார் பிரிட்டனின் ப்ராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலுள்ள அமைதிக் கல்வித் துறையின் பேராசிரியரான பால் ரோஜர்ஸ்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் வெடிகுண்டு, ஃபோர்டோ அணுசக்தி தளம்

படக்குறிப்பு,பதுங்கு குழியை தகர்க்கும் குண்டு

தற்போது , எம்ஓபி வெடிகுண்டை ஏவுவதற்காக கட்டமைக்கப்பட்டும், நிரலாக்கம் செய்யப்பட்டும் இருப்பது அமெரிக்காவின் B-2 ஸ்பிரிட் என்ற ஸ்டெல்த் பாம்பர் மட்டும் தான்.

B-2 என அழைக்கப்படும் இந்த போர் விமானம், நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் தயாரித்தது. அமெரிக்க விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாக இந்த விமானம் கருதப்படுகின்றது.

இந்த விமானத்தின் உற்பத்தியாளரான நார்த்ரோப் க்ரம்மனின் கூற்றுப்படி, B-2 விமானம் 40,000 பவுண்டு (18,000 கிலோ) வரை சுமக்கக்கூடியது. ஆனால், இரண்டு GBU-57A/B "பங்கர் பஸ்டர்" வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் B-2 விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மொத்த எடை சுமார் 60,000 பவுண்டு (27,200 கிலோ).

குண்டுவீச்சுக்குப் பயன்படும் இந்த நீண்ட தூர கனரக விமானம், எரிபொருள் நிரப்பாமல் சுமார் 7,000 மைல்கள் (11,000 கிமீ) வரை பறக்கக்கூடியது. பறக்கும் நிலையில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், அதன் வரம்பு 11,500 மைல்கள் (18,500 கிமீ) ஆக அதிகரிக்கிறது. இதன் மூலம், உலகின் எந்தப் பகுதியையும் சில மணி நேரங்களில் இந்த விமானத்தால் அடைய முடியும் என நார்த்ரோப் க்ரம்மன் கூறுகிறது.

இரான் போன்ற நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நாட்டிற்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டால், B-2 குண்டுவீச்சு விமானங்களுடன் கூடுதல் விமானங்களும் அதில் பங்கேற்க நேரிடும். எடுத்துக்காட்டாக, எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக F-22 ஸ்டெல்த் விமானங்கள் பயன்படுத்தப்படலாம். அதன் பிறகு, சேதத்தை மதிப்பீடு செய்யவும், அதற்குப் பிறகும் தாக்குதல்களைத் தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் டிரோன்கள் பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார்.

இந்த எம்ஓபி வெடிகுண்டுகள் அமெரிக்காவிடம் மிகக் குறைந்த அளவே இருப்பதாக அவர் மதிப்பிடுகிறார்.

"அவர்கள் சுமார் 10 அல்லது 20 எம்ஓபி வெடிகுண்டுகளை வைத்திருக்கக்கூடும்" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் வெடிகுண்டு, ஃபோர்டோ அணுசக்தி தளம்

பட மூலாதாரம்,WHITEMAN AIR FORCE BASE

படக்குறிப்பு,எம்ஓபி வெடிப்பதற்கு முன் மேற்பரப்பில் இருந்து சுமார் 200 அடி (61 மீட்டர்) வரை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது.

பாதுகாப்பான தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ

ஃபோர்டோ என்பது இரானின் இரண்டாவது அணுசக்தி செறிவூட்டல் நிலையமாகும். நடான்ஸுக்கு பிறகு இதுவும் ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது.

டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே சுமார் 60 மைல் (95 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள கோம் நகருக்கு அருகில், ஒரு மலையின் ஓரத்தில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்திற்கான கட்டுமானம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர், 2009ஆம் ஆண்டு இந்த நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையம் அங்கு செயல்படுவதை, இரான் அதே ஆண்டில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது.

80 மீட்டர் (260 அடி) ஆழத்தில் பாறை மற்றும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பதுடன், இரான் மற்றும் ரஷ்ய தயாரிப்புகளான தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகளால், ஃபோர்டோ வளாகம் பாதுகாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA), அந்த தளத்தில் ஆயுத தரத்திற்கு அருகிலுள்ள 83.7% தூய்மையுடைய யுரேனியம் துகள்களைக் கண்டறிந்தது.

இரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழிப்பதே, இரான் மீது தாக்குதல் நடத்துவதன் நோக்கம் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார். அதனை, "இஸ்ரேலின் இருப்புக்கே (existential) ஓர் அச்சுறுத்தல்" எனவும் அவர் விவரித்தார்.

எப்போதுமே தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியானது என்றும் அணு ஆயுதத்தை உருவாக்க அவர்கள் எப்போதும் முயற்சி செய்யவில்லை என்றும் இரான் கூறி வருகிறது.

ஆனால் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் 35 நாடுகளைக் கொண்ட நிர்வாக குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக இரான் தனது அணுசக்திப் பரவல் தடைகளை மீறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

'கேம் சேஞ்சர்'

"ஃபோர்டோ தளம் செயல்பாட்டில் இருக்கும் வரை, இரான் அணு ஆயுதம் தொடர்பான அபாயத்தை ஏற்படுத்தும் நிலைமையில் தான் இருக்கிறது. டெஹ்ரானுக்கு, அந்த தளத்தில் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ வாய்ப்பு இருக்கிறது" என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் அணுசக்தி பரவல் தடுப்பு கொள்கைக்கான இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறுகிறார்.

எம்ஓபி பயன்படுத்தப்பட்டாலும், இரானின் அணு ஆயுதத் தளங்கள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன, எவ்வளவு பாதுகாப்பாக உள்ளன என்பது தெரியாததால், இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cew0lwxwx02o

  • கருத்துக்கள உறவுகள்

509601727_1168569321952591_5228965243955

அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது. - ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் தாக்குதல் - நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை

22 JUN, 2025 | 10:45 AM

image

ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்கா தாக்குதலை கண்டித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் இந்த தாக்குதலால் நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

இன்றுகாலை நிகழ்வுகள் மூர்க்கத்தனமானவை மேலும் அவை நித்திய விளைவுகளை ஏற்படுத்தும் என தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அபாஸ் அரக்சி ஈரானிற்கு அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்த தயார் என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா ஈரானின் அமைதியான அணுஉலைகளை தாக்கியதன் மூலம் ஐநா சாசனம் சர்வதேச சட்டம் மற்றும் அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தம் என்பவற்றை கடுமையாக மீறியுள்ளது என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/218111

  • கருத்துக்கள உறவுகள்

அணுசக்தி உலைகளை தாக்கியதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த இடத்தில் எந்த சேதமோ அழிவுகளோ ஏன் அணு வெளியேறியதற்கான அறிகுறிகளோ இல்லை???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்க தாக்குதலிற்கு முன்னர் ஈரான் அகற்றிவிட்டது - ரொய்ட்டர்

22 JUN, 2025 | 01:59 PM

image

அமெரிக்காவின் தாக்குதலிற்கு முன்னர் ஈரான் தனது போர்டோ அணுஉலையிலிருந்து மிகவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றிவிட்டது என ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் இரகசிய இடமொன்றிற்கு மாற்றிவிட்டது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

போர்டோ அணுஉலையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

நேற்று எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் போர்டோ அணுஉலைக்கு அருகில் நீண்டவரிசையில் டிரக்குகள் காணப்படுவதை காண்பித்துள்ளன.

https://www.virakesari.lk/article/218135

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Iran Nuclear Site மீது US நேரடி தாக்குதல்; உச்சகட்ட பதற்றத்தில் Middle East - என்ன நடக்கிறது?

