Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சண்டித்தனம் செய்யாமல் ஒன்று பட்டு நகரலாம். தீர்வை அவர்கள்தான் தரவேண்டும்.

தனி நாடு, பிரிந்து போகும் சமஸ்டி எண்டு மூச்சும் காட்ட கூடாது.

நீங்கள் சொல்லும் தீர்வை தரவேண்டிய ஏது நிலையை அவர்களுக்கு நாம் உருவாக்க வேண்டும்.

ஆனால் இதை செய்ய என்னால் (அக்னியாலும்?😂) முடியாது.

ஏன்னா… பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி😂.

On 19/11/2025 at 18:14, island said:

ஶ்ரீலங்கா பாராளுமன்றத்தில் பிரபாகரன் என் தலைவன் என்று வீர முழக்கமிடும் அர்ச்சனா பிரான்ஸ் வந்த போது தான் நடத்திய கூட்டதிற்கு தயவு செய்து தலைவர் படங்களையோ புலிக் கொடிகளையோ கொண்டு வரவேண்டாம் என்று கெஞ்சி கெஞ்சி மக்களிடன் வேண்டு கோள் விடுத்தது ஏன்? யாருகாவது தெரியுமா?

அங்கே பா ஊ க்குரிய சிறப்புரிமை பாராளமன்றத்துள் இருக்கு.

இங்கே பேசினால் அடுத்த முறை நோ வீசா😂

  • Replies 62
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    யாழ்கள அனுர காவடிகள் இந்த புத்தர் சிலைக்கு கொஞ்சம் புனருத்தான நிதி அனுப்பி வைக்கும்படி கேட்கக்ப்படுகிறனர் 😂. ஹேமசந்திரா….(ன்) வின் தலையில் புத்தர் சிலை வைத்தாலும் அவரால் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முட

  • இனவாதம், மதவாதத்தை கடந்து இலங்கையில் ஒன்றும் செய்ய முடியாது என்பதையே இந்தச்செயல் காட்டி நிற்கின்றது. தமிழரும் சிங்களவரும் ஒன்று சேர்ந்தால்; இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. இருபத்தோராந்திகதி பேரணிக்

  • நிழலி
    நிழலி

    முதல் வேலையாக இவரது Facebook profile இனை ரிப்போர்ட் பண்ணியுள்ளேன். இதனை ஒரு 100 பேர் செய்தால், முகனூல் நிர்வாகம் இவரது கணக்கை முடக்கும் ( IP ban செய்யும் சில வேளை)

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது பற்றி பேசி கொண்டிருந்த போது ஒரு நண்பர் சொன்னார் புத்தர் எங்கள் கடவுள் தான் என்று இனி தமிழர்கள் கும்பிட தொடங்க வேண்டும். அவர்களும் புதிதாக புத்தர் சிலை வைப்பதை கைவிட்டுவிடுவார்கள். இந்தியாவில் இருந்து வந்த அனுமானையும் ஐயப்பனையும் கும்பிடுகிறவர்கள் இதை செய்து பார்க்கலாமே.

புதிதாக தேவையில்லை. ஒரு காலத்தில் மிக முக்கிய பெளத்த நகரம் காஞ்சிபுரம்.

அதே போல் இலங்கையின் முதல் பெளத்தன், மன்னர் தேவநம்பிய தீசனும் ஒரு தமிழனே. தேவநம்பிய தீசனின் தந்தை மூத்த சிவன்.

21 hours ago, Justin said:

இலங்கை அரசியலைமைப்பின், "பிரிவினை கோருதல் குற்றம்" என்று சொல்லும் "6 வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன்" என்று சத்தியப் பிரமாணம் எடுத்துத் தான் பா.உ க்கள் எல்லோரும் பதவியேற்றிருக்கிறார்கள்.

இந்த 6 திருத்தத்தை ஏற்காது கூண்டொட்டோடு பதவி விலகினர் கூட்டணியினர்.

ஆனால் புலிகளின் பினாமிகான ததேகூ இதை ஏற்று கொண்டது. புலிகள் காலத்திலேயே.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

Story of 2005/06..!!!

2005/06இல் இதே போல் திருகோணமலை பிரதான பேருந்து நிலையத்தில் ஒரு பெரிய புத்தர் சிலை இரவோடு இரவாக வந்தது.

நீதிமன்றம் அகற்ற உத்தரவிட்டது ஆனால் எதுவும் நடக்கவில்லை.

அன்று பல விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

விக்னேஸ்வரன் அவர்கள் தொடர் கடையடைப்பு போராட்டதுக்கு அழைப்பு விடுத்தார்.

எத்தனையோ போராட்டங்கள் நிகழ்த்தியும் எந்தப் பயனும் இல்லை.

