Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனிய தீபாவளி

------------------------

large.DiwaliGoat.jpg 

ஒரு ஆட்டை எப்படிக் கொல்வதென்று நாங்கள் கதைத்தோம்

அதன் மூக்கையும் வாயையும் இறுக்கி மூடி பிடித்தல் ஒரு வழி

தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு கழுத்தில் கீறுதல் இன்னொரு வழி

தலையில் ஒரேயடியாக போடுதலும் ஒரு வழியே

இப்படி சில வழிகள் இருக்கின்றன என்றனர் 

எப்படிக் கொன்றாலும் எட்டியும் பார்க்க மாட்டோம் என்றனர் பலரும் நானும்

ஒழித்திருந்து மிளகாயும் வெங்காயமும் அரிந்தோம்

ஒரு ஊர்ச் சந்தையில் இந்த வாரம் விற்ற ஆடுகளின் தொகை ஆறு கோடி ரூபா

ஒரே மழை என்று அங்கே வியாபாரம் மந்தம் என்றார்கள்

இப்படி இன்னும் நூறு சந்தைகளாவது இருக்கும்

ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில்  இறந்த உயிர்கள் 

எப்படி இறந்தாலும் நேரே வைகுண்டம் போகுமாம்

நரகாசுரன் கூட அப்படித்தான் அங்கே போனார்

ஆடு அவலப்பட்டு செத்தாலும் 

அது வைகுண்டம் போகுதே என்ற ஆறுதல் வர

இனிய தீபாவளி ஆனது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் சீரும் சிறப்புமாக,சொந்தங்களுடன் சந்தோசமாக வாழ உருவாக்கப்பட்டதே பண்டிகைகள் என நினைக்கின்றேன். இது ஒவ்வொரு மதங்களிலும் இனங்களிலும் உண்டு. காரணங்கள் தேட ஆரம்பித்தால் மரணச்சடங்கு நிகழ்வு மட்டுமே எமக்கு சொந்தமாக இருக்கும்.

மனிதனால் உருவாக்கப்பட்ட வருட பிறப்பையும்,நத்தார் பண்டிகையும் மறு கேள்வி ஏதுமில்லாமல் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் எமக்குள் ஆயிரம் கேள்விகளை கேட்டுக்கொண்டு அதை அடுத்த சந்ததிக்கு கடத்திக்கொண்டிருக்கின்றோம்..

இது இன்றைய அரசியலின் அனுபவம் மட்டுமே. போராடினால் அழித்து விடுவார்கள். "நூறு கிலோ மீட்டர் தள்ளிப்போன கடல்" என்றொரு கதை இருக்கின்றது. அதை வாசித்தால் ஆன்மாவும் அடங்கி போகும்.

மற்றும் படி உங்கள் எழுத்துக்களுக்கு நன்றி ஐயா
🙏
உண்மையான/பொய்யான பண்டிகைகள் இல்லை என்றால் மனிதர்கள் சொந்த பந்தங்கள் கூடிக்குலாவ சந்தர்ப்பங்கள் ஏது?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரசோதரன் said:

இனிய தீபாவளி

------------------------

large.DiwaliGoat.jpg 

ஒரு ஆட்டை எப்படிக் கொல்வதென்று நாங்கள் கதைத்தோம்

அதன் மூக்கையும் வாயையும் இறுக்கி மூடி பிடித்தல் ஒரு வழி

தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு கழுத்தில் கீறுதல் இன்னொரு வழி

தலையில் ஒரேயடியாக போடுதலும் ஒரு வழியே

இப்படி சில வழிகள் இருக்கின்றன என்றனர் 

எப்படிக் கொன்றாலும் எட்டியும் பார்க்க மாட்டோம் என்றனர் பலரும் நானும்

ஒழித்திருந்து மிளகாயும் வெங்காயமும் அரிந்தோம்

ஒரு ஊர்ச் சந்தையில் இந்த வாரம் விற்ற ஆடுகளின் தொகை ஆறு கோடி ரூபா

ஒரே மழை என்று அங்கே வியாபாரம் மந்தம் என்றார்கள்

இப்படி இன்னும் நூறு சந்தைகளாவது இருக்கும்

ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில்  இறந்த உயிர்கள் 

எப்படி இறந்தாலும் நேரே வைகுண்டம் போகுமாம்

நரகாசுரன் கூட அப்படித்தான் அங்கே போனார்

ஆடு அவலப்பட்டு செத்தாலும் 

அது வைகுண்டம் போகுதே என்ற ஆறுதல் வர

இனிய தீபாவளி ஆனது.

