Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

2 minutes ago, புலவர் said:

புலவர், 7 மணி நேரத்துக்கு முன்னரே நீங்கள் இணைத்த பதிவில் இது பொய்யான தகவல் என்று சொல்லப்பட்டுள்ளது.

3 hours ago, தமிழ் சிறி said:

557154558_812546417928624_49445951825614

கரூர் படுகொலையை பின்புறமாக இருந்து செயல்படுத்தியவர்களின் முகம் தெரிகிறது.

நன்கு திட்டமிடல் இருக்கும் போல.

எல்லாத்தையும் மறச்ச நீ கொண்டைய மறைக்கலயே என்கிற கதையா சம்பவத்திற்கு பிறகு நடக்கிற ஒவ்வொரு நாடகங்களும் சந்தேகத்தை மேலும் மேலும் உறுஜிதப்படுத்துகிறது.

புரிஞ்சவன் பிஸ்தா

குகன் அருமைநாட்டார்

தமிழ்சிறி, சோசான் குறிப்பிட்டதுபோல் இதனைப் பார்த்தவுடனேயே சோடிக்கப்பட்ட படம் என்று புரியுமே. பொய்யான தகவைகளைப் பரப்பாதீர்கள்.

  • Replies 237
  • Views 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யாயினி
    யாயினி

    Vijay Really Waste Fellow ..இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேணும். ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய் அரசியலுக்கு உகந்தவர் கிடையாது என்பது ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவரைச் சுற்றி இருப்பவர்களின் முதிர்ச்சியற்ற மற்றும் பேராசைகளுக்கு விஜய் இன்று பலியாகிக் கொண்டிருக்கின்றார். புஸ்ஸி ஆனந்த, ஆத

  • ரசோதரன்
    ரசோதரன்

    முண்டி அடித்து நெருங்கி ஒருவர் மேல் ஒருவர் என்று ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து இறந்து போன உடல்களில் ஆறு அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு புதிய நீ

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

தமிழ்சிறி, சோசான் குறிப்பிட்டதுபோல் இதனைப் பார்த்தவுடனேயே சோடிக்கப்பட்ட படம் என்று புரியுமே. பொய்யான தகவைகளைப் பரப்பாதீர்கள்.

இணையவன்…. அந்தச் செய்தியை நான் பார்த்த போது, எனது பார்வையில் உண்மை போலிருந்ததால் இணைத்தேன். அதற்குக் கீழ் அந்தச் செய்தியை இணைத்தவரின் பெயரையும் போட்டே இருந்தேன். நிச்சயமாக அது பொய்ச் செய்தி என்று தெரிந்து கொண்டு நான் இணைக்கவில்லை. இப்போது அது பொய்ச் செய்தி என்று தெரிந்த படியால்…. அதனை நீக்கி விடுங்கள்.

இந்த சோகமான திரியில்… தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்போம். நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வரை திமுகவை கடுமையாக விமர்சித்து, விஜைக்கு ஒரு சினிமாவை தாண்டிய மக்கள் ஆதரவு இருக்கிறது என சொல்லி கொண்டிருந்த மணி, இன்று “இவர் இல்லை மாற்று, இவர் மாற்று என்றால் தமிழ்நாடு தாங்காது என்கிறார்”.

அது சரியும் கூட.

மரணங்களை விட, அதை ஒட்டி நாதக, திமுக செய்யும் பொய் பிரச்சாரங்களை விட, விஜையின் அரசியலை ஆட்டம் காண வைத்தது. அவர் 2 நாட்களாக எஸ் ஆகியது.

53 minutes ago, ரசோதரன் said:

ஆரோக்கியமான விவாதங்களும், கருத்து பரிமாற்றங்களும், ஆக்கங்களும் இடம்பெறும் ஒரு தளத்தில், அவசரப்பட்டு, பெரும்பாலும் ஒரு பிரச்சார நோக்கில், பொய்ச் செய்திகளை இணைப்பது நியாயம் இல்லை அல்லவா......... நீண்ட நாட்களாக களத்தில் பிதாமகர்கள் போன்று இருப்பவர்களே இப்படிச் செய்யலாமா..............

