Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

22 AUG, 2025 | 02:19 PM

image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223100

  • Replies 99
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி.... எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார்.

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    கைதாவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ராஜபக்கச குடும்பம் தப்ப எதிர்பாராமல் ரணில் கைதாகியுள்ளார். அடுத்த தேர்தலில் வெல்ல இது ஒன்றே போதும்.

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ஆஹா.... இந்தப் படங்களைப் பார்க்க அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. 👍 மகிந்த, கோத்தா.... ஆகியோர், "உச்சா" போகும் நிலையில் உள்ளதாக சொல்கிறார்கள். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இன்று (22) பிற்பகல் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

ஜூன் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆவணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தது.

அதைத் தொடர்ந்து, விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

இந்தநிலையில் விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி முன்னாள் ஜனாதிபதியும் அந்த திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய நிலையில் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmemmvd94000yqpu7tnp4776y

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-213.jpg?resize=750%2C375&ssl

ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது.

அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு அவர் ஜனாதிபதியாக பணியாற்றியபோது மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுடன் தொடர்புடையது.

குற்றப் புலனாய்வுப் பிரிவில் இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னரே 76 வயதான முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி மக்கள் எழுச்சியைத் தூண்டிய வேளையில் அவரது முன்னோடி கோத்தபய ராஜபக்ஷ தப்பி ஓடி, பதவி விலகி தொடர்ந்து 2022 முதல் 2024 வரை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பணியாற்றினார்.

வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை மீண்டும் பொருளாதார மீட்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவியதற்காக அவர் பரவலாகப் பாராட்டப்பட்டார்.

1990 ஆம் ஆண்டு முதல் ஆறு தனித்தனி சந்தர்ப்பங்களில் அவர் பிரதமராகப் பணியாற்றினார்.

ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 23 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான செலவு 600 மில்லியன் ரூபாவுக்கும் ($2 மில்லியன்; £1.4 மில்லியன்) அதிகம் என மதிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட கைது, 2023 ஆம் ஆண்டு கியூபாவில் நடந்த G77 உச்சிமாநாட்டிலிருந்து ரணில் விக்ரமசிங்க திரும்பி வரும் வழியில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தனி நிகழ்வுடன் தொடர்புடையது என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில், அவரும் அவரது மனைவியும் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிஐடியின் தகவலின்படி, லண்டன் பயணத்தினால் அரசாங்கத்திற்கு சுமார் ரூ. 16.9 மில்லியன் செலவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரை புலனாய்வாளர்கள் விசாரித்திருந்தனர்.

எவ்வாறெனினும், ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது.

https://athavannews.com/2025/1444228

  • கருத்துக்கள உறவுகள்

image_0a7cea9ffa.jpg?resize=630%2C355&ss

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் முன்நிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1444292

  • கருத்துக்கள உறவுகள்

Ranil-Wickremesinghe.jpg

இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி....

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார். 😂 🤣

Anusha Nadarajah

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

Ranil-Wickremesinghe.jpg

இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி....

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார். 😂 🤣

Anusha Nadarajah

கைது செய்யப்பட்டவுடன் ..அந்த இடத்தில் பிணையாகி ...விடுதலை...செய்யப்பட்ட பிரமுகரும் கூட..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Ranil-Wickremesinghe.jpg

இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி....

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார். 😂 🤣

Anusha Nadarajah

கைதாவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ராஜபக்கச குடும்பம் தப்ப

எதிர்பாராமல் ரணில் கைதாகியுள்ளார்.

அடுத்த தேர்தலில் வெல்ல இது ஒன்றே போதும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது - இலங்கை வரலாற்றில் முதன்முறை; என்ன காரணம்?

ரணில் விக்ரமசிங்க (கோப்புப்படம்)

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க (கோப்புப்படம்)

22 ஆகஸ்ட் 2025, 09:00 GMT

புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

(இது, சமீபத்திய செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

எனினும், முன்னாள் ஜனாதிபதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பில் உள்ளகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜராகியிருந்தார்.