ஆடடித்து தீபாவளி கொண்டாடி விட்டீர்கள் அருமை (வரிகள்)

கொன்றால் பாவம் தின்றால் போச்சு.என்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

உண்மையான/பொய்யான பண்டிகைகள் இல்லை என்றால் மனிதர்கள் சொந்த பந்தங்கள் கூடிக்குலாவ சந்தர்ப்பங்கள் ஏது?

இதுவே நிஜம், அண்ணா. .............................👍.

பண்டிகைகளும், கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் ஆரம்பத்தில் மக்களை இணைக்கவும், அன்றாட அழுத்தங்களில் இருந்து தற்காலிகமாகவேனும் விடுபடவேனும் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வுகள் போலவே தோன்றுகின்றன. பின்னர் ஒவ்வொருவரும் தங்களின் அரசியல் - மத - குல - இன தேவைகளுக்கு ஏற்ப அவற்றின் மேல் காரணங்களை ஏற்றிவிட்டனர்.

சில வருடங்களின் முன் நான் வேலை செய்த ஒரு இடத்தில் தீபாவளி கொண்டாடுவோம். ஒவ்வொரு வருடமும் அங்கிருக்கும் வட இந்திய பின்புலம் கொண்டவர்களுக்கும், தென் இந்திய பின்புலம் கொண்டவர்களுக்கும் இடையே எவ்வகையான உணவுகள் பரிமாறுவது என்பதில் தர்க்கம் இருக்கும். அவர்கள் சைவ உணவு என்று சொல்ல, இவர்கள் அசைவ உணவு என்று சொல்ல, இறுதியில் இரண்டையும் வாங்கிக் கொள்ளுவோம். ராம தீபாவளி, ராவண தீபாவளி என்று மாறி மாறிச் சொல்லிக் கொள்வார்கள்.

அங்கிருந்த ஒரே ஒரு ராவண வாரிசு நான் மட்டும் தான்..................🤣. ஆனாலும் தீபாவளி அன்று இந்தியாவின் ஒரு பகுதியே ராவண வாரிசாக மாறிவிடுவார்கள்...............

மிகவும் மகிழ்வான நிகழ்வுகளும், நினைவுகளும். இன்றும் அவர்களில் எவரையும், ராமர்களோ ராவணர்களோ, எங்காவது பார்க்கும் போது சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

1 hour ago, பசுவூர்க்கோபி said:

ஆடடித்து தீபாவளி கொண்டாடி விட்டீர்கள் அருமை (வரிகள்)

கொன்றால் பாவம் தின்றால் போச்சு.என்பார்கள்.

🤣..................

ஒரு சந்தையில் மட்டும் ஆறு கோடிகளுக்கு ஆடுகள் விற்பனையாகியது என்று செய்தியில் சொல்லியிருந்தார்கள், கோபி. அதைக் கேட்டவுடன் பழைய ஊர் ஞாபகங்களும் வந்தன.

பல வருடங்களின் முன் ஒரு ருமேனிய நாட்டு நண்பன் கிறிஸ்துமஸ் நாளில் அவர்களின் ஊரில் பன்றி அடித்து எல்லோருக்கும் விருந்து கொடுப்பதாகச் சொல்லியிருந்தான். அவன் சொன்ன நிகழ்வுகள் எங்களின் தீபாவளிக் கொண்டாட்டம் போலவே இருந்தது. அமெரிக்கர்களின் கிறிஸ்துமஸ்ஸை அவன் போலி, ஒரு வியாபாரம் என்றும் சொல்லியிருந்தான்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

ஆடு அவலப்பட்டு செத்தாலும் 

அது வைகுண்டம் போகுதே என்ற ஆறுதல் வர

இனிய தீபாவளி ஆனது.

