Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து எனக்கு பெரிய வீட்டில் நிரந்தர வதிவுரிமை எடுத்து தராமல் ஓயமாட்டார்கள் போல இருக்கு.

இலங்கை சீரிசில் விளையாடியதை வைத்து இவர்களை பைனல் வரை கொண்டு வந்துள்ளேன்.

  • Replies 1.1k
  • Views 34k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

வென்று விட்டின‌ம் ஹா ஹா..............

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌ விளையாடும் இர‌ண்டு அணிக‌ளும் சூப்ப‌ர் 8க்கு போவ‌தை உறுதி செய்து விட்டின‌ம்.................நியுசிலாந்தும் ப‌ல‌மான‌ அணி தென் ஆபிரிக்காவும் ப‌ல‌மான‌ அணி.................

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து 58-3 6 ஓவர்

64-4

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் வீர‌ர்க‌ள் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை அவுட் ஆன‌தால் பெரிய ஸ்கோர் அடிக்க‌ வாய்ப்பில்லை....................

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா வெற்றிய‌ உறுதி செய்து விட்ட‌து

இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று கோப்பையை வென்றால் ம‌கிழ்ச்சி.................................

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, வீரப் பையன்26 said:

தென் ஆபிரிக்கா வெற்றிய‌ உறுதி செய்து விட்ட‌து

இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று கோப்பையை வென்றால் ம‌கிழ்ச்சி.................................

நாம ..இன்றைக்கும் ஜெயிச்சிட்டோம் மாறா...

2 hours ago, வீரப் பையன்26 said:

நியுசிலாந் வீர‌ர்க‌ள் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை அவுட் ஆன‌தால் பெரிய ஸ்கோர் அடிக்க‌ வாய்ப்பில்லை....................

பவர் பிளேஒவர் முக்கியமானது ..இதில் இன்று சவுத் அப்பிரிக்கா நிறைய ரன் அடித்துவிட்டது ..விக்கட் இழப்பின்றி..

9 hours ago, கிருபன் said:

ஒருத்தரும் அதிகூடிய ஓட்டங்கள் எடுக்கும் அணி அயர்லாந்து எனத் தெரிவு செய்யவில்லை. இந்தியா நமீபியாவுடன் கிடைத்த சந்தர்ப்பத்தை வீணடித்துவிட்டதால் பலருக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்பில்லை!

அட ராமா..கண்ணுக்கு எண்ணெய் விட்டுத்தான் தேடியிருக்கோணும் ....பரவாயில்லை ...நாள் இருக்குத்தானே..

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, alvayan said:

நாம ..இன்றைக்கும் ஜெயிச்சிட்டோம் மாறா...

பவர் பிளேஒவர் முக்கியமானது ..இதில் இன்று சவுத் அப்பிரிக்கா நிறைய ரன் அடித்துவிட்டது ..விக்கட் இழப்பின்றி..

அட ராமா..கண்ணுக்கு எண்ணெய் விட்டுத்தான் தேடியிருக்கோணும் ....பரவாயில்லை ...நாள் இருக்குத்தானே..

தென் ஆபிரிக்கா நியுசிலாந் விளையாட்டில் விறுவிறுப்பே இல்லை

சின்ன‌ நெருக்க‌டி கூட‌ நியுசிலாந் வீர‌ர்க‌ள் கொடுக்க‌ வில்லை................................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜோர்ஜ் டொக்ரலின் ஆட்டமிழக்காத விளாசலான 35 (09 பந்துகள்) ஓட்டங்களோடும் 5 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. இதுவே அணியொன்றின் தற்போதைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியில் ஆமிர் கலீம் அதிரடியாக 50 (29 பந்துகள்) ஓட்டங்கள், ஹம்மாட் மிர்ஸா 46 (37 பந்துகள்) ஓட்டங்களைப் பெற்றபோதும் மற்றையோர் வேகமாகப் பின்தொடர நிலைத்து ஆடமுடியாததால் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியடைந்தது.

முடிவு: அயர்லாந்து அணி 96 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

அனைவரும் அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.


இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து அணி, அணித்தலைவர் றிச்சி பெரிங்டனின் அதிரடியான 49 (32 பந்துகள்), மைக்கல் ஜோன்ஸின் விரைவான 33 (20 பந்துகள்) ஓட்டங்களுடன் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, டொம் பன்டனின் ஆட்டமிழக்காத புயல்வேக 63 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜேக்கப் பெத்தெல்லின் நிதானமான 32 (28 பந்துகள்) ஓட்டங்களோடும் 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 155 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் இல்லை.


இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி, மார்க் சப்மனின் அதிரடியான 48 (26 பந்துகள்) ஓட்டங்கள், டரைல் மிற்செல்லின் விரைவான 32 (24 பந்துகள்) ஓட்டங்கள், பின் அலெனின் வேகமான 31 (17 பந்துகள்) ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. மார்கோ ஜன்சன் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் எய்டன் மார்க்கம் முதலில் இருந்தே பந்துகளை எல்லைக் கோட்டுக்கு வெளியே தொடர்ச்சியாக அடித்தவண்ணம் இருந்ததாலும், மற்றையோரும் தமது பங்களிப்பாக விரைவாக அடித்ததாலும், நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் திணறிக்கொண்டிருந்தனர். இறுதியில் எய்டன் மார்க்கத்தின் மரண அடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 86 (44 பந்துகள்) ஓட்டங்களின் உதவியுடன் 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கை அடைந்தது.

முடிவு: தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5148.jpeg

@alvayan முதல்வர் நாற்காலியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றார். எனினும் @goshan_che அனைவரையும் தாங்கும் வலிமையுடன் தான் இருப்பதால் கீழே இறங்கிவிட்டார்,

large.IMG_5040.png

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

@alvayan முதல்வர் நாற்காலியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றார். எனினும் @goshan_che அனைவரையும் தாங்கும் வலிமையுடன் தான் இருப்பதால் கீழே இறங்கிவிட்டார்,

large.IMG_5040.png

நன்றி கிருபஜி......நீங்கள் போட்ட படத்தின் பிரகாரம் ...இந்த முட்டுக்கொடுப்பவர் எப்ப கவிழ்ப்பாரோ என்று பயந்தபடிதான் ..இன்றும் முதலமைச்சர்...பதவியில் அமர்கின்றேன்....நன்றி கோசாஜி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஞாயிறு 15 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

NEP எதிர் WI

 

ஒரே ஒருவர் மாத்திரம் நேபாளம் அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

நேபாளம்

  • வாத்தியார்

 

இப்போட்டியில் போட்டியில் @வாத்தியார் க்கு புள்ளிகள் எடுக்க யோகம் உள்ளதா? lady-beetle_1f41e.webp

 

 

backhand-index-pointing-down_1f447.png

26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

NAM எதிர் USA

13 பேர் நமீபியா அணி வெல்வதாகவும்  10 பேர் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

நமீபியா

  • ஏராளன்

  • வசீ

  • புலவர்

  • ஈழப்பிரியன்

  • நியூ பலன்ஸ்

  • கறுப்பி

  • வாதவூரான்

  • கிருபன்

  • கோஷான் சே

  • அஹஸ்தியன்

  • நியாயம்

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

ஐக்கிய அமெரிக்கா

  • செம்பாட்டான்

  • சுவைப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • சுவி

  • கந்தப்பு

  • ரசோதரன்

  • பிரபா

  • நிலாமதி

இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? tropical-fish_1f420.webp

backhand-index-pointing-down_1f447.png

27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான்

IND எதிர் PAK

20 பேர் இந்தியா அணி வெல்வதாகவும்  மூன்று பேர் மாத்திரம் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

பாகிஸ்தான்

  • புலவர்

  • ஈழப்பிரியன்

  • பிரபா

இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்? tiger-face_1f42f.webp

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, alvayan said:

.நன்றி கோசாஜி

சந்திர சேகர் ஆட்சிக்கு, ரஜீவ் காந்தி கொடுத்த ஆதரவு போலவே எமது ஆதரவும். எப்ப கவுப்பம் எண்டு எமக்கே தெரியாது ஆனால் கவுப்பம்😂

38 minutes ago, கிருபன் said:

கீழே இறங்கிவிட்டார்,

Interest rate இருக்கிற நிலைல உவர் வாதாவூரருக்கு ஓசில வீடும் கேக்குதாம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நமீபியா

  • ஏராளன்

  • வசீ

  • புலவர்

  • ஈழப்பிரியன்

  • நியூ பலன்ஸ்

  • கறுப்பி

  • வாதவூரான்

  • கிருபன்

  • கோஷான் சே

  • அஹஸ்தியன்

  • நியாயம்

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

1 hour ago, கிருபன் said:

பாகிஸ்தான்

  • புலவர்

  • ஈழப்பிரியன்

  • பிரபா

எனக்கு நாளைக்கு கோஷானுக்கு துணையாக பின்வாங்கிலுக்கு போவதற்கு சந்தர்பம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புலவர் said:

எனக்கு நாளைக்கு கோஷானுக்கு துணையாக பின்வாங்கிலுக்கு போவதற்கு சந்தர்பம் இருக்கு.

