Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியத் தமிழர் போராட்டமும் ஈழத் தமிழர் போராட்டமும் ஒன்றா?

Featured Replies

மலேசியாவில் ஏறக்குறைய 150 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தங்களை மலேசிய அரசு ஒதுக்குவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

மலேசியாவில் தமிழர்கள் மட்டும் ஒதுக்கப்படவில்லை. முஸ்லீம்கள் அல்லாத அனைவருமே ஒதுக்கப்பட்டுத்தான் வருகின்றனர். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 60 வீதமானவர்கள் இஸ்லாமிய மக்களாக இருக்கின்றனர்.

இஸ்லாம் மதத்தை அரசுமதமாக மலேசியா பிரகடனப்படுத்தியிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை வழங்கக்கூடியவாறு ஏற்பாடுகளை மலேசிய அரசு செய்துள்ளது.

மலேசிய அரசு இயற்றியுள்ள பல சட்டங்கள் மனித உரிமையை மீறுகின்ற சட்டங்களாக இருக்கின்றன. மலேய இனத்தவர் அனைவரும் பிறப்பால் இஸ்லாமியர்கள் என்ற சட்டத்தை மலேசிய அரசு கொண்டிருக்கிறது. இதன்படி இவர்கள் மதம் மாறுவது மிகக் கடினமானது. வேறு மதத்தை சார்ந்த ஒருவரை திருமணம் செய்வதும் நடைமுறைச் சாத்தியமற்றது.

அப்படி ஒருவர் வேறு மதத்தவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால், இஸ்லாம் மதத்திலிருந்து அவர் விலக வேண்டும். இரண்டு வருடங்கள் இஸ்லாம் மத மார்க்கத்தை பின்பற்றாத வாழ வேண்டும். இதை அதற்கான அலுவலகம் உறுதி செய்ய வேண்டும். பின்பு இஸ்லாமிய மத நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, மதத்திலிருந்து விலகியதற்கான தண்டனையைப் பெற்று முற்றுமுழுதாக இஸ்லாம் மதத்திலிருந்து விடுபட்டு, வேறு மதத்தவரை திருமணம் செய்யலாம். இவ்வளவையும் மலேசியாவில் செய்வது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது.

அண்மையில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் ஒரு இந்துவை திருமணம் செய்து விட்டார். மலேசியச் சட்டத்தின்படி ஒரு முஸ்லீம் வேற்று மதத்தவரை திருமணம் செய்ய முடியாது என்பதால், அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். அவருடைய திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. சட்ட விரோத திருமணம் செய்ததற்காக அந்தப் பெண் நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். கடைசியில் அவர் இந்தியாவில் உள்ள அவருடைய பெற்றொரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.

மலேசியாவின் நிலை இதுதான். இஸ்லாமியர் அல்லாத மக்கள் அங்கே பல விதங்களில் ஒதுக்கப்படுகின்றனர். பௌத்தர்களாக இருக்கின்ற சீனர்கள் மலேசியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுவதால், அவர்களை மலேசிய அரசின் நடவடிக்கைகள் பெருமளவில் பாதிப்பதில்லை.

அதிகம் பாதிக்கப்படுவது கிறிஸ்தவர்கள், இந்துக்கள், மலேசியப் பழங்குடியினர் போன்றவர்கள்தான். இவர்கள் இடையிடையே மேற்கொள்ளும் மலேசிய அரசிற்கு எதிரான போராட்டங்கள் வன்முறை மூலம் அடக்கப்படுகின்றன.

அண்மையில் இந்தியர்கள் மேற்கொண்ட போராட்டம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தடையை மீறி பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஒன்று கூடியதும், அவர்களை காவல்துறையினர் வன்முறையை கையாண்டு கலைத்ததும் கவனத்தை ஈர்ப்பதற்கான காரணங்கள் ஆகின.

