Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசியல் நெருக்கடி தொடர்பில் ஒரு வாக்கெடுப்பு!

வாக்களிப்பில் கலந்து கொண்டு ருபாய் 5000 நாணயத்தாள் பிரதி ஒன்றை வெல்லுங்கள் (வெளியிடப்படும் போ 19 members have voted

  1. 1. இலங்கையில் நவம்பர் 19 அன்று அல்லது அதற்கு முன்னர்:

    • அரசின் வரவுசெலவுத் திட்டம் வெல்லும்!
      16
    • அரசின் வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும்
      1
    • பாராளுமன்றம் கலைக்கப்படும்
      2
    • தேசிய அரசாங்கம் அமைக்கப்படும்
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

இலங்கை அரசின் 2008 ஆம் ஆண்டிற்கான நிதி வரவுசெலவுத் திட்டம் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் தற்போது எழுந்துள்ள பரபரப்பான சூழலில், மேற்குறிப்பிட்ட கேள்விகள் பலரிடமும் தோன்றியுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டு உங்கள் இலங்கை அரசியல் தொடர்பிலான அறிவை பரீட்சித்துப்பாருங்கள்.

இதில் வெற்றிபெறும் நபருக்கு இலங்கையில் விரைவில் வெளியிடப்படவுள்ள 5000 ருபாய் நாணயத்தாள் ஒன்றின் பிரதி மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். (வெளியிடப்பட்ட பின்பு)

இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள சிறு உதவிக் குறிப்புகள்:

பொதுசன ஜக்கிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க் கட்சிக்கு வரிசைக்குக் கட்சி தாவல்

ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச, எதிர்க்கட்சி வரிசைக்கு கட்சிதாவியுள்ளார்.

இன்று நாடாளுமன்ற அமர்வுகளுக்கு சமூகமளித்த விஜயதாச ராஜபக்ச, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டதோடு, அரசாங்கத்தின் 2008ஆம் ஆண்டிற்கான பாதீட்டிற்கு ஆதரவு வழங்குவதற்கு, மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளார்.

இதற்கமைய, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அமைச்சரவை முப்பது உறுப்பினர்களாக குறைக்கப்படுதல், திறைசேரியின் செயலர்

P.B.ஜெயசுந்தர, உள்நாட்டு வரியிறுப்புத் திணைக்கள தலைமையதிகாரி A.விஜயபால ஆகியோர் பதவி விலகினால் மட்டுமே, அரசாங்கத்தின் 2008ஆம் ஆண்டிற்கான பாதீட்டிற்கு தான் ஆதரவு வழங்கப் போவதாக, விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்து அனைத்துக் கட்சிக் குழுவையும் கலைக்குக! பட்ஜெட்டுக்கு வாக்களிக்க ஜே.வி.பி. நிபந்தனையும் காலக்கெடுவும்

வரவு செலவுத் திட்டத்துக்கு (பட்ஜெட்டுக்கு) அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்வது உட்பட நான்கு நிபந்தனைகளை ஜே.வி.பி. விதித்துள்ளது.நான்கு நிபந்தனைகள் தொடர்பான சாதகமான முடிவை ஆறு நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அக்கட்சி அரசுக்கு நேற்றுக் காலக்கெடு விதித்துள்ளது.

ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க நேற்று அரசுக்கு மேற்கண்ட நிபந்தனைகளையும் காலக்கெடுவையும் தெரிவித்தார்.வரவு செலவுத் திட்டத்திற்கு ஜே.வி.பி. ஆதரவாக வாக்களிக்க வேண்டுமானால் கீழ்க்காணும் நான்கு நிபந்தனைகளை நிறை வேற்றுவதாக ஆறு நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அவர் விதித்துள்ள நிபந்தனைகள் வருமாறு:

* போர் நிறுத்த உடன்படிக்கையை ரத்துச் செய்யவேண்டும்.

* தேசிய பாதுகாப்பை உறுதிசெய்ய வாயளவில் பேசாது அறிக்கைகள் விடாது செயலில் காட்டவேண்டும்.

* அரசியல் தீர்வை வகுப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சித் தெரிவுக் குழுவை உடனடியாகக் கலைக்க வேண்டும்.

