Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

08 Jan, 2026 | 04:58 PM

image

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 10 ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த 10 ஹெலிகொப்டர்களும் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான Bell 206 SEA RANGER ரக ஹெலிகொப்டர்களே இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளது. 

திட்வா பேரிடரின் போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஹெலிகொப்டர்கள் மிகவும் உதவியது. 

இந்த 10 ஹெலிகொப்டர்களும் இலங்கை விமானப்படையையும் விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவும் எனவும் நம்பப்படுகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிட்டுள்ளார்.

G-IW8yeboAAEors.jpg

G-IW8yda0AAwOa5.jpg

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இந்த 10 ஹெலிகொப்டர்களும் இலங்கை விமானப்படையையும் விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவும் எனவும் நம்பப்படுகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலாக என்ன வழங்கப்படும்?

திருகோணமலை?

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

இதற்குப் பதிலாக என்ன வழங்கப்படும்?

திருகோணமலை?

10 கெலி பத்தாது அண்ணை! கூட எதிர்பார்க்கிறோம்!

பெரிய ஐயாட்ட நீங்க தான் எடுத்து சொல்லவேணும். அடுத்த அமுக்கமோ புயலோ வருதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

10 கெலி பத்தாது அண்ணை! கூட எதிர்பார்க்கிறோம்!

பெரிய ஐயாட்ட நீங்க தான் எடுத்து சொல்லவேணும். அடுத்த அமுக்கமோ புயலோ வருதாம்.

இது உங்கள் பாவனைக்கு இல்லை.

சீனாவுக்கு எதிரான போரின் போது

அமெரிக்கா பாவிப்பதற்கே.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இது உங்கள் பாவனைக்கு இல்லை.

சீனாவுக்கு எதிரான போரின் போது

அமெரிக்கா பாவிப்பதற்கே.

அண்ணோய் இனிமேல் சண்டை எம்மண்ணிலோ கடலிலோ வானிலோ வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அண்ணோய் இனிமேல் சண்டை எம்மண்ணிலோ கடலிலோ வானிலோ வேண்டாம்.

இந்த சண்டையால் இலங்கை செல்வந்த நாடாகப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த சண்டையால் இலங்கை செல்வந்த நாடாகப் போகிறது.

அண்ணை, வெனிசுலா சம்பவத்தின் பின் கிரீன்லாண்ட் கைப்பற்றப்பட்டால் இலங்கையையும் அமெரிக்கா பிடிக்காதோ என தம்பி ஒருத்தன் கேக்கிறான்! போறபோக்கை பார்த்தால் நடந்தாலும் நடக்குமோ?!

  • கருத்துக்கள உறவுகள்

ராஜதந்திரம்

  1. இவை கொஞ்சம் பழைய ஹெலிகள். அமெரிக்க கடற்படைக்கு புதியன வாங்கும் போது இதை கிளியரன்ஸ் உள்ளோருக்கு மட்டும் ஏலத்தில் குறைந்த விலைக்கே கொடுக்கலாம்.

  2. டிட்வா புயலில் இலங்கையிடம் 3 ஹெலி மட்டும் இருந்தாதால் விரைந்து செயல்பட முடியவில்லை. இதை அறிந்துள்ள இலங்கை மக்கள்- இந்த 10 ஹெலியின் பின் அமெரிக்கா மீது கொஞ்சம் நல்லெண்ணம் அடைவர்.

  3. திருத்தம், உதிரிபாகம் என அமெரிக்க நிறுவனம் தொடர்ந்து இலஙகையிடம் பணம் பார்க்கும்.

  4. தொடர்ந்தும் இலங்கை விமானிகள் பயிற்ச்சிக்கென அமெரிக்கா போவார்கள், அவர்கள் வருவார்கள். இதன் மூலம் இலங்கை விமானப்படையின் அதிகார வர்க்கத்கை கையில் வைத்திருக்கலாம்.

தம்பரின் அதிரடி ராஜதந்திரத்துக்கு நேர் எதிரானது ஜூலியின் அணுகுமுறை.

