Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழை தொட‌ர்ந்து பெய்வ‌தால் இன்று விளையாட்டு ந‌ட‌க்க‌ வாய்ப்பு மிக‌ குறைவு..............இர‌ண்டு அணிக‌ளுக்கும் ஒவ்வொரு புள்ளி கொடுப்பின‌ம்.......................

ம‌ழை தொட‌ர்ந்து பெய்வ‌தால் இன்று விளையாட்டு ந‌ட‌க்க‌ வாய்ப்பு மிக‌ குறைவு..............இர‌ண்டு அணிக‌ளுக்கும் ஒவ்வொரு புள்ளி கொடுப்பின‌ம்.......................

  • Replies 1.2k
  • Views 36.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ம‌ழையால் இந்த‌ விளையாட்டு முத‌ல் த‌ட‌வை த‌டை ப‌ட்டு இருக்கு.........................

  • கருத்துக்கள உறவுகள்

ஓவ‌ர்க‌ள் குறைக்க‌ப் ப‌டும் போல‌ தெரியுது.................

  • கருத்துக்கள உறவுகள்

6:15 PM is a cut off time for 5 over match!!

  • கருத்துக்கள உறவுகள்

5ஓவ‌ர் விளையாட்டு.....................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

6:15 PM is a cut off time for 5 over match!!

விளையாட்டு கைவிட‌ப் ப‌ட்டு இருக்கு.................இர‌ண்டு அணிக‌ளுக்கும் ஒவ்வொரு புள்ளிக‌ள்....................

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி கைவிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவும் அயர்லாந்தும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்கள். சிம்பாவே சூப்பர் 8 க்கு தெரிவாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் 8 க்கு சிம்பாவே தெரிவாகி உள்ளதால் 2028 இல் அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் நடைபெறவுள்ள t20 உலகக் கிண்ண போட்டியில் நேரடியாக தெரிவு செய்யப்படும் 12 நாடுகளில் ஒன்றாக சிம்பாவே தெரிவு செய்யப்பட்டு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Eppothum Thamizhan said:

ஆனால் நானும் அதையே தெரிவு செய்துள்ளேனே!!😜

🤣.............

மழை வந்து இந்தப் போட்டியில் ஆக்டோபஸை காப்பாற்றி விட்டது போல..................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் வெளியேற என்ன காரணம்? ஐ பில் எல் செய்த சூனியமோ?

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

நேபாளம்

  • சுவைப்பிரியன்

  • அல்வாயன்

  • கறுப்பி

  • கிருபன்

  • கோஷான் சே

  • கந்தப்பு

என்ன இன்று உங்க காட்டில மழை போல.

கோசானை பதியவிட்டு கிழப்பிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன இன்று உங்க காட்டில மழை போல.

கோசானை பதியவிட்டு கிழப்பிவிட்டது.

முட்டை ஹா ஹா😄😛.....................

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புலவர் said:

நான் அவுஸ் கப்பைத் தூக்கும் என்று கணிச்சன் இப்படிப் பெரிய ஈப்பா சொருகிட்டாங்களே.இனி என்க்கும் சுவியருக்கும்தான் போட்டி .

அவர்கள் இறுதிப் போட்டிக்குப் போகும் என்று ஞானும். கடைசியா கன பேருக்கு ஆப்புதான்

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன இன்று உங்க காட்டில மழை போல.

கோசானை பதியவிட்டு கிழப்பிவிட்டது.

நேபாளமும் விடாம அடிக்கினம். ஆருக்கு முட்டை.

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவ‌து பாட்ன‌ சிப்பின் அடி அமோக‌ம்

வாழ்த்துக்க‌ள் நேபால் அணிக்கு................................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

மூன்றாவ‌து பாட்ன‌ சிப்பின் அடி அமோக‌ம்

வாழ்த்துக்க‌ள் நேபால் அணிக்கு................................

எங்களுக்கு முட்டைகள் கிடைத்தாலும் எதிரணியை வாழ்த்தும் அந்த மனது தான் கடவுள், பையன் சார்......................🤣.

