Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரசோதரன் said:

நான் விஜய்யின் சினிமா ரசிகர் இல்லை, வசீ. அஜித்தின் ரசிகரும் இல்லை, ரஜனியின் ரசிகரும் இல்லை. கமலின் ரசிகரும் இல்லை. ஆனால் கமலின் படங்களை சிரமப்பட்டாவது பார்ப்பேன்

19 hours ago, ரசோதரன் said:

இங்கே, ஐம்பது ஆண்டுகளாக நிலைத்திருக்கும் கட்சிகள் ஏராளமாக உள்ளன, மேலும் பதினைந்து ஆண்டுகளாக மக்களுடன் களத்தில் நின்று, புதிய மாற்றங்களுடன் தமிழ்நாட்டை மறுவடிவமைக்க மக்களிடமிருந்து வாக்குகளைச் சேகரித்து வரும் கட்சிகளும் உள்ளன. அந்தக் கட்சிகளை விட நீங்கள் உயர்ந்தவர் என்று எந்த வகையில் உரிமை கோர முடியும்? எந்தப் போராட்டத்தில் நீங்கள் மக்களுக்காக மக்களுடன் நின்று, இது இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையேயான சண்டை மட்டுமே என்று கூறியிருக்கிறீர்கள்? ‘

ரசோதரன், உங்களைப் போலத்தான் நானும் எந்த நடிகரின் ரசிகனும் இல்லை. ஒருகாலத்தில் வாத்தியாரை (எம்.ஜி.ஆர்.) ரசித்திருக்கிறேன். இப்போது நல்ல படங்கள் வந்தால் மட்டும் பார்ப்பேன். அதற்கப்பால் நடிகர்கள் மீது எந்தப் பற்றும் இல்லை.

நீங்கள் சேரனைப் பற்றிக் குறிப்பிட்டதால், இதைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சினிமா என்ற தளமே இல்லையென்றால், அவர் கருத்துக்களுக்கு ஒரு வெளிச்சமும் கிடையாது. சேரன், விஜய் அளவுக்கு பிரபலமாக இருந்திருந்தால், அவர் பேசும் மொழியும், நிலையும் வேறாக இருந்திருக்கும் என்பதில்  எனக்கு துளியும் சந்தேகமே இல்லை.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் குறும்படங்களை ஆர்வமாக உருவாக்கிக் கொண்டிருந்த காலத்தில், பாரிஸில் நடைபெற்ற குறும்பட விழாவுக்கு சேரனுக்கு அழைப்பு சென்றது. தனக்கும் தனது மனேஜருக்கும் பிஸினஸ் கிளாஸ் விமான டிக்கெட், ஸ்டார் ஹொட்டல் தங்குமிடம் வேண்டும் என்றார். அது சாத்தியமில்லை என்று கூறியபோது, தனக்கு மட்டும் அந்த வசதிகள் வேண்டும். மனேஜருக்குப் பரவாயில்லை என்று கொஞ்சம்  தளர்வு காட்டினார்.

ஒருகாலத்தில் தியேட்டரில் டிக்கெட் கிழித்தவர், புகழ் கிடைத்தவுடன் இவ்வளவு எதிர்பார்ப்புகளா?

அதே நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட ஓவியர் டிராட்ஸ்கி மருது வந்து நிகழ்ச்சியை சிறப்பித்ததோடு, அவருக்குக் கிடைத்த அன்பளிப்பையும் குறும்பட வளர்ச்சிக்காகத் திருப்பி வழங்கிவிட்டு சென்றார். இதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சேரனின் நிலைப்பாடு எவ்வளவு வெறுமையாக இருக்கிறது என்பது என்னளவிலான தெளிவு.

இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். கட்சி தொடங்கி தேர்தலில் நிற்பது அவரது உரிமை. அதை ஏளனமாகக் கேள்வி கேட்பதற்கு முன்னால், பாரம்பரியக் கட்சிகள் ஆண்டாண்டுக்காலமாகச் செய்த ஊழல், சட்ட மீறல்கள் பற்றி திறந்தவெளியில் பேச சேரன் தயாராக இல்லை. ‘புதிய கட்சி வந்து என்ன சாதிக்கும்?’ என்று கேட்பது எளிது. அதே நேரத்தில், ‘பழைய கட்சிகள் தொடர்ந்து இதேபோலச் செயல்பட்டால் பரவாயில்லைஎன்று பொருள்படும் வகையில் பேசுவது பொறுப்பற்ற அணுகுமுறை.

உண்மையில், நீங்கள் குறிப்பிடாவிட்டால் சேரன் என்ற பெயரே நினைவுக்கு வராத அளவுக்கு அவர் தாக்கம் குறைந்துவிட்டது என்பதே நிஜம்.

மேற்கு நாடுகளில் நாடுகளில் அரசியல்வாதிகளின் தகுதி, திறன், பின்னணி ஆகியவை ஆராயப்படும். ஆனால் தெற்காசிய அரசியலில் அது அவ்வளவாகப் பார்க்கப்படுவதில்லை. இந்தியாவில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். இன்னும் ஒன்று யேர்மனியில் கட்சிகள் தனித்துத்தான் போட்டியிடுகின்றன. தேர்தல் முடிந்தபின் ஆட்சியமைக்க போதிய பலம் இல்லையென்றால் மட்டும்தான் கூட்டு சேர்வார்கள்.

தமிழ்நாட்டுத் தேர்தலில் வெல்லுமட்டும் ஏதாவது சொல்வார்கள். சில புத்திசாலிகள் மௌனமாக இருப்பார்கள். வென்றபின் ஆளுயர மாலையோடு போய் நிற்பார்கள். “நீங்கள்தான் வெல்லுவீர்கள் என்று எனக்கு அப்பவே தெரியும் என்பார்கள்எதுவானாலும் இறுதியில் தீர்மானிப்பது மக்கள்.

  • Replies 188
  • Views 8.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இவர்கள் எவரையும் நம்பி தூய்மை, சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் விதம் என்று நாங்களும் சொல்லலாமா............. 'புலி' படத்துக்கு கறுப்பாக வாங்கிய 15 கோடி ரூபாய்களுக்கு வந்த வழக்கில், விஜய் தரப்பு என்

  • வாதவூரான்
    வாதவூரான்

    ஏழையா இருந்தால் தானே மக்களுக்கு சேவை செய்யலாம். பாவம்நடிகைகளுக்கு செலவளித்துநொந்து போனார் போலை

  • ரசோதரன்
    ரசோதரன்

    திமுகவினரே உள்ளவர்களில் மிகப் பெரும் கொள்ளையர்கள் என்பதே என் அபிப்பிராயம். இதை நான் மீண்டும் மீண்டும் எழுதுகின்றேன். திமுகவின் குடும்ப ஆட்சி இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்றும் நான் தொடர்ந்து சொல்லிக்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பாண்டே சிரிக்காமல் ஜோக் அடிப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் ஒரு தரம் நிருபித்துள்ளார்.

சீமான் முதலமைச்சர் ஆனால் என்ற ஜோக்குக்கு சிரிக்காமல் விட்டது கூட ஓக்கே…

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திக, திமுக, விசிக, தமிழ் தேசியம், இடையில் அதிமுக என அத்தனை மேடையிலும் வாயை வாடகைக்கு விட்ட…

அரசியல் சொப்பன சுந்தரி அண்ணணை ….

Ideologically driven என்றார் பாருங்கோ சிரிக்காமல்…அதுதான் ஹைலைட்.

