Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

விசாரித்து முடித்து வையுங்கள் என்று வழக்கிட்டவரே சீமான் தான். எனவே தன்னிடம் எதை கேட்டாலும் செய்ய தயாராகவே வழக்கை தொடர்ந்து இருப்பார்.

இல்லை. சீமான் சென்னை உயர் நீதி மன்றத்தில் கேட்டது, வழக்கை விசாரியுங்கள் என்று அல்ல. இப்போது மாமா உச்ச நீதி மன்றம் செய்தது போல் விசாரிக்காமல் அடித்து மூடுங்கள் என்பதையே.

ஆனால் அரிதாக ஒரு நியாயமான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி - இது பாரிய கிரிமினல் குற்றசாட்டு இதை அப்படி நூக்க முடியாது…

ஆனால் பொலிசும் இழுத்தடிக்க கூடாது…

என காலவரையறை கொடுத்து…

மிக, மிக நியாயமான தீர்ப்பை கொடுத்தார்….

தான் சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டதை தாமதாமாக உணர்ந்த சீமான் டெல்லிக்கு ஓடி பாஜக தயவில் வழக்கை அடித்து நூத்தார்.

இதுதான் நடந்த தரவு.

யாழில் பல செய்திதிரிகளில் இதை காணலாம்.

2 hours ago, Paanch said:

“சங்கு சுட்டாலும் வெண்மைதரும்”

சுடச் சுட சீமானும் வெண்மையாவதுபோல் தெரிகிறது.🤩

நன்றாகப் பெரும் போறனையில் போட்டு சுடுங்கள்.

நற்றுணையாவது நமச்சிவாயவே.🙏

சங்கு மட்டும் அல்ல, சவமும்தான் சுட்டால் வெண்மை (சாம்பல்) தரும்🤣.

உப்புகல்லை வைரம் எண்டு சொன்னால்….

நம்பி ஒப்பு கொள்ளும் மூடருக்கு முன்னால்…

- கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்-

  • Replies 78
  • Views 3.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    ஒவ்வொரு தேர்தல்கள் வரும்போதும் எங்காவது இருக்கும் இந்த அம்மாவை இழுத்துவிட்ட திருத்த முடியாத கழுதைகளுக்கு மாபெரும் தோல்வி.

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kadancha
    Kadancha

    இதில் நடிகையே பொய் சொல்லி உள்ளதாக வருகிறது. சீமானின் 'வார்த்தை' செயல்கள் - அதாவது அவதூறு. - அதுக்கு தானே மன்னிப்பு கேட்க்கும் படி சொன்னது நீதி மன்றம். நடிகை சீமானுடன் (உடல்) உறவு வைத்தது என்று புகார்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

உண்மையில் மனம் திருந்தினால், மகிந்தவும், சீமானும் மன்னிப்புக்கு தகுந்தோரே.

large.IMG_9170.jpeg.e531a80457a810c9dff1

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

வழக்கை விசாரித்து முடித்து வையுங்கள் என்று வழக்கிட்டவரே சீமான் தான். எனவே தன்னிடம் எதை கேட்டாலும் செய்ய தயாராகவே வழக்கை தொடர்ந்து இருப்பார்.

🤣கொஞ்சம் அலட்சியமாக இருந்தால், "சீமான் தான் விஜயலட்சுமி மீது வழக்குப் போட்டார்!" என்றும் புதுக் கதை பின்னுவீர்கள் போல இருக்கிறதே😂?

2011 இல் சீமான் மீது சென்னைக் கோர்ட்டில் கொண்டு FIR வரப் பட்டு, ஒரு நீதிபதியினால் முறைப்பாட்டாளரின் வாக்குமூலமும் பதிவு செய்யப் பட்டபின்னர், விஜயலட்சுமியை மிரட்டி 2012 இல் வாபஸ் வாங்க வைத்தார்கள். 2023 இல் மீண்டும் அவர் அந்தக் கேசைத் திறக்க முனைகிறார். சீமான் இதைத் தடுக்கக் கோரி (விசாரிக்கக் கோரி அல்ல!) சென்னை உயர் நீதி மன்றை நாடுகிறார். "வாக்குமூலம் பதிவாகி விட்டது, எனவே குற்றம் சாட்டியவர் இல்லாவிட்டாலும் கூட வழக்கை தடுக்க முடியாது" என சென்னை நீதி மன்றம் மறுத்து விட்டது. கீழே இணைப்பு.

The Hindu
No image preview

Madras High Court dismisses Seeman’s plea to quash rape case

Madras High Court dismisses Naam Tamilar Katchi chief Seeman's petition to quash actor vijayalakshmi rape case, directs police to complete investigation in 12 weeks.

