Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிஜிட்டல் திண்ணை: ‘தனி உலகத்தில்’ விஜய்.. ரத்த களறியாகும் தவெக உட்கட்சி மோதல்.. ஆதவ் எடுக்க போகும் அதிரடி முடிவு?

Published On: 22 Oct 2025, 6:32 PM

| By Minnambalam Desk

TVK Party Cadres Internal Conflict

வைஃபை ஆன் செய்ததும் ‘ஆடிய ஆட்டம் என்ன? தேடிய செல்வம் என்ன?’ பாட்டுதான் போடலை போல என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னப்பா ரொம்பவே சோகமா ஆரம்பிக்கிறீரே..

நமக்கு என்னப்பா சோகம் இருக்கு.. கட்சிகளில் நடக்கிறதை சொல்றோம்யா..

எந்த கட்சியோட நிலைமை இப்படியாம்?

எல்லாம் விஜய் தவெகவில்தான்.. கரூர் சம்பவத்துக்குப் பின் விஜய் கட்சியில் சோ கால்ட் 2-ம் கட்ட ‘தலைகள்’ மாறி மாறி குறை சொல்றதும்.. சோசியல் மீடியாவில் ஆட்களை வைத்து அட்டாக் செய்வதும்னு ஒரே ரத்த களறியாகிட்டு இருக்கு..

தவெகவில் அப்படி யார் யாருக்கு இடையே சண்டை.. விளக்கமாக சொல்லுமய்யா..

தவெகவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், நிர்மல்குமார்னு 2-ம் கட்ட தலைகள் இருக்கிறாங்க.. இவங்கதான் கட்சி..

இவங்க எல்லோருக்கும் மேல ‘ஜான் ஆரோக்கியசாமி’ இருக்கிறாரு.. இவருக்கும் கட்சிக்குமே தொடர்பு இல்லை.. விஜய்-க்கு தேர்தல் வியூக வகுப்பாளர் அல்லது ஆலோசகர்.

சரி.. இதுல யார் யாருக்கு இடையே போட்டி.. முட்டல் மோதல்?

அப்படி எல்லாம் ஒன்லைனில் சொல்லிவிடவா முடியும்? புஸ்ஸி ஆனந்துக்கும் ஆதவ் அர்ஜூனாவுக்கும் மோதல் இருக்கு; புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் மூவருக்குமே கட்சிக்கே தொடர்பே இல்லாத, ஆனால் கட்சியை கண்ட்ரோல் செய்கிற ஜான் ஆரோக்கியசாமி மேல ‘காண்டு’ இருக்கு.. புஸ்ஸி, ஜான், ஆதவ், ஜான், நிர்மல்னு அத்தனை பேர் மீதும் அருண்ராஜூக்கு ஆத்திரம் இருக்கு.. “என்ன பெரிய 2-ம் கட்ட ‘தலைகள்’.. அவங்களுக்கும் மேல நான்னு” எல்லா கட்சி நிர்வாகிகளையும் நினைக்கிறாராம் ஜான்..

image-255-1024x570.png

யோவ்.. என்னய்யா தலையே சுத்துது..

இதுக்கே இப்படின்னா.. இப்ப சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கே getoutbussy anand-ங்கிற மாதிரியான ஹேஷ்டேக்குகள்.. புஸ்ஸி ஆனந்தால்தான் தவெக கட்சியே நாசமா போச்சு.. கரூர் சம்பவமே நடந்துச்சு.. கரூருக்கு பிறகு ஓடிப் போய் புஸ்ஸி பதுங்கிட்டதால கட்சியே முடங்கிப் போச்சு.. அவரை கட்சியில் இருந்து வெளியேற்றனும்னு அந்த ஹேஷ்டேக்கில் கொட்டித் தீர்க்கிறாங்க.

அந்த ஹேஷ்டேக்கில் வேற என்ன சொல்றாங்க?

தவெகன்னு ஒரு கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பே இல்லை.. பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர்களை மட்டும் நியமிச்சா போதுமா? அறிவிக்கப்பட்ட அணிகளுக்கு எப்ப பொறுப்பாளர்களை நியமிப்பாங்க? அப்படி எல்லாம் நியமிக்காமலேயே ஆட்சியை பிடிப்போம்னு அலப்பறை விடுறது நல்லாவா இருக்கு?ன்னு ஓபனாகவே விமர்சிக்கிறாங்கப்பா

சரிய்யா.. இது எல்லாம் விஜய்க்கு தெரியுமா? அவரு என்ன சொல்றாரு?

இந்த அக்கப்போர் பற்றி விஜய் கவனத்துக்கு போனதா? இல்லையான்னு? அவருக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசினோம்.. அந்த சோர்ஸ்களோ மூச்சுவிடாமல் அத்தனையையும் நம்மிடம் கொட்டிட்டாங்க..

என்னப்பா சொன்னாங்க..

நம்மிடம் பேசிய விஜய்க்கு நெருக்கமானவர்கள், “எங்க சார் (விஜய்) பொதுவாக எதையும் தேடிப் பார்த்து தெரிஞ்சுக்கமாட்டாரு.. அவருக்கு பட்டினப்பாக்கம் ஆபீசு, பனையூர் ஆபீசு – வீடு இதுக்கு மட்டும் போகத் தெரியும்.. நீங்க சொல்ற சோசியல் மீடியா சண்டை, வெட்டு குத்து எல்லாம் சாருக்கு எதுவுமே தெரியாது.. இதை எல்லாம் தேடிப் படிக்கிறவரும் இல்லை.. இதுதான் எங்க சாரோட கேரக்டர்” என அதிர்ச்சியை தந்தபடியே அடுத்த மேட்டருக்கு தாவினார்.

“எங்க சாரைப் பொறுத்தவரைக்கும் அவரும் யாரையும் அதிகமாக தொடர்பு கொள்ளமாட்டார்; யாரும் அவரையும் தொடர்பு கொள்ளவும் முடியாது.. இரவு 9 மணிக்கு மேல தன்னோட ரூமுக்கு போனா காலையில அவரா எழுந்து வெளியே வரும் வரைக்கும் வெயிட் செஞ்சுதான் ஆகனும்.. அவரா ரொம்ப சில பேர்கிட்ட மட்டுமே போனில் பேசுவார்.. அவங்க அப்பா கூட நேரடியாக சார் கிட்ட பேசமாட்டாரு.. சாரோட உதவியாளர் மூலமாகத்தான் பேசுவாரு” என்று அடுத்த ஷாக் கொடுத்தார் அந்த நண்பர்.