Seeman is not ideologically driven, he is driven by the desire to drive Pajero and Innova 😂

இந்த பாண்டே ஒரு தீவிர பிஜேபி பிரசாரகர். H. ராஜா ஷர்மா என்று ஒரு பிஜேபிகாரரும் சீமானை ஆதரித்து பேசி இருக்கின்றார்.சீமானுடைய கொடுக்கபட்ட பணி பெட்டியை வாங்கி கொண்டு தமிழ்நாட்டை குழப்பி அடித்து பிஜேபி தேர்தலில் வெல்வதற்கு வழி அமைத்து கொடுப்பதே . ஆனால் பாண்டே சீமான் Ideologically driven செய்கின்றார் என்று சொல்லி கேலி கூத்தாகிவிட்டார்

எங்களை சுயமரியாதையுடன் வாழ கற்று தந்த தலைவன் தந்தை பெரியார். தள்ளாத வயதில் முதுமையின் காரணமாக முதுகு முறிந்த போது கூட எங்களை நிமிர வைத்தவனடா எங்கள் அய்யா என்று மேடையில் கத்தி பேசிவிட்டு இப்போது பெரியார் எனக்கு மண் என்பது தான் அவருடைய கொள்கை பாதை

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kavi arunasalam said:

நீங்கள் சேரனைப் பற்றிக் குறிப்பிட்டதால், இதைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சினிமா என்ற தளமே இல்லையென்றால், அவ

சேரன் எல்லாம் ஒரு ஆளே இல்லை…

மகள் சாதி மாறி திருமணம் செய்த விடயத்தில், இயக்குனர் பாலா என்கிற ரவுடியை கூட்டி கொண்டு போய் அராஜகம் பண்ணியவர்தான் இந்த சேரன்.

பாலா, சேரன், அமிர் எல்லாரும் சீமானை போல சினிமா குட்டையில் ஒன்றாக ஊறிய மட்டைகள்தான்.

இவர்கள் அனைவரினதும் பிதாமகன் சட்டை மாற்றுவது போல் பெண்களை மாற்றும், தான் 60 வயது தாண்டிய பின் 18 வயதும் ஆகாத மோனிஷாவோடு சேர்ந்து வாழ்ந்த பாலுமகேந்திரா.

பாலுமகேந்திராவின் செத்தவீட்டில் கூட அந்த பெண்ணை இழிவுபடுத்திய கூட்டம்.

இவர்களுக்கு அறம், நேர்மை, தூய்மை, பொதுவாழ்வு பற்றி கதைக்க எந்த அருகதையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எங்களை சுயமரியாதையுடன் வாழ கற்று தந்த தலைவன் தந்தை பெரியார். தள்ளாத வயதில் முதுமையின் காரணமாக முதுகு முறிந்த போது கூட எங்களை நிமிர வைத்தவனடா எங்கள் அய்யா என்று மேடையில் கத்தி பேசிவிட்டு இப்போது பெரியார் எனக்கு மண் என்பது தான் அவருடைய கொள்கை பாதை

இதென்ன பிரமாதாம் பொட்டம்மான் என்ன முடியா என கேட்ட தமிழ் தேசியவாதிதான் இந்த சீமான்.

அண்மையில் ஒரு காணொளியில் தூசண துரைமுருகன் பச்சை தூசணத்தில் மேடையில் பேசி விட்டு…

நான் பிரபாகரன் பிள்ளைடா எங்கிட்ட வச்சுகாதே என்கிறார்…

தலைவரை இதைவிட வேறு எந்த அமைப்பும் அவமானபடுத்தியதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

உங்கள் கருத்துக்கள் எல்லாம் உங்கள் நெஞ்சிலுள்ள வெறும் வஞ்சமும் யாழில் கருத்தெழுதுபவர்களை துரத்தி துரத்தி பழி தீர்ப்பதும் மட்டும் தான் சகோ. கருத்தாடல் என்பது முதலில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு கருத்து எழுதுவதிலிருந்து தான் தொடங்குகிறது. நீங்கள் கேட்கப்போவதில்லை. எனவே டொட்.

