Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார். 

குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில், காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். அந்த விளையாட்டில் பணம் கட்டுவதற்காக மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி , அதனை செலுத்தி விளையாடி வந்துள்ளார். 

இந்நிலையில் கடன் தொகை அதிகரித்த போது , கடன் கொடுத்தவர்கள், இளைஞனின் வீட்டாருக்கு பணம் கேட்டு நெருக்கடியை கொடுத்த வேளை வீட்டார் தமக்கு சொந்தமான காணி ஒன்றினை விற்று கடனை அடைத்துள்ளனர். 

இந்நிலையில், தற்போதும் இளைஞன் பப்ஜி விளையாட்டுக்காக பெருந்தொகை பணத்தினை மீட்டர் வட்டிக்கு வாங்கி செலவழித்துள்ள நிலையில் , கடன் கொடுத்தவர்கள் வீட்டாருக்கு நெருக்கடி கொடுத்த போதிலும் , வீட்டார் இம்முறை கடனை செலுத்த மறுத்ததால் , இளைஞன் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார். 

உயிர்மாய்க்க முயன்ற இளைஞனை வீட்டார் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் இளைஞன் சிகிச்சை பெற்று வருகின்றார். 


மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
On 28/10/2025 at 13:56, பிழம்பு said:

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார். 

குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில், காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். அந்த விளையாட்டில் பணம் கட்டுவதற்காக மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி , அதனை செலுத்தி விளையாடி வந்துள்ளார். 

இந்நிலையில் கடன் தொகை அதிகரித்த போது , கடன் கொடுத்தவர்கள், இளைஞனின் வீட்டாருக்கு பணம் கேட்டு நெருக்கடியை கொடுத்த வேளை வீட்டார் தமக்கு சொந்தமான காணி ஒன்றினை விற்று கடனை அடைத்துள்ளனர். 

இந்நிலையில், தற்போதும் இளைஞன் பப்ஜி விளையாட்டுக்காக பெருந்தொகை பணத்தினை மீட்டர் வட்டிக்கு வாங்கி செலவழித்துள்ள நிலையில் , கடன் கொடுத்தவர்கள் வீட்டாருக்கு நெருக்கடி கொடுத்த போதிலும் , வீட்டார் இம்முறை கடனை செலுத்த மறுத்ததால் , இளைஞன் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார். 

உயிர்மாய்க்க முயன்ற இளைஞனை வீட்டார் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் இளைஞன் சிகிச்சை பெற்று வருகின்றார். 


மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில் | Virakesari.lk

573628946_1403210438037420_5881735697825

பப்ஜி விளையாட்டு தோல்வியால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வலி கிழக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அகிப் சிவகுமார் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

நம்ம யாழ்ப்பாணம்

இவன் போன்றவர்களை உறுப்பினராக்கிய மக்கள் முட்டாள்கள்.

Ilango Mahendra

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன பப்ஜி விளையாட்டு .........! 😗

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

573628946_1403210438037420_5881735697825

யாழ்ப்பாணம் வலி கிழக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அகிப் சிவகுமார் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

இவன் போன்றவர்களை உறுப்பினராக்கிய மக்கள் முட்டாள்கள்.

மக்கள் பிழைத்து கொண்டார்கள் 😡

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

அதென்ன பப்ஜி விளையாட்டு .........! 😗

508533.jpg

images?q=tbn:ANd9GcTv_48rYvOkzWKxXSnKKB1

pubg-1559375557.jpg

பப்ஜி (PUBG) என்பது PlayerUnknown's Battlegrounds என்பதன் சுருக்கமாகும். இது ஒரு ஆன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு ஆகும், இதில் 100 வீரர்கள் ஒரு தீவில் இறங்குகிறார்கள். கடைசியாக நிற்கும் வீரரே வெற்றி பெறுவார். இந்த விளையாட்டில், வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களைத் தேடி, எதிரிகளை வீழ்த்த வேண்டும். 

  • விளையாட்டின் நோக்கம்: ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைச் சேகரித்து, எதிரிகளை வீழ்த்தி, கடைசியாக உயிர் பிழைத்தவராக இருக்க வேண்டும்.