ஆதவன், தமிழ்வின் போன்ற பொய்யும், புனைவுகளும் நிறைந்த ஊடகங்கள் போன்றே இந்தக் களமும் போய் விடும் அல்லவா..............

உங்கள் அறிவுரை/வேண்டுகோளுக்கு அடுத்த பதிவாக, அதற்கு கீழேயே புலவர் குருமூர்த்தியே மறுத்த பொய்செய்தியின் சுட்டியை இணைத்து விட்டு போயுள்ளார் 😂.

எங்க வந்து யாருகிட்ட 😂

பொய்யான செய்திகளையும், திரிக்கப் பட்ட படங்களையும் இணைப்பதைத் தடுக்கும் விதிகள் யாழ் களத்தில் இருக்கின்றன. இவற்றை மீண்டும் மீண்டும் மீறும் உறுப்பினர்களும் ஒரே உறுப்பினர்கள் தான். யாழ் களம் தற்போது இதனைக் கையாளும் விதம் சிறந்ததாக இருக்கிறது. இந்த உறுப்பினர்களைத் தண்டித்துத் திருத்துவது "நாய்வாலை நிமிர்த்தும் பயனற்ற செயல்"😂 என அறிந்து, நேரடியாகவே சக உறுப்பினர்களோடு சேர்ந்து பொய்ச் செய்திகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இப்படிச் செய்யும் போது குறிப்பிட்ட உறுப்பினர்கள் இணைக்கும் பல தகவல்களை வாசகர்கள் சீரியசாக எடுக்காமல் கடந்து போகும் நிலை உருவாகும் என நினைக்கிறேன். பொய்செய்திகள், படங்கள், வீடியோக்கள் இணைக்கும் உறவுகள் தாங்களாகவே தங்கள் நம்பகத்தன்மைக்கு ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், கிழுகிழுப்பிற்காக தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பர்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கரூர் சம்பவம்.. செந்தில் பாலாஜி காரணம்.. கடிதம் எழுதிவிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்ட விஜய் ரசிகர்

Velmurugan PUpdated: Monday, September 29, 2025, 20:29 [IST]

Senthil Balaji is the reason behind the Karur incident What Vijay fan did after writing a letter

விழுப்புரம்: கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. அதேநேரம் இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை யாருமே எடுக்கவே கூடாது என்பதற்காகவே இந்த பதிவு.

இது 1970களில் இருந்து இன்று வரை தொடர்கிறது. எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி, ரஜினி கமல், அடுத்ததாக விஜய், அஜித் வரை இருக்கிறது.இனி வரும் காலத்திலாவது இது மாறினால் சிறப்பாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள சூழலில் நடிகர்களை நடிகர்களாக பார்க்காமல் கடவுளாக பார்க்கும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சில ரசிகர்கள் அவர் மீது உள்ள அன்பின் மிகுதியில் செய்யும் விஷயங்கள் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது.

Also Read

கரூரில் விஜய்யின் வாகனத்தை மையப் பகுதிக்குள் போக நிர்பந்தம் செய்ததே காரணம்.. கிருஷ்ணசாமி புகார்

நடிகர் விஜய்க்கு அந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை பார்த்தால் போதும், அவரது பேச்சை கேட்டால் போதும் என்று கூட்டம் கூட்டமாக தவெக நடத்தும் அரசியல் கூட்டங்களுக்கு ரசிகர்கள் வருகிறார்கள். அப்படித்தான் நடிகர் விஜய் நடத்திய கரூர் கூட்டத்திற்கும் பல ஆயிரம் பேர் வந்தார்கள். காலை முதலே விஜய்யை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் தண்ணீர் கிடைக்காமலும், மூச்சுவிடக்கூட முடியாமலும் பரிதவித்து போனார்கள்.