பெப்ரவரி 2025 இல் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்த உடனே, சீமான் உச்ச நீதிமன்றிற்கு மார்ச் 2025 இல் சென்று "தள்ளுபடி செய்யுங்கள்" என்றே மனுப் போட்டார் (விசாரித்து முடித்து வையுங்கள் என்று அல்ல!). இரு தரப்பையும் "மன்னிப்புக் கேட்டால் வழக்கை தள்ளுபடி செய்யலாம்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அப்படியே கேட்டிருக்கிறார்.

ஏதோ சீமான் விசாரித்துத் தன் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கப் போராடியதாகத் தான் இனி சீமான் விசிறிகளும், தம்பிகளும் எழுதுவார்கள் என ஊகித்தேன். இன்று நீங்கள் தொடங்கியே விட்டீங்கள்😂!

  • கருத்துக்கள உறவுகள்

:) சீமானுக்கு யாழ்களம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் யாழ் களத்துக்கு சீமான் செய்தி போட்டாலே ஒரு 18 நாள் திருவிழா தான் , அண்ணி காவடிகள், கச்சான் கடைகள், பிக்பாகெட் காரர்கள், இப்படி பல பக்கங்களை தாண்டும் கருத்துகள், வண்ண வண்ண மீம்ஸ், வடிவான கார்ட்டூன்ஸ்...

இப்படியாவது இந்த தளம் இங்கே தெம்பாக இயங்குவது சந்தோசம்.

Edited by Sasi_varnam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Sasi_varnam said:

:) சீமானுக்கு யாழ்களம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் யாழ் களத்துக்கு சீமான் செய்தி போட்டாலே ஒரு 18 நாள் திருவிழா தான் , அண்ணி காவடிகள், கச்சான் கடைகள், பிக்பாகெட் காரர்கள், இப்படி பல பக்கங்களை தாண்டும் கருத்துகள், வண்ண வண்ண மீம்ஸ், வடிவான கார்ட்டூன்ஸ்...

இப்படியாவது இந்த தளம் இங்கே தெம்பாக இயங்குவது சந்தோசம்.

தமக்கு விளங்காவிடிலும் கூட, Chat GPT யிடம் கேட்டு அதை அப்படியே யாழில் கொண்டு வந்து கொப்பி பேஸ்ட் போடும் பசைவாளி காவடியை மறந்து போனீர்களோ அல்லது அவையடக்கமோ🤣.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

தமக்கு விளங்காவிடிலும் கூட, Chat GPT யிடம் கேட்டு அதை அப்படியே யாழில் கொண்டு வந்து கொப்பி பேஸ்ட் போடும் பசைவாளி காவடியை மறந்து போனீர்களோ அல்லது அவையடக்கமோ🤣.

அதையும் மினெக்கெட்டு வாசித்ததுக்கு சந்தோஷம் சாரே 😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

தான் சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டதை தாமதாமாக உணர்ந்த சீமான் டெல்லிக்கு ஓடி பாஜக தயவில் வழக்கை அடித்து நூத்தார்.

யாழ்கள திராவிடியா ஊடாக செய்தியாளர்கள் இப்படித்தான் எழுதுவார்கள். கோர்ட் உத்ததரவுப்படி இது சம்பந்தமாக திராவிடியா ஊடகங்களுக்கும் ஓசிச்சோறுகளுக்கும் வாய்ப்ப்பூட்டுப்பட்டுள்ளதால் அவர்களின் ஆதரவாளர்கள் இப்படியான தளங்களில் எழுதுவதை பொருட்படுத்தத் தேவையில்லை. தேர்தல் நேரத்தில் இந்தத் உத்தரவு சீமானுக்கு வெற்றி. திராவிடியா ஊடகங்களுக்கும் ஓசிச்சோறுகளுக்கும் தோல்வி.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புலவர் said:

புலவர், கோசான் சொல்லியிருக்கும் "சொ.செ.சூனியம்" என்ன என்று புரியவில்லையா?

2025 இல் சென்னை உயர் நீதிமன்று வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று வழக்கைத் துவக்கி, அது சீமானுக்குத் தான் ஆப்பானது. 12 வாரங்களுக்குள் விசாரிக்க வேண்டும், தள்ளுபடி செய்ய முடியாதென சென்னை கோர்ட் சொன்னது. இதை மறுக்கிறீர்களா? ஆதாரங்கள் பல உண்டே? அதன் பிறகு தானே வடக்கில் பிரபலமான வக்கீலைப் பிடித்து உச்ச நீதி மன்றம் போனார்? இதையும் மறுக்கிறீர்களா? ஏன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, புலவர் said:

யாழ்கள திராவிடியா ஊடாக செய்தியாளர்கள் இப்படித்தான் எழுதுவார்கள். கோர்ட் உத்ததரவுப்படி இது சம்பந்தமாக திராவிடியா ஊடகங்களுக்கும் ஓசிச்சோறுகளுக்கும் வாய்ப்ப்பூட்டுப்பட்டுள்ளதால் அவர்களின் ஆதரவாளர்கள் இப்படியான தளங்களில் எழுதுவதை பொருட்படுத்தத் தேவையில்லை. தேர்தல் நேரத்தில் இந்தத் உத்தரவு சீமானுக்கு வெற்றி. திராவிடியா ஊடகங்களுக்கும் ஓசிச்சோறுகளுக்கும் தோல்வி.