அத்துடன், “புஸ்ஸி ஆனந்த்- ஆதவ்- ஜான் இவங்களுக்கு இடையே மோதல் இருக்குன்னு மதுரை மாநாடு நடந்தப்பவே லேசாக புரிஞ்சுகிட்டாரு சார்.. அதனாலதான் மாநாடு முடியட்டும் பேசிக்கலாம்னு சொல்லி இருந்தாரு.. மாநாடு முடிஞ்சதும் இவங்க அக்கப்போருக்கு பஞ்சாயத்துன்னு பெருசா சார் நடத்தலை… எல்லாம் சரியாகிடும்னு சார் நினைச்சாரு.. எங்க சாரைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விஷயத்துக்கு யூஸ் செய்யனும் நினைக்கிறாரு..

கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரைக்கும் ஜான் சொன்னதாலதான் கரூரில் இருந்து கிளம்பினாரு.. ஜான் சொன்னதாலதான் கருருக்கு திரும்பவும் போகலை.. ஜான் சொல்றதைத்தான் சாரும் கேட்பாரு” என ஜான் ஆரோக்கியசாமி விவகாரத்துக்கு வந்தார் அந்த நண்பர்.

தவெக உட்கட்சி மோதல் பற்றி விஜய்க்கு நெருக்கமான அந்த நண்பர் நம்மிடம் கூறும் போது, “கட்சியில எந்த பொறுப்பிலும் இல்லாமலேயே எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறாரே”ன்னு ஜான் ஆரோக்கியசாமி மேல புஸ்ஸி ஆனந்துக்கு ரொம்பவே கோபம்.. ஜான் சொல்றபடி எங்க சார் நடந்துக்கிறாரு.. ஆனா அது அத்தனையும் திமுகவுக்கு சாதகமாக போகுதுன்னு புஸ்ஸி சந்தேகப்படுறாரு.. அதாவது ஜான் ஆரோக்கியசாமி திமுகவோட ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோன்னு புஸ்ஸிக்கு செம்ம டவுட்.. இதை ஓபனாக கட்சி நிர்வாகிகளிடம் புஸ்ஸி சொல்ல இது ஜான் காதுக்கும் போனது..

அப்ப புஸ்ஸிக்கும் ஜானுக்கும் இடையே பயங்கர சண்டையாகிடுச்சு.. “கரூரில் இருந்து தளபதியை நீங்கதானே ரிட்டர்ன் வர சொன்னது”ன்னு புஸ்ஸி பாய, ஜான் ஆரோக்கியசாமியோ, “இத்தனை நாளாக பயந்தா கொள்ளி மாதிரி ஓடிப் போய் பதுங்கிட்டு இப்ப வந்து பேசுறாரு பாரு.. தளபதி வந்தாருன்னா நீங்க கரூருக்கு ரிட்டர்ன் போயிருக்க வேண்டியதுதானே.. அப்படி போயிருந்தா என்ன நடந்துருக்கும் தெரியுமா?”ன்னு திருப்பி ஜான் பாய ஒரே ரணகளமாகிடுச்சு..

புஸ்ஸியை பொறுத்தவரைக்கும், தன்னை குறிவைக்கிறது, காலி செய்யுறது எல்லாமே ஜான் ஆரோக்கியசாமியோட வேலைதான்னு சொல்றார்.. என்னதான் தான் கட்சி பொதுச்செயலாளராக இருந்தாலும் கட்சியிலேயே இல்லாத ஜான் சொல்றதைத்தானே விஜய் கேட்கிறாரேங்கிற கோபம் புஸ்ஸிக்கு ரொம்பவே இருக்கு” என்றார்.

image-256-1024x576.png

சரி ஆதவ் அர்ஜூனா என்ன சொல்றாருன்னு கேட்டீங்களா?

ஆமாய்யா.. “ஆதவ் அர்ஜூனாவைப் பொறுத்தவரைக்கும் ஏன்டா இந்த கட்சிக்கு வந்தோம்… எதுக்குடா இவ்வளவு கோடி கோடியா செலவு செய்றோம்னு ரொம்பவே விரக்தியாகிட்டார்.. இப்ப கூட சுப்ரீம் கோர்ட்டுக்கு ஏகப்பட்ட செலவு செஞ்சேன்னும் சொல்றார்.. இவ்வளவு செலவு செய்யுற நாம, சார்கிட்ட நேரடியாக நினைச்ச நேரத்துல பேச முடியறதுல்லை.. எல்லாத்துக்கும் ஜான் மூலமாகவே போகனும்னா என்ன அர்த்தம்? இது எல்லாம் எத்தனை காலத்துக்கு சரிப்படும்? என சலித்து கொள்கிறார்..

அருண்ராஜைப் பொறுத்தவரைக்கும் புஸ்ஸி, ஜான், ஆதவ் மூன்று பேருமே சாரை தவறாக வழிநடத்துறாங்க.. இதைப்பற்றி ஒரு சில டைம் தளபதிகிட்ட தனிப்பட்ட முறையில் தாம் சொன்னதாகவும் அப்படி சொன்ன விஷயங்களை கூட இந்த மூன்று பேரிடமும் சார் ஷேர் செஞ்சுட்டாருன்னும் ரொம்பவே ஆதங்கப்படுகிறார்” என்றார் விஜய்யின் நண்பர்.

அதே மாதிரி, “தவெகன்னு கட்சியை உருவாக்குனதே நான்தானே.. ஜான், ஆதவ் எல்லாம் இன்னைக்கு வந்தவங்க.. நான் இல்லாம கட்சி நடத்த முடியாதுன்னு இவங்களுக்கு தெரியாதா?” எனவும் புஸ்ஸி சீறுகிறார் என்றார் விஜய்க்கு நெருக்கமான நண்பர்.

