Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எச்சரிக்கை மடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

x63140278526732505.jpg

எச்சரிக்கை மடல்

மனதால்த் தன்னும் தாய்மை வலியுணராப் பெண்டிரும்,

தாவி அன்னை திருமடியில் தவழ்ந்து மகிழா ஆடவரும்

தயவு செய்து மேற்கொண்டு,

இக்கவியின் இரத்த ஓடையை

இரணமாக்கி இரசிக்க உள் நுழையாதீர்!

ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில் தேசத்து ஆன்மா துடிக்கிறது.

நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில் தங்கிவிட முடியாது.

உந்தும் வலு உறுதியாக வேண்டும்.

ஒவ்வொரு மணித்துளியும் வலியின் வேகம்

வரப்புடைத்து பெருகி எல்லாப் பாகத்திலும் விரிகிறது.

பனிக்குடம் உடைந்தபின், முக்குதற்கு நீண்ட நேரம் எடுத்தால்

எல்லாமே உறைந்து போகும்., உலர்ந்தும் போகும்.

வலியின்றி வளர்ச்சி இல்லை.

வலுவின்றி வலியைச் சந்தித்தால் பலவீனம் பாயில் கிடத்தும்.

வலுவினூடே வலியைச் சந்தித்தால் நலிவு நாணி ஓடும்.

இருந்து வியாக்கியானம் பேசும் மணித்துளிகள்

வலி வளர்க்கும் வேறொன்றும் செய்யாது.

பந்தமாய் ஆவதற்குப் பலவீனம் வாசலோரம் முண்டியடித்து நிற்கிறது.

அதை ஊளையிட்டு ஓடவைத்தல் என்பது உந்தும் வேகத்தில் இருக்கிறது.

உயிர்ப்பின் வலியும், உயிர்ப்பின் ஒலியும்

பிறப்பின் வாசலிலே பின்னி நலிகிறது.

வலியை ஒழிப்பதும், ஒலியை வளர்ப்பதும்

எம் இருப்பின் இயல்பில் இறைத்துக் கிடக்கிறது.

உந்தூ!

இல்லாவிட்டால் மூச்சுத் திணறும்

இத்தனை காலம் எத்தனை இழந்து வளர்த்த திரு இது.

முந்நூறு நாள் வளர்ந்த முத்தல்ல,

60 ஆண்டுகளாய் அவதியுறும் வலியில்

தமிழினம் சுமந்த கருவில் வளர்ந்த தெய்வசிசு.

தெய்வ சிசுவின் பிறப்பையே மறுக்கும்

பிசாசுத்தனங்கள் புளுகுக்கதைகள் அல்ல - அவற்றை

நிசத்தில் நாமும் தரிசிக்கும் நிகழ்காலம் இது.

உலகும் வலுவை நோக்கியே தலைவணங்கும் என்பது

வரலாறுகள் உணர்த்தும் பாடம்.

எம் வலிக்கு மருந்து எம்கையில்,

மண்டியிட்டாலும் மாற்றார் எமக்குதவார்.

களமும், புலமும் கைகோர்த்தே உந்தும் பெருமூச்சை உருவாக்கவேண்டும்

வலுவும், வளமும் இணைவதில் வரலாற்றின் கதவுகள் திறக்கும்.

எடுக்கும் கைகள் கொடுக்கப் பணிய,

உந்தும் வலு உச்சமடையும்.

பிறப்பின் வாசல் விரிவடைய தெய்வத்திரு கண் விழிக்கும்.

இதற்குப் பின்னும் காலந்தாழ்த்தல்

என்னையும், உன்னையும் இழிவாக்கும்.

புரிவாயா?.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட கவிதையைப் படிக்கேக்க சம்பந்தமில்லாமல் கேட்கின்றன் எண்டு நினைக்காதையுங்கோ. முந்திக் கேட்கவேணும் எண்டு நினைச்ச ஒண்டு.

