Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த்ரிஷா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாட்சிகளில் ஒரு சாட்சி.. (இருக்கிறவங்களுக்கு புரியும்.) :mrgreen: :wink:

  • Replies 534
  • Views 45.4k
  • Created
  • Last Reply

ம் கும் அது திரிசாவுக்கு தான் புரியும் போல நமக்கு புரியலை.............. :wink: :wink: :mrgreen: :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளம் அண்ணாக்கு ஒரு திரிசா...அட சொல்லவேயில்லையே.... :P :P :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோட கிளம்பீட்டாங்க.. என்ன நினைச்சிட்டிருக்கீங்க.. நம்மைத்தவிர யாருக்கும் நமக்கும் பயம் கிடையாது. கத்திக்கு கத்தி.. குத்துக்கு குத்து. வெட்டிற்கு வெட்டு.. அன்புக்கு அன்பு இது தான் நம்ம கொள்கை.. ஒரு கை பார்க்காமல் விடுவமா என்ன..?? :P

என்னா.. சவுண்டு ஏறுது.. சின்னப்புவின்ரை போத்திலுகள் எல்லாம் காலியா.. ஆ... உந்த சவுண்டு எல்லாம் நம்மளிட்டை வேண்டாம்.. கொள்கையா? கொள்ளையா? அதுவும் தொடங்கீட்டியளா.. ஆ.... அப்ப வெட்டுக்குத்து பீப்பிளை எல்லாம் கையுக்கை போட்டு வச்சிருக்கிறியள் போலை... :lol: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவுண்டில்ல மந்திரி றியலு.. போத்தல் கதை தப்பாய் போச்சு.. :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஸ்டாலினின் எக்ஸ்ரே கண்களில் இருந்து எதுவும் தப்ப முடியாது.. அப்படியா.?? :wink:
நீங்கள் சொல்கிறமாதிரி உண்மையாயே எக்ஸ்ரே கண்கள் இருந்திருந்தால்----------------------றோட்டில் போறவையை பார்க்கைக்கை பீச்சிலை படுக்கிறவையை பார்த்த மாதிரி இருக்கும்----------------------------------------ஸ்ராலின் :lol::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவுண்டில்ல மந்திரி றியலு.. போத்தல் கதை தப்பாய் போச்சு.. :evil:

எனன றியலு ஓ அடிப்பது றியலோ.. சரி சரி அடியுங்க... பாவம் சின்னப்புக்கு தான் போத்தில் வேண்டிக் கட்டாது ... :lol:

  • தொடங்கியவர்

கல்யாணம் எப்போ? த்ரிஷா பதில்

15thrisha1.jpg

கோலிவுட்டில் நம்பர் ஒன் கதாநாயகி என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. தனது பிறந்த நாளைக் கொண்டாட ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பறந்து வந்த த்ரிஷா, தனது தோழிகளுக்கு பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் டின்னர் கொடுத்து அசத்தினார். மறுநாள் படப்பிடிப்பிற்காக துபாய் பறப்பதாக ப்ளான். அப்படிப்பட்ட பரபரப்பான நேரத்தில் அவரை சினிமா எக்ஸ்பிரஸýக்காக சந்தித்தோம். முக மலர்ச்சியோடு பேட்டிக்கு "யெஸ்' சொன்னார்.

* "த்ரிஷா'ன்னா ஸ்லிம் என்று அர்த்தமா?

(வாய் கொள்ளாமல் புன்னகைத்து...) தேங்க்யூ. முன்பு நிறைய எக்ஸர்சைஸ் பண்ணுவேன். அதோட எஃபக்ட் இப்பவும் ஸ்லிம்மாக இருக்கிறேன். ஆனால் இப்ப ஜிம்முக்குப் போக கூட நேரமில்லை. ஸ்லிம்மாக இருப்பது ரொம்பவும் செüகர்யமாக இருக்கிறது.

* அட்டகாசமாக டான்ஸ் ஆடுறீங்களே எப்படி?