ஒவ்வொரு வழியில் மனதை ஆற்றுப்படுத்துகிறோம் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

ஒவ்வொரு வழியில் மனதை ஆற்றுப்படுத்துகிறோம் என நினைக்கிறேன்.

உண்மை தான், ஏராளன். பலவற்றையும், பல நிகழ்வுகளையும் அப்படித்தான் ஏற்றுக் கொண்டும் அல்லது கடந்தும் போய்க் கொண்டிருக்கின்றோம்.......................👍.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உயிர் உடம்பெடுக்கிறது. உடம்பு அடுத்த உயிர் எடுத்த உடம்பைக் கொன்று திண்று கொண்டாடுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Paanch said:

ஒரு உயிர் உடம்பெடுக்கிறது. உடம்பு அடுத்த உயிர் எடுத்த உடம்பைக் கொன்று திண்று கொண்டாடுகிறது.

பாஞ்ச் ஐயா,

பீஷ்மர் வியாசருடன் வியாசரின் குடிலின் உள்ளே உரையாடிக் கொண்டிருக்கும் போது, வியாசரின் குடிலின் வெளியே கட்டப்பட்டிருந்த கர்ப்பிணி பசுவை சிங்கம் ஒன்று வந்து இழுத்துச் செல்கின்றது. வியாசர் எதுவுமே செய்யவில்லை. ஆச்சரியமான பீஷ்மர் வியாசரைப் பார்க்கின்றார். 'இங்கு படைக்கப்பட்டது எல்லாமே உண்ணப்படுவதற்கே...........' என்று சொல்லுகின்றார் வியாசர். இப்படித்தான் இந்த உலகம் இயங்கலாம் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23/10/2025 at 17:46, ரசோதரன் said:

பண்டிகைகளும், கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் ஆரம்பத்தில் மக்களை இணைக்கவும், அன்றாட அழுத்தங்களில் இருந்து தற்காலிகமாகவேனும் விடுபடவேனும் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வுகள் போலவே தோன்றுகின்றன. பின்னர் ஒவ்வொருவரும் தங்களின் அரசியல் - மத - குல - இன தேவைகளுக்கு ஏற்ப அவற்றின் மேல் காரணங்களை ஏற்றிவிட்டனர்.

உண்மைதான்.

பகல் குறைந்து இருள் கூடும் காலங்களில் உலகளாவிய ரீதியில் ஏதோ ஒரு மத,இன சம்பவத்தை வைத்து ஒளியேற்றும் நிகழ்வுகளை காண்கின்றோம்.எம்மவருக்கு கார்த்திகை விளக்கு போன்று......

On 23/10/2025 at 17:46, ரசோதரன் said:

அங்கிருந்த ஒரே ஒரு ராவண வாரிசு நான் மட்டும் தான்..................🤣. ஆனாலும் தீபாவளி அன்று இந்தியாவின் ஒரு பகுதியே ராவண வாரிசாக மாறிவிடுவார்கள்...............

நீங்கள் வெடி போட்டால் சிரிச்சு முடிய இரண்டு நாள் எடுக்கும்....😂

On 23/10/2025 at 20:25, ரசோதரன் said:

பீஷ்மர் வியாசருடன் வியாசரின் குடிலின் உள்ளே உரையாடிக் கொண்டிருக்கும் போது, வியாசரின் குடிலின் வெளியே கட்டப்பட்டிருந்த கர்ப்பிணி பசுவை சிங்கம் ஒன்று வந்து இழுத்துச் செல்கின்றது. வியாசர் எதுவுமே செய்யவில்லை. ஆச்சரியமான பீஷ்மர் வியாசரைப் பார்க்கின்றார். 'இங்கு படைக்கப்பட்டது எல்லாமே உண்ணப்படுவதற்கே...........' என்று சொல்லுகின்றார் வியாசர். இப்படித்தான் இந்த உலகம் இயங்கலாம் போல.

