Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-128.jpg?resize=750%2C375&ssl

2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை பரீட்சை எழுதிய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.

மேலும், ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்று மொத்தம் 13,392 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

இந்த சாதனை மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 4.15% ஆகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

https://athavannews.com/2025/1438746

எல்லாப் பாடங்களிலும் ஏ சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை வீதம் 4.15% என்பது சிறப்பானது. வாழ்த்துகள்.

இருந்தாலும் மொத்தமாகச் சித்தியடைந்த வீதம் 73.45% என்பது போதுமானதல்ல. அதிலும் தமிழர் பகுதிகளில் இன்னும் குறைவாக இருக்கலாம். உலகம் முழுவதும் கல்வித் தர நிலை உயர்ந்து வரும் நிலையில் இலங்கையிலும் கல்வி வளர்ச்சி அதிகரிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

517409111_1151282570368449_1095492040475

மாகாண ரீதியாக மாணவர் சித்தி பெற்ற சதவீதம்.

வட மாகாணம் கடைசி நிலையில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

517409111_1151282570368449_1095492040475

மாகாண ரீதியாக மாணவர் சித்தி பெற்ற சதவீதம்.

வட மாகாணம் கடைசி நிலையில் உள்ளது.

நம்ம பகுதி நிலை அந்தோ பரிதாபம்...ஊரில் நின்றபோது ..இதனை அவதானித்தேன்...கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

518270321_9721409354630703_5744176515762

வரலாற்றில் முதல் 9A

***************************

கிளிநொச்சியின் மேற்கு பகுதியில் நகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிராமம் அது. பெரிதாக எவரும் கண்டுகொள்ளாத ஊர் அது. முக்கியமாக கல்வித்துறையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை என்றால் என்ன? க.பொ.த சாதாரன தரப் பரீட்சை பெறுபேறுகள் என்றால் என்ன அந்த பாடசாலையின் பெறுபேறு என்ன என்று எவரும் கேட்டுக்கொள்வதில்லை. வலயக் கல்வி அலுவலகம் மாத்திரம் தனது புள்ளிவிபர பதிவுக்காக பெறுபேறுகளை கேட்டுகொள்வார்கள். அவ்வளவுதான்.

பாடசாலை ஆரம்பித்த 1993 என நினைக்கின்றேன். அன்று இன்று வரை வளப்பற்றாக்குறை இன்றி இயங்கிய நாட்கள் இல்லை என்றே கூற வேண்டும். 1996 கிளிநொச்சி இடப்பெயர்வுக்கு முன் அந்த பாடசாலையினை தமிழ்த்தினப் போட்டியில் சிறுவர் நாடகத்திலும், கிளித்தட்டு போட்டியிலும் அந்தப் பாடசாலையினை மாவட்ட மட்டத்தில் பலரும் திரும்பி பார்த்தனர். அப்போதே இப்படியொரு பாடசாலை இருக்கிறது என்பது ஏனைய பல பாடசாலைகளுக்கு தெரியவந்தது. அதற்காக உழைத்தவர் அப்போது அந்த பாடசாலையில் தொண்டர் ஆசிரியராக கடமையாற்றி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சிங்கராசா ஆசிரியர். அவர் அந்த ஊர் மக்களும், மாணவர்களும் சிங்கா சேர் என்று அழைப்பர்.

இதன் பின்னர் மறுபடியும் அப்பாடசாலையினை எவரும் கண்டுகொள்வதில்லை. இப்படி பல வருடங்கள் கடந்தோடிய நிலையில் தற்போது அப்பாடசாலையினை ஒரு மாணவன் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றான். சக்திவேல் குயிலன் என்ற அந்த மாணவன் தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரன தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் 9 ஏ பெறுபேறுகளை பெற்றதன் மூலம் அப்பாடசாலையின் வரலாற்றில் முதற் தடவையாக 9ஏ பெற்ற வரலாற்று சாதனையினை ஏற்படுத்தியதன் மூலமே குயிலன் பாடசாலையினையும், ஊரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறான்.