தவெகவின் நிர்வாகிகள் சிலரிடம் இதுபற்றி நாம் பேசிய போது, “எதுக்குதான் ஜான் ஆரோக்கியசாமி பேச்சை மட்டும் தளபதி மலை போல நம்புறாருன்னு தெரியலை.. இன்னைக்கு கட்சியோட மா.செ.க்கள் யார்னு கூட தளபதியால முழுசா சொல்ல முடியாது.. புஸ்ஸிதானே எல்லாம் பார்க்கிறாரு.. அவருக்கு எதிராக அவரை அசிங்கப்படுத்தி ஆனந்தப்படுறாரு ஜான்.. இதை தளபதி கண்டுக்காம இருக்கிறாரே” என ஆதங்கப்படுகின்றனர்.

தவெகவின் உட்கட்சி மோதல், விஜய்யின் ‘தனிமை’ போக்கு.. இதெல்லாம் தமிழக அரசியலுக்கு எவ்வளவு காலத்துக்கும் தாங்கும்? என நமக்கும் சில கேள்விகள் இருந்தாலும், “ஜெயலலிதா- கலைஞர் மறைவுக்கு பின் வெற்றிடம் இருக்குன்னு ரஜினி சொன்னாரு இல்லையா… அந்த வெற்றிடம் இன்னும் இருக்குன்னு விஜய் நம்புறாரு.. இப்படித்தான் அரசியல் செய்யனும்னு இருந்த சகாப்தாம் எல்லாம் முடிஞ்சு போச்சு.. யாரும் எப்படியும் எதுவும் தெரியாமலேயே அரசியல் செய்ய முடியும் என்பதுதான் தமிழக அரசியலோட தற்போதைய நிலவரம்.. அதுல விஜய்யும் அறுவடை செய்ய நினைக்கிறாரு” என விஜய்யை ஆதரிக்கக் கூடிய சில அரசியல் தலைவர்கள் சொல்வதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

Minnambalam
No image preview

டிஜிட்டல் திண்ணை: 'தனி உலகத்தில்' விஜய்.. ரத்த களறியாகும்...

டிஜிட்டல் திண்ணை: 'தனி உலகத்தில்' விஜய்.. ரத்த களறியாகும் தவெக உட்கட்சி மோதல்.. TVK Party Cadres Internal Conflict
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லோரும் சேர்ந்து விஜய்யை அழித்தொழிக்காமல் விடமாட்டார்கள் போல............

இதையே ஒரு நாடகமாக எழுதலாம்..............

  • கருத்துக்கள உறவுகள்

யுரியுப்பர் IShowSpeed டனை தாய்லாந்தில் விஜய் இரசிகர்கள் துரத்தி சென்று ரிவிகே என்று கோசமிட்ட காணொளி பார்த்தேன். விஜயை Chief Minister of India என்றனர் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ரசோதரன் said:

இவர்கள் எல்லோரும் சேர்ந்து விஜய்யை அழித்தொழிக்காமல் விடமாட்டார்கள் போல............

இதையே ஒரு நாடகமாக எழுதலாம்..............

மக்களுக்கான ஒரு கட்சி என்பது மக்களுடன் அன்னியோன்யமாக இருக்க வேண்டும். அது அந்த கட்சியிடம் அறவே இல்லை. ஏதோ ஒன்லைன் அமேசன் மூலம் சாமான் சக்கடையள் வாங்குவது போல் கட்சி நடவடிக்கைகளையும் கொண்டு போவதாக தெரிகிறது.

இன்றுவரை கட்சி சம்பந்தமான மக்கள் சந்திப்பும் இல்லை. ஊடக சந்திப்புகளும் இல்லை.

தனியே திரைக்கவர்ச்சி நாட்டை ஆளக்கூடாது என்பது என் கருத்து.திரையுலகினர்க்கு முன்னோடியான திரைக்கவர்ச்சியால் வந்த எம்ஜிஆரால் கூட பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை என்பது நிஜம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனுடைய பலமே அவனுடைய எதிரிகளின் எண்ணிக்கை தான்

விஜய்க்கு எதிரிகள் அதிகரிக்கும் பொது எதிர்ப்பக்கக்கத்தில் விஜய் சார்பாகக் கூடும் ஆதரவைக் கவனிக்கத் தவறி விடுகின்றது

இந்தப் பொன்னம்பலம் போன்ற கண்ராவிகள்

சும்மாவா அ தி மு க வும் பா ஜ க வும் விஜய் பின்னால் அலைகின்றார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

யுரியுப்பர் IShowSpeed டனை தாய்லாந்தில் விஜய் இரசிகர்கள் துரத்தி சென்று ரிவிகே என்று கோசமிட்ட காணொளி பார்த்தேன். விஜயை Chief Minister of India என்றனர் 🤣

நேற்று இயக்குனரின் மாரி செல்வராஜ் 'பைசன்' பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது, கூட்டம் கூட்டலிடுகின்றது. அவர் உடனே கூச்சலிடுவதை நிற்பாட்டச் சொல்லுகின்றார். அதைத் தொடர்ந்து அவர் கிட்டத்தட்ட இப்படிச் சொன்னார், 'நான் உங்களுக்கு சாராயத்தை தரவில்லை, நீங்கள் ஏன் கூச்சலிடுகின்றீர்கள்............... நான் உங்களுக்கு ஒரு புத்தகத்தை தந்துள்ளேன், அதைப் படியுங்கள்..................'.

உலகெங்கும் சமுதாயங்கள் முன்னோக்கிப் போவது இன்றிருக்கும் ஒரு சிலராலேயே. கூச்சலிடும் கூட்டங்களால் அல்ல.

42 minutes ago, குமாரசாமி said:

திரையுலகினர்க்கு முன்னோடியான திரைக்கவர்ச்சியால் வந்த எம்ஜிஆரால் கூட பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை என்பது நிஜம்.

என்னுடைய பங்கிற்கும் இதை நான் பல தடவைகள் எழுதியிருக்கின்றேன். தமிழ்நாட்டிற்கு கிடைத்த முதல்வர்களில் எம்ஜிஆர் சிறந்த ஒரு முதல்வர் அல்ல. தமிழ் திரை உலகை ரஜனிகாந்தும், அவர் வழி வந்தவர்களும் பின்னோக்கி கொண்டு சென்றது போல, எம் ஜிஆரும், அவர் வழியில் அரசியல் செய்பவர்களும் தமிழக அரசியலை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, ரசோதரன் said:

நேற்று இயக்குனரின் மாரி செல்வராஜ் 'பைசன்' பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது, கூட்டம் கூட்டலிடுகின்றது. அவர் உடனே கூச்சலிடுவதை நிற்பாட்டச் சொல்லுகின்றார். அதைத் தொடர்ந்து அவர் கிட்டத்தட்ட இப்படிச் சொன்னார், 'நான் உங்களுக்கு சாராயத்தை தரவில்லை, நீங்கள் ஏன் கூச்சலிடுகின்றீர்கள்............... நான் உங்களுக்கு ஒரு புத்தகத்தை தந்துள்ளேன், அதைப் படியுங்கள்..................'.

