Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ந‌ட‌ந்த‌ இர‌ண்டு விளையாட்டு சிறு விறுவிறுப்பு கூட‌ இல்லை

ஏனோ தானோ என‌ முடிந்து இருக்கு ஹா ஹா.......................

  • Replies 1.5k
  • Views 46.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, செம்பாட்டான் said:

என்ன ஒரு 250 மைல் ஓடியிருப்பார். அவரின் முயற்சி ஆச்சரியப்பட வைக்குது.

சின்ன வீட்டைப் பார்க்க போறாரோ?

6 minutes ago, வீரப் பையன்26 said:

இன்று ந‌ட‌ந்த‌ இர‌ண்டு விளையாட்டு சிறு விறுவிறுப்பு கூட‌ இல்லை

ஏனோ தானோ என‌ முடிந்து இருக்கு ஹா ஹா.......................

பையா முடிவு சந்தோசமோ இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பாரிய தோல்வி, அவர்களின் ஓட்ட விகிதத்தை பெரிதாகப் பாதிக்கும். அங்க இங்க மாறி, ஒரே புள்ளியோட மேற்கிந்தியா வந்துதென்டா, இந்தியா பாடு திண்டாட்டம்.

தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியா போட்டி, இந்தியாவுக்கு முக்கியமான போட்டி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி, ஃபில் சோல்ற்ரின் அதிரடியான 62 (40 பந்துகள்) ஓட்டங்களுடன் 9 விக்கெட்டுகளை இழந்து சுமாரான 146 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய சிறிலங்கா அணியின் வீரர்கள் ஆடுதளத்தில் நிற்கமுடியாமல் வேகமாக ஆட்டமிழந்து திரும்பிக்கொண்டிருந்தனர். அணித்தலைவர் தசுன் ஷானக ஓரளவு நிலைத்தாடி 30 (24 பந்துகளின்) ஓட்டங்களை எடுத்தார். எனினும் விக்கெட்டுகள் தொடர்ச்சியாகக் சரிந்ததனால் 16.4 ஓவர்களில் 95 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. இந்த ஓட்ட எண்ணிக்கை இத் தொடரில் மிகக் குறைவான ஓட்ட எண்ணிக்கையாக இருக்க அதிக சாத்தியம் உள்ளது!

முடிவு:  இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் கிடையாது.

இப்போட்டியில் விளையாடாத மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தெரிவு செய்த @வீரப் பையன்26 க்கும் புள்ளிகள் கிடையாது!


இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, டேவிட் மில்லரின் அபாரமான 63 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும், டெவால்ட் பிறெவிஸின் புயல்வேக 45 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் மின்னல்வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 44 (24 பந்துகள்) ஓட்டங்களோடும் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே நட்சத்திர வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வேகமாக ஓட்டம் எடுக்கலாம் என அடித்தாடி வீரர்கள் விரைந்து வெளியேறினர். ஷிவம் டுபே மாத்திரம் 42 (37 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் மிகவும் குறைவான ஓட்டங்களை எடுத்ததால், 18.5 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது.

முடிவு:  தென்னாபிரிக்கா அணி 76 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! eggs-omelet.gif

இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_5268.jpeg

முதல்வர் @கந்தப்பு தனது நாற்காலியை மேலும் பலப்படுத்தியுள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சொன்னாலும் கறுத்தப் பையன் ராசிகாரன் ...இந்த கிசன் ஒரு திருநங்கை ...இப்ப பார்க்கப் போனால்..தலை மூன்றும் தறுதலையாகிட்டுது ...காப்பீரி மூடிக்கிட்டு தூங்கவேண்டியதுதான்

அட ...நான் இன்றைக்கு உதயநிதி.... நன்றி கிருபன் ஜீ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஈழப்பிரியன் said:

ஞாயிறு என்றால் @கிருபன் னைப் பிடிப்பது ரொம்ப கஸ்டம்.

எத்தனை மணிக்கு வந்து புள்ளிகள் போடுவாரோ?

அவருக்கு இரண்டு முட்டை என்று குவாட்டர் அடித்திட்டு படுக்கிறாரோ?

குவாட்டர் அடிக்கும் அளவிற்கு ஆட்டம் ரசிக்கவில்லை!

20 minutes ago, செம்பாட்டான் said:

என்ன ஒரு 250 மைல் ஓடியிருப்பார். அவரின் முயற்சி ஆச்சரியப்பட வைக்குது.

