Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 3

09 Nov, 2025 | 12:20 PM

image

சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா சனிக்கிழமை (08) அமெரிக்காவைச் சென்றடைந்தார். 

அமெரிக்கா அவரை பயங்கரவாத தடுப்புப்பட்டியலில் இருந்து நீக்கிய ஒரு நாளுக்குப் பின்னர் அமெரிக்காவைச் சென்றடைந்தார் என சிரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் நீண்டகால ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்தை பதவி நீக்கம் செய்த கிளர்ச்சிப் படைகளின் தலைவரான அல்-ஷாரா, திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

1946 ஆம் ஆண்டு சிரியா சுதந்திரம் பெற்றதன் பின்னர் சிரிய ஜனாதிபதி ஒருவர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

செப்டம்பர் மாதம் நியூயோர்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அல்-ஷாரா உரையாற்றினார்.

மே மாதம் ட்ரம்பின் மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தின் போது இடைக்காலத் தலைவர் ட்ரம்பை முதன்முறையாக ரியாத்தில் சந்தித்தார்.

இந்த மாத தொடக்கத்தில், சிரியாவிற்கான அமெரிக்க தூதர் டாம் பராக், அல்-ஷாரா இஸ்லாமிய அரசுக்கு எதிரான சர்வதேச அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் "நம்பிக்கையுடன்" கையெழுத்திடும் என தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அல்-ஷாராவை உலகளாவிய பயங்கரவாதி பட்டியலில் இருந்து நீக்க அமெரிக்க வெளிவிவகார அமைச்சு  எடுத்த தீர்மானம் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயமாகும்.

https://www.virakesari.lk/article/229897

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” - சிரியா ஜனாதிபதியிடம் கேட்ட ட்ரம்ப் 

13 Nov, 2025 | 04:09 PM

image

“உங்களுக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள்” என சிரியா ஜனாதிபதி அகமது அல்ஷராவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டது, தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

சிரியா ஜனாதிபதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்துள்ளார். 

இந்த சந்திப்பின்போது, சிரியா ஜனாதிபதிக்கு வாசனைத் திரவியமொன்றை ட்ரம்ப் பரிசாக வழங்கியுள்ளார். 

அவ்வேளை, “இது ஆண்களுக்கான வாசனைத் திரவியம்” என்று ட்ரம்ப கூறிவிட்டு, அந்த வாசனைத் திரவியத்தை சிரியா ஜனாதிபதி மீது தெளித்திருக்கிறார். 

“இது மிகச் சிறந்த வாசனைத் திரவியம்” என்றும் “மற்ற வாசனைத் திரவியங்கள் உங்கள் மனைவிக்கானது. உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” என்று ட்ரம்ப், கேட்க, அதற்கு சிரியா ஜனாதிபதி, “ஒன்றே ஒன்றுதான்” என்று பதிலளித்துள்ளார். 

அப்போது சுற்றியிருந்த தலைவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்துள்ளது. 

அத்துடன், இந்த சந்திப்பின்போது அகமது அல்ஷராவும் ட்ரம்புக்கு பல அடையாளப் பரிசுகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

பண்டைய சிரிய நாட்டுக் கலைப்பொருட்களின் பிரதிகள், குறிப்பாக, அந்நாட்டின் முதல் எழுத்துக்கள், முதல் முத்திரை, முதல் இசைக் குறிப்பு, முதல் சுங்க வரி போன்றவற்றின் குறிப்புப் பிரதிகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

https://www.virakesari.lk/article/230259

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” - சிரியா ஜனாதிபதியிடம் கேட்ட ட்ரம்ப் 

தன்னைவிட கூடுதலாக வைத்திருக்கிறாரோ என்ற ஏக்கமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

திறைமையாக காய் நகர்தினால் ஒரு முன்னால் அல்கொய்தா உறுப்பினரும் வெள்ளை மாளிகையில் போய் செண்ட் அடி வாங்கலாம். இல்லாவிட்டால் ஷெல் அடிதான் வாங்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

திறைமையாக காய் நகர்தினால் ஒரு முன்னால் அல்கொய்தா உறுப்பினரும் வெள்ளை மாளிகையில் போய் செண்ட் அடி வாங்கலாம். இல்லாவிட்டால் ஷெல் அடிதான் வாங்கலாம்.