என்னுடைய ஏழு வயசிலேயே "பாலே' நடனம் கற்றுக் கொண்டேன். சினிமாவுக்கான நடனம் சொல்லி கொடுத்தவர் கள் கலா மாஸ்டரும், ராஜுசுந்தரம் மாஸ்டரும்தான். ஒரு மாதம் அவர்களிடம் பயிற்சி பெற்றேன். நான் நடித்த தெலுங்கு படமான "வர்ஷம்' படத்தில் "நீ ஒஸ்தானன்டே நு ஒதன்டானா' பாட்டு சூப்பர்ஹிட் ஆச்சு. அதில் ஒரு பாடல் நல்லாப் பேசப்பட்டது. நான் இவ்வளவு நல்லா டான்ஸ் பண்றேன்னா என்றால் அதற்கு காரணம் பிரபுதேவா மாஸ்டரும்தான்.

* தெலுங்கில் பிரபுதேவாவின் இரண்டாவது படத்திலும் நடிக்கிறீர்களே?

பிரபுதேவா சார் தெலுங்கில் "நீ ஒஸ்தானன்டே நு ஒதன்டானா' படத்தை டைரக்ட் செய்தார். அதில் நடிக்கும் போது கதையும், கதைக் களமும் ரொம்ப பிடித்திருந்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட். மறுபடியும் "பெüர்ணமி' என்ற படத்தை டைரக்ட் பண்ணுகிறார். அதில் "பெüர்ணமி' என்ற கதாபாத்திரமாகவே நடிக்கிறேன். பிரபாஸ் ஹீரோ. இதில் எனக்கு பவர்புல் கேரக்டர். அதாவது ஹீரோவுக்கு சமமா கதாபாத்திரம்.

* தெலுங்கு ரசிகர்கள் எந்த அளவுக்கு உங்களை ஆதரிக்கிறார்கள்?

எனக்கு ரசிகர்கள் ஒரு பெரிய இடத்தைக் கொடுத்திருக்காங்க. "வர்ஷம்', "நீ ஒஸ்தானான்டே நு ஒதன்டானா' படங்களால் பெஸ்ட் ஹீரோயினிங்கிற பேரு கிடைச்சிருக்கே.

* தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் நடிக்கிறீர்களே, இரண்டு இடங்களிலும் ரசனை மாறுபடுமே?

ரசனை மாறுபடும்னு சொல்ல முடியாதுங்க. தெலுங்கில் எடுத்த "ஒக்கடு' படம் தான் தமிழில் "கில்லி'ன்னு ரீமேக் ஆச்சு! அங்கேயும் நல்லாப் போச்சு! இங்கேயும் நல்லா போச்சு! அப்போ ரசனை ஒண்ணாதானே இருக்கு.

* நீங்கள் ஹைதராபாத்தில் வீடு வாங்கி குடியேறிவிட்டதாக பேசப்படுகிறதே?

கண்டிப்பா இல்லை. நான் இன்னமும் பஞ்சாராவுல தான் இருக்கேன். அங்கே எனக்குன்னு பர்மனென்ட் ரூம் இருக்கு. எந்தப் பிரச்சனையும் இல்லை. தெலுங்கில் மூன்று படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவுல போயிருக்கு. தவிர இப்ப ரெண்டு படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன். இந்த வருஷம் தெலுங்கு உகாதி வருடபிறப்புக்கு ஜெமினி டிவியில் சிறந்த நடிகைன்னு விருது கொடுத்து கெüரவிச்சாங்க. அரசாங்க விருதும் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். இப்ப நித்தின் கூட, ராகவேந்திராராவ் டைரக்ஷனில் நடிச்சுக்கிட்டிருக்கேன். துபாயில் பத்து நாள் ஷூட்டிங். அதற்காகதான் பறந்துக்கிட்டிருக்கேன்.

* தெலுங்கில் நல்ல வருமானம் வருவதால்தான் தமிழ்ப் படங்களைக் குறைச்சுக்கிட்டீங்களா?

அப்படியெல்லாம் இல்லை. தமிழ்ல வருஷத்திற்கு இரண்டு படங்களில் நடிக்கிறேன். எனக்கு கால்ஷீட் பிரச்சனை வராதபடி பார்த்துக்கறேன். தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஒரு படத்திலும், பிரபாஸ் கூட ஒரு படத்திலும் நடிக்கிறேன். அதேபோல தமிழில் ஹரி டைரக்ஷனில் சூர்யாவுடன் ஒரு படத்திலும், "ஜெயம்' ரவியுடன் லஷ்மி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். விக்ரம் படத்துக்கு கூட பேசிகிட்டு இருக்காங்க.

* ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஏதும் வந்ததா?

ஹிந்திக்கு போகணும்னா அது நல்ல படமா இருக்கணும். ஏனோ தானோன்னு போறதுல எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு தமிழ் ரசிகர்களிடமும், தெலுங்கு ரசிகர்களிடமும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கு. இவர்களைக் கடந்து போறேன்னா அது பிரம்மாண்டமான படமா இருக்கணும்.

* தமிழில் யார் டைரக்ஷனில் நடிக்க விரும்புகிறீர்கள்?

மணிரத்னம் சாரின் "ஆய்த எழுத்து' படத்தில் நடித்தாலும் தொடர்ந்து மணிரத்னம், பாலா, ஷங்கர், தரணி போன்றவர்களின் படங்களில் நடிக்க ஆசை. அதே மாதிரி "வாலி' படத்தில் சிம்ரன் நடிச்ச மாதிரி ஒரு கேரக்டர் பண்ணனும். இப்போ தெலுங்கில் த்ரிஷா நடிக்கிற மாதிரி நமக்கு வாய்ப்பு வரணும்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. அதுமாதிரி நான் பேசப்படுகிற அளவில நடிக்க வேண்டும்..

* மும்பை நடிகைகள் தென்னிந்திய மொழிப் படங்களில் கவர்ச்சிக்கு எந்தத் தடையும் சொல்லாமல் நடிக்கிறார்கள். அவர்களுடன் போட்டி போட்டு உயர்ந்திருக்கிறீர்களே? அது எப்படி?

எனக்கு மும்பை நடிகைகள் மீது எந்த எதிர்ப்பும் கிடையாது. திறமையான நடிகைகளை மட்டும்தான் ரசிகர்கள் வரவேற்பார்கள். அவர்கள் தங்களுடைய இடத்தை விட்டு வேறொரு இடத்துக்கு வந்து தெரியாத மொழியில், புரியாத வசனத்தைப் பேசிக் கடுமையாக உழைக்கிறாங்க. நான் உழைக்கிற மாதிரியே அவங்களும் உழைக்கிறாங்க. இங்கே குஷ்பு, ஜோதிகா, சிம்ரன்னு மூனு பேர்தான் ஜெயிச்சிருக்காங்க. ஆனா முன்னூறு பேர் திரும்பிப் போயிருக்காங்க. எத்தனையோ பேர் ஒண்ணு, ரெண்டு படத்தோட காணாம போயிருக்காங்க. டான்ஸ், லுக், நடிப்புத் திறமை என எல்லாம் இருந்தா தான் ஜெயிக்க முடியும். நான் வந்த போதே பெரிய இயக்குனர்களின் படங்கள் என்பதால் என்னுடையத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பும் கிடைத்தது. இப்போது தெலுங்கில் ஜெயிக்கக் கூட அதான் காரணம்.

* மிஸ் த்ரிஷா மிஸஸ் த்ரிஷாவா எப்ப ஆகப் போறீங்க?

இப்பவே கல்யாணமா? நல்ல படங்கள் நிறைய பண்ணனும்னு ஆசையா இருக்கு. இப்போதைக்கு என் சிந்தனை இதுதான்.

Cinema Exp

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இப்பவே கல்யாணமா? நல்ல படங்கள் நிறைய பண்ணனும்னு ஆசையா இருக்கு. இப்போதைக்கு என் சிந்தனை இதுதான்
:lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜித்தன் பட நாயகி பூஜா பற்றி செய்தியொண்டு மில்லையா மதன். ? பூஜா எண்டொரு புதிய பக்கம் தொடங்குவியள் எண்டு விரைவில எதிர்பாக்கிறன்.

மற்றது.. இப்ப திரிஷா பற்றி ஏதோ மேலை கிடக்கு. நான் படிக்கேல்லை.