இரான் இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பமாக இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இரான் சமாதானத்தை நாட வேண்டும் என்றும் பதில் தாக்குதல் தொடுத்தால் தங்களின் பதிலடி தற்போது நடத்தப்பட்ட தாக்குதலை விட மிக வலிமையானதாக இருக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். மறுபுறம், தங்களின் இறையாண்மையை தற்காத்துக்கொள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என இரான் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

#Iran #America #DonaldTrump

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

510481804_1168866625256194_7474488204435

511572928_1168866675256189_5090894198587

511996251_1168866668589523_1695068501324

512666604_1168865905256266_6901260766381

509776906_1168866635256193_6073985783873

510242829_1168866075256249_6631909324521

509992125_1168865851922938_2716192305201

நேற்றிரவு ஈரானை தாக்கிய B-2 விமானம் பற்றி உலகமே பேசுகின்றது, முழுமையாக தெரிந்துகொள்வோம்!

அமெரிக்காவின் மிக நவீன மற்றும் மிக ரகசியமான போர் விமானங்களில் ஒன்றான B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் நார்த்ரப் கிரம்மன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த விமானம் 1989 ஜூலை 17-ல் முதல் முறையாக பறந்தது. குளிர் போர் காலத்தில் சோவியத் யூனியனின் ரேடார் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி செல்லும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம், அதன் முக்கோண வடிவமும் சிறப்பு பூச்சுகளும் காரணமாக ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத தன்மையைக் கொண்டுள்ளது.

B-2 ஸ்பிரிட் விமானத்தின் தொழில்நுட்ப விவரங்கள் அசாதாரணமானவை. இது 40,000 அடி உயரத்தில் மணிக்கு 1,010 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும். விமானத்தின் நீளம் 21 மீட்டர், அகலம் 52 மீட்டர், உயரம் 5.18 மீட்டர் ஆகும். இதன் எடை 1,52,000 கிலோகிராம் வரை இருக்கும். மிக முக்கியமாக, இந்த விமானம் 18,000 கிலோகிராம் வரை குண்டுகளை சுமக்கும் திறன் கொண்டது. இது மறு எரிபொருள் நிரப்பாமல் 11,100 கிலோமீட்டர் தூரம் பறக்க முடியும்.

B-2 விமானத்தின் சிறப்பம்சம் அது சுமக்கும் அழிவுகரமான ஆயுதங்கள். ஈரானின் அணு தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் மிகப்பெரிய பங்கர் பஸ்டர் குண்டுகளை இதனால் சுமக்க முடியும். இந்த குண்டுகள் 30,000 பவுண்ட் (13,600 கிலோகிராம்) எடையுள்ளவை மற்றும் 200 அடி ஆழம் வரை நிலத்தின் அடியில் உள்ள பங்கர்களை அழிக்கும் திறன் கொண்டவை (ஒவ்வொரு குண்டும் 2 மில்லியன் டொலர்கள்). மேலும் B83 அணுகுண்டுகள், JDAM குண்டுகள், மற்றும் பல்வேறு வகையான துல்லியமான தாக்குதல் ஆயுதங்களையும் இதனால் சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

B-2 விமானத்தின் இயக்க செலவு மிக அதிகம். ஒரு மணி நேர பறப்பிற்கு சுமார் $1,35,000 செலவாகிறது. இதில் எரிபொருள், பராமரிப்பு, மற்றும் பணியாளர் செலவுகள் அடங்கும். ஒரு தாக்குதலுக்கு சராசரியாக $2.2 மில்லியன் டொலர்கள் செலவாகும்.

B-2 விமானங்கள் பல முக்கிய போர்களில் இதற்கு முன்னரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொசோவோ போரில் 1999-ல் முதல் முறையாக போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் போரில் 2001-ல், ஈராக் போரில் 2003-ல், லிபியா தாக்குதலில் 2011-ல், மற்றும் சிரியாவில் ISIS-க்கு எதிரான தாக்குதல்களில் 2017-ல் சொற்ப அளவிலும் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

B-2 விமானம் ஒன்று இரண்டு பங்கர் பஸ்டர் குண்டுகளையே சுமந்து செல்ல முடியும், ஆறு குண்டுகள் ஈரான் மீது வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுவதால், இந்த தாக்குதலுக்கு 3 B-2 விமானங்கள் அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டுள்ளப்பட்டுள்ளதாக கருதலாம்.

மொத்தம் 21, B-2 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாக தகவல். ஆரம்பத்தில் 132 விமானங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அதிக செலவு காரணமாக உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விமானத்தின் விலை $2.1 பில்லியன் டொலர்கள் என்பது இதை உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானமாக ஆக்குகிறது.

அமெரிக்காவின் பலமாக பார்க்கப்படும் இந்த போர் விமானம், மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது, ரஷ்யாவிடம் T-60 விமானம் உள்ளது, இருப்பினும் அமெரிக்காவின் B-2 விமானமானது பலம்பொருந்தியதாக கருதப்படுகிறது. மேலும் சீனா H-20 என்கிற பலம்பொருந்திய ஸ்டீல் பம்பர் விமானத்தை தயாரித்து வருகிறது, இதன் கட்டமைப்பு 2030 அளவிலே முடிவடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனவே, உலகின் பலம்பொருந்திய போர் விமானமாக B-2 தற்போதுவரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஸ
©️Vaanam.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்; இந்தியா ஒரு நட்பு நாடாக இருக்கும் - பிரதமர் மோடி

Published By: VISHNU

22 JUN, 2025 | 08:42 PM

image

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (22) ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கோவுடன் தொலைபேசியில் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல்-ஈரானியப் போர் பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்தும், நிலைமை மோசமடைவதைத் தடுக்க உரையாடல் மற்றும் ராஜதந்திரம் தேவை என்றும் இந்த அழைப்பு விவாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர தனது எக்ஸ் தளத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

"ஈரான் ஜனாதிபதி பெசேகியுடன் பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். சமீபத்திய மோதல்களுக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தோம். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான முன்னோக்கி செல்லும் வழியாக, உடனடியாக பதற்றத்தைக் குறைத்தல், உரையாடல் மற்றும் ராஜதந்திரம் ஆகியவற்றுக்கான எங்கள் அழைப்பை மீண்டும் வலியுறுத்தினோம்."

45 நிமிட உரையாடலில், ஈரான் அதிபர் பெசேகி, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு நன்றி தெரிவித்ததோடு, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் இந்தியா ஒரு நட்பு நாடாகவும் நண்பனாகவும் இருப்பதாகக் கூறினார்.

https://www.virakesari.lk/article/218166

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரானை தாக்கி டிரம்ப் கையில் எடுத்த பேராபத்து என்ன?

இரான் - இஸ்ரேல் மோதல், அமெரிக்கா, டிரம்ப், இரான் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஆண்டனி ஜுர்சர்

  • பதவி, வட அமெரிக்க செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

"அமைதியை நிலைநாட்டுபவராக" இருப்பேன் என்ற வாக்குறுதியுடன் ஜனவரி மாதம் வெள்ளை மாளிக்கைக்கு திரும்பிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் - இஸ்ரேல் இடையே நடைபெறும் இடர்கள் மிகுந்த மோதலில் அமெரிக்காவை திணிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இந்த போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளது. இதன் முலம் பதவியேற்றது முதல் மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவருவதற்கு மாறாக, பெரிய போரின் விளிம்பில் இந்த பிராந்தியத்தை டிரம்ப் அழைத்து சென்றுள்ளார்.