  • விளையாட்டு முறை: வீரர்கள் ஒரு பெரிய வரைபடத்தில் இறங்கி, விளையாட்டின் போது கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி எதிரிகளைத் தேடி அவர்களை வீழ்த்த வேண்டும்.

  • விளையாட்டு அனுபவம்: பல வீரர்கள் ஒரே நேரத்தில் ஆன்லைனில் விளையாடும் அனுபவத்தை இது வழங்குகிறது.

  • விளையாட்டு வகைகள்: இது பல வடிவங்களில் கிடைக்கிறது, இதில் மொபைல், பிசி மற்றும் கன்சோல் பதிப்புகள் அடங்கும்.

  • விளையாட்டின் அடிப்படை: இது 2000 ஆம் ஆண்டில் வெளியான பேட்டில் ராயல் என்ற ஜப்பானியத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. 

    நன்றி: கூகிள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

மக்கள் பிழைத்து கொண்டார்கள் 😡

எப்படிப் பட்ட கிறுக்கன்களை எல்லாம், யாழ் மக்கள் தமது பிரதிநிதியாக தேர்ந்து எடுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது.

பெருமையாக வாழ்ந்த தமிழ்ச் சமூகம்... இன்று பலரின் நகைப்புக்கு இடமாகி விட்டது. இது எங்கு போய் முடியப் போகுதோ.... 😭

3 hours ago, suvy said:

அதென்ன பப்ஜி விளையாட்டு .........! 😗

நீங்க வேற விளையாட்டு ஒன்றைத்தானே நினைத்தீர்கள்?😀

1 hour ago, தமிழ் சிறி said:

எப்படிப் பட்ட கிறுக்கன்களை எல்லாம், யாழ் மக்கள் தமது பிரதிநிதியாக தேர்ந்து எடுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது.

ஒரு பைத்தியரையே தம் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கே அனுப்பிய மக்கள் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

ஒரு பைத்தியரையே தம் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கே அனுப்பிய மக்கள் அல்லவா?

பைத்தியர்... பாராளுமனத்துக்குள் நுழையும் மட்டும், கொஞ்சம் ஒழுங்காக.. மக்கள் பிரச்சினை சம்பந்தமாக அதிரடியாக களத்தில் இறங்கி குரல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தவர். அது தொடரும் என்ற நம்பிக்கையில்... மக்கள் வாக்களித்து அனுப்பினார்கள் என கருதுகின்றேன்.

அவர்.... பாராளுமன்றத்துக்குள் நுழைந்த முதல் நாளே... எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து, அடாவடி பண்ணும் போதே... அவருக்கு ஏதோ சுகயீனம் இருக்கு என்று நாட்டு மக்கள் அறிந்து கொண்டார்கள். 🤣

இனி ஒரு தேர்தலில்... இவர் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என்பது சந்தேகமே.

ஆனாலும்... எங்களது மக்களை நம்பி, எதுவும் உறுதியாக கூற முடியாது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

எப்படிப் பட்ட கிறுக்கன்களை எல்லாம், யாழ் மக்கள் தமது பிரதிநிதியாக தேர்ந்து எடுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது.

பெருமையாக வாழ்ந்த தமிழ்ச் சமூகம்... இன்று பலரின் நகைப்புக்கு இடமாகி விட்டது. இது எங்கு போய் முடியப் போகுதோ.... 😭

தலையற்ற மக்கள் கூட்டம்....😭

  • கருத்துக்கள உறவுகள்

போய்ச்சேர்ந்தான் நண்பனும் முன்னாள் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான அகீபன்!!!

அவன் இறந்துவிட்டான்

தற்கொலை முயற்சி செய்து வைத்தியசாலையில் அனுமதித்து மீண்டெழ போராடுகையில் இறுதியில் காலன் தான் வென்றான்.

அவன் தற்கொலைக்கு பின்னால் இன்றைய சமூக ஊடகங்கள் தீயாய் பரவுகின்ற செய்தியாக "பப்ஜீ" கேம் விளையாட்டிற்கு அடிமையாகி பண இழப்பினால் உயிர்மாய்த்தான் என்று.