இந்தப் போராட்டம் தமிழர்கள் மத்தியிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மலேசியாவில் வாழும் இந்தியர்களில் 85 வீதமானவர்கள் தமிழர்கள் என்பதுதான். இந்தத் தமிழர்கள் தமிழ்நாட்டுடனும் தமிழீழத்துடனும் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பதால், இவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இருந்தும், ஈழத் தமிழர்களிடம் இருந்தும் ஒலிக்கின்றன. இன்னும் ஒரு சிலர் ஒருபடி மேலே போய், ஈழத் தமிழர்களின் போராட்டத்தோடு மலேசியத் தமிழர்களின் போராட்டத்தை ஒப்பிட்டு பேசியும் எழுதியும் வருகின்றார்கள்.

தேமுதிக கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் "மலேசியத் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாது விட்டால், அங்கும் இலங்கைப் பிரச்சனை போன்று உருவாகிவிடும்" என்று கூறியுள்ளார். வேறு சிலரும் இதே போன்ற கருத்தை கூறியுள்ளனர். மலேசியாவில் ஈழத்தில் உருவானதைப் போன்று ஆயுதப் போராட்டம் உருவாகலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "சுடரொளி" நாளிதழ் செய்தி வரைகிறது.

மலேசியத் தமிழர்களின் போராட்டத்தை ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தோடு ஒப்பிடுவது என்பது, தமிழீழப் போராட்டத்தை மலினப்படுத்திவிடும் என்பதை இவர்கள் இலகுவாக மறந்து விடுகிறார்கள்.

மலேசியாவில் தமிழர்கள் பூர்வீக காலத்தில் இருந்த வாழ்கின்ற ஒரு இனம் அல்ல. சோழர் காலத்தில் மலேசியா தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தாலும், மலேசியாவில் தமிழர்கள் குடியேறியது ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்புதான். இலங்கையின் மலையகத்திலும், தென்னாபிரிக்காவிலும் பிரித்தானிய ஆட்சியாளர்களால் கூலித் தொழிலாளர்களாக தமிழர்கள் குடியேற்றப்பட்டது போன்று மலேசியாவிலும் நடந்தது.

மலேசியாவில் தமிழர்கள் ஒதுக்கப்படுவதன் காரணம் அவர்கள் தமிழர்கள் என்பது அல்ல. அவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர்கள் என்பதே காரணம். மலேசியாவில் தமிழ் மொழிக்கு மற்றைய மொழிகளோடு சமமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் போராடுபவர்கள் தமிழர்கள் என்பதாலும், அவர்களுடைய போராட்டம் நியாயம் என்பதாலும், அவர்களை ஆதரிக்க வேண்டிய கடமை அனைத்து தமிழர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்களின் போராட்டத்தை ஈழத் தமிழர்களின் போராட்டத்தோடு ஒப்பிடும் அறிவுகெட்டத்தனமான வேலையை யாரும் செய்ய வேண்டாம்.

"இலங்கையிலே உள்ள தமிழர்கள் அனைவரும் வந்தேறு குடிகள், அவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள், தமிழர்கள் இலங்கையின் பூர்விகக் குடிகள் அல்ல, அவர்களுக்கு இங்கே நாடு கேட்பதற்கு உரிமை இல்லை" என்று சிங்களவர்கள் செய்கின்ற பிரச்சாரத்திற்கே இந்த ஒப்பீடு வலுச் சேர்க்கும்.

ஒரு நாட்டிற்குள் சிறுபான்மையினர் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் சம அந்தஸ்து கோரி நடத்தும் போராட்டமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய அபாயத்தை இந்த ஒப்பீடு கொடுக்கின்றது. காரணம் அவ்வாறான ஒரு போராட்டமாகத்தான் மலேசியத் தமிழர்களின் போராட்டம் ஊடகங்களால் வெளிப்படுத்தப்படுகிறது.