இன்று இரண்டு போட்டிகளையும் பார்த்தேன்.. ஆனால் நேரம் வேஸ்ட்!

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் @கந்தப்பு க்கு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் 23 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸிம்பாப்வே (X2) எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (X3)

ZIM எதிர் WI

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

AUS

ஏராளன்

AUS

வசீ

AUS

புலவர்

AUS

சுவைப்பிரியன்

AUS

அல்வாயன்

AUS

ஈழப்பிரியன்

AUS

நியூ பலன்ஸ்

AUS

வாத்தியார்

AUS

கறுப்பி

AUS

வாதவூரான்

AUS

வீரப் பையன்26

AUS

சுவி

AUS

கிருபன்

AUS

கோஷான் சே

AUS

அஹஸ்தியன்

AUS

கந்தப்பு

AUS

நியாயம்

AUS

எப்போதும் தமிழன்

AUS

ரசோதரன்

AUS

பிரபா

AUS

நிலாமதி

AUS

நந்தன்

AUS

அனைவரும் சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவாகாத அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். எனவே ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

egg-eggs.gif

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாவே பெரிய‌ அணிக‌ளை வென்று இருக்கு

நாளை வெஸ்சின்டிஸ் அணியுட‌ன் வெல்லுமா........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் 23 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸிம்பாப்வே (X2) எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (X3)

ZIM எதிர் WI

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

AUS

ஏராளன்

AUS

வசீ

AUS

புலவர்

AUS

சுவைப்பிரியன்

AUS

அல்வாயன்

AUS

ஈழப்பிரியன்

AUS

நியூ பலன்ஸ்

AUS

வாத்தியார்

AUS

கறுப்பி

AUS

வாதவூரான்

AUS

வீரப் பையன்26

AUS

சுவி

AUS

கிருபன்

AUS

கோஷான் சே

AUS

அஹஸ்தியன்

AUS

கந்தப்பு

AUS

நியாயம்

AUS

எப்போதும் தமிழன்

AUS

ரசோதரன்

AUS

பிரபா

AUS

நிலாமதி

AUS

நந்தன்

AUS

அனைவரும் சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவாகாத அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். எனவே ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

egg-eggs.gif

ந‌ம‌க்குத் தான் புள்ளி இல்லையே

என்ன‌ கோதாரிக்கு இதை நாங்க‌ள் பார்க்க‌னும் லொள்😄😛......................

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன‌ அணிக‌ளை பெரிய‌ அணிக‌ள் வெல்லும் என‌ க‌ணிப்ப‌து சுக‌ம்

சூப்ப‌ர்8 போட்டிக‌ள் க‌ணிப்ப‌து சிர‌ம‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, செம்பாட்டான் said:

தென்னாபிரிக்காவின் அணுகுமுறை வியப்பாய் இருக்கு. மார்க்ரம் முதல் பந்துப் பரிமாற்றத்தைப் போட்டு விக்கட் எடுத்து விட்டார்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இடது கை துடுப்பாட்டக்காரர்கள், ஆடுகளம் கறுப்பு மண் கொண்ட மெதுவான ஆடுகளம், வலது கை மார்க்ரமின் பந்து வீச்சு இடது கை துடுப்பாட்டக்காரருக்கு உள்ளே இருந்து வெளியே போகும் (இ டமிருந்து வலமாக மட்டையின் வெளிப்புறம்).

இலங்கை இங்கிலாந்து போட்டியில் வளமையாக தொடக்க ஒவர் போடும் வலது கை சமீரவிற்கும் தீக்சணவிற்கும் பதிலாக இ டது கை மது சங்க இடது கை வெல்லாலெகே பந்து வீசினார்கள், இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வலது கை ஆட்டக்காரர்கள்.

8 hours ago, வீரப் பையன்26 said:

அவிசேக் ச‌ர்மாவுக்கு மீண்டும் விளையாடும் வாய்ப்பு கொடுத்து இருக்கின‌ம்

இன்றைக்காவ‌து ர‌ன்ஸ் அடிக்க‌னும் இல்லையேன் அணியில் இட‌ம் கிடைக்காது

ச‌ஞ்சு ச‌ம்சுன்க்கு விளையாடும் வாய்ப்பு கிடைச்சிடும்.............................

சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் துடுப்பாட்டக்காரர் அதே போல இசான் கிசனும் விக்கெட் கீப்பர் துடுப்பாட்டக்காரர், இசானுக்கு மாற்றீடாகவே சாம்சனை இற்க்குவார்கள், அபிசேக்கிற்கு மாற்றீடாக இறக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.

இசான் கிசன் நன்றாக விளையாடுகிறார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

இன்று ந‌ட‌ந்த‌ இர‌ண்டு விளையாட்டு சிறு விறுவிறுப்பு கூட‌ இல்லை

ஏனோ தானோ என‌ முடிந்து இருக்கு ஹா ஹா.......................

எங்கவீட்டு பிள்ளையில் நம்பியாரிடம் எம் ஜி ஆர் அடிவாங்கி கொண்டு இருப்பார். அதே நம்பியாரை (மற்றொரு) எம் ஜி ஆர் திருப்பி அடிப்பாரே. அந்த காட்சியை பார்க்கும் போது விறுவிறுப்பாக இருக்கும்.

ஐசிசி அண்மைக்காலங்களில் இந்தியாவுக்கு சார்பாக அதிக ஐசிசி தொடர்களை இந்தியாவில் நடாத்தி வருகிறது. இந்தியாவுக்கு சார்பான மைதானங்களில் முக்கிய அரை இறுதி போட்டிகளில் நடைபெற்று வருகின்றன. பணம் ஒன்றே முக்கிய குறிக்கோளாக இந்தியாவுக்கு சார்பாகவே ஐசிசி போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவை மில்லரும், பேபி டிவிலர்ஸும் அடி அடி என்று 6, 4 ஓட்டங்கள் அடித்தார்களே அதை பார்க்கும் போது எவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது தெரியுமா?.

ஒரு காலத்தில் சிறிகாந்தும், கபில் தேவ்வும் அடிக்கும் போது பார்த்து இரசித்தவன் நான். ஆனால் இப்பொழுது?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

கல்லோ கல்லோ @goshan_che ஆர் யு ஓகே?

நீங்கள் அழைத்த பயனாளர்….தொடர்பு எல்லைக்கு அப்பால்….23ம் இடத்தில் இருக்கிறார்.

நாளைக்கும் அங்கதான் இருப்பார்.

போட்டிகள் முடிந்ததும் மீண்டும் அழைப்பை எடுக்கவும்😂

2 hours ago, வீரப் பையன்26 said:

சின்ன‌ அணிக‌ளை பெரிய‌ அணிக‌ள் வெல்லும் என‌ க‌ணிப்ப‌து சுக‌ம்

சூப்ப‌ர்8 போட்டிக‌ள் க‌ணிப்ப‌து சிர‌ம‌ம்...........................

எனக்கு எல்லாமே சுகம்😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கந்தப்பு said:

எங்கவீட்டு பிள்ளையில் நம்பியாரிடம் எம் ஜி ஆர் அடிவாங்கி கொண்டு இருப்பார். அதே நம்பியாரை (மற்றொரு) எம் ஜி ஆர் திருப்பி அடிப்பாரே. அந்த காட்சியை பார்க்கும் போது விறுவிறுப்பாக இருக்கும்.

ஐசிசி அண்மைக்காலங்களில் இந்தியாவுக்கு சார்பாக அதிக ஐசிசி தொடர்களை இந்தியாவில் நடாத்தி வருகிறது. இந்தியாவுக்கு சார்பான மைதானங்களில் முக்கிய அரை இறுதி போட்டிகளில் நடைபெற்று வருகின்றன. பணம் ஒன்றே முக்கிய குறிக்கோளாக இந்தியாவுக்கு சார்பாகவே ஐசிசி போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவை மில்லரும், பேபி டிவிலர்ஸும் அடி அடி என்று 6, 4 ஓட்டங்கள் அடித்தார்களே அதை பார்க்கும் போது எவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது தெரியுமா?.

ஒரு காலத்தில் சிறிகாந்தும், கபில் தேவ்வும் அடிக்கும் போது பார்த்து இரசித்தவன் நான். ஆனால் இப்பொழுது?

நான் மகனை கிரிகெட் பயிற்சிக்கு கூட்டி போயிருந்ததால் கிரிக் இன்போ வில் தான் ஸ்கோர் பார்த்தேன்.

அப்படி இருந்தும் நல்ல விறு விறுப்பாய் இருந்தது (இந்தியா, இலங்கை தோத்தபடியால்).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.