இந்த ஒரு மாணவன் பெற்ற 9 ஏ ஏன் சாதனை என்றால், வளப்பற்றாக்குறையுடன் இயங்கும் பாடசாலை கல்வியினை பிரதானமாகவும், அந்த ஊரில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் மேலதிக கல்வியையும் மட்டுமே பெற்றிருக்கிறான் குயிலன். வறுமையான குடும்பம், பெற்றோர்கள் கூலித்தொழிலை செய்கின்றவர்கள். தினமும் வேலை கிடைக்காது வரையறுக்கப்பட்ட சொற்ப வருமானம், வசதிவாய்ப்புக்கள் குறைவு, இந்த வயதில் கல்வியை குழப்பும் வகையில் கவனக் கலைப்பான்கள் அதிகம், நகர்புற பிள்ளைகள் போன்று பெற்றோர்களால் மேலதிக வகுப்பு, பிரத்தியோக வகுப்பு, அந்த பயிற்சி புத்தகம், இந்த பயிற்சி புத்தகம் என எதுவும் இல்லை, தம்பி படிச்சனீயா? என்ன படிச்சனீ? இந்த முறை எத்தனை மாக்ஸ்? என கேள்வி கேட்காத பெற்றோர்கள் என அவனை சுற்றி காணப்பட்ட அந்த சூழலுக்குள் இருந்து படித்து அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெறுவது என்பது சாதனைதானே?!

இந்த சாதனைக்கு அவனது பாடசாலையும், அந்த கவ்வி நிலையமும், படிப்பதற்கு தடை போடாத அந்த ஏழை பெற்றோரும், அவனது முயற்சியும், உழைப்பும்தான் காரணம். இதன் மூலமே அவன் சாதித்திருக்கிறான்.

அவனது இந்த சாதனையால்தான் இன்று ஊற்றுப்புலம் என்ற அந்த கிராமத்து பாடசாலையினை பலரும் திரும்பி பார்க்கின்றனர். ஊரும், பெருமைகொள்கிறது. தனது வரலாற்றில் முதல் தடவையாக ஒருவன் 9ஏ பெறுபேறுகளை பெற்றது அவர்களை பெருமை கொள்ள வைக்கிறது.

Murukaiya Thamilselvan

3 hours ago, தமிழ் சிறி said:

வரலாற்றில் முதல் 9A

***************************

கிளிநொச்சியின் மேற்கு பகுதியில் நகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிராமம் அது.

பதிவை இரண்டு முறை வாசித்து "அந்த கிராமத்தின்" பெயர் ஊற்றுப்புலம் என்று கண்டுபிடித்தேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாணவனது தகவலை படத்தோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிறியண்ண...பலதும் , பத்திலும் பகிரப்பட்டுள்ளது..எனக்கு சிலவேளைகளில் படங்களோடு தகவல்களை பகிர முடியாமல் போகிறது ஏன் என்று தெரியவில்லை.நான் உட்பட முடிந்தவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து இவ்வாறன மாணவர்களை மேற் கொண்டு கற்பதற்கு ஊக்கபடுத்த வேண்டும் என்பதற்காகவே சில விடையங்களை இங்கும் இணைப்பேன்.🖐

Edited by யாயினி

கிளி/ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை தமது முகப்புத்தகப் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்:

ஊற்றுப்புலத்தின் வரலாற்று சாதனை....

வெளியாகிய 2024(2025) க/பொ/த சாதாரண தரப்பெறுபேற்றில் எமது பாடசாலை மாணவன் செல்வன் சக்திவேல் குயிலன் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளான்

பாடசாலை சார்பாக 9A சித்தி பெறப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

மாணவனுக்கும் இச் சித்தியினை பெற அவனை நெறிப்படுத்திய எமது பாடசாலையின் மதிப்பிற்குரிய அதிபர் திரு மு.பிரேம்குமார், வகுப்பாசிரியை திருமதி பன்னீர்ச்செல்வி சிவகுமார் , ஆசிரியர்கள்,மற்றும் அவனது பெற்றோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அன்பான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.....