* மனித உரிமை மீறல்களை விசாரிப்பது என்ற போர்வையில் இலங்கையின் உள் விவகாரங்களில் ஐ.நா. தலையிடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews

இது ஆரம்பம் மாத்திரமே. ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழப்பமடைய வேண்டாம் - என்கிறார் லக்ஸ்மன் செனவிரத்ன (ஐ.தே.க. – பா.உ)

விஜேதாஸ ராஜபக்ஸவிற்கு முதுகெலும்பு இருக்கின்றது என்பதாலேயே அவர் இன்று இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்டார். அவ்வாறு முதுகெலும்பு உள்ளவர்கள் இருபார்களாயின் நீங்கள் தீர்மானம் எடுங்கள். என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (நவ.14) வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு செல்வது வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ள. எனினும், ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு வருவது வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அல்ல. கொள்கைகளுக்கு மதிப்பளிப்பவர்களே இவ்வாறு செய்கின்றார்கள் எனக் குறிப்பிட்டார்.

இது ஆரம்பம் மாத்திரமே. எனவே குழப்பமடைய வேண்டாம் என ஆளும் கட்சியிடம் கேட்டுக்கொள்கின்றேன் என லக்ஸ்மன் செனவிரத்ன தெரிவித்தார்.

http://lankadissent.com/index.php?option=c...57&Itemid=1

பட்ஜட்டிற்கு எதிராக வாக்களித்தால், அரசாங்கம் கலைக்கப்படும் -மகிந்த

மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்தால், அரசாங்கம் உடனடியாக கலைக்கப்பட்டு ஜனாதிபதி தீர்மானித்துள்ளது, அமைச்சர் டளஸ் அழகப்பெரும ஜே.வி.பி.க்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி நான்கு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி அதிருப்தியடைந்துள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற சந்தர்ப்பத்தில், தமக்கு பலம்வாய்ந்த அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொள்ளும் பொருட்டு உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் சென்று பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தமக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. எனினும், தமது வெற்றிக்கு பாரியளவில் பங்களிப்புச் செய்த ஜே.வி.பி.க்கு இதன் மூலம் அநீதி இழைக்கப்படும் என்று தாம் உணர்ந்ததன் காரணமாக, அன்று அவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுக்கவில்லை என தமது நெருங்கிய நபர் ஒருவரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் இந்த நிலையில் கூட தானாகவே நிறைவேறியுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன், ஏனைய விடயங்கள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அரசியல் ரீதியாக பிரசித்திபெறும் நோக்கில் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது கவலைக்குரிய விடயம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கலைக்கப்படும் என ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, ஜே.வி.பி.யை அச்சுறுத்துவதற்காக விடுத்த ஒரு அறிக்கையாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

http://lankadissent.com/index.php?option=c...61&Itemid=1

தேசிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முன்னாள் இராணுவத் தளபதிகள் நாளை ஜனாதிபதியை சந்திக்கின்றனர்.

தேசிய அரசாங்கத்தின் தேவை குறித்து எடுத்துரைப்பதற்காக முப்படைகளின் முன்னாள் தளபதிகள் நாளை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, எதிர்க்கட்சி அனைத்தினதும் ஒத்துழைப்புடன் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு ஜனாதிபதி தலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு இதன்போது யோசனை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சந்திப்பு நாளை (நவ.15) மாலை 6.30க்கு அலரி மாளிக்கையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் எம்.டி. பெர்னாண்டோ இந்த விசேட சந்திப்பின் ஏற்பாட்டாளராக செயற்படுகின்றார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் முப்படைகளின் முன்னாள் தளபதிகள் ஜனாதிபதியுடனான இரவு விருந்துபசாரத்திலும் பங்கேற்கவுள்ளனர்.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்டு முப்படைகளின் முன்னாள் தளபதிகள் இந்த தேசிய அரசாங்கம் குறித்த யோசனைகளை முன்வைத்துள்ளனர். அத்துடன் இதுதெடார்பாக சர்வமதத் தலைவர்களின் ஆசீர்வாதமும் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர் ஒருவர் எமது இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு மற்றும் யோசனை நிலைகுலைந்துள்ள இந்த அரசாங்கத்தைக் காத்துக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் சகோதரர்களான பெசில் மற்றும் கோதாபே ஆகியோரின் மற்றுமொரு சதித் திட்டம் என இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எதிர்க்கட்சியின் முக்கிய புள்ளி ஒருவர் எமது இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.

