Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nishan-Canagarajah.jpg?resize=750%2C375&

இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

இலங்கையில் பிறந்த கல்வியாளரும், இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம் பெற்றுள்ளார்.

உயர்கல்விக்கு, குறிப்பாக உள்ளடக்கத்தை ஆதரிப்பதில் பேராசிரியர் கனகராஜாவின் மதிப்பிட முடியாத பங்களிப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது.

பேராசிரியர் கனகராஜா தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கும் கல்வி ஒரு சக்தியாக இருப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டியுள்ளார்.

இங்கிலாந்தின் முதல் பன்மை நகரமான லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதல் சிறுபான்மை இன துணைவேந்தராக அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கவனிக்கப்படாதவர்களுக்கும், பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளவர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். 

மேலும், தடைகளைத் தாண்டி ஏனையவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் பாடுபட்டுள்ளார்.

இலங்கையில் பிறந்து படித்த பேராசிரியர் கனகராஜா, இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்றார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். 

அவரது கல்வி வாழ்க்கை மூன்று தசாப்தங்களாக நீடிக்கிறது, 2019 இல் லெய்செஸ்டரில் துணைவேந்தராக வருவதற்கு முன்பு பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் மூத்த பதவிகளையும் வகித்துள்ளார்.

https://athavannews.com/2025/1457746

  • கருத்துக்கள உறவுகள்

இவர் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் - 1985 சீனியர் பிரிபெக்ட்.

ஜொனியன்ஸ் எல்லாரும் ஒருக்கா கொலர தூக்கி விட்டு கொள்ளவும்😂.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம்

வாழ்த்துக்கள்.

அது என்ன நைட் பட்டம்?

பல்கலைக்கழகம் போனவர்கள் மாத்திரம் பதிலளிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அது என்ன நைட் பட்டம்?

"சேர்" பட்டம் என்று தமிழில் சொல்வோமல்லவா? அது தான் பொதுவாக வழங்கப் படும் "நைற்" (Knight) பட்டம். பல வகையான நைற் பட்டங்கள் இருக்கின்றன. மேல் கல்வியாளருக்கு வழங்கப் பட்டது "சேர்" Sir என்று அவர் தன் பெயருக்கு முன்னாள் போட்டுக் கொள்ளக் கூடிய King's Bachelor என்ற நைற் பட்டம் என ஊகிக்கிறேன்.

பேராசிரியர் சேர் கனகராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

"King's Speech" என்ற திரைப் படத்தில் இந்த பிரிட்டிஷ் நைற் பட்டங்களைக் பற்றிய ஒரு உரையாடல் வருகிறது. பார்த்து ரசியுங்கள். காட்சியின் பின்னணி: ஆறாம் ஜோர்ஜ் மன்னருக்கு திக்குவாய்ப் பிரச்சினை (stuttering) இருந்ததால், ஒரு பேச்சுப் பயிற்சியாளரின் உதவியை நாடுகிறார். அவர்களது முதல் அறிமுகத்தின் போது நடக்கும் உரையாடலின் பகுதி இது:

https://www.youtube.com/watch?v=arhkcfV6C28

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள்.

அது என்ன நைட் பட்டம்?

பல்கலைக்கழகம் போனவர்கள் மாத்திரம் பதிலளிக்கவும்.

துரை இது என்ன அர்ச்சனா இராமநாதன் போல் பேசுகின்றீர்கள். அவர்தான் ஓ எல் படிச்சனியா யூனிவசிட்டி போனியா என்று கேட்பார்.

யூரியூப் காணொளி பார்த்தேன். அதில் கிங்க் சார்ல்ஸ் பிரம்பால் தோளின் இரண்டு பக்கமும் தட்டி பார்த்துவிட்டு கழுத்தில் மாலை போட்டுவிடுகின்றார். கழுத்தில் மாட்டப்படும் மாலையின் பாரத்தை ஆள் தாங்குவாரோ என உறுதிப்படுத்த தோளில் தட்டி பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் நிஷான் கனகராஜா பிரித்தானிய மன்னரின் 2026 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவப் பட்டியலில் 'நைட்' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வரும் நிலையில் பட்டம் பெற்றுள்ளார்.

உயரிய விருது 

உயர்கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு மற்றும் சமூக உள்ளடக்கல் கொள்கைகளை முன்னெடுத்தமைக்காக இந்த உயரிய விருது  வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் உயரிய நைட் பட்டம் பெற்ற யாழ்ப்பாண தமிழர் | Knighthood For A Sri Lankan Born Professor

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். மார்ட்டின் வீதியில் வளர்ந்தவர். யாழ். பரி. யோவான் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1985ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியின் தலைமை மாணவ தலைவராகவும் (Head Prefect) திகழ்ந்துள்ளார்.

