Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ப்பு நாய்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் வளர்ப்பு நாய்கள் கடிப்பதாலும் ரேபிஸ் மரணங்கள் பதிவாகியுள்ளன (கோப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • க. சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 3 செப்டெம்பர் 2025, 02:54 GMT

உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவைத் தொடர்ந்து தெருநாய் பிரச்னை பற்றி விவாதம் இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ளது.

ஆனால், பிரச்னைக்குக் காரணம் தெருநாய்கள் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களும்தான் என்கிறார் பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி.

ஒருமுறை அதிகாலை வேளையில் மருந்தகம் ஒன்றுக்குச் சென்றிருந்த போது, தனது வளர்ப்பு நாயுடன் வந்திருந்த நபர் ஒருவர், அதனுடனேயே மருந்து வாங்கச் சென்றார்.

குழந்தையை அழைத்து வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், சற்று எரிச்சலடைந்து, அதைத் தனியாக வேறு இடத்தில் கட்டி வைத்துவிட்டு வருமாறு சற்று கடினமான குரலில் வலியுறுத்தினார்.

இதேபோல, கிழக்கு கடற்கரை சாலையில் மற்றுமொரு சம்பவத்தைக் கண்டேன். பிரபல உணவகம் ஒன்றுக்கு பார்சல் உணவு வாங்க வந்திருந்த ஒருவர், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் நிறைந்திருந்த இடத்தில், தான் உடன் அழைத்து வந்திருந்த வளர்ப்பு நாயைக் கட்டி வைத்துவிட்டு, உணவகத்தின் உள்ளே சென்றார்.

வாசலில் இருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு தரப்பினர் அதைக் கொண்டு கொள்ளவில்லை. ஆனால், சிலர் அந்த நாய் அங்கிருப்பதை ஓர் அபாயமாகக் கருதி, முன்னெச்சரிக்கையாக விலகி நிற்பதையும், இன்னும் சிலர் அருகில் இருந்த தனது வாகனத்தைக் கூட எடுக்க முடியாமல் சிரமப்பட்டதையும் கண்டேன்.

வளர்ப்பு நாய்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிகம் பாயும் பண்புகளைக் கொண்ட நாய்களுக்கு முகக்கவசம் அணிந்து அழைத்து வர வேண்டுமென்று சென்னை மாநகராட்சி விதிமுறை கூறுகிறது

இந்த இரு சம்பவங்களில் மட்டுமின்றி, சென்னை நகரில் வெளியே அழைத்து வரப்படும் பெரும்பாலான வளர்ப்பு நாய்களுக்கு வாயில் மஸ்ஸில் என்று அழைக்கப்படும் முகக்கவசம் போடப்படுவது இல்லை என்பதைக் காண முடிந்தது.

அதேவேளையில், இப்படியாக நாய்களை வீட்டிலிருந்து வெளியில் அழைத்து வருவோரில் பலரும் சுற்றத்தில் இருக்கும் பிறரின் அசௌகரியம் குறித்துச் சிந்திப்பதில்லை என்கிறார் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி.

'தடுப்பூசி பற்றிய அக்கறையற்ற நிலைமை'

"தெருநாய்கள் மட்டுமின்றி நல்ல பராமரிப்பில் வளர்க்கப்படும் நாய்கள் கடிப்பதாலும் ரேபிஸ் நோய் பரவி வருவதைக் காணும் போதே, இந்தப் பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்" என்கிறார் மருத்துவர் குழந்தைசாமி.

கடந்த 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் மாதம் வரையிலான பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் தரவுகள்படி, தமிழ்நாட்டில் 64 ரேபிஸ் மரணங்கள் பதிவாகி இருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தி கூறுகிறது.

