Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

Dec 21, 2025 - 11:18 AM

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

தையிட்டி 'திஸ்ஸ' விகாரைக்காகச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் பதவி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விகாரைக்கு முன்பாக இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேர் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாதெனப் பெயர் குறிப்பிட்டுத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளையில், விகாரையை அண்மித்த சூழலில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்படப் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு, அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. 

"இது ஓர் அமைதிவழியான போராட்டம். இங்கு எந்த விதத்திலும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவோ, விகாரைக்குச் சேதம் விளைவிக்கவோ இல்லை. அவ்வாறிருக்கையில், விகாரைக்குச் செல்லும் வீதியை நீங்கள் எவ்வாறு அடாத்தாக மறித்து வைத்திருக்க முடியும்?" எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

கைது நடவடிக்கையினால் போராட்டக்களத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள போதிலும், போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmjfb3o7k02ywo29npez5i2v0

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி கமே, அபே கமே!

  • கருத்துக்கள உறவுகள்

JAFFNA.jpg?resize=750%2C375&ssl=1

யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக அங்கிருக்கும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வரும் நிலையில் இன்று (21) காலை அங்கு கடும் பதற்றமான சூழல் நிலவியது.

இதன்போது, வேலன் சுவாமிகள், பிரதேச சபை தவிசாளர் ஒருவர் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸாரால் கீழே தள்ளி விழுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

JAFFNA1.jpg?resize=600%2C338&ssl=1

JAFFNA-2.jpg?resize=600%2C338&ssl=1

Jaffna-4.jpg?resize=600%2C338&ssl=1

JAFFNA-5.jpg?resize=600%2C338&ssl=1

jaffna-1.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2025/1456885

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸாரால் கீழே தள்ளி விழுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

large.IMG_9319.jpeg.9276e2dda01e557e15b1

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_9319.jpeg.9276e2dda01e557e15b1

//மக்களால் தெரிவு செய்யப் பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை, மக்கள் போராட்டம் சம்பந்தப் பட்ட நிகழ்வில்... சிங்கள காவல்துறை கீழே தள்ளி விழுத்துகின்றது.// - இதுதான் செய்தி. -

அதற்கு, "தற்குறித்தனமாக" ஓவியம் வரைந்த உங்களை நினைக்க பரிதாபமாக உள்ளது. animiertes-gefuehl-smilies-bild-0306.gif

சிலரது செயல்பாடுகள்... அவர்கள் எப்படிப்பட்ட வக்கிரபுத்தி உடையவர்கள் என்பதை... அவர்களை அறியாமலே வெளிப்படுத்தி விடுவார்கள்.

உங்களுடைய சுத்துமாத்து சுமந்திரன்...

இப்படியான மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளாமல்,

எந்தப் பொந்துக்குள் பதுங்கி இருக்கின்றார்?

இதற்குள்... வட மாகாண முதலமைச்சராகும் ஆசையும் இருப்பது கேவலம். animiertes-gefuehl-smilies-bild-0402.gif

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் அரங்கேறிய பொலிஸாரின் செயலுக்கு கண்டனம்!

21 Dec, 2025 | 03:10 PM

image

இந்து மதத்தலைவர் தாக்கப்பட்டமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத இனவாத - மதவாத வெறிச்செயல். தையிட்டியில் அரங்கேறிய சம்பவத்திற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இன்றைய தாக்குதல்களும் கைதுகளும் அநுரகுமார தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி - தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இனவாதக் கோர முகத்தையே காட்டுகின்றது.

எங்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்களே ஒருகணம் சிந்தியுங்கள்!

இன்று இந்து மதத்தலைவருக்கு நடந்தது நாளைக்கு உங்களுக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை மறவாதீர்கள்.

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்! இனத்துக்கான போராட்டம் தொடரும். இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/234019

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Kavi arunasalam said:

large.IMG_9319.jpeg.9276e2dda01e557e15b1

எனக்கு சிங்களவன் எவ்வளவோ மேல் என உணர்வை ஊட்டியவர் கவி அருணாச்சலத்தின் சிரித்திரன்கள் என்பது பலருக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.

நாதியற்று நடு வீதியில் நிற்கும் ஈழத்தமிழனுக்கு .... இப்படிப்பட்ட கேலி சித்திரங்கள் இன்னும் வேண்டும். இஸ்டாலின்,கோத்தபாய கொம்பனிகள்,அனுர போன்றவர்களின் கேலிச்சித்திரங்களையும் எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, தமிழ் சிறி said:

சிலரது செயல்பாடுகள்... அவர்கள் எப்படிப்பட்ட வக்கிரபுத்தி உடையவர்கள் என்பதை... அவர்களை அறியாமலே வெளிப்படுத்தி விடுவார்கள்.

விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை எதிர்த்த/எதிர்க்கும் சுமந்திரனை தோளில் சுமந்து திரிவது கேவலத்திலும் கேவலம்.

கடந்த 10 வருடங்களில் சுமந்திரர் ஈழத்தமிழர் சம்பந்தமாக என்ன செய்தார் என கேட்டுப்பாருங்கள். அனைவரும் அந்த நிமிடம் தொடக்கம் பல நாட்களுக்கு கோமா நிலைக்கு சென்று விடுவர்.🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தமிழ் சிறி said:

யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

velan.jpg

காவி உடைதரித்த வேலன் சுவாமிகள் தமிழன் என்பதால் கைதும் அடி பிடிகளும்.இதுவே ஒரு பௌத்த பிக்கு என்றால் நடக்குமா?

இதே காவி உடை தரித்த இனவாத சிங்கள பிக்கு என்றால் எம்மவர்களுக்கு கவிதை வருமா? சித்திரம் வருமா? கட்டுரைகள் வருமா? கட்டுமான கருத்துக்கள் வருமா?

சிங்களம் என்றால் பக்குவம் பவுத்திரம் பாக்கியம் மௌனம்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20251222-WA0014-696x391-1.jpg?resize

பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி!

தையிட்டி விகாரைக்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தையிட்டி விகாரைக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டு மிராண்டி தனமாக ஈடுபட்டு வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட ஐவரையும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் ஐவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.

இந்நிலையில் , போராட்ட களத்தில் வைத்து , பொலிஸாரினால் தாக்கப்பட்ட வேலன் சுவாமி நேற்றைய தினம் பிணையில் வெளி வந்து தனது ஆதீனத்திற்கு திரும்பிய நிலையில் சுகவீனமுற்றுள்ளார்.

அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்டமை தொடர்பிலும் , மத தலைவரான வேலன் சுவாமி மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் மேற்கொண்டு , அவரை பொலிஸ் வாகனத்தினுள் தூக்கி வீசிய சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருவதுடன் , சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர்.

https://athavannews.com/2025/1456948

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

//மக்களால் தெரிவு செய்யப் பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை, மக்கள் போராட்டம் சம்பந்தப் பட்ட நிகழ்வில்... சிங்கள காவல்துறை கீழே தள்ளி விழுத்துகின்றது.// - இதுதான் செய்தி. -

அதற்கு, "தற்குறித்தனமாக" ஓவியம் வரைந்த உங்களை நினைக்க பரிதாபமாக உள்ளது

தமிழ்சிறி, உங்களுக்கு பதில் எழுதி நிறைய நாளாயிட்டுது. நேற்றைய உங்களின் கருத்துக்குப் பதில் எழுதாமலே என் அடுத்த வேலைக்குப் போகத்தான் முதலில் நினைத்தேன். ஆனால் என்னைப் பார்த்து நீங்கள் பரிதாபப்பட்ட பொழுது, அதுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுத்து, சரி… கொஞ்சம் நின்று எழுதிட்டுப் போகலாமென்று இதை எழுதுகிறேன்..

தையிட்டியில இருக்கின்ற புத்த விகாரைக்கு எதிரான போராட்டம் என்ற செய்தியில், “பொலிஸ் வருவார்கள், போராட்டம் செய்பவர்களை அகற்றுவார்கள், இல்லை கைதுசெய்வார்கள்” என்பதோடு நான் நிறுத்திவிட்டேன்

ஏராளன் இணைத்த செய்தி அப்படயான செய்திதான். ஆனால் நீங்கள் இணைத்த செய்தி அப்படியில்லை. அதிலே என்ன சொல்லப்படுகிறதென்றால், “இதன்போது வேலன் சுவாமிகள், ஒரு பிரதேச சபை தவிசாளர் உட்பட நாலு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்கள். இதன் காரணமா போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் நடுவில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டது ” என்று. மேலும், “அங்கே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸாரால கீழே தள்ளி விழுத்தப்பட்டார்” என்றும் சொல்லப்பட்டிருந்தது.

நீங்கள் அடிக்கடி சொல்லும் அந்த ‘வக்கிரம்’ என்று ஒன்று இருக்கே… அதை இந்த இடத்தில்  நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். நீங்கள் போட்டிருந்த செய்தியில், நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுவாமிகள் பின் தள்ளப்படுறார், சிறீதரன் முன்னுக்கு வருகிறார். ஆனால் சிறீதரன் எம்பி தள்ளப்பட்டு கீழே விழுந்தார் என்று எந்த வீடியோவிலேயும் நான் காணவில்லை. ஆனால் நீங்கள் போட்ட செய்தி அதையே முன்னிலைப் படுத்தி நிற்கின்றது. இதற்கு ஆதாரமான உண்மை இருந்தால், தரவிட்டு காட்டுங்கள். கண்டிப்பா நன்றி சொல்வேன்.

