Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை - இந்தியாவை மிரட்டுகிறதா? இந்தியா இலங்கையை மிரட்டுகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்தியாவை மிரட்டுகிறதா? இந்தியா இலங்கையை மிரட்டுகிறதா?

[25 - November - 2007]

-கலைஞன்-

இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த இந்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் அறிவுரையும் உகண்டா தலைநகர் கம்பாலாவில் வைத்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வழங்கிய போதனையும் செவிடர் காதில் ஊதிய சங்காகவேயுள்ளது.

முன்னாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு நிகழ்வில் உரையாற்றுவதற்காக இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றை மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க உட்பட பல உயர்மட்டத்தினருடன் அவசர சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.

சிதம்பரத்தின் சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட போதும் ஜனாதிபதி, பிரதமர் ஜே.வி.பி. தலைவருடனான சந்திப்புகள் குறித்த விபரங்கள் எதுவும் அரச தரப்பினரால் வெளியிடப்படாது மூடி மறைக்கப்பட்டதாக தெரிய வருகிறது. விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் படுகொலை தொடர்பாக சிதம்பரம் சில சூடான கருத்துகளை வெளியிட்டதே இதற்குக் காரணமெனவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி, பிரதமரை சந்தித்த சிதம்பரம் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டதனால் ஏற்படப் போகும் விளைவுகள் தொடர்பாக எச்சரித்ததாகவும் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்ததன் மூலம் விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளிலிருந்து ஒதுங்குவதற்கு இலங்கையரசு காரணமாகிவிட்டதாக குற்றம் சாட்டியதாகவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன் தமிழ்ச் செல்வன் படுகொலை தொடர்பாக அரச ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் தொடர்பாக தமது விசனத்தை சிதம்பரம் வெளியிட்டாராம்.

இதேவேளை இலங்கை முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு தினத்தில் உரையாற்றிய சிதம்பரம் இலங்கை உள்நாட்டுப் போரில் அரசோ விடுதலைப் புலிகளோ வெற்றிபெற முடியாதென சுட்டிக்காட்டியதுடன் தமிழர்களுக்கு உச்சமட்ட அதிகாரத்துடனான தீர்வை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

சிதம்பரத்தின் இதே போதனையைத் தான் உகண்டா தலைநகர் கம்பாலாவில் வைத்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் வழங்கினார்.

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போதே பிரணாப் முகர்ஜி ரோஹித போகொல்லாகமவுடன் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக உரையாடியதுடன் சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

தமிழர்களுக்கான உச்சபட்ச அதிகார தீர்வுத்திட்டத்தை இலங்கையரசு உடனடியாக முன்வைக்க வேண்டுமென வலியுறுத்திய பிரணாப் முகர்ஜி இதன் மூலமே தீவிரவாதப் போக்கற்ற மிதவாத தமிழர்களை நாட்டின் பிரதான நீரோட்டத்தில் இலங்கை அரசால் தக்க வைத்துக் கொள்ள முடியுமெனவும் கூறியுள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுகளை இலங்கை அரசு எச்சந்தர்ப்பத்திலும் கைவிட்டுவிக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகம இவ்வருட இறுதிக்குள் அதிகார பரவலாக்கல் தீர்வுத் திட்டத்தை தமது அரசாங்கம் முன்வைக்குமெனவும் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகள், ஆதரவுடன் இத்தீர்வுத்திட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடியதாகவிருக்கும் என்றும் குறிப்பிட்ட ரோஹித போகொல்லாகம இவ்வருட இறுதிக்குள் எப்படியும் தீர்வுத் திட்டத்தை முன்வைப்போமென மீண்டும் உறுதியளித்தார்.

பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.க., ஜே.வி.பி.யின் ஆதரவின்றியே வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் அரசு வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டிய பிரணாப் முகர்ஜி, அரசாங்கம் பலமாக இருப்பதால் எவ்வித தயக்கமுமின்றி அதிகார பகிர்வு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியுமெனக் கூறியுள்ளார். இது தொடர்பில் இந்தியாவின் அதீத அக்கறையையும் வெளிப்படுத்தினார்.

