Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

39 பேர் உயிரிழப்பு எதேச்சையான விபத்து இல்லை.. திட்டமிட்ட சதி - நீதிபதியிடம் தவெக மனு

Pavithra ManiUpdated: Sunday, September 28, 2025, 12:56 [IST]

karur-stampede-high-court-to-investigate-case-on-tomorrow

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறை விதித்த நிபந்தனைகளை தவெக பின்பற்றவில்லை என்கிற புகாரை திமுக முன் வைத்து வருகிறது. சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் உயர் நீதிமன்ற நீதிபதியை சந்தித்து முறையிட்டனர். திட்டமிட்ட சதி என்று நீதிபதியிடம் தவெக மனு அளித்துள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை மதியம் விசாரணைக்கு வரவுள்ளது.

விஜய் மீது புகார்

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முதலமைச்சர் ஸ்டாலின், பல மாநில முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள், விஜய் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவதில் தொடங்கி பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யவில்லை என்று பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.

தவெக சார்பில் அனுமதி கேட்ட இடம் ஒன்று, அவர்கள் அனுமதி கொடுத்த இடம் ஒன்று அந்தக் கட்சியினர் கூறுகிறார்கள். தமிழ்நாடு அரசின் செயல்பாடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமர்சித்துள்ளனர். மறுபக்கம் தவெகவினர் காவல்துறையினர் விதிகளை மீறியது, விஜய் தாமதமாக வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று திமுக குற்றம் சாட்டி வருகிறது.

தவெக ஆலோசனை

இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தவெக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த அறிவழகன், "பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தவெக என்றும் துணை நிற்கும். விஜய் மிகப்பெரிய துன்பத்தில் இருக்கிறார். காவல்துறை விதித்த நிபந்தனைகளை நாங்கள் மீறவில்லை. விஜய்யின் அடுத்தக்கட்ட பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை முடிவு செய்யப்படும்." என்று கூறியிருந்தார்.

நீதிமன்றத்தில் விசாரணை

இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் ஆலோசனை நடத்தினார்கள். அதன்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை அவரின் இல்லத்தில் சந்தித்து, நீதிமன்றம் தாமாக முன்வந்து சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சிசிடிவி கேமராக்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைக்க முடிவு செய்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று கூறி நீதிபதியிடம் மனு அளித்துள்ளனர்.

சற்று முன்பு தவெக துணைப்பொதுச்செயலாளர் நிர்மல்குமார், வழக்கறிஞர் அறிவழகன் ஆகியோர் நீதிபதி தண்டபாணியை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல் குமார், எங்கள் தரப்பு தகவல்களை சொல்லியுள்ளோம். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை மதியம் 2.15 மணியளவில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதைப்பற்றி வேறு எதுவும் கூற முடியாது. நீதிமன்றம் உத்தரவைப் பொறுத்து எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகிய 2 நபர்கள் கொண்ட அமர்வில் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

https://tamil.oneindia.com/news/madurai/karur-stampede-high-court-to-investigate-case-on-tomorrow-739033.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards

டிஸ்கி

இந்த லைனை நேற்றே எடுத்திருக்க வேண்டும்.

தாமதிக்கும் நீதி மட்டும் அல்ல, தாமதிக்கும் தற்காப்பும் பலன் குன்றியதே.

ஆளுனர் எடுத்து கொடுத்த அடியில் த வெ க பயணிக்கிறதா?

இதைவைத்து அதிமுக+பிஜேபி கூட்டணிக்கு விஜையை நெருக்கி தள்ளுவார்கள் போல உள்ளது.

தமிழ் நாட்டில் திமுக, அதிமுக, பிஜேபி மூவரையும் எதிர்த்து அரசியல் என ஆரம்பித்தால்…

ஒன்றில் சுப உதயகுமார் போல சாக வேண்டும்.

அல்லது சீமான் போல விலைபோக வேண்டும் என்பதுதான் விதி போலும்.

Edited by goshan_che

  • Replies 237
  • Views 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யாயினி
    யாயினி

    Vijay Really Waste Fellow ..இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேணும். ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய் அரசியலுக்கு உகந்தவர் கிடையாது என்பது ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவரைச் சுற்றி இருப்பவர்களின் முதிர்ச்சியற்ற மற்றும் பேராசைகளுக்கு விஜய் இன்று பலியாகிக் கொண்டிருக்கின்றார். புஸ்ஸி ஆனந்த, ஆத

  • ரசோதரன்
    ரசோதரன்

    முண்டி அடித்து நெருங்கி ஒருவர் மேல் ஒருவர் என்று ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து இறந்து போன உடல்களில் ஆறு அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு புதிய நீ

  • கருத்துக்கள உறவுகள்

23 minutes ago, goshan_che said:

விஜையை விட ஆளுனர் அழகாக அரசியல் செய்கிறார்.

இதில் எல்லோரையும் விட மிக நுட்பமாக அரசியல் செய்பவர் சீமான் தான். இப்போது அணைப்பது போல அணைத்து அடுத்த சனிக்கிழமை வெளியே வராமல் வந்தாலும் சனத்தை சேர்க்க முடியாதநிலையை அல்லது இப்படியே அரசியலில் இருந்து ஒதுங்கிப்போகும் வலையமைப்பை அன்புக்கரம் கொண்டு வடிவமைக்கிறார். இதனால் ஒரு கல்லில் பல மாங்காய்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

இதில் எல்லோரையும் விட மிக நுட்பமாக அரசியல் செய்பவர் சீமான் தான். இப்போது அணைப்பது போல அணைத்து அடுத்த சனிக்கிழமை வெளியே வராமல் வந்தாலும் சனத்தை சேர்க்க முடியாதநிலையை அல்லது இப்படியே அரசியலில் இருந்து ஒதுங்கிப்போகும் வலையமைப்பை அன்புக்கரம் கொண்டு வடிவமைக்கிறார். இதனால் ஒரு கல்லில் பல மாங்காய்கள்.

புரிகிறது.

விஜையை யானைவிளாம்பழம் கொண்டது போல, கோது இருக்க சுளை தின்ன விளைகிறார்.

தம்பிகள் இதுதாண்டா அண்ணன் என பயர் விடுவதன் காரணமும் இதுவே.

இதை நான் எழுதலாம் என நினைத்தேன். ஆனால் சீமானின் மீது வக்ரத்தை கக்குகிறார் என்பார்கள் என்பதால் தவிர்த்தேன்.

சீமான் சின்ன கருணாநிதி என முன்பே எழுதியுள்ளேன் - அவர் நரி என்பதில் எனக்கு எள்ளளவும் எப்போதும் சந்தேகமில்லை.

ஆனால் தலைவரை போல் தன் புத்தியை இனத்தின் பொது நலனுக்கு பாவிக்கும் நல்ல புலி இல்லை. அதை தன் கல்லாவை நிரப்ப, முடிந்தால் பதவியை அடைய என சுயநலனுக்கு மட்டுமே பாவிக்கும், கருணாநிதி போன்ற குள்ள நரி - சீமான்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

'விஜய் வாகனம் வந்தவுடன்..' கரூர் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது எப்படி?

கரூரில் த.வெ.க. தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு.

பட மூலாதாரம், Sam Daniel/BBC

படக்குறிப்பு, கரூரில் த.வெ.க. தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு.

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 28 செப்டெம்பர் 2025, 15:06 GMT

    புதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நெரிசலை நேரில் பார்த்தவர்களும் அனுபவித்தவர்களும் பல காரணங்களைச் சொல்கிறார்கள். என்ன நடந்தது?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் சனக்கிழமையன்று விஜய்யின் வாகனம் நின்ற இடத்திற்கு சரியாக எதிரில் இருக்கிறது ரேவதியின் வீடு. சனிக்கிழமையன்று இரவு நடந்த பயங்கரத்தை அவரால் இப்போதும் மறக்க முடியவில்லை.

"காலையிலிருந்தே இந்த இடத்தில் அதிக கூட்டம் இருந்தது என்றாலும் மூன்று மணிக்குப் பிறகு கூட்டம் வெகுவாக அதிகரிக்க ஆரம்பித்தது. ஏழு மணிக்கு அவர் வரும்போது, அவர் வாகனத்தின் பின்னாலும் பெரிய அளவில் கூட்டம் வந்தது. அவர் வாகனத்தை சாலையின் ஒரு பக்கத்தில் நிறுத்துவதற்காக, அந்தப் பக்கம் இருப்பவர்களை எதிர்பக்கம் வரச்சொன்னார்கள். ஏற்கனவே எதிர் பக்கத்தில் ஏகப்பட்ட கூட்டம் இருந்தது. இந்த இரண்டு கூட்டமும் ஒன்றாகச் சேர்ந்ததும் பெரும் நெரிசலாகிவிட்டது" என்கிறார் ரேவதி.

