Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி இன்று வெள்ளிக்கிழமை நுகேகொட நகரில் நடைபெறவுள்ளது.

‘மாபெரும் மக்கள் குரல்’ என்ற தொனிப்பொருளில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

இதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி பிவித்துறு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் பல கலந்துகொள்வதற்கு திட்டமிட்டுள்ளன. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரஜபக்ஸ கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இந்த பேரணியில் பிக்குகள் உள்ளிட்ட பௌத்த அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்துகொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பின் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இன்று நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இவ்வாறான விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதற்கமைய, பிற்பகல் 02.00 மணி முதல் கூட்டம் நிறைவடையும் வரை நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகிலுள்ள ஹைலெவல் சந்தியிலிருந்து நாவல வீதியின் நாவல சுற்றுவட்டம் வரையான பகுதியில் (ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கிற்கு முன்னால் உள்ள வீதி) வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் பின்வரும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

https://www.samakalam.com/அரசாங்கத்திற்கு-எதிராக-20/

  • கருத்துக்கள உறவுகள்

நுகேகொடையில் கூட்டு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது

Published By: Digital Desk 3 21 Nov, 2025 | 04:29 PM

image

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில்  பல்வேறு எதிர்கட்சிகளின் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் ஆரம்பமானது.

ஐ.தே.க.வுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிவிதுரு ஹெல உருமய,  ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கவுள்ளன.

சமகி ஜன பலவேகய (SJB), சர்வஜன பலய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி (NFF) ஆகிய கட்சிகள் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் பேரணியில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/231024

  • கருத்துக்கள உறவுகள்

1000 பேருக்கு மேல் வரமாட்டார்கள் என்றார்கள்.

ஆனாலும் பெரியதொரு கூட்டமே வந்துள்ளது போல தெரிகிறது.

எத்தனை தலைகள் என்று எந்த ஊடகமாவது கணக்கெடுத்துள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

587459238_2277261532748994_8165216645024

586221364_2277261599415654_9012212611407

586822585_2277261616082319_3115590646800

586151556_2277262619415552_8408807200941

நுகேகொட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப் பட்ட பாண், பருப்புக் கறி, சாராய போத்தல்கள்.

ஒரு படத்தில்.. பெரிய வாளும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நுகேகொட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப் பட்ட பாண், பருப்புக் கறி, சாராய போத்தல்கள்.

என்ன சாராய போத்தல் மாதிரி தெரியலையே?

இது ஜானி வாக்கர் மாதிரி அல்லவா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சாராய போத்தல் மாதிரி தெரியலையே?

இது ஜானி வாக்கர் மாதிரி அல்லவா இருக்கு.

புதிய மொந்தையில் பழைய கள். 😂

தாத்தா காலத்திலிருந்து… வட்டமான போத்தலில் சாராயம் விற்றால், வாங்குறவனுக்கும் அலுப்பு அடிக்கும் என்ற படியால்…. “ஜொனி வாக்கர்” மாதிரியான போத்தலில் சாராயம் விற்கிறார்கள் என்பது எனது ஊகம். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

587459238_2277261532748994_8165216645024

586221364_2277261599415654_9012212611407

586822585_2277261616082319_3115590646800

586151556_2277262619415552_8408807200941

நுகேகொட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப் பட்ட பாண், பருப்புக் கறி, சாராய போத்தல்கள்.

ஒரு படத்தில்.. பெரிய வாளும் உள்ளது.

8 hours ago, ஈழப்பிரியன் said:

எத்தனை தலைகள் என்று எந்த ஊடகமாவது கணக்கெடுத்துள்ளதா?

எனக்குப் பதினைந்து தெரியுது தல

உங்களுக்கு 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

1000 பேருக்கு மேல் வரமாட்டார்கள் என்றார்கள்.

ஆனாலும் பெரியதொரு கூட்டமே வந்துள்ளது போல தெரிகிறது.

எத்தனை தலைகள் என்று எந்த ஊடகமாவது கணக்கெடுத்துள்ளதா?

படத்தைப் பார்த்தால் ஒரு 50 ஆயிரம் வரும்போல் தெரிகிறது...நாமலின் பேச்சைபார்த்தால் ..அனுர எனொக்கொரு தூசு என்பதுபோல் இருக்கிறது....அனுர ஆட்சிக்கு வந்து ..பிள்ளையானை கைது செய்ததை தவிர ...வேறு என்ன செய்தார் என்பதுபோல் இருக்கிறது கூடிய சனத்தொகை ...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

எனக்குப் பதினைந்து தெரியுது தல

உங்களுக்கு 😂

வாத்தியாரே நான் போத்தலைக் கேட்கவில்லை.

பேரணிக்கு வந்த மக்களைக் கேட்டேன்.

நீங்களும் பேரணியால் வருகிறீர்களோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.