ஆனால் நாம் உண்மையையும் ஆராய்ந்து இவன் தற்கொலைக்கு பின் எம் சமூகத்தில் இப்படி இனியொரு ஆபத்து ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வூட்டுவதும் அவசியம் அல்லவா!

அகீபன் நல்ல பண்பான குணமுள்ள நண்பன். யாருக்கு உதவி என்றாலும் முன்நிற்பவன், "அண்ண அண்ண" என எப்போதும் அரசியல் ரீதியாகவோ நட்புரீதியாகவோ பேசும் போது அவன் அழைக்கும் வார்த்தைகள் ( எப்போதும் என் பேர் சொல்லி அவன் அழைத்ததில்லை), ஓர் சிறந்த கிரிக்கெட் வீரன், இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் போட்டிகளை நிகழ்த்தி அவர்களை வேறுபாதைகளுக்குள் உள்நுழைய விடாமல் பார்த்து கொண்டவன். பெரியவர்களுக்கு மதிப்பளிக்கும் ஓர் பண்பாளன். இலங்கை மின்சார சபையின் ஓர் உத்தியோகத்தன்.

விளையாட்டு வீரனாக இருப்பவன் அதுவும் மக்கள் பிரதிநிதியாக தலைமைத்துவ பண்பு கொண்டவன் ஏன் இப்படி தற்கொலை செய்யும் எண்ணுமளவு பலவீனமாகி போனான் என்பதை யோசிக்கையில் அவனின் இறப்பு செய்தி கேட்டதும் இரா நித்திரைகள் தொலைத்தேன்! முன்மாதிரியாக திகழ்ந்தவன் ஏன் இப்படி ஓர் முடிவெடுத்தான் என அதிர்ந்தே போனேன்.

ஆக எம் சமூகத்தின் மத்தியில் பல அடிமைத்தனமான விடயங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றினை பொதுவெளிக்கு கொணர்ந்து சமூகத்தை விழிப்புணர்வடைய செய்ய வேண்டும்.

நண்பன் அகீபனின் தற்கொலைக்கு " பப்ஜீ" வீடியோ கேமிற்கு அவன் அடிமையானதாகவும் அதற்காக அதிக பணம் கடன்பட்டு இழந்ததாகவும் அதனால் தான் தற்கொலைக்கு முயன்றான் என்பது தான் சமூக ஊடகங்கள் பூராகவும் கொட்டி கிடக்கின்றன.

அவன் இறப்பின் பின் பல நண்பர்களோடு கலந்துரையாடியதன் விளைவாக அவன் எதற்கு உண்மையில் அடிமையாகியிருந்தான் என்பது வெளிச்சமாகியது.

அவன் கிரிக்கெட் வீரன், கிரிக்கெட்டை ஆழமாக நேசித்தவன், பல உள்ளூர் வெளியூர் மட்ட கிரிக்கெட் சுற்று போட்டிகளை முன்நின்று நடாத்தியவன். அந்த கிரிக்கெட் எனும் போதையே அவனுக்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஆம்!

உள்ளூர் மட்டங்களில் தற்போது பிரபலமாக நடைபெறும் கிரிக்கெட் சுற்றுபோட்டிகளில் தானும் ஓர் அணியை தயார் செய்து அந்த அணியை லட்சம் ரூபா செலவு செய்து "ஸ்பான்சர்" எடுத்து விளையாட விடுவதும் அவன் பழக்கமாக இருந்திருக்கிறது. அதாவது அந்த போட்டிகளில் தான் ஸ்பான்சர் பண்ணிய அணி வெல்லும் என்ற நோக்கில் அதை ஸ்பான்சர் பண்ணினால் போட்ட பணத்தை விட அதிகமாக கிடைக்கும் என்ற நோக்கமும், அதைவிட கிரிக்கெட் மீதான மோகமுமே ஆகும்.

ஸ்பான்சர் என்றால் சாதாரண விடயமல்ல அந்த அணிக்கு ரீசேட் அடிப்பது, பனர் அடிப்பது, சப்பாத்துக்கள், பந்துகள், மட்டைகள் தொடக்கம் உணவு சிற்றுண்டி எல்லாமே பொறுப்பேற்க வேண்டுமானால் அதன் செலவு இலட்சங்களை தாண்டும். போட்டியில் அணி தோற்றால் அந்த பணம் இல்லாமல் போகும். ஆக கடன் படவேண்டி வரும்.