அத்துடன் இதிலே இன்னும் ஒரு பிரச்சனையும் இருக்கிறது. ஈழத் தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கின்ற காங்கிரஸ் கட்சியும், பிஜேபியும் மலேசியத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. இதன் மூலம் தாம் தமிழர் விரோதக் கட்சிகள் அல்ல என்று தோற்றத்தை உருவாக்கலாம் என்று இவை கணக்குப்போடுகின்றன. இந்த நேரத்தில் ஈழத் தமிழரினதும் மலேசியத் தமிழரினதும் போராட்டங்கள் ஒன்றுதான் என்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதானது, தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இக் கட்சிகளின் உண்மை முகத்தை காட்ட முடியாத நிலையைக் கொடுக்கும்

இவை எல்லாவற்றையும் விட விடுதலைப் புலிகள் குறித்த தேவையற்ற சந்தேகங்களையும் மலேசிய அரசுக்கு விதைக்கின்ற வேலையை இந்த ஒப்பீடு செய்துவிடும் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

ஆகவே ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தையும், மதரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒரே தராசில் வைப்பதில் உள்ள அபத்தத்தை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மலேசியாவில் மொழி, இனம் என்ற பாகுபாடு இல்லாமல் இஸ்லாமியர் அல்லாத அனைவரும் ஒதுக்கப்படுகின்றனர். பிரித்தானிய காலனித்துவ அரசால் கூலித் தொழிலாளர்களாக மலேசியாவில் குடியேற்றப்பட்ட தமிழர்களை இந்த மதரீதியான ஒடுக்குமுறை கடுமையாக பாதிக்கின்றது. இதற்கு எதிராக அவர்கள் போராட வேண்டும். அந்தப் போராட்டத்திற்கு அனைத்து தமிழர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

மலேசிய அரசு செய்வது மனித உரிமை மீறல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை நோக்கிச் வெகுவேகமாகச் செல்லும் மலேசிய அரசு மற்றைய மதத்தவர்களுக்கு சம உரிமைகளை வழங்குமா என்பது ஒரு பெரும் கேள்விக்குறிதான். ஆயினும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடத்தான் வேண்டும்.

தமிழர்களின் வழிநடத்தலில் நடைபெறும் இந்தப் போராட்டம் வெற்றிபெற்று மலேசியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், இந்துக்கள், சீக்கியர்கள், பழங்குடியினர் என்று அனைவரும் சமஉரிமையோடு வாழும் நிலை வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியத் தமிழ் மக்களும் இலங்கையில் மலைய மக்களுக்கும் கிட்டத்தட்ட சம காலத்தில் பிரித்தானிய காலனித்துவவாதிகளால் அடிமைகளாக தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள்.

மலேசியாவில் உள்ள தமிழ் மக்கள் இரண்டாம் நிலைப் பிரஜைகளாக நடத்தப்படுவதாக பல காலமாகவே ஆதங்கம் அம்மக்களின் மனங்களில் நிறைந்துள்ளது. பல காரணிகள் அதன் பின்னணியில் இருக்கின்றன.

அரைகுறையாக மத அடிப்படையில் மட்டும் இவ்விவகாரத்தை நோக்குவது சரியான விமர்சனப் பார்வையன்று.

ஈழத்தமிழர்களின் போராட்ட பரிமானம் வேறுபட்டிருப்பினும் அடிப்படை உரிமைகள் என்று வரும் போது மலையகத் தமிழ் மக்கள் உட்பட உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு அவை பாதுகாக்கப்பட வழிசெய்யப்படவும் இல்லை. அவை மறுக்கப்படும் போது தட்டிக்கேட்க வலுவான தமிழர் தேசமும் உலகில் இல்லை.

