Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

அதுசரி  அநேகமாக பல்லி  மேலேதானே இருக்கும். எப்படிக் கீழே வந்தது? அவர் ஏன் மேலே போனார்? புரியவில்லை. பக்கத்து வீட்டுக்காரனோடு உங்களுக்கு நல்லா பொழுது போகுது போலே.

1 hour ago, ஈழப்பிரியன் said:

என்னடா இது ஒரு பல்லியை பிடித்ததற்கே

முதலையைப் பிடித்த மாதிரி ………..!

ஒரு பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்ல, சில பக்கத்து வீட்டுக்காரர்களுன் இதே போலவே தான். அவர்களுக்கு மிகவும் வயதாகி விட்டது, அத்துடன் அவர்களுடைய பிள்ளைகளும் தூர இடங்களுக்கு போய்விட்டார்கள். முன்னர் இந்த தெருவில் இருந்த சிலர் போயும் விட்டார்கள்.

இங்கே பல்லிகள் வீடுகளுக்குள் பொதுவாக வருவதில்லை. ஆனால் வளவுகளுக்குள் ஓடித் திரிகின்றன. பூச்சிகளை இடைவிடாமல் தேடிக் கொண்டிருக்கின்றன.

அவர் தான் பல்லியை இதற்கு முன் இங்கே கண்டதேயில்லை என்று சொல்லி, பயத்தில் துள்ளிக் கொண்டிருந்தார். அதையே அவர் கூரையில் நின்றார் என்று சொல்லியிருந்தேன். அவர் குஜராத்தில் இருக்கும் போது அவர் வீட்டில் பணியாளர்கள் இருந்ததாகவும் சொல்லியிருக்கின்றார். அங்கே அவருடைய வீட்டுக்குள் பல்லிகள், பூச்சிகள் வராமல் அந்தப் பணியாளர்கள் 24 மணி நேரங்களும் காவலுக்கு இருந்திருக்கின்றார்கள் போல........

  • Replies 83
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    2. மணல் தெய்வம் ---------------------------- 'மண் அப்புச்சாமிக்கு என்ன பெயர்?' அப்படி ஒரு கடவுள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மண்ணுக்கு என்று ஒரு கடவுள் எங்கள் வழக்கத்தில் இருக்கின்றதா? உலகில் எந்த

  • ரசோதரன்
    ரசோதரன்

    3. புலம் பெயர்ந்த இலக்கியம் --------------------------------------------- காத்திரமான, நீண்ட காலத்தில் நிலைத்து நிற்கப் போகும் பல உண்மைகளும், விடயங்களும், ஆக்கங்களும், மனிதர்களும் அவர்கள் அல்லது அவைகள

  • ரசோதரன்
    ரசோதரன்

    5. இன்னொரு பாலம் -------------------------------- எளிமையான பல நம்பிக்கைகளின் ஒரு தொகுப்பாகவே எங்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது. அந்த நம்பிக்கைகளில் பலவற்றை நாங்கள் சாதாரண சூழ்நிலைகளில் கேள்வ

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

ஒரு படத்தில் ஒரு காட்சியில் விவேக்கிற்கு பெண்கள் வெளியே சொல்லாமல் மனதில் நினைக்கும் விடயங்கள் கேட்க ஆரம்பிக்கின்றன

விசில், மெல் கிப்சன் நடித்த பொண்ணுங்களுக்கு என்ன தான் வேணும் (What Women Want) என்ற படத்தின் உல்டா என்று நினைக்கிறேன். மனிதர்களுக்கு கிடைக்கவே கூடாத சக்தி இது தான். எப்படியோ பெண்களுக்குக் கல்யாணம் ஆன கொஞ்சக் காலத்தில் கிடைத்து விடுகிறது (என்று தாங்களே நம்பத் துவங்கி விடுகிறார்கள்) 😁.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

6. பண்ணையாரும் பலரும்

-----------------------------------------

large.FingerPointing.jpg

'அமெரிக்கா உங்களுக்குப் பிடித்திருக்கின்றதா.............' என்று கேட்டார் அவர். மிகவும் தயக்கத்துடனேயே கேட்டார். நான் யார் என்று அவருக்கு கைகொடுத்து அறிமுகப்படுத்திய பின்பே கேட்டார். அவர் யார் என்ற விபரங்கள் முன்னமே எனக்கு ஓரளவு சொல்லப்பட்டிருந்தது. இதே கேள்வியை சில சில மாற்றங்களுடன் என்னிடம், தயக்கத்துடன், ஆரம்பிக்கும் நாலாவது மனிதர் இவர். சிட்னியில் ஒரு பல்கலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்.

'பிடித்தது, பிடிக்கவில்லை என்றில்லை.............. பழகிவிட்டது. பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, வளர்ந்து விட்டார்கள்............' என்றேன். அவர் சில பெயர்களைச் சொல்லி, அவர்களின் காணொளிகளை டிக்டாக்கில் பார்த்தது உண்டா என்று கேட்டார். டிக்டாக்கில் இதுவரை நானறிந்து ஒரு காணொளி தன்னும் நான் பார்த்ததில்லை. அதை அப்படியே சொல்லுவது மரியாதை இல்லை என்று நினைத்து, நான் அவை எதுவும் பார்த்ததில்லை என்றேன். அவர்கள் எல்லோரும் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகாவும் இருப்பவர்கள் என்றார். அவர் சொல்லிய பல்கலைக் கழகங்களின் பெயர்களை அறிந்திருக்கின்றேன், ஆனால் இந்த டிக்டாக்கில் வரும் பேராசிரியர்களில் எவரையும் நான் கேள்விப்பட்டது இல்லை.

அமெரிக்கா செய்து கொண்டிருப்பது சுத்தமான அயோக்கியத்தனம் என்பதே அவருடைய உரையாடலின் சாரம். இதற்கு முன்னர் அமெரிக்கா பிடித்திருக்கின்றதா என்று கேட்ட மற்ற மூவரும் கூட அதே சாரத்தையே சொல்லியிருந்தார்கள். மற்ற மூவரும் அமெரிக்கா அழிந்து விடும் என்றும் சொல்லியிருந்தார்கள். ஆனால் அமெரிக்கா அழிந்தால் அது உலகத்திற்கு பெரும் பாதிப்பாக முடியும் என்று இவர் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய தமிழ் வழக்கு மலையக மக்களின் தமிழ் போன்று இருந்தது. இடையிடையே வந்து போகும் சுத்தமான முழு ஆங்கில வசனங்கள் அவர் நிச்சயம் ஆங்கில வழியில் கல்வி கற்ற ஒருவர் என்பதைக் காட்டியது. ரஷ்யாவின் நியாயங்களைச் சொன்னார். சீனாவின் முன்னேற்றங்களை வரிசைப்படுத்தினார். இந்தியா வல்லரசாகும் என்றார்.

நான் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக 25 வருடங்களின் முன்னேயே விண்ணப்பித்து இருந்தேன் என்று இடையில் சொன்னேன். அந்தச் சூழ்நிலையை இலகுவாக்க இப்படிச் சொல்வது எனக்கு ஒரு தேவையாக இருந்தது. நாங்கள் உண்மையிலேயே ஒரு காலத்தில் விண்ணப்பித்தும் இருந்தோம். அதன் பின்னர் அவர் கொஞ்சம் தணிந்தார் என்று தான் சொல்லவேண்டும். அவர் மலேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் படிக்க வந்து, மீண்டும் மலேசியா போய், பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து, நிரந்தரமாகக் குடியேறியதாகச் சொன்னார். பூர்வீகம் யாழ்ப்பாணம். 'புயலிலே ஒரு தோணி' வாசித்திருக்கின்றீர்களா என்று கேட்டேன். அது என்ன என்பது போல பார்த்தார். நல்ல ஒரு தமிழ் நாவல், கதையின் பெரும் பகுதி மலேசியாவிலேயே இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நடக்கின்றது என்றேன். இப்பொழுது அவர் பார்வையில் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. இந்த ஊர் நூலகத்திலேயே அந்த நாவல் உள்ளது என்றேன்.

