Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!

Dec 28, 2025 - 05:05 PM

யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கலந்துரையாடலின் போது, பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், சாந்தை கிராமத்தில் பல குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி மலசலக்கூடங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 

இதற்குப் பதிலளித்த துறைசார் அதிகாரிகள், யாழ். மாவட்ட புள்ளிவிபரங்களின்படி மாவட்டம் முழுவதும் சுமார் 3,012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmjpnkaqt037jo29n4q8lnw9s

  • கருத்துக்கள உறவுகள்

மலையக மக்களை குடியமர்த்தி வாழ்வளிக்க முன், தம் தேர்தல் தொகுதியில் உள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுங்கள் என பாசத்துடன் கேட்டுக்கொள்கிறேன். சுகாதார சுற்றுச்சூழல் கெடுதல் இதை முதல் கவனியுங்கள் சம்பந்தப்பட்டவர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

3012 கக்கூஸ் கட்ட வக்கில்லை…..

ஆனால் நாங்கள் எல்லாம் மெத்த படித்த, டி என் ஏ யில் புத்தி கூர்மை ஏறிய, உலகளாவிய வியாபார காந்தங்கள் நிறைந்த சமூகம் எண்ட கதைக்கு மட்டும் பஞ்சமில்லை 😂.

எத்தனை வளைவுகள், கோபுரங்கள், சுற்று மதில்களை இந்த 16 வருடத்தில் கட்டி இருப்பீர்கள். அந்த பணத்தில் இதையும் செய்து கொஞ்ச மலையக மக்களையும் குடியமர்த்தி இருக்கலாம்.

பிகு

மனமுண்டானால் மார்க்கபந்து.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, goshan_che said:

3012 கக்கூஸ் கட்ட வக்கில்லை…..

ஆனால் நாங்கள் எல்லாம் மெத்த படித்த, டி என் ஏ யில் புத்தி கூர்மை ஏறிய, உலகளாவிய வியாபார காந்தங்கள் நிறைந்த சமூகம் எண்ட கதைக்கு மட்டும் பஞ்சமில்லை 😂.

எத்தனை வளைவுகள், கோபுரங்கள், சுற்று மதில்களை இந்த 16 வருடத்தில் கட்டி இருப்பீர்கள். அந்த பணத்தில் இதையும் செய்து கொஞ்ச மலையக மக்களையும் குடியமர்த்தி இருக்கலாம்.

பிகு

மனமுண்டானால் மார்க்கபந்து.

நீங்கள் தான் பல மக்கள் நலன்புரி அமைப்புகள் வட பகுதிகளில் வெற்றிகரமாக இயங்குவதாக எழுதினீர்களே. அந்த அமைப்புகளுக்கு தாங்கள் கடிதம் எழுத முடியாதா?

இல்லையேல் தந்தியாவது அடிக்க முடியாதா?

கோபுரம்,சுற்றுமதில் கட்டும் புலம்பெயர்ந்தவனுக்கு தங்கள் உடன் பிறந்தவர்களுக்கு கக்கூஸ் கட்டிக்கொடுப்பதில் எவ்வித பிரச்சனையும் இருக்கப்போவதில்லை.

இதற்கென ஒரு அமைப்பை உருவாக்குங்கள்.....இல்லையேல் இருக்கும் அமைப்பின் விலாசத்தை தாருங்கள். 100 குடும்பத்திற்கு மலசலம் கட்டும் நிதியை நான் திரட்டி தருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

https://www.karainagar.org/about-us

முதலில் இரு ஊரோடு ஆரம்பிப்போம் அண்ணை. தெளிவாக இந்த திரியில் மட்டும் வேலைகளை ஒருங்கிணைப்போம்.

இப்போதைக்கு இந்த இரு ஊர்களிலும் மலசல கூடம் இல்லாத அத்தனை குடும்பத்துக்கும் கட்டி கொடுப்போம்.

ஊர்கள்

  1. காரை நகர்

  2. சுழிபுரம்

வாத்தியார் அண்ணா மேலே உள்ள காரைநகர் அமைப்போடு ஆரம்ப தொடர்பை ஏற்படுத்தி தருவார் எனில்,

ஏராளன் தனது அமைப்பின் மூலம் இதையே சுழிபுரத்தில் செய்வாராயின் - நீங்கள் பணத்தை திரட்டி இந்த நம்பகமான அமைபுக்களிடம் கட்டம் கட்டமாக கையளித்து வேலையை முடிக்கலாம்.

தயவு செய்து வாத்தியார் அண்ணா, ஏராளனுக்கு @ போட்டு விடவும்.