உலகெங்கும் சமுதாயங்கள் முன்னோக்கிப் போவது இன்றிருக்கும் ஒரு சிலராலேயே. கூச்சலிடும் கூட்டங்களால் அல்ல.

என்னுடைய பங்கிற்கும் இதை நான் பல தடவைகள் எழுதியிருக்கின்றேன். தமிழ்நாட்டிற்கு கிடைத்த முதல்வர்களில் எம்ஜிஆர் சிறந்த ஒரு முதல்வர் அல்ல. தமிழ் திரை உலகை ரஜனிகாந்தும், அவர் வழி வந்தவர்களும் பின்னோக்கி கொண்டு சென்றது போல, எம் ஜிஆரும், அவர் வழியில் அரசியல் செய்பவர்களும் தமிழக அரசியலை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றனர்.

நீங்கள் சொல்வது சரியானதே.

இருந்தாலும்...

திராவிடத்திற்குள் ஒழிந்திருந்து செய்யும் அரசியல் பாரதூரமானது என்பது என் கருத்து.திராவிடத்தை தூக்கியெறிந்து விட்டு சக மனிதனாக அல்லது தமிழனாக அரசியல் செய்வது அந்த மண்ணுக்கு நலன் தரும் என நான் நினைக்கின்றேன்.

நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால்.....தமிழ்நாட்டில் திராவிடம் எதையுமே சாதிக்கவில்லை. இது கண்கூடாக தெரியும் ஒரு உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்கள் தற்போது பெரும்பாலும் ஒரு பிரச்சார சக்திகளாக மாறி விட்டதால், இந்த செய்தியில் எந்தளவிற்கு உண்மை இருக்கும் என தெரியவில்லை.

விஜயின் கட்சியினை முடித்துவிடும் நோக்குடன் உள்ளார்கள் என்பது புரிகிறது, அதனால் தமிழக மக்களுக்கு பெரிதாக எந்த நட்டமும் ஏற்படாது, நன்மைதான் ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

நான் உங்களுக்கு ஒரு புத்தகத்தை தந்துள்ளேன், அதைப் படியுங்கள்..................'.

உலகெங்கும் சமுதாயங்கள் முன்னோக்கிப் போவது இன்றிருக்கும் ஒரு சிலராலேயே. கூச்சலிடும் கூட்டங்களால் அல்ல.

உண்மை.

1 hour ago, vasee said:

விஜயின் கட்சியினை முடித்துவிடும் நோக்குடன் உள்ளார்கள் என்பது புரிகிறது, அதனால் தமிழக மக்களுக்கு பெரிதாக எந்த நட்டமும் ஏற்படாது, நன்மைதான் ஏற்படும்.

👍

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால்.....தமிழ்நாட்டில் திராவிடம் எதையுமே சாதிக்கவில்லை. இது கண்கூடாக தெரியும் ஒரு உண்மை.

உண்மையாகவா😂? தமிழ் நாட்டின் பொருளாதார, கல்வி, சமூக நிலை வலதுசாரித்தனத்தாலும், மத - இன வாதங்களாலும் பாதிக்கப் பட்ட பிரிப்பரசியல் செய்யும் ஏனைய இந்திய மாநிலங்களின் நிலையை விட பல மடங்கு மேலாக இருக்கிறது - இதற்கான ஆதாரங்களும், தரவுகளும் நீங்கள் "கண்களை" திறந்து பார்த்தால் மட்டும் தான் உங்களுக்குத் தெரியும். சீமான் போன்ற வலதுசாரித் தமிழர்களின் சமூகவலை ஊடகங்களின் வர்ணங்களில் கண் மங்கிப் போனால் "திராவிடம் எதுவும் சாதிக்கவில்லை" என்ற புரிதல் மட்டும் தான் எஞ்சும்!

  • கருத்துக்கள உறவுகள்

உட்கட்சி மோதல் கூடாது…

இப்போ நா த க வை எடுங்கள்…

திமுக வை எடுங்கள்….

சபரீசன் பெட்டிக்கு பிறகு எப்படி இரு தரப்பும் ஒற்றுமையாக அண்ணன் தம்பியாக வேலை செய்கிறார்கள்.

இந்த திரியில் கூட திமுக பாடகர் உச்ச ஸ்தாயில் பாட…

நாதக தம்பிகள் எவ்வளவு அழகாக கோரஸ் பாடுகிறார்கள்.

மார்கழி சீசன் ஐப்பசியிலேயே வந்து விட்ட பீலிங்😂.

இடையில் ஒரு தம்பிக்கு மெமோ போகவில்லை போலும், திராவிடம் எதையும் சாதிக்கவில்லை என போன சீசன் பாட்டை அபஸ்ஸ்வராமாக கட்டை குரலில் குறுக்கால இழுக்கிறார்😂.

இவர்களை பார்த்து த வெ க ஒற்றுமையின் பலத்தை உணர வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

திராவிடத்திற்குள் ஒழிந்திருந்து செய்யும் அரசியல் பாரதூரமானது என்பது என் கருத்து.திராவிடத்தை தூக்கியெறிந்து விட்டு சக மனிதனாக அல்லது தமிழனாக அரசியல் செய்வது அந்த மண்ணுக்கு நலன் தரும் என நான் நினைக்கின்றேன்.

நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால்.....தமிழ்நாட்டில் திராவிடம் எதையுமே சாதிக்கவில்லை. இது கண்கூடாக தெரியும் ஒரு உண்மை.

