Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

Halley KarthikUpdated: Saturday, September 27, 2025, 20:52 [IST]

கரூர்: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. நெரிசலில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர்.

நெரிசலில் சிக்கி 22 பேர் மயக்கமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், நெரிசலில் சிக்கி 10 பெண்கள், 6 குழந்தைகள் என மொத்தம் 29 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Vijay stampede

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து கரூருக்கு அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் விரைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

டிஸ்கி

செந்தில்பாலாஜி ஊரிலேயே போய் கூட்டம் போட்டா விடுவாரா?

இதை வைத்து விஜையை ஓட…ஓட அடிப்பார்கள்.

என் கணிப்பு - சீமான் இதில் லீட் பண்ணுவார்.

  • Replies 237
  • Views 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யாயினி
    யாயினி

    Vijay Really Waste Fellow ..இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேணும். ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய் அரசியலுக்கு உகந்தவர் கிடையாது என்பது ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவரைச் சுற்றி இருப்பவர்களின் முதிர்ச்சியற்ற மற்றும் பேராசைகளுக்கு விஜய் இன்று பலியாகிக் கொண்டிருக்கின்றார். புஸ்ஸி ஆனந்த, ஆத

  • ரசோதரன்
    ரசோதரன்

    முண்டி அடித்து நெருங்கி ஒருவர் மேல் ஒருவர் என்று ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து இறந்து போன உடல்களில் ஆறு அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு புதிய நீ

  • கருத்துக்கள உறவுகள்

கரூர்: விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் மயக்கம் - சமீபத்திய தகவல்

கரூர்: விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் மயக்கம்  - சமீபத்திய தகவல்

27 செப்டெம்பர் 2025, 14:52 GMT

புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 27) கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் மருத்துவனைக்கு வந்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய மீ. தங்கவேல், "கரூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இப்போது வேறு எதுவும் கூற முடியாது" எனக் கூறினார்.

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் மயக்கம்  - சமீபத்திய தகவல்

கரூர் அரசு மருத்துவமனையில் மட்டுமல்லாது, ஒரு தனியார் மருத்துவமனையிலும் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

பரப்புரை நடந்த இடத்தில் பொதுமக்கள் அணிந்து வந்த ஆயிரக்கணக்கான செருப்புகள், துண்டுகள், தண்ணீர் பாட்டில்கள் சிதறி கிடப்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

தமிழக அரசு கூறியது என்ன?

தமிழக அரசு கூறியது என்ன?

பட மூலாதாரம்,@mkstalin

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன என கூறியுள்ளார்.

"கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும் மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்." என்று கூறியுள்ளார்.

பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் மயக்கம்  - சமீபத்திய தகவல்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலமைச்சரின் உத்தரவின் பேரில் திருச்சியில் இருந்து மருத்துவ குழு கரூர் செல்கிறது. அதேபோல நானும் இன்று இரவு கரூர் செல்கிறேன்" என்று கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2j4nx9pyxo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிரிந்தோருக்கு அஞ்சலிகள்.

டிவி நேரலையை பார்க்கவே பரிதாபமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கவலையான செய்தி. அநியாயமாக இறந்த 29 உயிர்கள்.

இப்பிடியான சன நெரிசல் மிகுந்த இடங்களுக்கு கர்ப்பிணிகள், குழந்தைகள் செல்வதை தவிர்த்திருக்க வேண்டும்.

இறந்தவர்களுக்கு அஞ்சலிகள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் 35 பேருக்கு மேல் இறந்துள்ளார்கள்.சினிமா மோகம் அடுத்து அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தவர்ளின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்றிரவே கரூர் மாவட்டத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிடவிருக்கிறார்.