http://lankadissent.com/index.php?option=c...60&Itemid=1

தற்போதய ஆசனங்களின் நிலவரம்

Party_____Govt._____Opposition______Independent

SLFP_______ 56 __________02______________ -

UNP________ 23_______44 (with speaker)____ -

JVP ________ - ___________37______________ 01

TNA________ - ___________22______________ -

JHU________ 08___________ - ______________ 01

SLMC______ 06___________ - ______________ -

ACMC*_____ 04___________ - ______________ -

CWC_______ 07___________ - ______01 (V. Putrasigamani)

UPF________ 02 __________ - ______________ -

LSSP_______ 02___________ - ______________ -

CP_________ 02___________ - ______________ -

MEP________02___________ - ______________ -

NUA________02___________ - ______________ -

NMC**______01___________ - ______________ -

EPDP_______01___________ - ______________ -

WPF________00__________ 01______________ -

Total_____116_________106____________03

* Amir Ali, Najeeb Majeed, Rishard Bathiudeen, Hussein Bhaila

** A.L.M. Athaulla

http://lankadissent.com/index.php?option=c...54&Itemid=1

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுசன ஜக்கிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க் கட்சிக்கு வரிசைக்குக் கட்சி தாவல்

ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச, எதிர்க்கட்சி வரிசைக்கு கட்சிதாவியுள்ளார்.

தயவுசெய்து எனது அறிவீனத்தை மன்னிக்கவும்.

மகிந்தவுக்கு எத்தனை சகோதரர்கள்?

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்

நல்லது நீங்கள் கேட்டதால்தான் எனக்கும் அறிந்து கொள்ள முடிந்தது.

இவர் ஒரு வழக்கறிஞர், சந்திரிக்காவால் அரசியலுக்குள் வந்தவர். இவர் மகிந்தவுக்கு உறவினர் இல்லை!

அத்துடன் ஆர்வமிகுதியில் "வரவுசெலவுத் திட்டம் வெல்லும்" என்ற தெரிவை இணைக்க மறந்துவிட்டேன் தற்போது இணைக்கப்பட்டுள்ளது! :(

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

நானறிந்தளவில் பசில் ராஜபக்ச ,கோத்தபாய ராஜபக்ச ஆகியவர்கள் தான் சகோதரர்கள்.பசில் என்பவர் அரசில் எம்.பி யாக அண்மையில் பதவி ஏற்றுள்ளார்( முஸ்லிம் எம்.பி ஒருவரின் மர்ம மரணத்துக்கு பின் அவருடைய இடத்துக்கு பசில் நிரப்பப்பட்டுள்ளார்). கோத்தபாய முப்படைக்கும் பொறுப்பானவர் என்பது தெரிந்ததே.இதை விட நூற்றுக்கு மேற்பட்ட மகிந்த குடும்பத்தவர்கள் அரசின் பெரிய பதவிகளின் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.வி

  • தொடங்கியவர்

19ம் திகதிக்கு முன்னர்

ஆளும் கட்சியின் 9 பேர் எதிர்க்கட்சியில், எதிர்கட்சியில் 10 பேர் ஆளும் கட்சியில்

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான நவம்பர் 19ம் திகதி வாக்கெடுப்பிற்கு முன்னர் ஆளும் கட்சியின் 9 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தேசிய சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 9 உறுப்பினர்களில் மூவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்கள் எனக் கூறப்படுகின்றது.

தற்போது 116 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சியை, 107 உறுப்பினர்களாக குறைத்து ஆளும் கட்சியை சிறுபான்மையாக்குவதே இதன் பிரதான நோக்கம் என தேசிய சபையின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் எமது இணைய தளத்திற்கு தெரிவித்தார்.

இதனிடையே எதிர்க்கட்சியில் உள்ள 10 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு முன்னர் ஆளும் கட்சிக்கு வரவுள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத ஆளும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் எமது இணையளத் தளத்திற்கு தகவல் அளித்தார்.