களத்தில் நடந்தது என்ன?

கரூரில் த.வெ.க. தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு.

பட மூலாதாரம், Sam Daniel/BBC

படக்குறிப்பு, கரூரின் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் 12 மணியளவில் பேசுவார் எனக் கூறப்பட்டிருந்ததால் காலை முதலே அங்கு கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது

ரேவதி குறிப்பிடும் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில்தான் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலர் பலியாயினர்.

விஜய்யின் வாகனம் நின்ற பகுதியிலும் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன.

"அவர் இங்கே வந்து பேச ஆரம்பிக்கும்போதே நெரிசல் ஏற்பட ஆரம்பித்தது என்றாலும் அவ்வளவு மோசமில்லை. ஆனால், அவர் பேச ஆரம்பித்ததும் அருகில் இருந்த தகர கூரையின் மீது ஏற ஆரம்பித்தார்கள்." என விவரிக்கிறார் இதனை நேரில் பார்த்த வெங்கமேட்டைச் சேர்ந்த வெங்கடேஷ்.

மேலும் "அந்தத் தகரம் தங்கள் மீது விழுந்துவிடும் என அதற்குக் கீழே இருந்த பெண்கள் வேறு பக்கம் நகர்ந்தார்கள். அதே நேரம் தகரமும் சரிந்து விழுந்தது. இதனால், அருகில் இருந்த சந்துக்குள் ஓட ஆரம்பித்தார்கள். அப்படி ஓடியவர்களில் பலர் கால் இடறி கீழே விழ, குழப்பம் ஏற்பட்டது. பலர் விழுந்தவர்கள் மேலே ஏறியே ஓட ஆரம்பித்தார்கள். கீழே விழுந்தவர்கள் மயங்கிக்கிடக்கிறார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், அவர்கள் உயிரிழந்துவிட்டார்கள்" என வெங்கடேஷ் கூறினார்.

4 மணிக்கு மேல் அதிகரித்த கூட்டம்

110 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, 110 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒவ்வொரு வாரத்தின் சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் பேசிவருகிறார். அதன்படி இந்த வாரம் நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் பேசுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

கரூரின் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் 12 மணியளவில் பேசுவார் எனக் கூறப்பட்டிருந்ததால் காலை முதலே அங்கு கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. சுமார் 4 மணிக்கு மேல் கூட்டம் மெல்லமெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது.

நாமக்கல்லில் விஜய் பேசும்போதே பிற்பகலாகியிருந்தது. அங்கு பேசி முடித்துவிட்டு அவர் கரூரை வந்தடையும்போது மாலையாகியிருந்தது. அவர் பேசத் திட்டமிட்டிருந்த வேலுச்சாமிபுரத்திற்கு ஒரு கி.மீ. தூரத்திலிருந்த பாலத்திற்கு அருகிலிருந்தே பெரிய அளவில் கூட்டம் இருந்தது. பாலத்திற்கு அருகில் மாலை 6 மணியளவில் வந்து சேர்ந்த விஜய், பேச வேண்டிய இடத்திற்கு வந்து சேரும்போது சுமார் ஏழு மணியாகிவிட்டது.

ஏற்கனவே விஜய் பேசவேண்டிய இடத்தில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் இருந்த நிலையில் அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்து வந்த பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களும் பரப்புரை நடந்த இடத்துக்கு வந்தனர்

கரூர், தவெக பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல், விஜய் பிரசாரம்

வாகனத்தின் லைட் அணைக்கப்பட்டது

இதற்கிடையில் விஜய்யின் வாகனத்திற்காக தொண்டர்கள் வழிவிட வேண்டியிருந்ததால், அதுவும் நெரிசலை அதிகரித்தது. அவரது வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அருகில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டு, அதைச் சுற்றி தகரத்தைப் போட்டு மூடப்பட்டிருந்தது.

நெரிசல் அதிகரித்ததால், கூட்டத்தினர் அந்த தகரத் தடுப்பின் மீது ஏறினர். அதனால், அந்தத் தடுப்பு கீழே விழுந்தது. அதேபோல, அருகில் இருந்த கடைகளின் முன்னால் இருந்த தகரக் கூரைகளில் நிறையப் பேர் ஏறினர். அவர்களது எடை தாங்காமல் அந்த கூரைகள் சரிந்து, அதில் நின்று கொண்டிருந்தவர்கள் கீழே விழுந்தனர்.

இந்த நிகழ்வை நேரில் பார்த்த கோமதி, நெரிசலுக்கு வேறொரு காரணத்தையும் சொல்கிறார். "விஜய் கரூர் பகுதிக்குள் வரும்போது பைபாஸ் பகுதியிலிருந்தே வண்டிக்குள் விளக்கை எரியவிட்டுத்தான் வந்தார். ஆனால், போலீஸ் குடியிருப்பு அருகில் வாகனம் வந்தபோது உள்ளே எரிந்துகொண்டிருந்த லைட்டை அணைத்துவிட்டார்." என்றார்.

பின், "கண்ணாடி ஷட்டரையும் சாத்திவிட்டார். இந்தக் கூட்டத்தில் இருந்த பலர் விஜய்யை பார்த்தால் போதும் என்றுதான் வந்திருந்தார்கள். விளக்கை அணைத்து, ஷட்டரையும் மூடிவிட்டதால் அவர்களால் விஜய்யை பார்க்க முடியவில்லை. இதனால், அங்கிருந்த கூட்டம் விஜய் பேசும் இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தது." என்றார்.

மேலும் "இங்கே ஏற்கனவே கும்பல் இருந்தது. அந்த கும்பலோடு இந்த கும்பலும் சேரவே எல்லோரும் நசுக்க ஆரம்பித்துவிட்டார்கள்" என்கிறார் கோமதி.

விஜய் கூட்டம்

பட மூலாதாரம், Sam Daniel/BBC

படக்குறிப்பு, விஜய் பேசவேண்டிய இடத்தில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் இருந்த நிலையில் அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்து வந்த பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களும் பரப்புரை நடந்த இடத்துக்கு வந்தனர்

யார் மீது தவறு?

விஜய் பேச ஆரம்பித்தபோது, அவர் பேசிக்கொண்டிருந்த பகுதியின் எதிர்ப்புரத்திலும் நெரிசல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்த சாக்கடையின் மேல் பகுதி உடைந்து விழவும் அதன் மீது நின்று கொண்டிருந்த சிலர் கீழே விழுந்தனர். இதையடுத்து ஏற்பட்ட பதற்றமும் பரபரப்பும் நெரிசலை அதிகரித்தது. கீழே விழுந்தவர்கள் மீதே ஏறி பலர் ஓட ஆரம்பித்தனர்.

"இந்த இடத்தில் ஆட்கள் நிற்கவே இடம் இல்லாமல் இருந்தது. அப்படியிருக்கும்போது விஜய்யின் வாகனத்திற்கு இடமேயில்லை. அவர் போலீஸ் குடியிருப்பு அருகிலேயே பேசியிருந்தால் பிரச்னை வந்திருக்காது. பத்தாயிரம் பேர் இருக்கக்கூடிய இடத்தில் இடத்தில் முப்பதாயிரம் பேர் குவிந்தால் என்ன நடக்கும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த ஜஸ்டின்.

அந்த இடத்தில் எங்கு தவறு நடந்தது என்பது குறித்து தங்கள் தரப்பைத் தெரிவிக்க தவெக சார்பில் யாரும் முன்வரவில்லை. ஆனால், சமூகவலைதளங்களில் அக்கட்சியினர் சிலர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர்.

அதாவது, போதுமான எண்ணிக்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்றும் விஜய் பேசுவதற்கு கேட்ட இடம் கொடுக்கப்படவில்லையென்றும் விஜய் அந்த இடத்தை வந்தடைந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

கரூர் கூட்டத்தில் விஜய் வாகனம் வந்தவுடன் நெரிசல் ஏற்பட்ட தருணம் எது?

பட மூலாதாரம், TVK

'விஜய் கேட்ட இடத்தை ஒதுக்காதது ஏன்?