ஜூலி இனி எங்கே போகிறார் என்பது தெரியவில்லை - தம்பர் இருக்கும் மட்டும் இந்தவகை இராஜதந்திரிகள் முன்னிலை படுவது கடினமாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஜூலி இனி எங்கே போகிறார் என்பது தெரியவில்லை - தம்பர் இருக்கும் மட்டும் இந்தவகை இராஜதந்திரிகள் முன்னிலை படுவது கடினமாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

அண்ணை, இந்தம்மா ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்துவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் கொழும்பு வர முதல் எங்கோ வாசித்தோ கேட்டோ இருக்கிறேன். அதே போல கோட்டா ஆட்சி மாறியது!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அண்ணை, இந்தம்மா ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்துவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் கொழும்பு வர முதல் எங்கோ வாசித்தோ கேட்டோ இருக்கிறேன். அதே போல கோட்டா ஆட்சி மாறியது!

தென்னமெரிக்காவில் எங்கோ ஆட்சியை கவிழ்த்துவிட்டே இலங்கை வந்தவராம்.

புதிதாக வருபவர் இவரைவிட பாயக் கூடியவராம்.

4 hours ago, goshan_che said:

இவை கொஞ்சம் பழைய ஹெலிகள். அமெரிக்க கடற்படைக்கு புதியன வாங்கும் போது இதை கிளியரன்ஸ் உள்ளோருக்கு மட்டும் ஏலத்தில் குறைந்த விலைக்கே கொடுக்கலாம்.

வழமையாக பாவனைக்கு உதவாத கப்பல்கள் விமானங்கள் என்று இப்படி ஏழை நாடுகளுக்கு அன்பளிப்பு செய்வது.

இந்ததடவை அகப்பட்டது இலங்கை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

தென்னமெரிக்காவில் எங்கோ ஆட்சியை கவிழ்த்துவிட்டே இலங்கை வந்தவராம்.

தேடியதில் கொலம்பியாவில் வேலை பார்த்துள்ளார். ஆனால் அங்கே அமேரிக்க எதிர் அரசே உள்ளது.

8 hours ago, ஏராளன் said:

அண்ணை, இந்தம்மா ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்துவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் கொழும்பு வர முதல் எங்கோ வாசித்தோ கேட்டோ இருக்கிறேன். அதே போல கோட்டா ஆட்சி மாறியது!

Key Overseas Assignments

  • Deputy Chief of Mission, U.S. Embassy Phnom Penh, Cambodia (senior embassy leadership role).

  • Consular Officer, U.S. Consulate Guangzhou, China (first overseas assignment).

Additional Overseas Service

In various diplomatic functions across multiple countries — either as political/economic officer or in other capacities:

  • Tokyo, Japan

  • Hanoi, Vietnam

  • Bangkok/Thailand

  • Bogotá, Colombia

  • Baghdad, Iraq
    These postings include positions such as Deputy Political Counselor and Economic/Political roles

அப்படியாகத்தெரியவில்லை. ஒரு வேளை தாய்லாந்தாக இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

இது உங்கள் பாவனைக்கு இல்லை.

சீனாவுக்கு எதிரான போரின் போது

அமெரிக்கா பாவிப்பதற்கே.

இந்தியாவை கொஞ்சம் எச்சரித்த மாதிரியும் இருக்கும். இந்தியா பதறியடித்துக்கொண்டு ஓடி வரும், வந்துவிட்டது என்றும் செய்தி சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

தேடியதில் கொலம்பியாவில் வேலை பார்த்துள்ளார். ஆனால் அங்கே அமேரிக்க எதிர் அரசே உள்ளது.

Key Overseas Assignments

  • Deputy Chief of Mission, U.S. Embassy Phnom Penh, Cambodia (senior embassy leadership role).

  • Consular Officer, U.S. Consulate Guangzhou, China (first overseas assignment).

Additional Overseas Service

In various diplomatic functions across multiple countries — either as political/economic officer or in other capacities:

  • Tokyo, Japan

  • Hanoi, Vietnam

  • Bangkok/Thailand

  • Bogotá, Colombia

  • Baghdad, Iraq
    These postings include positions such as Deputy Political Counselor and Economic/Political roles

அப்படியாகத்தெரியவில்லை. ஒரு வேளை தாய்லாந்தாக இருக்குமோ?

அப்ப ஆய்வாளர்(வாய்வாளர் (அவற்றை பேரை சொல்லமாட்டன்) சொன்னது பொய்யா அண்ணை?!

  • கருத்துக்கள உறவுகள்

தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப்பிடித்து பார்க்கக்கூடாது.- பழமொழி.🤣

தானம் கொடுத்த கெலின் விசிறியைச் சுற்றிப் பார்க்கக்கூடாது.- புதுமொழி.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அப்ப ஆய்வாளர்(வாய்வாளர் (அவற்றை பேரை சொல்லமாட்டன்) சொன்னது பொய்யா அண்ணை?!