அமெரிக்க படைகள் இரானில் உள்ள மூன்று அணு ஆயுத நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்த இரண்டு மணி நேரத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டிரம்ப், அந்த தாக்குதல் "அற்புதமான வெற்றியை," பெற்றதாக தெரிவித்தார்.

இந்த நகர்வு, இரான் ஒரு அணு ஆயுத சக்தியாக வளரக்கூடிய வாய்ப்பு இல்லாத ஒரு நீடித்த அமைதிக்கான கதவைத் திறக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உச்சபட்ச பாதுகாப்பு கொண்ட தனது ஃபொர்டோ அணு ஆயுத நிலையத்திற்குச் சிறிய சேதங்கள்தான் ஏற்பட்டதாக இரான் தெரிவித்துள்ளது. எந்த தரப்பு சொல்வது உண்மை என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடாவிட்டால், "மிகவும் மோசமான மற்றும் மிக எளிதான" தாக்குதல்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் என துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்பு செயலாளார் பீட் ஹெக்செத் ஆகியோர் புடைசூழ, டிரம்ப் இரானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இரான் - இஸ்ரேல் மோதல், அமெரிக்கா, டிரம்ப், இரான் தாக்குதல், ஐ.நா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மத்திய கிழக்கு ஏற்கனவே "விளிம்பில்" இருப்பதாக குறிப்பிட்டார் ஐநா பொதுச் செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ்

இன்னமும் "பல இலக்குகளில் எஞ்சியிருப்பதாக" கூறிய டிரம்ப், அமெரிக்கா அவற்றை "வேகம், துல்லியம் மற்றும் திறனுடன்," தாக்கும் எனக் கூறினார்.

டிரம்ப்பின் வீரவேசமாக பேச்சுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும். இரானில் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டால் அது அமெரிக்கா, அந்தப் பிராந்தியம் மற்றும் மொத்த உலகுக்குமே மிக மோசமான சூழ்நிலையாக அமையக்கூடும்.

மத்திய கிழக்கு ஏற்கனவே "விளிம்பில்" இருப்பதாக குறிப்பிட்ட ஐநா பொதுச் செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ், மோதலைத் தீவிரப்படுத்தும் அமெரிக்காவின் முடிவால் ஒரு சுழற்சியான குழப்பநிலை ஏற்படும் என எச்சரித்தார்.

அமெரிக்கா தாக்கினால் பதிலடி தரப்படும் என ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்தது போல் இரான் பதிலடி தந்தால் – அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தை அமெரிக்க தரப்பு உணரக்கூடும்.

காற்றில் பறந்த டிரம்ப்பின் இரண்டு வார எச்சரிக்கை

இரான் - இஸ்ரேல் மோதல், அமெரிக்கா, டிரம்ப், இரான் தாக்குதல், ஐ.நா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்ப்பின் வழக்கத்திற்கு மாறான முடிவு, தனது கட்சிக்குள் ஒற்றுமை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு முயற்சியாக இருக்கக்கூடும்

இரான் "நிபந்தனையின்றி சரணடையவேண்டும்" என இந்த வாரத்தில் டிரம்ப் பேசியது அவர் மேலும் பின்வாங்குவதைக் கடினமாக்கும் ஒரு நிலைக்கு அவரைத் தள்ளக்கூடும். இரானும் தன் பங்குக்கு விடுத்த எச்சரிக்கைகள் காரணமாக அதே போன்றதொரு மூலையில் சிக்கிக்கொண்டிருக்கிறது.

இப்படித்தான் போர்கள் தொடங்கி அதோடு தொடர்புடையவர்களின் கற்பனையையும், கட்டுப்பாட்டையும் மீறி பெரிதாகின்றன.

வியாழக்கிழமை, இரானியர்களுக்கு டிரம்ப் இரண்டு வாரம் அவகாசம் கொடுத்திருந்தார், ஆனால் அது எதிர்பார்த்ததைவிட மிகக் குறுகிய காலமாக- வெறும் இரண்டு நாட்களாக மாறிப் போனது. தான் நடவடிக்கை எடுத்துவிட்டதாக டிரம்ப் சனிக்கிழமை இரவு அறிவித்தார்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு "இரண்டு வாரம் அவகாசம்" என்பது வெறும் ஏமாற்றுதானா? இரானியர்களுக்குப் போலியான ஒரு பாதுகாப்பு உணர்வை கொடுக்கும் முயற்சியா? அல்லது அமைதி பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட ஸ்டீவ் விட்காஃப் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததா?

தாக்குதலுக்குப் பிந்தைய உடனடி தாக்கம் குறித்து அதிகம் தெரியவில்லை. ஆனால் தனது சமூக ஊடகப் பதிவு மற்றும் தனது தொலைக்காட்சி உரை மூலம் அமைதிக்கான கதவை திறக்க டிரம்ப் முயற்சி செய்தார்.

ஆனால் இது அதீத நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கலாம். இரானின் ராணுவ வலிமையைக் குறைக்க இஸ்ரேல் கணிசமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், ஆயதுல்லாவிடம் இன்னமும் ஆயுதங்கள் உள்ளன.

நிலைமை வேகமாக மோசமடையக் கூடும்.

இப்போது காத்திருப்பு தொடங்குகிறது. தனது அணு ஆயுத திட்ட மகுடத்தின் முத்தாக கருதப்படும் ஃபோர்டோ உட்பட மூன்று நிலைகள் மீதான தாக்குதல்களுக்கு இரான் எப்படி பதிலளிக்கப்போகிறது?

அமெரிக்க தாக்குதல்கள் பேச்சுவார்த்தையில் இரான் மேலும் இறங்கிவர வழிவகுக்கும் என டிரம்ப் நம்புவதாக தோன்றுகிறது.

ஆனால் இஸ்ரேலின் தாக்குதலில் இருக்கும் போது பேச்சுவார்த்தை நடத்த விரும்பாத ஒரு நாடு, அமெரிக்கா குண்டுமழை பொழியும் போது பேசுவதற்கு தயாராக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

அமெரிக்காவின் தாக்குதல் தனித்துவமான வெற்றி பெற்றதாக டிரம்ப் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. அப்படி இல்லாவிட்டால், மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான அழுத்தம் அதிகரிக்கும், மிகக் குறைந்த ராணுவ வெற்றிக்கு டிரம்ப் அதிக அரசியல் அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும்.

டிரம்ப் சந்திக்கும் அரசியல் எதிர்வினைகள் என்ன?

இரான் - இஸ்ரேல் மோதல், அமெரிக்கா, டிரம்ப், இரான் தாக்குதல், ஐ.நா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்ப் தனது நடவடிக்கையை எடுத்துவிட்டார். ஆனால் இது எங்கு இட்டுச் செல்லும் என்பது அவரது கட்டுப்பாட்டில் இல்லை.

உள்நாட்டு அரசியல் கவலைகளுடன் சர்வதேச பாதுகாப்பும் இந்த அபாயங்களில் அடங்கும்.