இலங்கையில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தேசத்தின் சிறுவன்

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பதவிகளை வகித்த அவர், 2019 ஆம் ஆண்டு லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுள்ளார்.

பிரித்தானியாவின் உயரிய நைட் பட்டம் பெற்ற யாழ்ப்பாண தமிழர் | Knighthood For A Sri Lankan Born Professor

பிரித்தானியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றை நிஷான் கனகராஜா வழிநடத்தி வருகினறார்.

இந்த கௌரவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், "யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்திலிருந்து வந்த ஒரு சிறுவன், இன்று அரச குடும்பத்தினால் கௌரவிக்கப்படுவது என்பது ஒரு வியக்கத்தக்க பயணம். கல்வியின் மாற்றும் சக்தியினாலும், அது வழங்கும் வாய்ப்புகளினாலுமே இது சாத்தியமானது" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/

  • கருத்துக்கள உறவுகள்

மேல் உள்ள செய்திகள் தமிழ் பிபிசியில் போடமாட்டர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2025 at 14:50, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள்.

அது என்ன நைட் பட்டம்?

பல்கலைக்கழகம் போனவர்கள் மாத்திரம் பதிலளிக்கவும்.

இராமநாதன், முத்துகுமாரசாமி, வைத்திலிங்கம் துரைசாமி, ஓலிவர் குணதிலக, ஜோன் கொத்தலாவல என பல இலங்கையர் முன்பும் இந்த மரியாதையை பெற்றுள்ளனர்.

ஆனால் புலம்பெயர் தமிழரில் நிஷான் முதலாவது என நினைக்கிறேன்.

ஆனால் இது நிஷான் போல பலருக்கு சரியான தகமைக்கு கிடைத்தாலும், இன்னும் சிலருக்கு கொன்சேவேடிவ் கட்சிக்கு டொனேசன் கொடுத்தமைக்காக கூட வழங்கபட்டுள்ளது.

நல்ல காலம் சுபாஸ்கரன் இல்லாமல் நிஷான் இந்த விருதை முதலாவதாக பெற்று கொண்டார்😂.

King/Queen, Duke, Earl, Prince/Princes, Marquess, Viscount, Baron, Lord/Lady, Sir/Dame,

இதற்கு கீழே - Commander of the British Empire (CBE), Officer of the British Empire (OBE), Member of the BE (MBE), மற்றும் British Empire Medal (BEM) என்பன வரும்.

இதுதான் மேலோட்டமாக பிரிதானியாவில் சமூக தரவரிசை. இதில் சாதாரணமானவர்கள் (commoners ) சேர், லோர்ட் வரைக்கும்தான் போக முடியும். மிகுதி பட்டங்கள், நிலவுடமை+பரம்பரையாக வருவன.

ஒவ்வொரு பிரதமந்திரி விலகும் போது அவர் ஆட்களை இப்பதவிகளுக்கு நியமிக்கலாம். கள்ளன் பொரிஸ் தனக்கு காரியதரிசியாக வேலை செய்த எதையும் சாதிக்காத 30 வயதும் ஆகாத ஒரு இளம்பெண்ணை Lady யாக நியமித்தார்.

அதே போல் புத்தாண்டில் அரசும், அரச குடும்பமும் ஒரு தொகை பேரை நியமிப்பார்கள்.

இதில் சமூகத்தில் பல நல்லது செய்தோர், வேலையில், விளையாட்டில் சாதித்தோர் நியமிக்கபடுவார்கள். என்னுடைய ஒரு நெருங்கிய வெள்ள இன நண்பிக்கு, பெண்கள் கிரிகெட்டை ஊக்குவித்தமைக்காக MBE கிடைத்தது.

ஆனால் அரசு விரும்பினால் எப்போதும் எவரையும் நியமிக்கலாம்.

சரி…நான் என்ன எண்டு நினைகிறியள்?

VPBE - வெட்டி பயல் ஒவ் த பிரிடிஷ் எம்பயர்😂.

On 30/12/2025 at 17:00, Justin said:

"சேர்" பட்டம் என்று தமிழில் சொல்வோமல்லவா? அது தான் பொதுவாக வழங்கப் படும் "நைற்" (Knight) பட்டம். பல வகையான நைற் பட்டங்கள் இருக்கின்றன. மேல் கல்வியாளருக்கு வழங்கப் பட்டது "சேர்" Sir என்று அவர் தன் பெயருக்கு முன்னாள் போட்டுக் கொள்ளக் கூடிய King's Bachelor என்ற நைற் பட்டம் என ஊகிக்கிறேன்.