வரவு செலவுத் திட்டத்தை வெற்றிகொள்ளச் செய்வதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள ஆளும் கட்சி தற்போது அந்த பெரும்பான்மையை இழந்துவிடாது என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. எவ்வாறாயினும், எதிர்வரும் சில நாட்களில் பாராளுமன்றத்தில் மேலும் பல உறுப்பினர்கள் ஆசன மாற்றங்களை மேற்கொள்வார்கள் என நம்பத்தகுந்த அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வரவு செலவுத் திட்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக தற்போது மக்கள் விடுதலை முன்னணி உள்ளது. இதனை அடிப்படையாக வைத்தே மஹரகமயில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க 4 நிபந்தனைகளை முன்வைத்தார். இதற்காக 6 நாள் கால அவகாசம் விதிக்கப்பட்டது.

இந்த நான்கு நிபந்தனைகளையும் அரசாங்கம் நிறைவேற்றும் பட்சத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள் என சோமவங்ச அமரசிங்க கூறினார்.

எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இவர்கள் அனைவரும் வரவு செலவுத் திட்டத்தை கருத்தில் கொள்ளாது அரசியல் நிலைமையை கருத்திற்கொண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பதாக கூறிவந்தனர்.

இதேவேளை, இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்து அரசாங்கத்தைத் தோற்கடிக்க ஆளும் கட்சியிலேயே சிலர் தயாராக இருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (நவ.13) தெரிவித்திருந்தார். இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவி செய்யும் வெளிநாடொன்றில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு, புலிகளுக்கு உதவி செய்ய தயாராகி வருவது குறித்தும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டார்.

http://lankadissent.com/index.php?option=c...54&Itemid=1

Edited by சாணக்கியன்

மகிந்தவின் வரவுசெலவுத் திட்டம் வெற்றி பெறும்.

தமிழீழம் பிரியும் போது சிறீலங்காவில் தேசிய அரசாங்கமோ அல்லது இராணுவ ஆட்சியோ நடக்கும்.

அந்த இரண்டில் எது எமக்கு நல்லது அதை எப்படி.... :lol::lol::(

வரவுசெலவுத்திட்டம் பெட்டிகள் கைமாற்றப்படுதல், தொலைபேசி

அச்சுறுத்தல், தட்டிக்கொடுத்தல் அல்லது தட்டி நிமிர்த்தல் போன்ற பல்வேறு

விஞ்ஞான வழிமுறைகள் மூலம் வெற்றிகரமாய் நிறைவேறும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபி சிறிய அழுத்தத்தைக் கொடுத்து பின்னர் ஆதரவு வழங்கும். அரசு ஜேவிபி கூவியபடி.. யுத்தத்தை ஆரம்பிச்சது மட்டுமன்றி பயங்கரவாததுக்கு எதிரான போர் செய்யும் அமெரிக்காவையும் கூட்டுக்கு அழைச்சு வைச்சிருக்கிறது.. ஜேவிபிக்கு இது உள்ளூர மகிழ்ச்சியான விடயம்.

தற்போது தங்கள் அரசியல் பலத்தைக் காட்ட அரசுக்கு நெருக்கடி வழங்குகிறார்கள். இவர்களை இந்தளவுக்கு செல்லப்பிள்ளைகளாக ஐ தே க நடத்த முன்வராது என்பதால்.. நிச்சயம் அரசு இந்த பஜெட் வாக்கெடுப்பில் வெல்லும்..!

ஒருவேளை அரசு தோற்தாலும் கூட தமிழ் மக்களின் பிரச்சனைக்கு "மேற்குலக சர்வதேசம்" பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் மூலம் தான் தீர்வு காணும் என்பதையே அண்மைய அமெரிக்காவின் நகர்வுகள் சொல்லி வைத்திருக்கின்றன. எனவே அமெரிக்கா ஆட்டுற படி ஆடிற பொம்மைகள்தான் இலங்கைத் தீவில் ஆட்சி அமைக்கப் போகின்றன..! சிங்களவன் பயங்கரவாதி வாதி என்று அல்குடைவின் லிஸ்டில சேர்த்திட்டான் தமிழர்களையும்..! அமெரிக்காவும் தன்ர பிராந்திய நலனுக்காக தெற்காசியாவில் இந்து சமுத்திரத்தில் கொடுக்குக் கட்டிக் கொண்டு நர்த்தனம் ஆடத் தொடங்கிட்டுது..! விளைவுகள்... பொறுத்திருந்து பார்ப்போம்..! நிச்சயம் அமெரிக்காவுக்கு புதிய அத்தியாயம் ஒன்றை எழுதும் அனுபவம் கிடைக்கலாம்..! :(:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிகரமாக நிறைவேற்றப்படும். காரணங்கள் பல எனினும் சில காரணங்கள் மூலம் மகிந்த சகோதரர்கள் இதனை சாதிப்பார்கள்

