Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் சிறு விறுவிறுப்பு கூட‌ இல்லை................பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ள் இந்தியாவுக்கு சிறு ப‌ய‌த்தை காட்ட‌வும் இல்லை..............வும்ரான்ட‌ முத‌ல் ப‌ந்துக்கு சிக்ஸ் அடிச்ச‌ பாக்கிஸ்தான் இள‌ம் வீர‌ர் வும்ரா அடுத்த‌ ப‌ந்தை யோக்க‌ரா போடுவார் என்று எதிர் பார்க்க‌ வில்லை

பாக்கிஸ்தான் தொட‌க்க‌ இள‌ம் வீர‌ர் இனி வ‌ரும் விளையாட்டில் சாதிப்பார்

பெடிய‌ன் வேர‌ 4ஓவ‌ர் போட்டு மூன்று விக்கேட் எடுத்த‌து பாராட்ட‌ த‌க்க‌து....................ம‌ட்டைய‌டியில் தான் சுத‌ப்பி விட்டார்..............................

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நியாயம் said:

போட்டிகள் முடிஞ்சு எவ்வளவு நேரம் ஆயிற்று. கிருபன் ஐயா கொஞ்சம் ஒருக்கால் வந்து இன்றைக்கு கதிரையில் குந்துவது யார் சுத்த வர நின்று கதிரையை பிடித்து ஆட்டுவது யார் யார் என்ற ஒழுங்கை சட்டு புட்டு என்று அறிவிச்சுவிட்டு போனால் நாங்கள் எங்கள் வேலைகளை பார்க்க போயிடலாம்.

இன்று 250 கிலோமீற்றர் மழைக்குள் பயணம் செய்யவேண்டியிருந்ததால் ஒரு மட்ச்சும் பார்க்கவில்லை! திரும்பவும் 250 கிலோமீற்றர் ஓடி, வந்த கையுடன் முதல்வேலையாகப் புள்ளிகளைத்தான் கணக்கிட்டேன்.☺️ ஆவலுடன் காத்திருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் 🤩

23 minutes ago, செம்பாட்டான் said:

ஒரு நியாயம் வேண்டாமாய்யா 😁

அதுதானே!😜

  • கருத்துக்கள உறவுகள்

2 minutes ago, கிருபன் said:

இன்று 250 கிலோமீற்றர் மழைக்குள் பயணம் செய்யவேண்டியிருந்ததால் ஒரு மட்ச்சும் பார்க்கவில்லை! திரும்பவும் 250 கிலோமீற்றர் ஓடி, வந்த கையுடன் முதல்வேலையாகப் புள்ளிகளைத்தான் கணக்கிட்டேன்.☺️ ஆவலுடன் காத்திருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் 🤩

அதுதானே!😜

ட‌ச்சு புச்சு என்னு

நாளைக்கு நாங்க‌ள் தெரிவு செய்த‌ அணிக‌ளின் ப‌ட்டிய‌லை போடுங்கோ பெரிய‌ப்பு😄😛...........................

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு அப்கானிஸ்தான் வெல்லுது

முத‌ல் வெற்றி நாளைக்கே................தோக்க‌ வாய்ப்பு மிக‌ மிக‌ குறைவு................அப்கானிஸ்தான் இனி வ‌ரும் விளையாட்டுக்க‌ளை வென்றாலும் சூப்ப‌ர்8க்கு போக‌ முடியாது..................தென் ஆபிரிக்கா கூட‌ ந‌ட‌ந்த‌ விளையாட்டை யாரும் எளிதில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம்.................................

