Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்

27 JUN, 2025 | 10:42 AM

image (எம்.நியூட்டன்)

எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன். அதுபோன்று சம்பந்தமான விடயங்களை நீதி செய்ய வேண்டிய பொறுப்பை மக்களிடம் கையளிக்கிறேன் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்  பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (26)  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து நெரிவிக்கும்போதே  அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

சமூக ஊடகங்கள் நீதியுடன் நியாயமாக நடக்க வேண்டும் அவர்கள் இடுகின்ற தலைப்புகள் சொந்த வாழ்க்கையில் ஒருவரின் கௌரவத்தையும் பாதிப்பதாக இருக்கக்கூடாது என்பதால் நியாயமாக தலைப்பிட்டு செய்தியை வெளியிடுங்கள். எனக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் இது பொதுவானது.

செம்மணி அணையா விளக்கு போராட்டம் தொடர்பில் இளைஞர்கள் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது என்ற அடிப்படையில் முதன் முதலில்  கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களை பங்கேற்க அழைத்தது நான். அதன் அடிப்படையில் போராட்டத்திலும் பங்கேற்றோம்.  அதன்போது வேலன் சுவாமி விமர்சித்தார். அதில் என்னை பேச அழைத்தார்கள். நான் திருப்பி ஏதாவது பேசி இருந்தால் அந்த போராட்டத்தின் நோக்கம் குழம்பிவிடும் என்பதால் அதனை நான் செய்யவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவாக தீப்பந்த போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதனை யாழ்ப்பாண மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் செம்மணி அணையா விளக்கு போராட்டத்துக்கு சென்றபோது அஞ்சலி செலுத்தி மக்களோடு மக்களாக நாங்கள் நின்று இருந்தோம். 15 நிமிடங்களுக்குப் பிறகு அமைதியாக நாங்கள் வெளியேறினோம்.

நான் வெளியேறி வீதியில் சென்று வாகனத்தில் ஏற முற்பட்டபோது சில குரல்கள் எனக்கு எதிராக எழுந்தது. அதனை நான் அசட்டை செய்யவில்லை. பின்னால் சில பேர் சத்தமிட்டனர். 

அந்த காணொளியை  நான் அவதானித்த பொழுது என்னை குறி வைத்து திட்டமிட்டு பேசியதை அவதானிக்க முடிந்தது. எமது கட்சிக்கு எதிராக கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்காக ஒருவரை கட்சியிலிருந்து நீக்கி இருந்தோம். 

அந்த பழைய குழப்பங்களையே அவர்கள் பேசியிருக்கிறார்கள். காணொளியை பார்த்தால் தெரியும். நான் சலனம் இல்லாமல் நடந்து சென்றேன். நான் ஓடவில்லை. 

தமிழ் அரசுக் கட்சித் தலைவர் விரட்டியடிக்கப்பட்டதாக செய்தி வந்தது. என்னை யாரும் விரட்டியடிக்கவில்லை. அகற்றப்பட்டார் என்ற செய்தி வந்தது. நான் அகற்றப்படவில்லை. எதுவுமே இல்லை.

ஏன் இவ்வாறு செய்தியை போட்டார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. உண்மையை எழுத வேண்டும். எனது பாட்டில் நான் வெளியேறி சென்றேன்.

இவ்வாறான செய்திகள் எழுதும் பொழுது அது எம்மை பாதிக்கிறது. உண்மையில் அவ்வாறு நடந்தால் பரவாயில்லை. நாங்கள் இருந்த இடத்தில் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் இருந்தார்கள். ஒருவர் கூட எமக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. 

நல்ல ஒரு விடயமொன்றிற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அங்கு பங்கேற்று இருந்தோம்.

உள்ளூராட்சி தேர்தலில் நிமிர்ந்து நிற்கின்ற கட்சி என்ற வகையில் தமிழ் அரசுக் கட்சிக்கு பொறுப்பு இருக்கிறது. அந்த கடமையை செய்வதற்காக நாம் போய் இருந்தோம். வீதியில் சென்றால் நாய்கள் குலைப்பது வழமை. நான் அவ்வாறு சென்றேன் அவ்வாறே அதுவும் நடந்தது. அது பரவாயில்லை.