பேராசிரியர் சேர் கனகராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

"King's Speech" என்ற திரைப் படத்தில் இந்த பிரிட்டிஷ் நைற் பட்டங்களைக் பற்றிய ஒரு உரையாடல் வருகிறது. பார்த்து ரசியுங்கள். காட்சியின் பின்னணி: ஆறாம் ஜோர்ஜ் மன்னருக்கு திக்குவாய்ப் பிரச்சினை (stuttering) இருந்ததால், ஒரு பேச்சுப் பயிற்சியாளரின் உதவியை நாடுகிறார். அவர்களது முதல் அறிமுகத்தின் போது நடக்கும் உரையாடலின் பகுதி இது:

https://www.youtube.com/watch?v=arhkcfV6C28

இந்த knights க்குள்ளும் பல ஓடர் இருக்கு. Order of the Garter இல் அரசர், முன்னாள் பிரதமர்கள் அந்த ரேஞ்சில் உள்ளவர்கள் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

ஆனால் புலம்பெயர் தமிழரில் நிஷான் முதலாவது என நினைக்கிறேன்.

2009 இல் மகப்பேற்று மருத்துவ நிபுணர் சபாரட்ணம் அருள்குமரன் இதே வகையான நைற் கௌரவம் பெற்று விட்டார். அவர் தான் நிபுணர்கள் பட்டியலில் நைற் கௌரவம் பெற்ற முதல் ஈழத்தமிழராக இருப்பார் என நம்புகிறேன்.

https://en.wikipedia.org/wiki/Sabaratnam_Arulkumaran

சேர் அருள்குமரன் யாழ் மத்திய கல்லூரிப் பழைய மாணவர். எப்பவாவது "once in a blue moon" யாழ் மத்திய கல்லூரி ஓரிருவரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பும்😎. அப்படி மருத்துவராக வருபவர் ஏனைய பிரபல கல்லூரிகளில் இருந்து சென்றோரை விட உச்சமான தர நிலைக்கு வருவார்! மத்திய கல்லூரியின் கிணற்றுத் தண்ணீரில் தான் ஏதோ இருக்கிறது என நினைக்கிறேன் (அதனால் தான் Upper school இல் இருக்கும் அந்த ஒற்றைக் கிணற்றை நாம் இறைப்பதில்லை😂!)

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் வரிப்பணத்தில் வாழும் பிரித்தானிய அரச குடும்பத்தின் ஒன்றுமில்லாத கெளரவ பட்டங்கள் (சேர் பட்டம் உள்ளங்க) தான் இவை. இதற்காகவே தான் தமிழினத்தை காட்டிக்கொடுத்து இன்று நடுவீதியில் நாடற்ற அகதிகளாக்கி விட்டுள்ளனர்.. இராமநாதன் போன்றவர்கள்.

கடந்த ஆண்டில் இந்த கெளரவ பட்டம் பெற்ற ஒருவர் தான்.. கொரோனா காலத்தில் அரசை தவறாக வழிநடத்தி பல்லாயிரம் உயிர்களை பாதுகாக்க தவறிவிட்டமை அண்மையில் விசாரணை அறிக்கையில் சொல்லப்பட்டிருந்து.

உண்மையில் சார்ள்ஸுக்கு இந்த கெளரவப் பட்டங்களை எதுக்கு வழங்கிறம் என்ற புரிதல் இருக்கோ தெரியாது, சிபார்சு செய்யப்படும் ஆக்களுக்கு குத்தி விடுது... இப்படி பல விமர்சனங்கள் பிரித்தானியர்கள் மத்தியில் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2025 at 04:17, நியாயம் said:

துரை இது என்ன அர்ச்சனா இராமநாதன் போல் பேசுகின்றீர்கள். அவர்தான் ஓ எல் படிச்சனியா யூனிவசிட்டி போனியா என்று கேட்பார்.

யூரியூப் காணொளி பார்த்தேன். அதில் கிங்க் சார்ல்ஸ் பிரம்பால் தோளின் இரண்டு பக்கமும் தட்டி பார்த்துவிட்டு கழுத்தில் மாலை போட்டுவிடுகின்றார். கழுத்தில் மாட்டப்படும் மாலையின் பாரத்தை ஆள் தாங்குவாரோ என உறுதிப்படுத்த தோளில் தட்டி பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன்.