திமுக அடித்து ஆடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

38 மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சபடுகிறது

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் டென்மார்க் அக்காவுடன் கதைத்து கொண்டு இருந்தபோது அவர் தொலைக்காட்சியில் விஜயின் இந்த பிரச்சார கூட்டத்தை பார்த்து கொண்டு இருந்தார். என்ன சனமடாதம்பி என்றார். கண்ட கண்ட இடங்களில் இவ்வாறு பிரச்சாரம் செய்யும் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது தான் விஜய்க்கு ஆப்பாக முடியும் என்று சொன்னேன். நடந்திருக்கிறது. மோடன்.

இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்த மனமில்லை. பைத்தியங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள் - 8

ஆண்கள் - 14

பெண்கள் - 16

கவலைகிடம் - 20

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புலவர் said:

தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தவர்ளின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்றிரவே கரூர் மாவட்டத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிடவிருக்கிறார்.

திமுக அடித்து ஆடுகிறது.

26 minutes ago, விசுகு said:

இன்று காலையில் டென்மார்க் அக்காவுடன் கதைத்து கொண்டு இருந்தபோது அவர் தொலைக்காட்சியில் விஜயின் இந்த பிரச்சார கூட்டத்தை பார்த்து கொண்டு இருந்தார். என்ன சனமடாதம்பி என்றார். கண்ட கண்ட இடங்களில் இவ்வாறு பிரச்சாரம் செய்யும் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது தான் விஜய்க்கு ஆப்பாக முடியும் என்று சொன்னேன். நடந்திருக்கிறது. மோடன்.

இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்த மனமில்லை. பைத்தியங்கள்.

தொடர்ந்தும் கூடும் சனத்தை பார்த்த பிறகும் - ஊர் மத்தியில் தரும் இடத்தை ஏற்று கொண்டதன் மூலம் - விஜை தனக்கு தானே ஆப்பு வைத்துள்ளார்.

இது அவரினதும், அவரை சூழ உள்ளோரதும் அரசியல் முதிர்ச்சி அற்ற நிலையையே காட்டுகிறது.

இதில் ஏதேனும் சதி இருக்கலாம் இல்லை என்றாலும்….போன 2 சனிக்கிழமை கூடிய கூட்டத்தை பார்த்த பின்னும் பொலிஸ் 100 அடி வீதியை கொடுத்தது - இதை எதிர்பார்த்தே செய்தார்கள் என்றே நினைக்க வைக்கிறது.

விஜை தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவரின் அரசியல் ஒவ்வொரு அடியாக அழிவை நோக்கி போகிறது.

விரைவாக வெளியே வந்து, பேட்டி கொடுத்து ஆவன செய்ய வேண்டும்.

முதலாவது மன்னிப்பு. இரெண்டாவது நட்டைஈடு, உறவினருடன் ஆறுதல்.

மூன்றாவது - இதில் சதி இருப்பதாக சந்தேகிக்கின் சிபிஐ விசாரணை நேரா அமிதாஷாவிடம் கோர வேண்டும்.

பிகு

திமுக, அதிமுக, பாஜக வை தாண்டி ஒரு மாற்று சக்தி வரமுயன்றால் இப்படித்தான் அடக்குவார்கள்.

சும்மா மேசையில் வாய் கிழிய கத்திவிட்டு, பெட்டி வாங்கும் அரசியல்வாதிகளை விட்டுவிடுவார்கள்.

ஆனால் விஜை திமுகவின் அடித்தளத்தை அசைக்க முயன்றார்.

அதற்குத்தான் இந்த எதிர்வினை.

ஆனால் திமுகவை எதிர்பதாக சொல்லும் பலர் - விஜையை போட்டு துவைப்பதிலேயே இப்போ ஆர்வம் காட்டுவார்கள், யாழ் களத்திலும் இதை காணலாம்😂.

  • கருத்துக்கள உறவுகள்

Crush of large crowd at rally for Indian actor-politician Vijay leaves at least 31 dead, over 50 injured.

Reuters — 

At least 31 people were killed and more than 50 injured on Saturday at a rally held by Tamil actor Vijay, who is campaigning for election, state officials said.

“Thirty-one people died with more than 50 people now hospitalized,” said V. Selvaraj, a senior police official in the district of Karur in Tamil Nadu, where the incident occurred.