அண்ணா,

தமிழ்நாடு கல்வி, தொழில் துறைகள், வேலை வாய்ப்பு, தனிநபர் வருமானம், சமூகநீதி போன்றவற்றில் முதன்மையான ஒரு மாநிலமாக இருக்கின்றது. சிலவற்றில் முதலாவதாகவும், வேறு சிலவற்றில் கேரளாவிற்கு அடுத்ததாகவும் இருக்கின்றது. இந்த மாற்றங்களும், வளர்ச்சிகளும் எந்த தேசியக் கட்சிகளாலும் தமிழ்நாட்டில் உண்டாக்கப்பட்டவை அல்ல. மாறாக மாநில அல்லது பிரதேசக் கட்சிகளாலும், சில தனிமனிதர்களாலும் உருவாக்கப்பட்டவையே.

இவர்கள் இன்னும் முன்னுக்கு போயிருக்கலாம், போகலாம் என்ற ஆதங்கத்தில் நாங்கள் அங்கு எதுவுமே முன்னேறவில்லை என்று சொல்லுகின்றோம் போல. சாதிய ஒடுக்குமுறைகளும், அடக்குமுறைகளும் தமிழ்நாட்டில் இன்றும் இருக்கின்றனவே. ஆனால் மற்றைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான குரல்கள் தமிழ்நாட்டில், மற்றைய மாநிலங்களை விட, மிகவும் உரத்தே இருக்கின்றது. உதாரணமாக, தமிழ்ச்சினிமா போன்ற திரை உலகம் வேறு மொழிகளில் இந்தியாவில் எங்கும் இல்லை. பாலா, வெற்றிமாறன் ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்களை ஒன்றாக ஒரு துறையில் தமிழ்நாட்டில் மட்டுமே காணலாம். இவை பிரதேச அல்லது மாநிலக் கட்சிகளால் கொண்டு வரப்பட்ட மாற்றங்களே.

அதிகாரத்தைப் பெற அடையாளம் தேவையாகின்றது. மத அடையாளங்கள், தேச அடையாளங்கள், மொழி அடையாளங்கள், இன அடையாளங்கள் என்று ஏதோ ஒன்றை பேசிக் கொண்டே, ஒரு தொகுதி மக்களை ஓர் அணியாக்கி, அதிகாரத்தை பெற்றுக் கொள்கின்றார்கள். பின்னர் இதையே மீண்டும் மீண்டும் பேசி அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்கின்றார்கள். ஆரம்பத்தில் ஒரு மக்கள் கூட்டத்திற்கு இவை தேவையான ஒன்றும் கூட. உதாரணமாக, வட இந்தியர்களின் ஆதிக்ககத்திற்கும், அதிகாரத்திற்கும் எதிராக தென் இந்தியர்களை ஓர் அணியில் திரட்ட ஒரு கருதுகோள் தேவையானது. இன்றும் அதுவே தேவையா என்று கேட்டால், இல்லை, இன்று தேவையில்லை என்பதே பதில். ஆனால் அடையாளம் தொலைந்து போனால், அதிகாரம் கைவிட்டுப் போய் விடுமே என்ற பயம் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருக்கின்றது.

இன்றைய உலகில் இடதுசாரிகளும், இடதுசாரி நாடுகளும் கூட இந்த வழியில் தான் போய்க் கொண்டிருக்கின்றன. காலாவதியான கம்யூனிசக் கொள்கைகளை சொல்லிக் கொண்டே அதிகாரங்களில் இருக்கின்றார்கள். ஆனால் நடைமுறையில் அவற்றில் இருந்து எப்பவோ வெளியே வந்துவிட்டார்கள்.

சகமனிதர்கள் எல்லோரையும் ஒன்றாக நேசிப்பது கதையில், கவிதையில் மட்டுமே சாத்தியம், அண்ணா. மிக வெகுசிலரால் மட்டும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்படி வாழ்ந்து விடமுடியும். உலகெங்கும் ஏதோ ஒரு அடையாளத்துடன், ஏதோ சில பக்கசார்புகளுடனேயே அதிகாரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஏனையோரையும் சம உரிமைகளுடன், சுய மரியாதையுடன் வாழ அனுமதித்தார்கள் என்றால் அதுவே ஒரு நல்ல அரசு.

'தமிழன்' என்னும் அடையாளத்தில் பிழை எதுவும் இல்லை, ஆனால் 'தமிழன் மட்டும் தான்' என்னும் நிலைப்பாட்டில் தான் தவறுகள் உள்ளது, அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

ஊடகங்கள் தற்போது பெரும்பாலும் ஒரு பிரச்சார சக்திகளாக மாறி விட்டதால், இந்த செய்தியில் எந்தளவிற்கு உண்மை இருக்கும் என தெரியவில்லை.

விஜயின் கட்சியினை முடித்துவிடும் நோக்குடன் உள்ளார்கள் என்பது புரிகிறது, அதனால் தமிழக மக்களுக்கு பெரிதாக எந்த நட்டமும் ஏற்படாது, நன்மைதான் ஏற்படும்.

உண்மையே, வசீ. எந்த ஊடகமும் ஏதோ ஒரு சார்புநிலை எடுத்தே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எங்களின் மனநிலைக்கு பொருந்தும் செய்திகளை நம்பத் தலைப்படுகின்றோம், உள்ளூரச் சந்தேகம் இருந்தாலும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

அண்ணா,

தமிழ்நாடு கல்வி, தொழில் துறைகள், வேலை வாய்ப்பு, தனிநபர் வருமானம், சமூகநீதி போன்றவற்றில் முதன்மையான ஒரு மாநிலமாக இருக்கின்றது. சிலவற்றில் முதலாவதாகவும், வேறு சிலவற்றில் கேரளாவிற்கு அடுத்ததாகவும் இருக்கின்றது. இந்த மாற்றங்களும், வளர்ச்சிகளும் எந்த தேசியக் கட்சிகளாலும் தமிழ்நாட்டில் உண்டாக்கப்பட்டவை அல்ல. மாறாக மாநில அல்லது பிரதேசக் கட்சிகளாலும், சில தனிமனிதர்களாலும் உருவாக்கப்பட்டவையே.