வெற்றியும் பலமும் யார்பக்கம் நிற்கின்றதோ அந்தப்பக்கம் நிற்பதே மதில் மேல் பூனைகளின் வழக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டு தேர்தலில் இதுவும் ஒரு முக்கியமான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு கருத்து கணிப்பு, தவெக 23.9% வாக்குகள் பெறும் கட்சி என எதிர்வு கூறியுள்ளார்கள், தவேக அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் விஜய் துணை முதலமைச்சராக வர வாய்ப்புள்ளது, நாதக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைப்பதில்லை எனும் முடிவு இந்த நிகழ்வால் மாற வாய்ப்பில்லை என கருதுகிறேன் அதனால் அதிமுக + த வெ க கூட்டணி ஆட்சியினை பிடிக்க வாய்ப்புள்ளது போல காணப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வரும் தேர்தலில் நாதக 4.5 வீதத்துக்கு மேல் கிடைக்காது என்றும் நம்பும் சீமான் எதிர்ப்பாளர்கள் சீமானை கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம் எதற்காக சீமானை விமர்சிக்கிறார்கள் என்று விளங்கவில்லை.0.5 வீத வாக்குகளை வைத்திருப்பவர்களே பதவியையும் பெட்டியையும் தொகுதிகளையும் பெறும்போது வராத கோபம் சீமான் மேல் வருகிறது?சித்தாந்த வேறுபாடுதான் அவர்களை கொமுப்படைய வைக்கிறது.4வீதத்திற்கும் குறைவாகப் பெறும் சீமானால் ஒரு மாற்றமும் வராது அதைதியாக தூங்குங்கள்.

தமிழக தேர்தலில் கருத்துக்கணிப்பு நடத்திய TV க்களில் CCTV தவிர மற்றயவை எல்லாம் திமுக அமோக வெற்றிபெறும் என்றும் தவெக 20 வீத்ததுக்கு மேல் பெறும் என்றும் எதிர்வு கூறியுள்ளன.1 மாத்தில் எல்லாம் தெரிய வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, vasee said:

இன்னுமொரு கருத்து கணிப்பு, தவெக 23.9% வாக்குகள் பெறும் கட்சி என எதிர்வு கூறியுள்ளார்கள், தவேக அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் விஜய் துணை முதலமைச்சராக வர வாய்ப்புள்ளது, நாதக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைப்பதில்லை எனும் முடிவு இந்த நிகழ்வால் மாற வாய்ப்பில்லை என கருதுகிறேன் அதனால் அதிமுக + த வெ க கூட்டணி ஆட்சியினை பிடிக்க வாய்ப்புள்ளது போல காணப்படுகிறது.

சிலதை கவனிக்க தவறுகிறீர்கள்.

  1. இந்த லோக்போல் அமைப்பு போன வருட பீகார் தேர்தலில் காங்கிரஸ் லாலு கூட்டமைப்பு அதீத வெற்றி என்றது நடந்ததோ அதற்கு சரி எதிராக. இதேபோல்தான் சதீஸ்கர் இன்னும் 2 வட மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டு வெல்லும் என பிழையாக கணித்தத்து இந்த அமைப்பு.

  2. இந்தியாவின் first past the post அமைப்பில் சதவீத கணக்கு தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்து தொகுதி பங்கீடு செய்தால் மட்டுமே பலன் கொடுக்கும். தேர்தல் முடிந்த பின் சீட் கணக்குத்தான் செல்லும். இந்த கணிப்பின் படி அதிமுக 42 விஜை 10 எண்டாலும் கூட பெரும்பான்மையை நெருங்க கூட முடியாது. திமுக தனி கட்சியாக மெஜாரிட்டி ஆட்சி அமைக்கும். இந்த கணிப்பு சரியானால்.

1 hour ago, புலவர் said:

எதற்காக சீமானை விமர்சிக்கிறார்கள் என்று விளங்கவில்லை

அண்ணனை அடிப்பதில் அப்படி ஒரு அலாதி இன்பம் என வைத்து கொள்ளுங்கள் 😂.