புலவர் உங்கள் தலைவர் சீமான் போல நீங்களும் தரக்குறைவான வார்த்தைகளை சக கள உறவுகள் மீது பாவித்து அதன் மூலம் உங்கள் தரத்தை நீங்களே குறைத்து கொள்வதை பார்க்க கவலையாக இருக்கிறது.

ஒரு எழுத்தை மாத்தி போட்டு - உங்களை இன்னொரு “விடியாத” கருத்தாளர் என எழுத எனக்கு எவ்வளவு நேரம் ஆகும் என நினைக்கிறீர்கள்?

ஆனால் நான் சீமானின் தம்பி அல்ல. ஆகவே நான் அப்படி செய்ய போவதில்லை.

நாதக சமூகவலை உலகில் முன்னெடுக்கும் அவமரியாதை கலாச்சாரத்தை தயவு செய்து யாழுக்கு எடுத்து வர வேண்டாம்.

சகலதுக்கும் ஒரு எல்லை உண்டு.

நான் கிண்டலும் கேலியுமாக எழுதினாலும் அந்த எல்லையை அநேகம் மீறுவதில்லை. அரிதாக மீறிய சந்தர்பங்களில் மன்னிப்பும் கேட்டுள்ளேன், பகிரங்கமாக.

எனவே கொஞ்சம் கஸ்டப்பட்டாவது நா-நயம் பேணுவீர்கள் என நினைக்கிறேன்.

யாழ்களத்தில் இருவரை அவர்களின் நடத்தை காரணமாக இக்னோர் லிஸ்டில் போட்டு இரெண்டு வருடமளவு ஆகிறது.

அதில் ஒருவர் நீங்கள் இப்போ என்னை திராவிட ஊடகவியளாலர் என ஆதாரம் அற்று அவதூறு சொல்வது போல, ஏதோ ஒரு வெறிகுட்டியை பப்பில் கண்டு பேசி விட்டு அதுநாந்தான் என தினமும் யாழில் என் உயிரை வாங்கினார்.

உங்களுடனான எனது சம்பாசணைகளும் அதே வழியில்தான் போக வேண்டும் என்பது விதி என்றால் அப்படியே ஆகட்டும்.

உங்களுக்கு ஜஸ்டின் அண்ணா கொடுத்த பதில்தான் எனது பதிலும்.

சீமான் சென்னை ஹைகோர்ட்டில் போய் என்ன கேட்டார் என்பது ஒன்றும் ஹைதர் கால வரலாறு அல்ல.

மிக அண்மையில் நடந்தவை. அதற்கான முழு ஆதாரமும் இதே தமிழக செய்தி பகுதியில் கொஞ்சம் கீழே போனால் உள்ளது.

நான் சொன்னதுதான் உண்மையான வரலாற்று தரவு.

பொலிசை என் மீது வழக்கு போட சொல்லுங்கள் என சென்னை கோர்ட்டை கேட்கும் அளவுக்கு சீமான் என்ன முழு லூசா?

அவர் சென்னை கோர்ட்டை கேட்டது - முன்பே வாபஸ் வாங்கிய புகாரின் அடிப்படையில் வழக்கை தூசு தட்டுகிறார்கள். இந்த விசாரணையை தடுத்து, வழக்கை, விசாரணையை ரத்து செய்யுங்கள் என.

ஆனால் சென்னை ஹைகோர்ட் அப்படி இல்லை - வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என பொலிஸுக்கு உத்தரவிட்டது.

இதுதான் தரவுகளின் அடிப்படையிலான வரலாறு.

மிக முக்கியமான விடயம்…

நீங்களும், விசுகு அண்ணையும் சொல்வது போல் - சீமான் சென்னை கோர்ட்டை தன்னை விசாரிக்கும்படி கேட்டார் என்பது உண்மை எனில்….

சென்னை ஹைகோர்ட் அப்படி ஒரு உத்தரவை கொடுத்த பின்…

ஏன் டெல்லி கோர்ட்டுக்கு ஓடி..

அந்த சென்னை கோர்ட் உத்தரவுக்கு தடை வாங்கினார்?

லொஜிக் மண்டையை பொத்தி அறைகிறதா புலவர் ஜி?🤣

சும்மா முட்டு கொடுக்க வேண்டும் என்பதால் வாயில் வருவதை எல்லாம் சொன்னால் இப்படித்தான் ஆகும்.

யாழ்களம் ஒன்றும் இராவணன் குடிலோ, தூஷண துரையின் சேனலோ அல்ல, இங்கே தலையால் சிந்திப்போர் அதிகம்.