மறக்காமல் பூஜா பற்றி ஏதாவது போடுங்கோ.. கண்டிப்பாய் படங்களுடன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிகளா..?? என்ன சயந்தன் இப்படி கவுத்திட்டியளே.. :wink: :mrgreen: :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ,,,,எங்கட சின்னப்புவும் சொல்றார் ஃஃஃஉந்த திரிஷாவின்ரை படம் மேலை கிடக்கு பார்க்க மாட்டாராம்----பரவை முனியம்மாவின்ரை படத்தை போடட்டுமாம் அபபத்தான் பார்ப்பாராம்-----என்ன பரவை முனியம்மாவின்ரை கவர்ச்சிப்போட்டோ ஓன்று போடுறது-------------------------------------------------------------------ஸ்ராலின் :lol::lol:

  • தொடங்கியவர்

ஜித்தன் பட நாயகி பூஜா பற்றி செய்தியொண்டு மில்லையா மதன். ? பூஜா எண்டொரு புதிய பக்கம் தொடங்குவியள் எண்டு விரைவில எதிர்பாக்கிறன்.

மற்றது.. இப்ப திரிஷா பற்றி ஏதோ மேலை கிடக்கு. நான் படிக்கேல்லை.

மறக்காமல் பூஜா பற்றி ஏதாவது போடுங்கோ.. கண்டிப்பாய் படங்களுடன்..

ஓ பூஜாக்கு மாறிட்டிங்களா சுவிஸ் அரசாங்கம் அறிஞ்சா இப்படி நிலையில்லாத ஆளோ என்று நினைப்பார்கள் கவனம் :P

மற்றது பூஜா பத்தி போடலாம் ஆனா படம் போடுவது தான் கஷ்டம். போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் :mrgreen:

படங்கள் நீக்கப்பட்டுள்ளன

யாழினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ பூஜாக்கு மாறிட்டிங்களா சுவிஸ் அரசாங்கம் அறிஞ்சா இப்படி நிலையில்லாத ஆளோ என்று நினைப்பார்கள் கவனம்

மாற்றம் ஒண்டு தான் மாற்றமில்லாதது எண்டு பெஞ்சமின் பிராங்கின் ??? சொல்லியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ பூஜாக்கு மாறிட்டிங்களா சுவிஸ் அரசாங்கம் அறிஞ்சா இப்படி நிலையில்லாத ஆளோ என்று நினைப்பார்கள் கவனம் :P

மற்றது பூஜா பத்தி போடலாம் ஆனா படம் போடுவது தான் கஷ்டம். போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் :mrgreen:

:lol::lol:

  • தொடங்கியவர்

மாற்றம் ஒண்டு தான் மாற்றமில்லாதது எண்டு பெஞ்சமின் பிராங்கின் ??? சொல்லியிருக்கிறார்.

ம் ம் இந்த வசனத்தை வைத்து கனபேர் பிழைக்கிறீஙக என்று தெரியும் கவனம் வேற யாரும் இதே வசனத்தை உங்களுக்கு சொல்லிவிடுவார்கள் :P

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

திரிஷா Vs அசின்

ashin-400.jpg

தமிழிலும், தெலுங்கிலும் தனக்கு வரும் வாய்ப்புகளை ஆசின் தட்டிப்பறிப்பதால் த்ரிஷா கடும் கடுப்பில் இருக்கிறார். நேருக்கு நேர் சந்தித்தால் கூட முகத்தை திருப்பி விடுகிறார் 'மாமி'.

தென் இந்தியாவில் இப்போதைக்கு நம்பர் ஒன் நடிகை யார் என்றால் அது த்ரிஷாவே தான். தெலுங்கில் வரிசையாக 3 படங்கள் ஹிட்டாகிவிட்டதால், த்ரிஷா காட்டில் சும்மா 'பெய்யெனப் பெய்யும் மழை' தான்.

தமிழ், தெலுங்கில் கால்ஷீட் கொடுத்து மாள முடியாத அளவுக்கு கை நிறைய படங்களை வைத்திருக்கிறார் த்ரிஷா. இதனால் ரேட்டையும் கன்னாபின்னாவென்று உயர்த்தி தெலுங்கி ரூ. 90 லட்சத்தில் போய் நிற்கிறார். தமிழில் ரூ. 40 முதல் ரூ. 50 லட்சம் வரை கேட்கிறார் என்பது பழைய செய்தி.

தமிழில் விஜய்யுடன் 2 படங்களில் புக் ஆகி இருக்கும் த்ரிஷா, விக்ரம் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க இருந்தார்.

