Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

https://www.facebook.com/share/v/182Qk3e9jm/

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில் உள்ளது போல் உண்மையில் புலி காசை கொள்ளை அடித்த கள்ளர் பெயர் விபரம் வீடியோவில் உள்ளதா?

சும்மா கவர்சிக்கா வைத்த தலைப்பு போல் உள்ளது.

2 நிமிடம் பார்த்தேன் - நான் புலிக்காசு 300,000 டொலரைத்தான் அடித்தேன், நீ புளொட் காசு 500,000 அடித்தாய் என கதை நீளுது😂.

புலிக்காசை அடித்தாயா? என கேட்டால், கேட்பவரை நீ புளொட் என திசை திருப்பி விடும் பழைய உத்தியோ?

வீடியோவை பார்த்தவர்கள் யாரும் இருந்தால் உண்மையில் கள்ளர் விபரம் உள்ளதா என சொல்லவும்.

3 hours ago, விசுகு said:

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

https://www.facebook.com/share/v/182Qk3e9jm/

இப்படி கேள்வி கேட்பவர்களை இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் படி இயங்குபவர்கள் என சொல்லிவிட்டால் அடுத்தாக துரோகி என முத்திரை குத்துவது இலகுவாகி விடுமல்லவா..! அப்படி குத்தியபின் எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என முழக்கம் திரு நினைக்கிறார்.

இவர் தன் கூட்டாளிகள் என சொல்பவர்களில் ஸ்பைஸ்லாண்ட் கிருபாவும் உள்ளார். புலிகளின் காசினை ஆட்டையை போட்டவர்களில் கிருபாவும் ஒருவர். அதே போல் பாபு கேட்டரிங் முதலாளியும் இவரது நற்பெயர் லிஸ்டில் உள்ளார்.

தமிழ் தேசிய வியாபாரிகளை உயர்த்தி பேசி, கேள்வி கேட்பவர்களை துரோகி என முத்திரை குத்தி வயிறு வளர்க்கும் இவரை போன்றவர்கள் தான் தமிழ் மக்களிம் முதல் எதிரிகள்.

1 hour ago, goshan_che said:

தலைப்பில் உள்ளது போல் உண்மையில் புலி காசை கொள்ளை அடித்த கள்ளர் பெயர் விபரம் வீடியோவில் உள்ளதா?

சும்மா கவர்சிக்கா வைத்த தலைப்பு போல் உள்ளது.

இறுதி வரைக்கும் அவர் சொல்லவில்லை.

பாம்பு தானறிந்த இன்னொரு பாம்பின் கால்களை ஒரு போதும் வெளியே சொல்லுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சில காலங்களுக்கு முன், ஒரு கருத்தாளர் கருத்துக்கு எதிர்க்கருத்து வைத்த என்னை, புலிகளின் காசை அடித்தது நான் என்றுகூறி எனது கருத்தை மடை மாற்றியிருந்தார் அவர். மடைமாற்றி, கஞ்சா கோஷ்ட்டி, பெட்டிக்கடை, அனுரா காவடி இப்படி பலபெயர். தமது கருத்துக்கு எதிர்க்கருத்து வைப்போரை தடுக்கும் செயல், தம்மை புனிதராக்குவது.

  • கருத்துக்கள உறவுகள்+

முந்தி ஒருகாலத்திலை (~2012) WTCCஇல் இருந்து புலிகளின் பணத்தை கொள்ளை அடித்த 25 பேரின் பெயர் பட்டியல் வெளியாகியிருந்தது... அது யாருக்கேனும் நினைவிருக்கிறதா?

பின்னாளில் நடு ரோட்டில் செத்த அதன் தலைவர் சுரேஸ் என்பவரின் பெயர் தான் முதலாவதாக இருந்தது. இவருக்கு போருக்குப் பின்னர் 5 வீடுகள் இருந்ததாகவும் கேள்வி.