1.கையூட்டு மூலம் எந்த ம**யும் வாங்க கூடிய வல்லமை உண்டு என்பது மட்டுமல்லாமல் இதனையே எதிர்பார்த்து பல கட்சிகளின் "சாவுகிராக்கிகள்" காத்திருக்கிறார்கள்.உ+ம்: ஜே .வி.பி. ஜாதிக கெல உறுமய(என்ன பேரய்யா)

2.ரனிலின்"இழிச்ச வாய்" தலைமை

3.ஜே.வி.வி என்ன நாடகம் ஆடினாலும் ஐ.தே.க வின் பக்கம் தலை வைத்து தூங்க முடியாது.அவ்வளவுக்கு ஜே.வி.பியும் , ஐ.தே.க வும் பரம எதிரிகள்.இது மகிந்தவுக்கு தெரிந்தது மட்டுமல்ல எல்லோருக்குமே தெரிந்த உண்மையும் கூட.

4.தொண்டமானின் கூட்டுக்கு ஒரு பொ*** ,ஒரு தொகை போத்தலும் (பணம் நிச்சயமாக) கொடுத்தால் மகுடி ஊத தேவையில்லை.

5.பிக்கு (தறுதலை கூட்டத்துக்கு)கூட்டத்துக்கு மகிந்தவின் "என்னங்கடா டோய்" என்ற வெருட்டே போதும்.மற்ற விடயம் ஐ.தே.கவில் இருந்து பிரிந்த இவர்கள் ஐ.தே.காவுடன் இணைவார்கள் என்பது முயல் கொம்பு.

6.முஸ்லிம் கட்சிகள் ஒரு ஐந்தோ, பத்தோ கொடுத்து மடக்கி விடலாம்.இவர்களுக்குள்ளேயே பல பிரிவு.மகிந்தவுக்கு இவர்களுடன் விளையாடுவதில் மகிழ்ச்சியே தவிர எந்த தலையிடியும் இல்லை.

7.தமிழர் விடுதலை கூட்டணி எப்போதுமே தன்னோடு ஒத்துளைக்காது என்பது "மகிந்த சிந்தனைகளில்" ஒன்று.

நானறிந்தளவில் பசில் ராஜபக்ச ,கோத்தபாய ராஜபக்ச ஆகியவர்கள் தான் சகோதரர்கள்.பசில் என்பவர் அரசில் எம்.பி யாக அண்மையில் பதவி ஏற்றுள்ளார்( முஸ்லிம் எம்.பி ஒருவரின் மர்ம மரணத்துக்கு பின் அவருடைய இடத்துக்கு பசில் நிரப்பப்பட்டுள்ளார்). கோத்தபாய முப்படைக்கும் பொறுப்பானவர் என்பது தெரிந்ததே.இதை விட நூற்றுக்கு மேற்பட்ட மகிந்த குடும்பத்தவர்கள் அரசின் பெரிய பதவிகளின் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.வி?ய தாச ராஜபக்ச உதிரி என நான் நினக்கிறேன்.

மூத்தசகோதரரே துறைமுக விமானபோக்க்குவரத்து அமைச்சர் அவரின் பெயர் தெரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்திரசேகரனுக்கு என்ன கொடுப்பார்கள் நுனாவிலான்?

நிச்சயம் பட்ஜெட் வெல்லும் ஜேவிபி சும்மா புருடால் விடுவார்கள் பின்னர் ஆதரவாக வாக்களிப்பார்கள்.(இவர்களின் ஊழல்கள் எல்லாம் மகிந்தவுக்கு தெரியும்).

ஐதேககாரனையும் நம்பமுடியாது கடைசி நேரத்தில் காலைவாரிவிடுவார்கள்.