Recommended For You

விடை தெரியாத கேள்விகள்.. விஜய் நினைத்தவுடன் கிளம்ப விமானம் கால் டாக்ஸி அல்ல.. நெட்டிசன்

விஜய் வந்துவிட்டு கிளம்பி செல்லும் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் பலர் மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். சிலர் மிதிப்பட்டும் இறந்து போனார்கள். ஒட்டுமொத்தமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம்சாட்டி தவெகவினர் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதேநேரம் அரசும் குறுகிய இடத்தில் தான் தங்களுக்கு இடம் தந்ததாகவும் தவெகவினர் குற்றம்சாட்டுகிறார்கள் . மேலும் சதி என்றும் பரப்பி வருகிறார்கள். இதனை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில் கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார். இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை ஒருபோதும் எடுக்காதீர்கள்..

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

https://tamil.oneindia.com/news/villupuram/senthil-balaji-is-the-reason-behind-the-karur-incident-what-vijay-fan-did-after-writing-a-letter-739387.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

👆என்னத்த சொல்ல🤦‍♂️

அப்போதே சொன்னோமல்லவா 30,000 அணில்களையாவது பலி கேட்காதா என்ன...?

அணில்களும் சைக்கோக்களும் ஒன்றுக்கொன்று சளைச்சதில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய்யை குழிக்குள் தள்ளி மூடி இருப்பார்கள்.. அயோக்கியத்தனமான அரசியல்.. மன்சூர் அலிகான் ஆதங்கம்!

Jaya DeviPublished: Monday, September 29, 2025, 16:08 [IST]

karur stampede Mansoor Ali Khan

அதில், கரூரில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய்யை பார்க்கும் ஆசையுடன் வந்தவர்களை பாழாய் போன, சீக்கு பிடித்த, கரை படிந்த, மோசமான அரசியல்வாதிகளின் சதித்திட்டதால் மரணிக்க செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த 40 இதயங்களுக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கரூர் துயர சம்பவத்தை கேட்டதிலிருந்து எனக்கு இரண்டு நாட்களாக தூக்கமே இல்லை. கரூர் எனது சொந்த ஊர், இன்னும் என்னுடைய வீடு கள்ளப்பட்டிகள் தான் உள்ளது. அவர்கள் உயிரிழந்த போது எவ்வளவு கஷ்டப்பட்டு, மிதிபட்டு, அடிபட்டு, குழிக்குள் விழுந்து இறந்திருப்பார்கள் என்று நினைக்கும் போதே மனம் வேதனையாக இருக்கிறது. நம்ம நாட்டில் இப்படியும் நடக்கிறதா? என நினைக்கும் போது அவமானமாக இருக்கிறது.

Also Read

Oviya: ஓவியாவை திட்டும் விஜய் ரசிகர்கள்.. அசராமல் போஸ்ட் போட்ட ஓவியா.. இறங்கிதான் அடிக்கல!

Oviya: ஓவியாவை திட்டும் விஜய் ரசிகர்கள்.. அசராமல் போஸ்ட் போட்ட ஓவியா.. இறங்கிதான் அடிக்கல!

நடிகர் மன்சூர் அலிகான்:விஜய்யின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்றால், அவரை கொள்கை ரீதியாக எதிர்க்கலாம் கூட்டம் போட்டு அவருக்கு பேச தெரியவில்லை என சொல்லலாம். இதுவரை நான்கு கூட்டங்கள் நடந்து இருக்கிறது. அதிலும் கேட்ட இடம் கொடுக்கவில்லை என தம்பி விஜய் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும் போது, தற்போது நடந்து இருக்கும் இந்த சம்பவம் அயோக்கியத்தனமான அரசியல் தானே, சொந்த மக்களை... சொந்த ஊர் காரன்.. மக்களை காவு கொடுத்து விட்டு இப்படி நல்லவன் வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. அதில், மக்கள் யார் வரவேண்டும் என்பதை சொல்வார்கள். சில அரசியல்வாதிகள் கோமாளித்தனமாக நடந்து கொண்டார்கள் நம்மையும் கோமாளியாக்கினார்கள். சிலர் முடியாமல் கோமாளியாக இருப்பதே நல்லது என ஒதுங்கி விட்டார்கள். பல ஜாம்பவான்களை விலை கொடுத்து வாங்கி விட்டார்கள், பெரிய திமிங்கலமாக, முதலையாக, அடக்க ஆள் இல்லை என்பது போல சென்று கொண்டு இருக்கிறார்கள். ரொம்ப நாளைக்கு இந்த பருப்பு வேகாது. இன்னும் ஆறு மாதத்தில் மக்கள் இதற்கான தீர்ப்பை தருவார்கள்.