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி, டிபேந்திர சிங் ஐரீயின் வேகமான 58 (47 பந்துகளில்) ஓட்டங்களைத் தவிர மற்றையோர் துடுப்பாட்டத்தில் நிலைத்து ஆடாததால் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் ஆட்டமிழக்காத அதிரடியான 61 (44 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிம்ரோன் ஹெட்மயரின் ஆட்டமிழக்காத வேகமான 46 (32) ஓட்டங்களுடனும் 15.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் 134 ஓட்டங்கள் எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்கு முதலாவது அணியாகவும் தகுதி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த @வாத்தியார் க்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி சஞ்சய் கிருஷ்ணமூர்த்தியின் ஆட்டமிழக்காத மின்னல்வேக 68 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும், மொனாக் பட்டேலின் புயல்வேக 52 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லோரன் ஸ்டீன்கம்ப்பின் வேகமான 58 (39 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர மற்றையோர் துடுப்பாட்டத்தில் நிலைத்து ஆடிப் பங்களிக்காததால் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: ஐக்கிய அமெரிக்கா அணி 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்டஇந்திய அணி இஷன் கிஷானின் மின்னல்வேக 77 (40 பந்துகள்) ஓட்டங்களுடனும், சூரியகுமார் யாதவின் நிதானமான 32 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பற்கொடுத்து வெளியேறியதால் 34 ஓட்டங்களிலேயே 4 முக்கிய நட்சத்திர விக்கெட்டுகளை இழந்திருந்தது. விக்கெட் காப்பாளர் உஸ்மான் கான் அதிரடியாக 44 ஓட்டங்களை எடுத்த போதிலும் அவரின் விக்கெட் வீழ்ந்த பின்னர் எவரும் நிலைத்து ஆடாததால் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

முடிவு: இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5163.jpeg

முதல்வர் நாற்காலியிலும் இறுதி சுமைதாங்கியிலும் மாற்றம் இல்லை!

முத‌ல்வ‌ர் அல்வாய‌ன்னுக்கு வாழ்த்துக்க‌ள்..................

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

இன்று 250 கிலோமீற்றர் மழைக்குள் பயணம் செய்யவேண்டியிருந்ததால் ஒரு மட்ச்சும் பார்க்கவில்லை! திரும்பவும் 250 கிலோமீற்றர் ஓடி, வந்த கையுடன் முதல்வேலையாகப் புள்ளிகளைத்தான் கணக்கிட்டேன்.☺️ ஆவலுடன் காத்திருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் 🤩

அதுதானே!😜

உங்கள் கடமை புல்லரிக்க வைக்குது. 💥

அடிக்கடி 250 km போவீங்கள் போல. எப்போதும் கவனமாவே ஓடுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை திங்கள் 16 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம்

AFG எதிர் UAE

22 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

ஐக்கிய அமீரகம்

  • நிலாமதி

இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்குமா? man-facepalming_1f926-200d-2642-fe0f.png

backhand-index-pointing-down_1f447.png

29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி

ENG எதிர் ITA

21 பேர் இங்கிலாந்து அணி வெல்வதாகவும்  இருவர் மாத்திரம் இத்தாலி அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

இத்தாலி

  • சுவி

  • நிலாமதி

இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? dolphin_1f42c.gif

backhand-index-pointing-down_1f447.png

30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா

AUS எதிர் SL

18 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்வதாகவும்  ஐந்து பேர் மாத்திரம் சிறிலங்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

சிறிலங்கா

  • கறுப்பி

  • வாதவூரான்

  • கிருபன்

  • கோஷான் சே

  • ரசோதரன்

இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்? lion_1f981.png

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து எதிர் இத்தாலி

இது அடிக்கடி உதை பநதாட்டத்தில் பார்க்கும் போட்டி. இப்போது துடுப்பந்தாட்டத்திலும்.

இத்தாலிக்கு ஏழு கிரகமும் ஒரு சேர அமைஞ்சா, இங்கிலாந்த ஓட விடலாம். ஏனென்றால், இங்கிலாந்து அணி அப்பிடி.

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரன் வீட்டையே சுத்தி, சுத்தி நோட்டம் விடுறார்….

வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை 😂

6 minutes ago, கிருபன் said:

சிறிலங்கா

  • கறுப்பி

  • வாதவூரான்

  • கிருபன்

  • கோஷான் சே

  • ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந்திட‌ம் நாளைக்கு இத்தாலி வாங்கி க‌ட்ட‌ப் போகின‌ம் ஹா ஹா.....................