அர்சுனா ஏதாவது வேலைக்கு நேர்முக தேர்விற்காக அந்த கேள்வியினை கேட்டிருப்பார்.🤣

இங்கு வேலை நேர்முக தேர்விற்கு கூட பெரிதாக கல்வியினை பார்க்கமாட்டார்கள், அனுபவ்மில்லாவிட்டால் வேலைக்கு எடுக்க மாட்டார்கள் ஆனால் அனுபவம் இருந்தால் கல்வித்தகமைகளை கவனிக்கமாட்டார்கள் (சாதாரண வேலைகளுக்கு).

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

மக்களின் வரிப்பணத்தில் வாழும் பிரித்தானிய அரச குடும்பத்தின் ஒன்றுமில்லாத கெளரவ பட்டங்கள் (சேர் பட்டம் உள்ளங்க) தான் இவை. இதற்காகவே தான் தமிழினத்தை காட்டிக்கொடுத்து இன்று நடுவீதியில் நாடற்ற அகதிகளாக்கி விட்டுள்ளனர்.. இராமநாதன் போன்றவர்கள்.

கடந்த ஆண்டில் இந்த கெளரவ பட்டம் பெற்ற ஒருவர் தான்.. கொரோனா காலத்தில் அரசை தவறாக வழிநடத்தி பல்லாயிரம் உயிர்களை பாதுகாக்க தவறிவிட்டமை அண்மையில் விசாரணை அறிக்கையில் சொல்லப்பட்டிருந்து.

உண்மையில் சார்ள்ஸுக்கு இந்த கெளரவப் பட்டங்களை எதுக்கு வழங்கிறம் என்ற புரிதல் இருக்கோ தெரியாது, சிபார்சு செய்யப்படும் ஆக்களுக்கு குத்தி விடுது... இப்படி பல விமர்சனங்கள் பிரித்தானியர்கள் மத்தியில் உண்டு.

தகவலுக்கு நன்றி.

அப்போ நிஷான் இரெண்டாவது.

சென்ரல், சென் ஜோன்ஸ் எண்டு யாழின் இரு பெரிய பாடசாலைகளும் வடக்கின் பெரும் போரை இதிலும் ஆரம்பித்து விட்டனர் 😂.

இன்னொரு கொசுறு - சேர்மாரை முதல் பெயராலும் Sir Ian, Sir Alan எனவும், லோர்ட் மாரை கடைசி பெயராலும் Lord Prescott அழைப்பார்கள்.

சில நிலவுடமைவாதிகள் எந்த பெயராலும் அன்றி அவர்களின் நிலத்தின் பெயராலேயே அழைக்கப்படுவர் உதாரணம்: Northumberland என்பது இடத்தையும் அதேசமயம் Duke ஐயும் குறிக்கும்.

உண்மையில் பிரித்தானியாவில் வாழ்ந்து, படித்து வேலை செய்யும் நம்மவருக்கு கூட இவை பற்றி போதிய புரிதல் இல்லை என்பது நான் கண்ட உண்மை.

இந்த பட்டங்கள் அநேகம் அரசியல் அதிகாரம் அறவே அற்றவை. ஒரு அங்கீகாரம் என்பது மட்டுமே.

இந்த பட்டங்களில் உண்மையில் கொஞ்சம் அரசியல் அதிகாரம் உள்ளது என்றால் அது Lord/Lady மட்டுமே.

முன்னர் பிரபுக்கள் சபையில் hereditary peers எனப்படும் வம்சாவழி வந்த பிறப்புரிமயால் பிரபு ஆனவர்கள் கனக்க.

97 லேபர் ஆட்சியில் ஆரம்பித்து, இந்த ஆட்சியில் - கிட்டதட்ட இதை வழக்கொழித்து விட்டார்கள்.

இருப்பவர்கள் இறக்க, இனி வரும் காலங்களில் தனியே நியமன உறுபினர்கள்தான் பிரபுக்கள் சபையில் இருப்பார்கள்.

அவர்கள் கட்சி சார்ந்தோ, அல்லது cross bench peers எனப்படும் கட்சி சாராமலோ இருக்கலாம்.

இலங்கையில் உள்ள தேசிய பட்டியலை ஒத்த ஒரு விடயம்தான் இங்கே பிரபுக்கள் சபை.

பின்கதவு எண்டும் சொல்லலாம்.

பிரிடிஷ் பாராளுமன்ற வளாகத்தில் - பக்கிங்காம் அரண்மனையில் இருந்து போனால், முதல் கதவு House of Commons இன் கேட். பின் கதவுதான் பிரபுகள் சபையின் கேட் 😂.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.