தன் கட்சிக்குள்ளே நடக்கின்ற பிரச்சினையைக்கூட பாராளுமன்றத்துக்கு கொண்டு போய் நீதி கேட்கின்ற ஆள் சிறீதரன் எம்பி. அப்படிப்பட்டவர், ஒரு பொலிஸ் தள்ளி கீழே விழுந்து விட்டால், பாராளுமன்றத்தை உண்டு இல்லை என்று ஆக்காமல் விடுவாரா? அதனாலே இங்கே அவரைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் பார்வையில், தமிழ் மக்களுக்கு சிறீதரனால் எந்த நலனும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் மக்களுக்கக அவர் எதுவும் செய்யப் போவதும் இல்லை

நேற்றைய விட இன்றைக்கு உங்களிடம் கொஞ்சம் தெளிவு வந்திருப்பதைதையும் நான் கவனிக்கிறேன். “மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை, மக்கள் போராட்டம் சம்பந்தப்பட்ட நிகழ்வில்… சிங்கள காவல்துறை கீழ தள்ளி விழுத்துது // – இதுதான் செய்தி”என்று சிவப்பு வர்ணத்தில நீங்கள் நேற்று குறிப்பிட்டிருந்தது, இன்று “பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி” என்று வந்திருக்கின்றது. சுவாமி முன்னுக்கு வந்திருக்கிறார். நேற்று வீழ்ந்து எழுந்த எம்பியை இன்றைக்குக் காணோம்.

ஆனாலும் வேலன் சுவாமிகள் ஒன்றும் லேசுப்பட்ட ஆள் கிடையாது. பொலிஸ் அவரை வாகனத்தில ஏற்றும்போது, அவர் பொலிஸைப் பார்த்து  ஏக வசனத்தில சொன்ன வார்த்தையைக் கேட்டு அந்த பொலீஸ்காரனே கொஞ்சம் மிரண்டு போனான்.

இலங்கையில் பிக்குகள் மேல் பொலிஸ் தாக்குதல் நடந்திருக்கிற கதைகளும், சம்பவங்களும் ஏற்கனவே இருக்கின்றன. இணையத்தில் தேடினால் கண்டிப்பாகக் கிடைக்கும். கிடைத்தால் உங்கள் நண்பர் குமாரசாமியாரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! மீண்டும் ஒரு நல்ல கருத்தாடலில் சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

2009 போர் முற்றுபெற்ற பின் நல்லிணக்கம், சமாதானம் என்று சொன்னாங்கள். அடாத்தாக பிடித்து எடுத்த சனங்களின் காணிகளில் புத்தர் விகாரை கட்டியெழுப்பி கும்பாவிசேகம் செய்ததுதான் உந்த நல்லிணக்கம் என்று இப்பத்தான் விளங்குது.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2025 at 17:59, தமிழ் சிறி said:

//மக்களால் தெரிவு செய்யப் பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை, மக்கள் போராட்டம் சம்பந்தப் பட்ட நிகழ்வில்... சிங்கள காவல்துறை கீழே தள்ளி விழுத்துகின்றது.// - இதுதான் செய்தி. -

அதற்கு, "தற்குறித்தனமாக" ஓவியம் வரைந்த உங்களை நினைக்க பரிதாபமாக உள்ளது. animiertes-gefuehl-smilies-bild-0306.gif

சிலரது செயல்பாடுகள்... அவர்கள் எப்படிப்பட்ட வக்கிரபுத்தி உடையவர்கள் என்பதை... அவர்களை அறியாமலே வெளிப்படுத்தி விடுவார்கள்.

உங்களுடைய சுத்துமாத்து சுமந்திரன்...

இப்படியான மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளாமல்,

எந்தப் பொந்துக்குள் பதுங்கி இருக்கின்றார்?

இதற்குள்... வட மாகாண முதலமைச்சராகும் ஆசையும் இருப்பது கேவலம். animiertes-gefuehl-smilies-bild-0402.gif

தரமான சரியான தருணத்தில் வெளிப்பட்ட கருத்து 😎

Aahhaa ivvlo vela senju manda mela iruntha kondaiya maranthutene - Vadivelu,  Sriman, Vaiyapuri | Pokkiri

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

தமிழ்சிறி, உங்களுக்கு பதில் எழுதி நிறைய நாளாயிட்டுது. நேற்றைய உங்களின் கருத்துக்குப் பதில் எழுதாமலே என் அடுத்த வேலைக்குப் போகத்தான் முதலில் நினைத்தேன். ஆனால் என்னைப் பார்த்து நீங்கள் பரிதாபப்பட்ட பொழுது, அதுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுத்து, சரி… கொஞ்சம் நின்று எழுதிட்டுப் போகலாமென்று இதை எழுதுகிறேன்..

