Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

saro.jpg?resize=720%2C375&ssl=1

6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்.

”ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது” என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

“சிறுவர்கள்  உலகை வெல்ல வாய்ப்பளியுங்கள்” என்ற தொனிப்பொருளில்  விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற விழாவில்   கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஆரம்ப வயதுகளில் குழந்தைகள் திரைச் செயல்பாடுகளில் மட்டுமல்லாமல், கற்றல், சமூக தொடர்பு, மற்றும் விளையாட்டு போன்ற பன்முகவளர்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கான வளர்ச்சி சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

சிறுவர்களின் மனநலத்தையும், உடல் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இது தொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்” இவ்வாறு  அமைச்சர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1439988

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது” என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இதை பெற்றோர்களுக்கு சொல்லி பிரயோசமில்ல.

வேறு விளையாட்டுச் சாமான்கள் தருகிறோம்.

இனிமேல் கைபேசிகளை தொடாதீர்கள் என்று சொல்லிப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போல்ராசு புதுமையாகத்தான் யோசிக்கிறா...பிறப்புச் சான்றிதழில் அப்பன் பெயர் இல்லையென்றால்...போன் வைத்திருக்கிறபிள்ளையை யார் கண்டிக்கிறதாம்...🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, alvayan said:

போல்ராசு புதுமையாகத்தான் யோசிக்கிறா...பிறப்புச் சான்றிதழில் அப்பன் பெயர் இல்லையென்றால்...போன் வைத்திருக்கிறபிள்ளையை யார் கண்டிக்கிறதாம்...🤣

மிகவும் பிற்போக்குத் தனமான, முன் யோசனையற்ற ஒரு கருத்து இது.

தந்தையின் பெயர் இல்லாமல் பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டிய நிலைமைகள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றன. இதில் பிறக்கும் பிள்ளைக்கு பல சமூக, வேலை வாய்ப்பு நிலை, சில சமயம் குடிவரவு நிலைகளில் கூட சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்காகத் தான் தந்தை பெயரை optional ஆக மாற்றும் தீர்வு.

தாயகத்திலும், புலத்திலும் தனியே தாயினால் வளர்க்கப் பட்டு சிறப்பாக வாழும் பிள்ளைகளை நீங்கள் இது வரை கண்டதேயில்லைப் போல!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்.

கைத்தொலைபேசி வந்த பின் மனிதர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விட்டது.

ஊமை வாழ்க்கை போல் இருக்கின்றது. குடும்பங்களுக்குள் அன்னியோன்னிய உறவாடல் இல்லை.மன உழைச்சல் அதிகம்.உடல் நலமும் கெட்டுப்போகின்றது.

பெரியவர்கள் அவசர தேவைகளுக்கு மட்டும் கைத்தொலைபேசி பாவித்தால் நல்லது. சிறியவர்கள் ஆபத்தான நிலைகளுக்கு பாவிக்கலாம்.

https://youtube.com/shorts/I2O5lLF0aJM?si=pqRDg48tlbQJP-F0

https://youtube.com/shorts/OLJKeGCmhbo?si=bq3XRg2_LUwc32cx

https://youtube.com/shorts/-zl9GSXZacA?si=N1qpux0XzN8lf7n-

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, Justin said:

மிகவும் பிற்போக்குத் தனமான, முன் யோசனையற்ற ஒரு கருத்து இது.

தந்தையின் பெயர் இல்லாமல் பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டிய நிலைமைகள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றன. இதில் பிறக்கும் பிள்ளைக்கு பல சமூக, வேலை வாய்ப்பு நிலை, சில சமயம் குடிவரவு நிலைகளில் கூட சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்காகத் தான் தந்தை பெயரை optional ஆக மாற்றும் தீர்வு.

தாயகத்திலும், புலத்திலும் தனியே தாயினால் வளர்க்கப் பட்டு சிறப்பாக வாழும் பிள்ளைகளை நீங்கள் இது வரை கண்டதேயில்லைப் போல!

என்னுடைய பிற்போக்குத்தனம் இருக்கட்டும்....இலங்கை போன்ற நாட்டுக்கு ...தந்தை பெயர் அற்ற குழந்தை முறை அனாவசியமானது...இதனைவிட எத்தனையோ தேவைகள் நாட்டில் இருக்கின்றன ...முதலில் அதில் கவனம் செலுத்தலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரோஜா சாவித்திரி போல்ராஜ் முன்மொழியும் திட்டங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான விடயங்களாக இருக்கின்றன. இன்றே இவற்றை முன்மொழிந்து சட்டங்கள் ஆக்கினால், இனிவரும் காலங்களில் இவை பயன்களைக் கொடுக்கும். ஒரு மரத்தை நடுவது போல.