அவர்கள் செய்ய வேண்டியது முதற்கட்டமாக தலா 5 குடும்பங்களை இனம் கண்டு, மலசல கூடம் கட்டி கொடுக்கும் பொறுப்பை ஏற்க இந்த அமைப்புகள் சம்ம்யிக்கிறனவா என்பதை கேட்டு சொல்வதே.

வேறு யாரும் யாழ்கள உறவுகள் தமது ஊர் பாடசாலை சங்கம் மூலமும் இதை செய்ய முன்வந்தால் அதையும் செய்யலாம்.

உதாரணம் விசுகு அண்ணா, புலவர், நந்தன் போன்றோர் இப்படியான சங்காங்கலில் இருப்பார்கள் என நினைக்கிறேன்.

எனது உலக மகா சோம்பேறித்தனத்தை கொஞ்சம் ஒதுக்கி இதில் நான் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள சித்தமாய் உள்ளேன்.

பிகு

சங்கங்கள் சம்பதிக்கும் போது, அதன் பொறுப்பானவர்களோடு இமெயில், போன் தொடர்புகளை பேணவும் நான் தயார். நேரடி சந்திப்புகள், பணம் (money handling) இவை மட்டும் என்னால் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இப்போதைக்கு இந்த இரு ஊர்களிலும் மலசல கூடம் இல்லாத அத்தனை குடும்பத்துக்கும் கட்டி கொடுப்போம்.

ஊர்கள்

  1. காரை நகர்

  2. சுழிபுரம்

வாத்தியார் அண்ணா மேலே உள்ள காரைநகர் அமைப்போடு ஆரம்ப தொடர்பை ஏற்படுத்தி தருவார் எனில்,

யாரையும் நம்பி அல்லது அவர்கள் செய்வார்கள் என்று இந்தத் திட்டத்திற்க்குள் நான் என்னை இனைத்துத்துக் கொள்ள விரும்பவில்லை சங்கங்களின் நிலைமையை அறிந்தவன் என்பதாலும் அவற்றை விமர்சிக்க விரும்பாததாலும் அதற்கு அப்பால் சென்று இப்படியான ஒரு உதவி காரைநகர் மக்களுக்கு கிடைத்தால் அதை நானே முன் நின்று

செய்து முடிப்பேன் என்று உறுதியாக கூற முடியும் .

இப்படியான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேளை எனது காத்திரமான நிதிப் பங்களிப்பும் நிச்சயமாக இருக்கும்.

கோஷான் 👍🙏

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, வாத்தியார் said:

இப்படியான ஒரு உதவி காரைநகர் மக்களுக்கு கிடைத்தால் அதை நானே முன் நின்று

செய்து முடிப்பேன் என்று உறுதியாக கூற முடியும் .

நன்றி அண்ணா.

2 hours ago, goshan_che said:

பணம் (money handling) இவை மட்டும் என்னால் முடியாது

இங்கே என் எழுத்தின் தொனி பிழைத்து விட்டது. என்னால் பண பரிவர்தனையில் ஈடுபடமுடியாது. ஆனால் பங்களிப்பேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

முதலில் இரு ஊரோடு ஆரம்பிப்போம் அண்ணை. தெளிவாக இந்த திரியில் மட்டும் வேலைகளை ஒருங்கிணைப்போம்.

இப்போதைக்கு இந்த இரு ஊர்களிலும் மலசல கூடம் இல்லாத அத்தனை குடும்பத்துக்கும் கட்டி கொடுப்போம்.

நம்பிகையானவர்களை,நம்பிக்கையான நிறுவனங்களை யாராவது பரிந்துரை செய்தால் மாதாந்த அல்லது குறிப்பிட்ட தொகையை கொடுக்கலாம். 2009க்கு பின்னர் பட்ட அனுபவங்களால் தான் மேற்குறிப்பிட்ட கருத்தை எழுதினேன்.

பொது பண விடயத்தில் என் சொந்தங்களைக் கூட நம்ப நான் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீன்ட காலத்துக்குப் பின் யாழில் நல்லதொரு முயற்ச்சி வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2025 at 06:51, குமாரசாமி said:

100 குடும்பத்திற்கு மலசலம் கட்டும் நிதியை நான் திரட்டி தருகின்றேன்.

நல்லது அண்ணா. சில தகவல்களைப் பகிர்கிறேன், செய்யமுடியுமா எனப்பாருங்கள்.