இவ் மாணவன் கல்விச் செயற்பாடு மட்டுமன்றி இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் நற்பண்பிலும் சிறந்து விளங்குபவர் என்பது குறிப்பிட தக்கதது

க.பொ.த உயர்தரப்பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றினை பெற இறையாசியினை வேண்டி நிற்கின்றோம்

517448302_1249115113574431_7981541861745

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.வேம்படி மகளீர் கல்லூரியின் சாதனை - 120 9ஏ சித்திகள்!

2046578807.jpeg

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் வேம்படி மகளீர் கல்லூரியில் 120 9 ஏ சித்திகளும் 36 8ஏ சித்திகளும் 25 7ஏ சித்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேம்படி மகளீர் கல்லூரியில் 265 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் மேற்குறிப்பிடப்பட்ட 181 மாணவர்களும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 

பெறுபேறுகளின் அடிப்படையில் வேம்படி மகளீர் கல்லூரியில் 100 வீத சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது என்று கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 

இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும். 

இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

https://newuthayan.com/article/யாழ்.வேம்படி_மகளீர்_கல்லூரியின்_சாதனை_-_120_9ஏ_சித்திகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

517554732_1184619970347526_2926445935410

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், முக்கிய மொழிப் பாடங்களான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் சித்தி வீதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆங்கில மொழியில் சித்தி வீதம் 73.82% ஆக கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும், பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்ப தவணை ஜூலை 14 முதல் ஜூலை 28 வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கல்லூரிகளின் சித்திகள் விபரத்தை காணவில்லையே. வேம்படி மட்டும் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

518273566_10161478520383513_152061657429

நேற்று யாழில் 9A எடுத்த மகள். இன்று தந்தை விபத்தில் பலி!

பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை, வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது. அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் நேற்று வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Selvakumar Natkunasingam 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கல்லூரிகளின் சித்திகள் விபரத்தை காணவில்லையே. வேம்படி மட்டும் உள்ளது.

மற்ற பிரபல கல்லூரிகள் எல்லாம்.. வெளியில் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லைப் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மற்ற பிரபல கல்லூரிகள் எல்லாம்.. வெளியில் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லைப் போலுள்ளது.

வடமாகாணத்தில் வேம்படி இயாழ்இந்துவைத்தவிர மற்றைய பாடசாலைகளின் பெறுபேறுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2025 at 11:18, alvayan said:

நம்ம பகுதி நிலை அந்தோ பரிதாபம்...ஊரில் நின்றபோது ..இதனை அவதானித்தேன்...கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

இதை எவ்வளவு பேர் ஆமோதிக்கிறீர்கள் என்று எனக்கு சொல்லத் தெரியாது...ஆனால் இது தான் உண்மை என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள்...கடந்த பல ஆண்டுகளாக வடக்கு மாகாணம் ஓப்பீட்டு அளவில் ஒரு ஐந்துகுள்ளயாவது வந்தது..இந்த தடவை கடசி நிலைக்கு சென்றிருப்பது புலம் பெயர் மக்களால் என்ற ஒரு குற்றச் சாட்டையும் சில இடங்களில் ஊரிலிருப்வர்கள் எழுதியிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது..எல்லாவற்றுக்கும் புலம் பெயர் சமுகம் தான் காரணம் என்றால் ஊரிலிருக்கும் பெற்றோர் என்ன தான் செய்கிறார்கள்...?