கேட்ட ஆதாரம் எல்லாம் தந்தவுடன், பதில் இல்லாமல் புலம்பலுக்கு தாவி விட்டீர்கள் போல் உள்ளது.

பிகு

சீமானுக்கு மட்டும் ஏன் ஸ்பெசல் டிரீஎட்மெண்ட் என்ற கேள்வி பலதடவை யாழில் கேட்க பட்டு பலதடவை பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

புலவருக்கு கூட முன்னர் இதையிட்டு விரிவாக பதில் எழுதியுள்ளேன்.

2nd shy சோதனை எழுதும் போது, past papers வினா விடை கொத்தை படித்து விட்டு வரவும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

ரசோதரன், உங்களைப் போலத்தான் நானும் எந்த நடிகரின் ரசிகனும் இல்லை. ஒருகாலத்தில் வாத்தியாரை (எம்.ஜி.ஆர்.) ரசித்திருக்கிறேன். இப்போது நல்ல படங்கள் வந்தால் மட்டும் பார்ப்பேன். அதற்கப்பால் நடிகர்கள் மீது எந்தப் பற்றும் இல்லை.

கவிஞரே, நீங்கள் எந்த நடிகரினதும் ரசிகர் அல்ல என்பது எனக்கு நல்லதொரு விடயம். அதே போலவே நீங்கள் எந்த நாட்டின் தலைவர்களினதும் ரசிகர் இல்லை என்றே நினைக்கின்றேன். ஒருவரின் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடுவது அல்லது விவாதிப்பது எங்கள் தலையை நாங்களே சுவற்றில் மோதுவதற்கு சமம்.

தொடர்பில் இருக்கும் என்னுடைய நண்பர்களில் நான்கு பேர்கள் விஜய்யை ஆதரிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் நால்வருமே ஏலவே விஜய்யின் சினிமா ரசிகர்கள். கோர்வையாக ஒரு காரணம் சொல்ல முடியாதவர்கள். நானும் அவர்களுடன் விஜய்யின் அரசியல் பற்றி எதையும் விவாதிப்பதில்லை; மெதுவாக சிரித்து மழுப்பி விட்டு ஈரான், உக்ரேன் என்று வேறு எதையாவது பேசிக் கொண்டிருக்கின்றேன். ட்ரம்பின் ரசிகர்கள், புட்டினின் ரசிகர்கள், கொமெய்னிகளின் ரசிகர்கள் என்று அங்கேயும் ஆள் பார்த்து நழுவ வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.

உங்களின் அனுபவத்திற்கும், தெளிவுக்கும் நீங்கள் விஜய்யிடம் எதையோ காண்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். நான் விஜய்யிடம் அப்படி ஒன்றையும் இதுவரை காணவில்லை. ஏற்கனவே இரு கட்சிகள் தமிழக மக்களின் தலைகளில் குப்பைகளை கொட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மூன்றாவதாக விஜய்யும் அதே குப்பையை, அல்லது அதை விட மோசமான குப்பையை கொட்டுகின்றார் என்றே நான் நினைக்கின்றேன். இவர் ஒரு மாற்று கிடையாது என்பதை விடவும், இப்பொழுது இருப்பதை விடவும் சிறிதாவது நல்லதாக ஒன்று வருவதையும் இவர் இன்னும் நீண்ட காலத்துக்கு தடுத்து விடுவார் என்றே நினைக்கின்றேன்.

சேரனின் பெயரை நான் தவிர்த்திருக்க வேண்டும். சேரன் பிக்பாஸ் நிகழ்வில் நடந்து கொண்ட விதம் பற்றி அராத்து எழுதியிருந்த ஒரு ஆக்கத்தை நீங்களோ கோஷானோ படிக்கவில்லை போல............ தலைப்பாகை போய் விட்டது, ஆனால் என் தலை தப்பியது................