கரூரில் விஜய் தனது வாகனத்தை நிறுத்திப் பேசுவதற்கு பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி உள்பட நான்கு இடங்களை கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் அந்தப் பகுதிகள் ஒதுக்கப்படாமல், கரூரில் இருந்து ஈரோட்டை நோக்கிச் செல்லும் சாலையில் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பேசுவதற்கு காவல்துறை அனுமதி அளித்தது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை காவல்துறை மறுக்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் & ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், த.வெ.க கேட்ட பகுதிகள் ஒதுக்க முடியாதவையாக இருந்தன என்றார்.

"அவர்கள் லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியைக் கேட்டார்கள். ஆனால், அந்தப் பகுதி அதிக ரிஸ்க் உள்ள பகுதியாக இருந்தது. குறிப்பாக, அந்த இடத்தின் ஒரு பகுதியில் பெட்ரோல் பங்க் இருந்தது." என்கிறார் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம்.

மேலும் பேசிய அவர், "மற்றொரு பக்கம் ஆறும் பாலமும் இருந்தன. லைட் ஹவுஸ் பகுதி இல்லாவிட்டால் உழவர் சந்தை பகுதியைக் கொடுங்கள் என்றார்கள். அதுவும் மிகக் குறுகலான இடம். ஆனால், வேலுச்சாமிபுரம் இதுபோன்ற கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்பதால் அந்த இடம் அவர்களது ஒப்புதலோடு வழங்கப்பட்டது" என்றார்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு.

பட மூலாதாரம், Sam Daniel/BBC

மின்சாரம் துண்டிக்கப்பட்டதா?

அதேபோல, இந்தக் கூட்டத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைப் பொறுத்தவரை எந்த அளவிற்கு வழங்க வேண்டுமோ அந்த அளவுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

"ஒரு கூட்டத்தின் தன்மையைப் பொருத்து காவலர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள். மிகக் குறைவான ரிஸ்க் கொண்ட கூட்டம் ஒன்றால் 250 - 300 பேருக்கு ஒரு காவலர் இருப்பார். நடுத்தரமான ரிஸ்க் என்றால் 100 - 150 பேருக்கு ஒரு காவலர் நிறுத்தப்படுவார். அதிக ரிஸ்க் உள்ள கூட்டம் என்றால் 50 பேருக்கு ஒருவர் நிறுத்தப்படுவார்கள். இந்தக் கூட்டத்திற்கு காவலர்கள், ஒரு எஸ்.பி., 3 ஏ.டி.எஸ்.பி., 4 டி.எஸ்.பி., 17 ஆய்வாளர்கள், 58 துணை ஆய்வாளர்கள் என 500 பேர் நிறுத்தப்பட்டனர்" எனத் தெரிவித்தார் டேவிட்சன் தேவாசிர்வாதம்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, மின்சார வயர்களை ஒட்டியுள்ள மரங்களில் சிலர் ஏறியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் ஆனால், அவர்களை காவல்துறை கீழே இறக்கிய பிறகு மின்சாரம் கொடுக்கப்பட்டதாகவும் இந்த சம்பவங்கள் எல்லாம் விஜய் அந்தப் பகுதிக்கு வருவதற்கு முன்பே நடந்ததாகவும் மின்வாரிய அதிகாரி ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உயிரிழந்த 40 பேரில் பெரும்பாலானவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cvgq5zle2y7o

  • கருத்துக்கள உறவுகள்

'நூலிழையில் உயிர் தப்பினேன்' - கரூர் கூட்ட நெரிசலில் உயிர் தப்பியவரின் திகில் அனுபவம்

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

படக்குறிப்பு, துர்காதேவி

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 28 செப்டெம்பர் 2025, 03:34 GMT

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

"காலையில் இருந்து வந்த யாருமே அங்கிருந்து செல்லவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கிய நான் சில இளைஞர்களின் உதவியால் தப்பினேன்." என கூட்ட நெரிசலில் சிக்கிய துர்காதேவி பிபிசியிடம் தெரிவித்தார்.

"யாருக்கும் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்," என்கிறார் கரூர் கூட்ட நெரிசலை நேரில் கண்ட லட்சுமி.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உயிரிழந்த ஹேமலதா, சாய் லக்ஷனா, சாய் ஜீவா (தாய் மற்றும் குழந்தைகள்)

கூட்ட நெரிசல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தெரிவித்துள்ளார்.

கரூரில் மதியம் 12 மணிக்கு கூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்த நிலையில் மாலை வேளையில் தான் விஜய் அங்கு சென்றுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

'உணவு, தண்ணீர் தட்டுப்பாடு'

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

தவெக கூட்டத்தில் கலந்து கொண்ட வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்தவரான துர்கா தேவி தான் நூலிழையில் கூட்ட நெரிசலில் இருந்து தப்பியதாகக் குறிப்பிடுகிறார். "காலை நேரத்தில் கூட்டம் அளவாகவே இருந்தது. விஜயின் வருகை தாமதம் ஆகவே கூட்டம் அதிகரித்தது. வெளியூர் மக்கள் அதிகளவில் வந்திருந்தனர். நேற்று பிரசார கூட்டம் நடைபெற்றதால் கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதனால் வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைக்கவில்லை. மாலை கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பாகவே பலர் மயக்கமடைந்தனர்." என்றார்.

சில இளைஞர்கள் உதவியால் தான் உயிர்பிழைத்ததாக குறிப்பிடும் துர்கா தேவி, "காலையில் இருந்து வந்தவர்கள் யாருமே அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. நேரம் ஆகஆக கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது. மாலையில் கட்டுக்கடங்காத அளவிலான கூட்டம் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. நானும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டேன். எங்கள் ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் நான் ஒரு கட்டடத்தின் மீது ஏற உதவி செய்தார்கள். அதனால் காயமின்றி பிழைத்தேன்." என்றார்.

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

படக்குறிப்பு, லட்சுமி

மயக்கமடைந்த குழந்தைகள்

கூட்ட நெரிசலுக்கு முன்பே குழந்தைகள் பலரும் மயக்கமடைந்ததை தன் கண்களால் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார் அதே ஊரைச் சேர்ந்தவரான லட்சுமி.

பிபிசியிடம் பேசிய அவர், "காலையில் பெரிய அளவிலான கூட்ட நெரிசல் இல்லை. முதலில் ஏற்பாடுகள் சரியாகவே இருந்தது. ஆனால் கூட்டம் அதிகரிக்கவே யாராலும் சமாளிக்க முடியவில்லை. பல குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்." எனத் தெரிவித்தார்.

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

படக்குறிப்பு, ஆனந்த் குமார்

காலையிலிருந்தே கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் காத்திருந்ததாக கூறுகிறார் அதே ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ஆனந்த் குமார்.

"கரூரில் இதுபோன்ற கூட்டத்தை நான் பார்த்ததில்லை. விஜய் மாலை தான் வந்தாலும் மதியத்திலிருந்தே கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை எவ்வாறு அழைத்து வந்தார்கள் எனத் தெரியவில்லை. ரசிகர்கள் மிகவும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். பாலத்தின் மீதும் பயங்கர கூட்ட நெரிசலாக இருந்தது. ஊர் முழுவதும் குழுமியிருந்த கூட்டம் விஜய் பேச இருந்த இடம் அருகே மொத்தமாக சென்றது தான் கூட்ட நெரிசலுக்கு காரணம்." என்றார் அவர்.

திருமண நிச்சயத்திற்கு முன்பு உயிரிழந்த பொறியாளர்

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

படக்குறிப்பு, பொறியாளர் ரவியின் தாயார்

கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் சிவில் பொறியாளரான ரவியும் ஒருவர்.

செய்தியாளர்களிடம் பேசிய அவரின் தாயார், "என் மகன் கடந்த சில மாதங்களாக சொந்தமாக தொழில் செய்து வருகிறான். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை என் மகனுக்கு பெண் பார்க்க இருந்தோம். அதனால் என்ன வாங்கி வர வேண்டும் என மிகவும் ஆர்வமாக இருந்தான். நண்பர்களுடன் பிரசாரத்தை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் எனக் கூறிவிட்டுச் சென்றான். அவனின் செல்போன் எடுக்கவில்லை. அதன் பின்னர் அரசு மருத்துவமனையிலிருந்து அழைத்து வரச் சொன்னார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்தால் அவன் உயிருடன் இல்லை." என உருக்கத்துடன் தெரிவித்தார்.