Large crowds had gathered for the meeting, part of Vijay’s ongoing state tour for his political party Tamilaga Vettri Kazhagam.

Vijay, who is a well-known actor and goes by only one name, launched a political party last year and began campaigning this month ahead of state elections that are to be held early next year.

State lawmaker Senthil Balaji told reporters that 58 people were hospitalized after what he said was a stampede. He added that Tamil Nadu Chief Minister MK Stalin will visit the area on Sunday.

“The unfortunate incident during a political rally in Karur, Tamil Nadu, is deeply saddening,” Prime Minister Narendra Modi said in a post on X.

Calls to Tamil Nadu state’s health ministry and Tamil Nadu Chief Minister MK Stalin’s office went unanswered. “The news coming from Karur is worrying,” Stalin said in an X post, adding that he had directed ministers and officials to provide urgent medical aid to those who collapsed at the Karur rally and ordered additional assistance from nearby Tiruchirappalli.

https://www.cnn.com/2025/09/27/india/india-actor-politician-vijay-rally-intl

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாசி மகத்தில் ஜெ போனபோது அவரின் பாதுகாப்பால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறந்தனர்.

அந்த ஜெவை கூட மக்கள் மன்னித்தனர்.

இது விஜை வேண்டும் என்று செய்த ஒன்றல்ல - இதில் இருந்தும் மீளலாம்.

ஆனால் விரைவு நடவடிக்கை முக்கியம்.

இப்போதே கூட்டத்தில் இருந்த ஆட்கள் என திமுக சொம்பு ஊடகங்கள் narrative set பண்ணுகிறார்கள்.

நாளைக்கு அண்ணன் சீமான் இறங்கி அடிப்பார்.

விஜை பனையூரில் பதுங்கினால் - வழித்து எடுத்து விடுவார்கள்.

இதில் விஜை தெளிவாக செயல்படின் அவர் அரசியலுக்கு பொருத்தமானவர் என கருதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Vijay Really Waste Fellow ..இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேணும். ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை தவிர்த்திருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, யாயினி said:

Vijay Really Waste Fellow ..இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேணும். ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை தவிர்த்திருக்கலாம்.

உங்களின் மனநிலையில்தான் பலர் இருப்பார்கள்.

பல காலத்துக்கு பின், திமுக வை ஓரம்கட்டி, அதேவேளை ஓரளவு திராவிட, தமிழ்தேசிய அரசியலை முந்தள்ள கூடிய ஒரு புதிய சக்தி, ஆரம்பமாக முதலே அணைந்து விட்டது போலவே படுகிறது.

வேஸ்ட்டு பெலோ பொருத்தமான வார்த்தைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

கரூரில் 100 அடி சாலையில், புகுந்த 60 அடி விஜய்யின் பஸ்! நெரிசலால் நகர முடியாமல் மக்கள் பலி By Vishnupriya R Updated: Saturday, September 27, 2025, 22:13 [IST] Subscribe to Oneindia Tamil கரூர்: கரூரில் 100 அடி சாலையில் 60 அடிக்கு விஜய்யின் பிரச்சார பேருந்து நுழைந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நெரிசலில் சிக்கியவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் பலர் உயிரிழக்க நேரிட்டதாக இந்த விபத்தில் இருந்து மீண்டவர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். விஜய் பிரச்சாரத்தில் வரும் இடங்களில் எல்லாம் சாரை சாரையாக கூட்டம் கூடுகிறது. விமான நிலையத்தில் கூட அத்துமீறி நுழைந்து அவரது வாகனத்தை துரத்திக் கொண்டே ஓடியவர்களையும் கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் பார்த்துள்ளோம். அது போல் அவருடைய வாகனம் நகர கூட முடியாத அளவுக்கு முன்பும் பின்பும் கூட்டம் கூடுவதையும் நாம் பார்க்கிறோம். இந்த நிலையில் நாமக்கலில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்தார். அவரது பிரச்சாரம் நடந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது திடீரென அடுத்தடுத்து பலர் மயங்கி விழுந்தனர். இதில் ஒருவர் மீது ஒருவர் மயங்கி விழுந்ததால் இதுவரை 33 பேர் பலியாகிவிட்டனர். இதில் 6 பச்சிளம் குழந்தைகள், 16 பெண்கள் உள்பட 31 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது போல் மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாமக்கல், சேலம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/karur/karur-tragedy-dead-as-crowd-crush-occurs-when-vijay-s-campaign-bus-enters-narrow-60-foot-stretch-738837.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Left_Include