பாக்கிஸ்தான் இந்தியாவை வெல்ல‌க் கூடும்

இந்தியா சார்பாய் த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி தான் விக்கேட் வேட்டை..............ம‌ற்ற‌ இந்திய‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ப‌ந்துக்கு சின்ன‌ அணிக்க‌ள் அடிக்கின‌ம்

பாக்கிஸ்தான் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ உசாரா நிக்கின‌ம்

நாளையான் போட்டி தான் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ போட்டிக‌ளை விட‌ சிற‌ப்பாக‌ இருக்கும்..............................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

பாக்கிஸ்தான் இந்தியாவை வெல்ல‌க் கூடும்

இந்தியா சார்பாய் த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி தான் விக்கேட் வேட்டை..............ம‌ற்ற‌ இந்திய‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ப‌ந்துக்கு சின்ன‌ அணிக்க‌ள் அடிக்கின‌ம்

பாக்கிஸ்தான் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ உசாரா நிக்கின‌ம்

நாளையான் போட்டி தான் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ போட்டிக‌ளை விட‌ சிற‌ப்பாக‌ இருக்கும்..............................

இந்தியனுக்கு பாகிஸ்தான் ரீமை பார்த்தவுடன் அகோரவெறிஏறும் ...அது அநேகமாக வெற்றி அடையவைக்கும் ...சிலவேளை குழப்பியும் அடிக்கும் ..

அபிசேக் சர்மாவில் முன்னைய உசாரை காணாவில்லை .. நடிப்போ தெரியாது

பாக்கி வீரர்கள் வாய்ச்சவடாலுக்கு குறைவில்லை ..பலதடவை மண்கவ்வினவை

மைதான ஆதரவு பாக்கிக்கே கூடவிருக்கும்...மோடி 4 பில்லியன் கொடுத்தாலும் ...நாய்வாலை நிமிர்த்த முடியாது

இந்திய அணியின் பாதுகாப்பு கேள்விக்குறியானதே....மிக அண்மையில் நடந்த துப்பாக்கிசூடுகளைப் பார்க்கும்போது ..மைதானப் பாதுகாப்பு கேள்விகுறிதான்...கடவுள்தான் துணை

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.

மீண்டும் ஒர தடவை பலசாலி என்று நிரூபிக்க முன்வந்த @goshan_che க்குப் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.

மீண்டும் ஒர தடவை பலசாலி என்று நிரூபிக்க முன்வந்த @goshan_che க்குப் பாராட்டுக்கள்.

நன்றி பிரியன்சார் ...பலசாலி நன்றாகத்தான் உதவுவார் ....கடைசியில் பாய்ந்தடித்து முன்னுக்கும் நிற்பார்...பார்த்து சூதானமாக இருங்கோ ( செம்பாட்டனுக்கு நன்றி)

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஒரு வர்ணணையாளருக்குரிய ஆழத்துடன், மிக நேர்த்தியான அலசல்.

1996 வட்மோர் இலங்கை அணியில் ஏற்படுத்திய மாற்றம் போல இது இருக்கிறது.

ஆனால் ஒரு போட்டியை வைத்து சொல்ல முடியாது. Consistency இருக்குமா ?

இது கடவுளுக்கே நடந்த பிறகுதான் தெரியுமாம்😂

நல்ல விடயம்தான் அண்ணை. வழமையாக எங்காத்துகாரரும் கோர்ட்டுக்கு போறார் என போட்டிக்கு வரும் சிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் போன்ற full members உம் இந்த முறை உத்வேகமாக விளையாடுகிறார்கள்.

20 இல் கடைசி 12 நாடுகள் தமக்குள் அடிக்கடி விளையாட வேண்டும்.

