Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவில் நிலநடுக்கம், அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

பட மூலாதாரம், REUTERS

30 ஜூலை 2025, 02:28 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) கூறியுள்ளது.

இவற்றுள், ஃபுகுஷிமா டாய்ச்சி என்பது 2011ஆம் ஆண்டு ஜப்பானை தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட அணுமின் நிலையமாகும்.

ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ள இரு அணுமின் நிலையங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அங்கே எந்தவொரு அசாதாரண சூழலும் இல்லை என்றும் டெப்கோ கூறியுள்ளது. ஆனாலும் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தில் சேதமடைந்த எரிபொருள் சிதைவுகளை முழுமையாக அப்புறப்படுத்தும் பணி 12 முதல் 15 ஆண்டுகள் தாமதமாகும் என்று டெப்போ இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அந்த அணுமின் நிலையத்திற்குள் கதிர்வீச்சு அளவு குறைவதற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பதே இதற்குக் காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

ரஷ்யாவில் நிலநடுக்கம், அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்யாவின் காம்ச்சாட்கா பிராந்திய கடற்கரை

முன்னதாக, ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 என்கிற அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் பெட்ரோபாவ்லாவ்ஸ்க் - காம்ச்சாட்ஸ்கி என்ற இடத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் அளவை முதலில் 8.7 புள்ளிகளாக கணித்திருந்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் தனது கணிப்பை 8.8 என்பதாக திருத்தியது.

"கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது"

இந்த நிலநடுக்கத்தால் காம்ச்சாட்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் வரை சுனாமி அலைகள் எழுந்ததாக அந்த பிராந்திய அமைச்சர் செர்கெய் லெபெடெவ் தெரிவித்துள்ளார்.

இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் ஒரு குழந்தைகள் பள்ளி சேதடைந்தது என்று அவர் கூறியுள்ளார்.

"இன்றைய நிலநடுக்கம் மிகத் தீவிரமானது மற்றும் கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது" என்று காம்ச்சாட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

ஜப்பானில் மக்களுக்கு எச்சரிக்கை

ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று கருதப்பட்ட பல நூறு கிலோமீட்டர் நீண்ட கடற்கரைப் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

"பாதுகாப்பான, மேடான இடங்களுக்குச் செல்லுங்கள். சுனாமி அலைகள் விரைவிலோ அல்லது சற்று நேரத்திற்குப் பிறகோ தாக்கக் கூடும். எச்சரிக்கை அமலில் இருக்கும் வரை பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்து இருங்கள்" என்று ஜப்பானின் அந்த எச்சரிக்கை அறிவிப்பு கூறுகிறது.

சுனாமி அலைகள் 3 அல்லது 4 மீட்டர் வரை எழக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவில் நிலநடுக்கம், அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்

  • ஜப்பான்: ஹொக்கைடோ முதல் கியூஷு வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதேநேரத்தில் ஜப்பானின் பிற பகுதிகளில் குறைந்த அளவிலான எச்சரிக்கைகள் அமலில் உள்ளன

  • அமெரிக்காவின் மேற்கு கடற்கரை முழுவதும்

  • அலாஸ்காவின் தொலைதூர அலூடியன் தீவுகள்

  • ஹவாய்

  • குவாம்

ஈக்வெடார் நாட்டையும் 10 அடி உயர சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் கரையோர நாடுகள் பலவற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g62665l9do

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு என்ன மாதிரி மீண்டும் வந்தால் இன்னும் இழக்கப்போவது நாம் தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கைக்கு என்ன மாதிரி மீண்டும் வந்தால் இன்னும் இழக்கப்போவது நாம் தான்

பிரச்சனை இல்லையாம், எதற்கும் கவனமாக இருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கைக்கு என்ன மாதிரி மீண்டும் வந்தால் இன்னும் இழக்கப்போவது நாம் தான்

இந்தியப் பெருங்கடலுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

Published By: DIGITAL DESK 3

30 JUL, 2025 | 08:54 AM

image

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து  ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளை சுனாமி தாக்கலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதேவேளை, இந்திய பெருங்கடலுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என இந்தோனேசியாவில் உள்ள அதன் சுனாமி சேவை வழங்குநர் (InaTEWS-BMKG) ஊடாக இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு (IOTWS) உறுதிப்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/221332

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-387.jpg?resize=750%2C375&ssl

அமெரிக்காவை தாக்கத் தொடங்கியுள்ள சுனாமி அலைகள்!