அதில், வளர்ப்பு நாய்கள் கடித்ததால் சுமார் 15 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்தத் தரவுகளின்படி, இருவர் தடுப்பூசி போடப்பட்ட நாய்கள் கடித்து மரணித்து இருந்தாலும், பிற மரணங்களுக்குக் காரணமாக இருந்த நாய்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இத்தகைய நிலைமை, "தடுப்பூசிகளைச் சரியாகப் போட வேண்டும் என்பது குறித்து பொறுப்புகூட இல்லாமல் பல நாய் உரிமையாளர்கள் இருப்பதைக் காட்டுவதாக" கூறுகிறார் குழந்தைசாமி.

அவரது கூற்றுப்படி, வளர்ப்பு நாய்களுக்கு முதல் தவணை ரேபிஸ் தடுப்பூசியை மூன்று மாதத்திலும், இரண்டாவது தவணையை 4 மாதம் முடிந்தவுடனும் போட வேண்டும்.

"இவற்றோடு, ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக அதற்கான பூஸ்டர் தடுப்பூசியைப் போட வேண்டும். இதுதான் வளர்ப்புப் பிராணிகளை வைத்திருப்பதற்கான சட்டம் கூறும் விதிமுறை. ஆனால், அதை அனைவரும் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால், அபாயம் மேலும் அதிகரிக்கிறது," என்கிறார் அவர்.

வளர்ப்பு நாய்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

படக்குறிப்பு, பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி

வளர்ப்பு நாய்கள் குறித்த சட்ட விதிகள் யாவை?

வளர்ப்புப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சியில் வளர்க்கப்படும் நாய்களுக்கு உரிமம் வாங்கியிருக்க வேண்டியது அவசியம்.

ஆனால், அது நடைமுறையில் சரிவர கடைபிடிக்கப்படுவது இல்லை என்கிறார் குழந்தைசாமி. "முன்பெல்லாம் வளர்ப்பு நாய்களின் கழுத்தில் வட்ட வடிவிலான இரும்பு டாலர் ஒன்று தொங்குவதைப் பார்த்திருப்போம். அந்த டாலரில் ஒரு குறியீட்டு எண் இருக்கும்.

அந்த எண்ணை வைத்து, எந்தப் பஞ்சாயத்தின் கீழ், எந்த உரிமையாளரின் பேரில் அந்த நாய் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அத்தகைய முறையான பதிவுகளை நாய் வளர்ப்பவர்கள் இப்போது கடைபிடிப்பதில்லை."

கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிமுறைகளின்படி, வெளிநபர்களிடம் அச்சமூட்டும் வகையில், திடீரென பாயும் பண்புகளைக் கொண்ட நாயாக இருந்தால், அவற்றைக் கட்டுப்படுத்த உதவும் கயிறு அல்லது செயின் இல்லாமலோ, மஸ்ஸில் எனப்படும் முகக்கவசம் இல்லாமலோ அழைத்து வரக்கூடாது.

ஆனால், பெரும்பாலும் முகக்கவசம் இல்லாமல்தான் வளர்ப்பு நாய்கள் வெளியில் அழைத்து வரப்படுகின்றன என்று கூறும் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி, அதற்கு முற்றிலுமாக உரிமையாளர்களையே குற்றஞ்சாட்டிவிட முடியாது என்றும் கூறுகிறார்.

வளர்ப்பு நாய்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், A.R.Praveen Kumar

படக்குறிப்பு, நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி

"நாய் மூலமாகப் பிரச்னை ஏற்பட்ட பிறகுதான் இத்தகைய விதிமுறைகளே கொண்டு வரப்பட்டன. அவற்றை முன்னமே கொண்டு வந்திருந்தால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த விதிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை," என்று அவர் விமர்சிக்கிறார்.

அரசாங்கம் விதிமுறைகளை வகுப்பதோடு நிற்காமல், அவற்றை அனைவருக்கும் கொண்டு சேர்க்கத் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அதைப் பின்பற்றத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென வலியுறுத்துகிறார் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி.