அமெரிக்கா மீதும், அதிபர் ட்ரம்பின் அதிரடியான நடவடிக்கைகளின் மீதும் கடுமையான ஒரு பார்வை உலகெங்கும் எம் மக்கள் எல்லோரிடமும் இருக்கின்றது போல. கனடாவிலும் நான் இதே போன்ற கடுமையான எதிர்வினைகளைக் கேட்டிருக்கின்றேன். இதில் உள்ள ஒரு முரண்பாடு என்னவென்றால், எனக்கு தெரிந்து இன்று எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் பலரும் அமெரிக்க தேர்தலின் முன்னர் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாகவும், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகவும் கருத்துகள் சொல்லிக் கொண்டிருந்தவர்களே. இவர்கள் என்ன மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிந்தார்களோ தெரியவில்லை, ஆனால் இன்றைய அமெரிக்க அதிபரால் மிகவும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரிந்தது. நான் தனிப்பட்ட ரீதியில் ஏமாற்றப்படவில்லை. அவர் பதவியேற்ற அன்றே நான்கு வருடங்களிற்கும் தயாராகவே இருந்தேன். 

பொதுவாக பலவீனமானவர்களே மிகவும் பலசாலி போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியானவர்களை மக்கள் ஏன் தலைவர்களாக தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதன் அடிப்படையே அது தான் போல. கூட்டமாக அன்றாடம் தலைப்பு செய்திகளை உண்டாக்குகின்றார்கள். வெற்றி, வெற்றி என்று முழங்குகின்றார்கள். பின்னர் அந்தச் செய்தி அப்படியே கைவிடப்படுகின்றது. அடுத்த நாள் வரப் போகின்ற புதியதொரு தலைப்பு செய்திக்கு தயாராகின்றார்கள்.   

சிட்னியின் அந்த புறநகர்ப் பகுதியில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் புதிதாக, கடந்த ஐந்து வருடங்களுக்குள், கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் குடியிருப்பவர்களில் நூறு வீதமானவர்களும் இந்திய மக்கள் போன்றே தெரிகின்றது. இவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்குள் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வந்தவர்கள் போல. அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொள்வதற்கு அரசாங்கம் கொடுக்கும் அனுமதி தனித்தனி வீடுகளை ஒரு தெருவிலும், தெருவின் அடுத்த பக்கத்தில் அல்லது அடுத்த தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டவும் அனுமதிக்கின்றது. இது அங்கே வீடுகளில் குடியிருப்பவர்களுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்பவர்களுக்குமிடையே உரசல்களை உண்டாக்குகின்றது. புதிய குடியிருப்புகளுக்கு ஏற்ப மற்ற புதிய உட்கட்டமைப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை. பிரதான வீதிகள், பாடசாலைகள், வணிக வளாகங்கள், நூலகங்கள், பூங்காக்கள் என்று எந்த வசதிகளும் இந்த பெருக்கத்துக்கு ஈடாக புதிதாக உருவாக்கப்படவில்லை. இதுவும் ஏற்கனவே அங்கே இருப்பவர்களுக்கும், புதிதாக குடிவருபவர்களுக்குமிடையே பிணக்குகளை உண்டாக்குகின்றது. 

சட்டம், ஒழுங்கு, நாகரிகம் கெட்டுப் போகின்றது என்று புதியவர்களை குற்றம் சாட்டுகின்றார்கள். பல வருடங்களின் முன், லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் சில இலங்கை தமிழர்களுடன் சேர்ந்து எம்மவர்களின் வீடுகளில் திருடுகின்றார்கள் என்ற அபிப்பிராயம் எம்மவர்களிடையே இருந்தது. எந்த வீடுகளில் என்ன விழா எப்போது நடக்கின்றது என்ற தகவலையே எம்மவர்களில் சிலரே அவர்களுக்கு கொடுக்கின்றார்கள் என்றனர். விழாக்களில் அணிவதற்காக வங்கிகளிலிருந்து வெளியே வரும் நகைகளை திருடுவதே அவர்களின் இலக்கு என்றனர். பின்னர் இலங்கையிலிருந்து வேறு வழிகளில் சிட்னி வந்த இளைஞர்கள் மீது வேறு விதமான குற்றங்களைச் சொன்னார்கள். சில இடங்களுக்கு பாதுகாப்பாக போய் வரவே முடியாதிருந்ததாகச் சொன்னார்கள். இன்று புதிதாக குடிவரும் இந்தியர்கள் மீது எல்லோரினதும் கவனங்கள் திரும்பியிருக்கின்றன. 

இந்தப் புதிய அபரிதமான குடிவரவால் வீடுகளின் விலைகள் ஏறிக் கொண்டு போவதைப் பற்றி பேச்சும் இருக்கின்றது. பல தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இந்திய மாணவர்களின் ஆதிக்கம் பற்றிய ஆதங்கமும் இருக்கின்றது. எதிர்காலத்தில் எங்களின் பிள்ளைகளுக்கு சரியான வேலைகள் கூட கிடைக்காமல் போய் விடக் கூடும் என்று ஒருவர் சொன்னார். இப்படி பல காரணங்களாலும் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு எதிராக போராட்டங்கள் மெதுமெதுவாக ஆரம்பித்துள்ளன. எம்மக்களின் பலரும் இதற்கு ஆதரவாக உள்ளனர்.

ஆஸ்திரேலியாவையும், சிட்னியையும், எம்மக்களையும் ஒரு கணம் மறந்து விட்டு, அமெரிக்காவையும், அதிபர் ட்ரம்பையும், அவரின் ஆதரவாளர்களையும் நினையுங்கள். இந்த விடயத்தில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கதையில் பல அன்றாட சம்பவங்களையும் கலந்து சுவையாக ஆர்பாட்டமின்றி எழுதுகிறீர்கள். பல தகவல்களை அறியக்கூடியதாக உள்ளது. உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரசோதரன் said:

ஆஸ்திரேலியாவையும், சிட்னியையும், எம்மக்களையும் ஒரு கணம் மறந்து விட்டு, அமெரிக்காவையும், அதிபர் ட்ரம்பையும், அவரின் ஆதரவாளர்களையும் நினையுங்கள். இந்த விடயத்தில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா?

அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியிலே மடியிலேயே கையை வைச்சிட்டியே மாப்பு🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியிலே மடியிலேயே கையை வைச்சிட்டியே மாப்பு🤪

🤣...............

பலரும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் ஒரு இடத்தில் தமது வாழ்க்கைகளை அமைத்தவுடன், அங்கே புதியவர்கள் வந்து சேருவதை விரும்புகின்றார்கள் இல்லை போல............

எந்த ஒரு மக்கள் திரளின் மீதும் அவர்களின் அடையாளத்துடன் ஊடாக சந்தேகங்களை விதைப்பதும், குற்றங்களை சுமத்துவதும் சரியான ஒரு விடயமும் இல்லை என்றும் தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2025 at 13:15, ரசோதரன் said:

பலரும் அமெரிக்க தேர்தலின் முன்னர் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாகவும், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகவும் கருத்துகள் சொல்லிக் கொண்டிருந்தவர்களே. இவர்கள் என்ன மாற்றத்தை

இப்போது ரம்பை முழு மூச்சாக எதிர்த்துப் பேசுபவர்களைப் பார்த்தா

இவர்கள் தான் ரம் வரவேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்றவர்கள்.