10 hours ago, goshan_che said:

https://www.karainagar.org/about-us

முதலில் இரு ஊரோடு ஆரம்பிப்போம் அண்ணை. தெளிவாக இந்த திரியில் மட்டும் வேலைகளை ஒருங்கிணைப்போம்.

இப்போதைக்கு இந்த இரு ஊர்களிலும் மலசல கூடம் இல்லாத அத்தனை குடும்பத்துக்கும் கட்டி கொடுப்போம்.

ஊர்கள்

  1. காரை நகர்

  2. சுழிபுரம்

வாத்தியார் அண்ணா மேலே உள்ள காரைநகர் அமைப்போடு ஆரம்ப தொடர்பை ஏற்படுத்தி தருவார் எனில்,

ஏராளன் தனது அமைப்பின் மூலம் இதையே சுழிபுரத்தில் செய்வாராயின் - நீங்கள் பணத்தை திரட்டி இந்த நம்பகமான அமைபுக்களிடம் கட்டம் கட்டமாக கையளித்து வேலையை முடிக்கலாம்.

தயவு செய்து வாத்தியார் அண்ணா, ஏராளனுக்கு @ போட்டு விடவும்.

அவர்கள் செய்ய வேண்டியது முதற்கட்டமாக தலா 5 குடும்பங்களை இனம் கண்டு, மலசல கூடம் கட்டி கொடுக்கும் பொறுப்பை ஏற்க இந்த அமைப்புகள் சம்ம்யிக்கிறனவா என்பதை கேட்டு சொல்வதே.

வேறு யாரும் யாழ்கள உறவுகள் தமது ஊர் பாடசாலை சங்கம் மூலமும் இதை செய்ய முன்வந்தால் அதையும் செய்யலாம்.

உதாரணம் விசுகு அண்ணா, புலவர், நந்தன் போன்றோர் இப்படியான சங்காங்கலில் இருப்பார்கள் என நினைக்கிறேன்.

எனது உலக மகா சோம்பேறித்தனத்தை கொஞ்சம் ஒதுக்கி இதில் நான் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள சித்தமாய் உள்ளேன்.

நன்றி அண்ணா, தனி மனிதர்களால் எடுக்கப்படும் கூட்டு முயற்சி இது. அடம்பன் கொடியும்....

8 hours ago, வாத்தியார் said:

இப்படியான ஒரு உதவி காரைநகர் மக்களுக்கு கிடைத்தால் அதை நானே முன் நின்று

செய்து முடிப்பேன் என்று உறுதியாக கூற முடியும் .

இப்படியான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேளை எனது காத்திரமான நிதிப் பங்களிப்பும் நிச்சயமாக இருக்கும்.

நல்லது அண்ணா.

1) காரைநகரில் வீட்டுத்திட்டம் ஒன்றுக்கு மலசல கூடம் கட்டித்தருமாறு எமது அமைப்பிடம் பிரதேச செயலகம் ஊடாக வாய்மொழியாக கேட்டுள்ளார்கள். வேண்டுகோள் கடிதம் எழுதி தருமாறு கேட்டுள்ளேன்.

2) பொன்னாலையில் 3 பேர் எழுந்து நடமாடமுடியாத சகோதரர்களின் கொமட் உடைந்துவிட்டது, மலசலகூடக் குழி(பிற்) மூடப்பட்ட பிளாற் உடைந்துள்ளது, பாத்றூம் பிளாற் உடைந்துவிட்டது. புனரமைத்து தருமாறு அவசர வாய்மொழி வேண்டுகோள் வந்துள்ளது. வேண்டுகோள் கடிதம் எழுதி தருமாறு கேட்டுள்ளேன்.

3) அராலியிலும் மலசலகூடம் அமைத்து தருமாறு கேட்டவர்கள். போதிய விபரம் கிடைக்கவில்லை. முழு விபரம் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன்.

மேலும் சில விபரங்கள் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காரைநகர் பிரதேச செயலக திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தருடன் தற்போது உரையாடியபோது 55 குடும்பங்களுக்கு(புதிதாக திருமணமானவர்கள், பழைய வீட்டுத்திட்ட நிதிப்பற்றாக்குறையால் கட்டமுடியாதவர்கள்) புதிதாக மலசல கூடம் அமைக்க வேண்டும் என்ற தகவலை தெரியப்படுத்தினார். மேலும் 12 குடும்பங்களிற்கு மலசலகூடம் திருத்தவேலை செய்யவேண்டும் எனவும் கூறினார்.

முதலில் 5 குடும்பங்களின் விபரங்களை கோரியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

நல்லது அண்ணா. சில தகவல்களைப் பகிர்கிறேன், செய்யமுடியுமா எனப்பாருங்கள்.