ரணில் விக்ரமசிங்கவிடம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

தனது மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்கு , அரச நிதியை பயன்படுத்தி விஜயம் மேற்கொண்டதாக கூறப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்திருந்தது.

இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சென்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்துக்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 09 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்றைய தினம் கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

முதல் சந்தர்ப்பம்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக முன்னான் ஜனாதிபதி ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் 1978ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டமே தற்போது நாட்டில் அமலில் உள்ளது.

இந்த அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு அதிவுயர் அதிகாரமான நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை கொண்டு வரப்பட்டதன் பின்னர், ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு பின்னர் தற்போது அநுர குமார திஸாநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளில் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

எனினும், வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா

பட மூலாதாரம், PRADEEPA MAHANAMAHEWA

படக்குறிப்பு, சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய முடியுமா?

முன்னாள் ஜனாதிபதி ஒருவரை கைது செய்யும் அதிகாரம், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் பிபிசி தமிழ், மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான பிரதீபா மஹனாமஹேவாவிடம் வினவியது.

''ஜனாதிபதி ஒருவருக்கு விசேட சிறப்புரிமை உள்ளது என 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 7வது சரத்தில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்புரிமையின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அவரது பதவி காலத்தில் எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை பதிவு செய்ய முடியாது என 35/1 சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது." என்றார்.

எனினும், அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைய, அவரது பதவிக் காலத்திற்குள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கும் பட்சத்தில், அவருக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்று தாக்கல் செய்ய முடியாத பட்சத்திலும் அவருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியும் என அவர் விளக்குகிறார்.

''ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலத்திற்குள் மாத்திரமே சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியாது. அவரது பதவியிலிருந்து அவர் விலகியதன் பின்னர் அல்லது ராஜினாமா செய்த பின்னர் அவர் பதவிக் காலத்தில் விடுத்த சிவில் அல்லது குற்றவியல் தவறுகளுக்கு வேறொரு தரப்பினரால் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதில் எந்தவித தடங்கல்களும் இல்லை. நீதிமன்றத்தில் பீ (B) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதியின் பிரத்யேக செயலாளர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கோட்டை நீதவானின் அனுமதியுடனேயே முன்னாள் ஜனாதிபதியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது." என அவர் தெரிவித்தார்.

அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்பது தெரியவரும் பட்சத்தில், போலீஸாரினால் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் போலீஸ் பிணை அவருக்கு வழங்க போலீஸாருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் கூறுகிறார்.

"அதனாலேயே நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார். 1999ம் பிணை சட்டத்திற்கு அமைய அவருக்கு பிணை கோரிக்கை முன்வைக்கப்படும்.'' எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cqle7lp593lo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

கைதாவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ராஜபக்கச குடும்பம் தப்ப

எதிர்பாராமல் ரணில் கைதாகியுள்ளார்.

அடுத்த தேர்தலில் வெல்ல இது ஒன்றே போதும்.

அடிப்படையில் ரணில் ஊழல்வாதியல்ல என்பதை எவரும் அறிந்திருந்தபோதும் பழக்கப்பட்ட ஒரு துஷ்பிரயோகத்துக்கு அவரும் பங்காளியாகியிருக்கிறார்.

ரணிலை விட பல மடங்கு துஷ்பிரயோகம் செய்திருக்கும் ஒருவரை கைது செய்வதற்கான ஒரு ஆரம்ப எச்சரிக்கையாக இதனை எடுத்துக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. நாளைக்கு பிக்குமார்களையும், முன்னாள் இராணுவத்தினரையும், இனவாத சக்திகளையும் திரட்டிக்கொண்டு அக்கைதுக்கு எதிராக ராஜபக்சவினர் கிளர்வதாயின் அதற்கான மனப்பக்குவத்துக்கு தயார்படுத்த ரணிலின் இந்த கைது கணிசமான அளவு உதவும்.

1815ல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க

2025ல் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையை ஆட்சி செய்த அதியுயர் பதவியில் இருந்தவர்களில்

1815ல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ஆங்கிலேயரால் சிறைப்பிடிக்கப்பட்ட பின், 2025ல் சுமார் 210 ஆண்டுகளுக்கு பின்னராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதாகியுள்ளார்.