இங்கு ஒரு தமிழ்ச்சங்கத்தால் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்று திட்டமிடப்பட்டது. அவர்கள் எல்லோரும் தமிழ் நாட்டவர்களே. செயற்குழு உறுப்பினர்கள் சிலர் என்னுடைய நண்பர்கள். பின்னர் இளையராஜா கேட்கும் தொகையும், வசதிகளும் எங்களால் முடியவே முடியாது என்று கைவிடப்பட்டது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழர் ஒருவர் இளையராஜாவுக்கு கொடுத்த முன்பணத்தால், அந்த நிகழ்வும் நடக்கவில்லை, வீடிழந்து போன கதையை நான் கேள்விப்பட்டிருந்தேன்.

அன்றைய சாதாரண பண்ணைபுரத்து ராசையா என்ன இன்று என்ன இப்படி கேட்கின்றாரே என்ற எண்ணம் எனக்கு அன்று வரவில்லை. ஆனால் மனிதர்கள் காட்டும் வெளித் தோற்றத்துக்கும், அகத் தோற்றத்துக்கும் இருக்கும் இடைவெளியை அந்த நிகழ்வு மேலும் உறுதிப்படுத்தியது.

சேரன் மற்றும் பலர் பற்றி கீழே கோஷானின் பதிவின் கீழ் தொடர்கின்றேன்...........

6 hours ago, goshan_che said:

சேரன் எல்லாம் ஒரு ஆளே இல்லை…

மகள் சாதி மாறி திருமணம் செய்த விடயத்தில், இயக்குனர் பாலா என்கிற ரவுடியை கூட்டி கொண்டு போய் அராஜகம் பண்ணியவர்தான் இந்த சேரன்.

பாலா, சேரன், அமிர் எல்லாரும் சீமானை போல சினிமா குட்டையில் ஒன்றாக ஊறிய மட்டைகள்தான்.

இவர்கள் அனைவரினதும் பிதாமகன் சட்டை மாற்றுவது போல் பெண்களை மாற்றும், தான் 60 வயது தாண்டிய பின் 18 வயதும் ஆகாத மோனிஷாவோடு சேர்ந்து வாழ்ந்த பாலுமகேந்திரா.

பாலுமகேந்திராவின் செத்தவீட்டில் கூட அந்த பெண்ணை இழிவுபடுத்திய கூட்டம்.

இவர்களுக்கு அறம், நேர்மை, தூய்மை, பொதுவாழ்வு பற்றி கதைக்க எந்த அருகதையும் இல்லை.

நீங்கள் சொல்லியிருப்பதும் அவ்வளவும் நடந்தவையே. இவர்களுக்கு அறம் நேர்மை, தூய்மை, பொதுவாழ்வு பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது என்பதும் சரியே என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் நித்தி சொன்னார், ஜக்கி சொன்னார், பிரேமானந்தா சொன்னார், சாயிபாபா சொன்னார் என்று சொல்லும் இந்தச் சாமிகளின் பக்தர்களிடம் எல்லாம் நீங்கள் முன்வைத்திருக்கும் அதே வாதத்தையே நான் இன்றும் முன்வைக்கின்றேன்.

சினிமா துறையில் இருக்கும் எவரிடமாவது இந்த அருகதைகள் இருக்கின்றதா என்ற கேள்வி அடுத்ததாக வருகின்றது. சினிமாத் துறையில் இருக்கும் எவர் மேலாவது இவை போன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் இருக்கின்றதா என்றும் கேள்வி இருக்கின்றது. வரி ஏய்ப்பவர்களாக இருக்கின்றார்கள், பல தாரம் மணம் புரிபவர்களாக இருக்கின்றார்கள், பெண்களை ஏமாற்றுபவர்களாக இருக்கின்றார்கள்.