தாய்லாந்தில் ஆட்சி மாற்றம், மக்கள் வீதிக்கு இறங்கிய நேரம் அங்கே நிண்டாவோ தெரியாது.

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அதிரடி நன்கொடை: இலங்கைக்கு வரும் 10 ஹெலிகொப்டர்கள்!

Mar 18, 2026 - 07:29 AM

அமெரிக்காவின் அதிரடி நன்கொடை: இலங்கைக்கு வரும் 10 ஹெலிகொப்டர்கள்!

அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக ஹெலிகொப்டர்கள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த 10 ஹெலிகொப்டர்களும் மார்ச் 15 ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள Port Mobile இலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளன. இவை இந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவப் பதிப்பான இந்த ஹெலிகொப்டர்கள், இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. தற்போதுள்ள Bell 206 மொடல்களுடன் இந்த ஹெலிகொப்டர்களையும் இணைப்பதன் மூலம், உயர்தர விமானி பயிற்சி, பேரிடர் கால துரித செயற்பாடுகள் மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட முக்கியமான பொதுப்பயன்பாட்டு நடவடிக்கைகளுக்கான திறனை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஹெலிகொப்டர்கள் கணிசமான அளவில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த நன்கொடையானது அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தையும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான அர்ப்பணிப்பையும் பலப்படுத்துவதாகவும் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஹெலிகொப்டர்களைப் பார்வையிடுவதற்காக இலங்கை விமானப்படையின் தூதுக்குழுவொன்று கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தது. இந்த பெறுமதியான நன்கொடைக்காக இலங்கை தனது மனமார்ந்த நன்றியை அமெரிக்காவிற்கு தெரிவித்துக்கொள்வதாக மஹிந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmmve2a3c0000356p3aj9w6ai

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நோக்கி வரும் அமெரிக்கா வழங்கிய 10 ஹெலிக்கொப்டர்கள்!

18 Mar, 2026 | 11:57 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு )

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட TH-57 Sea Ranger ரக 10 ஹெலிக்கொப்டர்கள் அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஹெலிக்கொப்டர்கள், கடந்த 15ஆம் திகதி அலபாமா மாநிலத்தில் உள்ள போர்ட் மொபைல் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மே 24ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவ பதிப்பாகிய இந்த ஹெலிக்கொப்டர்கள், இலங்கை விமானப்படைக்கு ஒப்படைக்கப்படவுள்ளன.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் Bell 206 ரக விமானங்களுடன் இவை இணைவதன் மூலம் விமானப்படையின் செயல்திறன் மேலும் மேம்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய ஹெலிக்கொப்டர்கள் மூலம் மேம்பட்ட விமானி பயிற்சி நடவடிக்கைகள், பேரிடர் கால அவசர மீட்புப் பணிகள், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், பொது பயன்பாட்டு சேவைகள் எனப் பல முக்கிய துறைகளில் திறன்கள் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஹெலிக்கொப்டர்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த தூதுவர் மஹிந்த சமரசிங்க, இந்த அன்பளிப்பு அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான நீண்டகால கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர், கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கை விமானப்படையின் உயர்மட்ட குழுவொன்று அமெரிக்காவிற்கு விஜயம் செய்து, இந்த ஹெலிக்கொப்டர்களை நேரில் பார்வையிட்டு, கப்பல் மூலம் அனுப்பும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

இந்த பெறுமதிமிக்க உதவிக்காக இலங்கை அரசு அமெரிக்காவிற்கு தனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளதாகவும் தூதுவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

WhatsApp_Image_2026-03-18_at_11.34.06_AM

WhatsApp_Image_2026-03-18_at_11.33.59_AM

https://www.virakesari.lk/article/241269

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஹெலி பறக்கிற படமொன்றையும் காணேல்லை ....... எல்லாம் கராஜ்சுக்குள்ளும் லொறியிலும்தான் நிக்குது . ......! 😀

1 hour ago, ஏராளன் said:

இந்த பெறுமதிமிக்க உதவிக்காக இலங்கை அரசு அமெரிக்காவிற்கு தனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளதாகவும் தூதுவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த ஹெலிகப்ரர்கள் 60-70 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை. சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் பாவனையிலிருந்து முற்றாக நீக்கப்பட்டவை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.