வேடிக்கை பார்க்கப் போன இடத்தில் பலியான 2 வயது சிறுவன்

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

படக்குறிப்பு, பேரனை பறிகொடுத்த சோகத்தில் வசந்தா

இந்த கூட்ட நெரிசலில் வேலுசாமிபுரத்தை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்த வசந்தா என்பவரது 2 வயது பேரனும் உயிரிழந்துள்ளார். "எனது பேரனை அவனின் அத்தை வேடிக்கை பார்க்க அழைத்துச் சென்றுள்ளார். சாலையின் ஓரமாக தான் அவர் நின்றுள்ளார். ஆனால் கூட்டம் அதிகமாகி நகரத் தொடங்கிய போது ஏற்பட்ட நெரிசலில் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தனர்." எனத் தெரிவித்தார்.

இதில் குழந்தை உயிரிழந்த நிலையில் காயமடைந்த அவரது அத்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

கூட்ட நெரிசலில் கரூரைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரான ஜெயபால் காயமடைந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் தந்தை அழகிரி பிபிசியிடம் பேசுகையில், "நண்பர்களுடன் கூட்டத்திற்கு சென்றிருந்தான். அங்கு கூட்ட நெரிசல், உயிரிழப்பு என செய்தி வந்தபோது பதறிப்போய் அவனுக்கு அழைத்தால் அவன் செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. அவன் நண்பர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 1 மணி நேரம் கழித்து தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அழைத்து கூறினார்கள்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c701n1r4729o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜை வாகனம் அந்த வீதியை விட கொஞ்சம் அப்பால் நிற்க முயல - இல்லை வீதிக்குள்தான் போக வேண்டும் என நிர்பந்திக்கபட்டதாம்.

உள்ளே வந்ததும் கரண் கட் ஆகி விட்டதாம்.

8 நிமிடத்தில் செந்தில் பாலாஜியும்…

15 நிமிடத்தில் அன்பில் மகேசும் ஸ்பாட்டுக்கு வந்தார்களாம்….

#மங்காத்தா?

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த சிறுவர்களில் ஒருவர் ஓன்றரை, இரண்டு வயது இருக்கும் குழந்தை இறந்து விட்டது.அவரது தாயார் வாய் பேச முடியாதவர் அந்த தாய் போகும் வாகனத்தின் ஜன்னலில் அடித்து அழும் காட்சி பார்க்கவே முடியாமலிருந்தது.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

8 நிமிடத்தில் செந்தில் பாலாஜியும்…

15 நிமிடத்தில் அன்பில் மகேசும் ஸ்பாட்டுக்கு வந்தார்களாம்….

அதுவும் அந்த மாலை நேரத்தில் கைலியிலோ, டிரவுசருடனோ வரவில்லை, இருவரும் ரொம்ப நேர்தியாக வேட்டி சட்டையில் வந்தார்களாம்.

40 பேர் இறக்க வேண்டும் என் அல்லாமல் ஒரு சின்ன தள்ளுமுள்ளு, சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதி என பிளான் பண்ணி அதுவே கை மீறி போய் இருக்க கூடும்.


உளவுத்துறை தோல்வி.. கரூர் துயரச் சம்பவத்துக்கு ஆளுங்கட்சியே பொறுப்பு.. பொன்வில்சன் சரமாரி விமர்சனம்

Vignesh SelvarajPublished: Sunday, September 28, 2025, 22:36 [IST]

PonWilson Calls for Probe Into Multiple Angles Behind Karur Stampede during Vijay campaign

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த உயிர்பலிகளுக்கு காரணம் அறியாமையா? சுயநலமா? ஆட்சியாளர்களின் கவனக்குறைவா? காவல்துறையின் மெத்தனப்போக்கா? சதியா? இவ்வளவு வகையிலும் விசாரிக்கப்பட வேண்டும் என அரசியல் விமர்சகர் பொன் வில்சன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

மேலும், இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதது. இந்த ஆணையம் அளிக்கும் அறிக்கையின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கரூரில் நடந்த இந்த துயரச் சம்பவத்துக்கு ஆளுங்கட்சியே பொறுப்பு என்றும், காவல்துறை பாதுகாப்பு குறைபாடே இதற்குக் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக அரசியல் விமர்சகர் பொன் வில்சன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

பொன் வில்சன் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கூட்டத்தில் இப்படி ஒரு இழப்பு எந்தக் காலத்திலும் ஏற்பட்டதில்லை. பச்சிளம் குழந்தைகள் 10 பேர் இறந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் யார் மீது குறை என்பது இப்போதைக்கு தெரியாது. அறியாமையா? சுயநலமா? ஆட்சியாளர்களின் கவனக்குறைவா? காவல்துறையின் மெத்தனப்போக்கா? சதியா? இவ்வளவு விஷயங்களும் இதில் இருக்கிறது. இதில் எல்லா வகையிலும் விசாரிக்கப்பட வேண்டும்.

ஆளுங்கட்சி தரப்பில் தான் அதிகபட்ச தவறுகள் இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. தவெகவை பொறுத்தவரை புதிய கட்சி, அங்கு கட்டுப்பாடற்ற தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியை பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த கட்சி. காவல்துறை அனுபவம் மிக்கது. உளவுத்துறை கையில் இருக்கிறது. இதையெல்லாம் கையில் வைத்திருக்கிறீர்கள்.

ஏற்கனவே, திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூரில் தவெக நடத்திய கூட்டத்தை பார்த்துவிட்டோம். அந்தக் கூட்டம் எவ்வளவு கட்டுப்பாடின்றி இருக்கிறது, எவ்வளவு கூட்டம் வருகிறது? எந்த வயது வரம்பில் அதிகமானோர் வருகிறார்கள், பெண்கள், குழந்தைகள் எவ்வளவு பேர் வருகின்றனர், அடிப்படை தேவைகள் இருந்ததா என்பதகெல்லாம் உளவுத்துறை தகவல் இருக்கும் இல்லையா?

அந்த அனுபவத்தை வைத்துத்தானே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எவ்வளவு கூட்டம் வரும் என்று கணிக்க வேண்டும்.. அனுமதி கொடுக்கும் இடத்தில் பாதுகாப்பை சரிவர தர வேண்டும். உங்கள் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/ponwilson-calls-for-probe-into-multiple-angles-behind-karur-stampede-during-vijay-campaign-739131.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒன்றில் சுப உதயகுமார் போல சாக வேண்டும்.

அல்லது சீமான் போல விலைபோக வேண்டும் என்பதுதான் விதி போலும்

சுப உதயகுமார் இறந்துவிட்டாரா?ஆம்ஆத்மி கட்சியில் தேர்தலில்நின்றதாக கேள்வி,சீமான் விலைபோய் விட்டார் என்று ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்வதன்மூலம் பொய்யை உண்மையாக்க நினைக்க வேண்டாம்.சீமான் பாஜகவிடம் விலை போனதாக சொன்னீர்கள் இப்பொழுது திமுகவிடம் விலைபோனதாகச்சொல்கிறீர்கள்.அவரோ தனித்து நிற்பதில் உறுதியாக இருக்கிறார்.என்னுடைய ஊகம் அதிமுக தவெக கூட்டணி அமையும் சாத்தியம் முன்பே இருந்தது.நேற்றைய சம்பவம் அதற்கான அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது.அப்படி அமைவதை நான்வரவேற்கிறேன்.கொள்கை எதிரி கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று சொல்லி சமாளிக்க ஏண்டியதுதான்.விஜை உறுதியான துணிந்த தலைவராகத் தெரியவில்லை.திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் விஜையின் அரசியல் முடிந்து விடும் சினிமாவுக்கு திரும்பினாலும் முன்னைய மதிப்பு இருக்காது.அல்லது கமல் போல் திமுகவில் ஐக்கியமாகவேண்டும்.

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புலவர் said:

சுப உதயகுமார் இறந்துவிட்டாரா?ஆம்ஆத்மி கட்சியில் தேர்தலில்நின்றதாக கேள்வி,சீமான் விலைபோய் விட்டார் என்று ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்வதன்மூலம் பொய்யை உண்மையாக்க நினைக்க வேண்டாம்.சீமான் பாஜகவிடம் விலை போனதாக சொன்னீர்கள் இப்பொழுது திமுகவிடம் விலைபோனதாகச்சொல்கிறீர்கள்.அவரோ தனித்து நிற்பதில் உறுதியாக இருக்கிறார்.என்னுடைய ஊகம் அதிமுக தவெக கூட்டணி அமையும் சாத்தியம் முன்பே இருந்தது.நேற்றைய சம்பவம் அதற்கான அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது.அப்படி அமைவதை நான்வரவேற்கிறேன்.கொள்கை எதிரி கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று சொல்லி சமாளிக்க ஏண்டியதுதான்.விஜை உறுதியான துணிந்த தலைவராகத் தெரியவில்லை.திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் விஜையின் அரசியல் முடிந்து விடும் சினிமாவுக்கு திரும்பினாலும் முன்னைய மதிப்பு இருக்காது.அல்லது கமல் போல் திமுகவில் ஐக்கியமாகவேண்டும்.