ஆண்களால் சிலவற்றை சீரணிக்க முடியாமலேயே இருக்கப் போகின்றது. மனங்களை விசாலமாக்கி, இவற்றை ஏற்றுக் கொள்வது தான் இங்கிருக்கும் ஒரே வழி.

சில வருடங்களின் முன் என்று நினைக்கின்றேன். கனடாவில் ஓரு பெண் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தார். அந்த திருமணம் ஒரு திருமண விழாவாகவே நடந்தது. ஆனால் சமூக ஊடகங்களில் வந்த எதிர்ப்பு மிகப் பெரியது. ஆண்களின் எதிர்ப்புக் குரல்களே அதிகமாக இருந்தன. நாங்கள் அப்படியே அங்கங்கே தேங்கி நின்று விட்டோம் என்று தோன்றியது. ஆனால் காலம் தேங்கி நிற்பதில்லை, பின்னுக்கும் போவதில்லை. நாங்கள் தான் ஓடிப் போய் பிடிக்கவேண்டும்.

அந்த திருமணத்தில் நான் உணர்ந்த ஒரு விடயம்: அந்த இரு பெண்களுக்கும் உலகெங்கும் இருந்து எம் பெண்கள் கொடுத்த ஆதரவு.

பிறப்புச் சான்றிதழில் ஏன் ஆணின் பெயர் அவசியமில்லை என்பதற்கான தேவைகளில் இதுவும் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

என்னுடைய பிற்போக்குத்தனம் இருக்கட்டும்....இலங்கை போன்ற நாட்டுக்கு ...தந்தை பெயர் அற்ற குழந்தை முறை அனாவசியமானது...இதனைவிட எத்தனையோ தேவைகள் நாட்டில் இருக்கின்றன ...முதலில் அதில் கவனம் செலுத்தலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து..

"தந்தை பெயரற்ற குழந்தை முறை" 😂 அதென்ன "முறை"? அரசாங்கம் செயற்கை முறை மூலம் பெண்களைக் கருவுறச் செய்யும் முறையா அல்லது பொஸ்னியாவில் போர்க்காலத்தில் சேர்பியர்கள் செய்தது போல பெண்களை சிறைப் பிடித்து, கட்டாயமாக கருவுறச் செய்த பின்னர் வெளியே விடும் முறையா?

சமூகத்தில் தந்தையின் அடையாளம் தெரியாத குழந்தைகள் அல்லது ரசோதரன் மேலே சொல்லியிருப்பது போன்ற முறைகளில் வரும் குழந்தைகளுக்கு தந்தையின் பெயர் தேவையில்லாமல் ஆவணங்கள் கொடுப்பது இலங்கை சமூகத்திற்கு அவசியமில்லை என்கிறீர்களா? உங்களிடம் இருப்பது பிற்போக்குத் தனம் மட்டுமல்ல! ஊர் உலகத்தில் நிகழ்பவை பற்றித் தெரியாத அல்லது தெரிந்தும் அக்கறையில்லாத அலட்சியமும் நிறைந்திருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

சரோ அக்கா முன்மொழிவுகள் எல்லாம் வரவேற்கத்தக்கன.

ஆனால் தன் கட்சிகார நண்பர் பெண் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அக்கா வழமையான இலங்கை அரசியல்வாதி போலவே நீதிக்கு புறம்பாக நடந்து கொண்டார்.

ஊருக்குத்தான் உபதேசம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரம் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் இருந்து கொண்டு ஒரு மாணவிக்கு நடந்த அநீதி தனது கட்சிகாரரினால் நடத்தபட்டதினால் அவரை பாதுகாப்பதற்காக மோசமா நடந்து கொண்டவர் 👎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சரோ அக்கா முன்மொழிவுகள் எல்லாம் வரவேற்கத்தக்கன.

ஆனால் தன் கட்சிகார நண்பர் பெண் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அக்கா வழமையான இலங்கை அரசியல்வாதி போலவே நீதிக்கு புறம்பாக நடந்து கொண்டார்.

ஊருக்குத்தான் உபதேசம்.

25 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதே நேரம் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் இருந்து கொண்டு ஒரு மாணவிக்கு நடந்த அநீதி தனது கட்சிகாரரினால் நடத்தபட்டதினால் அவரை பாதுகாப்பதற்காக மோசமா நடந்து கொண்டவர் 👎

இந்த விடயத்தில் சரோஜா சாவித்திரி போல்ராஜும், ஜேவிபி கட்சியினரும் நடந்து கொண்ட விதம் மோசமானதே. அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். பின்னர் இந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போய்விட்டது...........................😒.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.