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

வாதவூரன் வீட்டையே சுத்தி, சுத்தி நோட்டம் விடுறார்….

வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை 😂

அவுஸ்ரேலியா ப‌ழைய‌ அவுஸ்ரேலியா அணி கிடையாது..........அவேன்ட‌ ஆதிக்க‌ம் 2007உல‌க‌ கோப்பையோட‌ ச‌ரி

அதுக்கு பிற‌க்கு ம‌ற்ற‌ நாடுக‌ள் அவைய‌ முக்கிய‌மான‌ ப‌ல‌ விளையாட்டில் வென்று இருக்கின‌ம்

இப்போது உள்ள‌ அவுஸ்ரேலியா அணியின் ப‌ந்து வீச்சு ச‌ரி இல்லை

நாத‌ல் எலிஸ் இவ‌ரை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு ந‌ம்பிக்கை த‌ரும் ப‌டி இல்லை

நாளை இல‌ங்கை வெல்ல‌க் கூடும் அப்ப‌டி வென்றால் உங்க‌ட‌ ஆத்தில் அடை ம‌ழை தான்.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, செம்பாட்டான் said:

உங்கள் கடமை புல்லரிக்க வைக்குது. 💥

அடிக்கடி 250 km போவீங்கள் போல. எப்போதும் கவனமாவே ஓடுங்க.

சுப்பர் 8 இறுதி சில மட்சுகளுக்கு புள்ளிகள் கணக்கிட நேரம் கிடைக்காது. தம்பர் ஈரானுக்கு அடிக்கிறாரோ இல்லையோ, நான் மத்திய கிழக்கில் நாலைந்து நாட்கள் நிற்பேன்!

கூகிள் ஷீற் அப்பில் sort செய்யும் வசதியை ஏன் வைக்கவில்லை என்று தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வீரப் பையன்26 said:

அவுஸ்ரேலியா ப‌ழைய‌ அவுஸ்ரேலியா அணி கிடையாது..........அவேன்ட‌ ஆதிக்க‌ம் 2007உல‌க‌ கோப்பையோட‌ ச‌ரி

அதுக்கு பிற‌க்கு ம‌ற்ற‌ நாடுக‌ள் அவைய‌ முக்கிய‌மான‌ ப‌ல‌ விளையாட்டில் வென்று இருக்கின‌ம்

இப்போது உள்ள‌ அவுஸ்ரேலியா அணியின் ப‌ந்து வீச்சு ச‌ரி இல்லை

நாத‌ல் எலிஸ் இவ‌ரை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு ந‌ம்பிக்கை த‌ரும் ப‌டி இல்லை

நாளை இல‌ங்கை வெல்ல‌க் கூடும் அப்ப‌டி வென்றால் உங்க‌ட‌ ஆத்தில் அடை ம‌ழை தான்.......................

பாப்பம். நான் அவுஸ் போட்டியில் மேலே போகும் என கணித்தும் உள்ளேன். எனவே நாளைக்கு அவுஸ் வெண்டாலும் பின்னடிக்கு உதவும்😂.

11 minutes ago, கிருபன் said:

சுப்பர் 8 இறுதி சில மட்சுகளுக்கு புள்ளிகள் கணக்கிட நேரம் கிடைக்காது. தம்பர் ஈரானுக்கு அடிக்கிறாரோ இல்லையோ, நான் மத்திய கிழக்கில் நாலைந்து நாட்கள் நிற்பேன்!

கூகிள் ஷீற் அப்பில் sort செய்யும் வசதியை ஏன் வைக்கவில்லை என்று தெரியவில்லை!

இத்தோட போட்டியை கான்சல் பண்ணி, யாரும் வெல்லவில்லை என அறிவித்தாலும் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை😂.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

சுப்பர் 8 இறுதி சில மட்சுகளுக்கு புள்ளிகள் கணக்கிட நேரம் கிடைக்காது. தம்பர் ஈரானுக்கு அடிக்கிறாரோ இல்லையோ, நான் மத்திய கிழக்கில் நாலைந்து நாட்கள் நிற்பேன்!