சுப முத்துகுமார் என்பதை மாறி எழுதிவிட்டேன்.

இந்த சருவசட்டியையா பெரிசா தூக்கி கொண்டு வாறியள் (கருத்து பஞ்சம்?)

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இவர்களின் சதி இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை.விஜை கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டிருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புலவர் said:

சீமான் பாஜகவிடம் விலை போனதாக சொன்னீர்கள் இப்பொழுது திமுகவிடம் விலைபோனதாகச்சொல்கிறீர்கள்

விற்பனைக்கு தயார் என்றால் எங்கேயும் போகலாம்.

  1. மஹராஸ்டிரத்தில் பிஜேபி வேட்பாளருக்கு சீமான் வாக்கு சேகரிக்கவில்லையா?

  2. பின் ஜெ யை ஆதரிக்கவில்லையா?

    பிஜேபி, அதிமுகவிடம் ஒரு நல்ல விலைக்கு போனவர் திமுகவிடமும் போவார்தானே?

    பிகு

    ஆனால் ரோ சீமானை கையில் எடுத்ததும், முத்துகுமார் கொலையும் அரசியலுக்கு அப்பாலான விடயங்கள்.

    இது இந்திய தேசிய பாதுகாப்பு, ஒருமைப்பாடு சம்பந்தபட்டது.

    தமிழரசன், முத்துகுமார் போன்றோர் முன்னெடுத்த, இந்தியாவில் இருந்து பிரிந்து போகும்-தமிழ் தேசிய அரசியலில் இருந்து, நாதகவை பின்வாங்க செய்து, ஒன்றிய இந்தியாவுக்குள் தமிழ் தேசியம் பேசும் சீமானின் பம்மாத்து அரசியலுக்குள் கட்சியை முடக்கியது சம்பந்தமானது.

    இதில் முத்துகுமார் போல் கொலையாகாமல் தப்பிக்க சீமான் கொடுத்த விலை. ஒன்று முத்து குமாரின் உயிர். மற்றையது பிரிவினைவாத தமிழ் தேசிய கொள்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புலவர் said:

என்னுடைய ஊகம் அதிமுக தவெக கூட்டணி அமையும் சாத்தியம் முன்பே இருந்தது.நேற்றைய சம்பவம் அதற்கான அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது.அப்படி அமைவதை நான்வரவேற்கிறேன்.கொள்கை எதிரி கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று சொல்லி சமாளிக்க ஏண்டியதுதான்.விஜை உறுதியான துணிந்த தலைவராகத் தெரியவில்லை.திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் விஜையின் அரசியல் முடிந்து விடும் சினிமாவுக்கு திரும்பினாலும் முன்னைய மதிப்பு இருக்காது.அல்லது கமல் போல் திமுகவில் ஐக்கியமாகவேண்டும்.

இதை நான் அடியோடு எதிர்கிறேன்.

பாஜகவுடன் கூட்டணி போவதற்கு விஜை கடையை மூடி விட்டு மீண்டும் நடிக்க அல்லது ஓய்வெடுக்க போகலாம்.

அப்படி செய்வாராயின், சீமானை போல பண நலனுக்கு இல்லை எனிலும், சுய நலனுக்கு நேரத்துக்கு ஒரு நிறம் மாறும் பச்சோந்திதான் விஜை என்பது ஐயம் திரிபற நிருபணம் ஆகும்.

தமிழ் நாட்டின் இப்போதைய மிக பெரும் ஆபத்து, திமுகவோ, அதிமுகவோ, ஊழலோ அல்ல -

மிக பெரும் ஆபத்து, அதிமுக கூட்டணி மூலம் பாஜக ஆட்சியில் பங்கெடுத்து, அதிமுகவை விழுங்கி (சிவசேனாவுக்கு செய்தது போல்), தமிழ் நாட்டில் திமுகவுக்கு அடுத்த சக்தி என வருவதே.

இதற்குத்தான் விஜை துணை போவார் எனில் மூட்டை கொடோனிலேயே இருந்திருக்கலாம்.

பாஜகவுடன் இதுவரை திமுக, அதிமுக கூட்டணி வைத்தாலும், தமிழ் நாட்டில் ஆட்சியில் பங்கு இல்லை என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள்.

அதேபோல் வாய்பாயின் பிஜேபி அல்ல அமித் ஷாவின் பிஜேபி. இந்த ஆபத்து உணர்ந்தே, தலைக்கு மேல் சொத்து குவிப்பு கத்தி தொங்கிய போதும், ஜெ கூட்டணியை மறுத்தார்.

பிஜேபி இருக்கும் கூட்டணி வென்று ஆட்சி அமைப்பதற்கு, எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் திமுக ஆட்சியே தொடரலாம்.

குறிப்பு

இப்படி எழுதியமைக்காக நீங்கள் என்னை திமுக சொம்பு 200 ரூபாய் உபி என இப்போ திட்ட தொடங்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரேமலதாவுக்கு உள்ள துணிச்சல் உண்மையிலேயே வியக்கதக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

புரிகிறது.

விஜையை யானைவிளாம்பழம் கொண்டது போல, கோது இருக்க சுளை தின்ன விளைகிறார்.

தம்பிகள் இதுதாண்டா அண்ணன் என பயர் விடுவதன் காரணமும் இதுவே.

இதை நான் எழுதலாம் என நினைத்தேன். ஆனால் சீமானின் மீது வக்ரத்தை கக்குகிறார் என்பார்கள் என்பதால் தவிர்த்தேன்.

சீமான் சின்ன கருணாநிதி என முன்பே எழுதியுள்ளேன் - அவர் நரி என்பதில் எனக்கு எள்ளளவும் எப்போதும் சந்தேகமில்லை.

ஆனால் தலைவரை போல் தன் புத்தியை இனத்தின் பொது நலனுக்கு பாவிக்கும் நல்ல புலி இல்லை. அதை தன் கல்லாவை நிரப்ப, முடிந்தால் பதவியை அடைய என சுயநலனுக்கு மட்டுமே பாவிக்கும், கருணாநிதி போன்ற குள்ள நரி - சீமான்.

அரசியல் என்று வந்து விட்டால் இவை தவிர்க்க முடியாதவை. முதலிலேயே சீமான் சொல்லி விட்டார் நாங்கள் 15 வருடங்களாக களத்தில் நின்று கொஞ்சம் கொஞ்சமாக வளருவமாம் தம்பி வந்து அடுத்த முதல்வர் நான் தான் என்பாராம். நாங்க பொத்திக்கொண்டு இருக்கணுமா என்று.

மற்றும் தலைவர் மற்றும் புலிகள் இவ்வுலகில் வாழ வெல்ல தகுதியுடையோர் அல்ல. மற்றும் வெற்றி பெற்றவன் மட்டுமே உலகில் புத்திசாலி வீரன் சாதனையாளன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அரசியல் கட்சி ஒன்றுக்காக மக்கள் கூடுவது ஜனநாயகத்தின் அடிப்படை கூறு. Freedom of assembly.

அதை சரிவர, பாதுகாப்பாக நடத்தி கொடுக்க வேண்டியது அரசினதும், ஏற்பாட்டாளரதும் கடமை.

இங்கே கடமை தவறியது அரசும், தவெகவுமே தவிர மக்கள் அல்ல.

கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவம் இன்று யேர்மனிய அரசுத் தொலைக்காட்சியான Tagesschauவில் செய்தியாக இடம் பெற்றிருந்தது.

இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று என்னவெனில், இதுபோன்ற ஒரு அவலமான நிகழ்வொன்றை யேர்மனியரும் சந்தித்திருக்கிறார்கள். 24.07.2010 அன்று யேர்மனியின் டுயிஸ்பெர்க் (Duisburg) நகரில் நடைபெற்ற Love Parade இசை விழாவில், எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெருக்கத்தில், குறுகிய சுரங்க வழியிலிருந்து வெளியேற முடியாமல் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 600க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் இன்றும் மீள முடியாத மனநிலை மற்றும் உடல் பாதிப்புகளில் இருக்கிறார்கள்.