தையிட்டியில இருக்கின்ற புத்த விகாரைக்கு எதிரான போராட்டம் என்ற செய்தியில், “பொலிஸ் வருவார்கள், போராட்டம் செய்பவர்களை அகற்றுவார்கள், இல்லை கைதுசெய்வார்கள்” என்பதோடு நான் நிறுத்திவிட்டேன்

ஏராளன் இணைத்த செய்தி அப்படயான செய்திதான். ஆனால் நீங்கள் இணைத்த செய்தி அப்படியில்லை. அதிலே என்ன சொல்லப்படுகிறதென்றால், “இதன்போது வேலன் சுவாமிகள், ஒரு பிரதேச சபை தவிசாளர் உட்பட நாலு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்கள். இதன் காரணமா போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் நடுவில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டது ” என்று. மேலும், “அங்கே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸாரால கீழே தள்ளி விழுத்தப்பட்டார்” என்றும் சொல்லப்பட்டிருந்தது.

நீங்கள் அடிக்கடி சொல்லும் அந்த ‘வக்கிரம்’ என்று ஒன்று இருக்கே… அதை இந்த இடத்தில்  நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். நீங்கள் போட்டிருந்த செய்தியில், நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுவாமிகள் பின் தள்ளப்படுறார், சிறீதரன் முன்னுக்கு வருகிறார். ஆனால் சிறீதரன் எம்பி தள்ளப்பட்டு கீழே விழுந்தார் என்று எந்த வீடியோவிலேயும் நான் காணவில்லை. ஆனால் நீங்கள் போட்ட செய்தி அதையே முன்னிலைப் படுத்தி நிற்கின்றது. இதற்கு ஆதாரமான உண்மை இருந்தால், தரவிட்டு காட்டுங்கள். கண்டிப்பா நன்றி சொல்வேன்.

தன் கட்சிக்குள்ளே நடக்கின்ற பிரச்சினையைக்கூட பாராளுமன்றத்துக்கு கொண்டு போய் நீதி கேட்கின்ற ஆள் சிறீதரன் எம்பி. அப்படிப்பட்டவர், ஒரு பொலிஸ் தள்ளி கீழே விழுந்து விட்டால், பாராளுமன்றத்தை உண்டு இல்லை என்று ஆக்காமல் விடுவாரா? அதனாலே இங்கே அவரைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் பார்வையில், தமிழ் மக்களுக்கு சிறீதரனால் எந்த நலனும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் மக்களுக்கக அவர் எதுவும் செய்யப் போவதும் இல்லை

நேற்றைய விட இன்றைக்கு உங்களிடம் கொஞ்சம் தெளிவு வந்திருப்பதைதையும் நான் கவனிக்கிறேன். “மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை, மக்கள் போராட்டம் சம்பந்தப்பட்ட நிகழ்வில்… சிங்கள காவல்துறை கீழ தள்ளி விழுத்துது // – இதுதான் செய்தி”என்று சிவப்பு வர்ணத்தில நீங்கள் நேற்று குறிப்பிட்டிருந்தது, இன்று “பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி” என்று வந்திருக்கின்றது. சுவாமி முன்னுக்கு வந்திருக்கிறார். நேற்று வீழ்ந்து எழுந்த எம்பியை இன்றைக்குக் காணோம்.

ஆனாலும் வேலன் சுவாமிகள் ஒன்றும் லேசுப்பட்ட ஆள் கிடையாது. பொலிஸ் அவரை வாகனத்தில ஏற்றும்போது, அவர் பொலிஸைப் பார்த்து  ஏக வசனத்தில சொன்ன வார்த்தையைக் கேட்டு அந்த பொலீஸ்காரனே கொஞ்சம் மிரண்டு போனான்.

இலங்கையில் பிக்குகள் மேல் பொலிஸ் தாக்குதல் நடந்திருக்கிற கதைகளும், சம்பவங்களும் ஏற்கனவே இருக்கின்றன. இணையத்தில் தேடினால் கண்டிப்பாகக் கிடைக்கும். கிடைத்தால் உங்கள் நண்பர் குமாரசாமியாரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! மீண்டும் ஒரு நல்ல கருத்தாடலில் சந்திப்போம்.

நிதானமான, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பதில்👍.