ரஷ்யாவின் கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உண்டான சுனாமி அலைகள் அமெரிக்காவின் ஹவாயை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஹவாய் அருகே 6 அடி (1.8 மீ) உயரம் வரை சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கம்சட்காவில் 3-4 மீ (10 முதல் 13 அடி) உயரத்திலும், ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் 60 செ.மீ (2 அடி) உயரத்திலும், அலாஸ்காவின் அலூடியன் தீவுகளில் அலை மட்டத்திலிருந்து 1.4 அடி (30 செ.மீ க்கும் குறைவான) உயரத்திலும் சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன.

2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகின் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று புதன்கிழமை (30) அதிகாலை ரஷ்யாவின் தூர கிழக்கைத் தாக்கியது.

8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கம்சட்கா தீபகற்பத்தை உலுக்கி, வடக்கு பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியது.

1952 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பகுதியில் ஏற்பட்ட மிக வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடுமையான பின்னதிர்வுகள் ஏற்பட்டன.

நில அதிர்வு நிபுணர்கள் வரும் வாரங்களில் 7.5 ரிக்டர் அளவு வரை மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.

வடக்கு குரில்ஸ்கைத் தாக்கிய சுனாமி அலை, குடியேற்றத்தின் சில பகுதிகளையும் உள்ளூர் மீன்பிடி வசதியையும் வெள்ளத்தில் மூழ்கடித்தது.

கம்சட்கா, குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் அலாஸ்கா, ஹவாய் மற்றும் நியூசிலாந்து வரை சுனாமி எச்சரிக்கைகள் ஒலித்தன.

https://athavannews.com/2025/1441188

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலிபோர்னியாவில் சுனாமி அலைகள்

30 JUL, 2025 | 02:01 PM

image

அமெரிக்க தேசிய வானிலை சேவையின்படி சுனாமி கலிபோர்னியாவின் கடற்கரையை அடைந்துள்ளது

இது மாநிலத்தின் வடக்கே உள்ள அரினா கோவ் மற்றும் மான்டேரியில் தோன்றி மேலும் கீழ்நோக்கிச் செல்கிறது என்று அமெரிக்க தேசிய வானிலை சேவைதெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஓரிகான் எல்லைக்கு அருகிலுள்ள கிரசென்ட் நகரில், நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கலிபோர்னியா தனது முதல் சுனாமி அலைகளைக் காணத் தொடங்கியுள்ளது.

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தரவுகளின்படி, 1 அடிக்கு மேல் அலை காணப்பட்டுள்ளது, விரைவில் அதிக அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த நகரம் வடக்கு கலிபோர்னியாவின் கடற்கரையின் 100 மைல் நீளத்தில் அமைந்துள்ளது, இது மிக உயர்ந்த எச்சரிக்கை மட்டமான சுனாமி எச்சரிக்கையின் கீழ் உள்ளது. இந்த பகுதியின் தனித்துவமான நீருக்கடியில் புவியியல் "அலை ஆற்றலை புனலப்படுத்தும்" திறனைக் கொண்டிருப்பதால், இந்த பகுதி உயர்ந்த சுனாமி அபாயத்தில் உள்ளது என்று தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/221367

கலிபோர்னியாவில் வசிக்கும் நம்மகள உறவுகள் அவதானமாக இருங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

8.8 magnitude earthquake off Russia's coast prompts tsunami warnings in Alaska, Hawaii

Approximately 5,000 miles away, the earthquake was picked by a seismograph operated by the University of Pittsburgh at the Allegheny Observatory.

  • கருத்துக்கள உறவுகள்

ரசியாவில் நடுங்கினா அமெரிக்கா ஜப்பானில் மக்கள் ஓடுகிறார்கள். இதில் நான் பெரிசு நீ பெரிசு நாங்கள் தான் வீரர்கள் என்றபடி...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ரசியாவில் நடுங்கினா அமெரிக்கா ஜப்பானில் மக்கள் ஓடுகிறார்கள். இதில் நான் பெரிசு நீ பெரிசு நாங்கள் தான் வீரர்கள் என்றபடி...

இயற்கையின் மாற்றங்கள் இயல்பானது, இந்த கண்ட மேடை நகர்வுகள் ( டெக்டோனிக் பிளேட்) தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது இதனாலேயே மலைகளும் மடுக்களும் உருவானது, மயோசின் காலத்தில் கடலின் கீழே இருந்த யாழ்ப்பாணம் தரையுயர்தல் மூலம் உருவாகியது இதனாலேயே கடல் வாழ் உயிரினங்களின் எச்சங்களின் தோற்றுவாயாக சுண்ணாம்புக்கல் நிலப்பிரதேசமாக யாழ்ப்பாணம் இருந்து வருகிறது, இயற்கை இவ்வாறிருக்க அங்கு வாழும் மனிதர்கள் ஆளுக்கொரு சாதியினை எவ்வாறு உருவாக்கினார்கள், வானத்திலிருந்து குதித்தார்களா? அல்லது வந்தேறு குடிகளா?