என்னதான் இந்திய அரசும் உயர் மட்டத் தலைவர்களும் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கையை வற்புறுத்தினாலும் எதுவும் நடக்கப் போவதில்லையென்பது இந்தியாவுக்கு நன்கு தெரிந்தவிடயம். ஆனாலும் இலங்கைப் பிரச்சினையில் தனக்கு அக்கறை இருக்கின்றதென்பதைக் காட்டிக் கொள்வதற்காக அதிகாரப் பகிர்வை இடையிடையே வலியுறுத்துவதும் அதற்கு இலங்கையரசும் தலையாட்டுவதும் வாடிக்கையான விடயம்.

இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மகிந்த ராஜபக்‌ஷ 3 தடவைகளுக்கு மேல் டில்லி வந்து சென்றுள்ளார். அதுதவிர இந்திய உயர்மட்டத் தலைவர்கள் பலர் இலங்கைக்குப் பலதடவை சென்றுள்ளனர். இந்த விஜயங்களின் போதெல்லாம் அதிகாரப் பகிர்வு குறித்து இந்திய தலைவர்கள் வலியுறுத்துவதும் இந்த மாதம், அடுத்த மாதம் என இலங்கைத் தலைவர்கள் பூச்சுற்றுவதும் அரசியல் நிகழ்ச்சி நிரலாகிவிட்டது.

இராணுவத் தீர்வில் இலங்கையரசு நம்பிக்கை கொண்டுள்ளதை நன்கு தெரிந்து கொண்டும் இலங்கையரசு போரை நடத்துவதற்கு தேவையான இராணுவ உதவிகளை வழங்கிக் கொண்டும் தமிழருக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா வலியுறுத்துவதன் உள் நோக்கத்தைத் தெரிந்து கொண்டதாலேயே இலங்கையரசும் அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வென்ற சொல்லை வைத்துக் கொண்டு இந்தியாவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி வருகிறது.

இலங்கையரசின் நோக்கம் தெரிந்து கொண்டும் இந்திய அரசு அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டத்தை வலியுறுத்துவது இந்தியாவிலுள்ள ஆறரைக்கோடி தமிழரை ஏமாற்றுவதற்கும் கூட்டணி ஆட்சியின் ஆயுட் காலத்தை பாதுகாக்கவுமே தவிர ஈழத்தமிழர் மீதோ, இலங்கை இனப் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலோ அக்கறையினாலோ அல்ல என்பது இலங்கையரசுக்கு நன்கு தெரியும்.

இலங்கை இனப்பிரச்சினையை தீர்த்து வைக்க இந்தியா உண்மையில் விரும்புமாகவிருந்தால் தான் வழங்கி வரும் சகல இராணுவ உதவிகளையும் நிறுத்திவிட்டு, தமிழருக்கான அதிகாரப் பகிர்வு முடிவுத் திட்டத்தை உடனடியாக முன்வைக்க வேண்டுமென சிறு அழுத்தம் கொடுத்தாலே போதும் இலங்கையரசு அடிபணிந்துவிடும். ஆனால் இந்தியரசு அதனை விரும்பவில்லை.

தற்போதைய அரசியல் கள நிலைவரத்தின்படி பார்த்தால் இலங்கையரசு தான் இந்தியாவை மிரட்டித் தனது காரியத்தைச் சாதித்து வருகிறது. பாகிஸ்தான், சீனாவைக் காட்டி மிரட்டும் இலங்கையரசு கேட்கும் உதவிகளையெல்லாம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இந்திய அரசு உள்ளது. அழுத்தம் கொடுக்க வேண்டிய இந்திய அரசு கெஞ்சுகிறது. கெஞ்ச வேண்டிய இலங்கையரசு மிரட்டுகிறது.