கோதாரி விழ..... கிட்டடியிலை மதம் மாறின எங்கடை உந்த ஜெகோவாகாரன்களும் உத தான் சொல்லிக்கொண்டு திரியுறாங்கள்.🤣

செவ்வாய் வெள்ளி கந்தசஷ்டி சனீஸ்வரன் திருவெம்பாவை எண்டு நோ திங்கிங்.....மட்டன் சிக்கன் டெய்லி அமுக்கிங்..😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2025 at 15:40, குமாரசாமி said:

கோதாரி விழ..... கிட்டடியிலை மதம் மாறின எங்கடை உந்த ஜெகோவாகாரன்களும் உத தான் சொல்லிக்கொண்டு திரியுறாங்கள்.🤣

செவ்வாய் வெள்ளி கந்தசஷ்டி சனீஸ்வரன் திருவெம்பாவை எண்டு நோ திங்கிங்.....மட்டன் சிக்கன் டெய்லி அமுக்கிங்..😂

🤣.....................

வியாசர் சொல்லாத, எழுதாத கதை என்று ஒன்று உலகில் இல்லை. எல்லாக் கதைகளையும் அவர் ஒருவரே எழுதிவிட்டார். அந்த ஜெகோவாகாரர்களும் வியாசாரின் கதை ஒன்றையே சொல்லுகின்றார்கள் போல, அண்ணா...................🤣.

மூன்று நேர உணவுக்கும் வழி இருந்தால், அங்கே ஆசாரமும், ஆன்மீகமும் புகும் என்பது போல புதுமைப்பித்தன் ஒரு இடத்தில் சொல்லியிருக்கின்றார். ஏதாவது வயிற்றுக்கு கிடைத்தாலே போதும் என்று வாழ்ந்தது ஒரு காலம், அண்ணா................இன்று சுக்கிலபட்சமும், கிருஷ்ணபட்சமும் சமயலறையில் அமர்ந்திருக்கின்றன....................🤣.

திங்கள் கிழமைக்கும், செவ்வாய் கிழமைக்கும் என்ன வித்தியாசம், ஒரு நாளைக்கும் இன்னொரு நாளைக்கும் என்ன வித்தியாசம்................. 'கயிற்றரவம்' வாசித்திருப்பீர்கள் தானே, அண்ணா.................... ஏதோ முடிந்த அளவுக்கு நம்பி வந்த மனையாளுக்காக திங்களும், செவ்வாயும் வேறு வேறு என்பதை எதிர்த்து வாதாடாமல் காலம் ஓடிக் கொண்டிருக்கின்றது............... மனிதர்களின் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள் அச்சமூட்டுகின்றன, ஆனால் அவர்கள் மிகவும் பிரியமானவர்களாக இருக்கும் போது, கேள்விகளும் உள்ளுக்குள்ளேயே தொங்கி நின்று விடுகின்றன.................

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

🤣.....................

வியாசர் சொல்லாத, எழுதாத கதை என்று ஒன்று உலகில் இல்லை. எல்லாக் கதைகளையும் அவர் ஒருவரே எழுதிவிட்டார். அந்த ஜெகோவாகாரர்களும் வியாசாரின் கதை ஒன்றையே சொல்லுகின்றார்கள் போல, அண்ணா...................🤣.

மூன்று நேர உணவுக்கும் வழி இருந்தால், அங்கே ஆசாரமும், ஆன்மீகமும் புகும் என்பது போல புதுமைப்பித்தன் சொல்லியிருக்கின்றார். ஏதாவது வயிற்றுக்கு கிடைத்தாலே போதும் என்று வாழ்ந்தது ஒரு காலம், அண்ணா................இன்று சுக்கிலபட்சமும், கிருஷ்ணபட்சமும் சமயலறையில் அமர்ந்திருக்கின்றன....................🤣.