அதுசரி ஸ்ரீ லங்காவில் பட்ஜெட் வென்றால் என்ன தோற்றால் என்ன தமிழனுக்கான கொடுமைகள் தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் வரவுசெலவுத் திட்டம் வெல்லும்!

ஜே.வி.பியின் நிபந்தனைகளுடன் வெல்லும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப இராணுவ ஆட்சிதான் அங்கை பரீட்சார்த்தமாய் நடக்குது கண்டியளோ.உவர் மகிந்தரின்ரை காலம் முடிய நிறுதிட்டமாய் இராணுவ ஆட்சி வந்தாலும் வரலாம்.இந்த விசயத்திலை மகிந்தர் முஷாரப்பை விட கெட்டிக்காரர்.அதைவிட ஆசியா பக்கத்திலை இப்ப இராணுவ ஆட்சி சர்வசாதாரணம்.அதோடை அமெரிக்கனுக்கும் இது வந்து வலுலேசாயிருக்கும் . என்னயிருந்தாலும் எங்கடை பாரதநாட்டுக்குத்தான் கன பக்கத்தாலை பிரச்சனை வரப்போகுது. :lol:

ஜேவிபி இருக்கிறதை விட்டுப்போட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாது இதுக்கு முதல் ஜேவிபிக்கு கிடைத்த ஆசனங்கள் எத்தனை இப்போது எவ்வளவு கிடைத்திருக்கு எப்படி கிடைத்து, அட்சி கலைந்து தம்னியாக நின்றால் எவ்வளவு கிடைக்கும். கூட்டி கழிச்சு பாத்தால் வரவுசெலவு வாக்கெடுப்பில் ஜேவிபி மகிந்தாவுக்கு ஜே போட்டு நிற்க்கும்.

ஜேவிபி ஒருபோதும் அரசுக்கு எதிராக வாக்களிக்காது. அரசு கவிழ்ந்தால் அவர்கள் நிலை என்னவென்பது நன்றாகவே அவர்களுக்த் தெரியும். அப்படியும் அவர்கள் எதிர்த்து ஐதேக வுடன் வாக்களித்து இவர்களுடன் சேர்ந்தால் இருக்கும் இடமும் இல்லாமல் போய் விடும் என்பதும் நன்றாகவே புரியும். ஆயினும் குத்து வெட்டுக்கள் கரணமடிப்புக்களை வருங்காலங்களில் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

ஜானா

ஜே வீ பீ அரசாங்கத்தை தோற்றுப்போக விடாது

வேளிப்படையாக ஜே வி பி அரசை குறை கூறினாலும் வாக்கெடுப்பில் ஆதரித்தே வாக்களிக்கும் அம்பாந்தோட்டையில் நடைபெறும் பிரச்சினைகளினால் சிங்கள மக்களின் மனங்களில் சிலமாற்றஙகள் தமிழர் பிரதேசங்களில் நடப்பது தங்கள் பகுதிக்குள் வருவதற்கு காரணம் அரசாங்கமும் ஜேவீபியும்தான் என நினைக்கின்றார்கள் இது ஜேவிபிக்கு நன்கு புரியும் அரசு கவிண்டால் அடுத்துவரும் தேர்தலில் தாங்கள் வெல்வது கஸ்ட்டம் என்பதை உணர்ந்து அரசை கவிழ விடமாட்;டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரசேகரனுக்கு என்ன கொடுப்பார்கள் நுனாவிலான்?

நிச்சயம் பட்ஜெட் வெல்லும் ஜேவிபி சும்மா புருடால் விடுவார்கள் பின்னர் ஆதரவாக வாக்களிப்பார்கள்.(இவர்களின் ஊழல்கள் எல்லாம் மகிந்தவுக்கு தெரியும்).

ஐதேககாரனையும் நம்பமுடியாது கடைசி நேரத்தில் காலைவாரிவிடுவார்கள்.

அதுசரி ஸ்ரீ லங்காவில் பட்ஜெட் வென்றால் என்ன தோற்றால் என்ன தமிழனுக்கான கொடுமைகள் தொடரும்

சந்திரசேகரன் என்ன கொக்காவா? எல்லாம் மகிந்தவிடம் பிச்சையெடுக்கும் அட்சய பாத்திரங்கள்.

அரச வரவு செலவு திட்டம் மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்!! :(

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.