ஏற்பாட்டாளர்கள் பல முயற்சிகளை எடுத்தார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். மக்கள் இதனை கண்டிக்க வேண்டும். மக்களுக்கு பொறுப்பு இருக்கிறது.

காணாமல் போன விடயம் தொடர்பாக நான் பல விடயங்களை செய்திருக்கிறேன். அதை நான் ஒன்றும் சொன்னதில்லை. 1996 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த விடயங்களை நான் கையாண்டு இருக்கிறேன்.

 கிரிசாந்தியின் கொலை நடந்த சமயத்தில் ரஜிணி என்ற பெண் பிள்ளையை ராணுவம் கொலை செய்து மலக்குளியில் போட்ட விடயத்தை மிகவும் கடுமையான ராணுவ தளபதி என்று சொல்லக்கூடிய ஜானக பெரேராவோடு முரண்பட்டு நின்று சடலத்தை மலக்குழியில் இருந்து எடுத்து இரண்டு ராணுவத்தினரை சேவை இடைநிறுத்தம் செய்து வைத்தேன். 

தயவுசெய்து அந்த காலத்தில் பத்திரிகைகளை பார்த்தால் தெரியும். அவ்வாறு பல விடயங்களை செய்து இருக்கிறேன் இதனை பிதற்றிக் கொண்டு நான் திரிவதில்லை.

அந்த இடத்தில் நிற்பதற்கு எனக்கும் கட்சிக்கும் உரிமை இருக்கிறது. அதை தடுப்பதற்கு கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் குழுவாக வந்து அந்த இடத்தில் புனித தன்மையும் புனித நோக்கத்தை சிதைக்கிற காழ்ப்புணர்ச்சியான செயல் கண்டிக்கத்தக்கது. 

மக்களுக்கு ஒரு பங்கு உண்டு. இவர்கள் இவ்வாறு அசிங்கமாக அவமானமாக செயல்பட்டால் இனிமேல் இவ்வாறான போராட்டங்களில் மக்களை பங்கு வைக்காமல் வைப்பதற்கான நோக்கம் உண்டா என்ற சந்தேகம் உண்டு.

எனக்கும் பொதுச்செயலாளருக்கும் கட்சிக்கும் அவர்களுடன் முரண்பாடு உண்டு. அதை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன். அதுபோன்று சம்பந்தமான விடயங்களை நீதி செய்ய வேண்டிய பொறுப்பை மக்களிடம் கையளிக்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/218597

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_8541.jpeg.f6c53ea85f0d080ed66b

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஒருவரின் கௌரவத்தையும் பாதிப்பதாக இருக்கக்கூடாது

ஆமா.... உங்களுக்கு மட்டுந்தான் கௌரவம் உண்டு, மற்றவர்களுக்கு மரியாதை அதெல்லாம் இல்லையென்று நினைத்தா நீங்கள் மற்றவர்களை விமர்ச்சிக்கிறீர்கள். தனக்குத்தனக்கென்றால் சுளகு படக்கு படக்கென்று அடிக்குது. அங்கு வந்த எல்லா அரசியல்வாதிகளையுமே அவர்கள் வெளியேற்றினார்கள், அவரவர் தமக்கு என்று எடுத்து கருத்து வெளியிடுவதைப்பார்த்தால் இவர்களது உள்நோக்கம் புரியும். மக்களின் எல்லாப்பிரச்னைகளிலும் நீங்கள் அவர்களுடன் கூட இருந்திருந்தால், இப்படியான அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லையே.

4 hours ago, கிருபன் said:

இவ்வாறான செய்திகள் எழுதும் பொழுது அது எம்மை பாதிக்கிறது. உண்மையில் அவ்வாறு நடந்தால் பரவாயில்லை. நாங்கள் இருந்த இடத்தில் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் இருந்தார்கள். ஒருவர் கூட எமக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. 