இரான் மீதான அமெரிக்க தாக்குதல் என்ற கருத்துக்கு ஜனநாயக கட்சியினர் மட்டுமல்லாது, டிரம்பின் "அமெரிக்கா முதலில் (America First)," இயக்கத்திற்குள்ளேயும் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

தனக்கு நெருக்கமான மூன்று ஆலோசகர்கள் உடன் தனது உரையை நிகழ்த்திய டிரம்ப்பின் வழக்கத்திற்கு மாறான முடிவு, தனது கட்சிக்குள் ஒற்றுமை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு முயற்சியாக இருக்கக்கூடும்.

குறிப்பாக வெளியுறவு கொள்கையில் அமெரிக்கா மேலும் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்கும் வான்ஸ், டிரம்ப் இன்னமும் பிற நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்யாதவர்தான் எனவும் அவரது ஆதரவாளாவர்கள் அவரை நம்ப வேண்டும் எனவும் அண்மையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்த தாக்குதல் ஒருமுறை நடவடிக்கையாக இருந்தால், தனது சொந்த முகாமில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சீர்படுத்த டிரம்பால் முடியலாம்.

ஆனால் இது அமெரிக்காவை இதைவிட பெரிய மோதல்களுக்குள் இழுத்தால், அதிபர் தனது சொந்த தளபதிகள் மத்தியில் கலகத்தை எதிர்கொள்ள நேரலாம்.

தனது முதல் பதவிக்காலத்தில் போர் எதையும் தொடங்கவில்லை என மார்தட்டிக்கொண்டவரும், கடந்த ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது வெளிநாட்டு யுத்தங்களில் அமெரிக்காவை ஈடுபடுத்திய முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பரப்புரை செய்தவருமான ஒரு அதிபருக்கு சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதல் ஒரு ஆக்ரோஷமான நடவடிக்கை.

டிரம்ப் தனது நடவடிக்கையை எடுத்துவிட்டார். ஆனால் இது எங்கு இட்டுச் செல்லும் என்பது அவரது கட்டுப்பாட்டில் இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyq8550v4eo

  • கருத்துக்கள உறவுகள்

509435310_10163605150583552_461184383277

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

509435310_10163605150583552_461184383277

இவ‌ர் தூங்க‌ போகும் போது ம‌கிழ்ச்சியுட‌ன் தூங்கி இருப்பார்

காலை எழுந்த‌தும் ஈரான் இஸ்ரேல் த‌லைந‌க‌ர‌த்தை தாக்கி அழித்த‌தை பார்த்து கிழ‌ட்டு கிறுக்க‌னுக்கு கோவ‌ம் வ‌ந்து இருக்கும்................இது ஆர‌ம்ப‌ம் இன்னும் நிறைய‌ இருக்கு

அமெரிக்கா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு இப்ப‌ தான் உண்மையான‌ எதிரி கூட‌ மோதின‌ம் , ஈரான் இவ‌ர்க‌ளுக்கு அழிவை ஏற்ப‌டுத்துவின‌ம்...........................

உல‌க‌ம் நின்ம‌தியா இருக்க‌னும் என்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த‌ உல‌கில் இருக்க‌ கூடாது....................இவ‌ர்க‌ளின் ராஜ்ஜிய‌த்தை முடித்து க‌ட்ட‌னும்............................

  • கருத்துக்கள உறவுகள்

avb2_6.jpg

இன்று அதிகாலை, அமெரிக்கா ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களை நேரடியாக தாக்கியது. இந்த தாக்குதலுக்காக B-2 வகை ஸ்டெல்த் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானங்கள் ரேடாரில் சிக்காமல் செயல்படுவதால், தாக்குதலை முன்கூட்டியே தடுப்பது சாத்தியமாகவில்லை. இருப்பினும், இது முற்றிலும் சாத்தியமற்றது அல்ல என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

B-2 விமானங்கள் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாடல்களாகும். தற்போது உருவாகி வரும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு முன்னால், இவை சவால்களை சந்திக்கக்கூடியவை. B-2 விமானத்தின் பிரதான சிறப்பு அம்சம் “ஸ்டெல்த்” (Stealth) தொழில்நுட்பம் ஆகும். இது, ரேடார் கதிர்களை உறிஞ்சி விமானத்தின் இருப்பை மறைக்கும் தன்மை கொண்டது. பொதுவாக, பூமியில் இருந்து அதிக அதிர்வெண்கள் கொண்ட கதிர்கள் வானத்தில் செலுத்தப்படுகின்றன. அவை எந்த பொருளும் இல்லையெனில் திரும்பி வராது. ஆனால், விமானம் போன்ற பொருட்கள் இருந்தால், கதிர்கள் அதில் பட்டு திரும்ப வரும், இதன் அடிப்படையில் விமானம் இருப்பதை கண்டறிய முடியும்.

B-2 விமானங்கள் இந்தக் கதிர்களை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, சாதாரண ரேடார்களில் இவை பிடிபடுவதில்லை. ஆனால், இந்த தொழில்நுட்பத்தை பராமரிக்க அதிக செலவுகள் தேவைப்படும். மேலும், B-2 ஒரு பழைய மாடல் என்பதால், புதிய குறைந்த அதிர்வெண் ரேடார் அமைப்புகள் மற்றும் அகச்சிவப்பு கண்காணிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இதை கண்டுபிடிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஸ்டெல்த் தொழில்நுட்பத்தின் இடையூறுகள்

விமானங்கள் தரையிறங்கும் அல்லது புறப்படும் போது, அதிக உயரத்தில் இருந்து குறைந்த உயரத்திற்கு நகரும். இந்த தருணங்களில் விமானம் ரேடாரில் சற்று புலப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், எரிபொருள் நிரப்பும், ஆயுதங்களை ஏற்றும் நேரங்களில் ஸ்டெல்த் திறன் குறையக்கூடும். இந்த நேரங்களில் B-2 விமானங்களை அடையாளம் காணும் சாத்தியம் அதிகமாகிறது.

B-2 விமானங்களின் வடிவமைப்பு, உயர் அதிர்வெண் ரேடார் அலைகளை சிதறடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்த அதிர்வெண் ரேடார் அலைகள் (long wavelength) விமானத்தின் முழுமையான வடிவத்துடன் பொருந்தி போகும். இதனால், அலைகள் முழுமையாக சிதறாமல், எதிரொலியை ஏற்படுத்தி விமானத்தை சற்று வெளிப்படுத்தக்கூடும். ரஷ்யாவின் Nebo-M போன்ற உயர் தொழில்நுட்ப ரேடார் அமைப்புகள் இதற்கான திறனை கொண்டிருக்கின்றன.

மேலும், பெரும்பாலான ரேடார் அமைப்புகள் ஒரு இடத்தில் இருந்து சிக்னலை அனுப்பி அதே இடத்தில் எதிரொலியை பெறுகின்றன. ஆனால் Multistatic Radar Systems பல இடங்களில் இருந்து சிக்னல் அனுப்பி, பல கோணங்களில் எதிரொலியைப் பெறும். இதனால், B-2 விமானம் ஒரு கோணத்தில் மறைந்திருந்தாலும், மற்ற கோணங்களில் ரேடாரில் சிக்க வாய்ப்பு உள்ளது.

ஈரானின் எதிர்கால சாத்தியக்கூறுகள்

தற்போதைக்கு, ஈரானிடம் இந்த உயர் தொழில்நுட்ப ரேடார் அமைப்புகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவுடன், விரைவில் ஈரான் இத்தகைய தொழில்நுட்பத்தைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இதனால் எதிர்காலத்தில், B-2 விமானங்களை எதிர்த்து பாதுகாப்பு அமைப்புகளை நிறுவும் சாத்தியமுள்ளது.

