Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

06 JUL, 2025 | 12:23 PM

image

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை  வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அந்தவகையில், இன்று அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை கைது செய்துள்ளனர்.

குறித்த கவலுக்கமைய கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் வைத்து வீட்டுக்குள் மறைந்திருந்த வேளை இனிய பாரதி புலனாய் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/219298

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2025-07-06-at-15.43.17.jp

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது!

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினரால் இன்று (06) திருக்கோவிலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து அவர் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1438227

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது நடந்திருக்கிறது....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தன்தேவை முடிந்ததும் துரோகிகளை வைவிட்டு விடும். சொந்த இனத்திற்கே விசுவாசம் இல்லாதவர்களை எந்த இனமும் மதிக்காது. அவர்களைக் கறிவேப்பிலையாகப் பாவித்து விட்டு தூக்கி எறிந்து விடும். இப்டபொழுது அருண் சித்தார்த் என்ற நபர் தமிழினத்திற்கு எதிராகச் செயற்படுகின்றார். அவருக்கும் இந்த நிலை வரும்.

  • கருத்துக்கள உறவுகள்+

பொம்பிளை கள்ளன் கைது என்று தலைப்பு போடவும்.

இவனை வீட்டை விட்டே இவரது ஊர் மக்கள் துரத்தியடித்தவை, 2012/2013 காலத்தில் - என்று எனக்கு நினைவுண்டு.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி கைது

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) திருக்கோவிலில் வைத்து கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர்வழங்கிய வாக்கு மூலத்தின் பிரகாரம் இனியபாரதியை குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவதினமான இன்று காலை திருக்கோவிலில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்து அம்பாறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றம் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றஞ்சாட்டி வருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

https://adaderanatamil.lk/news/cmcrhrjg100thqp4kfp26hu6f

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோவில் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை : இனியபாரதி, தவசீலன் ஆகிய இருவர் சிஜடியினரால் கைது

Published By: VISHNU

06 JUL, 2025 | 10:25 PM

image

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் திருக்கோவில் வைத்தும் அவரது சகாவான சசீதரன் தவசீலன்  மட்டு சந்திவெளியில் வைத்தும் இருவரையும் கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை (06)  கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்று திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக பதவியேற்றார்.

இந்த நிலையில் கடந்த 2007-6-28 ம் திகதி விநாயகபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து திருக்கோவிலுள்ள பிரதேச சபையை நோக்கி பிரயாணித்த போது அவரை விநாயகபுரம் கோரக்களப்பு வீதியில் வைத்து இனம் தெரியாத துப்பாக்கி தாரிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரது மனைவியார் படுகொலை செய்யப்பட்ட தனது கணவருக்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த விசாரணை கடந்தகால அரசாங்கத்தினால் கிடப்பில் இருந்து வந்துள்ளது.

இதனையடுத்து இந்து முறைப்பாடு தொடர்பாக அவரது மனைவியர் சிஜடி யினரிடம் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவர்கள்  விசாரணையினை மேற்கொண்டுவந்த நிலையில் இதனுடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இனிய பாரதியை சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (06) திருக்கோவில் அவரது வீட்டில் வைத்து கைது செய்ததுடன் அவருடைய சகாவான மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த சசீதரன் தவசீலன் சந்திவெளியில் அவரது வீட்டில் வைத்து சிஜடி மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைந்து கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றம் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றம் சாட்டிவருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/219343

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2025 at 18:12, புலவர் said:

சிங்களம் தன்தேவை முடிந்ததும் துரோகிகளை வைவிட்டு விடும். சொந்த இனத்திற்கே விசுவாசம் இல்லாதவர்களை எந்த இனமும் மதிக்காது. அவர்களைக் கறிவேப்பிலையாகப் பாவித்து விட்டு தூக்கி எறிந்து விடும். இப்டபொழுது அருண் சித்தார்த் என்ற நபர் தமிழினத்திற்கு எதிராகச் செயற்படுகின்றார். அவருக்கும் இந்த நிலை வரும்.

பிள்ளையானும், இனிய பாரதியும்....

தம்மை ஏவி விட்ட, சிங்களத் தலைமைகளை காட்டிக் கொடுத்தால்,

அனுர அரசில் தண்டனை குறைவாக கிடைக்கலாம்.

ஆனால் இந்த ஊத்தைவாளிகள்... தமிழரைத்தான் காட்டிக் கொடுக்குமே தவிர,

சிங்களவனை காட்டிக் கொடுக்காதுகள். அதுகளின் டிசைன் அப்பிடி.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பாரதியின் இன்னும் ஒரு சகாவான் சபாபதி மட்டு கிரான் வைத்து சிஜடி யினரால் கைது இதுவரை இனிய பாரதியின் சகாக்கள் 4 பேர் கைது  

Published By: VISHNU

29 JUL, 2025 | 08:41 PM

image

இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து  செவ்வாய்க்கிழமை (29) மாலை 4.00 மணியளவில் கொழும்பிலிருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு சிஜடி யினர் கைது செய்துள்ளனர்.

ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்த இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனையை வதைமுகாமில் இருந்து செயற்பட்டுவந்தவரும் ; இனிய பாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பா.சபாபதியை கிரான் வைரவர் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சம்பவதினமான செவ்வாய்க்கிழமை(29) மாலை 4.00 மணியளவில் சிஜடியினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை  கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை சிஜடி யினர் மேற்கொண்டுவருகின்றனர்

இதேவேளை இனியபாரதியை கைது செய்து விசாரணையின் பின்னர் இனிய பாரதியின் முன்னாள் சாரதி செந்தூரன், அவரது சாகாவான சந்திவெளியைச் சேர்ந்த சசீந்திரன் தவசீலன் மற்றும் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டவர் உட்பட இனியபாரதியின் சகாக்கள் ஆகிய 4 பேரை சிஜடி யினர் தொடர்ச்சியாக கைது செய்துவருவதையிட்டு  இனியபாரதி மற்றும் பிள்ளையானுடன் தொடர்புபட்டவர்கள் பயப் பீதியில் இருந்துவருவது குறிப்பிடதக்கது.

https://www.virakesari.lk/article/221313

  • கருத்துக்கள உறவுகள்

மனித உருவில் வலம்வந்த இந்த மிருகங்கள் செய்தவை என்னவென்று தெரிந்தும், அவர்களுக்கு வாக்களித்து அபிவிருத்தியொன்றே போதும் எமக்கு, உரிமையும் வேண்டாம், நாடும் வேண்டாம் என்று ஒரு பகுதியினர் சில காலங்களுக்கு முன்னர் ஆர்ப்பரித்து வந்தனர். இன்று இந்த மிருகங்களின் உண்மையான ரூபம் தெரிகிறது. அன்று பிரதேசவாதம் கண்களை மறைக்க கொலையாளிகளுக்கு வாக்களித்து, மகுடமும் சூட்டி அழகுபார்த்தவர்கள் என்று என்ன சொல்வார்கள் என்று கேட்க ஆவல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியபாரதி தலைமையிலான கடத்தல் வழக்கு: தம்பிலுவில் மயானத்தில் தோண்டும் நடவடிக்கை

Published By: VISHNU

31 JUL, 2025 | 06:05 PM

image

இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு  புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில்  தோண்டும் நடவடிக்கை வியாழக்கிழமை (31) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சிஐடியினர் முன்னெடுத்துள்ளனர்.

WhatsApp_Image_2025-07-31_at_16.27.50.jp

கருணா கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஐடியினர் கைது செய்தனர்.

WhatsApp_Image_2025-07-31_at_16.27.49.jp

இவர்களுடன் இனிய பாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

WhatsApp_Image_2025-07-31_at_16.27.49__2

இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலையில் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் பார்தீபன், 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற கிழக்கு பல்கலைக்ழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், 2010- ஜனவரி 26ம் திகதி ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொட ஆகியோர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிஐடி யினர் கைது செய்யப்பட்டவர்களை  குறித்த மயானத்துக்கு கடந்த இரு தினங்களாக அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடங்களை அடையாப்படுத்தினர். 

இதற்கமைய குறித்த மயான இடத்தை தோண்டி சோதனை செய்வதற்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் சி.ஐ.டி. யினர் அனுமதி கோரியதையடுத்து  நீதவான் ஏ.எல்.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா அடையானம் காண்பிக்கும் இடத்தை பெக்கோ இயந்திரம் கொண்டு இன்று பிற்பல் 2.00 மணிக்கு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது அங்கு இதுவரை எந்தவிதமான உடற்பாகங்களும் மீட்கப்படவில்லை என்பதுடன் குறித்த பகுதியில் மக்கள் திரண்டு நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.

https://www.virakesari.lk/article/221486

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியபாரதியின் இருசகாக்கள் கல்முனை மற்றும்  கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் கைது

Published By: Vishnu

31 Aug, 2025 | 06:40 PM

image

இனியபாரதியின் கல்முனையைச் சோந்த சகாவான டிலக்ஷன் கல்முனையில்  வைத்து சனிக்கிழமை (30) சிஜடியினர் கைது செய்ததுடன் வெளிநாடு தப்பி ஓடமுயற்சித்த காரைதீவைச் சேர்ந்த இன்னொரு சகாவான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் கட்டுநாயக்கா விமான நிலையத்ததில் கடந்த இருவராங்களுக்கு முன்னர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக படுகொலை செய்யப்பட்ட பிரதேசசபை தவிசாளரின் மனைவி சிஜடியிடம் முறைப்பாடு செய்திருந்தார்

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த ஜூலை 6ம் திகதி திருக்கோவில் வைத்து இனியபாரதியையும் அவரது சகாவான மட்டு சந்திவெளியைச் சேர்ச்த சசிதரன் தவசீலன் என்பவரை சந்திவெளியில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையில் திருக்கோவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் உதயகுமாரை கடந்த 2007-6-28 சம்பவதினம் வீட்டில் இருந்து வெளியே வீதியில் சென்று கொண்டிருந்தபோது அவரை வாளால் வெட்டி காயப்படுத்திய பின்னர் கைக்குண்டை வீதி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவரின் சகாவான கல்முனையைச் சேர்ந்த டிலக்ஷ்ன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் சிஜடி யினர் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளனர்

அதேவேளை இனியபாதியின் இன்னெரு சகாவான வவுணதீவு பாவக்கொடிச் சேனையைச் சேர்ந்தவரும்; காiiதீவீல் திருமணம் முடித்து வாழ்ந்துவரும் வன்னியசிங்கம் பரமேஸ்வரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்ற நிலையில் அங்குவைத்து கமந்த 12ம் திகதி சிஜடி யினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.

இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரையம் விசாரணைக்காக சிஜடி யினர் கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223872

  • கருத்துக்கள உறவுகள்

ஆக ...பிள்ளையானுக்கு மட்டும்தான் பிணை இல்லை...மற்றவை வந்தவுடன் பிணையில் போடுவினம்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.