இந்தத் அவலம் நிகழ்ந்ததும், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அனுமதி வழங்கிய நகர மேயருக்கு எதிராக பலத்த விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக நகர மேயருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிகழ்வை குறித்த மேலதிக தகவலுக்கு, https://en.wikipedia.org/wiki/Love_Parade_disaster

Love Parade  அவலத்தில் ஒரு குழந்தையும் உயிரிழக்கவில்லை, ஏனெனில் பெற்றோர் அவர்களை விழாவிற்கு அழைத்துச் செல்லவில்லை. இதைத் தங்கள் அபிமான நடிகர்களை, தலைவர்களைக்  காணவரும் தமிழ்நாட்டுக் குடும்பங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

எம்ஜிஆர் அரசியலில் இறங்கும்போது அவருக்கு இருந்த அரசியல் ஞானமும், கருணாநிதி மற்றும் திமுக பற்றி இருந்த அனுபவமும், இப்போது அரசியலில் ஈடுபட முயல்கின்ற நடிகர் விஜய்க்கு இல்லை என்பதே உண்மை. திமுக தனது அரசியல் வெற்றிக்காக எந்தெந்த வழிகளையும் நாடும் என்பதை எம்ஜிஆர் நன்கு தெரிந்து வைத்திருந்தார்.

எம்ஜிஆர் தனது கட்சியை தொடங்கிய காலத்தில், மலையாளர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதும், எம்ஜிஆர் படங்களை வெளியிடும் திரையரங்குகளில் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டதுமாகச் சம்பவங்கள் பல நடந்தன. திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, திரைகளை கத்தியால் கிழித்து, எம்ஜிஆர் படத் தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி (சாண்டோ சின்னப்பா தேவர் உட்பட)பல வழிகளிலும் எம்ஜிஆருக்கு கருணாநிதி இடைஞ்சல்கள் செய்தார். ஆனால் இதனை எல்லாம் தாங்கி, எம்ஜிஆர் முதல்வரானார்.

அவர் நடித்த "நீதிக்குத் தலை வணங்கு" திரைப்படத்தில் உள்ள ஒரு பாடல் வரிகள் இப்படி இருந்தன,

"பாதுகாவல் போர்வையிலே

ஜாதி இன பேதம் சொல்லி

ஊர் பகையை வளர்ப்பவன் நீ

ஊரில் உள்ளவரை மோதவிட்டு

குள்ள நரி போலிருந்து

ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ

இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன்

நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம் முடித்து வைப்பேன்

நான் பாத்தா பைத்தியக்காரன்

உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்"

இந்தக் கருத்துகள் இன்றும் அரசியல் சூழலில் பொருந்தக்கூடியவை.

விஜய் அரசியலுக்கு குதித்திருப்பது, நீரின் ஆழத்தை அறியாமல் ஆற்றில் இறங்கி நீச்சலடிப்பது போன்றதொரு நிலை. அரசியல் ஆறு எவ்வளவு ஆழமாக இருக்கிறது, எத்தனை முதலைகள் வாயைப் பிளந்து அங்கே காத்திருக்கின்றன என்பதையும் அவர் சரியாக தெரிந்து கொள்ளவில்லை.

கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு, அரசு உடனடியாக நிதி ஒதுக்கியது. முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றார். இப்படியான அறிவிப்பு திமுகவின் பழைய அரசியல் நடவடிக்கை. இது “தகப்பன் பத்தடி பாய்ந்தால், மகன் பதினாறு அடி பாய்கிறான்” என்பதுபோல் இருக்கிறது.

கரூரில் நடந்த விபத்தையும், யேர்மனியில் நடந்த Love Parade பேரழிவையும் ஒப்பிடும்போது, இதுவொரு தனிநபர் தவறு அல்ல. அமைப்புகளின், அனுமதிகளின், திட்டமிடலின் தோல்வி என்பதையும் காண முடிகிறது. கூடவே திமுகவின் கருணாநிதியின் அரசியல் பாதை என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அரசியல் உலகில்  முன்நோக்கு, அனுபவம், திட்டமிடல் இன்றி இறங்கும் முயற்சிகள், கடின சோதனைகளுக்கு உள்ளாகும்.

பார்க்கலாம் விஜய் என்ன செய்யப் போகின்றார் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/17374e3Pc1/

தான் இருந்த வாகனத்திற்குள் விளக்கை அணைத்து மீண்டும் போட்டு மக்கள் ஆரவாரம் செய்து தெரிந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டு மீண்டும் மீண்டும் செய்தத ரசித்திருக்கிறது இந்த நடிக மாமேதை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, goshan_che said:

நான் அப்போ ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என எண்ணினேன்.

தமிழ்நாட்டு அரசியல் அறிவும் இல்லாமல்....உலக அரசியல் அறிவும் இல்லாமல் தனது ரசிக தோழர்களின் ஒழுக்கமின்மை இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்கிறீர்கள்?😝

ஒழுங்கான சினிமா நடிகர் கூட இல்லாதவர். சும்மா பிரமாண்டம் காட்டும் நடிகர் அவர்.😎

இதனால் தான் ரசிகர்கள் மரங்களிலும் வீட்டு கூரைகளிலும் வீட்டு மதில்களிலும் ஏறி காயமடைந்தார்கள் இது அண்மை நாட்களாக வந்த செய்தி. இப்போது உயிரிழப்புகள். இப்படி மக்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறிதான்.

எல்லாம் இருக்கட்டும்.....

தங்கள் அபிமான நடிகர் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றால் ஏன் சீமானுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது?😋

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, goshan_che said:

உண்மையில் சீமானின் ஆதாரவாளர்களை விட சீமான் நாகரீகமாக அறிக்கை விட்டுள்ளார்.

உலகில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களின் கருத்தை தூக்கிப் பிடித்து சீர்தூக்கி பார்த்தால் எதுவுமே தேறாது. அரசியலில் தேறாத ரசிகர்களை நம்பி அரசியலில் இறங்கியதின் பலன் தான் கருவூர் அவலங்கள். இது உலக அரசியலில் வரலாற்று சாதனை.இந்திய அரசியல் என்றாலே உலகில் ஒரு ஏளன பார்வை உண்டு. இது இன்னும் வலு சேர்க்கும்.

1 hour ago, விசுகு said:

அரசியல் என்று வந்து விட்டால் இவை தவிர்க்க முடியாதவை. முதலிலேயே சீமான் சொல்லி விட்டார் நாங்கள் 15 வருடங்களாக களத்தில் நின்று கொஞ்சம் கொஞ்சமாக வளருவமாம் தம்பி வந்து அடுத்த முதல்வர் நான் தான் என்பாராம். நாங்க பொத்திக்கொண்டு இருக்கணுமா என்று.

அரசியல் முதலைகள் நிறைந்த குளம் என சீமான் கருத்து சொல்லியுள்ளார்.அதில் அவர் பல இடங்களில் இணக்கமான அரசியல் மேடை பேச்சுக்களை பேசியுள்ளார்.பேசுபவர். அதை சீமான் விமர்சகர்கள் அங்கே விலைபோய்விட்டார்.இங்கே விலை போய் விட்டார்.குறுக்காலை விலை போய் விட்டார்.பெட்டி வாங்கி விட்டார். ஏ டீம்.பீடீம் எக்ஸ் வை டீம்/டீல் என்பார்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளை தூக்கி கொண்டு விஜய்யை பார்க்க வந்த தமிழ்நாட்டவர்கள் மீதும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.

1 hour ago, Kavi arunasalam said:

இந்தத் அவலம் நிகழ்ந்ததும், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அனுமதி வழங்கிய நகர மேயருக்கு எதிராக பலத்த விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக நகர மேயருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது

ஆனால் இங்கே தமிழ்நாட்டில் விஜய் கூட்டத்திற்கு அனுமதி வழங்காவிட்டால் தான் திமுக அரசு விஜய்க்கு பயந்து அவர் கட்சியை ஒடுக்க பார்க்கின்றது ஜனநாயகத்தின் மீதான அரசின் அடக்கு முறை என்று குற்றம் சாட்டுவார்கள்.இப்படியான குற்றசாட்டுக்களை விஜய் இரசிகர்கள் முன்னைய கூட்டங்களில் கட்டுபாடுற்ற முறையில் நடக்கிறார்கள் என்ற முறைபாடுகள் வந்த போதே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/p/1CTeuhWX9i/?mibextid=wwXIfrஎல்லா மீட்டிங்க்கும் சொன்ன டைம்க்கு வராம, அவரோட ரசிகர்களை மணிக்கூர் கணக்குல காக்க வைப்பது, அந்த ஏரியா முழுக்க பொது மக்களுக்கு அசௌகரியம் கொடுப்பது, போலீஸையும் காத்திருக்க வைப்பது, விஜய்யோட பெரிய தப்பு. ஒவ்வொரு மீட்டிங்க்லயும் இத அவர் செய்வது வேணும்ன்னே செய்றார்னா அவர் சரி செய்ய வேண்டிய பெரிய குற்றம் இது.