எமது பெற்றோர் காலம் அதற்கு முந்தைய காலத்தில் உள்ளவர்களின் வீடுகளில் பார்க்கப் போனால் எங்காவது ஒரு வீட்டில் தான் பல்கலைக்கழகம் போனவர்களோ அல்லது அரச உத்தியோகம் பார்த்தவர்களோ இருந்திருக்கிறார்கள்..வளம் குறைந்த காலத்தில் கூட படிக்க வேணும் என்ற ஒரு கோட்பாடோடு இருந்திருக்கிறார்கள் அந்த மக்கள்...அப்படி இல்லாது விட்டாலும் பெற்றோர் அவர்களை கல்வி என்ற ஒன்றுக்கு போக வைக்க வேணும் என்பற்காகவது 'டேய் படிக்காட்டி பிற்காலத்தில் ஆடு மாடு தான் மேய்ப்பாய் என்று பேசியாவது படிக்க வைத்த பெற்றோரும் உண்டு.

இப்போ படிக்க முடியாதவர்கள் என்று ஊரில் இருப்பவர்களை சொல்ல இயலாது....காரணம்.அனேகமான வீடுகளில் பல்கலைகழகம் போனவர்களோ அல்லது அரச வேலை செய்வோரோ தாரளாக இருக்கிறார்கள்.அப்படி இருக்கையில் ஏன் கல்வி நிலையில் பின் தங்கிப் போகிறார்கள்...உண்மையாக படிக்க வேணும் எங்கள் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்ய வேணும் என்ற நிலை அனேகருக்கு இல்லை..வெளியிலிருப்பவர்களை வெருட்டி,உருட்டியாவது பணத்திலிருந்து தேவைப்பட்ட எல்லாவற்றையும் பெற்று கொள்கிறார்கள்..18, 20 வயதுக்குள்ளயே தேவை அற்ற விடையங்களுக்கு அடிமையாகும் இளையவர்கள்..எல்லாவகையான மதுப்பாவனையும் கடந்த கிழமை கூட செய்திகளில் வந்த செய்தி மது அருந்தி விட்டு வாகன விபத்தில் இறந்த முவர்....

இந்த புலம் பெயர்ந்தவர்களும் இல்லாது விட்டால் உங்களுக்கு கேட்டதும் பணம், ஆடம்பர பொருட்கள் என்று வந்து சேராது..சிலருக்கு அலட்டல் எழுத்தாக கூட இருக்கலாம்.வெளி நாடுகளிலிருந்து பகிரப்படும் ஆலயங்களின் நேரடி அஞ்சல் பகுதிகளில் கூட ஊருலிருக்கும் சிலர் வந்து யாராவது எங்களை கூப்பிட்டு விட மாட்டீர்களா...?.ஐ போண் வேணும் வாங்கி அனுப்பி விட மாட்டீர்களா.....?இப்படி கூட தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறார்கள்..

இந்த ஆண்டு வடக்கு மாகாணம் 69-70.அடுத்து வரும் ஆண்டுகளில் எழுதக் கூடடியமாதிரியிருந்தால் ...

எழுதுகிறேன்.நன்றி.🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2025 at 16:56, நியாயம் said:

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கல்லூரிகளின் சித்திகள் விபரத்தை காணவில்லையே. வேம்படி மட்டும் உள்ளது.

517242687_1186311783537443_6295331756643

சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 82 மாணவர்களுக்கு 9 A!

Jaffna Vision

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

517242687_1186311783537443_6295331756643

சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 82 மாணவர்களுக்கு 9 A!

Jaffna Vision

பொம்பிளைப்பிள்ளைகளை பெடியள் இனி படிப்பிலை அடிக்க ஏலாது போல சிறியர். வீடுகளில் கிச்சின் டிப்பார்ட்மெண்ட் இன்னும் ஒரு 20 வருசத்தில் ஆண்களிடம் முழுதாய் வந்துவிடுமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

பொம்பிளைப்பிள்ளைகளை பெடியள் இனி படிப்பிலை அடிக்க ஏலாது போல சிறியர். வீடுகளில் கிச்சின் டிப்பார்ட்மெண்ட் இன்னும் ஒரு 20 வருசத்தில் ஆண்களிடம் முழுதாய் வந்துவிடுமோ?