Edited by நன்னிச் சோழன்

37 minutes ago, நன்னிச் சோழன் said:

பின்னாளில் நடு ரோட்டில் செத்த அதன் தலைவர் சுரேஸ் என்பவரின் பெயர் தான் முதலாவதாக இருந்தது. இவருக்கு போருக்குப் பின்னர் 5 வீடுகள் இருந்ததாகவும் கேள்வி.

Current அடித்து செத்தவரா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

இப்படி கேள்வி கேட்பவர்களை இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் படி இயங்குபவர்கள் என சொல்லிவிட்டால் அடுத்தாக துரோகி என முத்திரை குத்துவது இலகுவாகி விடுமல்லவா..! அப்படி குத்தியபின் எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என முழக்கம் திரு நினைக்கிறார்.

இவர் தன் கூட்டாளிகள் என சொல்பவர்களில் ஸ்பைஸ்லாண்ட் கிருபாவும் உள்ளார். புலிகளின் காசினை ஆட்டையை போட்டவர்களில் கிருபாவும் ஒருவர். அதே போல் பாபு கேட்டரிங் முதலாளியும் இவரது நற்பெயர் லிஸ்டில் உள்ளார்.

தமிழ் தேசிய வியாபாரிகளை உயர்த்தி பேசி, கேள்வி கேட்பவர்களை துரோகி என முத்திரை குத்தி வயிறு வளர்க்கும் இவரை போன்றவர்கள் தான் தமிழ் மக்களிம் முதல் எதிரிகள்.

இறுதி வரைக்கும் அவர் சொல்லவில்லை.

பாம்பு தானறிந்த இன்னொரு பாம்பின் கால்களை ஒரு போதும் வெளியே சொல்லுவதில்லை.

மேலதிக தகவலுக்கு நன்றி.

புலிக்காசை கொள்ளை அடித்தவர்கள் யார் என்பதை அவர்களே வாயை கொடுத்து வெளிகொண்டு வந்துள்ளார்கள்😂.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

சில காலங்களுக்கு முன், ஒரு கருத்தாளர் கருத்துக்கு எதிர்க்கருத்து வைத்த என்னை, புலிகளின் காசை அடித்தது நான் என்றுகூறி எனது கருத்தை மடை மாற்றியிருந்தார் அவர். மடைமாற்றி, கஞ்சா கோஷ்ட்டி, பெட்டிக்கடை, அனுரா காவடி இப்படி பலபெயர். தமது கருத்துக்கு எதிர்க்கருத்து வைப்போரை தடுக்கும் செயல், தம்மை புனிதராக்குவது.

புலிக்காசை கொள்ளை அடித்தீர்கள் என உங்களை நான் ஒரு போதும் நேரடியக சொன்னதில்லை.

சில சமயம் நான் சொன்னதை பிழையாக விளங்கி தொப்பியை எடுத்து போட்டு கொண்டீர்களோ தெரியாது.

காசை அடிப்பது சுலபம் அல்ல. அதற்கு கள்ளனாக மட்டும் அல்ல…

கெட்டிகாரனாகவும் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது புலிகாசும் இல்லை புளொட் காசும் இல்லை அடித்தது அப்பாவி தமிழர்கள் காசு

ஆனால் அதை இலங்கை அரசு அனுபவிக்க இல்லை தானே சில தமிழர்கள் அதை அனுபவித்து மில்லியனர்களாக இருக்கட்டுமே என்ற ஆபத்தான போக்கும் நிலவுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அது புலிகாசும் இல்லை புளொட் காசும் இல்லை அடித்தது அப்பாவி தமிழர்கள் காசு

அடித்ததும் “தமிழர்கள்தான் நாங்கள்” என்று இன்றும் மாவீரர் தினம், கல்விக் கழகம் அது இது என்று அப்பாவியாக ஏமாறும் தமிழர்களிடம் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அது புலிகாசும் இல்லை புளொட் காசும் இல்லை அடித்தது அப்பாவி தமிழர்கள் காசு

உண்மை தான். அப்பாவி தமிழர்களை ஏமாற்றி, தேசிய செயற்பாட்டாளர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட கூட்டதில் ஒரு கும்பல் தான் மக்களின் பணத்தை அடித்தது. இப்ப புலிக்காசை யாரே வேறு கிரகத்தில் இருந்து வந்து யாரோ அடித்தது போல் சம்பந்தப்பட்டவர்களே படம் காட்டுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

புலிக்காசை கொள்ளை அடித்தீர்கள் என உங்களை நான் ஒரு போதும் நேரடியக சொன்னதில்லை.