கூகிள் ஷீற் அப்பில் sort செய்யும் வசதியை ஏன் வைக்கவில்லை என்று தெரியவில்லை!

நாங்கள் ஏதாவது உதவி செய்யலாம் என்றால் சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

.அப்கானிஸ்தான் இனி வ‌ரும் விளையாட்டுக்க‌ளை வென்றாலும் சூப்ப‌ர்8க்கு போக‌ முடியாது..................தென் ஆபிரிக்கா கூட‌ ந‌ட‌ந்த‌ விளையாட்டை யாரும் எளிதில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம்.................................

நியுசிலாந்து கனடாவுடன் தோற்றால் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இங்லாந்திட‌ம் நாளைக்கு இத்தாலி வாங்கி க‌ட்ட‌ப் போகின‌ம் ஹா ஹா.....................

அப்படி நடந்தால் இத்தாலி, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து( நேபாளத்தினை வென்றால்)ஒரே புள்ளிகள் இருக்கும். ஒட்ட விகித அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் நாடு தீர்மானிக்கப்படும்.

இதுவரை நடந்த போட்டிகளில் மேற்கிந்தியா தீவு, இந்தியா ஆகிய இரு நாடுகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வாதவூரன் வீட்டையே சுத்தி, சுத்தி நோட்டம் விடுறார்….

வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை 😂

நாயை அவிட்டு விடுங்க.

முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

நாளைக்கு அவுஸ்ரேலியா இல‌ங்கையை வெல்ல‌னும்

இல‌ங்கையிட‌ம் தோத்தால் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளிய‌

நாளையான் போட்டி மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்....................

இலங்கையுடன் தோற்றாலும் அவுஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு போவதற்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது சிம்பாவே மிகுதியாக இருக்கும் 2 போடிகளிலிலும் (இலங்கை, அயர்லாந்து ) தோற்கவேண்டும். அவுஸ்திரேலியா ஓமனை வெல்லவேண்டும். அவுஸ்திரேலியா, அயர்லாந்து, சிம்பாவே ஆகிய நாடுகள் ஒரே புள்ளியில் இருக்கும். ஒட்டவிகிதம் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு செல்லும் நாடு தெரிவு செய்யப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, goshan_che said:

இத்தோட போட்டியை கான்சல் பண்ணி, யாரும் வெல்லவில்லை என அறிவித்தாலும் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை😂.

எப்பிடியாவது.... என்னவாவது செய்து.... மேல வரலாம் என்று பாக்கிறியலோ. 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செம்பாட்டான் said:

எப்பிடியாவது.... என்னவாவது செய்து.... மேல வரலாம் என்று பாக்கிறியலோ. 😁

அப்படி ஒரு கெட்ட எண்ணமும் இல்லை😂

பாக்கிஸ்தான் இந்தியாவை வெண்டாலும் வெல்லலாம்….நான் வீட்டில் இருந்து வெளியேறுவது மட்டும் நடக்காது என்பது எழுதப்படாத விதி.

கணிப்பு அப்படி😂

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, கந்தப்பு said:

இலங்கையுடன் தோற்றாலும் அவுஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு போவதற்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது சிம்பாவே மிகுதியாக இருக்கும் 2 போடிகளிலிலும் (இலங்கை, அயர்லாந்து ) தோற்கவேண்டும். அவுஸ்திரேலியா ஓமனை வெல்லவேண்டும். அவுஸ்திரேலியா, அயர்லாந்து, சிம்பாவே ஆகிய நாடுகள் ஒரே புள்ளியில் இருக்கும். ஒட்டவிகிதம் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு செல்லும் நாடு தெரிவு செய்யப்படும்.

அப்பிடி ஒன்றுதான் நடக்கும் என்று நினைக்கிறேன். அவுஸ்ரேலியா, சிம்பாப்வே, இலங்கை ஒரே புள்ளிகள் பெறலாம்.