மக்கள் செத்துட்டாங்க.. பதில் சொல்லுங்க விஜய்.. செய்தியாளர்கள் கேட்க கேட்க.. நிற்காமல் விரைந்த விஜய்! By Shyamsundar I Updated: Saturday, September 27, 2025, 22:24 [IST] Subscribe to Oneindia Tamil கரூர்: திருச்சி விமான நிலையதில் செய்தியாளர்களை சந்திக்காமல் விஜய் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரணங்களுக்கு இதுவரை ஒரு இரங்கல் போஸ்ட் கூட விஜய் செய்யவில்லை. அவரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கரூரில் நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழக கூட்டம் மிகப்பெரிய அசம்பாவிதமாக மாறி உள்ளது. மிகப்பெரிய துயரம் அங்கே அரங்கேறி உள்ளது. மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 50 பேர் வரை பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 40 பேர் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 10 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது. பலர் ஆம்புலன்சில் கொண்டு வரப்படுவதால் கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் கரூர் விரைந்துள்ளார். செந்தில் பாலாஜி விளக்கம் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் எந்தக் கட்டணமும் வாங்காதீர்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளோம். நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் மருத்துவர்களை உடனடியாக வரச் சொல்லி இருக்கிறோம், என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/karur/tamilaga-vetri-kazhaga-vijay-did-not-meet-press-or-give-condolences-after-teh-tr-738839.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Left_Include

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிகு

நாளை முதல்வர் கரூர் போகிறாராம்.

ஆனால் ஒரு ஆள் கூட நெரிசல் படாமல் பொலிஸ் பார்த்துகொள்ளும்.

விஜையின் மக்கள் ஆதரவு என்ற ஆயுதத்தை விஜை மீதே நாகாஸ்திரமாக திருப்பி விட்டுள்ளது திமுக.

ஒன்றில் பெட்டி கொடுத்து வாங்குவார்கள், அல்லது இப்படி கட்டம் கட்டுவார்கள்.

இவர்களுக்கு தண்ணி காட்டிய இருவர் என்றால் அது எம் ஜி ஆரும், ஜெயும்தான்.

அவர்களை போல் விஜை, விஜயகாந்த் இல்லை.

நான் முன்பு கேள்விபட்ட கதை ஒன்று - விஜை அவரின் தங்கை இறப்பின் பின், ஒரு சிறுவனாக, மிகவும் மனநிலை தளம்பி இருந்தாராம். சில விடயங்களில் இப்போதும் மன அளுத்தம் வருமாம்.

விஜை தார்மீக பொறுபேற்று - அரசியலுக்கு முழுக்க போட்டாலும் போடக்கூடும் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

"இதயம் நொறுங்கிப் போயிருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்" என்று தனது எக்ஸ் தளம் மூலம் வருத்தம் தெரிவித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய்.

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார் – தவெக வழக்கறிஞர்!

28 Sep 2025, 1:17 AM

vijay-news-one-1.jpg

தவெக பிரச்சார கூட்டத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், விஜய் சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார் என்று அக்கட்சி வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார்.

கரூர் பரப்புரை கூட்டத்தில் 38 பேர் உயிரிழந்த நிலையில், பிரச்சாரத்தை முடித்த கையோடு திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் அவரது கருத்தை கேட்டறிய காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசாமல் தவிர்த்து சென்றார்.