சபேசன் பெண்கள் எந்தச் சோகம் எண்டாலும், பாய்ந்தடிச்சுக் கவிதை எழுதிக் கொட்டித் தீர்ப்பினம் எண்டு ஒரு கட்டுரை வரைஞ்சவர் ஞாபகமி;ருக்கோ. அதுக்கு நீங்களும் சப்போட் பண்ணிப் பெண்களை விமர்சித்தனிங்கள் எண்டு நினைவு. அது கழிஞ்சு கொஞ்சநாளாலா பாலா அண்ணா மறைஞ்சிட்டார். தமிழ்நாதத்தில் பார்த்தால் முதலாவது கவிதை உங்கட தான் வருது.

பெண்கள் பற்றிச் சொன்னதை நிருபிக்கத் தான், அப்படி எழுதினீங்களோ? அல்லது தானாக வந்திட்டுதோ?

இதை அப்பவே கேட்டிருப்பன். ஆனால் பாலா அண்ணாவின் சோகத்தில் சனம் இருக்கேக்க இதைப் பிரச்சனையாக்கக் கூடாது எண்டு விட்டுட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ... மதனராசா காத்திருந்து கல்லெறிகிறீர்களோ?

தேசத்தின் குரல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மறைவதற்கு இரு வாரங்கள் முன்பு சபேசன் அவர்கள் கூற்றிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததை நான் மறுக்கவில்லை. அவ்விவாதத்திற்குப் பின்னர் ஏற்பட்ட தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாதத்திற்கு கவிதை வரைந்ததையும் நான் மறுக்கவில்லை. தேசத்தின் குரலை எனது வழிகாட்டியாக நினைக்கிறேன். அவருக்குக் கவிதை வரைந்தது என்பது என்னுடைய ஒப்பாரி அல்ல... ஒரு வழிகாட்டியின் இழப்பால் ஏற்பட்ட கோபத்தில் காலனை நோக்கிக் கனன்ற கவிதை என்பதை நீங்கள் உணரவில்லையா? ஒவ்வொரு இழப்பிற்கும் ஒப்பாரி பாடுதல்தான் முடிவென்றால் ஈழத்தமிழர் நாளாந்தம் அல்ல, ஒவ்வொரு நாழிகைக்கும் ஒப்பாரிப்பாடலையே எழுதிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

உங்கள் கவனத்திற்கும் கருத்திற்கும் தேசத்தின் குரல் பாலா அண்ணனுக்காக நான் எழுதிய கவிதையையும் இங்கு இணைக்கிறேன். உங்களுக்கு ஒப்பாரிப்பாடல் தெரியாது என்றால் அதையும் ஒரு முறை உங்களுக்காக எழுதிக்காட்ட முயல்கிறேன்.

காத்தாடி இவரல்ல

காலா! நீ கற்றறிவாய்!!

ஈர்விழிகள் நீர் கசிய

இதயப்பூக் கனக்கிறது.

மார்தட்டி நிமிர்ந்த இனம்

மௌனித்துக் கிடக்கிறது.

வேர் வெம்பி விம்மும் ஒலி

காற்றேறி அலைகிறது.

சீர் ஓங்கும் தமிழீழச்

சின்னமதும் உறைகிறது.

தீர்வெழுதி உனைத்தின்றோன் - எம்

திசை தெரியாதென்றானா? - ஷெல்த்

தூர் தெறிக்கும் எம்தேசத்

துயர் புரியாதென்றானா?

நீறிட்ட நெருப்பெரியும் - எம்

போர் முற்றம் வந்தானா?

பீறிட்டுப் பாயும் தமிழ்

குருதி நிறம் கண்டானா?

ஏன் எடுக்க வந்தான்? - இவன்

எல்லைகள் மீறி....

வான் உயரும் மாவீரம்

வதைத்த உணர்வாலா?