  • கருத்துக்கள உறவுகள்

பாரதூரமான சேதங்கள் எதுவும் இல்லை. சுனாமி எச்சரிக்கை மீளப்பெறப்பட்டு விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலை அதிர வைத்தது எப்படி - முழு விவரம்

30 ஜூலை 2025

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11.25 மணிக்கு 8.8 அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் பெட்ரோபாவ்லாவ்ஸ்க் - காம்ச்சாட்ஸ்கி (Petropavlovsk-Kamchatsky) என்ற இடத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து.

நிலநடுக்கம் காரணமாக ரஷ்யாவின் கம்சட்கா க்ரே பகுதியில் கட்டடங்கள் குலுங்கின, கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பின.

ரஷ்யாவின் சகின் மாகாணத்தில் உள்ள வட குரில்ஸ் தீவுகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் சுனாமி அலைகள் புகுந்தன.

நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் கம்சாட்கா விமான நிலையத்தின் கூரை பெயர்ந்து விழுந்தது.

ரஷ்யாவின் ஏற்பட்ட நிலநடுத்தத்தைத் தொடர்ந்து ஜப்பானின் ஹூக்கைடோ (Hokkaido) முதல் கியூஷு வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, அலாஸ்காவின் தொலைதூர அலூடியன் தீவுகள், ஹவாய், குவாம் ஆகிய பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக அமெரிக்காவின் ஹவாயில் 4 முதல் 6 அடி உயரம் வரை அலைகள் எழும்பின.

ஹவாய் துறைமுகத்தில் உள்ள அனைத்து வணிக கப்பல்களை அப்புறப்படுத்த வேண்டும் என அமெரிக்கக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டதை அடுத்து ஹவாயின் நஹாலேயூ Naalehu பகுதியில் சைரன் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது.

மேலும் கரையோரம் இருக்கும் கப்பல்கள் சுனாமி அலைகள் கடந்து செல்கிற வரை கடலுக்குள்ளே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈக்வடார், வடமேற்கு ஹவாய் தீவுகள் மற்றும் ரஷ்யாவின் சில கடற்கரைகளில் மூன்று மீட்டருக்கும் அதிகமான உயர அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை மையங்கள் தெரிவித்துள்ளன.

இதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியா, கொலம்பியா, மெக்சிகோ, நியூசிலாந்து, டோங்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பிற இடங்களில் ஒரு மீட்டர் வரை அலைகள் எழக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சுனாமி எச்சரிக்கை காரணமாக ஜப்பானில் 19 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கைக் காரணமாக ஜப்பானின் தெற்கு பகுதிகளில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, கடைகள் அடைக்கப்பட்டன.

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களிலிருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) கூறியுள்ளது.

இவற்றுள், ஃபுகுஷிமா டாய்ச்சி என்பது 2011ஆம் ஆண்டு ஜப்பானைத் தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையமாகும்.

ஜப்பானின் வடக்கு பகுதியில் 30 செண்டிமீட்டர் முதல் 40 செண்டி மீட்டர் உயர சுனாமி அலைகள் தாக்கின. இதுவரை எவ்வித பாதிப்போ உயிரிழப்போ ஏற்படவில்லை என ஜப்பானின் முதன்மை கேபினட் செயலாளர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட ஒரு பெரிய நிலநடுக்கம் காரணமாக, ஹவாயில் (Hawaii) சுனாமி எச்சரிக்கை அமலில் உள்ளது. அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் பசிபிக் கரையோர பகுதிகளில் சுனாமி கண்காணிப்பு அமலில் உள்ளது" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjr14py4541o

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2025 at 03:06, விசுகு said:

ரசியாவில் நடுங்கினா அமெரிக்கா ஜப்பானில் மக்கள் ஓடுகிறார்கள். இதில் நான் பெரிசு நீ பெரிசு நாங்கள் தான் வீரர்கள் என்றபடி...

இயற்கைக்கும் இறைவனுக்கும் முன் இவர்கள் ஒன்றுமேயில்லை. அதை உணரும் வரும்வரை ஆடுவார்கள். அவையும் ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.