இங்கே திறமையாக காய் நகர்த்துவது அமெரிக்கா மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலாவது வெங்காயமாவது ........ தலைவர் எப்போதும் காரியத்திலேயே கண்ணாய் இருக்கின்றார் . .......! 😂

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இங்கே திறமையாக காய் நகர்த்துவது அமெரிக்கா மட்டுமே.

அவர்கள் எப்போதும் அப்படித்தான்.

ஏனையோர் ஒத்து ஓடுகிறார்களா, பாத்து ஓடுகிறார்களா, குறுக்கால ஓடுகிறார்களா என்பதை பொறுத்து அவர்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

இங்கே திறமையாக காய் நகர்த்துவது அமெரிக்கா மட்டுமே.

முன்பு ஒரு திரியில் ( ஈரானில் குண்டுவீச்சு என்று நினைக்கிறன்) ரசோதரன் ஈரான் பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கிறது அப்படி மேற்கு நாடுகள் ஏதாவது ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகள் வைத்திருக்கிறார்களா? என்று மேற்கிற்கு முண்டு கொடுத்து இருந்தார் நான் வாசித்து சிரித்துவிட்டு போனேன்.

மேற்கு இல்லையென்றால் உலகில் பயங்கரவாதமே இல்லை அல்கைதா முதல் கொண்டு ஐஸ்ஸ் வரை உருவாக்கி வளர்த்து எடுத்து முஸ்லீம் நாடுகளில் போரை உண்டுபண்ணி முஸ்லிம்களை கொலை செய்வதே இவர்கள் வேலை. சிரிய போர் தொடங்கியபோது அப்போதைய செனட்டர் மக் கெய்யின் ( Mc Cain) தலைமையில் இவர்களை துருக்கியில் சந்தித்து அந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்த்தது அதில் இவரும் இருக்கிறார்.

ஐஸ்ஸ் வைத்திருந்த அனைத்து டொயட்டா தந்த்ரா ( Toyota Tundra + Tacoma ) பிக்கப் வாகனங்களும் அமெரிக்காவில் இருந்து போனவை சிரியாவில் மூன்று குழுக்களாக போரிடடார்கள் மூன்றுக்குமே சப்பாத்து முதல்கொண்டு முழு ஆயுதமும் கொடுத்தது இஸ்ரேலும் அமெரிக்காவும்.

நித்தன்யாஹுவிற்கும் ஜூதர்களுக்கும் எப்படி எந்த தொடர்பும் இல்லையோ அதுபோல இவர்க்ளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை இவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே மொசாட்டினால் பயிறுவித்து அனுப்ப படடவர்கள்.

தற்போதைய ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் 2017 இல் டிரம்ப் பின்னால் சிறையில் இருந்து விடுவிக்க பட்டு ஆப்கானிஸ்தான் சென்றவர்.

இது ஒரு டெக்சாஸ் ( Texas) மாநில ப்ளும்பேர் ( Plumper) ஒரு கார் முகவரிடம் விற்ற பிக்கப்

151215_gma_wright2_33x16_992.jpg

An ISIS team firing out of the back of a truck sold to them by a Texas man

இவை அனைத்தும் அமெரிக்க சான் அந்தோனியோ ( San Antonio) எனும் இடத்தில அசெம்பிளி செய்யபடவை (எல்லாவற்றுக்கும் VN number CarFax history உண்டு )

UN urges countries to hit ISIL financially | ISIL/ISIS News | Al Jazeera

939985_1_107-Toyota-ISIS_standard.jpg?alias=standard_1200x800nc

Sen. John McCain's office is blasting as a fabrication and a "smear" a liberal group's claim that McCain is posing in this photo with terrorist "ISIS fighters" in Syria.