நல்ல ஒரு போட்டி...............👍.

  • கருத்துக்கள உறவுகள்

நேபால் அணி 7 விக்கட்டுகளால் வெற்றி ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் மூன்று அணிகள்தான் ஒரு போட்டியிலும் வெல்லவில்லை. ஓமான், கனடா, நமீபியா.

ஓமான் அவுஸ்ரேலியாவுக்கு அடிப்பதன் மூலமும்

கனடா ஆப்கானிஸ்தானுக்கு அடிப்பதன் மூலமும்

நமீபியா பாகிஸ்தானுக்கு அடிப்பதன் மூலமும்

அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யலாம். அது நடக்குமா. நடந்திடுமா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, செம்பாட்டான் said:

அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யலாம். அது நடக்குமா. நடந்திடுமா.

athuku-vaipu-ella-raja-tamil.gif

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செம்பாட்டான் said:

இன்னும் மூன்று அணிகள்தான் ஒரு போட்டியிலும் வெல்லவில்லை. ஓமான், கனடா, நமீபியா.

ஓமான் அவுஸ்ரேலியாவுக்கு அடிப்பதன் மூலமும்..........

பனையால் விழுந்தவன் மழை வெள்ளத்தில் அடிபட்டும் போகின்றான்................ அவனை ஓமானும் ஓடிப் போய் அடிப்பதா.................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

நாளையான் மூன்று போட்டியும் பெரிய‌ ம‌லைக‌ளுட‌ன் சின்ன‌ அணிக‌ள்.....................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன இன்று உங்க காட்டில மழை போல.

கோசானை பதியவிட்டு கிழப்பிவிட்டது.

10 ல வியாழந்தான் பதிய விட்டு கிளப்புமாம்…

நான் 10ம் பக்கத்தில்….செவ்வாய் கிழமை பதிலை பதிந்தாதால் - 9 தில குரு எண்டு எல்லே தப்பா நினைச்சேன்😂

  • கருத்துக்கள உறவுகள்

t20-rank.jpg

t20-rank1.jpg

ரி20 உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரில் முன்னிலை வகிக்கும் அணிகளின் பட்டியல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி, யுவ்ராஜ் சம்ராவின் செஞ்சுரி விளாசலான 110 (65 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் டில்பிறீட் பஜ்வாவின் நிதானமான 36 (39 பந்துகள்) ஓட்டங்களுடன் விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, கிளென் பிலிப்ஸின் ஆட்டமிழக்காத மின்னல்வேக 76 (36 பந்துகள்) ஓட்டங்களுடனும், ரச்சின் ரவீந்திரவின் ஆட்டமிழக்காத புயல்வேக 59 (39 பந்துகள்) ஓட்டங்களோடும் 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் 176 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.

இன்றைய இரண்டாவது ஸிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி பல்லேகலவில் தொடர்ச்சியான மழை காரணமாக கைவிடப்பட்டதையடுத்து ஏற்கெனவே ஓமான், அவுஸ்திரேலியாவை வென்ற ஸிம்பாப்வே ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

மறுபக்கமாக ஸிம்பாப்வே, சிறிலங்காவிடம் தோல்வியடைந்திருந்த அவுஸ்திரேலியா அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது!

முடிவு: மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. அயர்லாந்து, ஸிம்பாப்வே அணிகள் தலா ஒரு புள்ளி பெற்றன. ஸிம்பாப்வே அணி சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

யாழ் களப் போட்டியாளார்கள் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து அணி, மைக்கல் ஜோன்ஸ்ஸின் வேகமான 71 (45 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜோர்ஜ் முன்சீயின் நிதானமான 27 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி திபேந்திரா சிங் ஐரீயின் ஆட்டமிழக்காமல் புயல்வேகத்தில் எடுத்த 50 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், குஷால் பூர்டெலின் வேகமான 43 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும் 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 171 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: நேபாளம் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5175.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

அடங்கப்பா ...இன்றைக்கும் நாமதானா....கிருபன்சார் ...நன்றி

Edited by alvayan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.