உங்கள் கடமையைச் செய்திருக்கிறீர்கள், ஆனால் பலனை எதிர்பார்த்து ஏமாறாதீகள் என்று எச்சரிக்க வேண்டியது என் கடமை😂! பொய்ச் செய்திகளிலும், சில சமயங்களில் "எந்த செய்தியும்" இல்லாமலே ஏனைய தமிழ் அரசியல் வாதிகளை - அவர்களை தாயக மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருந்த வேளையில்- கேவலமாகத் திட்டியபடி இருந்த இருவர் தான் உங்களுக்கு நாகரீகம் கற்பிக்க முயல்கிறார்கள் என்பதைக் கவனித்தால் பலனை எதிர்பார்க்க மாட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தோவியம் ஓவியரின் சிந்தனை. அது வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்பட முடியும். காவியுடையுடன் நியாயம் கேட்ட நிராயுதபாணியான வேலவன் சுவாமி எங்களுக்கு கோமாளியாக தெரிகின்றார். முன்பு ஆயுதம் ஏந்தி நியாயம் கேட்ட பிரபாகரன் பயங்கரவாதியாக தெரிந்தார். விகாராதிபதிக்கு புரோமோசன் கிடைத்துள்ளது. எனவே இங்கு விகாராதிபதியே போராளி என இனம் காண்போம்.

அரசாங்கம் செய்வது சட்டவிரோதமான செயல். இலங்கை நீதிமன்றம் கட்டாயம் சரியான நீதியை கொடுத்துவிட்டுத்தான் அடுத்த வேலையை பார்க்கும் என எதிர்பார்ப்போம்.

Edited by நியாயம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் பொலிஸார் நடந்துகொண்ட விதம், நாடு பிளவுபட்டுள்ளதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது ; பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடரப்படவேண்டும் - மணிவண்ணன் 

22 Dec, 2025 | 05:13 PM

image

தையிட்டியில் பொலிஸார் நடந்துகொண்ட விதம், நாடு இரண்டாக பிளவுபட்டுள்ளது என்பதை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், 

தையிட்டி விகாரை முன்பாக நடைபெற்ற அமைதி வழிப் போராட்டத்தின்போது, பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்தி அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தியிருந்தனர். 

மதகுருவான வேலன் சுவாமிகளை மிலேச்சத்தனமாக தாக்கி, அவரை காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். 

அதேவேளை மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனையும் தள்ளி வீழ்த்தியுள்ளனர். அத்துடன், வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட நால்வரை அடித்து இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அராஜகம் செய்துள்ளனர். 

இந்த பொலிஸாரின் அராஜகத்தை தமிழ் மக்கள் கூட்டணி மிக வன்மையாக கண்டிக்கிறது. 

பொலிஸாரின் இந்த செயற்பாடானது நாடு இரண்டாக பிளவுபட்டு உள்ளமையையே காட்டி நிற்கிறது. எத்தனை ஆட்சிகள் மாறினாலும், சிங்கள பௌத்த தீவிரவாதப் போக்கில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. 

திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்தமை தொடர்பிலான பிரச்சினையின்போது பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்தார். அதற்கு எதிராக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தனர். 

ஆனால், வேலன் சுவாமிகளை மிலேச்சத்தனமாக தாக்கி கைது செய்துள்ளனர். வேலன் சுவாமிகள் ஒரு பௌத்த பிக்குவாக இல்லாமைதான் இதற்கு காரணம். வேலன் சுவாமிகளிடம் நடந்துகொண்டதைப் போன்று, ஒரு பௌத்த பிக்குவிடம் பொலிஸாரினால் நடந்துகொள்ள முடியுமா?

வேலன் சுவாமிகள், வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் தம் மீது பொலிஸார் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் என எதிர்பார்க்கிறேன். 

அவர்கள் அவ்வாறு பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடர விரும்பின், சட்டத்தரணி என்ற ரீதியில் நாமும் எமது கட்சியும் பக்கபலமாக அவர்களுக்காக நிற்போம் என இவ்விடத்தில் உறுதியாகக் கூறுகிறேன். 

அதேவேளை வலி. வடக்கு பிரதேச சபையிடமும் அன்பான கோரிக்கை ஒன்றினை விடுக்கிறேன். உங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சாதாரண குடிமகன் ஒரு கட்டடத்தை அமைக்கும்போது, பிரதேச சபையின் அனுமதி பெறாவிடின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்றீர்கள். அதேபோன்று தையிட்டி விகாரையில் இடம்பெறும் சட்ட விரோத கட்டடங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருகிறேன் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/234130

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2025 at 09:25, தமிழ் சிறி said:

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை

On 21/12/2025 at 09:25, தமிழ் சிறி said:

எண்ணி 17 பேர் 😂.