இந்த தொடர்போராட்ட எதிர்ப்பு நிகழ்வுகளால் பேரினவாதம் ஆத்திரமடைந்தது.

ஒரு நாள் முன்னாள் ஜேவீபியின் mp ஒருவரின் அனுசரணையில் திருகோணமலை நகரம் காடையர்களால் கொழுத்தப்பட்டது.

பலர் வீதிகளில் வெட்டப்பட்டு வீசப்பட்டனர்.

உயர்தரம் முடிந்து மக்கள் வங்கியில் சிறிதுகாலம் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அங்கு வந்து வங்கியை உடைக்க முனைந்தார்கள். அதில் சிக்குண்டு மீண்டு வந்தது எனக்கு நினைவிருக்கின்றது.

பெளத்த ஆதிக்கத்துக்கான எதிர்பைக் காட்டி உயிர்களை விட்ட பூமி திருகோணமலை.

எந்த நாய்கள் வந்தாலும் எந்தக் காட்சியும் இங்கு மாறுவதாக இல்லை.

2005/06 இல் திருகோணமலையில் இடம்பெற்ற கலவரம்

இன்றும் நாம் ஓர் எல்லையை மீறி எதுவும் செய்தால் இப்படித் தான் வெட்டி வீசப்படுவோம். அன்றாவது பிடித்துக்கொள்ள ஒரு கை இருந்தது. இன்று?

https://www.facebook.com/share/p/1AN23V5Soi/

பலராலும் அறியப்பட்ட ராஜ்குமார் ரஜீவ்காந் என்பவரின் முகநுhலில் இருந்து.

இண்டைக்கு திருமலை நாளைக்கு மட்டகளப்பு, யாழ்ப்பாணம்.

கருண காட்டவே மாட்டாத தெய்வங்களுக்குகான காவடிகளை இறக்கி வைத்து விட்டு, தன் பலம், பலவீனம் அறிந்து, ஒரு கூர்ப்பில் முன்னேறிய உயிரி கூட்டம் போல் ஒன்றிணைந்து செயல்படாதவரை….

இந்த இனத்துக்கு உய்வே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கத்துக்குரிய புத்தரை கைது செய்து விட்டார்களாம். வணக்கத்துக்குரியவர், வணக்கத்துக்குரிய இடத்தில இருந்தாற்தான் அது வணக்கத்துக்குரியது. அதைவிட்டு மலம் சலம் கழிக்குமிடம், விவசாயம் செய்யுமிடம் எல்லாம் வைத்து கேலிக்கூத்தாக்கினால் நாய்கூட கழித்துவிட்டுத்தான் செல்லும். இந்தபிக்குகளை உழைத்துச்சாப்பிடச்சொல்லுங்கள். மக்களின் வரிப்பணத்தில் தின்றுவிட்டு முன்னுரிமை கேட்டு சும்மா இருந்து திமிர் பிடிச்சாடுதுகள். அப்படி ஒரு சட்டம் கொண்டுவந்தால்; ஒருத்தனும் காவிஉடுத்தி விகாரையில் இருக்க மாட்டான். குடு காரன், காவாலி, காடை எல்லாத்துக்கும் காவியும், இராணுவ சீருடையும் போத்தி தங்களை பாதுகாக்க அரசியல் வாதிகள் வளர்க்கிறார்கள், போஷிக்கிறார்கள். பிக்குகள் விகாரைக்குள் அடங்கி பௌத்த தர்மத்தை போதிக்காத வரை சலுகைகள் இல்லை, அவர்களும் சாதாரண மனிதர்களே என்று அறிவியுங்கள். அவர்கள் போதைப்பொருள் கடத்துகிறார்கள், பாலியல் சேட்டை விடுகிறார்கள், சண்டித்தனம் காட்டுகிறார்கள், நாட்டை கொழுத்துகிறார்கள், சாதாரண மக்களை விட கேவலமாக நடந்து மக்களை பிழையான வழியில் வழிநடத்துகிறார்கள். இவர்களுக்கு மட்டும் ஏன் முன்னுரிமை? சட்ட விலக்கழிப்பு? இதை யாரும் கேள்வி எழுப்புவதில்லை. அதனாற்தான் இவர்களுக்கு இந்தகொழுப்பு. குற்றம் புரிந்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். அது அரசனாக இருந்தாலென்ன, ஆண்டியாக இருந்தாலென்ன, ஆசானாக இருந்தாலென்ன. அப்போதுதான் நாடு சமநிலை பெறும். இதை அனுரா சட்டமாக பிரகடனப்படுத்த வேண்டும். இல்லையெனில் நாட்டில் சமாதானம், சமஉரிமை என்பது வெறும் பேச்சுக்கு மட்டுமே. துறவிகளை கண்டால் கையெடுத்து கும்பிட மனம் வர வேண்டும். இதுகளை கண்டால் பயந்து அலறியடித்து ஓட வேண்டியுள்ளது. எங்கும் எதிலும் மதவாதம், இனவாதம். நாடு அழிந்தும் மாறாத இரும்பு மனமெல்லாம் அன்பை போதிக்கினமாம்! அவர்களை அரசு போஷிக்குதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அக்னியஷ்த்ரா said:

அப்படியா சந்தோஷப்படுகினம் ....புதுசா அல்லோ இருக்கு

அர்ச்சுனா தான் யார் என்பதை வெளிபடையாக காட்டி பின்னரும் அவரை புகழ்ந்து ஆதரிப்பவர்கள் இருக்கின்றார்கள் 😟

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

70 வருடம் ஏதுவும் தராதோரிடம் என்னத்தை பேசி…என்னத்த …?

இந்த பம்மாத்தை தானே சுமனும் செய்கிறார்.

70 வருடத்திற்கு மேலாக அந்த இரு பெரும்பான்மை சிங்கள கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்தன.அதற்கு வாக்களித்த தமிழர்களும் இருக்கின்றார்கள். தமிழ்கட்சிகளும் எதிர்க்கட்சி கதிரையில் அமர்ந்திருந்தார்கள்.தமிழர்களின் பெரும் ஆதரவுடன் முக்கிய எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்து சுக போகங்களை அனுபவித்தார்களே ஒழிய..... எதற்காக தம்மை பாராளுமன்றம் மக்கள் அனுப்பினார்கள் என்பதை வெற்றி பெற்ற அடுத்த கணமே மறந்து விட்டார்கள்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது அவர்களுக்கு பல அதிகாரங்கள் இருந்தது. அதையெல்லாம் பிரயோகிக்கவே இல்லை. வீர வசனங்கள் பேசியதை தவிர..... இதைத்தான் உங்கள் சுமனும் செய்தார்.செய்கின்றார். செய்யப்போகின்றார்.

இன்று வேறு ஒரு முகத்துடன் சிங்களம் ஆட்சியில் அமர்ந்துள்ளது.பலவற்றை செய்ய துணிந்துள்ளர்கள் போல் தெரிகின்றது.செய்கிறார்களோ இல்லையோ தமிழர் தரப்பு இந்த சந்தர்ப்பத்தை பேசு பொருளாக்கி அரசியல் செய்ய வேண்டும். இன்றைய நிலையில் பொன்னம்பலம் பொருத்தமானவர் என நான் நினைக்கின்றேன்.சுமந்திரன் அல்ல.

செம்மணி புதைகுழி அகழ்வு இடத்திற்கு தேடி வந்த அமைச்சர் சந்திரசேகரை திருப்பி அனுப்பியதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இந்த பம்மாத்தை தானே சுமனும் செய்கிறார்.

இதைச்சொன்னது யார்? கோசானா? ஆச்சரியமாக இருக்கிறது. சுமந்திரனை விட திறமைசாலி வேறு யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வி அடிக்கடி யாரோ கேட்பார்கள் அதனால் ஒரு சந்தேகம். பல்கலைக்கழக மாணவர் சந்திப்பில் அந்த உண்மையை ஏற்றுக்கொண்டவர் சுமந்திரன், ஐம்பது வீதமல்ல எண்பது வீத தமிழரின் உரிமைகள் பறிபோய்விட்டது என்றார். தெரிந்தும் வாக்கு கேட்க்கிறார், பேசுகிறேன் என்கிறார். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஒரு வருடத்திற்குள் ஏக்கிய ராஜ்ய சட்டமூல அரசியல் யாப்பு ரீதியிலான தீர்வு காணப்படும், இல்லையேல் நான் பதவி விலகிவிடுவேன் என்று வீராப்பு பேசியவர், இப்போ பதவியும் இழந்து தனக்கென ஒரு பதவியை உருவாக்கி நிர்வகித்துக்கொண்டு அரசியல் தீர்வு கேட்க்கிறார் என்றால் பாருங்கோவன் அவரது விடா முயற்சியை! இதைவிட அவருக்கு வேறு தெரிவோ, உழைப்போ இல்லை சுமந்திரனுக்கு . இதையே முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் செய்திருந்தால், சுமந்திரனின் பிரதிபலிப்பு எவ்வாறு இருந்திருக்கும்? தமிழரசுக்கட்சியை விட்டு இவர் வெளியேறவில்லை, ஆனால் மக்கள் நிராகரித்து விட்டனர் இவரை. வேறொரு கட்சியில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் பாப்போம்? இவர் முன்னையவருக்கு சவால் விட்டபடியினால் அந்த சவாலை தானே ஏற்று நிறைவேற்றி காட்டட்டும் பாப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

சண்டித்தனம் செய்யாமல் ஒன்று பட்டு நகரலாம். தீர்வை அவர்கள்தான் தரவேண்டும்.