இடைப்பட்ட காலத்தில் பிரித்தானிய தேசாதிபதிகளும், 1948 சுதந்திரத்தின்பின் பிரதமர்களும், 1978 அரசியலமைப்பின்பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளும் இலங்கை ஆட்சிக்கு தலைமைவகித்தபோதிலும் எவரும் எக்காரணத்துக்காகவும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

ரணில் கைது செய்யப்பட்டமை இலங்கையின் மன்னராட்சி காலத்துக்கு பின்னரான - மக்களாட்சி காலத்தின் முதலாவது அரச தலைவர் கைது என்பது ஓர் வரலாறு.

இனித்தான் சட்டப்புத்தகங்களும், அரசியலமைப்பின் பக்கங்களும் தீவிரமாக ஆராயப்படப் போகின்றன. குறிப்பாக அரசியலமைப்பின் 35வது சரத்து.

பிரதி

வட்சப்பில் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஏராளன் said:

அடிப்படையில் ரணில் ஊழல்வாதியல்ல என்பதை எவரும் அறிந்திருந்தபோதும் பழக்கப்பட்ட ஒரு துஷ்பிரயோகத்துக்கு அவரும் பங்காளியாகியிருக்கிறார்.

ரணிலை விட பல மடங்கு துஷ்பிரயோகம் செய்திருக்கும் ஒருவரை கைது செய்வதற்கான ஒரு ஆரம்ப எச்சரிக்கையாக இதனை எடுத்துக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. நாளைக்கு பிக்குமார்களையும், முன்னாள் இராணுவத்தினரையும், இனவாத சக்திகளையும் திரட்டிக்கொண்டு அக்கைதுக்கு எதிராக ராஜபக்சவினர் கிளர்வதாயின் அதற்கான மனப்பக்குவத்துக்கு தயார்படுத்த ரணிலின் இந்த கைது கணிசமான அளவு உதவும்.

1815ல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க

2025ல் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையை ஆட்சி செய்த அதியுயர் பதவியில் இருந்தவர்களில்

1815ல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ஆங்கிலேயரால் சிறைப்பிடிக்கப்பட்ட பின், 2025ல் சுமார் 210 ஆண்டுகளுக்கு பின்னராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதாகியுள்ளார்.

இடைப்பட்ட காலத்தில் பிரித்தானிய தேசாதிபதிகளும், 1948 சுதந்திரத்தின்பின் பிரதமர்களும், 1978 அரசியலமைப்பின்பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளும் இலங்கை ஆட்சிக்கு தலைமைவகித்தபோதிலும் எவரும் எக்காரணத்துக்காகவும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

ரணில் கைது செய்யப்பட்டமை இலங்கையின் மன்னராட்சி காலத்துக்கு பின்னரான - மக்களாட்சி காலத்தின் முதலாவது அரச தலைவர் கைது என்பது ஓர் வரலாறு.

இனித்தான் சட்டப்புத்தகங்களும், அரசியலமைப்பின் பக்கங்களும் தீவிரமாக ஆராயப்படப் போகின்றன. குறிப்பாக அரசியலமைப்பின் 35வது சரத்து.

பிரதி

வட்சப்பில் வந்தது.

இதைத் தான் நானும் எண்ணினேன்.

நுhல் விட்டுப் பார்க்கிறார்களோ?

36 minutes ago, ஏராளன் said:

ரணில் கைது செய்யப்பட்டமை இலங்கையின் மன்னராட்சி காலத்துக்கு பின்னரான - மக்களாட்சி காலத்தின் முதலாவது அரச தலைவர் கைது என்பது ஓர் வரலாறு.

சாதனை செய்வதில் ரணில் வல்லவர்.

  • கருத்துக்கள உறவுகள்

பார் லைசன்ஸ் வாங்கின ஆக்கக்களுக்கும் அவையிண்ட எடுபிடுகளுக்கும் இப்ப வயித்தைக் கலக்கிக்கொண்டிருக்கும். 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு விளக்கமறியல்!