லொஜிக் இல்லாமல் ஆமை, முயல் கதையள் சொன்னால்….

பேர்….ரிப்பேர் ஆகிவிடும்.

Edited by goshan_che
உளறினால் என்பதை சொன்னால் என மாற்ற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை கடவுளே! மன்னிப்பு என்பதை வைத்து எந்தெந்த சம்பவங்களை எதனோடு வைத்து சிண்டு முடிகின்றார்கள் பாருங்கள்!!!!!!?

சீமான் கேவல பேச்சாளர் விஜயலச்சுமியிடம் மன்னிப்பு கேட்டாலும் கேட்டார் அவ்வளவுதான் நம்ம ஈழத்து தம்பிகள் கொதித்து போய் விட்டனர். மன்னிப்பை விட வேறு என்ன எதிர்பார்கின்றார்கள் என தெரியவில்லை. பலவருட காலமாக இருமனம் ஒருமனமாக குடும்பம் நடத்தியவர்கள். பிரிந்து விட்டார்கள். அதைப்பற்றி பெரிதாக பேசப்படவுமில்லை. உடனடியாக விசய லச்சுமி வழக்கு போடவுமில்லை.ஆச்சடா போச்சடா என வீடியோக்களும் போடவில்லை. சீமானின் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்கள் விசய லச்சுமியை ஏவி விட அவரும் காசுக்காக கொக்கரிக்க வெளிக்கிட்டார். கதை அவ்வளவுதான்.

தங்கள் கருத்து வெற்றிக்காக ஒரு இனத்தை அழித்தவர்களை சீமானின் மன்னிப்புடன் எப்படி கொண்டுவந்து செருகுகின்றார்கள் பார்த்தீர்களா? சீமான் விசயலச்சுமியுடன் கூடி வாழ்ந்த செயல் அநேக நடிகர்களும்,அரசியல்வாதிகளும் சர்வசாதாரணமாக செய்யும் செயல்தான்.சீமான் ஒன்றும் புதிதாக அதிசயம் செய்து காட்டவில்லை. என்ன ஒன்று வந்த செய்திகளை அடக்க ஊடகபலம் இல்லை. கட்சி பலம் இல்லை. ஏனைய பெரிய கட்சிகளில் இருப்பவர்களின் உள்வீட்டு விடயங்களை வெளியில் விட்டால் போட்டு தள்ளிவிடுவார்கள். இல்லையேல் பாத்ரூமில் வழுக்கி விழ வைத்திருப்பார்கள். அதே போல் பெரிய நடிகர்கள் விடயத்திலும் ஊடகங்கள் கப்சிப் ஆக இருக்கும்.

இதற்குள் ஏன் அந்த அமெரிக்க பாடகரை கொண்டு வருகின்றார்கள் என தெரியவில்லை? Puff Daddy அவர் இசைத்துறைக்கு வந்த நாள் முதலே சர்ச்சைக்குரியவர். பெண்களை தாக்குபவர். சீமான் அந்த வகையில் இல்லை.Puff Daddy தன்னுடன் இருக்கும் பெண்களை தனிப்பட்ட விருந்துகளில் நிர்வாணமாக்கி அழகு பார்ப்பவர்.நண்பர்களுடன் இருக்கும் போது தன் தோழிகளை அரை நிவாணத்தில் நிற்க வைத்து சீண்டல் செய்பவர்.அந்த பாடகர் துப்பாக்கி சூடுகளை நடத்தியவர்.பெண்களை தாக்குபவர் சீமான் அப்படியானவர் அல்ல..இன்றைய முன்னணி பாடகிJennifer Lopez ஐ கூட ஆரம்பகாலங்களில் அரை நிர்வாணமாகத்தான் வைத்திருப்பாராம்.

மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது.

சீமான் குற்றம் செய்தவராக இருக்கலாம்.(என்னைப்பொறுத்தவரை இல்லை) ஆனால் இங்கே முழுகுற்றவாளி போல் கருத்து எழுதியதெல்லாம் ஒருவகை அரசியல் காழ்ப்புணர்வு மட்டுமே என நான் நினைக்கின்றேன்.

இந்திய/தமிழ்நாட்டு அரசியலில் மதுவும் மாதுவும் முக்கிய அம்சம்.சிக்கினால் சிக்கல் சிதம்பரம்.சிக்காவிட்டால் மானஸ்தன். இதே போல் தான் இந்திய சினிமா உலகும். அதிலும் தமிழ்நாட்டு அரசியலில் மாதுகள் பேரம் பேசப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

🤣கொஞ்சம் அலட்சியமாக இருந்தால், "சீமான் தான் விஜயலட்சுமி மீது வழக்குப் போட்டார்!" என்றும் புதுக் கதை பின்னுவீர்கள் போல இருக்கிறதே😂?