ஆனாலும் அதிசயமாக எம்மவர்கள் சிலர் இன்மும் ரம்பை ஆதரித்தே பேசுகிறார்கள்.

1 hour ago, ரசோதரன் said:

பலரும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் ஒரு இடத்தில் தமது வாழ்க்கைகளை அமைத்தவுடன், அங்கே புதியவர்கள் வந்து சேருவதை விரும்புகின்றார்கள் இல்லை போல..

நிதர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

எந்த ஒரு மக்கள் திரளின் மீதும் அவர்களின் அடையாளத்துடன் ஊடாக சந்தேகங்களை விதைப்பதும், குற்றங்களை சுமத்துவதும்

ஆட்சியைப் பிடிப்பதற்கு மிகவும் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட முறையே இது மட்டும் தான் அண்ணை. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் இது மட்டும் எப்போதும் தொடர்ந்திருக்கும். சமூக அரசியல் விஞ்ஞானத்தின் பால பாடம் ☠️.

large.sdgdcsuy8gca7dg3.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2025 at 10:20, ரசோதரன் said:

ஒரு பொல்லாப்பும் இல்லை. நான் பின் வரிசையில் இருக்கலாம்,

யோகர் சுவாமிகளின் சிந்தனை எட்டி பார்க்கிறது😅

On 18/9/2025 at 10:34, ரசோதரன் said:

இந்த ஒரு மனிதர் போல எத்தனை தெய்வங்கள் வந்து போன பூமி இது.

உண்மை... போராட்டங்கள் ,உயிர்பலிகள் ...அந்த வெளிச்சவீடு வாய் இருந்தால் பல கதைகள் சொல்லியிருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7. சிரமத்திற்கு மன்னிக்கவும் 

--------------------------------------------

large.SorryFor.jpg

சிட்னியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸீக்கு திரும்பி வரும் விமானத்தின் புறப்படும் நேரம்  காலை ஒன்பது மணி என்றிருந்தது. கிட்டத்தட்ட 14 மணி நேரங்கள் பயணம். இதை விட விமானத்தில் பறப்பதற்கு மோசமான ஒரு நேரத்தை கண்டுபிடிப்பது கடினம். காலைத் தூக்கம் முடிந்து, எழும்பி விமான நிலையம் வந்தால், அதற்குப் பின் பறக்கும் நீண்ட பயணத்தில் தூக்கம் எங்கே வரப் போகின்றது. ஆனாலும் விமானத்தில் விளக்குகளை அணைத்து இருட்டாக்கப் போகின்றார்கள். பலரும் கண்ணை ஒரு மறைப்பால் மறைத்து, மெல்லிய மற்றும் சற்றே கடுமையான சத்தங்களுடன் தூங்கப் போகின்றார்கள். விமானப் பணிப்பெண்கள் இடையிடையே வந்து போகப் போகின்றார்கள். நான் முழித்தே இருக்கப் போகின்றேன் என்பதும் விளங்கியது.

எத்தனையோ வருடங்களின் முன் எமிரேட்ஸ் விமானத்தில் இலங்கைக்கு போய்க் கொண்டிருக்கும் போது, விமானத்தில் கடைசியாக படம் பார்த்திருக்கின்றேன். அதன் பின்னர், அந்தப் படத்தால், விமானத்தில் படம் பார்ப்பதில் ஒரு பலத்த ஒவ்வாமை ஏற்பட்டு, பயணம் முழுவதும் முன்னால் இருக்கும் கறுப்புத் திரையே பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்திருந்தேன். விமானப் பயணத்தில் கடைசியாகப் பார்த்த அந்தப் படம் 'தெறி'. சில நண்பர்கள் ஏற்கனவே அந்தப் படத்தை சிலாகித்து சொல்லியிருந்தார்கள். அந்த நண்பர்களின் வரலாறு தெரிந்த நான் தான் கவனமாக இருந்திருக்கவேண்டும்.

ஆடம்பரமான ஒரு கடைத் தொகுதிக்கும், மலிவு விலை கடைத் தொகுதிக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்று சிலவற்றை சொல்லிக் கொள்ளலாம். பொருட்களின் தரத்தில் இருக்கும் வேறுபாடு என்பது மிகப் பொதுவாக சொல்லப்படும் ஒரு வித்தியாசம். உதாரணமாக, அதிக விலையில் விற்கும் இடங்களில் விற்கப்படுபவை சாயம் போகாத, கசங்காத, நீண்டகாலம் நிற்கும் உடுப்புகள் என்று சொல்வார்கள். இங்கு அமெரிக்காவில் தொழில்நுட்பத்துறையில், வேறு பல துறைகளிலும் கூட, அணியும் ஆடைகளுக்கு எந்த மதிப்புமே கிடையாது. ஏதோ ஒன்றை போட்டுக் கொண்டு அலுவலகம் போனால் போதும். ஆள் நூறு, ஆடை பூச்சியம். சாயம் இருந்தாலும் போடலாம், சாயம் இழந்தாலும் போடலாம். போடும் உடுப்பு சாயம் போய், கசங்கி, அத்துடன் தலையையும் இழுக்காமல் அலுவலகம் போனால், ஆள் ஒரு அறிவுஜீவி போல என்று முதல் தோற்றத்தில் நம்புகின்றவர்களும் உண்டு. ஆனால் எது உண்மையோ, அது போகப் போக வெளியே வந்துவிடும். குறைவாகக் கதைப்பதும், கதைத்துக் கொண்டே நடுநடுவே  அடிக்கடி கூரையை நிமிர்ந்து பார்ப்பதும் அறிவுஜீவி என்னும் பிம்பத்தை மேலும் சில காலத்துக்கு நீட்ட உதவலாம்.

இன்னொரு பெரிய வித்தியாசம் என்று சொல்லப்படுபவது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் இருக்கும் வேறுபாடுகள் என்கின்றனர். மலிவு விலைக் கடைகள் ஒரு அரச திணைக்களம் போல செயல்படுவார்கள். தியானத்தில் இருப்பவர்கள் போலக் கூட அங்கே சிலர் இருப்பார்கள். லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். உலகில் உள்ள மோசமான விமான நிலையங்கள் என்ற பட்டியலில் இது இருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் சிட்னி விமான நிலையத்தில் பொதிகளைப் போடும் இடம் 'வேற லெவல்' என்றே சொல்லவேண்டும். சிட்னி விமான நிலையத்தின் அந்தப் பகுதிக்கு அரச திணைக்களங்களே பல மடங்கு பரவாயில்லை என்று சொல்லலாம். வரிசையில் காத்திருக்கும் ஒருவரின் அலுவல்கள் முடிவதற்கே பத்து அல்லது இருபது நிமிடங்கள் போய்விடுகின்றது. ஐந்து அல்லது ஆறு பேர்களே எங்களுக்கு முன்னால் நின்றார்கள். ஆனால் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் அங்கே போனது. இதுவே வேறொரு விமான நிலையம் என்றால் ஒரு பத்து நிமிடங்களில் முடித்திருப்பார்கள். லாஸ் ஏஞ்சலீஸில் பொதிகளை எங்கள் கண் முன்னாலேயே தூக்கித் தூக்கி எறிந்திருப்பார்கள். பொதியின் உள்ளே இருக்கும் மஞ்சள் தூளும், மிளகாய் தூளும் கலந்து, நல்ல கறித்தூள் கிடைப்பதற்கு கூட சாத்தியங்கள் உண்டு.