அவர் நேத்திக்கு சென்னைக்குப் புறப்பட்டது சரியான முடிவு. நிச்சயம் போலீஸ் அத insist பண்ணி இருப்பாங்க.

அவரால அந்த சிச்சுவேஷன்ல எதுவுமே செஞ்சிருக்க முடியாது. சினிமா ஹீரோ மாதிரி வேன்ல இருந்து குதிச்சு கீழ வந்திருந்தா பிரச்னை இன்னும் பெருசாகி இருக்கும். அந்த எடத்துல இருந்து போனது சரியான முடிவு. இந்த mob mentality விஷயத்துல உலகம் முழுக்கவே இப்படித்தான். அவர் ஆஸ்பத்திரிக்குப் போறேன்னு கெளம்பி இருந்தாலும், இதே பிரச்னை தான் நடந்திருக்கும். அவரோட presence நடந்துட்டு இருந்த வேலைகளுக்கு இடையூறா இருந்திருக்கும்.

அவர் கரூரைச் சுத்தி எங்க தங்கி இருந்தாலும், கூட்டம் கூடி இருக்கும், மீடியாக்காரன் கூட்டமா வந்திருப்பான். அதுக்குன்னு தனி பாதுகாப்பு கொடுக்க வேண்டியதிருக்கும். அவருக்கு அந்த சூழ்நிலைல பாதுக்காப்பான எடம் அவரோட சென்னை வீடு மட்டும் தான். அவர் அங்க போனது தான் சரி.

இந்த மாதிரி ஒரு சம்பவம் யாரையும் பாதிக்கும். விஜய்யை நிச்சயம் பாதிச்சிருக்கும். அதுவும் 30+ங்கறது பெரிய கணக்கு. அதுவுமில்லாம, அவர் பொதுவாவே கொஞ்சம் எமோஷனல் ஆளு தான். ஜல்லிக்கட்டு, அனிதா மரணத்தப்ப, தனியா அவர் சில விஷயங்கள் செஞ்சிருப்பார். அவருக்கு நிச்சயம் வருத்தம் இருந்திருக்கும்.

அதனாலயே, ஃப்ளைட் ஏறதுக்கு முன்னாடி ஒரு அறிக்கை விட்டிருக்கனும். கட்சி நிர்வாகிகள் என்ன செஞ்சிருக்கனும்ன்னு ஒரு நோட் கொடுத்திருக்கனும். பப்ளிக்ல. சொல்லப்போனா, இப்படி ஒரு சம்பவம் எப்ப வேணும்ன்னாலும் வரலாம்ன்னு முன்கூட்டியே அவர் இதுக்கெல்லாம் prepare ஆயிருக்கனும். அதுவும் ஒரு கட்சியோட planningல இருக்க வேண்டிய விஷயம். இந்த மாதிரி சிச்சுவேஷன் வந்தா யார் என்ன செய்யனும்ன்னு ஒரு ப்ளான் இருந்திருக்கனும். இந்த மாதிரி மரணங்களே நடந்தாலும் அத எப்படி ஹேண்டில் பண்றதுன்னு, both politically and socially, அவரோட டீம்க்குத் தெரிஞ்சிருக்கனும். Risk, Safety, DRன்னு என்ன வேணும்ன்னாலும் அதுக்கு பேர் வச்சிருக்கலாம்.

விஜய் இருக்காட்டியும், அவரோட டீம் அந்த எடத்துலயும், ஆஸ்பத்திரிலயும் இருந்திருக்கனும். காணோம்ன்னு தான் சொல்றாங்க.

விஜய் ரசிகர்களுக்குள்ள ஒரு குரூரத்தை உருவாக்கினதுல பெரும்பங்கு புஸ்ஸி ஆனந்த்க்கு உண்டு. மேடைலயே அவரோட நடவடிக்கைகள்ல அது தெரியும். பப்ளிக்லயே இப்படின்னா மத்த எடங்கள்ல அவர் எப்படி இருந்திருப்பார்ன்னு சொல்ல வேண்டியதில்ல. அவர்ட்ட இருப்பது ஒரு ஹிட்லர் மனநிலை. சத்தம் போட்டு, அடக்கி எல்லாத்தயும் சாதிக்க முடியும்ன்னு ஒரு மனநிலை. ஆனா விஜய் அவருக்கு நேரெதிர் சாஃப்ட். ஆனந்த் is not fit for politics. விஜய் எப்பவோ இவரை அனுப்பி இருக்கனும். இனிமேலும் வச்சிருந்தா அவரோட ரசிகர்களும், அவரோட ரசிகர்களால விஜய்யும் தான் பாவம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த குழந்தைகளை தூக்கி கொண்டு வந்ததை குறை சொல்லுவதை என்னால் ஏற்க முடியாமல் உள்ளது.

சிலவேளை புலம் பெயர்ந்தமையால் நமக்கு தெற்காசியாவின் பழக்க வழக்கம் மறந்து விட்டிருக்க கூடும்.

அங்கே கணவனும் மனைவியும் தன்னெழுச்சியாக எங்கேயும் போனால் பிள்ளைகளையும் கூட்டிச்செல்வதே வழமை.

தனியே ஆண்கள் மட்டும் போக இது திமுக/அதிமுக பிரியாணி+குவாட்டர் கூட்டம் அல்ல.

விஜையை பார்க்க போனார்களோ, அரசியல் உரையை கேட்க போனார்களோ, இதில் பலர் இதற்கு ஒரு திருவிழா போலவே போனார்கள்.

போன வாரம் உச்ச நீதிமன்றும் சொல்லி, விஜை கூட பெண்கள், குழந்தைகள் வர வேண்டாம் என சொல்லி இருந்தார்.

ஆனால் - நீதிபதி, ஸ்டாலின், விஜை அனைவருக்கும் தெரியும் என்ன சொன்னாலும் வருவார்கள்.

அப்போ தக்க ஏற்பாட்டை அரசும், தவெகவும் செய்திருக்க வேண்டும்.

அப்போ விஜை வெளியே போகாமல் இருக்கவா முடியும்? அப்படி இருந்தால் வேர்கிங் புரொம் ஹோம் அரசியல்வாதி என்பார்கள்.

ஆகவே தகுந்த இடத்தை கொடுக்க வேண்டியது காவல்துறையின் பணி.

உனக்கு அதிக கூட்டம் வருகிறது நீ அரசியல் பரப்புரை செய்யாதே என்பது பிழையான வாதம்.

அதேபோல் பெண்களுக்கும் ஒரு வோட்டு, ஆண்களுக்கும் ஒரு வோட்டு எனும் போது பெண்களை மட்டும் எப்படி வர வேண்டாம் என்பது.

அது உரிமை மீறல் இல்லையா?

நெரிசலில் ஆண்கள் இறக்கவே இல்லையா?

அல்லது ஆண்கள் இறந்தால் பரவாயில்லையா?

ஒரு ஜனநாயக நாட்டில் - என்ன காரணத்துக்காவேனும் - மக்கள் அரசியலில் ஆர்வம் காட்டினால் - அதை ஊக்குவிக்கவேண்டுமே தவிர, கூட்டம் அதிகமாகிவிடும் நீ வராதே என்பது - சரியான வாதம் இல்லை.

ஒரு அரசின் முதலாவது கடமை தன் மக்களின் உயிர் பாதுகாப்பு.

விஜைக்கு இரு வாரங்களில் 5 மாவடங்களில் கூடிய கூட்டத்தை பார்த்த பின்னும், ஏன் ஒரு 100 அடி வீதியை கொடுத்து, அதற்குள் விஜையின் 60 அடி வாகனம் போயே தீரவேண்டும் என அடம் பிடித்தார்கள்?

ஒரு அடிப்படை risk assessment செய்யிருந்தாலே இந்த இடம் பொருத்தமில்லை என தெரிந்திருக்கும்.

விஜை கேட்ட விஸ்தாரமான, ஸ்டாலின் அண்மையில் பேசிய இடத்தை மறுத்து இதை கொடுத்த அரசுதான் இதில் முதல் குற்றவாளி.

இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம், திமுக ஒரு சின்ன அசம்பாவிதத்தை எதிர்பார்த்து செய்ய அது கைமீறி போய்விட்டது என ஒரு சந்தேகம் எனக்கு உண்டு.

ஆனால்…

அப்படி இல்லை எனிலும், இது ஒரு விபத்தே ஆயினும், இதற்கு பாரிய பொறுப்பு அரசிடமே.