பழமையும் புதுமையும், Jakki Mohan.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-296.jpg?resize=750%2C375&ssl

அமெரிக்க தாக்குதலின் பின் ஈரானின் பதிலுக்காக உலகம் காத்திருக்கிறது!

1979 புரட்சிக்குப் பின்னர், இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான மிகப்பெரிய மேற்கத்திய இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேலுடன் இணைந்து, ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை (22) தாக்கியதை அடுத்து, உலகம் ஈரானின் பதிலடிக்கு தயாராக உள்ளது.

ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளத்திற்கு மேலே உள்ள மலையில் அமெரிக்கா 30,000 பவுண்டுகள் எடையுள்ள பதுங்கு குழி குண்டுகளை வீசிய ஒரு நாளுக்குப் பின்னர் ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ள சபதம் செய்தது.

அமெரிக்கத் தலைவர்கள் தெஹ்ரானை பின்வாங்குமாறு வலியுறுத்தினர்.

அதேநேரம், அமெரிக்க நகரங்களில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.

ஞாயிற்றுக்கிழமை சமூக தளத்தில் டொனால்ட் ட்ரம்ப் எழுதிய பதிவில், ஈரானில் ஆட்சி மாற்றம் குறித்த கருத்தை எழுப்பினார்.

“‘ஆட்சி மாற்றம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதல்ல, ஆனால் தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது??? என்று கேள்வி எழுப்பினார்.

ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்த பின்னர், தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை முடக்கும் நோக்கத்துடன் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த ட்ரம்ப் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவுக்கு அமைவாக நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஒரு பெரிய விரிவாக்கமாகவும், இஸ்ரேலுடன் மோதலில் முதல் நேரடி அமெரிக்க இராணுவ ஈடுபாடாகவும் வந்தன.

2213520985406c7.jpg?ssl=1

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமெரிக்கப் படைகள் ஈரானின் உள்ளே ஆழமாகத் தாக்கியதாகவும், இதனால் அந்நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு “பெரும் சேதம்” ஏற்பட்டதாகவும், இது ஒரு புல்ஸ்ஐ தாக்குதல் என்றும், ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்களை தாக்குதலில் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாகவும் டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று மீண்டும் வலியுறுத்தினார்.

ஈரானின் நிலத்தடி ஃபோர்டோ அணுமின் நிலையத்தின் மீதான அமெரிக்கத் தாக்குதலின் விளைவாக ஆழமாகப் புதைக்கப்பட்ட தளமும் அது வைத்திருந்த யுரேனியம் செறிவூட்டும் மையவிலக்குகளும் கடுமையாக சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டதாக வணிக செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டின.

எனினும், அந்த தளத்தின் நிலை உறுதிப்படுத்தப்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி நிறுவனம், அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பின்னர் தளத்திற்கு வெளியே கதிர்வீச்சு அளவுகளில் எந்த அதிகரிப்பும் ஏற்படவில்லை என்று கூறியது.

நிலத்தடியில் ஏற்பட்ட சேதத்தை இன்னும் மதிப்பிட முடியவில்லை என்று அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி CNN இடம் கூறியுள்ளார்.

ஃபோர்டோவில் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் பெரும்பகுதி தாக்குதலுக்கு முன்னர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக ஈரானிய மூத்த வட்டாரம் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளது.

GuD7r9_XAAAqACy?format=jpg&name=4096x409

GuD7zcKWwAAOUzg?format=jpg&name=4096x409

GuD924XWQAAgNQo?format=jpg&name=4096x409

அமெரிக்காவில் அச்சுறுத்தல் சூழல்

சைபர் தாக்குதல்கள் அல்லது இலக்கு வைக்கப்பட்ட வன்முறைக்கான சாத்தியக்கூறுகளைக் காரணம் காட்டி, அமெரிக்காவில் “அச்சுறுத்தல் சூழல் அதிகரித்துள்ளதாக” அந் நாட்டு பாதுகாப்புத் துறை எச்சரித்தது.

இதன் விளைவாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் சட்ட அமலாக்க அதிகாரிகள் மத, கலாச்சார மற்றும் இராஜதந்திர தளங்களை மையமாகக் கொண்டு ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளனர்.

பதிலடி கொடுக்கும் வரை இராஜதந்திரத்திற்கு திரும்ப முடியாது

அமெரிக்க தளங்களை குறிவைப்பதன் மூலமோ அல்லது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை முடக்க முயற்சிப்பதன் மூலமோ அமெரிக்காவிற்கு எதிரான பழிவாங்கும் அச்சுறுத்தல்களை தெஹ்ரான் இதுவரை பின்பற்றவில்லை.

எனினும் அது வெகு காலம் நீடிக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்தான்புல்லில் பேசிய ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தனது நாடு சாத்தியமான அனைத்து பதில்களையும் பரிசீலிக்கும் என்று கூறினார்.

அது பதிலடி கொடுக்கும் வரை இராஜதந்திரத்திற்கு திரும்ப முடியாது என்றும் அவர் கூறினார்.

ஹார்முஸ் நீரிணை தொடர்பான அச்சுறுத்தல்

மேற்கத்திய நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலாக ஈரானின் அச்சுறுத்தலாக பரவலாகக் கருதப்படும் ஒரு படியாக, அதன் நாடாளுமன்றம் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது.

உலகளாவிய எண்ணெய் கப்பல்களில் கிட்டத்தட்ட கால் பகுதி ஈரான் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த குறுகிய நீர்வழிகள் மூலமாக செல்கின்றன.

நீரிணையை மூடுவதன் மூலம் வளைகுடா எண்ணெய் வர்த்தகத்தை மூச்சுத் திணறடிக்க முயற்சிப்பது உலகளாவிய எண்ணெய் விலைகளை முன்னெப்போதும் இல்லாத அளவிக்கு உயர்த்தக் கூடும்.

இது உலகப் பொருளாதாரத்தை தடம் புரளச் செய்யலாம்.

மேலும், வளைகுடாவைத் திறந்து வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய ஐந்தாவது கடற்படையுடன் மோதலுக்கு வழிவகுக்கும்.

strait-of-hormuz.jpg?ssl=1

எண்ணெய் விலை உயர்வு

பிரெண்ட் மசகு எண்ணெய் மற்றும் அமெரிக்க மசகு எண்ணெய் விலைகள் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி மாதத்திலிருந்து மிக உயர்ந்த மட்டங்களுக்கு உயர்ந்தன.

பிரெண்ட் மசகு எண்ணெய் $3.20 அதிகரித்து $80.28 ஆகவும், அமெரிக்க மசகு எண்ணெய் $2.89 ஆகவும் $76.73 ஆகவும் உயர்ந்தன.

போர் நிறுத்தத்திற்கான அழைப்பு

ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு மத்திய கிழக்கில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முன்மொழிந்தன.

அமெரிக்க தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை கூடியமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1436650

  • கருத்துக்கள உறவுகள்

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு – எரிபொஷரட்களின் விலை உயர வாய்ப்பு!

adminJune 22, 2025

Harmoos.jpeg?fit=1170%2C658&ssl=1

ஈரான் – இஸ்ரேல் நாடுகள் ஒரு வாரத்திற்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க இராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெற்றோல், டீசல், விலைகளும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தி என்பது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய கடல்வழிப் பாதையாகும். இது உலக எரிசக்தி வர்த்தகத்தில் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தக் குறுகிய நீர்வழிப்பாதை சுமார் 21 மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இரண்டு 2 மைல் அகல கப்பல் வழித்தடங்களை கொண்டுள்ளது.

உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 26 சதவீத போக்குவரத்திற்கு இந்த வழித்தடத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இது உலகளவில் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றாக அமைகிறது. இந்த பாதையில் நடைபெறும் எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் சர்வதேச எரிசக்தி சந்தையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச எரிசக்தி அமைப்பு கூறியிருக்கிறது.

https://globaltamilnews.net/2025/217159/

  • கருத்துக்கள உறவுகள்

511192830_1140865468078424_3782897926289

508722429_1141131788051792_8233673080275

512584966_1140897328075238_4204466943260

509435582_1141131118051859_6022813056981

512528093_1141179598047011_1293004909348

510518232_1140543631443941_5880970134368

512655107_1140863034745334_7636729058494

510473943_1140547148110256_1010360521303

511063193_1141185344713103_3971484329716

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் பற்றி எரிகின்றதாம், உண்மையா

"Live"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் தாக்குதல் - வடகொரியா கடும் கண்டனம்

23 JUN, 2025 | 11:05 AM

image

ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை வடகொரியா கண்டித்துள்ளது.

ஈரானின் பாதுகாப்பு நலன்கள் மிக மோசமாக மீறப்பட்டது என தெரிவித்துள்ள  வடகொரியா ஈரானின் ஆள்புல உரிமைகளும் மீறப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேற்குலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட இஸ்ரேலின் இடைவிடாத போர் நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய விரிவாக்கத்தினால் உருவான மத்திய கிழக்கின் பதட்டங்களிற்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே குற்றவாளிகள் என வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன்களை வன்முறையாக நசுக்கிய அமெரிக்காவின் தாக்குதலை வடகொரியா கடுமையாக கண்டிக்கின்றது என  அந்த நாட்டின் வெளிவிவகார பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிராக நியாயமான சர்வதேச சமூகம் குரல் எழுப்பவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/218190

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவின் ஆதரவை கோரி ஈரானின் ஆன்மீக தலைவர் கடிதம் - புட்டினிடம் வழங்குவார் வெளிவிவகார அமைச்சர்

23 JUN, 2025 | 04:33 PM

image

ரஸ்யாவின் ஆதரவை கோரி ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கமேனி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

1979ம் ஆண்டு புரட்சிக்கு பின்னர் அமெரிக்கா ஈரானிற்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையிலேயே கமேனி இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி புட்டினின் ஆதரவை கோரும் இந்த கடிதத்தை புட்டினிடம் வழங்கவுள்ளார் என விடயமறிந்த நபர்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர்.

ரஸ்யா இதுவரை வழங்கிய ஆதரவு குறித்து ஈரான் திருப்தியடையவில்லை என ஈரான் வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் ரஸ்யா மேலும் ஆதரவை வழங்கவேண்டும் என ஈரான் எதிர்பார்க்கின்றது.

எனினும் ஈரான் எவ்வாறான உதவியை எதிர்பார்க்கின்றது என ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை.

புட்டின் ஈரானிய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளதை உறுதி செய்துள்ள ரஸ்ய அதிகாரிகள்  இருவரும் எதுகுறித்து பேசுவார்கள் என்பதை தெரிவிக்கவில்லை.

https://www.virakesari.lk/article/218229

  • கருத்துக்கள உறவுகள்

506116246_4047267015603789_2122794204287

ஈரானுக்கு ஆதரவாக கொழும்பு தூதரகம் சென்ற இலங்கையின் புத்த, கத்தோலிக்க சமயத் தலைவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழு பி-2 குண்டு வீச்சு விமானங்கள் - 18 மணிநேர பயணம் - நடுவானில் எரிபொருள் நிரப்புதல் - கவனத்தை திசை திருப்பிய போலி விமானங்கள் - அமெரிக்கா ஈரானின் அணுஉலைகளை தாக்கியது எப்படி?

Published By: RAJEEBAN

23 JUN, 2025 | 12:53 PM

image

bbc

இருவழிப் பயணம் 18 மணி நேரப் பயணம் பல முறை நடுவானில் எரிபொருள் நிரப்புதல் தொடர்ச்சியான ஏமாற்று வேலைகள் - ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் பணி இப்படித்தான் முடிந்தது என்று அமெரிக்க இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரியும் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவருமான நான்கு நட்சத்திர ஜெனரல் டான் கெய்ன் தெரிவித்தார்.

அமெரிக்கா 'ஒபரேஷன் மிட்நைட் ஹம்மர்' என்று அழைப்பதன் முழு தாக்கமும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் தாக்குதல்களுக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை பென்டகன் மாநாட்டில் சிக்கலான பணி எவ்வாறு வெளிப்பட்டது என்பதற்கான காலவரிசை வெளியானது

அமெரிக்க குண்டுவீச்சுக்காரர்கள் "உலகத்திற்கு தெரியாமல் உள்ளே சென்று(ஈரான்) அங்கிருந்து வெளியேறினர் என " என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் செய்தியாளர்களிடம் கூறினார்.

நள்ளிரவுக்குப் பிறகு செயலாளர் ஹெக்ஸெ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் துணை ஜனாதிபதி  ஜே.டி. வான்ஸ் இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பென்டகன்  அதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையில் உள்ள சூழ்நிலை அவதானிப்பு அறையில் மிசோரியின் கிராமப்புறத்தில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்து ஒரு விமானக் குழு புறப்படுவதைப் பார்த்தபோது இது அனைத்தும் தொடங்கியது.

trump_2.jpg

இருளின் மறைவின் கீழ் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் வைட்மேன் விமானப்படை தளத்திலிருந்து  காலை 00:01 மணிக்கு (05:01 BST காலை 05:01 மணிக்கு) புறப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

b_2_bombers.jpg

அவர்களின் இறுதி இலக்கு: ஈரானின் மிகவும் பாதுகாப்பான அணுசக்தி தளங்கள்.

ஒலியின் வேகத்திற்கு சற்றுக் குறைவாக பயணிக்கும் சப்சோனிக் ஜெட் விமானங்கள் 18 மீ (60 அடி) ஆழத்திற்கு மேல்கொங்கிறீட்டை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்ட சக்திவாய்ந்த "பதுங்கு குழியை அழிக்கும்" குண்டுகளுடன் அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்தன.

இது ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி செறிவூட்டல் நிலையத்தைத் தாக்கத் தேவையான ஆயுதமாகும். இது ஒரு மலையின் அடியில் நிலத்தடியில் புதைந்து கிடக்கிறது மற்றும் நாட்டின் அணுசக்தி திட்டத்தின் மையமாகக் கருதப்படுகிறது. உலகில் இந்த வகை ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே.

ஆனால் உலகம் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவின் குவாம் தீவுப் பகுதிக்கு குண்டுவீச்சு விமானங்கள் அனுப்பப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து அனைவரின் பார்வையும் மேற்கு நோக்கி பசிபிக் பெருங்கடலை நோக்கி இருந்தது.

"ஈரான் மீதான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இணைவது குறித்த விவாதங்களுடன் இந்த நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படவில்லை என்றாலும் இந்த தொடர்பை சிலர் சந்தேகிப்பார்கள்" என்று பிபிசி அப்போது எழுதியது.