பாவம் இவர், வெளிவந்த காணொளிகளை பார்க்கவில்லைபோலும். சுமந்திரன் பாணியில் செய்தியாளரை சாடுகிறார். சரி, அப்படியொன்றுமே நடக்கவில்லையென்றால் ஏன் அதே பத்திரிகையாளரை கூட்டி புலம்புகிறார்?

4 hours ago, கிருபன் said:

உள்ளூராட்சி தேர்தலில் நிமிர்ந்து நிற்கின்ற கட்சி என்ற வகையில் தமிழ் அரசுக் கட்சிக்கு பொறுப்பு இருக்கிறது.

அதுதான், மக்களின் போராட்டத்தை தங்களின் போராட்டம் போல் தம்பட்டம் அடிப்பது மட்டுந்தான் கட்சியின் பொறுப்பு. முதலில் கட்சிக்குள் இருக்கும் புடுங்குப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள். பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை பேரணியை பொது அமைப்புகள் ஏற்பாடு செய்ய, இடையில் புகுந்து தங்களது ஏற்பாடுபோல் முதலாளித்தனம் காட்டிய நீங்கள், எதையும் செய்ய மாட்டீர்கள் யாரவது முயற்சியில் இடையில் புகுந்து பெயரெடுக்க வேண்டும். மக்கள் அழிக்கப்படும்போது உங்கள் பொறுப்பு எங்கே போனது? அப்போ எங்கே போயிருந்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

லூசு கூட்டங்கள் இப்படி எப்போதும் காடைத்தனங்கள் செய்வது இயல்பானது தானே. தமிழரிடையே அரசியல் கட்சிகள் இல்லை. வெறும் வன்முறை காடைக்குழுக்கள் மட்டுமே உள்ளன. அந்த காடைக்குழுக்களுக்குள் இப்படியான வன்முறை அடிபாடுகள் நடப்பது வழமை. முன்பு கையில் ஆயுதங்கள் இருந்ததால் ஆளையாள் சுட்டு கொலை செய்தன. இப்போது அவர்களின் வால்கள் இப்படி காடைத்தனம் புரிகின்றன. இதை தமிழ் ஊடகங்கள் ஊதி பெருப்பித்து காடையர்கள் செயலுக்கு மக்கள் மீது பழி போடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

ஆமா.... உங்களுக்கு மட்டுந்தான் கௌரவம் உண்டு, மற்றவர்களுக்கு மரியாதை அதெல்லாம் இல்லையென்று நினைத்தா நீங்கள் மற்றவர்களை விமர்ச்சிக்கிறீர்கள். தனக்குத்தனக்கென்றால் சுளகு படக்கு படக்கென்று அடிக்குது. அங்கு வந்த எல்லா அரசியல்வாதிகளையுமே அவர்கள் வெளியேற்றினார்கள், அவரவர் தமக்கு என்று எடுத்து கருத்து வெளியிடுவதைப்பார்த்தால் இவர்களது உள்நோக்கம் புரியும். மக்களின் எல்லாப்பிரச்னைகளிலும் நீங்கள் அவர்களுடன் கூட இருந்திருந்தால், இப்படியான அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லையே.

பாவம் இவர், வெளிவந்த காணொளிகளை பார்க்கவில்லைபோலும். சுமந்திரன் பாணியில் செய்தியாளரை சாடுகிறார். சரி, அப்படியொன்றுமே நடக்கவில்லையென்றால் ஏன் அதே பத்திரிகையாளரை கூட்டி புலம்புகிறார்?

அதுதான், மக்களின் போராட்டத்தை தங்களின் போராட்டம் போல் தம்பட்டம் அடிப்பது மட்டுந்தான் கட்சியின் பொறுப்பு. முதலில் கட்சிக்குள் இருக்கும் புடுங்குப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள். பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை பேரணியை பொது அமைப்புகள் ஏற்பாடு செய்ய, இடையில் புகுந்து தங்களது ஏற்பாடுபோல் முதலாளித்தனம் காட்டிய நீங்கள், எதையும் செய்ய மாட்டீர்கள் யாரவது முயற்சியில் இடையில் புகுந்து பெயரெடுக்க வேண்டும். மக்கள் அழிக்கப்படும்போது உங்கள் பொறுப்பு எங்கே போனது? அப்போ எங்கே போயிருந்தீர்கள்?