இலங்கையின் ஓட்ட விகிதம் மிகவும் கூட. தோற்பதை மிகவும் மோசமாகத் தோக்காட்டி சரி.

Edited by செம்பாட்டான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, செம்பாட்டான் said:

நாங்கள் ஏதாவது உதவி செய்யலாம் என்றால் சொல்லுங்க.

Sorting பண்ணி unofficial rankings கொடுக்க உதவி தேவைப்படலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வீரப் பையன்26 said:

அவுஸ்ரேலியா ப‌ழைய‌ அவுஸ்ரேலியா அணி கிடையாது..........அவேன்ட‌ ஆதிக்க‌ம் 2007உல‌க‌ கோப்பையோட‌ ச‌ரி

அதுக்கு பிற‌க்கு ம‌ற்ற‌ நாடுக‌ள் அவைய‌ முக்கிய‌மான‌ ப‌ல‌ விளையாட்டில் வென்று இருக்கின‌ம்

இப்போது உள்ள‌ அவுஸ்ரேலியா அணியின் ப‌ந்து வீச்சு ச‌ரி இல்லை

நாத‌ல் எலிஸ் இவ‌ரை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு ந‌ம்பிக்கை த‌ரும் ப‌டி இல்லை

நாளை இல‌ங்கை வெல்ல‌க் கூடும் அப்ப‌டி வென்றால் உங்க‌ட‌ ஆத்தில் அடை ம‌ழை தான்.......................

இதுதான் சாம்பியன் அணிக்கும் சாதாரண அணிகளுக்குள்ள வித்தியாசம், அவுஸ்ரேலியா மோசமான அணியாக இருந்தாலும் அவர்கள் இக்கட்டான நிலையிலிருந்து திரும்பி வருவார்கள்.

இன்றைய போட்டியில் அவுஸ்ரேலியா பெரியளவில் திரும்புவார்கள், மறுவளமாக என்னதான் இலங்கை அணி திறமை இருந்தாலும் சரியான நேரத்தில் சொதப்புவார்கள்.

10 hours ago, வீரப் பையன்26 said:

சிம்பாவே சூப்ப‌ர்8க்கு போவ‌து என்றால் அய‌ர்லாந்தை வெல்ல‌னும்

சிம்பாவே அய‌ர்லாந்தை வென்றால் புள்ளி ப‌ட்டிய‌லில் சிம்பாவே ந‌ல்ல‌ நிலையில்............................

சிம்பாவே இலங்கை போட்டிகள் இன்றைய அவுஸ்ரேலிய இலங்கை போட்டிகள் போல சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கந்தப்பு said:

நியுசிலாந்து கனடாவுடன் தோற்றால் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.

க‌ந்த‌ப்பு அண்ணா இது ந‌ட‌க்க்குமா............க‌ன‌டாவை நியுசிலாந் வீர‌ர்க‌ள் துவைச்சு எடுத்து போடுவின‌ம்....................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இதுதான் சாம்பியன் அணிக்கும் சாதாரண அணிகளுக்குள்ள வித்தியாசம், அவுஸ்ரேலியா மோசமான அணியாக இருந்தாலும் அவர்கள் இக்கட்டான நிலையிலிருந்து திரும்பி வருவார்கள்.

இன்றைய போட்டியில் அவுஸ்ரேலியா பெரியளவில் திரும்புவார்கள், மறுவளமாக என்னதான் இலங்கை அணி திறமை இருந்தாலும் சரியான நேரத்தில் சொதப்புவார்கள்.

சிம்பாவே இலங்கை போட்டிகள் இன்றைய அவுஸ்ரேலிய இலங்கை போட்டிகள் போல சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.

இல‌ங்கை வீர‌ர்க‌ள் அவுஸ்ரேலியாவிட‌ம் ச‌ர‌ன் அடைய‌ போகின‌ம்........................அவுஸ்ரேலியா அணி ப‌ந்து வீச்சை ச‌ரி செய்தால் மீத‌ம் உள்ள‌ மூன்று விளையாட்டையும் வெல்லாம்.......................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.