2011 இல் சீமான் மீது சென்னைக் கோர்ட்டில் கொண்டு FIR வரப் பட்டு, ஒரு நீதிபதியினால் முறைப்பாட்டாளரின் வாக்குமூலமும் பதிவு செய்யப் பட்டபின்னர், விஜயலட்சுமியை மிரட்டி 2012 இல் வாபஸ் வாங்க வைத்தார்கள். 2023 இல் மீண்டும் அவர் அந்தக் கேசைத் திறக்க முனைகிறார். சீமான் இதைத் தடுக்கக் கோரி (விசாரிக்கக் கோரி அல்ல!) சென்னை உயர் நீதி மன்றை நாடுகிறார். "வாக்குமூலம் பதிவாகி விட்டது, எனவே குற்றம் சாட்டியவர் இல்லாவிட்டாலும் கூட வழக்கை தடுக்க முடியாது" என சென்னை நீதி மன்றம் மறுத்து விட்டது. கீழே இணைப்பு.

The Hindu
No image preview

Madras High Court dismisses Seeman’s plea to quash rape case

Madras High Court dismisses Naam Tamilar Katchi chief Seeman's petition to quash actor vijayalakshmi rape case, directs police to complete investigation in 12 weeks.

பெப்ரவரி 2025 இல் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்த உடனே, சீமான் உச்ச நீதிமன்றிற்கு மார்ச் 2025 இல் சென்று "தள்ளுபடி செய்யுங்கள்" என்றே மனுப் போட்டார் (விசாரித்து முடித்து வையுங்கள் என்று அல்ல!). இரு தரப்பையும் "மன்னிப்புக் கேட்டால் வழக்கை தள்ளுபடி செய்யலாம்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அப்படியே கேட்டிருக்கிறார்.

ஏதோ சீமான் விசாரித்துத் தன் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கப் போராடியதாகத் தான் இனி சீமான் விசிறிகளும், தம்பிகளும் எழுதுவார்கள் என ஊகித்தேன். இன்று நீங்கள் தொடங்கியே விட்டீங்கள்😂!

"பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்

தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!"

நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.

என்பது கிஸ்ணன் வாக்கு.

உண்மையை தெளிவூட்டவும், தரவுகளை நிலைநாட்டவும், நான் திரிகள் தோறும் அவதரிக்கிறேன்

என்பது ஜஸ்டின் வாக்கு 😂.

#ஆதாரபுருஷர்❤️

நன்றி 🙏

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கடந்த 2017-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக்கொன்ற வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கு தண்டனைக்குள்ளான தஷ்வந்த்தை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

14 hours ago, goshan_che said:

நீங்களும், விசுகு அண்ணையும் சொல்வது போல் - சீமான் சென்னை கோர்ட்டை தன்னை விசாரிக்கும்படி கேட்டார் என்பது உண்மை எனில்….

நான் எங்கே அப்படி எழுதியிருக்கிறேன்.வழக்கை ரத்துச்செய்யும்படி வழக்குப் போட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

என்ரை கடவுளே! மன்னிப்பு என்பதை வைத்து எந்தெந்த சம்பவங்களை எதனோடு வைத்து சிண்டு முடிகின்றார்கள் பாருங்கள்!!!!!!?

இதற்குள் ஏன் அந்த அமெரிக்க பாடகரை கொண்டு வருகின்றார்கள் என தெரியவில்லை? Puff Daddy அவர் இசைத்துறைக்கு வந்த நாள் முதலே சர்ச்சைக்குரியவர். பெண்களை தாக்குபவர். சீமான் அந்த வகையில் இல்லை.Puff Daddy தன்னுடன் இருக்கும் பெண்களை தனிப்பட்ட விருந்துகளில் நிர்வாணமாக்கி அழகு பார்ப்பவர்.நண்பர்களுடன் இருக்கும் போது தன் தோழிகளை அரை நிவாணத்தில் நிற்க வைத்து சீண்டல் செய்பவர்.அந்த பாடகர் துப்பாக்கி சூடுகளை நடத்தியவர்.பெண்களை தாக்குபவர் சீமான் அப்படியானவர் அல்ல..இன்றைய முன்னணி பாடகிJennifer Lopez ஐ கூட ஆரம்பகாலங்களில் அரை நிர்வாணமாகத்தான் வைத்திருப்பாராம்.

மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது.

இந்திய/தமிழ்நாட்டு அரசியலில் மதுவும் மாதுவும் முக்கிய அம்சம்.சிக்கினால் சிக்கல் சிதம்பரம்.சிக்காவிட்டால் மானஸ்தன். இதே போல் தான் இந்திய சினிமா உலகும். அதிலும் தமிழ்நாட்டு அரசியலில் மாதுகள் பேரம் பேசப்படும்.