ஏனய்யா எல்லாத்தொப்பியையும் தூக்கி உங்கள் தலையில் மாட்டுகிறீர்கள்? நீங்கள் மட்டுந்தான் இங்கு கருத்து எழுதுகிறீர்களா? எதற்கெடுத்தாலும் எனக்காக கருத்தெழுதுகிறீர்கள், என்னைத்தான் சொல்கிறீர்கள் என்று வில்லங்கத்திற்கு விதண்டாவாதம் செய்கிறீர்கள். அப்படியென்றால் யார் யாருக்காக கருத்து எழுதுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒன்று சொன்னால் அதை பலர் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். இங்கு தவறு செய்பவர் தன் தவறை மற்றவர் மேல் போட்டு விட்டு நீதான் நீதான் என்று திரும்ப திரும்ப சொல்வதால் அது உண்மையாகிவிடுமென நினைக்கிறார்கள். அது, தங்களை காப்பாற்ற தாங்கள் சொல்லிக்கொள்ளும் சமாதானம், போடும் வேஷம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

உங்களை இங்கே அனுரகாவடி என விமர்சிப்பவன் நான் மட்டுமே.

அனுரகாவடி என விமர்சிப்பவர் புலிக்காசை அடித்தார் எனவும் என்னை சொன்னார் என நீங்கள் எழுதியதால் அப்படி விளங்கி கொள்ளப்பட்டது.

கீழே நான் குவோட் பண்ணியுள்ள, நீங்கள் குறிப்பிட்ட பதங்கள் அனைத்தும் நான் மட்டுமே பாவிப்பவை.

குழப்பி அடிக்காமல் தெளிவாக எழுதினால் நல்லம்.

10 hours ago, satan said:

மடைமாற்றி, கஞ்சா கோஷ்ட்டி, பெட்டிக்கடை, அனுரா காவடி இப்படி பலபெயர்.

22 minutes ago, island said:

உண்மை தான். அப்பாவி தமிழர்களை ஏமாற்றி, தேசிய செயற்பாட்டாளர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட கூட்டதில் ஒரு கும்பல் தான் மக்களின் பணத்தை அடித்தது. இப்ப புலிக்காசை யாரே வேறு கிரகத்தில் இருந்து வந்து யாரோ அடித்தது போல் சம்பந்தப்பட்டவர்களே படம் காட்டுகின்றனர்.

நீங்க புளொட்😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

  11 hours ago, satan said:

மடைமாற்றி, கஞ்சா கோஷ்ட்டி, பெட்டிக்கடை, அனுரா காவடி இப்படி பலபெயர்.

7 minutes ago, goshan_che said:

உங்களை இங்கே அனுரகாவடி என விமர்சிப்பவன் நான் மட்டுமே.

இல்லை. இன்னும் பலர் விமர்ச்சித்திருக்கிறார்கள், உங்களைத்தொடர்ந்துதான். இதிலிருந்து நீங்கள் கருத்துக்களை சரியாக வாசிப்பதில்லை என புரிகிறது. இங்கு என்னை விமர்ச்சிக்கும் பல பெயர்கள் உண்டு எனவும் அவற்றையும் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் மட்டுந்தான் என நீங்கள் சொல்வதன் பொருள் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சில காலங்களுக்கு முன், ஒரு கருத்தாளர் கருத்துக்கு எதிர்க்கருத்து வைத்த என்னை, புலிகளின் காசை அடித்தது நான் என்றுகூறி எனது கருத்தை மடை மாற்றியிருந்தார் அவர். மடைமாற்றி, கஞ்சா கோஷ்ட்டி, பெட்டிக்கடை, அனுரா காவடி இப்படி பலபெயர். தமது கருத்துக்கு எதிர்க்கருத்து வைப்போரை தடுக்கும் செயல், தம்மை புனிதராக்குவ

மேலே போல்டில் இருப்பதை மீள வாசிக்கவும்.