விமான நிலையத்தில் முற்றிலும் எழுந்தமானமாகவே ஓரிருவரை முழுச் சோதனைக்கு தெரிவு செய்கின்றார்கள் என்கின்றனர். அப்படித் தெரிவு செய்யப்படுபவர்களைப் பார்த்தால் அவர்கள் சொல்லும் எழுந்தமானம் பொய்யென்றே தெரியும். ஒரு கூட்டத்தில் எவர் எவரையெல்லாம் தெரிவு செய்வார்கள் என்றே சொல்லிவிடலாம். என்னைத் தெரிவு செய்தார்கள். காலணியை ஆராய்ந்தார்கள். நான் சிட்னிக்கு ஒரே ஒரு காலணியை மட்டுமே எடுத்துப் போயிருந்தேன். அங்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தில் அதே காலணியுடனேயே அநேக நாட்களில் ஓடியும் இருக்கின்றேன். திரும்பி வரும் பயணத்திற்கு முந்திய நாளில் கூட, பெரிய மழை ஒன்றின் பின் வந்த சிறிய மழைக்குள் ஓடியிருந்தேன். காலணி கொஞ்சம் உப்பியே இருந்தது. பின்னர் கைப் பொதியை திறந்து பார்த்தார்கள். 'எல்லாமே சாக்லெட்................' என்றார்கள். 'இங்கிருந்து வேறு என்ன கொண்டு போவது என்று தெரியவில்லை......................' என்றேன். இறுதியாக 'சிரமத்துக்கு மன்னிக்கவும், சுகமாக போய் வீடு சேருங்கள்.............' என்று சொன்னார்கள்.

எத்தனை தடவை தான் சிரமத்துக்கு மன்னிப்பது. 9/11 அனர்த்தம் நிகழ்ந்த அடுத்த அடுத்த நாட்களில் ஒரு நாள். வேலையில் மதியம் சாப்பிட்டு விட்டு, வழமை போலவே நடந்து கொண்டிருந்தேன். வீதியைக் கடந்து அடுத்த பக்கம் வந்தால் கடற்கரைக்கு செல்லும் ஒரு குறுக்கு வீதி இருக்கின்றது. அந்தக் குறுக்கு வீதியில் கடற்கரைக்கு செல்லும் முன்பே ஒரு சிறிய மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் கீழே இன்னொரு வீதி கடற்கரையை ஒட்டிச் செல்லுகின்றது. நான் அந்த மேம்பாலத்தில் நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று சில போலீஸ் வாகனங்கள் என்னை மறித்து எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து நின்றன. 

'எங்கே போகின்றீகள்...............'

'கடற்கரைக்கு...................'

'ஏன்.........................'

'தினமும் மதியம் போவேன்..............'

'எங்கே வேலை செய்கின்றீர்கள்..............'

அங்கிருந்து பார்க்கும் போதே நான் வேலை செய்யும் அந்த உயர்ந்த கட்டிடம் தெரியும். அதைக் காட்டினேன். அடையாள அட்டை ஏதாவது இருக்கின்றதா என்றார்கள். கொடுத்தேன். ஒருவர் அதை எடுத்துக் கொண்டு அவர்களின் ஒரு வாகனத்துக்குப் போனார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தார். சிரமத்திற்கு மன்னிக்கவும், நீங்கள் போகலாம் என்றார்கள். அங்கே அப்படியே நின்று கொண்டிருந்தேன். 

முன்னர் சிறிது காலம் திருகோணமலையில் தங்கியிருந்த போது, ஒரு நாள் அங்கே தெருவில் நாங்கள் பலர் நின்று கதைத்துக் கொண்டிருந்தோம். சற்றுத் தள்ளி வேறு சிலரும் கூட்டமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இராணுவத்தினர் அவர்களின் மோட்டார் சைக்கிளை சடாரென்று நிற்பாட்டி விட்டு, அருகே கதைத்துக் கொண்டு நின்ற ஒருவரை ஏதோ கேட்டு விட்டு, இரு கன்னங்களிலும் அறைந்து விட்டுப் போனார்கள். கையாலாகாத நிலையின் ஒரு உச்சத்தில் நாங்கள் அங்கே நின்று கொண்டிருந்தோம்.

இங்கு நான் மேம்பாலத்தின் மேல் அப்படியே நிற்பதைப் பார்த்த ஒரு காவலர் திரும்பி வந்தார்.

'ஆர் யு ஓகே...............'

'ம்............ ஒன்றுமில்லை.............'

'நான் மிகவும் வருந்துகின்றேன்............' என்றவர், யாரோ ஒருவர் அவர்களின் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் அழைத்து, மேம்பாலத்தின் மேலே ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நிற்கின்றார் என்று அவசரத் தகவல் தெரிவித்ததாலேயே தாங்கள் இங்கே வந்ததாகச் சொன்னார்.

இது என்ன புதிதா எங்களுக்கு.

(தொடரும்.......................)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அந்த வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இராணுவத்தினர் அவர்களின் மோட்டார் சைக்கிளை சடாரென்று நிற்பாட்டி விட்டு, அருகே கதைத்துக் கொண்டு நின்ற ஒருவரை ஏதோ கேட்டு விட்டு, இரு கன்னங்களிலும் அறைந்து விட்டுப் போனார்கள். கையாலாகாத நிலையின் ஒரு உச்சத்தில் நாங்கள் அங்கே நின்று கொண்டிருந்தோம்

இந்த அறை யாருக்கு விழுந்ததென்று தெரியாமல் எனக்கு நித்திரையே வராது.

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பராயிருக்கு ரசோ...கோபிக்கவில்லையென்றால் நான் இதற்கு எடுத்துக்கொண்ட உதாரணம் ஒடியல் கூழ்...

அதற்குள் சுவைகூடிய ..கடலுணவுகள் இருக்கும்...எதை ருசித்துச் சாப்பிடுவது என்பது திண்டாட்டமாக இருக்கும்...அதுபோலத்தான் உங்கள் கதைகளும்..எதை ருசிப்பது என்பதில் திண்டாட்டம்..

தொடர்கதையை எதிர்பார்க்கின்றேன்

3 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த அறை யாருக்கு விழுந்ததென்று தெரியாமல் எனக்கு நித்திரையே வராது.

முன்னமே சொல்லியிட்டன் ...லங்காஶ்ரீ ...யாரென்று பெயர் சொல்லாது....

நான் விளங்கினது ...ரசோவுக்குத்தான் ...ஏனென்றால் வல்வட்டித்துரை ..அடையாள அட்டைகாரனுக்கு திருமலையில் இந்தநேரம் என்ன வேலை....

உய்த்தறிதலுக்காக...என்னுடைய அடையாள அட்டையிலும் பிறந்த இடம் பொலிகண்டி... எந்த சோதனைச் சாவாடியிலும் நிற்பாட்டி வைத்து சாத்தலும் விழும் ...சோதனையும் நடக்கும்

இதில் விசேச செய்தி என்னவென்றால் ..காதலியும் /மனைவியுமாகியவளீண் ... அடையாள அட்டையில் பிறந்த இடம் பொலிகண்டிதான்...அப்ப பெண்பிரசையுடன் போனால் சோதனை குறைவென்பது...என்னுடைய லைவ்வில் நடக்கவில்லை ...அதுதான் கனடாவருகையின் காரணம்..

  • கருத்துக்கள உறவுகள்

ரசோதரன் கதை.