மாபெரும் கண்ட. ஆர்பாட்டமாம்😂.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

தமிழ்சிறி, உங்களுக்கு பதில் எழுதி நிறைய நாளாயிட்டுது. நேற்றைய உங்களின் கருத்துக்குப் பதில் எழுதாமலே என் அடுத்த வேலைக்குப் போகத்தான் முதலில் நினைத்தேன். ஆனால் என்னைப் பார்த்து நீங்கள் பரிதாபப்பட்ட பொழுது, அதுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுத்து, சரி… கொஞ்சம் நின்று எழுதிட்டுப் போகலாமென்று இதை எழுதுகிறேன்..

தையிட்டியில இருக்கின்ற புத்த விகாரைக்கு எதிரான போராட்டம் என்ற செய்தியில், “பொலிஸ் வருவார்கள், போராட்டம் செய்பவர்களை அகற்றுவார்கள், இல்லை கைதுசெய்வார்கள்” என்பதோடு நான் நிறுத்திவிட்டேன்

ஏராளன் இணைத்த செய்தி அப்படயான செய்திதான். ஆனால் நீங்கள் இணைத்த செய்தி அப்படியில்லை. அதிலே என்ன சொல்லப்படுகிறதென்றால், “இதன்போது வேலன் சுவாமிகள், ஒரு பிரதேச சபை தவிசாளர் உட்பட நாலு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்கள். இதன் காரணமா போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் நடுவில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டது ” என்று. மேலும், “அங்கே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸாரால கீழே தள்ளி விழுத்தப்பட்டார்” என்றும் சொல்லப்பட்டிருந்தது.

நீங்கள் அடிக்கடி சொல்லும் அந்த ‘வக்கிரம்’ என்று ஒன்று இருக்கே… அதை இந்த இடத்தில்  நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். நீங்கள் போட்டிருந்த செய்தியில், நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுவாமிகள் பின் தள்ளப்படுறார், சிறீதரன் முன்னுக்கு வருகிறார். ஆனால் சிறீதரன் எம்பி தள்ளப்பட்டு கீழே விழுந்தார் என்று எந்த வீடியோவிலேயும் நான் காணவில்லை. ஆனால் நீங்கள் போட்ட செய்தி அதையே முன்னிலைப் படுத்தி நிற்கின்றது. இதற்கு ஆதாரமான உண்மை இருந்தால், தரவிட்டு காட்டுங்கள். கண்டிப்பா நன்றி சொல்வேன்.

தன் கட்சிக்குள்ளே நடக்கின்ற பிரச்சினையைக்கூட பாராளுமன்றத்துக்கு கொண்டு போய் நீதி கேட்கின்ற ஆள் சிறீதரன் எம்பி. அப்படிப்பட்டவர், ஒரு பொலிஸ் தள்ளி கீழே விழுந்து விட்டால், பாராளுமன்றத்தை உண்டு இல்லை என்று ஆக்காமல் விடுவாரா? அதனாலே இங்கே அவரைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் பார்வையில், தமிழ் மக்களுக்கு சிறீதரனால் எந்த நலனும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் மக்களுக்கக அவர் எதுவும் செய்யப் போவதும் இல்லை

நேற்றைய விட இன்றைக்கு உங்களிடம் கொஞ்சம் தெளிவு வந்திருப்பதைதையும் நான் கவனிக்கிறேன். “மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை, மக்கள் போராட்டம் சம்பந்தப்பட்ட நிகழ்வில்… சிங்கள காவல்துறை கீழ தள்ளி விழுத்துது // – இதுதான் செய்தி”என்று சிவப்பு வர்ணத்தில நீங்கள் நேற்று குறிப்பிட்டிருந்தது, இன்று “பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி” என்று வந்திருக்கின்றது. சுவாமி முன்னுக்கு வந்திருக்கிறார். நேற்று வீழ்ந்து எழுந்த எம்பியை இன்றைக்குக் காணோம்.

ஆனாலும் வேலன் சுவாமிகள் ஒன்றும் லேசுப்பட்ட ஆள் கிடையாது. பொலிஸ் அவரை வாகனத்தில ஏற்றும்போது, அவர் பொலிஸைப் பார்த்து  ஏக வசனத்தில சொன்ன வார்த்தையைக் கேட்டு அந்த பொலீஸ்காரனே கொஞ்சம் மிரண்டு போனான்.

இலங்கையில் பிக்குகள் மேல் பொலிஸ் தாக்குதல் நடந்திருக்கிற கதைகளும், சம்பவங்களும் ஏற்கனவே இருக்கின்றன. இணையத்தில் தேடினால் கண்டிப்பாகக் கிடைக்கும். கிடைத்தால் உங்கள் நண்பர் குமாரசாமியாரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! மீண்டும் ஒரு நல்ல கருத்தாடலில் சந்திப்போம்.

பார் சிறி விழுந்து போனார் எண்டு யாழ்களத்தின் 1ம், 2ம் குடி-மகன்கள் கவலைபடுகிறார்கள்.