பசிபிக் பெருங்கடலுக்கு மேலே மேற்கு நோக்கி பறந்த விமானங்கள் "மிகக் குறைந்த எண்ணிக்கையிலான திட்டமிடுபவர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ஏமாற்று முயற்சி" என்று ஜெனரல் கெய்ன் கூறினார்.

"ஒவ்வொன்றும் இரண்டு குழு உறுப்பினர்களைக் கொண்ட ஏழு பி-2  ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்களைக் கொண்ட முக்கிய தாக்குதல் விமானங்கள் குறைந்தபட்ச தகவல்தொடர்புகளுடன் கிழக்கு நோக்கி அமைதியாகச் சென்றது" என்று அவர்கூறினார்.

அந்த இராணுவ விமானங்கள் விமான கண்காணிப்பு வலைத்தளங்களில் தோன்றவில்லை, இதனால் பென்டகனின் நிகழ்வுகள் குறித்த விளக்கத்தை பிபிசி சுயாதீனமாக சரிபார்க்க கடினமாக உள்ளது.

மேலும் ஒரே இரவில் தளங்களில் ஏற்பட்ட சேதத்தின் அளவைக் காட்ட செயற்கைக்கோள் படங்கள் உதவக்கூடும் என்றாலும் அவை எப்போது தாக்கப்பட்டன என்பதை அவர்களால் சரியான நேரங்களை நமக்குச் சொல்ல முடியாது.

இந்த விமானங்கள் மத்திய கிழக்கை அடைந்தபோது 17:00 EDT (22:00 BST) அளவில் எதிரிபடையினர் மற்றும் தரையிலிருந்து வான் ஏவுகணைகளில் இருந்து குண்டுவீச்சு விமானங்களைப் பாதுகாக்க உதவிய துணை விமானங்களும் அதனுடன் இணைந்தன. ஜெனரல் கெய்ன் இதை "சிக்கலான இறுக்கமான நேர சூழ்ச்சி" என்று கூறினார்.

ஆனால் ஈரானிய போர் விமானங்கள் புறப்படவில்லை, ஈரானின் வான்பாதுகாப்பு ஆயுதங்கள் ஒரு தாக்குதலை கூட மேற்கொள்ளவில்லை என  அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

"ஈரானிய வான்வெளியில் இஸ்ரேலிய ஆதிக்கம் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் தண்டனையின்றி செயல்படுவதற்கான உந்துதலைத் தூண்டியது" என்று வாஷிங்டன் டிசியில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் ஏவுகணை பாதுகாப்பு நிபுணர் பேட்ரிக்ஜா பாசில்சிக் பிபிசி வெரிஃபைக்கு தெரிவித்தார்.

அடுத்த ஒரு மணி நேரமும் நாற்பது நிமிடங்களும் ஜெனரல் கெய்ன் பொதுமக்களிற்கு இதுவரை தெரியாத விபரங்களை வெளியிட்டார்.

சில நிகழ்வுகளுக்கான விளக்கக் குறிப்பு சில நிகழ்வுகளுக்கான நேரங்களை வழங்கியிருந்தாலும் குண்டுவீச்சு விமானங்களின் பயணத்தைக் காட்டும் வரைபடம் ஒரு குறிப்பிட்ட விமானப் பாதை அல்ல மேலும் வழங்கப்பட்ட இரண்டு பதிப்புகளில் சற்று வேறுபட்டது.

b-2.jpg

ஈரானின் அணுசக்தி ஆட்சியை அமெரிக்கா "அழித்துவிட்டதாக" கூறி அடுத்தடுத்த நிகழ்வுகளை முழுமையான வெற்றியாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் சேதத்தின் உண்மையான அளவு மற்றும் அதன் பின்விளைவுகள் இன்னும் அளவிடப்படவில்லை.

b-21.jpg

தாக்குதல்களை ஈரான் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் சேதத்தின் அளவைக் குறைத்துள்ளது மற்றும் நிகழ்வுகளின் வரிசை குறித்த குறிப்பிட்ட கணக்கை வழங்கவில்லை.

சுமார் 17:00 EDT (22:00 BST) மணிக்கு அரேபிய கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள் வசிக்கும் இஸ்பஹானுக்கு அருகிலுள்ள அணுசக்தி தளத்தை நோக்கி 25க்கும் மேற்பட்ட டொம்ஹவுக் தரைவழி தாக்குதல் கப்பல் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

b-22.jpg

அங்குள்ள அணுசக்தி நிலையம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் உள்நாட்டில் இருந்தாலும்  விமானங்கள் இரகசியமாக தங்கள் "பதுங்கு குழி" குண்டுகளை மற்ற இரண்டு அணுசக்தி தளங்கள் மீது வீசிய அதே நேரத்தில் கப்பல் ஏவுகணைகள் தாக்கும் அளவுக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் நெருக்கமாக இருந்தன என்று புதிய அமெரிக்க பாதுகாப்பு மையத்தின் பாதுகாப்பு நிபுணர் டாக்டர் ஸ்டேசி பெட்டிஜான் கூறினார்.

இதன் பொருள் அமெரிக்கா "பல தளங்கள் மீது ஒருங்கிணைந்த திடீர் தாக்குதலை" மேற்கொண்டது என்பதே என என்று அவர் பிபிசி வெரிஃபைக்கு தெரிவித்தார்.

அதேவேளை குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்தன, அங்கு ஈரானை குழப்பும் பல தந்திரோபாயங்களை அமெரிக்கா முன்னெடுத்தது என பென்டகன் தெரிவித்துள்ளது.

பின்னர் வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பமாகின.

ஈரானில் அதிகாலை 02:00 மணிக்குப் பிறகு சுமார் 18:40  விமானங்களின் தலைமை விமானம் போர்டோவில் உள்ள அணுஉலையின் இரண்டு குண்டுகளை வீசியது.- வீசியது.( GBU-57 Massive Ordnance Penetrator weapons -)

bunker.jpg

ஒரு உண்மையான போர் நடவடிக்கையில் "பதுங்கு குழித் தாக்குதல்" குண்டுகள் வீசப்பட்டது அதுவே முதல் முறை.

இந்த வகை குண்டு கொன்கிறீட்டிற்குள் 18 மீற்றர் செல்லக்கூடியது( 60 அடி)  அல்லது பூமிக்குள் 61மீற்றர் செல்லக்கூடியது. இந்த குண்டு வெற்றிகரமானது என உறுதியாக தெரிவிக்க முடியாவிட்டாலும் பூமிக்குள் 80 மீற்றர் உள்ளே இருக்கின்றது என கருதப்படும் போர்டோவின் சுரங்கப்பாதைகளை தாக்ககூடியது  இந்த வகை குண்டுகள் மாத்திரமே.

fordo_1.jpg

மீதமுள்ள குண்டுவீச்சு விமானங்கள் பின்னர் தங்கள் இலக்குகளைத் தாக்கின - மொத்தம்  14 MOP ஃபோர்டோ மீதும் இரண்டாவது அணுசக்தி நிலையம் நடான்ஸில் வீசப்பட்டதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும் ஃபோர்டோவிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்ஃபஹான் அணுசக்தி தளத்தில் டோமாஹாக் ஏவுகணைகள் தங்கள் இலக்குகளைத் தாக்கின.