சிவகாசியில் விஜய்யுடன் நடித்துக் கொண்டே அவருடன் ஒரு தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற 'அத்தனொக்கடெ' என்ற படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தமிழில் எடுக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடி த்ரிஷா தான்.

'திருமலை' ரமணா இந்தப் படத்தை டைரக்ட் செய்கிறார். தெலுங்கு 'ஒக்கடு' தான் தமிழில் கில்லியானது. இதனால் இந்தப் படமும் கில்லி மாதிரி ஓடும் என்கிறார்கள்.

இப்படி பரபரப்பாக தமிழிலும், தெலுங்கிலும் நடித்துக் கொண்டிருந்தாலும் த்ரிஷா தனக்கு வரும் எந்த புதிய படத்தையும் இழக்க விரும்புவதும் இல்லை. தேடி வருபவர்களிடம் எல்லாம் ஒரு அமௌன்ட்டை அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு கால்ஷீட் கொடுத்துவிட்டு காத்திருக்க வைக்கிறார்.

த்ரிஷாவுக்காக இவ்வாறு காத்திருக்கும் தயாரிப்பாளர்களை மடக்கி அந்த சான்ஸ்களை அப்படியே கொக்கி போட்டு இழக்கும் வேலையில் இப்போது மலையாளத்து மங்கை ஆசின் ஈடுபட்டுள்ளார். தெலுங்கில் இவரும் ஓரளவுக்கு பேமஸ் தான் என்பதாலும் த்ரிஷா கேட்கும் அநியாய சம்பளத்தாலும் வெறுத்துப் போய் இருக்கும் சில தயாரிப்பு பார்ட்டிகள் ஆசினிடம் மடங்கி வருகின்றன.

அத்தோடு த்ரிஷாவுக்குப் போகும் வாய்ப்புகளைத் தெரிந்து கொண்டு அங்கும் இடைமறிப்பு வேலை செய்து சான்ஸ்களை கொக்கு மாதிரி கொத்தி வருகிறார் ஆசின்.

விக்ரமுடன் 'மஜா' படத்தில் முதலில் த்ரிஷா தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். வழக்கம் போல இந்தப் படத்தின் தயாரிப்பாளரிடமும் த்ரிஷா பத்துக் கட்டளைகளை போட்டுள்ளார்.

இதனால் எரிச்சலான தயாரிப்பாளர் என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தபோது, தானே அவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ஆசின். அவ்வளவு தான், த்ரிஷாவை மஜாவில் இருந்து அப்படியே தூக்கி விட்டு அவருக்கு பதிலாக ஆசினை புக் செய்து விட்டார்கள்.

எப்படியும் தயாரிப்பாளர் தன்னிடம் தானே வரவேண்டும் என்று த்ரிஷா நினைத்துள்ளார். ஆனால் வாய்ப்பு ஆசினுக்கு போய் விட்டது என்பதை அறிந்த மாமி கொதித்து விட்டாராம்.

ஏற்கனவே தெலுங்கிலும் தன்னுடைய சில வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் ஆசின் மீது த்ரிஷா கடுப்பில் இருந்தார். இப்போது கோலிவுட்டிலும் தன்னுடன் போட்டி போடுவதால் த்ரிஷாவுக்கு தலைக்கு மேல் கோபம்.

சமீபத்தில் கில்லி படத்தின் 200வது நாள் விழா சென்னை கன்னிமாரா ஹோட்டலில் நடந்தது. இந்த விழாவில் ரஜினி உட்பட முக்கிய திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கில்லியின் நாயகி த்ரிஷாவும் விழாவுக்கு வந்திருந்தார். சிறிது நேரம் கழித்து ஆசினும் விழாவுக்கு வந்தார். (இவருக்கு விஜய்யிடமிருந்து ஸ்பெஷல் அழைப்பு வந்ததாம்!!) த்ரிஷாவை பார்த்ததும் ஆசின் புன்னகைக்க, முகத்தை கடுகடுவென வைத்தபடியே முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டாராம் விட்டாராம் த்ரிஷா.

மாமியின் கோபத்தை அந்த 'சாமி' தான் தீர்த்து வைக்கணும்.

Thats Tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மதன்

  • 1 month later...