சென்னை விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம் வந்த விஜய், அங்கிருந்து தனது கார் மூலம் தீவிர பாதுகாப்புடன் பனையூரில் உள்ள வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் கரூரில் இன்றிரவு தவெக வழக்கறிஞர் அறிவழகன் அளித்த பேட்டியில், ’விஜய் மிகுந்த துயரத்தில் இருக்கிறார். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக துணை நிற்கிறது. தலைவர் விஜய் தமிழக மக்களை நேசிக்கக்கூடியவர். இந்த துயர சம்பவம் அவரை மிகவும் பாதித்திருக்கிறது.

எங்களிடம் இன்னும் தலைவர் பேசவில்லை. அவர் இந்த துயரத்திலிருந்து மீண்டு வரவேண்டும். இதுதொடர்பாக விசாரணை செய்ய வேண்டும்.

செய்தி அறிந்த உடனேயே தனது வருத்தத்தை பதிவு செய்தார் விஜய். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தவெக துணை நிற்கும். காவல்துறை நிபந்தனைகளை எல்லா இடங்களிலும் தவெக பின்பற்றியது. மக்களை சரியான முறையில் சந்தித்துவிட்டுதான் வந்திருக்கிறார்’ என்று கூறினார்.

https://minnambalam.com/vijay-is-in-unspeakable-grief-tvk-lawyer/#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

விஜை ரொம்பவும் இமோசனலானவர் என நான் நினைப்பதை இந்த அறிக்கை கொஞ்சம் உறுதி செய்வது போல் உள்ளது.

இத்தனை உயிர்கள் தன் கூட்டத்தில் பலி, அதுவும் தன்னை நேசித்தவர்கள், தன்னை காண என மணிக்கணக்கில் காத்து நின்ற குழந்தைகள் என்பதை கடந்து போவது, மீண்டு வருவது மிக கடினமானது.

ஒத்தாசைக்கு ஒரு கூட்டணி கட்சி கூட இல்லை.

சந்தர்ப்பம் காத்திருந்து நிலைய வித்துவான்கள் ரஜனி, கமல் நன்றாக வாசிக்கிறார்கள்.

விஜை ஒன்றில் நேரில் வந்து இதை எதிர்கொள்ள வேண்டும் அல்லது தார்மீக பொறுப்பேற்று விலகி விடல் வேண்டும்.

30+ உயிர் என்பது இலகுவாக கடந்து போக முடியாத விடயம்.

1 minute ago, கிருபன் said:

விஜய் சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார் – தவெக வழக்கறிஞர்!

28 Sep 2025, 1:17 AM

vijay-news-one-1.jpg

தவெக பிரச்சார கூட்டத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், விஜய் சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார் என்று அக்கட்சி வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார்.

கரூர் பரப்புரை கூட்டத்தில் 38 பேர் உயிரிழந்த நிலையில், பிரச்சாரத்தை முடித்த கையோடு திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் அவரது கருத்தை கேட்டறிய காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசாமல் தவிர்த்து சென்றார்.

சென்னை விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம் வந்த விஜய், அங்கிருந்து தனது கார் மூலம் தீவிர பாதுகாப்புடன் பனையூரில் உள்ள வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் கரூரில் இன்றிரவு தவெக வழக்கறிஞர் அறிவழகன் அளித்த பேட்டியில், ’விஜய் மிகுந்த துயரத்தில் இருக்கிறார். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக துணை நிற்கிறது. தலைவர் விஜய் தமிழக மக்களை நேசிக்கக்கூடியவர். இந்த துயர சம்பவம் அவரை மிகவும் பாதித்திருக்கிறது.

எங்களிடம் இன்னும் தலைவர் பேசவில்லை. அவர் இந்த துயரத்திலிருந்து மீண்டு வரவேண்டும். இதுதொடர்பாக விசாரணை செய்ய வேண்டும்.