தமிழீழ மக்களின் போராட்டமென்பது வெறுமனவே தமிழீழ மக்களிற்கான போராட்டம் அல்ல. மலைய மக்களின் அடிப்படை வாழ்வுரிமைக்காகவும் அது இணைந்தே செயற்பட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் மலேசியத் தமிழ் மக்களுக்கான தமிழீழ தமிழ் மக்களின் ஆதரவென்பது அவசியமானது. தமிழகம் கூட அரைகுறை உரிமைகளோடுதான் உலகில் இந்திய தேசியதுக்குள் அடைப்பட்டுக்கிடக்கிறது. அதனால் அதற்கு உலகில் உரிமைகள் இழந்து தவிக்கும் தமிழ்மக்களுக்காக சரிவரக் குரல் கூட கொடுக்கவோ அல்லது பங்களிக்கவோ முடியாத நிலை. எதற்கும் இந்திய ஹிந்திய மத்திய அரசிடம் சலுகைகளுக்காக அதன் கருணைக்காகக் காத்துக் கிடந்தே சீரழிய வேண்டியநிலை..! இந்நிலையில் உலகில் அடிப்படை உரிமைகள் இழந்து தவிக்கும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவும் உறுதுணையாக நிற்கவும் தமிழீழ மக்கள் அவர்கள் எங்கிருப்பினும் முன் வருதல் அவசியம். அது தமிழீழத்துக்கான ஆதரவை உலகத்தமிழினத்தில் உணர்த்துவதாகவும் அமையும்...! உலகத்தமிழினத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவர்கள் ஒன்றிணைந்த சக்தியாக நின்று குரல் எழுப்புவது பலமிக்கதாகவும் அமையும்..!

Edited by nedukkalapoovan

நேற்றய பிபிசியில் மலேசிய தமிழர்கள் குறித்த போராட்டங்கள் பற்றிய செய்தியில். போராட்டத்தில் நியாயம் இருக்கின்றது நியாயம் இல்லை என்று இருவகையாக கருத்துக்கள் சொல்லப்பட்டது.

http://www.bbc.co.uk/tamil/highlights/stor...laytamils.shtml

மதஉரிமை கல்விவேலைவாய்பு போன்ற எல்லாவற்றுக்குமாக போராடுவதாக போராட்ட தரப்பினர் சொல்கின்றனர்.

மலேசிய அரசின் இஸ்லாமிய அடிப்படைவாதப்போக்கு மத உரிமைகளில் நியாயமாக நடந்துகொள்ளுமா என்பது சந்தேகமே அதே நேரம் 17760 ஆக இருந்த இந்துக்கோயில்கள் 23 000 ஆக உயர்ந்துள்ளதும் உலகத்தில் மிக அதிகாமான இந்துக்கோயில்கள் அங்கே இருப்பதாக தான் நினைப்பதாக சாமுவேல் தெரிவித்தார்.

பதினெட்டு லட்சம் இந்தியர்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏனைய மதத்தவர்கள் எத்தனை லட்சம் என்று தெரியாது. அண்ணளவாக அவர்களை விடுத்தாலும் 6 பேருக்கு ஒரு கோயில் மலேசியாவில் இருக்கின்றது?

இவ்வாறான எண்ணிக்கை பெருக்கம் அரசுக்கு நிர்வாக சிக்கல்களை கொண்டுவரும் என்றே கருதலாம்.

இவ்வாறான கோயில்கள் பெருக்கத்திற்கு என்ன காரணம்? வலைப்பதிவு ஒன்றில் மலேசியாவில் சாதியப்பிரச்சனை அதிகம் தோன்றுகின்றது என்றும் படித்தேன். அவ்வாறாயின் அவரவர் கோயில்கள் வைத்திருக்க வேண்டும் என்ற தேவை ஏற்படும். இதுவும் ஒரு பிரச்சனையே.

வெளிப்படையான பார்வையில் மதப்பிரச்சனையே முன்நிறுத்தப்படுகின்றது. கல்வி பொருளாதார பிரச்சனைகளை மதப்பிரச்சனை என்னும் சிக்கலாக்கிவிட வாய்புள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதும் பிரச்சனை அதே நேரம் இந்தியர்களுக்குள் இருக்கும் முரண்பாடுகள் மற்றும் கோயில் பெருக்கமும் பிரச்சனைக்குரியதே.