"இறுதியாக மூலையில் மாட்டிக் கொண்ட பின்னர் மன்னிப்புக் கேட்பதற்கு ஒரு உதாரணம்" என்று முதல் வரியிலேயே சுட்டிய பின்னர், கோம்ப்ஸ் பற்றி எழுதியிருக்கிறேன். அவர் செய்த குற்றமும் சீமான் மீது சாட்டப் பட்டதும் ஒரே வகையான குற்றங்கள் என்ற கதையாடலை நான் முன்னகர்த்தவில்லை. வாத்தியாருக்கே இது விளங்கவில்லையென்கிற போது ஏனைய சீமான் அபிமானிகளுக்கு இது விளங்குமென்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை😎!

15 hours ago, குமாரசாமி said:

இந்திய/தமிழ்நாட்டு அரசியலில் மதுவும் மாதுவும் முக்கிய அம்சம்.சிக்கினால் சிக்கல் சிதம்பரம்.சிக்காவிட்டால் மானஸ்தன். இதே போல் தான் இந்திய சினிமா உலகும். அதிலும் தமிழ்நாட்டு அரசியலில் மாதுகள் பேரம் பேசப்படும்.

இந்த "எல்லாரும் கள்ளர்" என்ற வாதத்தை நீங்களும் நூறு தடவை எழுதியிருப்பீர்கள். பதிலாக, இங்கே பலரும் உங்களிடம் திருப்பிக் கேட்டிருக்கிறார்கள்: கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்ராலின், உதயநிதி போலத் தான் சீமானும் "ஸ்தீரிலோலனாக" இருந்தார் என்றால் அதைத் துணிவாக வெளியே சொல்லி எதிர்கொள்ள அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் ஏன் தயக்கம்? புலிகளின் கொடியைத் தூக்கிப் பிடிப்பதால், பிரபாகரனின் படத்தின் முன்னால் நின்று தன் கட்சியின் அரசியல் பிரச்சாரத்தைச் செய்வதால் மட்டும் சீமானுக்கு "றோயல் பமிலி" போன்ற மரியாதையை நாம் கொடுக்க வேண்டுமா?

எல்லா தமிழக அரசியல் வாதிகள் போலவும் பெண் விடயங்களின் சாதாரணமாக ஈடுபடும் சீமான், அப்படியே இன்னொரு அரசியல் வாதியாக இருந்து விட்டுப் போகட்டும்!

19 hours ago, புலவர் said:

யாழ்கள திராவிடியா ஊடாக செய்தியாளர்கள் இப்படித்தான் எழுதுவார்கள். கோர்ட் உத்ததரவுப்படி இது சம்பந்தமாக திராவிடியா ஊடகங்களுக்கும் ஓசிச்சோறுகளுக்கும் வாய்ப்ப்பூட்டுப்பட்டுள்ளதால் அவர்களின்

இந்த சொல் எதனை மறைமுகமாக குறிக்கின்றது என்பது புலவர் உங்களுக்கு நூறு வீதம் தெரியும். ஆனாலும் இந்த தரக்குறைவான வார்த்தையை மீண்டும் மீண்டும் யாழில் வந்து எழுதுகின்றீர்கள்.

தரம் தாழ்ந்த தமிழக அரசியல்வாதிகளும், அவர்களின் காவாலிக் கூட்டங்களும் பயன்படுத்தும் இத்தகைய தரங்கெட்ட வார்த்தைகளை யாழில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புலவர் said:

எங்கள் திராவிட மாடல் ஆட்சியில் விடியல் ஆட்சி தருவோம் என்று விடியா ஆட்சிநடத்தும் கூட்டத்தையும் அதற்கு ஒத்துஊதுகின்ற கூட்டத்தையும் ஒரே சொல்லில் திராவிடியா ஆட்சி என அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது.

2 hours ago, நிழலி said:

இந்த சொல் எதனை மறைமுகமாக குறிக்கின்றது என்பது புலவர் உங்களுக்கு நூறு வீதம் தெரியும். ஆனாலும் இந்த தரக்குறைவான வார்த்தையை மீண்டும் மீண்டும் யாழில் வந்து எழுதுகின்றீர்கள்.

தரம் தாழ்ந்த தமிழக அரசியல்வாதிகளும், அவர்களின் காவாலிக் கூட்டங்களும் பயன்படுத்தும் இத்தகைய தரங்கெட்ட வார்த்தைகளை யாழில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும்.

இதுக்கே டென்சன் ஆனா எப்படி.

கீழே உள்ள பதிவில் அந்த கெட்டவார்த்தையை நெடில் அல்ல குறில் என்ற ரீதியில், வ நாவுக்கு பதிலாக டுனாவை போட்டு, கிட்டதட்ட நேரடியாகவே பதிவிட்டுள்ளார். நெல்லை செல்வின் பதிவின் ஊடாக.

தமிழில் புலவரா…தூசணத்தில் புலவரா என எண்ணத்தோன்றுகிறது.