முழுக்க முழுக்க ஒருமையில் எழுதி உள்ள்ளீர்கள். அப்படியாயின் ஒருவரைத்தான் குறிக்கும்.

பல பெயர் என்பது கூட - பல பட்ட பெயர்களை பட்டியல் இட்டு, உங்களுக்கு இப்படி பல பெயர்களை அவர் கொடுத்தார் என்ற அர்த்ததில்தான் உள்ளது.

நீங்கள் B என நினைத்துகொண்டு A என எழுதினால், வாசிப்பவர் A என்றே புரிந்து கொள்ள முடியும்.

ஆகவேதான் சொன்னேன் குழப்பி அடிக்காமல் தெளிவாக எழுத சொல்லி.

5 minutes ago, satan said:

இல்லை. இன்னும் பலர் விமர்ச்சித்திருக்கிறார்கள், உங்களைத்தொடர்ந்துதான். இதிலிருந்து நீங்கள் கருத்துக்களை சரியாக வாசிப்பதில்லை என புரிகிறது. இங்கு என்னை விமர்ச்சிக்கும் பல பெயர்கள் உண்டு எனவும் அவற்றையும் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் மட்டுந்தான் என நீங்கள் சொல்வதன் பொருள் என்ன?

பிகு

பலபெயர் என்பதும் பலர் (பலபேர்) என்பதும் ஒன்றல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

சில காலங்களுக்கு முன், ஒரு கருத்தாளர் கருத்துக்கு எதிர்க்கருத்து வைத்த என்னை, புலிகளின் காசை அடித்தது நான் என்றுகூறி எனது கருத்தை மடை மாற்றியிருந்தார் அவர்.

11 hours ago, satan said:

மடைமாற்றி, கஞ்சா கோஷ்ட்டி, பெட்டிக்கடை, அனுரா காவடி இப்படி பலபெயர்.

பலபெயர்கள் எனக்கு பலரால் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே குறிப்பிட்டுள்ளேன். அனுரா காவடி என்றுதான் என்னை சொல்வதாக கூறியுள்ளீர்கள், ஏன் சொல்லாத மற்ற பெயர்களுக்கு உரிமை கோருகிறீர்கள்? புலிகளின் காசை நான் அடித்ததாக சொல்லவில்லை என்கிறீர்கள் பிறகு ஏன் இந்த சந்தேகம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்க புளொட்😂

புளொட்டுக்கும், புலிக்கும் ஒரே ஆளே காசு சேர்த்ததும் ஒரு காலத்தில் இருந்தது கோசான். பகடிக்கு சொல்லவில்லை உண்மையில் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, நிழலி said:

Current அடித்து செத்தவரா?

அவனே தான்.

பிரபல கொள்ளைக்காரனாம், 2009. இற்கு பின்னர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பலபெயர்கள் எனக்கு பலரால் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே குறிப்பிட்டுள்ளேன். அனுரா காவடி என்றுதான் என்னை சொல்வதாக கூறியுள்ளீர்கள், ஏன் சொல்லாத மற்ற பெயர்களுக்கு உரிமை கோருகிறீர்கள்? புலிகளின் காசை நான் அடித்ததாக சொல்லவில்லை என்கிறீர்கள் பிறகு ஏன் இந்த சந்தேகம்?

மேலே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளேன். எழுதுவதுதான் அப்பிடி, இப்படி எண்டுபார்த்தால், வாசிப்பும் அப்படித்தானா?

பலபெயர் எண்டால் many names.