'பிரச்னை நாய்களிடம் அல்ல; உரிமையாளர்களிடமே'

நாய்களை குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசும் ஸ்ரீதேவி, "குழந்தைகள் குதூகலிக்கும் போது எப்படி தன்னிலை மறந்து ஓடி விளையாடுகிறார்களோ, அப்படித்தான் நாய்களும் செய்கின்றன. ஆனால், அவை அப்படி முன்பின் தெரியாத நபர் மீது தாவுவதால் எதுவும் ஆகாது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்க முடியாது" என்றார்.

எனவே, அப்படியான நடத்தைகளைக் கொண்ட நாய்களைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டியது உரிமையாளரின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்துகிறார். "இந்தப் பொறுப்புணர்வு இல்லாமல் செயல்படுவோர்தான் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பொறுப்பாக வேண்டும், நாய்கள் அல்ல.

ஏனெனில், பிற உயிரினங்களைப் போலவே அவையும் கோபம், மகிழ்ச்சி என அனைத்தையும் சிந்திக்காமல் காட்டக்கூடிய விலங்குதான். அவற்றைக் கட்டுப்படுத்தும் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டியது உரிமையாளரின் கடமை" என்று விளக்கினார்.

வளர்ப்பு நாய்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நாய் வளர்த்து வரும் கவிதா, ஸ்ரீதேவியின் கருத்துடன் உடன்படுகிறார்.

"எனது செல்லப்பிராணி ஆபத்தற்றது என்று நான் நம்பலாம். அதனுடன் பழகிய அனுபவமற்ற, முன்பின் தெரியாத நபர் ஒருவரும் அப்படியே நம்ப வேண்டுமென்று நான் எதிர்பார்க்க முடியாது," என்பதை வலியுறுத்துகிறார்.

அதே நேரம், "அரசாங்கமும் விதிமுறைகளை அறிவிப்பதோடு நிற்காமல் அவற்றை அனைவருக்கும் தெரியப்படுத்தவும், பின்பற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் வழி செய்ய வேண்டும்" என்று கோருகிறார் கவிதா.

வளர்ப்பு நாயை வெளியே அழைத்து வரும்போது, அவை பிறருக்கு ஆபத்து விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்ற கருத்துடன் உடன்படும் நாய் உரிமையாளரான கவிதா, நாய்களை செயின் போட்டு, வாயை முகமூடியால் மறைத்து அழைத்து வர வேண்டும் என்பதோடு மற்றுமொரு கூற்றை வலியுறுத்துகிறார்.

நாய்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கவே வெளியே அழைத்து வரப்படுகின்றன. அப்படியிருக்கும் சூழலில், அவற்றை அப்புறப்படுத்தத் தேவையான உபகரணங்களையும் கொண்டு வர வேண்டுமென்று விதிமுறை உள்ளதாகக் குறிப்பிட்டார் மருத்துவர் குழந்தைசாமி.

அதை வலியுறுத்திப் பேசிய கவிதா, "தனது நாயாகவே இருந்தாலும், அதன் கழிவை மிதிப்பதற்கு ஒருவர் தயாராக இருப்பாரா? அதேபோலத்தான் அனைவருக்கும் இருக்கும் என்பதைப் புரிந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என்கிறார் அவர்.

இதுமட்டுமின்றி, நாய்களின் மலத்தில் உள்ள டேப்வோர்ம் கிருமிகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்துள்ளதை விவரிக்கும் மருத்துவர் குழந்தைசாமி, "ரேபிஸ் மட்டுமின்றி இதுவும் ஆபத்தானது. ஆகவே, நாய்களை வெளியே அழைத்து வரும் உரிமையாளர்கள் அவற்றின் மலத்தை அப்புறப்படுத்தவும் தயாராக வர வேண்டும்," என்று அறிவுறுத்தினார்.