இவ்வாறான நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டுமென்பதில் இந்திய அரசு உண்மையான அக்கறையுடன் செயற்படுவதாக யாராவது நினைத்தால் அவர்களை விட முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

http://www.thinakkural.com/news/2007/11/25...s_page40993.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய அரசியல் கள நிலைவரத்தின்படி பார்த்தால் இலங்கையரசு தான் இந்தியாவை மிரட்டித் தனது காரியத்தைச் சாதித்து வருகிறது. பாகிஸ்தான், சீனாவைக் காட்டி மிரட்டும் இலங்கையரசு கேட்கும் உதவிகளையெல்லாம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இந்திய அரசு உள்ளது. அழுத்தம் கொடுக்க வேண்டிய இந்திய அரசு கெஞ்சுகிறது. கெஞ்ச வேண்டிய இலங்கையரசு மிரட்டுகிறது.

ரொம்ப தான் லொல்லு கட்டுரை ஆசிரியருக்கு. சிங்கள அரசை சாட்டி கொண்டு ஈழ தமிழரை இந்தியாவும் அதன் வால்பிடிகளும் ஏமாற்றிக் கொண்டு வருகினம்.

இந்திய வல்லரசு நினைத்தால் ஒரு நிமிடத்தில் சிங்கள அரசை கட்டுப்படுத்தி அடக்கலாம்.

தமிழீழம் உருவானால் தனது தென்பகுதியை இழக்க வேண்டி வரும் என்பதே இந்திய மத்திய அரசுக்கு பயம்

காரணம் தமிழீழம் ஆசியாவில் ஒரு இஸ்ரேல் போல உருவாகும் என்பதும் இந்திய மத்திய அரசுக்கு தெரியும்.

ஈழத் தமிழர் என்ன இழிச்ச வாயரா இந்த கட்டுரையில் வரும் சீனா பாகிஸ்தான் என்பதை நம்ப????

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவைத் தலையில் வைத்துக் கொண்டாடும் கூட்டத்தினருக்கு நல்ல பதில் இக்கட்டுரையில் அடங்கியிருக்கிறது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு நீண்ட காலத்தில் இந்தியாவுக்கே ஆப்பாகும் என்பது மட்டும் உறுதி. தமிழீழம் உருவாகி பல மாறு பட்ட தலைமைகளூடாகப் பயணிக்கும் போது, இந்தியாவுக்கு ஆப்படிக்கும் சக்திகள் கையோங்க வாய்ப்புண்டு. இந்தியா தனது சுய நலன்களுக்காக உருவாக்கி விட்ட வங்கதேசமே இன்று இந்தியாவை எதிரி நாடாகப் பார்க்கிறது என்றால் இந்தியத் துரோகத்துக்குள்ளான தமிழீழம் எப்படி மாறும் என்று சொல்லத் தேவையில்லை.

அரசியல் என்பது அவசரமொழிகளை கொட்டுவதல்ல! இராஜதந்திரம் என்பதும் மேடைபோட்டு செய்யும் கட்சிப் பிரச்சாரம் அல்ல! புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய அரசியல் கள நிலைவரத்தின்படி பார்த்தால் இலங்கையரசு தான் இந்தியாவை மிரட்டித் தனது காரியத்தைச் சாதித்து வருகிறது. பாகிஸ்தான், சீனாவைக் காட்டி மிரட்டும் இலங்கையரசு கேட்கும் உதவிகளையெல்லாம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இந்திய அரசு உள்ளது. அழுத்தம் கொடுக்க வேண்டிய இந்திய அரசு கெஞ்சுகிறது. கெஞ்ச வேண்டிய இலங்கையரசு மிரட்டுகிறது.

ரொம்ப தான் லொல்லு கட்டுரை ஆசிரியருக்கு. சிங்கள அரசை சாட்டி கொண்டு ஈழ தமிழரை இந்தியாவும் அதன் வால்பிடிகளும் ஏமாற்றிக் கொண்டு வருகினம்.