உறவுகள் ஆகா ஓகோ என்று அடித்துப் பிடித்து ரசிக்கிறார்கள். நானும் ரசிப்போமே என்று கதையைப் பார்த்தேன், அம்மாடியோ கதை அப்படி நீளம். அளந்து பார்த்து இறங்கிப் போவதற்குள் சிட்னியில் இருந்து லொஸ்சேஞ்சல் போய்விடலாம் என்று தோன்றியது. என்றாலும் ஆவல் விடவில்லை, கோழிப் பொரியல் வாங்கி துண்டு துண்டாக தக்காழிக் குழம்பில் தொட்டு உண்பதுபோல் உறவுகளின் ஊட்டத்தையும் தொட்டுத் தொட்டு கதையை உண்டேன். ஆனந்தம் ஆனந்தம், அதுவே சுவையை அப்படி ஊட்டியது.

“டேய் கஞ்சப் பயலே வறுத்த முழுக் கோழியை வாங்கித்தாடா” நாக்கு வாட்டி எடுத்தது. தாள் சில்லறையாகி சில்லறையும் தீர்ந்தது, முழுக்கோழி வாங்க நான் எங்கே போவேன்? பணிசெய்து பணம் உழைக்க முதுமை விடுமா???🥵

  • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2025 at 02:50, ஈழப்பிரியன் said:

டால்பினுக்கு தமிழ் ஓங்கில் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன்.

நன்றி.

நானும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

சுப்பராயிருக்கு ரசோ...கோபிக்கவில்லையென்றால் நான் இதற்கு எடுத்துக்கொண்ட உதாரணம் ஒடியல் கூழ்...

அதற்குள் சுவைகூடிய ..கடலுணவுகள் இருக்கும்...எதை ருசித்துச் சாப்பிடுவது என்பது திண்டாட்டமாக இருக்கும்...அதுபோலத்தான் உங்கள் கதைகளும்..எதை ருசிப்பது என்பதில் திண்டாட்டம்..

"ஒடியல் கூழ்" அருமையான உவமானம் அல்வாயன் . ...... ரசிக்கையில் மண்வாசனை நாசியில் உரசிச் சென்றது ......! 😇

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2025 at 06:15, ரசோதரன் said:

6. பண்ணையாரும் பலரும்

-----------------------------------------

large.FingerPointing.jpg

'அமெரிக்கா உங்களுக்குப் பிடித்திருக்கின்றதா.............' என்று கேட்டார் அவர். மிகவும் தயக்கத்துடனேயே கேட்டார். நான் யார் என்று அவருக்கு கைகொடுத்து அறிமுகப்படுத்திய பின்பே கேட்டார். அவர் யார் என்ற விபரங்கள் முன்னமே எனக்கு ஓரளவு சொல்லப்பட்டிருந்தது. இதே கேள்வியை சில சில மாற்றங்களுடன் என்னிடம், தயக்கத்துடன், ஆரம்பிக்கும் நாலாவது மனிதர் இவர். சிட்னியில் ஒரு பல்கலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்.

'பிடித்தது, பிடிக்கவில்லை என்றில்லை.............. பழகிவிட்டது. பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, வளர்ந்து விட்டார்கள்............' என்றேன். அவர் சில பெயர்களைச் சொல்லி, அவர்களின் காணொளிகளை டிக்டாக்கில் பார்த்தது உண்டா என்று கேட்டார். டிக்டாக்கில் இதுவரை நானறிந்து ஒரு காணொளி தன்னும் நான் பார்த்ததில்லை. அதை அப்படியே சொல்லுவது மரியாதை இல்லை என்று நினைத்து, நான் அவை எதுவும் பார்த்ததில்லை என்றேன். அவர்கள் எல்லோரும் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகாவும் இருப்பவர்கள் என்றார். அவர் சொல்லிய பல்கலைக் கழகங்களின் பெயர்களை அறிந்திருக்கின்றேன், ஆனால் இந்த டிக்டாக்கில் வரும் பேராசிரியர்களில் எவரையும் நான் கேள்விப்பட்டது இல்லை.

அமெரிக்கா செய்து கொண்டிருப்பது சுத்தமான அயோக்கியத்தனம் என்பதே அவருடைய உரையாடலின் சாரம். இதற்கு முன்னர் அமெரிக்கா பிடித்திருக்கின்றதா என்று கேட்ட மற்ற மூவரும் கூட அதே சாரத்தையே சொல்லியிருந்தார்கள். மற்ற மூவரும் அமெரிக்கா அழிந்து விடும் என்றும் சொல்லியிருந்தார்கள். ஆனால் அமெரிக்கா அழிந்தால் அது உலகத்திற்கு பெரும் பாதிப்பாக முடியும் என்று இவர் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய தமிழ் வழக்கு மலையக மக்களின் தமிழ் போன்று இருந்தது. இடையிடையே வந்து போகும் சுத்தமான முழு ஆங்கில வசனங்கள் அவர் நிச்சயம் ஆங்கில வழியில் கல்வி கற்ற ஒருவர் என்பதைக் காட்டியது. ரஷ்யாவின் நியாயங்களைச் சொன்னார். சீனாவின் முன்னேற்றங்களை வரிசைப்படுத்தினார். இந்தியா வல்லரசாகும் என்றார்.

நான் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக 25 வருடங்களின் முன்னேயே விண்ணப்பித்து இருந்தேன் என்று இடையில் சொன்னேன். அந்தச் சூழ்நிலையை இலகுவாக்க இப்படிச் சொல்வது எனக்கு ஒரு தேவையாக இருந்தது. நாங்கள் உண்மையிலேயே ஒரு காலத்தில் விண்ணப்பித்தும் இருந்தோம். அதன் பின்னர் அவர் கொஞ்சம் தணிந்தார் என்று தான் சொல்லவேண்டும். அவர் மலேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் படிக்க வந்து, மீண்டும் மலேசியா போய், பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து, நிரந்தரமாகக் குடியேறியதாகச் சொன்னார். பூர்வீகம் யாழ்ப்பாணம். 'புயலிலே ஒரு தோணி' வாசித்திருக்கின்றீர்களா என்று கேட்டேன். அது என்ன என்பது போல பார்த்தார். நல்ல ஒரு தமிழ் நாவல், கதையின் பெரும் பகுதி மலேசியாவிலேயே இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நடக்கின்றது என்றேன். இப்பொழுது அவர் பார்வையில் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. இந்த ஊர் நூலகத்திலேயே அந்த நாவல் உள்ளது என்றேன்.

அமெரிக்கா மீதும், அதிபர் ட்ரம்பின் அதிரடியான நடவடிக்கைகளின் மீதும் கடுமையான ஒரு பார்வை உலகெங்கும் எம் மக்கள் எல்லோரிடமும் இருக்கின்றது போல. கனடாவிலும் நான் இதே போன்ற கடுமையான எதிர்வினைகளைக் கேட்டிருக்கின்றேன். இதில் உள்ள ஒரு முரண்பாடு என்னவென்றால், எனக்கு தெரிந்து இன்று எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் பலரும் அமெரிக்க தேர்தலின் முன்னர் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாகவும், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகவும் கருத்துகள் சொல்லிக் கொண்டிருந்தவர்களே. இவர்கள் என்ன மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிந்தார்களோ தெரியவில்லை, ஆனால் இன்றைய அமெரிக்க அதிபரால் மிகவும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரிந்தது. நான் தனிப்பட்ட ரீதியில் ஏமாற்றப்படவில்லை. அவர் பதவியேற்ற அன்றே நான்கு வருடங்களிற்கும் தயாராகவே இருந்தேன். 