Many others எண்டால் அதை பலர் என எழுதுங்கள். அல்லது வேறு பலரும் என எழுதுங்கள்.

படிக்கிற நேரத்தில் தமிழை ஒழுங்கா படிக்காமல் இங்க வந்து கழுத்தையறுக்காமல் 😂.

1 hour ago, island said:

புளொட்டுக்கும், புலிக்கும் ஒரே ஆளே காசு சேர்த்ததும் ஒரு காலத்தில் இருந்தது கோசான். பகடிக்கு சொல்லவில்லை உண்மையில் நடந்தது.

அட கடவுளே. இப்படியும் நடந்ததா😂

33 minutes ago, நன்னிச் சோழன் said:

அவனே தான்.

பிரபல கொள்ளைக்காரனாம், 2009. இற்கு பின்னர்.

செத்த பிறகு அவரை மாவீரர் என்றெல்லாம் போட்டு அஞ்சலி செலுத்தி என்னை வெறுப்பேற்றினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
9 minutes ago, நிழலி said:

செத்த பிறகு அவரை மாவீரர் என்றெல்லாம் போட்டு அஞ்சலி செலுத்தி என்னை வெறுப்பேற்றினார்கள்.

அது பெரும் சிரிப்பு. 2023 ம் ஆண்டு கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வின் படமொன்றை Facebook இல் கண்டேன். அப்படத்தில் மாவீரர்களின் புகைப்படத்திற்கு நடுவில் இந்த இழவெடுத்தவனின் படமும் போட்டு இவனிற்கு நாட்டுப்பற்றாளர் விருதும் கொடுத்து வைத்திருந்தார்கள்... 🤦‍♂️

பாக்கவே மனமெரிந்தது.

பெரும் விடுதலைக்கு பகைப்புலத்தில் வாழ்ந்து உயிர்கொடுத்தவர்களுக்கு (பெரும்பாலும்) வழங்கப்பட்ட இந்த உன்னதமான விருது, ஊரறிந்த பரவலறியான ஒரு கொள்ளைக்காரனுக்கு 2019 இலேயே வழங்கப்பட்டதென்பதை அறிந்த போது மனவேதனையாக இருந்தது.

இப்போதெல்லாம் நாட்டுப்பற்றாளர் விருதும் மாமனிதர் விருதும் தத்தமக்கு வேண்டியவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கேவலம். எவ்வளவு உயர்வான விருதுகள் இவ்வளவு மலிந்து இறங்கிவிட்டன!!

குரங்கின் கையில் கிடைத்த பூமாலைதான்

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நன்னிச் சோழன் said:

இப்போதெல்லாம் நாட்டுப்பற்றாளர் விருதும் மாமனிதர் விருதும் தத்தமக்கு வேண்டியவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கேவலம். எவ்வளவு உயர்வான விருதுகள் இவ்வளவு மலிந்து இறங்கிவிட்டன!!

இதை மிக இலகுவாக கையாளலாம்.

நான் 2009 மே 10 ற்கு பின் இறந்த எவருக்கும் பிரிகேடியர், கேணல், நா.ப, மா.ம எந்த பட்டத்தையும் பாவிப்பதில்லை.

இயக்கம் கொடுத்த பட்டங்கள் மட்டுமே பாவிக்கபட வேண்டும்.

2009 மே 19 ற்கு பின் இந்த பட்டங்கள் கொடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அட கடவுளே. இப்படியும் நடந்ததா😂