இந்திய வல்லரசு நினைத்தால் ஒரு நிமிடத்தில் சிங்கள அரசை கட்டுப்படுத்தி அடக்கலாம்.

தமிழீழம் உருவானால் தனது தென்பகுதியை இழக்க வேண்டி வரும் என்பதே இந்திய மத்திய அரசுக்கு பயம்

காரணம் தமிழீழம் ஆசியாவில் ஒரு இஸ்ரேல் போல உருவாகும் என்பதும் இந்திய மத்திய அரசுக்கு தெரியும்.

ஈழத் தமிழர் என்ன இழிச்ச வாயரா இந்த கட்டுரையில் வரும் சீனா பாகிஸ்தான் என்பதை நம்ப????

தம்பி ராசா எங்கையடா இருக்குறாய்???உன்ரை கால்லை விழுந்து கும்புடோணும் போலை கிடக்கு இது தானடா அண்டு தொடக்கம் இருக்கிற பிரச்சனை.பாகிஸ்தானும் சீனாக்காரனும் அமெரிக்க ஐயாமாரும் உந்த பிரச்சனையை வைச்சுத்தானே கனவிசயத்தை சாதிக்கிறாங்கள் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு வரும் எல்லோரும் இந்தியா (பாகிஸ்தான் சீனா அமெரிக்கா) போன்ற நாடுகள் சீறிலங்காவில் நுழையும் என்று பயப்படுகிறது போல எழுதுகினம். அதனால் தான் ஈழத்தமிழருக்கு உதவ பின் வாங்கி நிற்கின்றது என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்படுகின்றது.

நிற்சயமாக அது காரணம் இல்லை. இந்தியாவின் தென்பகுதி தான் இங்குள்ள பிரச்சனை. உதாரணமாக தமிழ் நாடு அங்கே இல்லாவிட்டால் இந்தியா நாம் கேட்காமலேயே தமிழீழத்தை உருவாக்கி தந்து இருக்கும் தற்போது. (பாகிஸ்தானை பிரித்தது போல).

ஆசியாவின் இஸ்ரேல் யாரால் யாருக்கு சாதகமாய் உருவாக்கப்பட போகின்றது?? இதில் யார் முந்த போகின்றனர்?

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் என்பது அவசரமொழிகளை கொட்டுவதல்ல! இராஜதந்திரம் என்பதும் மேடைபோட்டு செய்யும் கட்சிப் பிரச்சாரம் அல்ல! புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள்

எத்தனை வருடமாக இந்த பழமொழியை சொல்லிக்கொண்டு இருப்பது இன்னும்.

30 வருடங்கள் கடந்துவிட்டன.......... அப்போ இன்னும் ஒரு 30 வருடம். பொறுப்போமா????

Edited by tamillinux

"இலங்கையரசின் நோக்கம் தெரிந்து கொண்டும் இந்திய அரசு அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டத்தை வலியுறுத்துவது இந்தியாவிலுள்ள ஆறரைக்கோடி தமிழரை ஏமாற்றுவதற்கும் கூட்டணி ஆட்சியின் ஆயுட் காலத்தை பாதுகாக்கவுமே தவிர ஈழத்தமிழர் மீதோஇ இலங்கை இனப் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலோ அக்கறையினாலோ அல்ல என்பது இலங்கையரசுக்கு நன்கு தெரியும். "

இதூதன் உண்மை. ஆளாளுக்கு ஏமாற்றுபவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். இவர்களின் ஏமாற்றுத் தனங்கள் என்றோ தமிழர் தரப்பால் விளங்கிக் கொள்ளப்பட்டுவிட்டது. அதனால் ஏமாற்றமடையும் நிலையில் தமிழர் தரப்பு இல்லை. இதுவே வல்லாதிக்க சக்திகளுக்கு இன்றுள்ள பெரிய பிரச்சனை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் சொல்லப்போனால் மகிந்தவுக்கு தெரியும் இந்த ஆடுபுலியாட்டம். அந்த துணிவில் தான் ஆடுகின்றார்.