சாத்தான், உங்களுக்கு இதை "வெளக்கி"😎 ஒன்றும் ஆகப் போவதில்லை என்று தெரியும். ஆனாலும் ஏனைய வாசகர்களுக்காக உங்கள் புலம்பலை ஒட்டி இந்தப் பதில்.

எல்லா அரசியல் வாதிகளையும் வெளியேற்றினார்களா? அர்ச்சுனா இராமநாதன் இப்ப அரசியல்வாதி இல்லையா? அவர் படத்தில் நிற்கிறாரே? இது தமிழரசுக் கட்சியின் உள் சண்டை (சிறிதரன் சுமந்திரன் அணி மோதல்) வெளியே வந்திருக்கிறது.

அணையா விளக்கு இருந்த இடத்தில் நடந்த கூட்டத்தில் எல்லோரும் இருந்திருக்கிறார்கள் இவர்கள் பங்கு பற்றிய போது எதிர்ப்பு எழுந்ததாக ஏதும் வீடியோ பார்த்தீர்களா? அப்படி எதுவும் நிகழவில்லை. வாகனம் நோக்கி நடக்கும் போது மட்டும் தான் ஒருவர் பின்னால் திட்டிய படி வருகிறார். அதை வீடியோ எடுத்து "துரத்தினார்கள், விரட்டினார்கள், செருப்பைக் கைப்பற்றினார்கள்" 😂என்று எழுதுகிறார்கள்.

சிவஞானம் - அவரது அரசியலில் எனக்கு உடன்பாடில்லா விட்டாலும்- ஒரு வயசாளியாக மதிக்கப் பட வேண்டியவர். அவரைப் பின் தொடர்ந்து மரியாதையில்லாமல் திட்டி வரும் இளையவரின் வயது, சிவஞானம் தமிழர்களுக்கான அரசியலில் இருக்கும் வருடங்களை விடக் குறைவாகத் தான் இருக்கும். இப்படி, தமிழ் தேசிய வரலாற்றை முக நூலிலும், இன்ஸ்ராவிலும் பார்த்து வளர்ந்த இளையோரை, கொம்பி சீவி விடும் அரிய சேவையை புலத் தமிழரும், உள்ளூரில் சிலரும் செய்கிறார்கள். நீங்களும் ஒரு கொம்பு சீவி தான்!

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கட்டும் அவர்கள் அரசியல்வாதிகள் வேண்டாம் அரசியல் வேண்டாம் என்று சொல்லியே அவர்களை வெளியேறுமாறு கோரினர். அர்ச்சுனாவின் தந்தையும் காணாமலாக்கப்பட்டவர.

15 hours ago, Justin said:

ஒரு வயசாளியாக மதிக்கப் பட வேண்டியவர்.