உரிமையாளர்கள் விதிகளைப் பின்பற்றுவது முறையாகக் கண்காணிக்கப்படுகிறதா என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த தமிழ்நாடு விலங்குநல வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் சொக்கலிங்கம், "வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு, அவை கடைபிடிக்கப்படுவதை நகராட்சி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

அதோடு, "இந்த விஷயத்தில், வளர்ப்பு நாய்கள் விற்பனை, அவற்றை நடத்தும் முறை உள்பட பலவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்படவில்லை என்றால் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பவை உள்பட பல வழிகாட்டுதல்கள் அடங்கிய விரிவான அறிக்கை உருவாக்கப்பட்டு வருகிறது" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c86067q0q81o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய்கள் என்றாலே என்றும் பிரச்சனைதான்.அது வீட்டு வளர்ப்பு நாயாக இருந்தாலும் சரி தெரு நாயாக இருந்தாலும் சரி அதற்கென ஒரு தனிக்குணம் இயற்கையாகவே உண்டு.

ஜேர்மனியில் வீட்டுக்கு வீடு நாய்கள் பெரும்பாலும் உண்டு. அவை பயிற்சி கொடுக்கப்பட்ட நாய்களாகவே இருக்கும். கடி நாய்களாக இருந்தலும் அதுகளுக்கு பயிற்சி கொடுக்கப்படிருக்கும். கடி நாய்களை களவாக வளர்ப்பவர்களும் உண்டு. ஏனென்றால் கடி நாய்களுக்கு அனுமதி பத்திரம் வாங்கியிருக்க வேண்டும்.அதற்குரிய கட்டணங்களும் அதிகம்.அது துப்பாக்கி வைத்திருப்பதற்கு சமம்.

நாய்கள் என்றுமே வில்லங்கமானவை.ஊரில் எல்லாம் அதை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைத்திருப்பார்கள்.நடு வீட்டுக்குள் எல்லாம் அனுமதிப்பதில்லை. மேற்குலகில் அப்படியல்ல. அளவு மிகுந்த பாசமும் அன்பும் கொடுக்கின்றர்கள். செலவுமும் அதிகம்.

நல்ல காலம் ஜேர்மனியில் தெருநாய்கள் இல்லை. அதற்கு அனுமதிகளும் இல்லை. வீட்டு நாய் வெளியில் தனியாக வருவதுமில்லை. தனியே எஜமானுடன் மட்டுமே வெளியே வர அனுமதியுண்டு.

நாய் அது ஐந்தறிவுள்ள ஒரு மிருகம். அதனை மனிதனுக்கு சமனாக ஒப்பிடுவது தவறு.வீட்டுக்கு வீடு நாய் இருக்கலாம்.ஆனால் தெருவுக்கு தெரு நாய்கள் என்றும் ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தெரு நாய் சர்ச்சை : தீர்வு ரொம்ப சிம்பிள்.. கழுதையை பற்றி கவலைப்பட்டார்களா? – கமல்ஹாசன் விளாசல்!

3 Sep 2025, 2:34 PM

Kamal response on the stray dog controversy

தெரு நாய்கள் கடிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தெரு நாய்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். தெரு நாய்கள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அம்மு, நடிகர் படவா கோபி உள்ளிட்டோர் மீது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (செப்டம்பர்-3) காலை சென்னை விமான நிலையத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது தெரு நாய்கள் சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கமல், ” தீர்வு ரொம்ப சிம்பிள். விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்ன என்று தெரிந்தவர்கள் கழுதையை எங்க காணோம் என்று யாராவது கவலைப்படுகிறார்களா.. கழுதை எல்லாம் காணாமல் போய்விட்டதே.. நமக்காக எவ்வளவு பொதி சுமந்துள்ளது. அதை நாம் இப்போது பார்ப்பதே இல்லையே..கழுதையை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது பேசுகிறார்களா.. எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு காப்பாற்ற வேண்டும்.. அவ்வளவுதான் எனது கருத்து” என தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/kamal-response-on-the-stray-dog-controversy/

  • கருத்துக்கள உறவுகள்

dog-fe.jpg?resize=660%2C375&ssl=1

வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!

வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும்  திட்டம் நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446002

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

dog-fe.jpg?resize=660%2C375&ssl=1

வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!

வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும்  திட்டம் நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446002

எங்களுடைய வீட்டிலும் பெண் நாய் குட்டியாக பிறந்து வளர்ந்து நிற்கிறது. தெருவில் இருந்த தாய் நாய் எங்கள் வீட்டு குப்பையை பாதுப்பென எண்ணி குட்டிகளை போட்டுவிட்டது. பின்பு ஆண்நாய்க் குட்டிகளை விரும்பி எல்லோரும் பிடிக்க இந்த பெண்நாய்க்குட்டியை யாரும் விரும்பாததால் எனது விருப்பின்படி அம்மாவே உணவிட்டு வளர்த்தார். அந்த பெண்நாய்க்குட்டி வளர்ந்து 3 - 4 தடவைகள் குட்டிகள் போட அம்மா என்னைப் பேச நான் என்ன செய்ய என விழிபிதுங்க, யாரோ ஒரு புண்ணியவான் வீதியில் வைத்து மயக்க ஊசி போட்டு கர்ப்பத்தடை செய்து உதவினார்கள்.

இன்று அறிவித்தல் செய்கிறார்கள், வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போட அழைத்துவரச் சொல்லி, ஊசி போடாத நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படுமாம்.

வீடுவீடாக சென்று ஒரு நாய்க்கு 500ரூபா வாங்கி ஊசி போட்டால் அரசுக்கும் வருமானம், எல்லா நாய்களுக்கும் தடுப்பூசி போட்டதை உறுதி செய்யவும் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஏராளன் said:

ஊசி போடாத நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படுமாம்.

ஊசி போடாத நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபா தண்டப் பணம் என்பது மிக அதிகம் போல் உள்ளது. அங்கு பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்களால் இவ்வளவு பெருந்தொகைப் பணம் கட்ட முடியாதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

ஊசி போடாத நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபா தண்டப் பணம் என்பது மிக அதிகம் போல் உள்ளது. அங்கு பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்களால் இவ்வளவு பெருந்தொகைப் பணம் கட்ட முடியாதே.

வழக்கு போட்டு நீதிமன்றம் மூலமாக தண்டனை விதிக்கப்படும் என மறைமுகமாக வெருட்டி ஊசி போட வைக்கத்தான் அண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

வீடுவீடாக சென்று ஒரு நாய்க்கு 500ரூபா வாங்கி ஊசி போட்டால் அரசுக்கும் வருமானம், எல்லா நாய்களுக்கும் தடுப்பூசி போட்டதை உறுதி செய்யவும் முடியும்.

நான் ஊரில் நின்ற நேரம் மனைவியின் சகோதரி வீட்டில் இரண்டு நாய்க்கும் ஊசி போட்டார்கள்.

ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் கொடுத்து கொண்டு போய் ஒரு சந்தியில் நிற்பார்கள்.

இரண்டு நாயையும் கொண்டு போய் ஒன்றுக்கு 400 ரூபாவும்

மற்றதுக்கு கொஞ்சம் குட்டை என்றபடியால் கொஞ்சம் கூடுதலாக கொடுத்ததாக சொன்னார்கள்.

எவ்வளவு என்று தெரியவில்லை.

முன்னர் ஆண் நாய்களுக்கு குறி சுட்டு

விதையை அகற்றி விடுவார்கள்.

சிறிய வயதில் எமது வீட்டு நாய்க்கு குறி சுட்டபோது

அன்று முழுவதும் அழுஅழு என்று அழுதேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

நான் ஊரில் நின்ற நேரம் மனைவியின் சகோதரி வீட்டில் இரண்டு நாய்க்கும் ஊசி போட்டார்கள்.

ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் கொடுத்து கொண்டு போய் ஒரு சந்தியில் நிற்பார்கள்.

இரண்டு நாயையும் கொண்டு போய் ஒன்றுக்கு 400 ரூபாவும்

மற்றதுக்கு கொஞ்சம் குட்டை என்றபடியால் கொஞ்சம் கூடுதலாக கொடுத்ததாக சொன்னார்கள்.