இந்தியா இந்தியா என்று ஈழத்தமிழர் துதி பாடினால் கடைசியில் கிடைப்பது யானை உண்ட விளாங்காயும் கிடைக்குமா என்று சந்தேகம் தான்.

ஈழத்தமிழரின் இளம் சந்ததியினர் இந்தியா என்ற மாயையிலிருந்து வெளியே வந்தால் தான் எமக்கு விடிவு என்ற புதிய பாதை கிடைக்கும்.

(நான் சுந்தரத்தின் புதிய பாதை பத்திரிகையை கூறிப்பிடவில்லை) just kidding ok :unsure::wub:

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிச்தானும், சீனாவும் உதவிக்கு வந்துவிடும் என்பதால்தான் இந்தியா உதவுவதாக கூறும் பூச்சாண்டியைக்க் கேற்பதற்கு இங்கொரு கூட்டமே இருக்குப் போல! இதெல்லாம் இந்தியா தனது பெரிய மூக்கை நுழைப்பதற்குப் பாவிக்கும் சாட்டுக்கள். இந்தியா ஆயுதம் குடுக்குது எண்டு இலங்கை பாகிச்தான்காரனும், சீனக்காரனும் குடுக்கும் ஆயுதங்களை வேண்டாம் என்றா விட்டுவிட்டான். இல்லையே, எல்லாரிடமும்தானே வாங்குகிறான். பிறகு ஏன் இந்த இந்தியப் புலுடா? இன்னொரு உதாரணம், ஈரானிடம் இலங்கை போய்விடக்கூடாது எண்டு அமெரிக்கா ஆயுதம் குடுக்குமாம், அதையும் வாங்கிக் கொண்டு இலங்கை ஈரான் போகுமாம், அதற்கு பின் சில மனித உரிமைகள் குற்றச்சாடுகளுக்குப் பிறகு பழயபடி அமெரிக்கா ஆயுதம் குடுக்குமாம்! நல்ல பகிடி!

இந்தியாவின் அழுகிய ராஜதந்திரத்தை வக்காலத்து வாங்குவதற்கு இங்கு நிறையப்பேர் திரியினம் போலக் கிடக்கு. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் தீர்வுத் திட்டத்தை முன்வையுங்கள் என்று கூறிவிட்டு பின் கதவால் இந்தியா ஆயுதம் குடுக்கும், அதை இங்குள்ள சிலர் படித்து விட்டு, "என்னென்டாலும் இந்தியா சும்மா விடாது, தீர்வுத்திட்டத்தை வைக்கச்சொல்லி கேட்டிருக்குது, இனி எங்கட பிரச்சனையெல்லாம் தீர்ந்திரும்" எண்டு ஆறுதல் பெருமூச்சு விடுவினம். இவர்களை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை!

அட நம்ம இந்தியாவாச்சே! இந்தியா இல்லாமல் எப்படி ?

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் !

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையும் யதார்த்தமும்! இதை விளங்கிக் கொள்ளாதவரை இந்தியாவின் திரு விளையாடல்களை நம்பி ஏமாறும் ஒரு கூட்டத்தை காப்பாற்றமுடியாது!

இந்தியா-தடைக்கல்!

அரசியல் என்பது அவசரமொழிகளை கொட்டுவதல்ல! இராஜதந்திரம் என்பதும் மேடைபோட்டு செய்யும் கட்சிப் பிரச்சாரம் அல்ல! புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள்

எத்தனை வருடமாக இந்த பழமொழியை சொல்லிக்கொண்டு இருப்பது இன்னும்.

30 வருடங்கள் கடந்துவிட்டன.......... அப்போ இன்னும் ஒரு 30 வருடம். பொறுப்போமா????