விட்டுத்தள்ளுங்கள்😂

நடிகர் செந்தாமரை தொட்டு பல விடயங்களில் பொய் என தெரிந்தும் அதை மீள மீள பகிர்ந்து நிர்வாகத்திடம் குட்டு வாங்கிய “பொய்யர் திலகம்” தான் எங்கள் தமிழ் சிறி அண்ணா 😂.

எனவே பார் சிறி தள்ளாடி விழுந்த கதையையும் நம்ப முதல் யோசிக்க வேண்டித்தான் உள்ளது.

3 hours ago, நியாயம் said:

கருத்தோவியம் ஓவியரின் சிந்தனை. அது வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்பட முடியும். காவியுடையுடன் நியாயம் கேட்ட நிராயுதபாணியான வேலவன் சுவாமி எங்களுக்கு கோமாளியாக தெரிகின்றார். முன்பு ஆயுதம் ஏந்தி நியாயம் கேட்ட பிரபாகரன் பயங்கரவாதியாக தெரிந்தார். விகாராதிபதிக்கு புரோமோசன் கிடைத்துள்ளது. எனவே இங்கு விகாராதிபதியே போராளி என இனம் காண்போம்.

அரசாங்கம் செய்வது சட்டவிரோதமான செயல். இலங்கை நீதிமன்றம் கட்டாயம் சரியான நீதியை கொடுத்துவிட்டுத்தான் அடுத்த வேலையை பார்க்கும் என எதிர்பார்ப்போம்.

புராண காலே இந்தாங், தையிட்டி கம சிங்கள மாத்ரு பூமியக் ஹட்டியட்ட வார்த்தா வெலா தியன்னே….

தெமலயா பழயாங்ளா இந்தியாவட்ட…

ஒயவாகே முஸ்லீம் லா பழயாங்களா அரேபியாவட்ட…

  • கருத்துக்கள உறவுகள்

தற்குறி என்றால் கை எழுத்து வைக்க தெரியாத படிப்பு இல்லாதவர் கைவிரல் அடையாளம் இடுபவர் தானே ஓவியர் மட்டுமல்ல யாழ்களத்தில் தற்குறிகளே யாரும் இல்லை

11 hours ago, Kavi arunasalam said:

வேலன் சுவாமிகள் ஒன்றும் லேசுப்பட்ட ஆள் கிடையாது. பொலிஸ் அவரை வாகனத்தில ஏற்றும்போது, அவர் பொலிஸைப் பார்த்து  ஏக வசனத்தில சொன்ன வார்த்தையைக் கேட்டு அந்த பொலீஸ்காரனே கொஞ்சம் மிரண்டு போனான்.

தவத்திரு வேலன் சுவாமிகள் என்று சொல்லுங்கோ 😂

56 minutes ago, goshan_che said:

பார் சிறி தள்ளாடி விழுந்த கதையையும் நம்ப முதல் யோசிக்க வேண்டித்தான் உள்ளது.

பார் சிறி ஆசிரியராக இருந்து யுத்தம் முடிவடைந்த பின்பு கேடீஸ்வரர் ஆனவர் தள்ளாடி விழுந்தாலும் அடுத்த செக்கனிலே எழுந்துவிடுவார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Kavi arunasalam said:

தன் கட்சிக்குள்ளே நடக்கின்ற பிரச்சினையைக்கூட பாராளுமன்றத்துக்கு கொண்டு போய் நீதி கேட்கின்ற ஆள் சிறீதரன் எம்பி. அப்படிப்பட்டவர், ஒரு பொலிஸ் தள்ளி கீழே விழுந்து விட்டால், பாராளுமன்றத்தை உண்டு இல்லை என்று ஆக்காமல் விடுவாரா? அதனாலே இங்கே அவரைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் பார்வையில், தமிழ் மக்களுக்கு சிறீதரனால் எந்த நலனும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் மக்களுக்கக அவர் எதுவும் செய்யப் போவதும் இல்லை

ஈழத்தமிழர் விடயமாக நீங்கள் ஆதரிக்கும் அல்லது முன்னுதாரண அரசியல்வாதி யார்?

14 hours ago, Kavi arunasalam said:

இலங்கையில் பிக்குகள் மேல் பொலிஸ் தாக்குதல் நடந்திருக்கிற கதைகளும், சம்பவங்களும் ஏற்கனவே இருக்கின்றன. இணையத்தில் தேடினால் கண்டிப்பாகக் கிடைக்கும். கிடைத்தால் உங்கள் நண்பர் குமாரசாமியாரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படியா?

602404386-10242865059824321-761118794136

ஆரத்தழுவி அரவணைத்து செல்வதும்.....கருவாடுகளை ஏற்றுவது போல் ஏறுவதும் உங்களுக்கு நியாயம் என்றால்........?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

எண்ணி 17 பேர் 😂.