தனி நாடு, பிரிந்து போகும் சமஸ்டி எண்டு மூச்சும் காட்ட கூடாது.

நீங்கள் சொல்லும் தீர்வை தரவேண்டிய ஏது நிலையை அவர்களுக்கு நாம் உருவாக்க வேண்டும்.

ஆனால் இதை செய்ய என்னால் (அக்னியாலும்?😂) முடியாது.

ஏன்னா… பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி😂.

அங்கே பா ஊ க்குரிய சிறப்புரிமை பாராளமன்றத்துள் இருக்கு.

இங்கே பேசினால் அடுத்த முறை நோ வீசா😂

அண்ணை சும்மா வாவண்ணை உன்னுடைய கப்பாசிட்டி எனக்கு தெரியும் பின்னாடி மட்டும் இருந்து கொண்டு எனக்கு ஜாடை மட்டும் காட்டண்ணை .... யாரவது ஒருத்தன் பூனைக்கு மணியை கட்டுவமண்ணை. நீயும் நானும் புலம் பெயர் நாட்டில் இருந்து குழறு வதால் ஒன்றும் நடக்காதண்ணை. சோம்பறித்தனத்தை இனத்துக்காக ஒதுக்கி வையன்னை.

டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை நாட்டில் தான் நிற்பேன். வாவண்னை ஒரு கை பார்போம். ,பகிடிக்காக இல்லை . கோசான் , ஐஸ்டின் அண்ணை போன்ற intellectuals உம் நமக்கு அவசியம்.

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2025 at 00:41, அக்னியஷ்த்ரா said:

அண்ணை சும்மா வாவண்ணை உன்னுடைய கப்பாசிட்டி எனக்கு தெரியும் பின்னாடி மட்டும் இருந்து கொண்டு எனக்கு ஜாடை மட்டும் காட்டண்ணை .... யாரவது ஒருத்தன் பூனைக்கு மணியை கட்டுவமண்ணை. நீயும் நானும் புலம் பெயர் நாட்டில் இருந்து குழறு வதால் ஒன்றும் நடக்காதண்ணை. சோம்பறித்தனத்தை இனத்துக்காக ஒதுக்கி வையன்னை.

டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை நாட்டில் தான் நிற்பேன். வாவண்னை ஒரு கை பார்போம். ,பகிடிக்காக இல்லை . கோசான் , ஐஸ்டின் அண்ணை போன்ற intellectuals உம் நமக்கு அவசியம்.

உண்மையில் நான் எழுதியது பகிடி இல்லை. இது என்னால் நினைத்து கூட பார்க்க முடியாத காரியம்.

உங்களுக்கு நினைவிருக்கலாம், அத்தனை எதிர் கருத்து இருந்த போதும் தான் அரசியலில் இறங்க யோசிப்பதாக நெடுக்ஸ் சொன்னபோது அதை நான் வரவேற்றேன்.

அப்படியாவது ஒரு வினைதிறானவர் முன்னுக்கு வரவேண்டும் என்பதால்.

என் போன்றவர்களை நம்பினால் இன்னும் அழிவே மிஞ்சும்.

On 21/11/2025 at 09:40, satan said:

இதைச்சொன்னது யார்? கோசானா? ஆச்சரியமாக இருக்கிறது. சுமந்திரனை விட திறமைசாலி வேறு யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வி அடிக்கடி யாரோ கேட்பார்கள்

நீங்கள் 2017 க்கு பின் கோஷானின் கருத்து எதையும் வாசிக்கவில்லையா?

On 21/11/2025 at 07:24, குமாரசாமி said:

செம்மணி புதைகுழி அகழ்வு இடத்திற்கு தேடி வந்த அமைச்சர் சந்திரசேகரை திருப்பி அனுப்பியதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

இதில் எந்த கடும்கருத்து நிலையும் எனக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் 2017 க்கு பின் கோஷானின் கருத்து எதையும் வாசிக்கவில்லையா?

தொடர்ந்து வாசித்து வருகிறேன் எதிரும் புதிருமாக எழுதுகிறீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

586764593_1266598322170970_1703181542055

தமிழ் மக்கள் ஓரளவு நிம்மதியாக வாழும் போதெல்லாம்...

"கஸப்ப அந்த வெப்பன்ஸ எடு"

Suhirtharaj Logarasa 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

தொடர்ந்து வாசித்து வருகிறேன் எதிரும் புதிருமாக எழுதுகிறீர்கள்!

விளக்கம் பிரமாதம்😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, goshan_che said:

இதில் எந்த கடும்கருத்து நிலையும் எனக்கு இல்லை.

நீங்கள் number one பேய்க்காய் எண்டு எனக்கு தெரியும். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.