வாழ வேண்டிய குருத்துக்களை, இராணுவத்தோடு சேர்ந்து கலைத்து கலைத்து சுட்டுக்கொன்றவன் டக்கிளஸ். என்னை சுடாதீர்கள், ஒருவேளை நீங்கள் தேடும் ஆள் நானில்லாமல் இருக்கலாம், முதலில் ஒருதடவை என்னை விசாரியுங்கள் என்று தம் உயிரை காக்க கதறியும் பலனில்லாமல் குருவிகளை சுடுவதுபோல் நடுரோட்டில் சுட்டுப்போட்டவன், இராணுவத்தின் பங்கருக்குள் நா...போல பதுங்கியிருந்து செய்த கொலைகள் ஏராளம். அந்த ஜென்மத்தோடு பதவிக்காக பேரம் பேசபோனவர் சிவஞானம். இவர் பெரிய மனிதனா? வயதில் மூத்தவராக இருக்கலாம் ஆனால் பகுத்தறிவு அற்றவர். எங்களுக்கு பதவி வேண்டும் இல்லையென்றால் அங்கை என்ன வாய்ப்பாக்கவோ என்று கேள்வி எழுப்பினாரே அதிலிருந்தே இவரின் அனுபவ முதிர்ச்சி தெரிகிறது? அப்படியானால் தலைமைப்பதவி இல்லாதவர்கள் வாய் பார்க்கிறார்கள் என்று சொல்லி மற்றவர்களை அவமானப்படுத்துகிறாரா இவர்? பதவிக்காக கட்சியில் இருக்கிறார்கள் இல்லையென்றவுடன் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று ஏன் மற்றவர்களை ஏளனம் செய்கிறார்கள்? சம்பவத்துக்குப்பின் இவர் நேர்காணலில் கூறியதை கேளுங்கள் மிகுதி விளங்கும். மூப்பும் வயதும் மட்டும் மரியாதைக்குரியவையல்ல. அனுபவம், பொறுப்பு மிக அவசியம் மரியாதையை பெறுவதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களாக தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் குத்து வெட்டுக்களின் இறுதி அத்தியாயம் இது. ஆனால் இதை இங்கே செய்யக்கூடாது என்பது கூட தெரியாத நிலையில் தான் தமிழ் தலைமைகள்...

  • கருத்துக்கள உறவுகள்

விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’

முருகானந்தம் தவம்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கட்சிகளில் முதன்மையானதும் தாய் கட்சி என்றும்  அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் (ஈ.பி.டி.பி.) ஆதரவு கேட்டு அக்கட்சியின் அலுவலகப் படி ஏறியமை தமிழ்த் தேசிய அரசியலிலும் தமிழ்  மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

On 27/6/2025 at 07:24, கிருபன் said:

எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்

இந்த மனிதருக்கு தான் செய்தது தவறென்று இன்னுமா புரியவில்லை.???????

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. பதவிமோகத்தில் எதுவும் புரியவில்லை. அன்று முன்னாள் பிரித்தானியப்பிரதமர் பல தடைகளை தாண்டி தமிழ் மக்களின் துயரங்களை கேட்க சொந்த நிலம் இருந்தும் அகதிகளாக வெள்ளத்திலும் ஒழுகும் குடிலிலும் இருந்த மக்களை சந்திக்க வந்தார். அப்பொழுது அந்த மக்களின் பிரதிநிதிகளாக நின்று பேச வேண்டியவர்கள் அங்கு வரவில்லையே, எங்கே ஓடி மறைந்தார்கள்? ஏன்? அப்போது இவர்களின் பொறுப்பு எங்கே போனது? கட்சி எங்கே போனது? இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்களே, அப்போது அந்த மக்களோடு இவர்கள் இல்லாமல் எங்கே போய் ஒளிந்தார்கள்? அப்போ இவர்களுக்கு பொறுப்பு இருக்கவில்லையா அந்த மக்கள் மட்டில்? இந்தபுதைகுழியில் கொலைகாரன் டக்கிளஸால் கொல்லப்பட்டவர்களின் உடல்களும் இருக்க வாய்ப்புண்டு. மக்களை கொன்ற கொலைகாரர்களோடு பதவிக்காக சமரசம், மக்களோடு பொறுப்பு தெரிவிக்கப்போனாராம். பதவிக்காக எந்தப்பேயோடும் கூட்டுசேர்வார்கள். இவர்களாலேயே மக்களுக்கு இந்த நிற்கதி. நாமே தமிழரின் ஏகோபித்த கட்சி, ஆதிக்கட்சி என்று சொன்னவர்கள், இன்று பதவிக்காக கொலைகாரரிடம் இறங்கிபோகிறார்கள். யாருக்காக? தங்களை அழித்தவர்கள் தங்களுக்கு வேண்டாம் என ஒதுக்கும் போது, இவர்களுக்கு என்ன தேவையிருக்கிறது அவர்களுடன் கூட்டுச்சேர? இப்போ வீட்டில் குடியிருப்பது கொலை கொள்ளை செய்பவர்களும், மக்களை வஞ்சிப்பவர்களுமே. அடுத்த தேர்தலில் தமிழரசுக்கட்சி என்று சொல்லிக்கொள்ள சந்தர்ப்பமே இருக்காது, எல்லோரையும் வெளியேற்றிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ டக்லஸ் மட்டும் தான் படு கொலைகளை புரிந்தது போலவும் மற்றைய இயக்கங்கள் புனிதர்கள் போலவும் கூறப்படுகிறது. இலங்கையில் போரடிய அனைத்து இயக்கங்களும் பல ஆயிரம் படுகொலைகளை நிகழ்ததியவர்கள் தான். இதில் யாரும் சுத்தமானவர்கள் கிடையாது.