விஜய்யை குழிக்குள் தள்ளி இருப்பார்கள்: விஜய் மாநாடு நடத்துவதற்கு 28 கண்டிஷன்களை போட்டார்கள் எந்த கட்சிக்காவது இப்படி கண்டிஷன்களை போட்டார்களா? மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடும் என தெரிந்தும் போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் கொடுத்து இருக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பு ஏன் கொடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல், முட்டு சந்தில் பிரச்சாரம் நடத்துவதற்கு ஏன் அனுமதி கொடுத்தீர்கள்? கொஞ்சம் விட்டு இருந்தால் விஜய் தம்பியை குழிக்குள் போட்டு மூடி ஜன கன மன பாடி இருப்பார்கள்? இது அரசியலா.. கேவலமாக இல்லை.. அயோக்கியத்தனமான அரசியலை செய்து கொண்டு இருக்கிறார்கள். என்னுடைய முழு ஆதரவு விஜய்க்கு தான் என்று நடிகர் மன்சூர் அலிகான் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

https://tamil.oneindia.com

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ஆரோக்கியமான விவாதங்களும், கருத்து பரிமாற்றங்களும், ஆக்கங்களும் இடம்பெறும் ஒரு தளத்தில், அவசரப்பட்டு, பெரும்பாலும் ஒரு பிரச்சார நோக்கில், பொய்ச் செய்திகளை இணைப்பது நியாயம் இல்லை அல்லவா......... நீண்ட நாட்களாக களத்தில் பிதாமகர்கள் போன்று இருப்பவர்களே இப்படிச் செய்யலாமா..............

ஆதவன், தமிழ்வின் போன்ற பொய்யும், புனைவுகளும் நிறைந்த ஊடகங்கள் போன்றே இந்தக் களமும் போய் விடும் அல்லவா..............

ரசோ அண்ணை

கூடாது தான் ஆனால் அணிலுக்காக இலங்கை அணில் குஞ்சுகள் எவரும் இப்படியான தவறான முடிவெடுக்கக்கூடாதென்ற அன்புக்கட்டளையுடன் தவறான திரிப்பு செய்திகளை யாழில் இணைப்பவர்களை கண்மையாக வண்டிக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளசாராய மரணத்தில் கண் கலங்கலையா ஸ்டாலின் ?

என எடப்பாடியும்.

அன்பில் மகேஷ் அழுகைக்கு ஆஸ்கார் கொடுக்கலாம் என அன்புமணியும் இறங்கி அடிக்கிறார்கள் திமுகவின் மாய்மாலத்தை.

இதில் எனக்கு துளியும் ஏற்பில்லை.

ஆனால் இந்த லைனை எடுத்து, அதிமுக+தாவெக+பாஜக+பாமக+தேமுதிக ஒரே அணியில் நின்றால் - திமுகவுக்கு டப்பா டான்ஸ் ஆடிவிடும்.

சபரி அண்ணனுக்கு கொடுத்த 100 கோடியும் விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இவர் ஒரு காலத்தில் சீமானுக்கு காவடி தூக்கிய கோமாளி அல்லவா..?

இன்று அணிலுக்கு காவடி தூக்குவதால் மனிதருள் மாணிக்கமாகி விட்டாரா..?