Published By: VISHNU

22 AUG, 2025 | 10:39 PM

image

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

லண்டனுக்கு ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) சென்றிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

166 இலட்சம் ரூபா பொதுமக்கள் பணத்தை முறையற்ற  விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டது.

குறித்த பிணை தொடர்பில் மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் தீலிப்ப பீரிஸ் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து  குறித்த பிணை வழங்கலில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பலத்த இழுபறிக்குப் பின்னர் இரவு 10 மணியளவில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223141

கை விலங்கிடப்பட்டு சிறை செல்கிறார் ரணில்

Published By: VISHNU

22 AUG, 2025 | 11:13 PM

image

166 இலட்சம் ரூபா பொதுமக்கள் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அவர் கை விலங்கிடப்பட்டு சிறைச்சாலை பேருந்தில் கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டார்.

முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

லண்டனுக்கு ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) சென்றிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/223143

  • கருத்துக்கள உறவுகள்

சுத்துமாத்து சுமந்திரன்.... தனது பின்கதவு ஆருயிர் நண்பர் ரணில் சிறை செல்வதை இட்டு, ஹர்த்தால் செய்யவில்லையா. 😂 அல்லது ஏற்கெனவே அறிவித்த ஹர்த்தாலில் வாங்கிய மரண அடியில் இருந்து இருந்து இன்னும் மீளவில்லையோ. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Home > செய்திகள் >

விலங்கிடப்பட்டு, சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்டு, வெலிக்கடையில் அடைக்கப்பட்ட ரணில்

Friday, August 22, 2025 செய்திகள்

537534158_1397280941756167_4629394504337853715_n.jpg


கை விலங்கிடப்பட்டு, சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்ட ரணில், வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.


534571086_1954573701964814_4343919429716823007_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, alvayan said:

Home > செய்திகள் >

விலங்கிடப்பட்டு, சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்டு, வெலிக்கடையில் அடைக்கப்பட்ட ரணில்

Friday, August 22, 2025 செய்திகள்

537534158_1397280941756167_4629394504337853715_n.jpg


கை விலங்கிடப்பட்டு, சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்ட ரணில், வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.


534571086_1954573701964814_4343919429716823007_n.jpg

ஆஹா.... இந்தப் படங்களைப் பார்க்க அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. 👍

மகிந்த, கோத்தா.... ஆகியோர், "உச்சா" போகும் நிலையில் உள்ளதாக சொல்கிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

ssssssssss.jpg?resize=750%2C375&ssl=1

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 26 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

இன்று மதியம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1444328

  • கருத்துக்கள உறவுகள்

537625730_788953290471841_59794391537354

காலம் - 13 நவம்பர் 1989 இடம் - பட்டலந்தை வதைமுகாம்

விஜயவீரா- என்னை சட்டப்படி நீதிமன்றில் நிறுத்துங்கள். நான் என் கருத்தை அங்கு கூறுகின்றேன்.

ரணில் - சட்டமாவது மயிராவது. உனது தோழர்கள் 60ஆயிரம் பேரை எப்படி கொன்று புதைத்தோமோ அதேபோன்று உன்னையும் கொல்லப் போகின்றோம்.

விஜயவீரா- இதற்குரிய பதிலை என் தோழர்கள் ஒருநாள் தருவார்கள்.

காலம் - 22 ஆகஸ்டு 2025 இடம் - கொழும்பு நீதிமன்றம்.

அரசு பணத்தை தமது சொந்த தேவைக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

மிஸ்டர் கிளீன் அவர்களின் உண்மை முகம் நாட்டு மக்களுக்கு இனங் காட்டப்பட்டுள்ளது.

அவரது வழக்கறிஞர்கள் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி அவருக்கு நீரிழிவு நோய், மனைவிக்கு புற்றுநோய் எனவே பிணையில் விடுதலை செய்யுங்கள் என மன்றாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அரசியல்வாதிகளுக்கு பதவியில் இருக்கும்போது எந்த நோயும் இருப்பதில்லை.

ஊழல் வழக்கில் கைது செய்தவுடன் எல்லா நோயும் வந்துவிடுகின்றன.