திங்கள் கிழமைக்கும், செவ்வாய் கிழமைக்கும் என்ன வித்தியாசம், ஒரு நாளைக்கும் இன்னொரு நாளைக்கும் என்ன வித்தியாசம்................. 'கயிற்றரவம்' வாசித்திருப்பீர்கள் தானே, அண்ணா.................... ஏதோ முடிந்த அளவுக்கு நம்பி வந்த மனையாளுக்காக திங்களும், செவ்வாயும் வேறு வேறு என்பதை எதிர்த்து வாதாடாமல் காலம் ஓடிக் கொண்டிருக்கின்றது............... மனிதர்களின் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள் அச்சமூட்டுகின்றன, ஆனால் அவர்கள் மிகவும் பிரியமானவர்களாக இருக்கும் போது, கேள்விகளும் உள்ளுக்குள்ளேயே தொங்கி நின்று விடுகின்றன.................

அண்ணை, முதலில் இந்த நாட்களுக்கு பெயர் வைக்க ஒரு நாள் முந்தியோ பிந்தியோ இருந்தால் இன்றைய திங்கள் ஞாயிறாகவோ அல்லது செவ்வாயாகவோ இருந்திருக்கலாம்!🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

அண்ணை, முதலில் இந்த நாட்களுக்கு பெயர் வைக்க ஒரு நாள் முந்தியோ பிந்தியோ இருந்தால் இன்றைய திங்கள் ஞாயிறாகவோ அல்லது செவ்வாயாகவோ இருந்திருக்கலாம்!🤔

🤣.......................

ஆத்திகமும், நாத்திகமும் தான் அடிப்படை வித்தியாசம், நாளும் கோளும் அல்ல என்று சொல்வார்கள் போல...............

ஆத்திகர்களுக்கும், நாத்திகர்களுக்கும் இடையில் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை என்று ஒரு பகிடியைச் சொல்லுவார்கள்..................... இதுவரை பூமியில் வந்து போன, இன்னும் இருக்கின்ற கடவுள்களின் எண்ணிக்கை 7000 என்றால், ஆத்திகர்கள் அதில் 6999 கடவுள்கள் பொய்யென்றும், ஒரு கடவுள் உண்மை என்றும் சொல்லுகின்றார்கள்................ நாத்திகர்கள் 7000 கடவுள்களும் பொய்யென்று சொல்லுகின்றார்கள்.................. 1/7000 வித்தியாசம்............

இப்படியே எல்லாவற்றையும் கதைத்துக் கொண்டு இருக்க, கடைசியாக கயிற்றை மிதித்து தான் காலம் முடியும் போல..................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிகைக்காலத்திக்கேற்ற பதவிசான கவிதை ..........!

சுமார் 1975 க்கு முன்வரையான சில நிகழ்வுகள் நினைவில் நீந்துகின்றன ........!

அன்று நாங்கள், எம்போன்ற மத்தியதர வர்க்கம் ஆட்டிறைச்சி சாப்பிடுவதென்றால் தீபாவளி போன்ற பண்டிகைகள் , கோவில் வேள்விகள் , யாராவது இறந்துபோனால் "சிலவு" நாட்களில்தான் கிடைக்கும் ........அப்போது கடைகளில் இறைச்சி வாங்கும் பழக்கமும் இல்லை ......மாட்டிறைச்சி..... ம்கூம் .....மூச் ........ கோழி இறைச்சி அப்பப்ப மற்றும் உறவினர் வரும்போதும் கிடைக்கும் .......அக்காலத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாதபடியால் அவை தளும்ப தளும்ப இறைச்சியையும் முட்டைகளையும் சுமந்து கொண்டு முற்றத்தில் உலாவித் திரியும் . ........!

ஆகையால் நான் வேள்விகளுக்கு எதிரானவன் அல்ல .........கிடாய் வளர்ப்பதே விருந்தோம்பலுக்கும், வேள்விகளுக்கும்தான் ........எப்படி பூசி மொழுகினாலும் இன்றும்கூட இதுதான் யதார்த்தம் . .....!