இவர்கள் இன்னும் முன்னுக்கு போயிருக்கலாம், போகலாம் என்ற ஆதங்கத்தில் நாங்கள் அங்கு எதுவுமே முன்னேறவில்லை என்று சொல்லுகின்றோம் போல. சாதிய ஒடுக்குமுறைகளும், அடக்குமுறைகளும் தமிழ்நாட்டில் இன்றும் இருக்கின்றனவே. ஆனால் மற்றைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான குரல்கள் தமிழ்நாட்டில், மற்றைய மாநிலங்களை விட, மிகவும் உரத்தே இருக்கின்றது. உதாரணமாக, தமிழ்ச்சினிமா போன்ற திரை உலகம் வேறு மொழிகளில் இந்தியாவில் எங்கும் இல்லை. பாலா, வெற்றிமாறன் ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்களை ஒன்றாக ஒரு துறையில் தமிழ்நாட்டில் மட்டுமே காணலாம். இவை பிரதேச அல்லது மாநிலக் கட்சிகளால் கொண்டு வரப்பட்ட மாற்றங்களே.

அதிகாரத்தைப் பெற அடையாளம் தேவையாகின்றது. மத அடையாளங்கள், தேச அடையாளங்கள், மொழி அடையாளங்கள், இன அடையாளங்கள் என்று ஏதோ ஒன்றை பேசிக் கொண்டே, ஒரு தொகுதி மக்களை ஓர் அணியாக்கி, அதிகாரத்தை பெற்றுக் கொள்கின்றார்கள். பின்னர் இதையே மீண்டும் மீண்டும் பேசி அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்கின்றார்கள். ஆரம்பத்தில் ஒரு மக்கள் கூட்டத்திற்கு இவை தேவையான ஒன்றும் கூட. உதாரணமாக, வட இந்தியர்களின் ஆதிக்ககத்திற்கும், அதிகாரத்திற்கும் எதிராக தென் இந்தியர்களை ஓர் அணியில் திரட்ட ஒரு கருதுகோள் தேவையானது. இன்றும் அதுவே தேவையா என்று கேட்டால், இல்லை, இன்று தேவையில்லை என்பதே பதில். ஆனால் அடையாளம் தொலைந்து போனால், அதிகாரம் கைவிட்டுப் போய் விடுமே என்ற பயம் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருக்கின்றது.

இன்றைய உலகில் இடதுசாரிகளும், இடதுசாரி நாடுகளும் கூட இந்த வழியில் தான் போய்க் கொண்டிருக்கின்றன. காலாவதியான கம்யூனிசக் கொள்கைகளை சொல்லிக் கொண்டே அதிகாரங்களில் இருக்கின்றார்கள். ஆனால் நடைமுறையில் அவற்றில் இருந்து எப்பவோ வெளியே வந்துவிட்டார்கள்.

சகமனிதர்கள் எல்லோரையும் ஒன்றாக நேசிப்பது கதையில், கவிதையில் மட்டுமே சாத்தியம், அண்ணா. மிக வெகுசிலரால் மட்டும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்படி வாழ்ந்து விடமுடியும். உலகெங்கும் ஏதோ ஒரு அடையாளத்துடன், ஏதோ சில பக்கசார்புகளுடனேயே அதிகாரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஏனையோரையும் சம உரிமைகளுடன், சுய மரியாதையுடன் வாழ அனுமதித்தார்கள் என்றால் அதுவே ஒரு நல்ல அரசு.

'தமிழன்' என்னும் அடையாளத்தில் பிழை எதுவும் இல்லை, ஆனால் 'தமிழன் மட்டும் தான்' என்னும் நிலைப்பாட்டில் தான் தவறுகள் உள்ளது, அண்ணா.

அருமை👏👏😋.

Note to self - நாளைக்கு கட்டாயம் வந்து ஒரு லைக் போட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23/10/2025 at 20:15, ரசோதரன் said:

உங்கள் நீண்ட எழுத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏

தமிழர்களுக்கென்று தனி மரபும் தனி முயற்சிகளும் என்றும் எங்கும் உண்டு. இதை நாங்கள் வரலாறு ஊடாக மட்டுமல்ல இன்றைய நடைமுறை உலகிலும் பார்க்கலாம். இதற்கு தனி விளக்கங்கள் தேவையில்லை என நான் நினைக்கின்றேன்.

இலங்கையில் தமிழர் பிரதேசம் என்றால் தனி விசேடங்கள் உண்டு. இயற்கை வளங்கள் பெரிதாக இல்லாமலே தன்னிறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.அவர்களது தனி முயற்சி அல்லது கூட்டு முயற்சிகள் ஏராளம்..ஏராளம்.இதை பார்த்து தான் சிங்களம் கொஞ்சம் மிரள்கிறது என நினைக்கின்றேன். இங்கு திராவிடம் தேவைப்படவில்லை.

புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வேற்று மண்ணில் கால் பதித்தவர்கள்.இன்று என்ன,எந்த நிலையில் இருக்கின்றார்கள் என நான் சொல்லத்தேவையில்லை. இங்கேயும் திராவிடம் தேவைப்படவில்லை.

அதே போல் தமிழ்நாட்டிலும் தனி முயற்சியும்,பொருளாதார வளங்களுமே அதன் முன்னேறத்திற்கு காரணம் என நான் நினைக்கின்றேன். மற்றும் படி திராவிடம் அரசியல் செய்ய மட்டுமே பயன்படுகின்றது.அபிவிருத்தி தமிழர் சார்ந்ததாகவே நான் பார்க்கின்றேன்.

தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு போட்டியாக இருக்கும் கேரளத்திற்கு திராவிடம் தேவைப்படவில்லை என்பதை நான் உணர்கின்றேன்.

தமிழினம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமாயின் சாதி வேற்றுமைகளை அழிக்க வேண்டும். அதை அழிக்க தமிழர் என்றொரு கட்டமைப்பு வேண்டும். அதற்கு "மட்டும்" என்ற பதம் தேவைப்படுகின்றது.தமிழர்களுக்கு சாதி,மதம் சார்ந்த உட்பிரிவுகள் தேவையில்லை. தமிழர் என்ற ஒரு குடை மட்டுமே தற்காலத்திற்கு தேவைப்படுகின்றது.

திராவிடத்தால் ஒழிக்க முடியாத இன பாகுபாட்டை,சாதி வேற்றுமைகளை தமிழர் என்ற ஒருமைப்பாட்டால் மட்டுமே அழிக்கமுடியும் என நான் நினைக்கின்றேன்.

ஏனைய நாடுகளை பாருங்கள் எல்லாம் மொழி சார்ந்தே தம் கொள்கைகளையும் சட்டங்களையும் விதிகளையும் வகுத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2025 at 18:14, goshan_che said:

உட்கட்சி மோதல் கூடாது…

இப்போ நா த க வை எடுங்கள்…

திமுக வை எடுங்கள்….