மாமல்லபுரம், ஜூலை 28- சென்னை அருகே நடுரோட்டில் தமிழ் சினிமா முன்னணி நடிகை திரிஷh மதுபாட்டிலுடன் நள்ளிரவில் நடனம் ஆடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் பற்றி கூறப்படுவதாவது„-

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது ஈஞ்சம்பாக்கம். இங்கு கடற்கரை ஓரம் அமைந்துள்ள சன்ரைஸ் அவென்யூவில்தான் தமிழக முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள், அரசியல் பிரமுகர்களுக்கு சொகுசு பங்களாக்கள் உள்ளன. இதையே அவர்கள் கவுரவமாகவும், அந்தஸ்தாகவும் கருதுவர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1- மணி முதல் அதிகாலை 3 மணி வரை சொகுசு காரில் ஸ்டீரியோ டேப் ரிக்கார்டர் மூலம் பெரும் சத்தத்துடன் மேற்கத்திய இசை பாடல்களுடன் போதையில் ஆண்களும், பெண்களும் நடனம் ஆடுவதாகவும், இது பெரும் இடையூறhக இருப்பதாகவும் சன்ரைஸ் பகுதி மக்கள் காவல்துறைக்கு புகார் செய்துள்ளனர்.

இதுபற்றிய தகவலின்பேரில் நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடுரோட்டில் போதையுடன் நடனமாடிய கும்பலை விரட்ட முயன்றுள்ளனர். அப்போது அங்கு தமிழ் சினிமா உலகில் முன்னணி இடத்தை தக்க வைத்துள்ள நடிகை திரிஷh கையில் மது பாட்டிலுடன் நிற்பதை கண்டு செய்தறியாது நின்றனர்.

நடிகை திரிஷhவிடம் சென்று அருகில் இருப்பவர்கள் புகார் செய்துள்ளதாகவும், எனவே இடத்தை காலி செய்யுங்கள். பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வது சரியில்லை எனவும் கூறினராம். உடனே நடிகையும், அவருடன் வந்த ஆண்- பெண் நண்பர்களும் காரில் ஏறி மின்னல் வேகத்தில் பறந்தனர்.

சமீபத்தில் நட்சத்திர ஓட்டல் குளியல் அறை காட்சியில் திரிஷh தோற்றத்தில் வெளியான வி.சி.டி.யால் பெரும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நட்சத்திர ஓட்டல்களில் -காபிரே† நடனம் ஆடுவதை மாநகர போலீஸ் தடை செய்துள்ளதால் நட்சத்திர ஓட்டல்களில் ஆடவேண்டிய நடன நிகழ்ச்சிகள் இப்போது நடுரோட்டுக்கு வந்துவிட்டதோ என பொதுமக்கள் முணுமுணுத்தனர்.

நட்சத்திர ஓட்டல் குளியல் அறை காட்சியில் திரிஷா

கையில் மது பாட்டிலுடன் திரிஷா

நடுரோட்டில் போதையுடன் நடனமாடிய திரிஷா

திரிஷாக்கு இதைவிட வேற என்ன பேரும் புகழும் வேண்டிக்கிடக்கு.

ஓ பூஜாக்கு மாறிட்டிங்களா சுவிஸ் அரசாங்கம் அறிஞ்சா இப்படி நிலையில்லாத ஆளோ என்று நினைப்பார்கள் கவனம் :P

மற்றது பூஜா பத்தி போடலாம் ஆனா படம் போடுவது தான் கஷ்டம். போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் :mrgreen:

அடப்பாவம் மட்டுறுத்தினருக்கே ஆப்பா!!!!!!!காலம் கலிகாலம்.

:roll: :roll: :roll: :roll:

படங்கள் நீக்கப்பட்டுள்ளன------- யாழினி-  

அடப்பாவம் மட்டுறுத்தினருக்கே ஆப்பா!!!!!!!காலம் கலிகாலம்

இதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ளமுடியாது இது மக்களை(எங்களை) ஏமாற்றும் ஒரு அறிக்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரிஸா பற்றித்தான் இனிக்கு எல்லா இடத்திலையும் நியூஸா இருக்கப்பா... :):lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புகழின் உச்சிக்கு வாறது என்று இதைத் தான் சொல்றதோ? :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரிஸா பற்றித்தான் இனிக்கு எல்லா இடத்திலையும் நியூஸா இருக்கப்பா... :):lol::lol::lol:

நன்றி விஷ்ணு.. :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.