எப்படிக்கொல்வது..... கோவில்களில் ஒரே வெட்டில் முடிந்துவிடும் .......மற்றும்படி இதற்காக ஒரிருவர் டிப்பிளோம் எடுத்து ஆங்காங்கே வசித்தார்கள் . ..... சிலர் வாய்க்குள் உப்பு போன்ற எதையாவது திணித்துவிட்டு மூச்சுத்திணற பிடித்து கொல்வார்கள்...... அடுத்து அதை சாப்பிட இலைகுலை குடுத்து பாரமான இரும்பால் தலையில் ஒரே அடி ......அதன்பின் அதன் தோல் உரிப்பது ஒரு கலை .......காலில் குறிப்பிட்ட இடத்தில் கொஞ்சம் வெட்டி விட்டு அதனுள் காற்றை செலுத்த மாற்றர் பலூன்போல பெரிதாக உப்பிக்கொண்டு வந்திருக்கும் பின் சுலபமாய் உரித்து விடுவார்கள் . ......இப்போது அவர்களும் தாம் கொன்ற சீவன்களைத் தேடிப் போய்விட்டார்கள் ..........! 😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, suvy said:

கோழி இறைச்சி அப்பப்ப மற்றும் உறவினர் வரும்போதும் கிடைக்கும் .......அக்காலத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாதபடியால் அவை தளும்ப தளும்ப இறைச்சியையும் முட்டைகளையும் சுமந்து கொண்டு முற்றத்தில் உலாவித் திரியும் . ........!

❤️...................

எனக்கு பத்து வயதளவில் இருக்கும் போது வீட்டில் ஒரு கோழி வாங்கிக் கொடுத்தார்கள். அப்பொழுது மூன்றோ நாலு மாதக் குஞ்சு. மஞ்சள் நிறத்தில் வெள்ளை வெள்ளைப் புள்ளிகள் போட்டது. இன்றுவரை வாழ்நாளில் நான் கண்டவற்றில் மிக அழகானவற்றில் இதுவும் ஒன்று.

இந்த கோழியிலிருந்து எத்தனையோ கோழிகளை உருவாக்கினோம். ஆரம்பத்தில் கமபர்மலைப் பகுதிக்கு போய் அடைக்கு முட்டைகள் வாங்கியதை தனிக் கதையாகவே எழுதலாம். அப்பொழுது அங்கு பலர் முட்டைகளை குலுக்கிவிட்டே கொடுப்பார்கள்...............😒.

தளும்ப தளும்ப இறைச்சியையும் முட்டைகளையும் சுமந்து கொண்டு முற்றத்தில் உலாவித் திரிந்தது இந்த 'ஆதித்தாய்' எங்கள் வீட்டில் அன்று.......................

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி வருவதற்கு 4-5 நாட்கள் முதலே ஊரில் இருந்த பெயர் போன குடிகாரர்(எல்லாமே உறவுக்காரர்)தீபாவளிக்கு ஆடடிக்க போறம் ஒரு பங்கு 10 ரூபா எத்தனை பங்கு வேண்டும் என்று வருவார்கள்.

வீட்டுக்காரரும் அனேகமாக ஒரு பங்கு என்று சொல்லிவிடுவார்கள்.

இவங்கள் தானே குடிகாரர் உலகத்துக்கு உதவாத ஆட்கள் என்று சொல்லுவீர்களே ?

இவர்களை நம்பி எப்படி இறைச்சிக்கு பணம் கொடுத்தீர்கள் என்றால் கதை இல்லை.

அனேகமான நாட்களில் பனை ஓலையால் சுற்றப்பட்ட இறைச்சி வரும்.

பணத்தோடு காணாமல் போன ஓரிரு நாட்களும் உண்டு.

எமதூரில் தீபாவளிக்கு மாத்திரமல்ல அடிக்கடி பங்கு ஆடு அடிப்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.