விமானங்கள் 18 மணிநேரம் காற்றில் செலவிட்ட பிறகு அனைத்து இலக்குகளும் சுமார் 25 நிமிடங்களில் தாக்கப்பட்டு 19:30  (00:30 BST)மணிக்கு ஈரானிலிருந்து அமெரிக்காவிற்குத் திரும்பும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் சுமார் 75 துல்லிய வழிகாட்டப்பட்ட ஆயுதங்களும் 125 க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்களும் பயன்படுத்தப்பட்டன மேலும் செயலாளர் ஹெக்செத் இந்த பணி ஈரானின் அணுசக்தி திறன்களை "சக்திவாய்ந்த மற்றும் தெளிவான" அழிப்பதை வழங்கியதாகக் கூறினார்.

trump_3.jpg

ஆனால் தாக்குதல்களின் முழு நோக்கத்திற்கான சான்றுகளை மதிப்பிடுவதற்கு நேரம் எடுக்கும் - பதுங்கு குழி வெடிக்கும் குண்டுகள் முக்கிய அணுசக்தி தளங்களில் எவ்வளவு ஆழமாக நிலத்தடியில் ஊடுருவ முடிந்தது என்பதைக் காண கூடுதல் காட்சிகள் தேவை.

"இது உலகில் வேறு எந்த நாடும் நிகழ்த்தியிருக்க முடியாத நம்பமுடியாத சிக்கலான மற்றும் மிகவும் அதிநவீன தாக்குதலாகும்" என்று டாக்டர் பெட்டிஜான் கூறினார்.

"இந்த நடவடிக்கை தந்திரோபாய ரீதியாக வெற்றி பெற்ற போதிலும் ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிரந்தரமாக பின்னுக்குத் தள்ளும் இலக்கை இது அடையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

https://www.virakesari.lk/article/218206

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஈரான் மீது இராட்சத குண்டுகளைப் போட்டு விட்டது என்ற செய்தியைக் கேட்டவுடன், இவர்கள் இப்படிச் செய்து விட்டார்களே என்ற ஒரு பெருத்த ஏமாற்றமும், இப்போது கூட யோசனையாகவுமே இருக்கின்றது. உலகம் ஒரு ஒழுங்கில் இல்லாமல், பலம் உள்ளவர்கள் எதையும், எங்கேயும் செய்யலாம் என்பது எப்படியான ஒரு உலகத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது.

கடந்த நான்கு வருடங்களாக இப்படியான தான்தோன்றித்தனமான நிகழ்வுகள் எத்தனை ஆரம்பிக்கப்பட்டு, முழு உலகமுமே அவற்றின் பாதிப்புகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

உலக சுகாதார மையத்தில் தலைமை விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்த தமிழ் பெண்மணி ஒருவரின் பேட்டி ஒன்று கடந்த வாரம் ஒரு இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் போனது. கோவிட் வைரஸ் எங்கே ஆரம்பித்திருக்கலாம் என்ற மூன்று ஊகங்களை சொல்லி, அதில் ஒன்றை முற்றாக நிராகரித்து விட்டு, மற்றைய இரு ஊகங்களையும் உறுதிப்படுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுத்து, எதிர்காலத்தில் இவ்வாறான ஒன்று மீண்டும் நிகழாமல் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் இருக்கும் உலக சுகாதார மையத்தின் நிலையைச் சொன்னார். இந்தப் பெரிய நாடுகளுக்கு கொஞ்சம் கூட, தங்கள் நலன்கள் தவிர, அக்கறை என்பதே கிடையாது.

சில தலைவர்களும் அப்படியே. மிகவும் முன்யோசனையற்ற ஏட்டிக்குப் போட்டியான செயல்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சர்வாதிகாரிகளும், மத/இன அடிப்படைவாதிகளும் மட்டும் இல்லை, ஜனநாயக வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் இப்படியே செய்வது ஆபத்தான ஒரு எடுத்துக்காட்டு.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

510808488_1142414294730745_3383030889107

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-317.jpg?resize=750%2C375&ssl

ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர்; ஆச்சரியப்படுத்தும் வசதிகளுடன் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம்!

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்களைத் தாக்கும் ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமருக்காக குறைந்தது ஆறு B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு (B-2 stealth bombers) விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஜூன் 20 அன்று மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்திலிருந்து உலகம் முழுவதும் 37 மணி நேர விமானப் பயணத்திற்காக படையினர் புறப்பட்டு, ஈரானுக்குச் சென்று திரும்பி வந்தன.

ஜூன் 21 அன்று தாக்குதல் 25 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

ஆனால், இந்த நீண்ட தூர நடவடிக்கைகள் ஈரானுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன.

B-2 ஸ்டெல்த் குண்டு வீச்சு விமானம் ஒரு படுக்கை, ஒரு கழிப்பறை, ஒரு மைக்ரோவேவ், ஒரு சிறிய குளிர்சாதனப் பெட்டி மற்றும் மைக்ரோவேவ் அடுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது நீண்ட கால மூலோபாய குண்டுவீச்சுப் பணிகளில் விமானிகள் நன்கு உணவளிக்கவும், பயணத்தை குழுவினரால் எளிதாக நிர்வகிக்க உதவும்.

விமானி அறையில் ஒரு விமானி படுத்துக் கொள்ளவும், மற்றொரு விமானி பறக்கவும் ஒரு இடம் உள்ளது.

இது இரண்டு பேர் கொண்ட குழுவினருக்கு கடினமான பயணத்தை நிர்வகிக்க உதவுகிறது.

Gtz23zMXgAAxrnc?format=jpg&name=medium

பயணத்தின் போது, குண்டுவீச்சு விமானிகள் நடுவானில் பல முறை எரிபொருள் நிரப்பியதாக அதிகாரிகள் நியூயோர்க் போஸ்ட்டிடம் தெரிவித்தனர்.

ஒவ்வொரு B-2 ஸ்டெல்த் விமானமும் 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேல் பெறுமதி வாய்ந்ததாகும்.

மேலும், 2008 ஆம் ஆண்டு விபத்தில் ஒன்றை இழந்த பின்னர், அமெரிக்க விமானப்படை தற்போது அவற்றில் 19ஐ இயக்குகிறது.

பொதுவாக பெரும்பாலான குண்டுவீச்சு விமானங்களில் அத்தகைய ஆடம்பரங்கள் இல்லை.

ஆனால் விதிவிலக்குகள் உள்ளன.

குறிப்பாக US B-2 Spirit அல்லது B-52 Stratofortress போன்ற நீண்ட தூர மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் அவை 24 மணி நேரத்திற்கும் மேலான பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அண்மைய தாக்குதலில் B-2 ரக விமானங்கள் ஈரானிய வான்வெளியை நெருங்கியபோது, ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் முக்கிய பாதுகாப்புகளை செயலிழக்கச் செய்ய இரண்டு பல டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியது.

சில நிமிடங்களுக்குப் பின்னர், ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் 14 30,000 பவுண்டுகள் எடையுள்ள பதுங்கு குழி-குண்டுகளை, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது வீசின.

அமெரிக்கா போரில் 15 தொன் எடையுள்ள மிகப்பெரிய GBU-57 வகையான பதுங்கு குழி குண்டுகளை வீசியது இதுவே முதல் முறை.

37 மணி நேர பயணத்தின் போது இரண்டு விமானிகளும் மாறி மாறி ஓய்வெடுத்ததாக தி யுகே டெலிகிராஃப் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1436802

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.