மலேசியத்தமிழர் பிரச்சனைகளை தமிழக கட்சிகளோ அல்லது இந்திய அரசோ ஆக்கபூர்வமாக குரல் கொடுக்கும் என்று ஒருபோதும் நம்ப முடியாது. அந்த பிரச்சனையை வைத்து அரசியல் நடத்துவார்கள். ஈழத்தின் இனஅழிப்பை வைத்த அரசியல் நடத்துவது மட்டுமல்லாது தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கொன்று குவிப்பதற்கு கூட உரிய நடவடிக்கை எடுக்க வக்கிலாத வல்லரசு தான் இந்தியா.

மலேசிய தமிழர்கள் தமது உரிமைக்காக போராடுவதற்கு தாங்கள் தாங்கள் சொந்த காலில் நிற்பது அவசியம். இந்தியாவின் மதவாதகட்சிகள் மலேசிய இந்தியார்கள் பிரச்சனையை இந்துக்கள் பிரச்சனை என்று அரசியல் நடத்துவது உண்மை. அது மிகவும் ஆபத்தாகவே அமையும். இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது நன்கு தெரிந்த ஒன்று. அரசியல் நடத்தும் கட்சிகளால் அதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. காரணம் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் இந்து அடிப்படை வாதத்திற்கும் பெரிய வித்தியாசம் என்று சொல்வதற்கில்லை. மலேசிய அரசு புராதன இந்துக்கோயில்களுக்கு மானியம் வழங்குகின்றது. இந்திய மதவாத கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் நடத்துகின்றது என்னும் சொல்லப்போனால் பாபர் மசூதியையே இடித்தது. கோத்ரா ரெயில் எரிப்பு குஜராத் முஸ்லீம் படுகொலைகள் என்னும் ஏாரளமான இருதரப்பு வன்முறையும் யாவரும் அறிந்ததே.

மலேசியத்தமிழர்கள் பிரச்சனை ஒரு மதப்பிரச்சனையாக அணுகப்படும் பட்சத்தில் அது எதிர்காலத்தில் மிக மோசமாக மலேசியத்தமிழர்கள் பாதிக்கப்பட வழிவகுக்கும். அவ்வாறு பாதிக்கப்படும் போது இந்திய அரசியல் கட்சிகள் எதுவும் செய்யாது என்பது வெளிப்படையான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் சொல்வதில் உண்மையிருக்கிறது. கலந்து கொண்டவர்கள் தமிழர்களாக இருந்தாலும் இந்தியர்கள் மற்றும் சிறுபான்மை மதத்தினர் என்ற ரீதியில் தான் மலேசியத் தமிழர்கள் தம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். மேலும் இந்த மாதிரியான அடக்குமுறை முஸ்லிம் அடிப்படை வாதம் இருக்கும் நாடுகளில் எல்லாம் காணப்படுவது தான். மலேசியா முஸ்லிம் அடிப்படைவாத நாடாக மஹதிர் முஹமட்டின் ஆட்சியின் கீழ் மெல்ல மெல்ல உருவானது. மத்தியகிழக்கு நாடுகளை விடக் கல்வியறிவு தொழில்நுட்பம் என்பவையே அதிகம், மற்றபடி சிறுபான்மை உரிமைகள் நசுக்கப் படும் விடயத்தில் மத்தியகிழக்கு முஸ்லிம் நாடுகளுக்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல மலேசியா.அடக்கப் படும் மக்களுக்கான ஆதரவாக மட்டுமே நாம் பேச வேண்டும் என்பது என் கருத்து. இந்தியா எம் தாய் நாடு என்று உணர்ச்சி வசப்பட்டு அடிக்கடி கூறிக்கொள்ளும் நம்மவர்கள் சிலரால் நாம் மிக அண்மைய காலத்தில் சிங்கள தேசமொன்றிற்கு வந்து சேர்ந்தோர் எனும் கருத்து எம் வரலாறு அறியாத மேற்கு நாட்டவரிடம் இப்போதே ஏற்பட்டிருக்கிறது.சிங்களவர்