மாபெரும் கண்ட. ஆர்பாட்டமாம்😂.

பெடிகள் ஒரு தொகுதி குடு பார்ட்டி. ஒரு தொகுதி வாளை தூக்கிகொண்டு ஆளை ஆள் வெட்ட கொலைவெறியுடன் ஓடுது. ஒரு தொகுதி சோசல்மீடியாவில் படுத்து கிடக்கிது.

புலம்பெயர் ஆட்களுக்கு கொண்டாட்டம்தான்.

கொழும்பில் பெஸ்ட் கிளாஸில் புகையிரதம் எடுத்து காங்கேசன்துறையில் இறங்கலாம்.

ஒரு பழத்தட்டு ஊதுபத்தியுடன் தையிட்டி விகாரைக்கு போய் விகாராதிபதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கையில் நூலும் கட்டிவிட்டு புத்தர் பெருமானுக்கு சல்யூட் அடித்து;

அப்படியே பொடி நடையில் கடலுக்குள் குதித்து பின்னர் காங்கேசன்துறை உல்லாச விடுதிக்கு சென்று ஆட்டுக்கால் சூப்பு கோழிக்கறி ஒரு பிடி பிடித்து ஊத்தக்கூடியதுகளை உள்ளே ஊத்தியும்விட்டு;

திரும்ப பெஸ்ட் கிளாசில் ஏறினால் சுகமாய் கொழும்பு வந்திடலாம்.

இதுவே போதுமே வேறென்ன வேறென்ன வேண்டும். குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!

Post-war reconciliation நல்லாய் போய்க்கொண்டு உள்ளது.

Edited by நியாயம்

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நியாயம் said:

இதற்கு இடையிடையே…

அனுர நன்றகா செய்கிறார்…

இன்னும் செய்வார்…

இனவாதத்தை அப்படி உடனே களைய முடியாது….

இது போன்ற காவடி சிந்துகளையும் சந்திலே பாடி விட வேண்டும்….

மிக முக்கியமாக வேறு யாரேனும் தமிழர் வடக்குக்கு வந்து வாழ நினைத்தாலே அவர்கள் மீது வள் வள் என பாய்ந்து….beware of the dog but be more aware of the owner என்பதையும் நிலைநாட்ட வேண்டும்….

ஜெயவே வா….

புது சரணாய்…

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

அன்று திருகோணமலையில் அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை பாதுகாப்புக்காக போலீசார் எடுத்துச்சென்றதாக அரசாங்கம் ஒரு கதையை சொல்லி தப்பியது. அதையே இன்று திஸ்ஸ விகாரை விகாராதிபதி பிடித்து கொண்டு, திஸ்ஸ விகாரைக்கு பாதுகாப்பு தரும்படி தொங்கிக்கொண்டிருக்கிறார். ஒரு தடவை தப்புக்கு துணைபோனால், தொடர்ந்து துணைபோகவேண்டியது கட்டாயம். எது வந்தாலும் தலைகுனியாமல் சரியான வழியில் நடந்திருந்தால், தொடர்ந்து நீதியாக செல்ல முடியும். சந்தர்பத்திற்கேற்ப, நிர்பந்தத்திற்கேற்ப சொல்லவும் செய்யவும் முயன்றால் பாதியிலேயே பயணம் முடிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது…வந்து….அதாகப்பட்டது…நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்….

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

அன்று திருகோணமலையில் அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை பாதுகாப்புக்காக போலீசார் எடுத்துச்சென்றதாக அரசாங்கம் ஒரு கதையை சொல்லி தப்பியது. அதையே இன்று திஸ்ஸ விகாரை விகாராதிபதி பிடித்து கொண்டு, திஸ்ஸ விகாரைக்கு பாதுகாப்பு தரும்படி தொங்கிக்கொண்டிருக்கிறார். ஒரு தடவை தப்புக்கு துணைபோனால், தொடர்ந்து துணைபோகவேண்டியது கட்டாயம். எது வந்தாலும் தலைகுனியாமல் சரியான வழியில் நடந்திருந்தால், தொடர்ந்து நீதியாக செல்ல முடியும். சந்தர்பத்திற்கேற்ப, நிர்பந்தத்திற்கேற்ப சொல்லவும் செய்யவும் முயன்றால் பாதியிலேயே பயணம் முடிந்துவிடும்.

பார்த்து... மொள்ளமாக..அடியுங்கோ! "மயிலிறகு" வேணுமென்டால் சொல்லுங்கோ, யால சரணாலயத்தில் என் நண்பர் தான் மிருக வைத்தியராக இருக்கிறார். எடுப்பிச்சுத் தரலாம்😎!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.