செய்தி அறிந்த உடனேயே தனது வருத்தத்தை பதிவு செய்தார் விஜய். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தவெக துணை நிற்கும். காவல்துறை நிபந்தனைகளை எல்லா இடங்களிலும் தவெக பின்பற்றியது. மக்களை சரியான முறையில் சந்தித்துவிட்டுதான் வந்திருக்கிறார்’ என்று கூறினார்.

https://minnambalam.com/vijay-is-in-unspeakable-grief-tvk-lawyer/#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சூழ்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுத்து பதில் சொல்லாமல் போயிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. மற்றைய தலைவர்கள் இரங்கல் தெரிவித்த பிறகு களத்தில்நின்று செயலாற்றும் பொழுது விஜை சாவகாசமாக வீட்டுக்குப் போய் இரங்கல் செய்தி தெரிவித்து இருக்கிறார். திமுக அதிமுக ஆதரவாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். இதுதான் ஒரு அரசியல்கட்சி செய்யும்பணி.விஜையின் கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களும்களத்தில் இருப்பதாக செய்திகள் இல்லை. இந்தப்பாலாஜஜையக் கிண்டல் செய்தாரோ அந்தப்பாலாஜி களத்தில் மக்களோடு மக்களாக நிற்கிறார்.அதிமுகவின் தொண்டர்களை வைத்தியாசாலையை அண்மித்து பகுதிகளில் கூட்டத்தினரைக்கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு எடப்பாடியார் பணித்திருக்கிறார்.இப்பவே இவ்வளவு கட்டுப்பாடுகள் போடும் பொலிஸ் அடுத்த கூட்டத்துக்கு இன்னும் எத்தனை நெருக்கடிகளைக் கொடுக்கப் போகிறது.எந்த முகத்தோடு மக்களைச்சந்திக்கப் போகிறார்.பார்த்துப்படிக்கும்போதே பலதவறுகளை விட்டும் சொதப்பும் விஜை பதட்டத்தில் எப்படிப் பேச

ப் போகிறார். அரசியல் என்பது சினிமா அல்ல. மிகவும் ஆழமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

யாழிலும் மனித சோகத்தில் அரசியல் செய்யும் நிலைய வித்துவான்கள் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

விஜை ஒன்றில் நேரில் வந்து இதை எதிர்கொள்ள வேண்டும் அல்லது தார்மீக பொறுப்பேற்று விலகி விடல் வேண்டும்.

விஜை இதை எதிர் கொள்ள வேண்டும். உடனே பத்திரிகையாளர்களைச்சந்தித்து தனது வருத்தத்தை நேரடியாகப்பதிவு செய்ய வேண்டும் அடுத்த வாரம்வரை காத்திருப்பது அவரின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜை பனையூரில் போய் முடங்கி கிடப்பது மிக பிழை.

ஆனால் மேலே புலவர் எழுதி இருப்பது வரிக்கு, வரி திமுக ஐடி விங் தயாரித்து கொடுத்து பல கணக்குகளில் இருந்து பகிரப்படும் “கருத்து” க்களை ஒத்து இருக்கிறது.

Just now, புலவர் said:
  6 minutes ago, goshan_che said:

விஜை ஒன்றில் நேரில் வந்து இதை எதிர்கொள்ள வேண்டும் அல்லது தார்மீக பொறுப்பேற்று விலகி விடல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு சம்பவம் ஜெயலலிதா காலத்திலும் நடந்தது. ஜெயலலிதா தைரியமாக எதிர்கொண்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

இப்படி ஒரு சம்பவம் ஜெயலலிதா காலத்திலும் நடந்தது. ஜெயலலிதா தைரியமாக எதிர்கொண்டார்.

மேலே சொல்லி உள்ளேன் மாசி மக நீராடலுக்கு ஜெ போனபோது நடந்தது.

ஜெ அளவுக்கு விஜைக்கு துணிவு அல்லது மன தைரியம் இல்லை என்றே படுகிறது.

மனதைரியம் இல்லை எண்டால் அரசியல் சரிவராது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.