Edited by Justin

அண்மையில் சந்தித்த ஒரு மலேசிய அன்பர் கூற்றின்படி இப்போழுதெல்லாம் மலேசியாவில் தமிழர்கள் தனித்து ஒரு தொழிலை ஆரம்பிக்க முடியாது. அதில் கட்டாயமாக ஒரு மலாய்காரரையும் சேர்த்து அவருக்கு 51வீதம் பங்கு கொடுக்கவேண்டும். தமிழை பள்ளிக்கூடங்களில் இருந்து எடுத்துவிட்டார்கள் என்பதும் கோயில்களை நெடுஞ்சாலைகளுக்கு வழியில் இருக்கிறது என்று கூறி இடிப்பதும்பிரச்சனைக்கு காரணங்களாகிவிட்டன.

Edited by aathipan

[quote name='சபேசன்' post='364600' date='Nov 30 2007, 09:34 AM'][/quote]

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பதால், இவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இருந்தும், ஈழத் தமிழர்களிடம் இருந்தும் ஒலிக்கின்றன. இன்னும் ஒரு சிலர் ஒருபடி மேலே போய், ஈழத் தமிழர்களின் போராட்டத்தோடு மலேசியத் தமிழர்களின் போராட்டத்தை ஒப்பிட்டு பேசியும் எழுதியும் வருகின்றார்கள்.


தேமுதிக கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் "மலேசியத் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாது விட்டால், அங்கும் இலங்கைப் பிரச்சனை போன்று உருவாகிவிடும்" என்று கூறியுள்ளார். வேறு சிலரும் இதே போன்ற கருத்தை கூறியுள்ளனர். மலேசியாவில் ஈழத்தில் உருவானதைப் போன்று ஆயுதப் போராட்டம் உருவாகலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "சுடரொளி" நாளிதழ் செய்தி வரைகிறது.[code]

போராட்டத்தை முன்னெடுத்து செல்பவர்களில் ஒருவர் தற்பொழுது காந்துp படத்தை வைத்துகொண்டு ஊர்வலம் செய்கின்றோம் அடக்குமுறை தொடர்ந்தால் அடுத்தமுறை பிரபாகரனின் படத்தை வைத்துக்கொண்டு ஊர்வலம் செய்வோம் என்று கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன

Edited by vvsiva

காலத்திற்கு ஏற்ற முக்கியமான கட்டுரை. நன்றி சபேசன்.

"நம்பிக்கையூட்டும் மலேசியத் தமிழர்களின் பேரெழுச்சி"

http://www.puthinam.com/full.php?22CpXcc2n...7E2e2EMR3a37CNe

புதினத்தின் இந்த தலையங்கத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

மலேசியாவில் வியாபார முயற்சிகளில் குறித்த வீதம் மலேயினரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற விதி 1990 களிலேயே கேள்விப்பட்டிருக்கிறன்.

மலேசியாவில் சிறிலங்காவைப் போலவே மலேய் இனத்தவருக்கு புமீபுத்திரா அதாவது புமியின் புதிரர்கள் என்னும் அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்பு என எல்லாத் துறைகளிலும் சலுகைகள் செய்யப்படுள்ளன.சீனர்கள் தங்கள் வியாபாரதாலும் தங்களுக்கு இருக்கிற சிங்கபூர் கொங்கொங்க் போன்ற நாடுகளின் உதவியாலும் வளமாக இருகிறார்கள்.ஆனால் தமிழ் நாட்டில் இருந்து கூலித் தொழிலாழர்களாக அழிதுc cஎல்லப்பட்டவர்கள் சிறிலங்காவைப் போலவே ரப்பர் கோப்பி மற்ரும் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படனர்.இவர்களைப்பிர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பதிவு