செய்தி – பிணை மறுக்கப்பட்டு ரணில் சிறை செல்கிறார்.

விஜயவீராவின் தோழர்கள் உரிய பதிலை ரணிலுக்கு வழங்கியுள்ளனர். பாராட்டுகள்.

இது மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்

536289308_788994993801004_30139963243823

537555355_788995123800991_24277952648617

•யோக்கியன் வருகிறார்.
செம்பை எடுத்து வையுங்க உள்ளே😂
மிஸ்டர் கிளீன் அல்லது திருவாளர் பரிசுத்தம் என்று அழைக்கப்படும் ரணில் அவர்கள் இப்போது மாட்டியிருப்பது பட்டலந்தை முகாம் கொலைகளுக்காக அல்ல.
மாறாக மக்கள் பணம் 150 லட்சம் ரூபாவை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியமைக்காகவே.
இத்தனை நாளும் தன்னை ஒரு கறை படியாத தூய அரசியல்வாதியாக நடித்து வந்தவரின் ஒரு முகம் இன்று தோலுரிக்கப்பட்டுள்ளது.
தெரிந்ததே இவ்வளவு என்றால் தெரியாமல் எவ்வளவு சுருட்டியிருப்பார் இந்த யோக்கியன்?
இங்கு வேடிக்கை என்னவென்றால் இது ஒரு அரசியல் பழி வாங்கல் என்று நாமல் ராஜபக்சா கண்ணீர் வடிக்கிறார்.
ஏனெனில் அடுத்து தன்னையும் கைது செய்து இந்திய நடிகைக்கு கொடுத்த பணம் குறித்து விசாரணை செய்வார்களோ என்ற அச்சம் அவருக்கு.😂
அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சுருட்டி வைத்திருக்கும் மக்கள் பணம் யாவும் பறிமுதல் செய்ய வேண்டும்.

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:


இங்கு வேடிக்கை என்னவென்றால் இது ஒரு அரசியல் பழி வாங்கல் என்று நாமல் ராஜபக்சா கண்ணீர் வடிக்கிறார்.
ஏனெனில் அடுத்து தன்னையும் கைது செய்து இந்திய நடிகைக்கு கொடுத்த பணம் குறித்து விசாரணை செய்வார்களோ என்ற அச்சம் அவருக்கு.😂
அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சுருட்டி வைத்திருக்கும் மக்கள் பணம் யாவும் பறிமுதல் செய்ய வேண்டும்.

தோழர் பாலன்

நம்ம அசினும் சேர்ந்தா ஜெயிலுக்கு போவாங்க...

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

நம்ம அசினும் சேர்ந்தா ஜெயிலுக்கு போவாங்க...

அசின்…. இந்திய குடியுரிமை என்ற படியால், அவரை கைது செய்வதில் சிக்கல் வரலாம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அசின்…. இந்திய குடியுரிமை என்ற படியால், அவரை கைது செய்வதில் சிக்கல் வரலாம். 😂 🤣

அட இதுக்காக கொழும்பு போக ரெடியாகின்னான் ..பிழைச்சுப் போச்சு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆஹா.... இந்தப் படங்களைப் பார்க்க அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. 👍

மகிந்த, கோத்தா.... ஆகியோர், "உச்சா" போகும் நிலையில் உள்ளதாக சொல்கிறார்கள். 😂

மகிந்த,கோத்தாவில் நினைத்தபடி கை வைக்க மாட்டார்கள் என நினக்கின்றேன்.ஏனென்றால் பெரிய அரச பதவிகளிலும் இராணுவ,போலிஸ் துறைகளிலும் மகிந்த,கோத்தா ஆதரவாளர்களும் விசுவாசிகளும் நிறையவே இருக்கின்றார்கள்.

அப்படி அவர்களை கைது செய்தால் ஆட்சி கவிழ்ப்புக்கு நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயவே வா....ஜெயவே வா எனும் கோஷம் முழங்க அண்ணல் உள்ளே சென்றார்..

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, யாயினி said:

நம்ம சுமா...கூட்டாளிக்காக ஒரு கர்த்தால் போடப்போறார்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.