5 hours ago, புலவர் said:

புலவருக்கு:

நீங்கள் தமிழ் நாட்டு அரசை, ஊடகங்களை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்கள்…

அது உங்களுக்கும், ஸ்டாலினிற்கும், நிர்வாகத்துகும் உள்ள பிரச்சனை.

ஆனால் நான் எழுதிய கருத்தை (பகிர்ந்த செய்தியை அல்ல) கோர்ட் செய்து….திராவிட ஊடகவியளார்கள் இப்படித்தான் என எழுதினால் - அது என்னைத்தான் குறிக்கும்.

வித்தியாசம் விளங்கும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

வாத்தியாருக்கே இது விளங்கவில்லையென்கிற போது

இல்லையே உங்கள் கருத்துப்படி

மூலைக்குள் மாட்டுப்பப்பட்டவர் சீமான் & காம்ப்ஸ்..

வழக்கு இரண்டும் பாலியல் ரீதியான வழக்கு..

இரண்டிலும் மிரட்டல் உள்ளது ( சீமான் மிரட்டியதாகவும் கதைகள் உள்ளன )...

இரண்டு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனுதாரர்களை

பாலியல் தொழிலாளிகள் என பரப்புரை செய்கின்றார்கள்...

ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் காம்ப்ஸ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்திருக்கின்ரார்

சீமான் அப்படி இல்லை

காரணம் வழக்கின் தன்மை தான்

அதைவைத்தே நானும் அப்படிக் கருத்தை எழுதினேன்

ஆரம்பத்தில் உங்கள் உதாரணம் என்னைப் போன்றவர்களுக்கு அப்படித்தான் விளங்கியிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.

என்பது கிஸ்ணன் வாக்கு.

உண்மையை தெளிவூட்டவும், தரவுகளை நிலைநாட்டவும், நான் திரிகள் தோறும் அவதரிக்கிறேன்

என்பது ஜஸ்டின் வாக்கு 😂

கிருஷ்ணருக்கு இன்னொரு பெயர் ஜஸ்டின் என்று இப்ப தான் கேள்விப்படுகின்றேன்.

எங்களைக் கம்சர்கள் என்று விழிக்காதவரை ஓகே😂

நீங்கள் அர்ஜுனன் இல்லைத்தானே 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாத்தியார் said:

கிருஷ்ணருக்கு இன்னொரு பெயர் ஜஸ்டின் என்று இப்ப தான் கேள்விப்படுகின்றேன்.

எங்களைக் கம்சர்கள் என்று விழிக்காதவரை ஓகே😂

நீங்கள் அர்ஜுனன் இல்லைத்தானே 🤣

🤣 சீச்சீ அப்படி உங்களை சொல்வேனா.

நீங்கள் வாத்தியார்….துரோணர்

நியாயம் முழுவதும் விளங்கினாலும்…கெளரவ சேனையில் நிற்பது உங்கள் கடன் என நினைக்கிறீர்கள்🤣.

நான் நிச்சயமாக அர்ஜுனன் இல்லை. யுத்தகளத்தில் நிண்டு ஓவர்திங்கிங் செய்வதில்லை நான் 🤣.

கும்பகர்ணன் போல் துன்னுவான், தூங்குவான், எழும்பினா துலைச்சுபோடுவான் கரெக்டர் ஏதும் மஹாபாரதத்தில் உள்ளதா? அப்படி எண்டால் அதுதான்🤣.

இல்லாவிடில் - சீமானியர் கேட்காமலே கொடுப்பதால் கர்ணன் 🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Justin said:

புலிகளின் கொடியைத் தூக்கிப் பிடிப்பதால், பிரபாகரனின் படத்தின் முன்னால் நின்று தன் கட்சியின் அரசியல் பிரச்சாரத்தைச் செய்வதால் மட்டும் சீமானுக்கு "றோயல் பமிலி" போன்ற மரியாதையை நாம் கொடுக்க வேண்டுமா?

சேகுவாராவின் கொடியையும் தூக்கி அவர் கொள்கையையையும் கடைப்பிடித்து இனக்கொலை செய்தவர்களையும் இனத்திற்கு எதிராக நிற்பவர்களையும் கண்டு கொள்ளாமல் கடல் கடந்து உங்களுக்கு பிடிக்காதவர்களிடம் புனித்தை தேடுகின்றீர்கள்?!

அதே போல் கம்யூனிசத்தை கடைப்பிடிப்பவர்கள் கூட இன வெறியை வாந்தி வாந்தியாக எடுக்கின்றார்கள். அங்கே உங்கள் புனிதம் தேடும் மூளை வேலை செய்யவில்லை.சிங்கள பாதிரியார்கள் உட்பட.....

