Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 3

31 Oct, 2025 | 11:42 AM

image

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இருந்து துப்பாக்கி மகசீன்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரைக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிரதேச பத்திரிகை ஒன்றின் 2005ஆம் ஆண்டு வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் ,  இரண்டு துப்பாக்கி மகசீன்கள் மற்றும் வயர் துண்டு என்பவற்றை நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊழியர்கள் கண்டுள்ளனர். 

அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை, அடுத்து, நிர்வாகத்தினர் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர். 

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியுடன் இரண்டு மகசீன்களையும் வயர் துண்டையும் மீட்டனர். 

இரண்டு மகசீன்களுக்குள்ளும் 59 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும், மீட்கப்பட்ட வயர் துண்டு 05 நீளமுடையது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மீட்கப்பட்ட மகசீன் மற்றும் துப்பாக்கி ரவைகள் குறித்து நீதிமன்றுக்கு அறிவித்து, மன்றில் அறிவுறுத்தலுக்கு ஏற்பட அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

அதேவேளை பல்கலைக்கழக வளாகத்தினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பதால் , பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

https://www.virakesari.lk/article/229118

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் முஸ்தீபு - தமிழை கொல்கிறார்கள்.

நூறாண்டு கால பாரம்பரியம் உள்ள வீரகேசரி எழுதும் தலையங்கம் இந்த கேவலத்தில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

573543036_2526724281033139_2766709223393

574109279_2526724334366467_1608255107747 572264482_2526724374366463_8455964470609

573542650_2526724424366458_1145633830057

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் கூரையிலிருந்து ரி-56 துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிப்பு..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளதால், மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நேற்று (30) இரண்டு மெகசின்களும வயர்களும் முதலில் அடையாளம் காணப்பட்டன.

இதையடுத்துப் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

குறித்த பொருட்களைப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இன்று காலை அகற்றினர்.

பின்னர் மீண்டும் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடந்தபோது, அதன் அருகில் ரி-56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், வயர்கள் உள்ளிட்ட சில மருத்துவப் பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பொலிஸாருக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில், அப்பகுதியை முழுமையாகச் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Sakthi FM 

  • கருத்துக்கள உறவுகள்

2005 பேப்பரில் சுற்றி உள்ளது எண்டால் - இது அந்தகாலத்தில் பதுக்கி வைத்ததாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

2005 பேப்பரில் சுற்றி உள்ளது எண்டால் - இது அந்தகாலத்தில் பதுக்கி வைத்ததாய் இருக்கும்.

இந்த சோதனை நவம்பர் 27 வரை தொடரும் ....அதுவும் ஆள் நுழையமுடுயாத வலையமாக பிரகடனப் படுத்தப்பட்டு..

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, alvayan said:

இந்த சோதனை நவம்பர் 27 வரை தொடரும் ....அதுவும் ஆள் நுழையமுடுயாத வலையமாக பிரகடனப் படுத்தப்பட்டு..

ம்ம்ம்…புரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரம் வருகிறதாம் இந்தக்கதையை நம்பட்டாம். யார் திட்டமிட்டு செய்கிறார்களோ, அவர்கள் ஒரு கல்லில் பல மாங்காய்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலை கழக மணவர் தங்கும் விடுதியில் துப்பாக்கிகள் மீட்பு . முஸ்லீம் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு மேல் பகுதியில் இருந்து ரி56 வகை துப்பாக்கிகளும் சில வெடி பொருட்களும் மீட்பு.

இவ்வாறு இந்த செய்தி அமைந்திருந்தால் இங்கு கருத்துக்கள் எவ்வாறு அமைந்திருக்கும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

யாழ் பல்கலை கழக மணவர் தங்கும் விடுதியில் துப்பாக்கிகள் மீட்பு . முஸ்லீம் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு மேல் பகுதியில் இருந்து ரி56 வகை துப்பாக்கிகளும் சில வெடி பொருட்களும் மீட்பு.

இவ்வாறு இந்த செய்தி அமைந்திருந்தால் இங்கு கருத்துக்கள் எவ்வாறு அமைந்திருக்கும். 😁

அதுதானே அநியாயமாக பழி போட்டிருப்பார்கள். முஸ்லீம்களுக்கு வெடிகுண்டு துப்பாக்கி என்றால் என்னவென்றே தெரியாது என்று செத்துபோன சஹ்ரானில் இருந்து கமாஸ் ஹிஸ்புல்லா, தலீபான்வரை சொல்லியிருக்காங்க.

  • கருத்துக்கள உறவுகள்

பழுதுபார்க்கும் பணியில் வெளியான மர்மம் - காவல்துறை விரிவான விசாரணை

03 November 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் யுத்தக் காலத்தில் இருந்தே அங்கு இருந்திருக்கலாம் என காவல்துறை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். 

பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் கூரைக்கு அடியில் இந்த ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டமை குறித்து காவல்துறை ஊடகப் பேச்சாளர், எப்.யூ. வூட்லரிடம் எமது செய்தி சேவை வினவியது. 

இதற்கு பதிலளித்த அவர், குறித்த ஆயுதங்கள் நீண்டகாலமாக, குறிப்பாக, யுத்தக் காலத்தில் இருந்தே அங்கு இருந்திருக்கலாம் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். 

முன்னதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் கூரைக்கு அடியில் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் கோப்பாய் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளது.

இதனையடுத்து, 31 ஆம் திகதி காலை காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் குறித்த பொருட்களை மீட்டனர். 

அத்துடன், மேலதிக பழுதுபார்க்கும் பணிகளின் போது, நூலகத்தின் கூரையின் அருகிலுள்ள ஒரு பகுதியில், மேலும் ஒரு டி56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், வெடிமருந்துகள் மற்றும் பல மருத்துவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

இந்த நிலையில், அங்கு மேலும் ஆயுதங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால், காவல்துறையும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.

https://hirunews.lk/tm/428703/mystery-revealed-during-repair-work-police-conduct-detailed-investigation

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.