நன்றி அண்ணா, தனி மனிதர்களால் எடுக்கப்படும் கூட்டு முயற்சி இது. அடம்பன் கொடியும்....

நல்லது அண்ணா.

1) காரைநகரில் வீட்டுத்திட்டம் ஒன்றுக்கு மலசல கூடம் கட்டித்தருமாறு எமது அமைப்பிடம் பிரதேச செயலகம் ஊடாக வாய்மொழியாக கேட்டுள்ளார்கள். வேண்டுகோள் கடிதம் எழுதி தருமாறு கேட்டுள்ளேன்.

2) பொன்னாலையில் 3 பேர் எழுந்து நடமாடமுடியாத சகோதரர்களின் கொமட் உடைந்துவிட்டது, மலசலகூடக் குழி(பிற்) மூடப்பட்ட பிளாற் உடைந்துள்ளது, பாத்றூம் பிளாற் உடைந்துவிட்டது. புனரமைத்து தருமாறு அவசர வாய்மொழி வேண்டுகோள் வந்துள்ளது. வேண்டுகோள் கடிதம் எழுதி தருமாறு கேட்டுள்ளேன்.

3) அராலியிலும் மலசலகூடம் அமைத்து தருமாறு கேட்டவர்கள். போதிய விபரம் கிடைக்கவில்லை. முழு விபரம் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன்.

மேலும் சில விபரங்கள் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன்.

4 hours ago, ஏராளன் said:

காரைநகர் பிரதேச செயலக திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தருடன் தற்போது உரையாடியபோது 55 குடும்பங்களுக்கு(புதிதாக திருமணமானவர்கள், பழைய வீட்டுத்திட்ட நிதிப்பற்றாக்குறையால் கட்டமுடியாதவர்கள்) புதிதாக மலசல கூடம் அமைக்க வேண்டும் என்ற தகவலை தெரியப்படுத்தினார். மேலும் 12 குடும்பங்களிற்கு மலசலகூடம் திருத்தவேலை செய்யவேண்டும் எனவும் கூறினார்.

முதலில் 5 குடும்பங்களின் விபரங்களை கோரியுள்ளேன்.

நன்றி தம்பி.

குசா அண்ணை, வாத்தியார் அண்ணை, நீங்கள், நான் ஒரு குழுவாக செயல்படுவோம்.

அனைத்து தகவல்களையும் இதே திரியில் பகிர்வோம். முடியுமானளவு.

முதல் இலக்கு - காரைநகரில் 5, மூளாய், பொன்னாலை, சுழிபுரம் பகுதியில் 5 என 10 பயனாளர்களை இனம் காணல்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனை பின்ட் செய்து விட்டால் இலகுவாக இருக்கும்..அவ்வப்போது வந்து பார்த்து சந்தர்ப்பம் ஏற்படும் போது விருப்பப்படுபவர்கள் தங்களால் முடிந்ததை செய்ய முடியும்.

2 hours ago, யாயினி said:

இதனை பின்ட் செய்து விட்டால் இலகுவாக இருக்கும்..அவ்வப்போது வந்து பார்த்து சந்தர்ப்பம் ஏற்படும் போது விருப்பப்படுபவர்கள் தங்களால் முடிந்ததை செய்ய முடியும்.

துளி துளியாய் பகுதியில் இதற்கென ஒரு தனித்திரி திறந்து விடுங்கள். அதனை pin பண்ணி விடுகின்றேன்.

திரி சரியான விதத்தில் சென்றால் முகப்பிலும் இணைப்பை கொடுக்க முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

துளி துளியாய் பகுதியில் இதற்கென ஒரு தனித்திரி திறந்து விடுங்கள். அதனை pin பண்ணி விடுகின்றேன்.

திரி சரியான விதத்தில் சென்றால் முகப்பிலும் இணைப்பை கொடுக்க முடியும்.

நல்லது அண்ணா.

நாளை புதிய வருடப்பிறப்பில் புதிய திரியை துளித்துளியாய் பகுதியில் @goshan_che அண்ணை திறவுங்கோ.

நான் சரியான பயனாளிகளை இனம் கண்டு முடிந்தால் நேரில் சென்று உறுதிப்படுத்தி சொல்கிறேன்.

இது யாழ் இணைய உறவுகளின் கூட்டு முயற்சியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2025 at 02:21, குமாரசாமி said:

100 குடும்பத்திற்கு மலசலம் கட்டும் நிதியை நான் திரட்டி தருகின்றேன்.