சபரீசன் பெட்டிக்கு பிறகு எப்படி இரு தரப்பும் ஒற்றுமையாக அண்ணன் தம்பியாக வேலை செய்கிறார்கள்.

இந்த திரியில் கூட திமுக பாடகர் உச்ச ஸ்தாயில் பாட…

நாதக தம்பிகள் எவ்வளவு அழகாக கோரஸ் பாடுகிறார்கள்.

மார்கழி சீசன் ஐப்பசியிலேயே வந்து விட்ட பீலிங்😂.

இடையில் ஒரு தம்பிக்கு மெமோ போகவில்லை போலும், திராவிடம் எதையும் சாதிக்கவில்லை என போன சீசன் பாட்டை அபஸ்ஸ்வராமாக கட்டை குரலில் குறுக்கால இழுக்கிறார்😂.

இவர்களை பார்த்து த வெ க ஒற்றுமையின் பலத்தை உணர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2025 at 16:13, Justin said:

உண்மையாகவா😂? தமிழ் நாட்டின் பொருளாதார, கல்வி, சமூக நிலை வலதுசாரித்தனத்தாலும், மத - இன வாதங்களாலும் பாதிக்கப் பட்ட பிரிப்பரசியல் செய்யும் ஏனைய இந்திய மாநிலங்களின் நிலையை விட பல மடங்கு மேலாக இருக்கிறது - இதற்கான ஆதாரங்களும், தரவுகளும் நீங்கள் "கண்களை" திறந்து பார்த்தால் மட்டும் தான் உங்களுக்குத் தெரியும். சீமான் போன்ற வலதுசாரித் தமிழர்களின் சமூகவலை ஊடகங்களின் வர்ணங்களில் கண் மங்கிப் போனால் "திராவிடம் எதுவும் சாதிக்கவில்லை" என்ற புரிதல் மட்டும் தான் எஞ்சும்!

திராவிடம் சாதனையத்தான் கரூரில் பார்த்தோமே!பெரியார் செய்த பகுத்தறிவுப் புரட்சி இதுதான்.ஆனால் பெரியாரைப் மின்பற்றாத கேரளாவில் நடிகனைப் பார்ப்பதற்கு போய் யாரும் சாகமாட்டார்கள்.அவர்கள் திராவிடர்கள் என்று தம்மைப் போலியாகச் சொல்லிக் கொள்வதில்லை.அங்கு மலையாளி மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

https://tamil.oneindia.com/news/chennai/karur-crowd-incident-cbi-summons-tamilaga-vettri-kazhagam-bussy-anand-and-ctr-nirmal-kumar-for-inqu-745795.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Left_Includeகரூர் நெரிசல் சம்பவம்.. சிபிஐ அதிரடி! புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமாருக்கு நேரில் ஆஜராக சம்மன்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/karur-crowd-incident-cbi-summons-tamilaga-vettri-kazhagam-bussy-anand-and-ctr-nirmal-kumar-for-inqu-745795.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Left_Include

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இப்படி பிஸ்கோத்து நபர்கள் கருத்தை பகிர்ந்து எனது நேரத்தை வீணாக்கவேண்டாம்😂.

சபரீசனிடம் பெட்டி வாங்கவில்லை என்றால் சீமான் விகடன் மீது மானநஸ்ட வழக்கு போடட்டும்.

போடமாட்டார். விகடன் கோர்ட்டில் ஆதாரத்தை கொடுதால் …திமுக, சீமான் இருவர் பெயரும் நாறிவிடும்.

சீமான் வழக்கு போடும் மட்டும் விகடன் செய்தி உண்மை என்றே கருதப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய அனுமானத்தின் படி தி மு க விஜய்க்கு மிகுந்த அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றது .

ஒருபக்கம் தி மு க தனது பலம் வாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட பரப்புரையால் அரசியல் அறிவில்லாத, ஆழுமையில்லாத, வெறும் நடிகராக மட்டும் விஜயைக் காட்டுவதும்....

அரசியல் ரீதியில் தி மு க தன்னிடம் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும்.... தெரிகின்றது.

கட்டுப்பாடு என்று சொல்ல வந்தது தமிழக அரசு தனது அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி பாதுகாப்பு, ஒழுங்கு .சட்டம் என்று விஜயை கரூருக்குச் செல்ல விடாமல் தடுக்கின்றது என்பதே.

அதன்படி பார்க்கும் பொது விஜயின் பிரச்சார நடவடிக்கைகள் முடங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

ஒருபக்கம்தானே சொல்லி இருக்கிறியள் அண்ணா?

இன்னொரு பக்கத்தால் திமுக ஆரை வைத்து விஜையை ஒரு பிடி பிடிக்கிறது என்று சொல்ல வேண்டாமா😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2025 at 15:19, குமாரசாமி said:

உங்கள் நீண்ட எழுத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏

தமிழர்களுக்கென்று தனி மரபும் தனி முயற்சிகளும் என்றும் எங்கும் உண்டு. இதை நாங்கள் வரலாறு ஊடாக மட்டுமல்ல இன்றைய நடைமுறை உலகிலும் பார்க்கலாம். இதற்கு தனி விளக்கங்கள் தேவையில்லை என நான் நினைக்கின்றேன்.

இலங்கையில் தமிழர் பிரதேசம் என்றால் தனி விசேடங்கள் உண்டு. இயற்கை வளங்கள் பெரிதாக இல்லாமலே தன்னிறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.அவர்களது தனி முயற்சி அல்லது கூட்டு முயற்சிகள் ஏராளம்..ஏராளம்.இதை பார்த்து தான் சிங்களம் கொஞ்சம் மிரள்கிறது என நினைக்கின்றேன். இங்கு திராவிடம் தேவைப்படவில்லை.

புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வேற்று மண்ணில் கால் பதித்தவர்கள்.இன்று என்ன,எந்த நிலையில் இருக்கின்றார்கள் என நான் சொல்லத்தேவையில்லை. இங்கேயும் திராவிடம் தேவைப்படவில்லை.