இப்படி பல கிரிக்கெட் அணிகளினை ஸ்பான்சர் பண்ணியும் பணம் இழந்துருக்கிறான்.

அதவிட இன்னொன்று

கிறிக்கெட் மேலான அதீத ஈடுபாடும் மோகத்தினால் ஒன்லைன் கிறிக்கெட் பந்தயங்களில்(கிறிக்கெட் சூதாட்டம்) பல லட்சங்களில் பணங்களை போட்டு பங்குபற்றியிருக்கிறான். இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் கிறிக்கெட் போட்டிகளில் யார் வெல்வார்கள் தோற்பார்கள் என்ற பல ஒன்லைன் பந்தயங்களில் பணத்தினை லட்சக்கணக்கில் போட்டுவிட்டு அந்த போட்டியை விடாது பார்த்துகொண்டுமிருப்பானாம். அந்த ஒன்லைன் சூதில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்து பணமும் இட்டியிருக்கிறான் அந்த மோகத்தில் இன்னும் பல இலட்சம் பணங்களினை ஒன்லைன் கிரிக்கெட் சூதில் போட்டிருக்கிறான். அது தான் அவனுக்கு விபரீதமாயிருக்கிறது .

ஒரு போட்டியில் வென்றால் அடுத்ததில் பெற்றுவிடலாம் என்பது போல, அதாவது மகாபாரதத்தில் பாண்டவர்கள் சூதில் தோற்றுகொண்டிருக்க எல்லாம் இழந்த பின் இறுதியில் ஒன்றுமே இல்லை என்ற நிலை வந்த பின் தம் மனைவியான திரெளபதையினையே சூது வைக்கும் அளவிற்கு அந்த சூதாட்டம் மிக கொடியது.

அப்படி தான் இவனும் அடுத்ததில் பெறலாம் பெறலாம் என கடன் பட்டு கடன் பட்டு கிறிக்கெட் சூதில் முதலிட்டிருக்கிறான்.

அந்த விளையாட்டு வினையாகி போகவே எப்படி மனைவியை சூது வைத்தும் மானமும் மண்ணும் இழந்து பாண்டவர்கள் நிர்க்கதியானார்களோ! அதுபோல அகீபனும் தன் பணத்தினையும், வீட்டார் பணத்தினயும், அதுபோக பல லட்சங்களில் கடன் பட்டும் ஈடுபட்ட கிறிக்கெட் சூதாட்டத்தில் எல்லாமுமே இழந்தான்.

அதனால் எல்லாம் இழந்தவனாக தற்கொலைக்கு துணிந்துவிட்டான். இப்போது இறந்தும் விட்டான்.

ஓர் விளையாட்டு வீரன் உடலளவிலும் மனதளவிலும் எவ்வளவு உறுதியாக இருப்பான். ஆனால் அவனை இந்த ஒன்லைன் சூது விளையாட்டு அடிமையாக்கி அழித்தொழித்து விட்டது.

கடந்த மாதமும் யாழ் போதனா வைத்தியசாலையில் ஓர் இளைஞன் ஒன்லைன் கிரிப்ரோ கரன்சியில் பல கோடி முதலிட்டு நட்டமாகி தற்கொலை செய்து ஒரு மாதத்திற்குள் அடுத்த ஒன்லைன் சூது மரணம். அதுவும் ஓர் பிரதேச சபை உறுப்பினராக இருந்த தலைமைத்துவ பண்பு கொண்டவன் தற்கொலை செய்திருக்கிறான் என்றால் இந்த ஒன்லைன் வியாபாரங்கள் எவ்வளவு எம்மை அடிமைப்படுத்தி பணம் பொருள் உயிர் என எல்லாம் பறித்துவிடும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

எம் சிறுவர் பராய சமூகமும் ,இளைஞர் சமூகமும் விழிப்புணர்வடைய வேண்டும் , விழிப்புணர்படைய செய்ய வேண்டும் என்பது அத்தியாவசிதமான ஒன்று.

பெற்றோர்களே!

