Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 Mar, 2026 | 05:05 PM

image

வேலணை பிரதேச சபையின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளில் 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர பொதுவான நினைவுச் சதுக்கம் ஒன்றை அராலிச் சந்தியை அண்டிய பகுதியில் அமைக்க பிரதேச சபை அனுமதியளித்துள்ளது.

வேலணை பிரதேச மக்களின் நிதிப் பங்களிப்புடன் 90 மற்றும் 91 காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமது பிரதேச மக்களின் நினைவுகளை நினைவுகூர ஒரு பொது நினைவுச் சதுக்கம் அமைக்க எடுக்கும் முயற்சிக்கு உரிய இடத்தை அடையாளப்படுத்தி, அவ்விடத்தில் குறித்த தூபியை அமைக்க சபை அனுமதிக்க வேண்டும் என சபையின் உறுப்பினர் திருநாவுக்கரசு சிவகுமாரால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த முன்மொழிவின் நோக்கம் வேலணை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட  மக்களின் நினைவுகளை மையப்படுத்தி நினைவுகூரும் வகையில் அமைக்கபடுவதால்   சபையின் உறுப்பினர்கள் அதற்கு தமது சம்மதத்தை வழங்கியமைக்கு அமைய பிரதேச சபை அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்திருத்தால் தமிழ்ப் பிரதேசங்களில் மக்கள் குறைவாகவும் இப்படியான நினைவு சின்னங்கள் அதிகமாகவும் இருந்திருக்கும். நல்ல வேளை யுத்தம் முடிந்ததால் தமிழ் மக்கள் தொகை வளர்சசியை அடைகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, island said:

யுத்தம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்திருத்தால் தமிழ்ப் பிரதேசங்களில் மக்கள் குறைவாகவும் இப்படியான நினைவு சின்னங்கள் அதிகமாகவும் இருந்திருக்கும். நல்ல வேளை யுத்தம் முடிந்ததால் தமிழ் மக்கள் தொகை வளர்சசியை அடைகிறது

நீங்கள் தனியே குண்டுச்சட்டிக்குள் நீந்திக்கொண்டிருக்கின்றீர்கள்.

விடுதலைப்புலிகள் விட்ட ஒரே தவறு அமெரிக்காவை அரவணைக்க மறுத்ததுதான். திருகோணமலையில்Voice of America தளம் அமையவிருக்கும் போது அதை எதிர்க்காமல் இருந்திருந்தாலே இன்றும் உயிர்ப்புடன் இருந்திருப்பார்கள்.

அன்றைய பிழை இன்று சரியாக தெரியும்...

இன்றைய சரி நாளை பிழையாக தெரியும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகள் விட்ட ஒரே தவறு அமெரிக்காவை அரவணைக்க மறுத்ததுதான்.

இதை எழுதியமைக்காக அர்ஜுன், ஜூட், என் போன்றோரை நீங்கள் என்ன வாங்கு வாங்கினீர்கள் என்பதை…

நினைக்கிறேன்…

சிரிக்கிறேன்…

1 hour ago, குமாரசாமி said:

அன்றைய பிழை இன்று சரியாக தெரியும்...

இன்றைய சரி நாளை பிழையாக தெரியும்..

அன்று நீங்கள் எழுதிய கருத்துக்கும் இது பொருந்தும்😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகள் விட்ட ஒரே தவறு அமெரிக்காவை அரவணைக்க மறுத்ததுதான்.

நாங்கள் சோசலிசம், சோசலிசம் என்று இந்திய , ரஸ்ஸிய கொள்கைகளின் பின்னால் ஓடியதால் அமெரிக்காவிற்கு எதிரானவர்களாக அடையாளம் காணப்பட்டோம். அதன் விளைவே இலங்கையரசு அமெரிக்காவை எமக்கெதிராகப் பாவித்தமை. அமெரிக்காவுடன் அனுசரித்துப் போகவேண்டும் என்கிற தெளிவு எமக்கு ஏற்பட்டபோது எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டது.

3 hours ago, குமாரசாமி said:

அன்றைய பிழை இன்று சரியாக தெரியும்...

இன்றைய சரி நாளை பிழையாக தெரியும்...

எமது கையில் இருந்த விடுதலைப் போராட்டத்தைக் காவுகொடுத்துவிட்டு இன்று எவரதோ போராட்டத்திற்காக, எவரதோ அதிகாரத்திற்காக, எவரதோ விடிவிற்காக, எவரதோ பாதுகாப்பிற்காக பிரிந்து நின்று விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.

சர்வதேச அரசியலில் ஏதிலிகளாக்கப்பட்டிருக்கும் நாம் எம்முடன் சம்பந்தப்படாத பிணக்குகளில் இடதுசாரியென்றும், வலதுசாரியென்றும் பிரிந்துநின்று எம்மை அடையாளம் காணப் பார்க்கிறோம்.

நாம் இழந்தவை ஏராளம். இவை எதனையும் மீட்பதற்கான மனோநிலையோ, சூழ்நிலையோ இல்லாத கையறு நிலையில் நானும் நீங்களும் நின்றுகொண்டிருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2026 at 23:40, குமாரசாமி said:

நீங்கள் தனியே குண்டுச்சட்டிக்குள் நீந்திக்கொண்டிருக்கின்றீர்கள்.

விடுதலைப்புலிகள் விட்ட ஒரே தவறு அமெரிக்காவை அரவணைக்க மறுத்ததுதான். திருகோணமலையில்Voice of America தளம் அமையவிருக்கும் போது அதை எதிர்க்காமல் இருந்திருந்தாலே இன்றும் உயிர்ப்புடன் இருந்திருப்பார்கள்.