நடிகர் சிவகுமார் சுத்தமே என்று சொல்ல வந்தாலும், அவர் கூட அந்த ஒரு மனிதனின் கையில் இருந்த அலைபேசியை பறித்து எறிந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது.

இப்பொழுது விஜய்க்கு வருவோம். வரி ஏய்ப்பது ஒரு விசயமே இல்லை. அதை எல்லோருமே செய்கின்றார்கள்; விஜய்யும் செய்கின்றார். இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது கூட சினிமா மற்றும் அரசியல் உலகில் சாதாரணமே. எம் ஜிஆர், கருணாநிதி, கமல் என்று எல்லோரையும் சொல்லலாம். விஜய்யும் செய்கின்றார்.

ஆனால், இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து கொண்டு கட்டிய மனைவியை 'வொர்த்தே இல்லை..............' என்று இதற்கு முன் எவரும் சொன்னதில்லை. ஒரு பெண்ணை இப்படி எவரும் இழிவு செய்ததில்லை. அப்படியான விஜய் பொதுவாழ்வில் இருக்கலாமா............... இவரிடம் அறம், நேர்மை, தூய்மை எனபன இருக்கின்றதா.................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

இன்னுமொரு கருத்து கணிப்பு, தவெக 23.9% வாக்குகள் பெறும் கட்சி என எதிர்வு கூறியுள்ளார்கள், தவேக அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் விஜய் துணை முதலமைச்சராக வர வாய்ப்புள்ளது, நாதக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைப்பதில்லை எனும் முடிவு இந்த நிகழ்வால் மாற வாய்ப்பில்லை என கருதுகிறேன் அதனால் அதிமுக + த வெ க கூட்டணி ஆட்சியினை பிடிக்க வாய்ப்புள்ளது போல காணப்படுகிறது.

இந்தியாவில் தேர்தல் கணிப்புகள் தாயக் கட்டைகள் உருட்டி விடுவது போல. மக்கள் கருத்து கணிப்புகளை எடுப்பவர்களை உருட்டி விடுகின்றார்கள் என்றும் சொல்லலாம்.............🤣.

பிரசாந்த் கிஷோர் இந்தியாவின் மிகப் பிரபலமான தொழில்முறை தேர்தல் ஆலோசனையாளர். கோடி கோடியாகக் கொடுத்து அவரை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. சில தேர்தல்களில் அவர் வெற்றிகளைப் பெற்றும் கொடுத்தார். 'எல் கே ஜீ' என்று ஒரு தமிழ்ப்படம் கூட இந்த கதையுடன் வந்தது. இன்று விஜய்யின் அரசியல், தேர்தல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி இருக்கின்றார். இவருக்கு முன்னால் பிரசாந்து கிஷோரே வருவதாக இருந்தது. இவர் மிகச் சரியாக கணக்கை மாற்றுவார் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது.

பிரசாந்த் பீஹார் தேர்தலில் அவரே நின்றார். ஒரு கட்சி ஆரம்பித்தார் என்றும் நினைக்கின்றேன். அந்த தேர்தலில் தோற்றால் அரசியலை விட்டே ஒதுங்குகின்றேன் என்று சவால்விட்டார். படு தோல்வி அடைந்தார். அப்படி எல்லாம் அரசியலை விட்டே ஒதுங்க முடியாது, நான் ஏன் ஒதுங்க வேண்டும் என்று பின்னர் கேட்டார்.

ஆனால் அவர் சொன்னதில் சிரிப்பான விசயம் என்னவென்றால் பாஜக கூட்டணி மக்களுக்கு காசு கொடுத்து வாக்குகளை வாங்கி விட்டது என்பதே.................. அடப்பாவி, உன்னையெல்லாம் ஒரு தேர்தல் வித்தகன் என்று நினைத்து இருந்தார்களே................🤣.