ஶ்ரீலங்கா இராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்ய சூழ்நிலையை அமைத்து கொடுத்ததில் தமிழ் க்கங்களுக்கு பங்கு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வில் இப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கக் கூடாது. ஆனால் சிவஞானம் தன்னை நியாயவாதியாக காட்டிக் கொள்கிறார். தமிழரசுக்கட்சியின் தலைவர்களாக மக்களாலும் கட்சி அங்கத்தவர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்களே இன்று தமிழரசுக்கட்சியின் தலைமையை அடாத்தாக கைப்பற்றியிருக்கிறார்கள். ஒரு பழம்பெரும்கட்சி தலைவர் பொதுச்செயலாளர் இல்லாமல் பதில்தலைவர் பதில் செலாளரை வைத்துக்கொண்டு நீண்டகாலமாக இருப்பது. நகைப்புக்குரியது. தற்காலிக ஏற்பாடாக யாப்பில் இருக்பகும் விடயத்தை நிரந்தர ஏற்பாடாக மாற்றி தங்களுக்குப் பிடிக்காதவர்களை கட்சியிலிருந்து வெளியேஷற்றி இருக்கிறார்கள். தான் செய்த செயலுக்கு பொது வெளியில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் என்று தெரிந்து கொண்டு அவர் அதைத்தவிர்த்திருக்க வேண்டும்.அங்கே போய் தனக்கு வெள்ளையடிக்க வெளிக்கிட்டு அசிங்கப்பட்டுப் போயிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலதுகளுக்கு சிங்களத்திற்கு இடைஞ்சல் என்று வந்தால் யாராவது எதையாவது கிளறினால் இங்கேயும் கிளறணும் என்கிற பதட்ட நோய். இப்ப அது தாயகத்திலும்.

ஆனால் தமிழர்கள் போராட தொடங்காத காலத்திலேயே சிங்கள பகுதிகளில் உட்பட காணாமல் போன புதைக்கப்பட்ட எரிக்கப்பட்ட தமிழர்கள் ஆயிரம் ஆயிரம் என்பது தெரியாமலா அல்லது விசுவாசம் எல்லாவற்றையும் மறைக்கிறதா? மழுங்கடிக்கிறதா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, island said:

ஏதோ டக்லஸ் மட்டும் தான் படு கொலைகளை புரிந்தது போலவும் மற்றைய இயக்கங்கள் புனிதர்கள் போலவும் கூறப்படுகிறது. இலங்கையில் போரடிய அனைத்து இயக்கங்களும் பல ஆயிரம் படுகொலைகளை நிகழ்ததியவர்கள் தான். இதில் யாரும் சுத்தமானவர்கள் கிடையாது.

ஶ்ரீலங்கா இராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்ய சூழ்நிலையை அமைத்து கொடுத்ததில் தமிழ் க்கங்களுக்கு பங்கு உள்ளது.

கொலை என்பதே தவறான விடயம்.

இதில்.....

உலகில் கொண்ட கொள்கைகளுக்கு எதிராக நிற்பவர்களை கொலை செய்வது அதிசயமல்ல.

ஆனால்....