நியாயம், வீடுகளில் கிச்சின் டிப்பார்ட்மெண்ட் பெடியள் கைக்கு வந்தாலும் காரியமில்லை. ஆனால்... தினமும் தொன் கணக்கில் பிடிபடும் கஞ்சா, ஐஸ் போதை வஸ்துக்களை பார்க்க, அவ்வளவு பாவனையாளர்கள் ஊரில் உள்ளார்கள் போலுள்ளது. அதிலும் பெரும்பாலானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்று பரவலாக சொல்கிறார்கள்.

அண்மையில் யாழில் ஒரு பிரபல பாடசாலையில் கல்வி கற்கும்... வடபகுதியின் அதி உயர் பதவியில் இருக்கும் ஒருவரின் மகனும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகனும்... போதைப் பொருள் பாவித்ததால், கல்லூரி நிர்வாகத்தால் எச்சரிக்கை கொடுக்கப் பட்டதாக ஒரு செய்தி வாசித்தேன்.

இப்படியே... தாராளமயமான போதைப் பொருள் புழக்கத்தால், ஒரு சமுதாயமே சீர் குலைந்தால் அதனை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது மிகவும் சிரமமான விடயம். திட்டமிட்டு இளைய சமுதாயத்தை சீர் குலைக்கின்றார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பணி புரியும் பாடசாலையில் 53 A

23 A, B

Toatal 177

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2025 at 02:01, தமிழ் சிறி said:

சிங்கள கடும் கோட்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அதிகாரத்தில் உள்ளபோது திட்டமிட்ட வகையில் தமிழ் சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை இரகசியமாக முன்னெடுப்பார்கள் என்பது ஊகிக்கக்கூடியதே. ஆனால், எங்கடையதுகள் தமது சுய நலன்களிற்காக ஏதும் செய்வார்கள் என்பதும் எதிர்பார்க்கப்படக்கூடியதே. தமிழ் சமுதாயத்தை சீரழிப்பவர்கள் வெளியாராக உள்ள தேவை இல்லை.

யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புகளிற்கு செல்லும் மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் எழுதுகோலினுள் போதைப்பொருள் வைக்கப்பட்டுள்ளதாக கூறும் ஒரு எச்சரிக்கை காணொளி எங்கோ பார்த்தேன்.

On 15/7/2025 at 02:51, தனிக்காட்டு ராஜா said:

நான் பணி புரியும் பாடசாலையில் 53 A

23 A, B

Toatal 177

53 பேருக்கு எல்லா (09 பாடங்களும் அதிவிசேட சித்தி கிடைத்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

பெடியள் உப்பிடித்தான் ஓல் எல் ல சும்மா பம்பல் அடிப்பாங்கள்…

ஆனால் ஏ எல் எண்டதும் விட்டு விளாசுவாங்கள்.

பெண்பிள்ளைகள் ஓ எல் நல்ல விலாசம் காட்டுவினம், ஆனால் ஏ எல் ல பெரிதா இராது.

இது காலாகாலமாக நடக்கும் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நியாயம் said:

சிங்கள கடும் கோட்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அதிகாரத்தில் உள்ளபோது திட்டமிட்ட வகையில் தமிழ் சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை இரகசியமாக முன்னெடுப்பார்கள் என்பது ஊகிக்கக்கூடியதே. ஆனால், எங்கடையதுகள் தமது சுய நலன்களிற்காக ஏதும் செய்வார்கள் என்பதும் எதிர்பார்க்கப்படக்கூடியதே. தமிழ் சமுதாயத்தை சீரழிப்பவர்கள் வெளியாராக உள்ள தேவை இல்லை.

யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புகளிற்கு செல்லும் மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் எழுதுகோலினுள் போதைப்பொருள் வைக்கப்பட்டுள்ளதாக கூறும் ஒரு எச்சரிக்கை காணொளி எங்கோ பார்த்தேன்.