1 hour ago, goshan_che said:

நேற்று வரை திமுகவை கடுமையாக விமர்சித்து, விஜைக்கு ஒரு சினிமாவை தாண்டிய மக்கள் ஆதரவு இருக்கிறது என சொல்லி கொண்டிருந்த மணி, இன்று “இவர் இல்லை மாற்று, இவர் மாற்று என்றால் தமிழ்நாடு தாங்காது என்கிறார்”.

அது சரியும் கூட.

மரணங்களை விட, அதை ஒட்டி நாதக, திமுக செய்யும் பொய் பிரச்சாரங்களை விட, விஜையின் அரசியலை ஆட்டம் காண வைத்தது. அவர் 2 நாட்களாக எஸ் ஆகியது.

உங்கள் அறிவுரை/வேண்டுகோளுக்கு அடுத்த பதிவாக, அதற்கு கீழேயே புலவர் குருமூர்த்தியே மறுத்த பொய்செய்தியின் சுட்டியை இணைத்து விட்டு போயுள்ளார் 😂.

எங்க வந்து யாருகிட்ட 😂

ஓ போண்டா மணி அந்தர் பல்ட்டி, அடுத்தது கஞ்சா சவுக்கும் அவனோட கோ ப்ரோடியுஸர் Red Flix பீலிக்ஸ்சும், வலை பேச்சு வாடகை வாய் பிஸ்மியும் தான் பாக்கி. ஒரே நைட் ஓவர் பில்டப் காலி.

அதை விட ஒரு காலத்தில் சீமானுக்கு காவடி தூக்கிய கோமாளி மன்சூர் அலிகான் வாந்தியெல்லாம் அரங்கம் ஏறுது . அணில் அணில்தான் ஆமை ஆமை தான்

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ரசோ அண்ணை

கூடாது தான் ஆனால் அணிலுக்காக இலங்கை அணில் குஞ்சுகள் எவரும் இப்படியான தவறான முடிவெடுக்கக்கூடாதென்ற அன்புக்கட்டளையுடன் தவறான திரிப்பு செய்திகளை யாழில் இணைப்பவர்களை கண்மையாக வண்டிக்கிறேன்.

எப்படி இருக்கின்றீர்கள் அக்னி....................

தமிழ்நாட்டில் நீட் பரீட்சையில் தோற்று விட்டோம் என்று தொடர் தற்கொலைகள் நடந்த வன்ணமே இருக்கின்றது. வெவ்வேறு தலைவர்களுக்காக, காரணங்களுக்காக தீக்குளிப்புகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. இப்போது இன்னொரு வகை தற்கொலை..........

இந்தச் செய்திகளும், நாங்களும் இவை தொடர்வதற்கு பொறுப்பாகின்றோம் அல்லவா..........

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

நிச்சயமாக இதற்கு நாங்கள் பொறுப்பல்ல இந்தியா இலங்கை இரண்டு வேறுபட்ட கொள்கை கொண்ட நாடுகள் என்று புரிந்து கொள்ள மறுப்பவர்களால் மட்டுமே இந்த முட்டாள்தனம் அரங்கேறுகிறது. இந்தியாவில் தமிழ் நாட்டில் நடந்த எந்த ஒரு அநீதிக்கும் இலங்கை தமிழர்கள் எவரும் தீக்குளிக்கவில்லை . ஆனால் இந்தியாவில் தங்களாால் கட்டுப்படுத்த முடியாத/ கையாள முடியாத ஒரு விடயத்திற்காக சடுதியாக உயிரை மாய்ப்பதென்பது ஒரு மன நோயாக இருக்குமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. First day first show பார்க்க முடியவில்லை என்பதால் நாக்கை அறுத்தவர் கூட இந்த பட்டியலில் தானே வரக்கூடும்.