நியாயமான கொள்கைகளுக்கு எதிராக நிற்பவர்களை / குறுக்கீடு செய்பவர்களை கொலை செய்வதற்கும்.......நியாயமான கொள்கையாளர்களை எதிரிகளுக்கு காட்டிக்கொடுத்து கொலை செய்பவர்களுக்கும் நிறைய வேற்றுமையும் வித்தியாசங்களும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கொலைகளை செய்பவர்கள் அனைவரும் தப்பிக்கும் நோக்குடன் ஏதோ ஒரு காரணத்தை கூறிக்கொண்டே இருப்பர். இந்த விடயத்தில் இலங்கை அரசு இயக்கங்கள் எல்லோருமே ஒரே நேர்கோட்டிலேயே ஒரே கொள்கையிலேயே பயணித்தார்கள். அவரவுக்கு சார்பானவர்கள் அவர்களின் கொலைகளை மட்டும் நியாயப்படுத்துவார்கள்.

ஏதோ யுத்தம் முடிந்தது மக்களைப் பொறுத்தவரை மகிழ்சசியே. தமிழர்களின் ஜனத்தொகை யுத்தத்திற்கு முன்னர் இருந்த காலத்தில் வளர்சசியடைந்த வேகத்தில் மீண்டும் வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது. அதே போல யுத்தத்திற்கு முன்பு இருந்த கலவி, வேலைவாய்புகள், சுய பொருளாதாரம் ஆகியவை கிடைத்தாலே தற்போதைய நிலையில் போதைமர என்ற நிலையே காணப்படுகிறது. 1970 களில் யாழ்பாணத்தில் சொந்த உழைப்பில் வீடுகளைக் கட்டிய எம்மவரால் இன்று ஊர் உழைப்பில் அதை செய்ய முடியாதுள்ளது. வெளிநாட்டு வருமானத்தில் தங்கி வாழும் பொருளாதார நிலையையும் சோம்பேறித்தனத்தையும் யுத்தமே ஏற்படுத்தியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, island said:

கொலைகளை செய்பவர்கள் அனைவரும் தப்பிக்கும் நோக்குடன் ஏதோ ஒரு காரணத்தை கூறிக்கொண்டே இருப்பர். இந்த விடயத்தில் இலங்கை அரசு இயக்கங்கள் எல்லோருமே ஒரே நேர்கோட்டிலேயே ஒரே கொள்கையிலேயே பயணித்தார்கள். அவரவுக்கு சார்பானவர்கள் அவர்களின் கொலைகளை மட்டும் நியாயப்படுத்துவார்கள்.

இனவாத அரசுடன் சேர்ந்து அவர்களுக்காக தம் இனத்தவர்களையே கொத்துக்கொத்தாக கொலை செய்த டக்ளஸ்,சித்தார்த்தன் கும்பலை நியாயப்படுத்த முயல்கின்றீர்கள்.

முதலில் கொலைகள் ஏன் நடத்தப்பட்டன என்பதை ஆராய்ச்சி செய்யுங்கள்.

9 hours ago, island said:

1970 களில் யாழ்பாணத்தில் சொந்த உழைப்பில் வீடுகளைக் கட்டிய எம்மவரால் இன்று ஊர் உழைப்பில் அதை செய்ய முடியாதுள்ளது. வெளிநாட்டு வருமானத்தில் தங்கி வாழும் பொருளாதார நிலையையும் சோம்பேறித்தனத்தையும் யுத்தமே ஏற்படுத்தியது.

நீங்கள் சொல்வது இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. யாழ்ப்பாணத்திற்கு மட்டும் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2025 at 15:24, கிருபன் said:

அந்த காணொளியை  நான் அவதானித்த பொழுது என்னை குறி வைத்து திட்டமிட்டு பேசியதை அவதானிக்க முடிந்தது. எமது கட்சிக்கு எதிராக கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்காக ஒருவரை கட்சியிலிருந்து நீக்கி இருந்தோம். 

On 27/6/2025 at 15:24, கிருபன் said:

அந்த பழைய குழப்பங்களையே அவர்கள் பேசியிருக்கிறார்கள்.