ம்! மேற்சொன்ன கருத்துக்கள் ஒன்றும் பழமொழி அல்ல! அரசவியலின் (Statecraft) சில அடிப்படை விதிகளின் சாராம்சம். வல்லரசு, சிற்றரசு என்ற பேதம் இல்லாமல் எல்லா அரசியல் உருவாக்கங்களும் (Political Entities) பாவிக்கும் அரசவியலின் (Statecraft) விதிகள் தான் இவை

என்னை பொறுத்தவரையில், ஈழவிடுதலை போராட்டத்தின் இராஜதந்திர, இராணுவ மற்றும் பாதுகாப்பு வியூகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வேலையை விடுதலை புலிகளிடம் விட்டு விடுவதே நல்லது.

யாழ்களம், இவை சம்பந்தமான முக்கிய விடயங்களை (Sensitive issues) எல்லாம் கலந்துரையாடல் என்ற பெயரில் போட்டு உடைத்து விடுவதற்கான இடமுமல்ல.

இங்கே சில கள நண்பர்கள் விடுதலை புலிகளின் முன்னணி அரசியல் பகுப்பாய்வாளர்களை விடவும், புலனாய்வாளர்களை விடவும் திறன் படைத்தவர்களாக இருக்க கூடும். அப்படி தங்கள் கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் ஏற்ப விடுதலை புலிகளிகளின் வியூகங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என நினைக்கும் களத்தின் அரசியல்/இராணூவ மேதைகள், யாழ்களம் போன்ற திறந்தவெளி கருத்துக்களங்களில் தங்கள் இராஜதந்திர/இராணூவ உத்திகளை வெளியிடாமல், மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கிடைக்கப்பெறும் வேறு தொடர்பு சாதனங்கள் மூலமாகவோ விடுதலைபுலிகளுக்கே தெரிவித்து விடுவது சிறப்பாக இருக்கும்.

Edited by vettri-vel

இலங்கையின் வேதனை அதன் அருகே இந்தியா, எமது வேதனை இந்தியாவும் இலங்கையும்... அதவிட வேதனை உலக மையத்தி நாமிருப்பது.

ஒறு பக்கம் அரக்கன் மறுபக்கம் கிறுக்கன்... யார் எது என்று நீகளே க்ண்டுபிடியுங்கோ.... கஸ்டமாயிருந்தா மாற்றி போட்டுப்பார்க்கலாம் பெரிய வித்தியாசம் இராது.

ஒறு பக்கம் அரக்கன் மறுபக்கம் கிறுக்கன்... யார் எது என்று நீகளே க்ண்டுபிடியுங்கோ.... கஸ்டமாயிருந்தா மாற்றி போட்டுப்பார்க்கலாம் பெரிய வித்தியாசம் இராது.

:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சில கள நண்பர்கள் விடுதலை புலிகளின் முன்னணி அரசியல் பகுப்பாய்வாளர்களை விடவும், புலனாய்வாளர்களை விடவும் திறன் படைத்தவர்களாக இருக்க கூடும். அப்படி தங்கள் கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் ஏற்ப விடுதலை புலிகளிகளின் வியூகங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என நினைக்கும் களத்தின் அரசியல்/இராணூவ மேதைகள், யாழ்களம் போன்ற திறந்தவெளி கருத்துக்களங்களில் தங்கள் இராஜதந்திர/இராணூவ உத்திகளை வெளியிடாமல், மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கிடைக்கப்பெறும் வேறு தொடர்பு சாதனங்கள் மூலமாகவோ விடுதலைபுலிகளுக்கே தெரிவித்து விடுவது சிறப்பாக இருக்கும்.

சரியான அறிவுரை..

அக்கறையுள்ளவர்கள் சத்தம் போடாமல் தங்கள் கடமைகளைச் செய்துகொள்ளுகிறார்கள்.

எனினும் தங்கள் சிந்தனைகளில் உள்ள குறைபாடுகளை உணர்ந்தவர்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்.. யாழ் களம் போன்ற பொதுவான இடங்களில் எழுதித் தள்ளிவிட்டு தம் கடமை முடிந்தது என்று மறுவேலை (தங்களின் பிழைப்பைத்தான்) பார்க்கப் போய்விடுவார்கள்.