உண்மையில் தமிழ்நாட்டில் இருக்கும் கடைக்கோடி மக்களுக்கு இந்த Counseling மிக அவசியம். இதற்கு நாம் எவ்வகையிலும் காரணமில்லை. சீமான் அவரது வியாபாரத்திற்காக ஈழ தமிழர்களை நம்மிடம் விற்கிறார் என்றால் ஈழத்தில பிடித்ததவன் கொள்வனவு செய்யட்டும். இந்தியாவில் பிடித்தவன் இந்தியாவில் கொள்வனவு செய்யட்டும். இதில் உயிரை மாய்க்கும் அவசியம் எங்கிருந்து வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உங்கள் அறிவுரை/வேண்டுகோளுக்கு அடுத்த பதிவாக,

இந்த தருணத்திலாவது சொல்ல வேண்டும் போல இருந்தது, கோஷான், அதனாலேயே சொன்னேன். எப்போதும் எல்லாமுமே அரசியல் என்றவுடன் வேதனையும், கோபமும் தான் வருகின்றது........... ஒரு நல்ல தலைவன் கூட இல்லாத இனமாகிப் போய் விட்டோமே............

1 hour ago, Justin said:

இப்படிச் செய்யும் போது குறிப்பிட்ட உறுப்பினர்கள் இணைக்கும் பல தகவல்களை வாசகர்கள் சீரியசாக எடுக்காமல் கடந்து போகும் நிலை உருவாகும் என நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது சரியே, ஜஸ்டின். சில ஊடகங்களை தவிர்ப்பது போலவே, வேறு சில ஊடகங்களின் பிரச்சாரப் போக்கில் நம்பிக்கை இழந்தது போலவே, நீங்கள் சொல்வதும் நடக்கும். ஆனாலும் பொய்ச் செய்திகள் பரவும் வேகம் மிக அதிகம். பொய்ச் செய்திகள் மிகவும் திட்டமிட்டே உருவாக்கப்படுபவை, அதி தீவிர உணர்வுகளை தூண்டுவதே அந்தச் செய்திகளின் நோக்கம். அதன் விளைவுகள் தற்கொலைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

First day first show பார்க்க முடியவில்லை என்பதால் நாக்கை அறுத்தவர் கூட இந்த பட்டியலில் தானே வரக்கூடும்.

உண்மையில் தமிழ்நாட்டில் இருக்கும் கடைக்கோடி மக்களுக்கு இந்த Counseling மிக அவசியம். இதற்கு நாம் எவ்வகையிலும் காரணமில்லை. சீமான் அவரது வியாபாரத்திற்காக ஈழ தமிழர்களை நம்மிடம் விற்கிறார் என்றால் ஈழத்தில பிடித்ததவன் கொள்வனவு செய்யட்டும். இந்தியாவில் பிடித்தவன் இந்தியாவில் கொள்வனவு செய்யட்டும். இதில் உயிரை மாய்க்கும் அவசியம் எங்கிருந்து வருகிறது.

தமிழ்நாட்டு சினிமா நடிகர்களின் மீதும், அரசியல் தலைவர்களின் மீதும், சாமியார்களின் மீதும் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்களுக்கு இலங்கைத் தமிழர்களும் ஒரு காரணம் தானே, அக்னி. இன்றைய இணைந்த இணைய உலகில் எல்லாமுமே சேர்ந்து தானே தங்களை கடவுள்கள் என்று சிலரை நினைக்கவைக்கின்றது.

தன் தலைவன்/நடிகன், தன் குரு போன்றோர் எதற்கும் அப்பாற்பட்டவர் என்று நினைக்கும் ஈழத் தமிழர்களும் இருக்கின்றார்கள் தானே. முதல் நாள் முதல் காட்சிக்கு போகும் ஈழத் தமிழர்களும் இருக்கின்றார்கள்.

ஈழத் தமிழர்கள் தீக்குளிப்பு போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. ஆனால் இந்த தனிநபர் மீதான மோகங்கள் பரவ நாங்களும், நாங்கள் காவிச் செல்லும் செய்திகளும் உடைந்தை ஆகின்றன அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

மாற்றுக்கருத்தில்லை

தமன்னாவை பார்க்க பனையேறிய குஞ்சுகள் நமது Production . இன்னும் கடக்க வேண்டிய தூரம் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

இவர் ஒரு காலத்தில் சீமானுக்கு காவடி தூக்கிய கோமாளி அல்லவா..?