அம்பானியே தேவையான பணத்தை இறக்கியதாக கிசுகிசுத்தார்கள். எல்லா கட்சிகளும் பணத்தை இறக்குவார்கள், இது ஒரு விசயமே இல்லை............... எடப்பாடியார் கூட டெல்லியில் அம்பானியை சந்தித்து இருந்தார். தமிழ் நாட்டிலும் பணம் கொட்டப் போகின்றது, அம்பானியின் பணமோ, அதானியின் பணமோ அல்லது செந்தில் பாலாஜியின் பணமோ, இப்படி பல பணங்கள்.

திமுக -- 40 - 45

அதிமுக -- 30 -35

விஜய் -- 15

சீமான் -- 5

என்று நான் உருட்டிய தாயக் கட்டைகள் சொல்லுகின்றது.

விஜய்க்கு 15 வீதம் கிடைத்தால் அது வரலாறு காணாத ஒரு விடயம். இந்த தடவை அவருக்கு ஒரு சீட்டும் கிடைக்கப் போவதில்லை என்று நினைக்கின்றேன், ஆனால் ஐந்து வருடங்களின் பின் அவர் எதிர்பார்க்கும் திமுக எதிர் தவெக என்பது நிஜமாகும். அவர் ஐந்து வருடங்கள் அரசியலில் நிலைத்து இருப்பாரா என்பதே கேள்வி. சீமான் என்றும் இருப்பார்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

எனது கணிப்பு கந்தப்புவின் போட்டியில் வெளியாகும்.

கந்தப்பு வேலைப்பழு காரணமாக போட்டி நடாத்தா விட்டால் என்ன செய்வது.விஜைண்ணாவின் தவெக எத்தனை சதவீதம் எடுக்கும் என்ற உங்கள் கணிப்பைச் சொல்லிவிடுங்கள்.

1 hour ago, ரசோதரன் said:

அதிமுக -- 30 -35

விஜய் -- 15

சீமான் -- 5

என்று நான் உருட்டிய தாயக் கட்டைகள் சொல்லுகின்றது.

விஜய்க்கு 15 வீதம் கிடைத்தால் அது வரலாறு காணாத ஒரு விடயம். இந்த தடவை அவருக்கு ஒரு சீட்டும் கிடைக்கப் போவதில்லை என்று நினைக்கின்றேன், ஆனால் ஐந்து வருடங்களின் பின் அவர் எதிர்பார்க்கும் திமுக எதிர் தவெக என்பது நிஜமாகும். அவர் ஐந்து வருடங்கள் அரசியலில் நிலைத்து இருப்பாரா என்பதே கேள்வி. சீமான் என்றும் இருப்பார்.

விஜைண்ணா இந்தத் தேர்தலில் முதலமைச்சர் கனவில் இருக்கிறார்.நீங்கள் இப்படிச் சொன்னால் எப்படி தேர்தல் முடிவுகளுக்கு அடுத்தநாள் படம் நடிக்க தயாரிப்பாளரைத் தேடுவார்.ஆனால் அவரை வைத்து படம் எடுக்க பலரும் யோசிப்பார்கள்.வடிவேலுவின் நிலைதான்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

இந்த தடவை அவருக்கு ஒரு சீட்டும் கிடைக்கப் போவதில்லை என்று நினைக்கின்றேன், ஆனால் அவர் ஐந்து வருடங்கள் அரசியலில் நிலைத்து இருப்பாரா என்பதே கேள்வி. சீமான் என்றும் இருப்பார்.

நன்றி விரிவான விளக்கம் மற்றும் நேரத்திற்கு.

எந்த சீற்றும் கிடைக்கவில்லை என்றால் சீமான் இல்லையென்று வைத்துக் கொண்டால் கட்சி மற்றும் தொண்டர்கள் தொடருவார்களா? அதேபோல எந்த சீற்றும் கிடைக்கவில்லை என்றால் விஜய் இல்லையென்று வைத்துக் கொண்டால் கட்சி மற்றும் தொண்டர்கள் தொடருவார்களா???

Edited by விசுகு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.