ஊர் ஒன்று கூடியிருக்கிறது. அடுத்தது என்ன தேரை ஓன்று கூடி இழுப்பதுதானே. குமாரசாமி, நீங்கள் குறிப்பிட்ட நூறு பேர்களோடு நூற்றியொன்றாக என்னையும் சேர்ததுக் கொள்ளுங்கள். “நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்”🙏

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

நன்றி அண்ணா, தனி மனிதர்களால் எடுக்கப்படும் கூட்டு முயற்சி இது. அடம்பன் கொடியும்....

8 hours ago, goshan_che said:

குசா அண்ணை, வாத்தியார் அண்ணை, நீங்கள், நான் ஒரு குழுவாக செயல்படுவோம்.

அனைத்து தகவல்களையும் இதே திரியில் பகிர்வோம். முடியுமானளவு.

முதல் இலக்கு - காரைநகரில் 5, மூளாய், பொன்னாலை, சுழிபுரம் பகுதியில் 5 என 10 பயனாளர்களை இனம் காணல்.

5 hours ago, ஏராளன் said:

நான் சரியான பயனாளிகளை இனம் கண்டு முடிந்தால் நேரில் சென்று உறுதிப்படுத்தி சொல்கிறேன்.

இது யாழ் இணைய உறவுகளின் கூட்டு முயற்சியாகும்.

நல்ல விடையம் ஏராளன் மிகவும் சுறுசுறுப்பாகத் தகவல்களை சேகரித்துத் தந்துள்ளார்.

கோஷன் எழுதியதைப்போல முன்னோட்டமாக 10 வீடுகளுக்கான வசதி செய்து கொடுக்கலாம்

5 சுழிபுரம் , 5 காரைநகர் , இடையே திருத்த வேலைகள் பொன்னாலை யில் செய்யலாம்.

அடுத்த கட்டமாக முதலில் பொன்னாலையில் நடமாட முடியாத அந்தச் சகோதரர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய எவ்வளவு செலவாகும் என அறிய விரும்புகின்றேன்

ஏராளன்

அடுத்த கட்டமாக ஒரு வீட்டில் கழிவறை அமைத்துக் கொடுக்க என்ன செலவாகும் என்பதையும் அறியாத தந்தால் உதவியாக இருக்கும்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது ஒருவரிடம் மட்டுமல்லாது பலரிடம் கேள்விப் பத்திரம் மூலம் மொத்த செலவைக் கேட்டு ஒரு ஒப்பந்த அடிப்படையில் செயற்படுவதும் நல்லது என நினைக்கின்றேன்

22 hours ago, குமாரசாமி said:

நம்பிகையானவர்களை,நம்பிக்கையான நிறுவனங்களை யாராவது பரிந்துரை செய்தால்

ஏராளன் ஏற்றுக் கொண்டால் அவரை இந்தத் திட்டத்திற்கான பொருளாளராக நான் பிரேரிக்கின்றேன்

அவரால் கட்டாயம் நம்பிக்கையான முறையில் நிதி கையாளப்படும்

உங்கள் அபிப்பிராயங்களையும் சொல்லுங்கள்

8 hours ago, யாயினி said:

இதனை பின்ட் செய்து விட்டால் இலகுவாக இருக்கும்..அவ்வப்போது வந்து பார்த்து சந்தர்ப்பம் ஏற்படும் போது விருப்பப்படுபவர்கள் தங்களால் முடிந்ததை செய்ய முடியும்.

உங்கள் ஆதரவிற்கு நன்றி தங்கை யாயினி

6 hours ago, நிழலி said:

திரி சரியான விதத்தில் சென்றால் முகப்பிலும் இணைப்பை கொடுக்க முடியும்.

கட்டாயம் நிழலி இந்தத் திட்டம் 2026 இல் யாழின் ஒன்றிணைந்த ஒரு உதவித் திட்டமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சுவைப்பிரியன் said:

நீன்ட காலத்துக்குப் பின் யாழில் நல்லதொரு முயற்ச்சி வாழ்த்துக்கள்.

நன்றி சுவைப்பிரியன்

5 hours ago, ஏராளன் said:

இது யாழ் இணைய உறவுகளின் கூட்டு முயற்சியாகும்.

களத்தில் உங்களின் சேவைகளின் அர்ப்பணிப்பு, உங்களுக்குரிய அனுபவங்கள் எல்லோருக்கும் தெரியும்.

அவை யாழ் களத்தில் எங்கள் எல்லோருக்கும் உதவியாக இருக்கும் 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.