Picture of McCain and Abu Bakr al Baghdadi aka Abu Du'a | Pakistan Defence

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

முன்பு ஒரு திரியில் ( ஈரானில் குண்டுவீச்சு என்று நினைக்கிறன்) ரசோதரன் ஈரான் பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கிறது அப்படி மேற்கு நாடுகள் ஏதாவது ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகள் வைத்திருக்கிறார்களா? என்று மேற்கிற்கு முண்டு கொடுத்து இருந்தார் நான் வாசித்து சிரித்துவிட்டு போனேன்...........

என்ன மருதங்கேணியாரே, நான் தான் கிடைத்தேனா..................... அப்படி நான் எழுதியதை எடுத்துப் போடுவது தானே.................. நாங்களும் கொஞ்சம் சிரிப்போம் அல்லவா...........

நான் விளையாடுவது அதிகம் தான்........... ஆனாலும் பின்னம் தலையில் அடிபட்டு நடுவில கொஞ்ச பக்கம் இன்னும் காணாமல் போகல்ல..................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

என்ன மருதங்கேணியாரே, நான் தான் கிடைத்தேனா..................... அப்படி நான் எழுதியதை எடுத்துப் போடுவது தானே.................. நாங்களும் கொஞ்சம் சிரிப்போம் அல்லவா...........

நான் விளையாடுவது அதிகம் தான்........... ஆனாலும் பின்னம் தலையில் அடிபட்டு நடுவில கொஞ்ச பக்கம் இன்னும் காணாமல் போகல்ல..................🤣.

இஸ்திரேல் ஈரான் சண்டை நேரம் ஒரு திரியில் ஈரான் பல பயங்கரவாத அமைகளுக்கு உதவுகிறது ...... இஸ்ரேல் அப்படி ஏதாவது ஒரு பயங்கரவாத அமைப்புக்கு உதவுகிறதா? என்று கேட்டு எழுதி இருந்தீர்கள். அது ஒரு விரண்டாவதா திரியாக சென்றுகொண்டு இருந்தது அதனால் அதில் எதையும் எழுதி பிரயோசனம் இல்லை என்று விட்டு கடந்து சென்றேன்.

அதுக்காக இனி நேரம் செலவிட்டு தேடி எடுத்து போட்டும் என்ன ஆக போகிறது?

நான் எழுதியதை பொய் குற்றசாடடக கருதி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இருவருக்கும் நேரம் மிகுதி.

உங்கள் பல கருத்துக்களை வாசித்து சில தகவல்களை அறிந்து இருக்கிறேன். முட்டு கொடுப்பது என்றுவந்தால் இவர் கூட இப்படி எழுதுகிறார் என்று வாசிக்கும்போது நினைத்தேன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

என்ன மருதங்கேணியாரே, நான் தான் கிடைத்தேனா..................... அப்படி நான் எழுதியதை எடுத்துப் போடுவது தானே.................. நாங்களும் கொஞ்சம் சிரிப்போம் அல்லவா...........

நான் விளையாடுவது அதிகம் தான்........... ஆனாலும் பின்னம் தலையில் அடிபட்டு நடுவில கொஞ்ச பக்கம் இன்னும் காணாமல் போகல்ல..................🤣.

ஆதாரம் கேட்டிருக்கிறியள் மானஸ்தன்…தந்து போட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.😂.

1987 நேரம் மூக்கு வழிச்சுகொண்டு இருந்த சிறுவனான என்னை UTHR இல் இருந்தவர் என ஒரு புஸ்வாணத்தை இப்படித்தான் முன்பு ஒருதரம் போட்டவர், ஆதாரம் கேட்டதும் இதே போலத்தான் ஒரு மழுப்பல் மழுப்பி விட்டு மாசக்கணக்கில் ஆள் எஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2025 at 18:26, ஈழப்பிரியன் said:

தன்னைவிட கூடுதலாக வைத்திருக்கிறாரோ என்ற ஏக்கமாக இருக்கலாம்.

நல்ல பாயிண்ட்....இது நமக்கு காணும்...

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

ஆதாரம் கேட்டிருக்கிறியள் மானஸ்தன்…தந்து போட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.😂.