53 ஓம் 53 பேருக்கும் 9 ஏ சித்தி பெற்றவர்கள்

12 hours ago, நியாயம் said:

53 பேருக்கு எல்லா (09 பாடங்களும் அதிவிசேட சித்தி கிடைத்ததா?

ஓம் 53 பேருக்கும் 9 ஏ சித்தி பெற்றவர்கள்

23 பேருக்கு 8ஏ பி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:
  21 hours ago, நியாயம் said:

சிங்கள கடும் கோட்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அதிகாரத்தில் உள்ளபோது திட்டமிட்ட வகையில் தமிழ் சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை இரகசியமாக முன்னெடுப்பார்கள் என்பது ஊகிக்கக்கூடியதே. ஆனால், எங்கடையதுகள் தமது சுய நலன்களிற்காக ஏதும் செய்வார்கள் என்பதும் எதிர்பார்க்கப்படக்கூடியதே. தமிழ் சமுதாயத்தை சீரழிப்பவர்கள் வெளியாராக உள்ள தேவை இல்லை.

தேசிய பாடசாலை ஒன்றில் பணிபுரிகின்றீர்கள் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

பெடியள் உப்பிடித்தான் ஓல் எல் ல சும்மா பம்பல் அடிப்பாங்கள்…

ஆனால் ஏ எல் எண்டதும் விட்டு விளாசுவாங்கள்.

பெண்பிள்ளைகள் ஓ எல் நல்ல விலாசம் காட்டுவினம், ஆனால் ஏ எல் ல பெரிதா இராது.

இது காலாகாலமாக நடக்கும் யதார்த்தம்.

👍...............

இதன் பின்னணி என்னவென்ற ஆர்வம் பல வருடங்களாகவே என் மனதில் இருக்கின்றது. அந்த நாட்களிலேயே, 80ம் ஆண்டுகளில், இப்படித்தான் நடந்தது. ஊரில் என்னுடைய வகுப்பில் சாதாரண தரத்தில் மிகத் திறமையாக சித்தி பெற்றவர்களில் பல பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். எங்களின் உயர்தரப் பரீட்சை முடிவுகளில் ஒருவர் கூட விதிவிலக்கில்லாமல் சக மாணவிகள் எல்லோரும் காணாமல் போனார்கள். மருத்துவர் ஆகப் போகின்றார், பொறியியலாளர் ஆகப் போகின்றார் என்று கூறப்பட்ட ஒரு சக மாணவி கூட அப்படி ஆகவில்லை.

சாதாரண தரத்தில் நண்பனின் மகள் ஒருவர் 9 A பெற்றிருந்தார். அவர் ஊரில் உள்ள ஒரு பாடசாலையிலேயே படித்தார். அயலூரில் இருக்கும் மெதடிஸ் பெண்கள் கல்லூரி அல்லது வேறு எந்த பெரிய பாடசாலைக்கும் அவர் போகவில்லை. இந்த வருடம் அவருடைய உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்தன. மிகவும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஊர் இணையதளங்களில் ஒரு செய்தியுமே வரவில்லை. சிறந்த பரீட்சை முடிவுகளை ஊர் இணையதளங்கள் உடனேயே போடும் காலம் இது. பின்னர் அவருடைய பரீட்சை முடிவுகள் மிகவும் குறைவு என்பது தெரியவந்தது. இன்னொரு தடவை முயற்சி செய்யுங்கள், கண்டிப்பாக நல்ல பெறுபேறுகள் கிடைக்கும் என்று பலரும் சொல்லியிருக்கின்றார்கள்.................

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரசோதரன் said:

அதுக்கு உங்களைப்போல பெடியள் தான் காரணம். சயிக்கிளில் பின்னாலை கலைச்சு உசுப்பேத்தி விட்டிடுவியள் அதுகளுக்கு தலை கால் புரியாது படிப்பை விட்டிடுங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.