அதே போல் தமிழ்நாட்டிலும் தனி முயற்சியும்,பொருளாதார வளங்களுமே அதன் முன்னேறத்திற்கு காரணம் என நான் நினைக்கின்றேன். மற்றும் படி திராவிடம் அரசியல் செய்ய மட்டுமே பயன்படுகின்றது.அபிவிருத்தி தமிழர் சார்ந்ததாகவே நான் பார்க்கின்றேன்.

தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு போட்டியாக இருக்கும் கேரளத்திற்கு திராவிடம் தேவைப்படவில்லை என்பதை நான் உணர்கின்றேன்.

தமிழினம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமாயின் சாதி வேற்றுமைகளை அழிக்க வேண்டும். அதை அழிக்க தமிழர் என்றொரு கட்டமைப்பு வேண்டும். அதற்கு "மட்டும்" என்ற பதம் தேவைப்படுகின்றது.தமிழர்களுக்கு சாதி,மதம் சார்ந்த உட்பிரிவுகள் தேவையில்லை. தமிழர் என்ற ஒரு குடை மட்டுமே தற்காலத்திற்கு தேவைப்படுகின்றது.

திராவிடத்தால் ஒழிக்க முடியாத இன பாகுபாட்டை,சாதி வேற்றுமைகளை தமிழர் என்ற ஒருமைப்பாட்டால் மட்டுமே அழிக்கமுடியும் என நான் நினைக்கின்றேன்.

ஏனைய நாடுகளை பாருங்கள் எல்லாம் மொழி சார்ந்தே தம் கொள்கைகளையும் சட்டங்களையும் விதிகளையும் வகுத்துள்ளார்கள்.

மிக்க நன்றி அண்ணா உங்களின் கருத்துகளுக்கு......................❤️.

தமிழ்நாட்டில் முதலில் களையப்பட வேண்டியது சாதியப் பாகுபாடுகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லவே இல்லை, அண்ணா. தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்னும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்படுவதால் அந்தப் பாகுபாடுகளை இல்லாதொழிக்கலாம் என்று முன்வரும் எந்த ஒரு தமிழக தலைவருக்கும் என்னுடைய பூரண ஆதரவும், பிரார்த்தனைகளும் என்றும் உண்டு. அப்படியான ஒரு தலைவர் இன்றைய தமிழகத்தில் இல்லை. இன்று அங்கு தமிழ்த்தேசியம் பேசும் தலைமைகளும் உண்மையில் குறுஞ்சாதியவாதமே பேசுகின்றார்கள்.

இன்று திராவிடம் என்பது அரசியலுக்கான ஒரு முகவரியே என்பதில் எனக்கும் முழு உடன்பாடே.

ஊழலும், லஞ்சமும், இவற்றை ஒரு சாதாரண நிகழ்வுகளாக ஏற்றுக் கொள்ளும் அன்றாட வாழ்க்கை முறைகளும் கூட தமிழகத்தில் மாற்றப்படவேண்டும். ஊழல் என்னும் போது எல்லாமே ஊழல் தான் - 120 ரூபா டிக்கெட்டை 2000 ரூபாவிற்கு விற்கும் முதல் நாள் - முதல் காட்சி கூட ஊழலின் ஒரு வடிவம் தான்.

ஒரு சமூகத்தின் தலைவர்களுக்கு பொதுவெளியில் அடிப்படை நாகரிகம் இன்றியமையாத ஒன்று. பல தலைவர்கள் இதை ஒரு பொருட்டாக நினைப்பதேயில்லை. மக்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும் என்று மனதார விரும்புகின்றேன். காலப்போக்கில் இது ஒரு கட்டுக்கடங்காத கும்பல் மற்றும் பழங்குடிகளின் மனநிலையை சமூகத்தில் உண்டாக்குவது மட்டும் இல்லாமல், கும்பல் மனநிலையே சரியான ஒரு பாதை என்ற ஆபத்தான எண்ணத்தையும் உண்டாக்கிவிடுகின்றது.

இலங்கையில் தமிழ் மக்களும், சிங்கள மக்களும், இஸ்லாமிய மக்களும் ஒரே தெரிவுகளை முதன்மையாகக் கொண்டவர்கள் அல்லர். தமிழ் மக்களுக்கு அவர்களின் குடும்பங்களின் இன்றைய மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனை பிரதானமானது. சிங்கள மக்களுக்கு அன்றாட வாழ்க்கையும், அன்றாட நுகர்வுகளும் பிரதானமானது. இஸ்லாமிய மக்களுக்கு அவர்களின் மார்க்கமும், வியாபாரமும் பிரதானமானது. ஒவ்வொருவரின் பெரும்பாலான முயற்சிகளும் அவர்களின் தெரிவுகளை நோக்கியே இருக்கின்றது. நிச்சயமாக இவர்களில் ஒருவர் இன்னொருவரை விட சிறந்தவர் அல்லது திறமைசாலி என்பதற்கு இங்கு இடமில்லை.

உலகெங்கும் மொழிவாரிக் கொள்கைகளே நாடுகளிலும், பிரதேசங்களிலும் இருக்கின்றன என்பது மிகச் சரியான கூற்று, அண்ணா. இவ்வளவு பெரிய ஜனநாயக தேசமான அமெரிக்காவில் கூட ஆங்கிலத்தையே ஒரு ஒற்றை மொழியாக முன்னிறுத்துகின்றார்கள். சீனாவில் அதன் பிரதேச மொழிகளே வெளி உலகில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டன. இதுவே தான் ரஷ்யாவிலும். தமிழ்நாட்டில் தமிழை முன்னிறுத்தி கொள்கைகளை வகுப்பதில் பிழையேதும் இல்லை, மாறாக அது தேவையான ஒன்றும் கூட. ஆனால் 'உன்னுடையா அப்பா தமிழ் இல்லை............. உன்னுடைய தாத்தா தமிழ் இல்லை................ ஆகவே நீ தமிழ் இல்லை.............. நீ இங்கு வாழலாம், ஆனால் ஆளக்கூடாது................' என்பன போன்ற நிலைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை இல்லை, அண்ணா.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

இன்னொரு பக்கத்தால் திமுக ஆரை வைத்து விஜையை ஒரு பிடி பிடிக்கிறது என்று சொல்ல வேண்டாமா😂

சீமானுடைய தம்பிகளின் லிஸ்டில் நான் ஒருபோதும் சேரமுடியாது.😂

சீமான் என்னைவிட 5 நாட்கள் பிந்தியே பிறந்தார் 😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.