அட பழையபடி தொடங்கிட்டாங்கய்யா தொடங்கிட்டாங்க!

ஏதோ இங்க எழுதப்படுகிறதை பார்த்துத்தான் இலங்கையும் இந்தியாவும் புலிகளின் வியூகங்களை அறிஞ்சு கொள்ளுற மாதிரி!

அறிவாளிகளுக்கிடையில் சரியான போட்டி!

பெரும்பாலும் தமிழீழம் மலர்வதால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதகமான விடையங்கள் தொடர்பாக அலசப்படுகிறதே அன்றி அதற்கு எதிர்மாறாக இந்தியாவும் சர்வதேச சமூகமும் சேர்ந்து விடுதலை புலிகளை முற்றாக ஒடுக்கி தமிழ் மக்களுக்கு ஒர் அரைகுறை தீர்வை வழங்கிய பின்பு இந்தியாவிற்கு ஏற்படும் பாதகமான விடையங்கள் பற்றி ஆராயப்படுவது இல்லை. இப்பொழுதே மமதையுடனும் செருக்குடனும் செயற்படும் சிரிலன்கா ஒரு பிரச்சனையும் இல்லாத போது எப்படி நடந்துகொள்ளும் என்பதை சொல்லத்தேவை இல்லை. எனவே எப்போதும் சிரிலன்கா தன்னில் தங்கி இருக்கும் ஒரு நிலைமை சிரிலன்காவில் இருப்பதையே இந்தியா விரும்புகிறது. முன்பு அப்படி ஒரு நிலமை இருந்ததாலேயே இந்தியா இலங்கை போராளிகளுக்கு ஆயுத உதவி செய்து இலங்கை அரசை அடிபணிய வைத்தது. இப்போது உள்ள உலகச்சூழழில் இவ்வாறு மீண்டும் செய்வது இயலாது. எனவே இப்போது இருக்கும் நிலமைதொடர்வதையே இந்தியா விரும்புகிறது. அதனாலேய இந்தியா இனப்பிரச்சனைக்கு தீர்வு கானப்பட வேண்டும் என பேச்சளவில் சொல்லிகொன்டு அதற்கு எந்த அளுத்தத்தையோ நடவடிக்கையோ எடுக்கமல் இனப்பிரச்சனை இளுபட்டு தொடர்ந்து செல்வதற்கான சகல நடவடிக்கைகளையும் செய்துகொன்டு இருக்கிறது. அப்பவும் சரி இப்பவும் சரி அதற்கு தமிழ் மக்களை பற்றி எள்ளளவும் கவலை இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vettri-vel ,

இங்கு எழுதப்படும் விடயங்கள் மிக மிக சாதாரணமானவை. எதுவித பாரதுரமான இராணுவ சம்பந்தமான விடயங்கள் எழுதப்படுவதாக தெரியவில்லை.(என் தனிப்பட்ட கருத்து).

மேலும் அனேகமான கருத்துக்கள் அரசியல் சம்மந்தமானதாகவே எழுதப்படுகின்றது யாழ்களத்தில்.

இது சாதாரணமாக பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவரிற்கே விளங்கும்.

ஆனால் சில புலம் பெயர் நாடுகளில் 50யை தாண்டியவர்களுக்கு இது எல்லாம் பெரிய அரசியல் தந்திரம் போல தென்படுவது இயற்கை.

காரணம் அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி.

சில தனிப்பட்ட இணையத்தளங்கள் இயங்குகின்றன அங்கு வெளியிடப்படும் செய்திகளை பார்த்தால் தலையே வெடித்துவிடும். அதனோடு ஒப்பிடும் போது யாழ்களம் 0.

அப்படி எதாவது பாரதுரமாக இருந்தால் குறிப்பிட்ட காட்டுங்கள். தவறுகளை சுட்டி காட்டுவதில் தவறில்லை.

அப்போ தான் நாமும் திருந்தலாம்.

Edited by tamillinux

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.