எனது கருத்தில் நான் தெரிவித்திருந்தது யுத்தம் நிறுத்தப்பட்டதால் தொடர்சசியான மக்கள் அழிவு நிறுத்தப்பட்டது எனக்கு மகிழ்சியே என்பதையே. யுத்தத்தை உரிய வேளையில் எமது தரப்பில் இருந்து நிறுத்ததப்பட்டிருந்தால் எமது மக்களின் அரசியல் பலமும் மனோபலமும் காப்பாற்றப்பட்டிருக்கும். அவர்களால் யுத்தத்தை நிறுத்த வைத்தது எமது நிலையை அடி மட்டத்திற்கு தள்ளியது.

On 19/3/2026 at 23:40, குமாரசாமி said:

அன்றைய பிழை இன்று சரியாக தெரியும்...

இன்றைய சரி நாளை பிழையாக தெரியும்...

இந்த விடயத்தில் அன்றைய பிழை இன்று சரி என்று நீங்கள் கூறுவது வெறும் நொண்டி சாட்டு மட்டுமே. அன்றைய பிழையை அன்றே அது பிழை என்று உணர்ந்து அதை எடுத்துரைத்தோர் எச்சரித்தோர் பலர் உண்டு. அவர்களெல்லாம் வன்முறைமூலம் மௌனிக்க வைக்கப்பட்டனர். அவர்கள் அன்றே கூறியது சரி என்பது அவர்களை மௌனிக்க வைத்தவர்கள் முட்டு சந்திக்கு மக்களை அழைத்து சென்றுவிட்டு வேறு வழியின்றி மௌனித்தபோது தான் மிக தெரிந்து கொண்டனர். அதை வெளிப்படையாக சொல்ல இன்றும் ஈகோ பலரை அனுமதிப்பதில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடதுசாரி மற்றது வலதுசாரி என்றும் பிரிந்துநிற்பதே ஒரு சாதி வேறுபாடு மாதிரி கற்பனை எனக்கு இந்த அடையாளம் வேண்டாம்

ஈரான் ஒரு இடதுசாரிநாடு தானே 😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இந்த இடதுசாரி மற்றது வலதுசாரி என்றும் பிரிந்துநிற்பதே ஒரு சாதி வேறுபாடு மாதிரி கற்பனை எனக்கு இந்த அடையாளம் வேண்டாம்

ஈரான் ஒரு இடதுசாரிநாடு தானே 😃

வடகொரியாவை மறந்திட்டியல்,இவர்கள் தான் 1971 ஆம் ஆண்டு சிறிலங்கா தீவாரின்ட புரட்சிக்கு ஆயுதம் வழங்கியவர்கள் ..இவையளின்ட ஆயுத கப்பலை இந்திய காந்திய படைகள் கைப்பற்றினவையள் அத்துடன் சிலரை கைது செய்தவைள்.

அன்று இந்த தீவாரின்ட புரட்சி வெற்றியடைந்திருந்தால் ரோகண வீஜயவீரவின் மகன் இன்று ஜனாதிபதியாக இருந்திருப்பார்...நம்மட தமிழ் புரட்சிவாதிகளுக்கு அனுரா அம்மான் கிடைத்திருக்க மாட்டார்...

ஈரான் இன்று இவ்வளவு கஸ்டப்பட வேண்டி வந்திருக்காது...சிறிலங்காவிலிருந்து ஈரானின் புரட்சி பயங்கரவாத படைகள் அமெரிக்காவை அதிரடி தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும்.

வடகொரியா,சீனா,ஈரான் போன்ற நாடுகளுடன் கூட்டு சேர்ந்து சிறிலங்கா தீவாரின் புரட்சி படை துவசம் பண்ணியிருக்கும்...ட்ரம்ப் வெனிசுலவை கைப்பற்றுவதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்..

அனுரா அம்மான் இப்பவே அமெரிக்காவுக்கு தளம் தரமாட்டேன் என சொல்லுகிறார் என்றால் பாருங்க்கவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஈரான் ஒரு இடதுசாரிநாடு தானே 😃

சும்மா பகிடி விடாதையுங்கோ....

அவையல் புரட்சி படையினர்..40 வருசமா ஒற்றை தலைவன் என்றால் சும்மாவே ....

அமேரிக்காவுக்கு எதிராக எவன் துவக்கை நீட்டுறானோ அவன் இடதுசாரி....

அமெரிக்கா தம்பதிகளை கடத்தினாலும் புரட்சிவாதி தான் ...

அமெரிக்காவுக்கு பின் கதவால் ஆமா சொல்லி கதவி திறந்து விட்டு முன் கதை மூடி தாழ்பால் போட்டால் அவனும் புரட்சி திலகம் இடதுசாரி அம்மான்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

அன்று இந்த தீவாரின்ட புரட்சி வெற்றியடைந்திருந்தால் ரோகண வீஜயவீரவின் மகன் இன்று ஜனாதிபதியாக இருந்திருப்பார்...நம்மட தமிழ் புரட்சிவாதிகளுக்கு அனுரா அம்மான் கிடைத்திருக்க மாட்டார்...

அல்லாகு அக்பர் சொல்லி தாக்குபவர்களை அவர்களின் ஆதரவாளர்களை கட்டிபிடிப்பவர் இடதுசாரி ஓம் நமச்சிவாய சொல்பவர் வலதுசாரி

நடிகர் விஜய் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் போன்று அந்தோனி அல்பானீஸ் அய்யாவும் ரம்ஜான் விழாவிற்கு சென்று தான் ஒரு இடதுசாரி என்பதை நிருபித்துள்ளார். அவர் முகம் மகிழ்ச்சியில் காணபட்டது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.