ஒரு போதும் உங்கள் பிள்ளைகளுக்கு வீடியோ கேம் விளையாட அனுமதிக்காதீர்கள்! அவர்களை சின்ன பராயத்தில் இருந்தே கல்விக்கு புறம்பாக கிரிக்கெட்டோ/ உதைபந்தோ/ கரப்பந்தோ/ கூடைப்பந்தோ/ மேசைப்பந்தோ/பூப்பந்தோ/ நீச்சலோ/ கராத்தையோ/ செஸ் போன்ற இணைவிதான விளையாட்டுகளில் ஈடுபட வையுங்கள். அத்தோடு பாடல்/ நடனம்/ சித்திரம்/இசை போன்ற கலைத்துறைகளில் அவர் அவர் திறமைக்கு ஏற்றால் போல சின்ன வயசில் இருந்தே இணைத்து விடுங்கள். (சும்மா ஒரே பாடத்திற்கு ஒன்பது இடத்திற்கு ரீயூசன் ஏத்தி இறக்காமல்) அப்போது தான் அவர்கள் தேவையில்லா வீடியோ கேம்களில் ஆரவம் காட்ட மாட்டார்கள். போதைபொருளுக்கும் அடிமையானவர்களாக மாற மாட்டார்கள்.

அதைவிட எம் அன்பான இளம் தலைமுறை நண்ப நண்பிகளே!

ஒருபோதும் ஒன்லைன் கிரிப்டோ கரன்சிகளில் முதலிட வேண்டாம், ஒன்லைன் சூது விளையாட்டுகளில் பெரும் பணம் போட்டு விளையாட வேண்டாம். பிறகு பணம், சொத்து, மரியாதை, உறவு, உயிர் என எல்லாவற்றையும் இழக்க வேண்டி வரும்.

அதற்கு தான் யாழில் இடம்பெற போதனா வைத்தியசாலை ஊழியர் கிரிப்டோகரன்சியால் தற்கொலை செய்தமை. தற்போது அகீபன் எனும் ஆளுமை ஒன்லைன் கிரிக்கெட் சூதாட்டம் மூலம் தற்கொலை புரிந்தமை உதாரணங்களாக அமைகின்றன.

மேற்சொன்ன இருவரும் வட்டிக்கு கடன்பட்டு கோடிகளில் ஒன்லைனில் போடாமல் அதை நிலமாக/ தங்கமாக வாங்கி வைத்திருந்தால் கூட இப்போது கடன் காரன் கேட்டால் கூட கடனை அடைத்து விட்டு நின்மதியாக இருக்கலாம்.

கண்ணுக்கு தெரிந்த முதலீடுகளில் முதலிடுங்கள். உங்கள் கண்ணுக்கு புலப்படா ஒன்லைன் வியாபரங்களில் பணம் போடாதீர்கள், அதைவிட கடன் வாங்கி பணம் போடாதீர்கள்.

யாழ்பாணத்தில் ஒன்லைன் வியாபாரத்தினால் போன கடைசி உயிராக அகீபனின் உயிர் இருக்கட்டும். இன்னொருமுறை கல்விக்கும் புத்திசாலித்தனத்திற்கும் பேர்போன யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு துர்சம்பவம் நிகழாதிருக்க அனைவரும் விழிப்புணர்வோடு செயலாற்றுவோம்.

ஓம் சாந்தி

மதுசுதன்

29.10.2025

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நீங்க வேற விளையாட்டு ஒன்றைத்தானே நினைத்தீர்கள்?😀

ஆம் ஆனால் ........ஒரு சமூகத்தின் பிரதிநிதி அவ்வளவுக்கு நான் நினைத்த மாதிரி பகிரங்கமாய் தரம் தாழ்ந்து போகமாட்டார் என்று நினைத்தேன் ......!

இப்ப விளங்கீட்டுது இந்த விளையாட்டு . ........கானல் நீரை நம்பி கட்டு கட்டாய் பணமிழந்து கடன்பட்டும் தொலையாததாய் தொல்லை கொடுக்கும் ஒன்றென்று ........!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30/10/2025 at 14:12, விசுகு said:

தலையற்ற மக்கள் கூட்டம்....😭

தரமான ஒற்றை வரி கருத்து விசுகர்!👈 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.