ஊக்குவிப்புக்கு நன்றி.

அவர்கள் எவ்வாறு இலங்கையின் சுழல்பந்தைச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதில் தெரியும். சுழல் பந்திற்கு தடுமாறுவார்கள் என்றே நினைக்கிறேன். இலங்கை வெல்லும் என்றுதான் நினைக்கிறேன்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

1983 உலகக் கிண்ணத்தில் சிம்பாப்வே அவுஸ்ரேலியாவை வென்று தங்கள் வருகையை உலகுக்கு அறிவித்தார்கள். அதன் பின் எழுந்து வந்த சிம்பாப்வே அணியை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். பிளவர் சகோதர்களின் வருகை அணியை எங்கேயோ கொண்டு போனது. 90களில் அந்த அணி, நெருப்பு அணி. டெஸ்டில் பாகிஸ்தானை வென்றவர்கள்.

அரசியலால் சின்னாபின்னமான அணி. இப்போதுதான் மெல்ல எழுந்து வருகிறார்கள். இந்த வெற்றி, அவர்களுக்கு மீண்டும் ஒரு உத்வேகம் குடுக்குமா. அந்த 90கள் திரும்பவும் நடக்குமா.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

1983 உலகக் கிண்ணத்தில் சிம்பாப்வே அவுஸ்ரேலியாவை வென்று தங்கள் வருகையை உலகுக்கு அறிவித்தார்கள். அதன் பின் எழுந்து வந்த சிம்பாப்வே அணியை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். பிளவர் சகோதர்களின் வருகை அணியை எங்கேயோ கொண்டு போனது. 90களில் அந்த அணி, நெருப்பு அணி. டெஸ்டில் பாகிஸ்தானை வென்றவர்கள்.

அரசியலால் சின்னாபின்னமான அணி. இப்போதுதான் மெல்ல எழுந்து வருகிறார்கள். இந்த வெற்றி, அவர்களுக்கு மீண்டும் ஒரு உத்வேகம் குடுக்குமா. அந்த 90கள் திரும்பவும் நடக்குமா.

ஓம்…

1992 உலக கிண்ணத்தில் சிம்பாப்வே 314 அடிக்க அதை இலங்கை திரத்தி, அர்ஜுன ரணதுங்க, சம்பக்க இராமநாயக்க கடைசியாக நிண்டு 315 அடித்ததெல்லாம் வேறலெவல் கிரிகெட். அப்போ டேவிட் ஹொட்டன் அவர்களின் கேப்டன்.

அப்போதும் எவன்ஸ் எண்டு ஒரு வேக பந்து வீச்சாளர் இருந்தார். கோழி பண்ணை வைத்திருந்தார்.

ஹென்றி ஒலங்கோ. வினோதமான சிகை கொண்ட கறுப்பின வீரர். அவர்களின் முதல் முழு கறுப்பின வீரரும் என நினைக்கிறேன்.

1999 உலக கோப்பை நேரம், முகாபேயின் அடாவடியை எதிர்த்து இவரும் அண்டி பிளவரும் குரல் கொடுத்தனர். அத்தோடு கேரியர் ஓவர்.

அண்டி பிளவர் பின்னாளில் இங்கிலாந்து கோச் ஆகினார்.

அப்போ இங்கிலாந்துக்கு விளையாடிய க்ரேம் ஹிக், ரொபின் குக் கூட சிம்பாப்வே அடி உள்ளோரே.

அதேபோல்தான் இப்போ சாம் கரன் மற்றும் சகோதரர்களும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.

மனமார்ந்த நன்றிகள் புலவர் ஐயா..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.

மீண்டும் ஒர தடவை பலசாலி என்று நிரூபிக்க முன்வந்த @goshan_che க்குப் பாராட்டுக்கள்.

எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது😂

(அறிஞர் அண்ணாவின் கல்லறை வாசகம்).

  • கருத்துக்கள உறவுகள்

6.3 ஓவர் முடிவில் நேபாளம் 23 - 4 . தொடரின் குறைந்த ஒட்டம் எடுக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கந்தப்பு said:

6.3 ஓவர் முடிவில் நேபாளம் 23 - 4 . தொடரின் குறைந்த ஒட்டம் எடுக்குமா?

நேபாளம் நல்லாத்தானே விளையாடினார்கள்... என்ன நடக்குது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.