எவ்வளவு என்று தெரியவில்லை.

இது இலவசம் அண்ணை.

கள உறவு @Justin அண்ணை சொன்னவர் பாவித்த ஒரே ஊசியை பல நாய்களுக்கு பாவித்தால் டிஸ்ரெம்பர்(distemper) நோய் தொற்றி இறக்குமாம். அதனால பாவிக்காத புதிய வெற்று ஊசியை நாங்களே வாங்கிக் கொடுப்பது நல்லதாம்.

Symptoms of canine distemper include fever, lethargy, coughing, eye and nasal discharge, vomiting, diarrhea, loss of appetite, thickened foot pads and nose, and neurological signs like seizures, twitching, and paralysis. The specific symptoms vary depending on the dog's age, immune system, and the stage of the disease. If you suspect your dog has distemper, you should contact a veterinarian immediately, as the disease can be fatal.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

இது இலவசம் அண்ணை.

இன்னொரு தடவை கேட்டு உறுதி செய்கிறேன்.

பெண் நாய்களில் ஒரு குணம் இருக்கிறது.

அது எல்லா நாய்களோடும் உறவு வைத்துக் கொள்ளாது.

ஒன்றோடு ஒன்று கடிபட்டு கடிபட்டு கடைசியாக மாவீரனாக நிற்பவருடனே உறவு கொள்ளும் என்று சொல்லுவார்கள்.

நல்லகாலம் மனிதருள் இந்தப் பழக்கம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னொரு தடவை கேட்டு உறுதி செய்கிறேன்.

பெண் நாய்களில் ஒரு குணம் இருக்கிறது.

அது எல்லா நாய்களோடும் உறவு வைத்துக் கொள்ளாது.

ஒன்றோடு ஒன்று கடிபட்டு கடிபட்டு கடைசியாக மாவீரனாக நிற்பவருடனே உறவு கொள்ளும் என்று சொல்லுவார்கள்.

நல்லகாலம் மனிதருள் இந்தப் பழக்கம் இல்லை.

ஆரோக்கியமான சந்ததிக்காக என்று நினைக்கிறேன்!

அண்ணை, முன்னர் மனிதர்களிடமும் இருந்ததே! ஏறுதழுவல், வட்டக்கல் தூக்கல், ராமர் வில்லை உடைச்சுத் தானே சீதாவை மணமுடித்தார்.

இப்பவும் பெண் பிள்ளைகள் வீரமுள்ள ஆண்களை காதலிக்கிறார்களே!

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஏராளன் said:

ஆரோக்கியமான சந்ததிக்காக என்று நினைக்கிறேன்!

அண்ணை, முன்னர் மனிதர்களிடமும் இருந்ததே! ஏறுதழுவல், வட்டக்கல் தூக்கல், ராமர் வில்லை உடைச்சுத் தானே சீதாவை மணமுடித்தார்.

இப்பவும் பெண் பிள்ளைகள் வீரமுள்ள ஆண்களை காதலிக்கிறார்களே!

திருத்திக் கொள்ளுங்கள் ஏராளன் . ............. பணமுள்ள என்று வரவேண்டும் . ....... வீரம் , நீதி , நேர்மை எல்லாம் கலாவதியாகி கனகாலம் ஆயிற்று . ......... !

உபயம் : தினசரி செய்திகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் , அன்றாட வாழ்வில் காண்பவை கேட்பவை .........! 😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

திருத்திக் கொள்ளுங்கள் ஏராளன் . ............. பணமுள்ள என்று வரவேண்டும் . ....... வீரம் , நீதி , நேர்மை எல்லாம் கலாவதியாகி கனகாலம் ஆயிற்று . ......... !

உபயம் : தினசரி செய்திகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் , அன்றாட வாழ்வில் காண்பவை கேட்பவை .........! 😇

அதையும் எழுத நினைத்தேன் அண்ணை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.