விஜை மீது தப்பில்லை என்பதல்ல.

ஆனால் எந்த அரசியல்வாதியும் தனக்கு கூடும் கூட்டத்தை வேண்டாம் என்பார்களா?

உதயநிதிக்கோ, சீமானுக்கோ இப்படி கூட்டம் கூடினால், இல்லை வேண்டாம் என மறுப்பார்களா?

அதேபோல் விஜை லைட்டை போட்டார், ஷட்டரை மூடினார் என்பதெல்லாம் அபத்தமான கதைகளாவே தெரிகிறது.

இதையேதான் அவர் முன்னைய கூட்டங்களிலும் செய்தார்.

அப்போ விஜை என்ன பொம்மை போல வந்து, பொம்மை போல போக வேண்டுமா? ஏனைய அரசியல்வாதிகள் போலத்தான் அவரும் தன்னை காண வந்தோரிடம் interact பண்ணினார்.

உண்மை இரெண்டு தான்

  1. ஏனையோர் கனவு கூட காண முடியாத கூட்டம் விஜைக்கு கூடியது. அதனால்,

  2. ஸ்டாலின், உதய், எடப்பாடி போன்றோருக்கு கூடும் கூட்டத்தை கட்டுபடுத்த எடுக்கும் நடவடிக்கையை, ஏற்பாட்டை விட பலமடங்கு விஜை கூட்டத்துக்கு தேவை பட்டது.

    அதை அரசு செய்யவில்லை.

இதில் விஜையில் மட்டுமே 100% பிழை என கூறக்கூடியது ஒன்றே ஒன்றுதான்.

அது நடந்த கோரத்தின் பின்னான அவரின் நடத்தை.

அவரின் மனநிலை கடுமையாக பாதிக்கபட்டே விட்டது என்றால் - அதில் விமர்சிக்க ஏதும் இல்லை, ஆனால் இப்படியான மனநிலையோடு முதல்வராக ஆசைபடக்கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

மற்றும் தலைவர் மற்றும் புலிகள் இவ்வுலகில் வாழ வெல்ல தகுதியுடையோர் அல்ல. மற்றும் வெற்றி பெற்றவன் மட்டுமே உலகில் புத்திசாலி வீரன் சாதனையாளன்.

தலைவர் அளவுக்கு எல்லாம் போகதேவையில்லை.

முன்பே சொன்னதுதான்.

என்னை பொறுத்தவரை கருணாவும், சீமானும் ஒன்றே.

கருணா சுழியன் என்பதால்தான், கூட இருந்த தளபதிகள் எல்லாம் மாவீரர் ஆகி விட, அவரால் இன்றுவரை சுகபோகமாக உயிர்வாழ முடிகிறது, என சொல்வோரும் உளர்.

அதேபோலத்தான் சீமானும். சீமான் விஜையை முந்த கூடும், முதல்வராக, ஏன் பிரதமராக கூட வரக்கூடும். ஆனால் தமிழினத்துக்கோ, தமிழ் தேசிய கொள்கைக்கோ அதனால் ஒரு குண்டுமணியளவு கூட நன்மை வராது. மாறாக மலையளவு தீமையும், துரோகமும் விளையும்.

கருணா, சீமான் தனிபட்டு வெல்லலாம் - அதனால் இனம் வெல்லும் என இவர்களை ஆதரிப்பது மடமை.

மொசபிடிக்கும் நாயை மூஞ்சிய பார்த்தா தெரியும்.

2 hours ago, Kavi arunasalam said:

கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவம் இன்று யேர்மனிய அரசுத் தொலைக்காட்சியான Tagesschauவில் செய்தியாக இடம் பெற்றிருந்தது.

இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று என்னவெனில், இதுபோன்ற ஒரு அவலமான நிகழ்வொன்றை யேர்மனியரும் சந்தித்திருக்கிறார்கள். 24.07.2010 அன்று யேர்மனியின் டுயிஸ்பெர்க் (Duisburg) நகரில் நடைபெற்ற Love Parade இசை விழாவில், எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெருக்கத்தில், குறுகிய சுரங்க வழியிலிருந்து வெளியேற முடியாமல் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 600க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் இன்றும் மீள முடியாத மனநிலை மற்றும் உடல் பாதிப்புகளில் இருக்கிறார்கள்.

இந்தத் அவலம் நிகழ்ந்ததும், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அனுமதி வழங்கிய நகர மேயருக்கு எதிராக பலத்த விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக நகர மேயருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிகழ்வை குறித்த மேலதிக தகவலுக்கு, https://en.wikipedia.org/wiki/Love_Parade_disaster

Love Parade  அவலத்தில் ஒரு குழந்தையும் உயிரிழக்கவில்லை, ஏனெனில் பெற்றோர் அவர்களை விழாவிற்கு அழைத்துச் செல்லவில்லை. இதைத் தங்கள் அபிமான நடிகர்களை, தலைவர்களைக்  காணவரும் தமிழ்நாட்டுக் குடும்பங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

எம்ஜிஆர் அரசியலில் இறங்கும்போது அவருக்கு இருந்த அரசியல் ஞானமும், கருணாநிதி மற்றும் திமுக பற்றி இருந்த அனுபவமும், இப்போது அரசியலில் ஈடுபட முயல்கின்ற நடிகர் விஜய்க்கு இல்லை என்பதே உண்மை. திமுக தனது அரசியல் வெற்றிக்காக எந்தெந்த வழிகளையும் நாடும் என்பதை எம்ஜிஆர் நன்கு தெரிந்து வைத்திருந்தார்.

எம்ஜிஆர் தனது கட்சியை தொடங்கிய காலத்தில், மலையாளர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதும், எம்ஜிஆர் படங்களை வெளியிடும் திரையரங்குகளில் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டதுமாகச் சம்பவங்கள் பல நடந்தன. திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, திரைகளை கத்தியால் கிழித்து, எம்ஜிஆர் படத் தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி (சாண்டோ சின்னப்பா தேவர் உட்பட)பல வழிகளிலும் எம்ஜிஆருக்கு கருணாநிதி இடைஞ்சல்கள் செய்தார். ஆனால் இதனை எல்லாம் தாங்கி, எம்ஜிஆர் முதல்வரானார்.

அவர் நடித்த "நீதிக்குத் தலை வணங்கு" திரைப்படத்தில் உள்ள ஒரு பாடல் வரிகள் இப்படி இருந்தன,

"பாதுகாவல் போர்வையிலே

ஜாதி இன பேதம் சொல்லி

ஊர் பகையை வளர்ப்பவன் நீ

ஊரில் உள்ளவரை மோதவிட்டு

குள்ள நரி போலிருந்து

ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ

இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன்

நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம் முடித்து வைப்பேன்

நான் பாத்தா பைத்தியக்காரன்

உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்"

இந்தக் கருத்துகள் இன்றும் அரசியல் சூழலில் பொருந்தக்கூடியவை.

விஜய் அரசியலுக்கு குதித்திருப்பது, நீரின் ஆழத்தை அறியாமல் ஆற்றில் இறங்கி நீச்சலடிப்பது போன்றதொரு நிலை. அரசியல் ஆறு எவ்வளவு ஆழமாக இருக்கிறது, எத்தனை முதலைகள் வாயைப் பிளந்து அங்கே காத்திருக்கின்றன என்பதையும் அவர் சரியாக தெரிந்து கொள்ளவில்லை.

கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு, அரசு உடனடியாக நிதி ஒதுக்கியது. முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றார். இப்படியான அறிவிப்பு திமுகவின் பழைய அரசியல் நடவடிக்கை. இது “தகப்பன் பத்தடி பாய்ந்தால், மகன் பதினாறு அடி பாய்கிறான்” என்பதுபோல் இருக்கிறது.

கரூரில் நடந்த விபத்தையும், யேர்மனியில் நடந்த Love Parade பேரழிவையும் ஒப்பிடும்போது, இதுவொரு தனிநபர் தவறு அல்ல. அமைப்புகளின், அனுமதிகளின், திட்டமிடலின் தோல்வி என்பதையும் காண முடிகிறது. கூடவே திமுகவின் கருணாநிதியின் அரசியல் பாதை என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அரசியல் உலகில்  முன்நோக்கு, அனுபவம், திட்டமிடல் இன்றி இறங்கும் முயற்சிகள், கடின சோதனைகளுக்கு உள்ளாகும்.

பார்க்கலாம் விஜய் என்ன செய்யப் போகின்றார் என்று.

கருத்து

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.