பொதுவாக பலவீனமானவர்களே மிகவும் பலசாலி போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியானவர்களை மக்கள் ஏன் தலைவர்களாக தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதன் அடிப்படையே அது தான் போல. கூட்டமாக அன்றாடம் தலைப்பு செய்திகளை உண்டாக்குகின்றார்கள். வெற்றி, வெற்றி என்று முழங்குகின்றார்கள். பின்னர் அந்தச் செய்தி அப்படியே கைவிடப்படுகின்றது. அடுத்த நாள் வரப் போகின்ற புதியதொரு தலைப்பு செய்திக்கு தயாராகின்றார்கள்.   

சிட்னியின் அந்த புறநகர்ப் பகுதியில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் புதிதாக, கடந்த ஐந்து வருடங்களுக்குள், கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் குடியிருப்பவர்களில் நூறு வீதமானவர்களும் இந்திய மக்கள் போன்றே தெரிகின்றது. இவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்குள் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வந்தவர்கள் போல. அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொள்வதற்கு அரசாங்கம் கொடுக்கும் அனுமதி தனித்தனி வீடுகளை ஒரு தெருவிலும், தெருவின் அடுத்த பக்கத்தில் அல்லது அடுத்த தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டவும் அனுமதிக்கின்றது. இது அங்கே வீடுகளில் குடியிருப்பவர்களுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்பவர்களுக்குமிடையே உரசல்களை உண்டாக்குகின்றது. புதிய குடியிருப்புகளுக்கு ஏற்ப மற்ற புதிய உட்கட்டமைப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை. பிரதான வீதிகள், பாடசாலைகள், வணிக வளாகங்கள், நூலகங்கள், பூங்காக்கள் என்று எந்த வசதிகளும் இந்த பெருக்கத்துக்கு ஈடாக புதிதாக உருவாக்கப்படவில்லை. இதுவும் ஏற்கனவே அங்கே இருப்பவர்களுக்கும், புதிதாக குடிவருபவர்களுக்குமிடையே பிணக்குகளை உண்டாக்குகின்றது. 

சட்டம், ஒழுங்கு, நாகரிகம் கெட்டுப் போகின்றது என்று புதியவர்களை குற்றம் சாட்டுகின்றார்கள். பல வருடங்களின் முன், லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் சில இலங்கை தமிழர்களுடன் சேர்ந்து எம்மவர்களின் வீடுகளில் திருடுகின்றார்கள் என்ற அபிப்பிராயம் எம்மவர்களிடையே இருந்தது. எந்த வீடுகளில் என்ன விழா எப்போது நடக்கின்றது என்ற தகவலையே எம்மவர்களில் சிலரே அவர்களுக்கு கொடுக்கின்றார்கள் என்றனர். விழாக்களில் அணிவதற்காக வங்கிகளிலிருந்து வெளியே வரும் நகைகளை திருடுவதே அவர்களின் இலக்கு என்றனர். பின்னர் இலங்கையிலிருந்து வேறு வழிகளில் சிட்னி வந்த இளைஞர்கள் மீது வேறு விதமான குற்றங்களைச் சொன்னார்கள். சில இடங்களுக்கு பாதுகாப்பாக போய் வரவே முடியாதிருந்ததாகச் சொன்னார்கள். இன்று புதிதாக குடிவரும் இந்தியர்கள் மீது எல்லோரினதும் கவனங்கள் திரும்பியிருக்கின்றன. 

இந்தப் புதிய அபரிதமான குடிவரவால் வீடுகளின் விலைகள் ஏறிக் கொண்டு போவதைப் பற்றி பேச்சும் இருக்கின்றது. பல தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இந்திய மாணவர்களின் ஆதிக்கம் பற்றிய ஆதங்கமும் இருக்கின்றது. எதிர்காலத்தில் எங்களின் பிள்ளைகளுக்கு சரியான வேலைகள் கூட கிடைக்காமல் போய் விடக் கூடும் என்று ஒருவர் சொன்னார். இப்படி பல காரணங்களாலும் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு எதிராக போராட்டங்கள் மெதுமெதுவாக ஆரம்பித்துள்ளன. எம்மக்களின் பலரும் இதற்கு ஆதரவாக உள்ளனர்.

ஆஸ்திரேலியாவையும், சிட்னியையும், எம்மக்களையும் ஒரு கணம் மறந்து விட்டு, அமெரிக்காவையும், அதிபர் ட்ரம்பையும், அவரின் ஆதரவாளர்களையும் நினையுங்கள். இந்த விடயத்தில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா?

இதெல்லாம் பெரிய விடயமே இல்லை, இன்னும் கொஞ்ச நாள் அதிகம் தங்கியிருந்தால் ஓரளவாவது அவுஸ்ரேலியா வாழ் எமது மக்களின் ரெய்லராவது பார்த்திருக்கலாம் உங்களது நல்ல காலம் தப்பிவிட்டீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, putthan said:

யோகர் சுவாமிகளின் சிந்தனை எட்டி பார்க்கிறது😅

🤣................

எதை எதையோ எல்லாம் பாடசாலையிலும், பின்னரும் படித்து மனனம் செய்த பின், இப்போதெல்லாம் இப்படியான சில வரிகள் தான் சட்டென்று ஞாபகத்திற்கு வருகின்றது...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த அறை யாருக்கு விழுந்ததென்று தெரியாமல் எனக்கு நித்திரையே வராது.

9 hours ago, alvayan said:

நான் விளங்கினது ...ரசோவுக்குத்தான் ...ஏனென்றால் வல்வட்டித்துறை ..அடையாள அட்டைகாரனுக்கு திருமலையில் இந்தநேரம் என்ன வேலை....

உய்த்தறிதலுக்காக...என்னுடைய அடையாள அட்டையிலும் பிறந்த இடம் பொலிகண்டி... எந்த சோதனைச் சாவாடியிலும் நிற்பாட்டி வைத்து சாத்தலும் விழும் ...சோதனையும் நடக்கும்

இதில் விசேச செய்தி என்னவென்றால் ..காதலியும் /மனைவியுமாகியவளீண் ... அடையாள அட்டையில் பிறந்த இடம் பொலிகண்டிதான்...அப்ப பெண்பிரசையுடன் போனால் சோதனை குறைவென்பது...என்னுடைய லைவ்வில் நடக்கவில்லை ...அதுதான் கனடாவருகையின் காரணம்..

🤣..................

அல்வாயனின் பதிவைப் பார்த்த பின், ஈழப்பிரியன் அண்ணாவிற்கு நித்திரை நன்றாகவே வந்திருக்கும் என்று நினைக்கின்றேன்................🤣.

அந்த அடையாள அட்டையால் 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.............' என்று அன்று இரண்டு கன்னங்களையும் காட்டிக் கொண்டே பல இடங்களில் நிற்க வேண்டி இருந்தது. இரண்டு கன்னங்களையும் காட்டியதற்காக பரலோகம் போகும் போது, பிதா என்னை அதிகமாக ஆசீர்வதிப்பார்.............

வல்வெட்டித்துறை, பொலிகண்டி, கம்பர்மலை, தொண்டைமனாறு, இவை எல்லாம் ஒரே கணக்கிலேயே வரும்............ இவர்களில் எவரும் தப்பவே முடியாது அந்த நாட்களில்.

'பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை..............' என்ற நடைப்பயணம் சில வருடங்களின் முன் நடந்த போது, மீண்டும் பொலிகண்டியா என்று மெல்லிய சிரிப்பு வந்தது.