ஒம் கோசான்.இயக்கங்களின் கிளைகள் அமைப்பு ரீதியாக வளர்சசியடையாத காலகட்டம். ஒரு புளொட் உறுப்பினர் தனது இயக்கத்திற்கு நிதி சேகரித்தார். அதே வேளை புலிக்கு சேர்ததவரும் அந்த நகரத்துக்கு வந்து கூட்டம் வைத்தார். புலிக்கு காசு சேர்தவருக்கு இவர் ஊரிலேயே நெருங்கிய நண்பர். புலி உறுப்பினர் தூரம் காரணமாக அடிக்கடி வர முடியாத நிலை. எனவே ஏற்கனவே மக்களிடம் பேசி உறுதியளிக்கப்பட்ட பணத்தை சேர்க்க நம்பிக்கையான ஆள் தேவை. தனக்கு நம்பிக்கையான இந்த புளொட்உறுப்பினரிடம் உதவியை பெற்றார். இவரும் இரண்டு இயக்கத்துக்கும் நிதி சேர்தது புலிக்கு சேர்ந்த பணத்தை தனது நண்பரான புலி உறுப்பினருக்கும் , புளொட்டுக்கு சேர்ந்த பணத்தை தனது அமைப்புக்கும் அனுப்பினார்.

கணக்கு பார்த்து சரியாக அனுப்பினாரா அல்லது கணக்கு விட்டாரா நாமறியோம். 😂 அந்த நேர வேகத்தில் இது பற்றிய அக்கறையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்+
30 minutes ago, goshan_che said:

இதை மிக இலகுவாக கையாளலாம்.

நான் 2009 மே 10 ற்கு பின் இறந்த எவருக்கும் பிரிகேடியர், கேணல், நா.ப, மா.ம எந்த பட்டத்தையும் பாவிப்பதில்லை.

இயக்கம் கொடுத்த பட்டங்கள் மட்டுமே பாவிக்கபட வேண்டும்.

2009 மே 19 ற்கு பின் இந்த பட்டங்கள் கொடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

இது கூட நல்ல ஆலோசனையாக தான் உண்டு. எனினும் புலிகள் தரநிலை வழங்குவதை நிறுத்திய திகதியோடு நாமும் நிறுத்துவது என்பது நனிநன்றாக இருக்கும். ஏனெனில் அதுவே அதிகாரப்பூர்வ நிறுத்தம் ஆகும். அத்திகதி தெரிந்தால் அதற்குப் பின்னர் புலம்பெயர் தமிழரால் வழங்கப்பட்ட எதனையும் பாவிக்கவேண்டியதில்லை. பகரத்திற்கு மாவீரர் என்றோ இல்லை நடைமுறையரசால் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் மேற்பகுதியில் பொதுவாக எழுதப்படும் "வீரவேங்கை" என்ற சொல்லையோ பாவிக்கலாம்.

வந்தவன் போனவனுக்கெல்லாம் மாமனிதரும் நாட்டுப்பற்றாளரும் கொடுப்பதற்கு இதுவொன்றும் சத்திரத்தில் போடும் சாப்பாடல்ல. எமது தேசத்தின் மதிப்புமிக்க விருதுகள். இவற்றில் விளையாட எவருக்கும் உரிமையில்லை, எமக்கென்றொரு அரசு அ (புலிகள் போன்று) மக்கள் ஆணை கிடைத்த அமைப்பு அமையும்வரை.

  • குறிப்பு: 14ம் திகதியோடு போராளிகள் அனைவரையும் தத்தமது சொந்த முடிவுகளை எடுக்குமாறு பணிப்புரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

இதை மிக இலகுவாக கையாளலாம்.

நான் 2009 மே 10 ற்கு பின் இறந்த எவருக்கும் பிரிகேடியர், கேணல், நா.ப, மா.ம எந்த பட்டத்தையும் பாவிப்பதில்லை.

இயக்கம் கொடுத்த பட்டங்கள் மட்டுமே பாவிக்கபட வேண்டும்.

2009 மே 19 ற்கு பின் இந்த பட்டங்கள் கொடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

அப்ப இனி எங்கட நாட்டுப்பற்றாளர், மாமனிதர் கனவெல்லாம் வேஸ்ட்டா சார்?

பிரான்ஸிலையும் சொத்துப்பிரிப்பு பிரச்சனையில் கார்னல் ஒருவரும் கொல்லப்பட்டவர். அவருக்குக் கொடுக்கப்பட்ட கார்ன்ல் பதவியும் வேஸ்டா சார்?

🙋

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.