இன்று அணிலுக்கு காவடி தூக்குவதால் மனிதருள் மாணிக்கமாகி விட்டாரா..?

அவரேதான்.

உங்களுக்கு நான் எழுதாததை வாசிக்கும் ஹலுசினேஷன் பிரச்சனை ஏதும் உள்ளதா?

நான் அவர் உத்தமர் என்றோ, அவரின் கருத்துடன் உடன்படுகிறேன் என்றோ எங்கே எழுதினேன்?

மேலே நான் பலரின் கருத்துக்களை இணைத்தது போலவே இதையும் இணைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நோ டெபினெட்லி நோ

நான் Categorize பண்ணுகிறேன் அம்புட்டுத்தே.

வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

இவர் ஒரு காலத்தில் சீமானுக்கு காவடி தூக்கிய கோமாளி அல்லவா..?

இன்று அணிலுக்கு காவடி தூக்குவதால் மனிதருள் மாணிக்கமாகி விட்டாரா..?

ஓ போண்டா மணி அந்தர் பல்ட்டி, அடுத்தது கஞ்சா சவுக்கும் அவனோட கோ ப்ரோடியுஸர் Red Flix பீலிக்ஸ்சும், வலை பேச்சு வாடகை வாய் பிஸ்மியும் தான் பாக்கி. ஒரே நைட் ஓவர் பில்டப் காலி.

அதை விட ஒரு காலத்தில் சீமானுக்கு காவடி தூக்கிய கோமாளி மன்சூர் அலிகான் வாந்தியெல்லாம் அரங்கம் ஏறுது . அணில் அணில்தான் ஆமை ஆமை தான்

உங்களுக்கு என்னையா பிரச்சனை.

நான் விஜை ரசிகர், அல்லது அவரின் அரசியல் ஆதரவாளர் என நினைத்துகொண்டு யாரும் இல்லாத இருட்டு அறையில் முரட்டு குத்து குத்துகிறீர்கள்😂.

நான் இரெண்டுமே இல்லை.

தமிழ் நாட்டு அரசியலில் நான் யாருக்கும் ஆதரவு இல்லை.

ஒரே எதிரிதான்.

யார் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உங்களுக்கு என்னையா பிரச்சனை.

நான் விஜை ரசிகர், அல்லது அவரின் அரசியல் ஆதரவாளர் என நினைத்துகொண்டு யாரும் இல்லாத இருட்டு அறையில் முரட்டு குத்து குத்துகிறீர்கள்😂.

நான் இரெண்டுமே இல்லை.

தமிழ் நாட்டு அரசியலில் நான் யாருக்கும் ஆதரவு இல்லை.

ஒரே எதிரிதான்.

யார் என்பது சொல்லி தெரிய

வேண்டியதில்லை.

அண்ணை எனக்கும் ஒரு பிரச்சினையையுமில்லை.

மேலே சொன்னது போல் Categorize மட்டுமே பண்ணுகிறேன்.

கருத்து சொல்பவனின் Credibility ஐ மட்டுமே அலசுகிறேன். Doubt இருந்தால் அண்ணன் கிட்டதானே இந்த தம்பி கேட்க முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

நோ டெபினெட்லி நோ

நான் Categorize பண்ணுகிறேன் அம்புட்டுத்தே.

வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே

நிறைய எழுதினேன் அக்னி. ஆனால் அழித்து விட்டேன்.

எழுதிகொண்டிருக்கும் போதே ஏதோ 2015 வாக்கில் கருத்தை விட்டு, கழுத்தை பிடிக்கும் வகையில் உரையாடல் நகர்வதாக தோன்றியது.

ஆகவே அழித்து விட்டேன்.