அப்போ சந்திரசேகர், இளங்குமரனையும் வெளியேறும்படி கோரியிருந்தனரே, அவர்களும் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை வெளியேற்றியிருந்தனரோ? தங்கள் தவறுகளை மறைக்க வேறொருவர் மேல் பழியை போட்டு தப்புவது உங்கள் மரபு. நீங்கள் அரிய நேந்திரனை சொல்கிறீர்கள் போலுள்ளது. அவருக்காக யாழ்ப்பாணத்தில் குரலெழுப்பினரா? அல்லது உங்களது மனசாட்சியின் குரலா அது?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இனவாத அரசுடன் சேர்ந்து அவர்களுக்காக தம் இனத்தவர்களையே கொத்துக்கொத்தாக கொலை செய்த டக்ளஸ்,சித்தார்த்தன் கும்பலை நியாயப்படுத்த முயல்கின்றீர்கள்.

முதலில் கொலைகள் ஏன் நடத்தப்பட்டன என்பதை ஆராய்ச்சி செய்யுங்கள்

நான் யாரையும் நியாயப்படுத்தவில்லை. கொலைகளை யார் செய்தாலும் அது குற்றம் தான். தமிழ் தேசிய சூழலில் உள்ள அரசியல்வாதிகள், சிவில் சமூகம், ஊடகவியலாளர்கள் நினைத்திருந்தால் யுத்தம் ஆரம்பித்த 1980 களின் ஆரம்பத்தில் இருந்து கொலை செய்யப்பட்டவர்கள், காணாமல் ஆக்ககப்படவர்கள் பெயர் ஶ்ரீலங்கா இராணுவத்தால் அல்லது எந்த இயக்கங்களால் அந்த கொலை நடத்தப்பட்டது யார் மீது அதிக சந்தேகம. உள்ளது போன்ற விபரங்களுடன் திகதி வாரியாக ஒரு பட்டியலை தயாரித்திருக்க முடியும்.அதை சர்வதேச கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கலாம். அவை இந்த புதை குழுகளில் உள்ளனவா என்பதை டிஎன் ஏ பரிசோதனை மூலம் கண்டு பிடிக்கலாம்.மாவட்டங்களின் 1980 ம் ஆண்டுல் இருந்தான குடிசன மதிப்பு புள்ளிவிபரங்களின் துணையுடன் அதை செய்திருக்கலாம்.

அப்படி செய்வதன் மூலம் அந்த கொலைகளை யார் யார் செய்தார்கள் என்பதை விசாரணை உதவியாக அமையும். அத்தோடு அந்த கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் உலகில் எங்கு வசித்தாலும் அந்த பட்டியலை சரி பார்க்கவும் மேலதிக தகவல்களை வழங்கவும் நீதி விசாரணை சாட்சிகாக மாறவும் முடியும். இப்போது கூட காலம் கடந்து விடவில்லை. ஏனெனில் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒரு சிலரவது தற்போது உயிருடன் ஏதோ ஒரு நாட்டில் வாழக்கூடிய சாத்தியம் உள்ளது.

ஆனால், அதை செய்ய இவர்கள் எவருக்கும் அக்கறை இல்லை. அந்த கொலைகளை செய்தவர்களில் சிலர் தற்போது அரசியல்வாதிகளாக சிவில் சமூகத்தினராக, ஊடகவியலாளராகவோ அல்லது புலம் பெயர்ந்தோ மக்களுக்குள் பரவி இருக்கலாமென்பதால் அதை செய்ய இவர்களுக்கும் சற்று பயமாகவும் இருக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கை மூலம் நிச்சயமாக இலங்கை இராணுவத்தினர் செய்த கொலைகளை இனம் காண முடியும்.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, island said:

அவர்களிடம் ஆயுதம் இருந்தது. உங்களிடம் பேனா இருக்கிறது. அதை எவ்வளவு கூராக இங்குள்ளவர்கள் மீது பாவிக்கும் நீங்கள் கொலைகள் பற்றி பேசுவது.....????

Edited by விசுகு
எழுத்துப்பிழை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.