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

“டேய் கஞ்சப் பயலே வறுத்த முழுக் கோழியை வாங்கித்தாடா” நாக்கு வாட்டி எடுத்தது. தாள் சில்லறையாகி சில்லறையும் தீர்ந்தது, முழுக்கோழி வாங்க நான் எங்கே போவேன்? பணிசெய்து பணம் உழைக்க முதுமை விடுமா???🥵

❤️...............

மிக்க நன்றி பாஞ்ச் ஐயா. யாழில் உங்களின் எழுத்து ஒரு தனிரகம், அவற்றை நான் ரசித்து வாசிப்பேன்..........👍.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, alvayan said:

சுப்பராயிருக்கு ரசோ...கோபிக்கவில்லையென்றால் நான் இதற்கு எடுத்துக்கொண்ட உதாரணம் ஒடியல் கூழ்...

அதற்குள் சுவைகூடிய ..கடலுணவுகள் இருக்கும்...எதை ருசித்துச் சாப்பிடுவது என்பது திண்டாட்டமாக இருக்கும்...அதுபோலத்தான் உங்கள் கதைகளும்..எதை ருசிப்பது என்பதில் திண்டாட்டம்..

தொடர்கதையை எதிர்பார்க்கின்றேன்

முன்னமே சொல்லியிட்டன் ...லங்காஶ்ரீ ...யாரென்று பெயர் சொல்லாது....

நான் விளங்கினது ...ரசோவுக்குத்தான் ...ஏனென்றால் வல்வட்டித்துரை ..அடையாள அட்டைகாரனுக்கு திருமலையில் இந்தநேரம் என்ன வேலை....

உய்த்தறிதலுக்காக...என்னுடைய அடையாள அட்டையிலும் பிறந்த இடம் பொலிகண்டி... எந்த சோதனைச் சாவாடியிலும் நிற்பாட்டி வைத்து சாத்தலும் விழும் ...சோதனையும் நடக்கும்

இதில் விசேச செய்தி என்னவென்றால் ..காதலியும் /மனைவியுமாகியவளீண் ... அடையாள அட்டையில் பிறந்த இடம் பொலிகண்டிதான்...அப்ப பெண்பிரசையுடன் போனால் சோதனை குறைவென்பது...என்னுடைய லைவ்வில் நடக்கவில்லை ...அதுதான் கனடாவருகையின் காரணம்..

என்னைத் தூங்க வைத்ததற்கு ரொம்ப நன்றி தம்பி.

2 hours ago, ரசோதரன் said:

அல்வாயனின் பதிவைப் பார்த்த பின், ஈழப்பிரியன் அண்ணாவிற்கு நித்திரை நன்றாகவே வந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.....

இருந்தாலும் முதலே சொல்லியிருந்தால் இவ்வளவு இழுபறி இருந்திருக்காதில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

🤣................

எதை எதையோ எல்லாம் பாடசாலையிலும், பின்னரும் படித்து மனனம் செய்த பின், இப்போதெல்லாம் இப்படியான சில வரிகள் தான் சட்டென்று ஞாபகத்திற்கு வருகின்றது...............

அந்த வாசகங்களின் உண்மை இப்ப தான் புரிகின்றது ...வயசு போக போக😅

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2025 at 02:46, ரசோதரன் said:

நான் மிகவும் வருந்துகின்றேன்............' என்றவர், யாரோ ஒருவர் அவர்களின் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் அழைத்து, மேம்பாலத்தின் மேலே ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நிற்கின்றார் என்று அவசரத் தகவல் தெரிவித்ததாலேயே தாங்கள் இங்கே வந்ததாகச் சொன்னார்.

இதைச் சொல்வதற்காக நானும் கொஞ்சமாக வருந்துகிறேன். ஆள் பாதி ஆடை பாதி என்றாலும் முகராசி ஒன்று இருகிறது அல்லவா. உங்களை நேரில் பார்க்காவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

8. படமின்றி அமையாது பயணம்

--------------------------------------------------

large.PlaneLanding.jpg

பயணம் போனால் அங்கங்கே படம் எடுத்து அங்கே இங்கே போடுவது இன்றியமையாதது. ஆனாலும் கடந்த வருடங்களுக்கு இந்த வருடம் மானிடர்களிடையே இந்தப் போக்கு கொஞ்சம் குறைந்தது போலத் தெரிகின்றது. பூமியில் குப்பை, எவரெஸ்டில் குப்பை, விண்வெளியில் குப்பை என்பது போல டிஜிட்டல் குப்பை என்றும் ஒன்று உள்ளதா என்று தெரியவில்லை. இந்த 1 அல்லது 0 என்ற எண்களின் தொகுப்பாக இருக்கும் மொத்தத்தையுமே உடனடியாகவே பூமியில் இருந்து அழிக்க வேண்டிய அவசரம் ஒன்று வந்தால், அதை எப்படிச் செய்யலாம் என்ற யோசனையும் வந்தது. விமானத்தில், இருட்டில், சுற்றிவர எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க, நான் மட்டும் கொட்டக் கொட்ட முழித்திருந்தால், இப்படியான யோசனைகள் வரத்தான் செய்யும். வேற்றுக் கிரகவாசிகளையும், என்னுடைய டிஜிட்டல் குப்பை யோசனையையும் கலந்து ஒரு கதை வந்தால், அது இயக்குனர் ஸ்பீல்பேர்க்குக்கு அடுத்த ஒரு படத்திற்கு ஒரு உதவியாகக் கூட அமையலாம்.

இந்தியாவில் சமீபத்தில் நடந்த விமான விபத்து பற்றியும் ஒரு யோசனை வந்தது. விசாரணையின் முடிவு என்னவானது என்று தெரியவில்லை. ஒரு விமானியின் மேல் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சிங்கம் மற்றும் பல காட்டு மிருகங்கள் தங்களின் இறுதி முடிவும், அந்த நாளும் தெரிந்தவுடன், கூட்டத்தை விட்டு தனியே போய் விடுமாம். அப்படியே தனியே எங்கோ போய், அவை தங்கள் வாழ்க்கைகளை தனியே முடித்துக் கொள்ளுமாம். பல வருடங்களின் முன் ஒரு நாள் காலையில் இங்கு வீட்டின் பின் வளவுக்குள் நிற்கும் கொய்யா மரமொன்றின் அடியில் ஒரு கறுப்பு பூனை படுத்திருந்தது. நான் அதன் அருகே போய்ப் பார்த்தேன். அது அசையாமல் கண்ணை மட்டும் மெதுவாகத் திறந்து பார்த்தது. நான் அதை ஒன்றும் செய்யவில்லை. பின்னர் மனைவியும் அதைப் பார்த்தார். என்ன, பூனை ஒன்று அசையாமல் படுத்திருக்குதே என்றார். இன்று அல்லது நாளை அதன் காலம் முடியப் போகுது போல, அதை அப்படியே விட்டு விடுங்கள் என்றேன். அடுத்த நாள் காலை அதன் காலம் முடிந்திருந்தது. அது ஏன் தேடி இங்கே வந்தது என்று தெரியவில்லை. அந்த இந்திய விமானியும் தன் முடிவை முன்னரே அறிந்திருந்தார் என்றால், அவர் மட்டும் தனியே எங்காவது போயிருந்திருக்கலாம்.