1987 நேரம் மூக்கு வழிச்சுகொண்டு இருந்த சிறுவனான என்னை UTHR இல் இருந்தவர் என ஒரு புஸ்வாணத்தை இப்படித்தான் முன்பு ஒருதரம் போட்டவர், ஆதாரம் கேட்டதும் இதே போலத்தான் ஒரு மழுப்பல் மழுப்பி விட்டு மாசக்கணக்கில் ஆள் எஸ்.

மருதங்கேணியார் இருவருக்கும் நேரம் மிகுதி என்று எழுதியிருந்தபடியால், சரி, இந்த விடயம் அப்படியே போகட்டும் என்று விட்டுவிட்டேன், கோஷான்.

நீங்கள் 1987ம் ஆண்டைக் குறிப்பிட்டவுடன், மருதங்கேணியாருடன் பகிடியாக எழுத நினைத்த விடயம் மீண்டும் நினைவில் வந்துவிட்டது................

1987ம் ஆண்டு தான் என்னுடைய ஏ லெவல் வருடம். மே மாதம் 25ம் திகதி இரவு வல்வைக் கல்வி மன்றத்தில், அந்த நாட்களில் இது ஒரு தனியார் கல்வி நிலையம், சேர்ந்து படிப்பதற்காக நண்பர்கள் பலர் ஒன்றாக இருக்கின்றோம். அங்கேயே தான் அநேக நாட்களில் நித்திரையும் கொள்வோம். பலரும் ஒன்றும் படிப்பதில்லை. நன்றாக கதைத்து விட்டு, ஏதாவது சாப்பிட்டு விட்டு நித்திரையாகிவிடுவார்கள். ஒரு சிலர் பின்னர் இருந்து படிப்பார்கள்.

அன்றிரவு இலங்கை இராணுவத்தின் லிபரேஷன் ஆபரேஷன் ஆரம்பித்தது. ஒன்றாக ஓட ஆரம்பித்தோம். ஒவ்வொரு ஊராக நாங்களும் சேர்ந்தே பின்வாங்கிப் போனோம். அப்பொழுது சூசை தான் எங்கள் பிரதேச பொறுப்பாளர்.

இரண்டாம் நாள் இரவு. கற்கோவளம் கடற்கரையில் படுத்திருந்தோம். இராணுவம் முள்ளியிலும் இறங்கி விட்டார்கள் என்றார்கள். அதற்கு சாட்சியாக அந்தப் பக்கமாக வானம் பிரகாசமாக இருந்தது. இனிமேல் இங்கிருந்தால் எங்கள் எல்லோரையும் கடல் உட்பட நான்கு பக்கங்களாலும் சுற்றி வளத்துவிடுவார்கள் என்று நடுநிசியின் பின் வடமராட்சி கிழக்கு நோக்கி கடற்கரையால் நடந்தோம். அடுத்த நாள் பகல் பொழுதில் உடுத்துறையைப் போய்ச் சேர்ந்தோம்.

உடுத்துறையில் இருந்த நாட்களில் மருதங்கேணியினூடாக பளைக்கு போய் வந்து கொண்டிருந்தோம். இந்த ஊர்கள் எல்லாமுமே அப்பொழுது தான் தெரியவந்தன. 1987ம் ஆண்டின் பின் நான் மீண்டும் அந்தப் பக்கங்களுக்கு போகவில்லை. இப்பொழுது யாழில் மீண்டும் மருதங்கேணியார் அந்த நாட்களை நினைவுபடுத்துகின்றார்..................🤣.

பின்னர் உடுத்துறையிலிருந்தும் இடம்பெயர வேண்டியதாக ஆனது. உடுத்துறைக்கு கீழே ஆனையிறவு இராணுவ முகாம். அங்கிருந்தும் இராணுவம் வடமராட்சி நோக்கி வரப் போகின்றார்கள் என்று ஒரு செய்தி வந்தது.......................

கடைசியில் பார்த்தால் உயிருடன் வாழ்வதே ஒரு போனஸ் போலவே தெரிகின்றது........... இதில் அமெரிக்காவிற்கு ஆதரவா, அல்லது ரஷ்யாவிற்கு ஆதரவா என்றால்............ கற்கோவளம் கடற்கரை தான் கண்ணில் தெரிகின்றது..................😜.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.