மலேசியாத் தமிழர்களின் போராட்டத்தை ஈழத்தமிழர்களின் போராட்டத்தோடு ஒப்பிட முடியாதுதான். இன அழிப்பையும் இராணுவ அடக்குமுறையையும் சந்தித்தவர்கள் ஈழத்தமிழர்கள். அதே நேரம் மலேசியத் தமிழர்களின் போராட்டத்திற்கு நாம் தார்மீக ஆதரவை அளிக்க வேண்டும்.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் மோதல்கள் முதலே நடைபெற்று வந்தாலும் ஈழப் போராட்டம் மலையகமக்களின் வாக்குரிமை பறிக்கப் பட்டதிலிருந்துதான் தொடங்கியது என்பதை நாங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அடிப்படையில் இரு போராட்டங்களையும் ஒப்பிட்டவர்கள்; அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாத்தர பிரஜைகளாக நடாத்தப்படுவதையே ஒப்பிட்டுள்ளார்கள். ஒரு பிரஜை தான் வாழும் நாட்டில் பிறப்பாலோ அல்லது பதிவின் மூலமாகவோ பிரஜா உரிமை பெற்றிருந்தாலும் அவர் அந்த நாட்டின் ஏனைய பிரஜைக்குரிய பலன்களை அனுபவிக்க உரிமையுள்ளவர் தான். குறிப்பிட்ட இந்தியத் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்தால் தொழில் வாய்ப்புகளுக்காக அழைத்து வரப்பட்டு குடி அமர்த்தப்பட்டிருந்தாலும், அவர்கள் மலேசியக் குடியுரிமை பெற்ற பின் பிறந்த அவர்களது வாரிசுகள் பிறப்பால் மலேசியர்கள் தான். அவர்கள் போராட்டத்தை எங்கள் போராட்டத்துடன் ஒப்பிட்டு கொச்சைப்படுத்துவதாக எண்ணுபவர்கள் அடிப்படையில் இரு போராட்டங்களிலுமுள்ள ஒற்றுமையை மறுதலித்து அவர்களை கொச்சைப்படுத்தலாமா?? இப்படியான மலிவான அணுகுமுறைகளால்த்தான் இன்றும் தமிழன் பிரிந்துபட்டு வாழ்கின்றான். என்று உலகத்தமிழர்களெல்லாம் ஒன்றுபட்டு நாம் எல்லோரும் ஓரினம் என்று எண்ணுகின்றோமோ அன்று தான் நமக்கு விடிவு வரும்.

Edited by Vasampu

  • தொடங்கியவர்

மலேசியத் தமிழர்களுக்கு ஈழத் தமிழர்களின் ஆதரவு நிச்சயம் உண்டு. எங்களின் போராட்டத்திற்கு உலகெங்கும் உள்ள தமிழர்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றோம். அதே போன்று மற்றயை நாடுகளில் போராடும் தமிழர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.

உரிமை கோரிப் போராடும் அனைத்துப் போராட்டங்களுக்கும் சில ஒற்றுமைகள் என்றும் இருக்கத்தான் செய்யும். ஆனால் "ஈழப் போராட்டம் போன்று மலேசியாவிலும் நடக்கும்" என்று பலர் பேசி வருவது மிக மிக மிகைப்படுத்தப்பட்ட ஒன்று.

மலேசியத் தமிழரின் போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்த இந்தக் கோசம் பாவிக்கப்பட்டாலும், இதற்கு பாதகமான விளைவுகளும் உண்டு என்பது என்னுடைய கருத்து. அதையே சொல்லியிருக்கிறேன்.

மற்றையபடி மலேசியத் தமிழரின் போராட்டம் நியாயமானது. தேவையானது. எமது ஆதரவு என்றும் அவர்களுக்கு உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.