இப்படியே இருந்தால் 14 மணி நேரப் பயணத்தில் 14 ஆயிரம் யோசனைகள் வரும், அதனால் ஏதாவது சில படங்களை பார்த்தே ஆக வேண்டும் என்று சின்னத்திரையில் தேடினேன். 'Nebraska (நெப்ராஸ்கா)' என்ற படத்தை பற்றிய சிறிய விவரம் வித்தியாசமாக இருந்தது. 2013 ம் ஆண்டில் வெளியான அது ஒரு கறுப்பு - வெள்ளை படம். நெப்ராஸ்கா என்றவுடன் மனதில் வரும் பெயர் Warren Buffett. உலகப் பணக்காரராக மாறி மாறி வந்து போகின்றவர்களில் இவரும் ஒருவர். இப்பொழுது 95 வயது. நெப்ராஸ்காவிலிலேயே வசிக்கின்றார். முன்னர் அவரிடம் அலைபேசி இருக்கவில்லை என்றார்கள். இப்பொழுதும் இருக்கின்றதா என்று தெரியவில்லை.இவரை விட இவரின் தனிப்பட்ட செயலாளர் அதிக வரிகள் கட்டுவதாகச் சொல்லி, அமெரிக்காவின் வரி முறைமையை கேள்விக்கு உண்டாக்குபவர்களும் உண்டு. இவரின் வீடு கூட ஒரு சிறு ஊரில் இருக்கும் சாதாரண ஒரு சிறு வீடாகவே படங்களில் இருந்தது. அவருக்கு ஒரு தனிப்பட்ட செயலாளரும், பங்குச் சந்தையில் பங்குகளும் உண்டு என்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், என் வாழ்க்கையும் அவர் வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. நான் அவரை விட அதிகமாக அமெரிக்க அரசுக்கு வரி கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் போல.

நெப்ராஸ்கா படம் போல நான் சில படங்களை முன்னரேயே பார்த்திருக்கின்றேன். ஒரு மிகவும் வயதான தந்தையும், மகனும் ஒரு நீண்ட பிரயாணம் போவதே கதை. படத்தின் ஆரம்பத்தில் தந்தைக்கும், மகனுக்கும், குடும்பத்துக்கும் இடையே மன விலகல்கள், மனஸ்தாபங்கள் என்பன இருக்கும். முதலில் மகன் தந்தையுடன் பயணம் போக மறுப்பார். பின்னர் வேறு வழியின்றி போவார். வழி வழியே நிகழும் சில நிகழ்வுகளால் தந்தையை மகனும், மகனை தந்தையும் புரிந்துகொள்வார்கள். இப்படியான முன்னர் பார்த்த ஒரு படத்தில் ஒரு தந்தையும் மகனும் பிரான்ஸிலிருந்து மெக்காவிற்கு போகின்றார்கள். இறுதியில் மெக்காவில் தந்தை இறந்து போகின்றார். நெப்ராஸ்காவில் தந்தை இறக்கவில்லை, ஆனால் இப்படியான ஒரு கதைக்கு இப்படியான சில நிகழ்வுகள் இருந்தே ஆக வேண்டும் என்பது போல காட்சிகள் வந்து கொண்டிருந்தன.

படம் பரவாயில்லாமல் இருந்தது. சில காட்சிகளில் நடிகர்கள் நன்றாகவே ஒன்றிப் போய் இருந்தார்கள். சில இடங்களில் ஒரு செயற்கைத்தனம் இருந்தது போலவும் இருந்தது. சில நாட்களின் பின்னர் இந்தப் படத்தை பற்றிய விபரத்தை இணையத்தில் தேடிப்பார்த்தேன். தூக்கி வாரிப் போட்டது என்று தான் சொல்லவேண்டும். இந்தப் படம் ஐந்து ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது. கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்ககான விருது இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் பற்பல விருதுகள் உலகெங்கும். நான் தான் படத்தை சரியாகப் பார்க்கவில்லை போல. எனக்குள்ளும் ஒரு புளூ சட்டை மாறன் தூங்கிக் கொண்டிருக்கின்றார், அவர் அன்று விமானப் பயணத்தில் என்னுடன் சேர்ந்து முழித்து இருந்து இந்தப் படத்தை பார்த்திருக்கின்றார் போல.

அடுத்த படமாக மிகவும் பிரபலமான, விருதுகள் வாங்கிய 'லிங்கன்' படத்தை தெரிவுசெய்தேன். நல்ல படம், சிறந்த இயக்குனர், பல விருதுகள் வாங்கிய படம் என்று எனக்கு நானே சொல்லி, புளூ சட்டை மாறனை இல்லாமல் ஆக்கினேன். படம் நன்றாகவே இருந்தது. சிரிக்காதீர்கள்.......... உண்மையிலேயே நல்ல ஒரு படம். ஆபிரகாம் லிங்கன் மீது பெரும் விருப்பம் எப்போதும் உண்டு. அவர் தெருவிளக்கில் படித்தார் என்ற தகவலும் (உண்மையோ பொய்யோ), அவரது கனிந்த முகவெட்டும், அதனுடன் ஒட்டிப் போகும் தாடியும் அவர் உண்மையில் என்ன செய்தார் என்பதையும் மீறி அவர் மீது மிக நல்லதொரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்தது. லிங்கனாக நடித்திருந்தவர் அபாரம், நான் நினைத்திருந்தத லிங்கனையே கண் முன் நிறுத்தினார். இக்கட்டான சூழ்நிலைகளில் லிங்கன் சின்னச் சின்ன கதைகள் சொல்லுகின்றார். நிகழ்வுகளையே கதையாகச் சொல்லுகின்றார். அந்தக் கதைகளில் சிரிப்பும் இழையோடுகின்றது. எந்தச் சுழ்நிலையையும் தாண்டி, செய்ய வேண்டியவற்றை செய்து முடிக்கின்றார். ஒரு தலைவன் எனப்படுபவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனம் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றது. இறுதியில் சுட்டுக் கொல்லப்படுகின்றார். நல்ல தலைவர்கள் இப்படித்தான் இறக்க வேண்டும் போலவும்.

இனிமேல் இந்தப் பயணத்தில் எந்த படமும் பார்க்க முடியாது. லிங்கன் மனதை விட்டு இப்போதைக்கு போகமாட்டார். 

எப்படியோ நேரம் ஓடி, ஒரு காலத்தில் லிங்கனின் நாடாக இருந்த நாட்டில் விமானம் இறங்கியது.

(முற்றும்.)

** அனபான கள நட்புகளுக்கும், உறவுகளுக்கும் மிக்க நன்றி. உங்களின் ஆதரவும், தொடர் வாசிப்பும், கருத்துகளுமே என்னை தொடர்ந்து எழுத வைத்தது.....................🙏.

  • கருத்துக்கள உறவுகள்

ரசோ....நல்ல கதைகள்... இடையிடையே எங்களுக்கு கதையும் விட்டிருக்கிறியள்... ரசித்தேன்...மிகவும் அருமை..

நான் எதோ ஆனந்தவிகடன் மணியன்போல் ...நீண்ட தொடராக எதிர் பார்த்தேன் ..இப்படி பண்ணிட்டீங்களே..

அதுசரி பூனை வீட்டில்...வீட்டில் இறந்ததாக சொன்னீர்கள்...பரிகாரம் செய்தியளோ... பெரிசா இல்லை ...பத்துப்பேரைக் கூப்பிட்டு ..நல்ல மச்ச மாமிச பாட்டி வைக்கிறதுதான் ...மறக்காமல் பிரியன் சாரை கூப்பிட்டுடுங்க..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2025 at 11:53, ஈழப்பிரியன் said:

இந்த அறை யாருக்கு விழுந்ததென்று தெரியாமல் எனக்கு நித்திரையே வராது.

அது ரசோவாக இருக்காதா என்றும் மனம் ஏங்கும். இல்லையென்றாலும் நித்திரை வராதே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.