யாழ் களமும், நீங்களும் நானும் கூட மாறிவிடோம். Dare I say வளர்ந்து விட்டோம்.

இணைந்திருங்கள் உருப்படியான கருத்துக்கள் எழும்பட்சத்தில் பரிமாறி கொள்வோம்.

3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை எனக்கும் ஒரு பிரச்சினையையுமில்லை.

மேலே சொன்னது போல் Categorize மட்டுமே பண்ணுகிறேன்.

கருத்து சொல்பவனின் Credibility ஐ மட்டுமே அலசுகிறேன். Doubt இருந்தால் அண்ணன் கிட்டதானே இந்த தம்பி கேட்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நிறைய எழுதினேன் அக்னி. ஆனால் அழித்து விட்டேன்.

எழுதிகொண்டிருக்கும் போதே ஏதோ 2015 வாக்கில் கருத்தை விட்டு, கழுத்தை பிடிக்கும் வகையில் உரையாடல் நகர்வதாக தோன்றியது.

ஆகவே அழித்து விட்டேன்.

யாழ் களமும், நீங்களும் நானும் கூட மாறிவிடோம். Dare I say வளர்ந்து விட்டோம்.

இணைந்திருங்கள் உருப்படியான கருத்துக்கள் எழும்பட்சத்தில் பரிமாறி கொள்வோம்.

கருத்து சொல்பவனின் Credibility ஐ மட்டுமே அலசுகிறேன். Doubt இருந்தால் அண்ணன் கிட்டதானே இந்த தம்பி கேட்க முடியும்.

அண்ணை Very Sorry கருத்து சொல்பவன் என்ற ஒருமை உங்களை நோக்கியதல்ல அது மன்சூரை நோக்கியது. எப்போதும் உங்கள் மீதும் ஐஸ்டீன் அண்ணை மீதும் எனக்கு தனி மதிப்பு மரியாதை உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

புலவர், 7 மணி நேரத்துக்கு முன்னரே நீங்கள் இணைத்த பதிவில் இது பொய்யான தகவல் என்று சொல்லப்பட்டுள்ளது.

புதியதலைமுறையில் வந்த செய்தி என்ற படியால் உண்மையான செய்தி என்று சரிபார்க்காமல் இணைத்து விட்டேன்.அதனை நீக்கி விடுங்கள்.தவறைச்சுட்டிக்காட்டிந்தற்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

விஜை அவரை நல்ல அரசியல் தலைவருக்குரிய ஆளுமையைக்காட்டவில்லை.தன்னைப்பார்க்க தன்கூட்டத்தில்தன்பேச்சைக்கேட்க வந்தவர்கள் 40 பேர்வரையில் இறந்து விட்டார்கள்.இதற்கு விஜய் எந்த பிரதிபலிப்பையும் காட்டாது வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்.இது ஆளும் திமுக வின் சதி என்று ஊடக சந்திப்பை நடத்தி இறந்த மக்களுக்காக அவரது வருத்ததைத் தெரிவித்து அரசியலில் புயலைக்கிளப்பி இருக்க வேண்டும்.விஜை சொல்லும்பொழுது அது ஊடக வெளிச்சம் பெறும்.மாறாக அடைக்கோழியைப்போல் கோழைத்தனமாக வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்.அடுத்த வாரமாவது வெளியே வருவாரா?அல்லது கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தால் இதுதான் சமயம் என்று முடங்கி விடுவாரா?

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

அடுத்த வாரமாவது வெளியே வருவாரா?அல்லது கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தால் இதுதான் சமயம் என்று முடங்கி விடுவாரா?

நாளை தொடங்கும் கிரிக்கட்டோடு இது கொஞ்சம் அடங்கிவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ஆதாய நோக்கங்களை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, சம்பவ இடத்தில் ஒரு கட்சி சாராத சாதாரண மனிதர் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்.

எந்த தள்ளுமுள்ளும் வரமுன்பே 4 பெரிய அம்புலன்சை அந்த வழியே அனுப்பி உள்ளனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.