சீமான் செய்த தவறை(என் பார்வையில் தவறு அல்ல) விட பலம் வாய்ந்த கட்சிகாரர்களும் பணபலம் மிக்கவர்களும் இன்றும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

அங்கே எல்லாம் புனிதர்களை தேடவும் மாட்டார்கள்.சித்திரங்களும் வரைய மாட்டார்கள். காரணம் பணபலம் மக்கள் பலம் அதிகார பலம் வாய்ந்தவர்கள். போட்டு தள்ளிவிடுவார்கள் என்ற பயம்.

கொள்கை பலம் அறவே இல்லாத அரசியல் கூட்டங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட… இவரை மட்டும் ஏன்யா அடிக்கிறீங்க….

முகராசி அப்படி 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2025 at 19:23, குமாரசாமி said:

சேகுவாராவின் கொடியையும் தூக்கி அவர் கொள்கையையையும் கடைப்பிடித்து இனக்கொலை செய்தவர்களையும் இனத்திற்கு எதிராக நிற்பவர்களையும் கண்டு கொள்ளாமல் கடல் கடந்து உங்களுக்கு பிடிக்காதவர்களிடம் புனித்தை தேடுகின்றீர்கள்?!

அதே போல் கம்யூனிசத்தை கடைப்பிடிப்பவர்கள் கூட இன வெறியை வாந்தி வாந்தியாக எடுக்கின்றார்கள். அங்கே உங்கள் புனிதம் தேடும் மூளை வேலை செய்யவில்லை.சிங்கள பாதிரியார்கள் உட்பட.....

சீமான் செய்த தவறை(என் பார்வையில் தவறு அல்ல) விட பலம் வாய்ந்த கட்சிகாரர்களும் பணபலம் மிக்கவர்களும் இன்றும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

அங்கே எல்லாம் புனிதர்களை தேடவும் மாட்டார்கள்.சித்திரங்களும் வரைய மாட்டார்கள். காரணம் பணபலம் மக்கள் பலம் அதிகார பலம் வாய்ந்தவர்கள். போட்டு தள்ளிவிடுவார்கள் என்ற பயம்.

கொள்கை பலம் அறவே இல்லாத அரசியல் கூட்டங்கள்.

எழுதினதையே ஏன் திரும்பத் திரும்ப எழுதுகிறீர்கள் என விளங்கவில்லை😂! "அப்படித் தான் எல்லோரும் செய்கிறார்கள், சீமானும் செய்தார்" என்றால் ஏன் அவருக்கு "புனிதர்" பட்டம் கொடுத்து தலையில் காவும் தேவை? அவர் "சின்னக் கருணநிதி" என்று கோசான் உட்பட பலர் சொல்லி விட்டார்கள். ஆனாலும், கருணாநிதியிடம் கூட இரண்டு மனைவியரை பகிரங்கமாக வைத்திருக்கும் வெளிப்படைத்தன்மை இருந்தது. "திரள் நிதி" குறைந்து விடும் என்ற அச்சத்தில் சீமானிடம் அதுவும் இல்லாமல் தானே இருந்தது? இப்ப மூலையில் முடக்கப் பட்ட பின்னர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதில் பெருமை எதுவும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது மழை விட்டும் தூவானம் போகுதில்லையே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்னடா இது மழை விட்டும் தூவானம் போகுதில்லையே?

சீமான் என்ற அழுக்கை…மழை, தூவானம் இல்லாவிட்டாலும், கிணத்தில் மோட்டார் போட்டு இறைத்தாவது கழுவி, கழுவி ஊத்தல் வேண்டும்.

3 hours ago, Justin said:

எழுதினதையே ஏன் திரும்பத் திரும்ப எழுதுகிறீர்கள் என விளங்கவில்லை😂! "அப்படித் தான் எல்லோரும் செய்கிறார்கள், சீமானும் செய்தார்" என்றால் ஏன் அவருக்கு "புனிதர்" பட்டம் கொடுத்து தலையில் காவும் தேவை? அவர் "சின்னக் கருணநிதி" என்று கோசான் உட்பட பலர் சொல்லி விட்டார்கள். ஆனாலும், கருணாநிதியிடம் கூட இரண்டு மனைவியரை பகிரங்கமாக வைத்திருக்கும் வெளிப்படைத்தன்மை இருந்தது. "திரள் நிதி" குறைந்து விடும் என்ற அச்சத்தில் சீமானிடம் அதுவும் இல்லாமல் தானே இருந்தது? இப்ப மூலையில் முடக்கப் பட்ட பின்னர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதில் பெருமை எதுவும் இல்லை!

என்னை கைய பிடிச்சு இழுத்தியா🤣

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

சீமான் என்ற அழுக்கை…மழை, தூவானம் இல்லாவிட்டாலும், கிணத்தில் மோட்டார் போட்டு இறைத்தாவது கழுவி, கழுவி ஊத்தல் வேண்டும்.

ஏதாவது பிரயோசனம் இருந்தா கழுவி ஊத்திக் கொண்டே இருங்க.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.