சாண் எட்டு சக்தி காணச்

சிந்தை வெந்ததாலா?

தூண் சாய்த்து தமிழ் வெல்லத்

துடித்து எழுந்ததாலா?

கூன் வென்று தாயீழம்

முடி கொள்வதாலா?

ஏன் எடுக்க வந்தான்? - இவன்

எல்லைகள் மீறி....

கூத்தாடி அனுப்பி வைத்தான்!

அட..! எமதர்மா! கூட்டிப்போ!!

காத்தாடி இவரல்ல...

காலா! நீ கற்றறிவாய்!!

வாய்த்தாயே.. நீ முற்றும் அவர்

வாய் சாற்றும் வழி நித்தம்.- இனிப்

பூத்தூவித் தொழுவாயே! - உன்

புலன் வெல்லும் இவர் சித்தம்.

ஈரெட்டுப் பதினாறு

இளமை இவர் தத்துவம்.

கூர் வாளின் முனை கிழிக்கும்

மதி இவரின் வித்துவம்.

பார் விட்டுப் பறிக்கும் - உன்

பாசம் வெறும் பத்திரம்.

யாரென்று உணர் மனதில்

பாலா பசுஞ் சித்திரம்.

கூத்தாடி அனுப்பி வைத்தான்!

அட..! எமதர்மா! கூட்டிப்போ!!

காத்தாடி இவரல்ல...

காலா! நீ கற்றறிவாய்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கவிதையைப் படிக்கேக்க சம்பந்தமில்லாமல் கேட்கின்றன் எண்டு நினைக்காதையுங்கோ. முந்திக் கேட்கவேணும் எண்டு நினைச்ச ஒண்டு.

சபேசன் பெண்கள் எந்தச் சோகம் எண்டாலும், பாய்ந்தடிச்சுக் கவிதை எழுதிக் கொட்டித் தீர்ப்பினம் எண்டு ஒரு கட்டுரை வரைஞ்சவர் ஞாபகமி;ருக்கோ. அதுக்கு நீங்களும் சப்போட் பண்ணிப் பெண்களை விமர்சித்தனிங்கள் எண்டு நினைவு. அது கழிஞ்சு கொஞ்சநாளாலா பாலா அண்ணா மறைஞ்சிட்டார். தமிழ்நாதத்தில் பார்த்தால் முதலாவது கவிதை உங்கட தான் வருது.

மதனராசா...

நாங்கள் சோகத்தைக் கண்டு அவற்றுக்கு அடிமையாகிக் கிடப்பதை அறவே வெறுக்கிறேன். சோகம் என்பது தோல்வி மனப்பான்மையை உருவாக்கி இயலாமையை எமக்குள் புகுத்தும். சோகத்தை உணரும் போது கோபப்பட கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எழுச்சி தோன்றும்.

எங்களுக்கு அதாவது ஈழத்தமிழினத்திற்கு குறிப்பாக புலம் பெயர் தமிழினம் சோகப்படுவதைக் காட்டிலும் எழுச்சி அடைவதிலேயே தமிழீழத்தின் மகிழ்ச்சி தங்கி இருக்கிறது. ஆதலால் ஒப்பாரிகளை நிறுத்துங்கள். ஊடகங்களும் ஒப்பாரிகளுக்கான தளங்களை அமைக்காது மக்கள் எழுச்சிக்கான களங்களை ஊக்கப்படுத்துங்கள். மதனராசா நீங்கள் என்ன நினைத்து இங்கு உங்கள் கருத்தை வைத்தீர்களோ எனக்குத் தெரியாது. இருப்பினும் உங்கள் சீண்டலுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களைச் சீண்டணும் எண்டு எழுதவில்லை. சில விடயங்களை ஊருக்கு அறிவுரை செய்யக்க நாங்களும் அப்படி நடக்க முடியுமா எண்டு சிந்திக்கவேணும் என்பதைத் தான் சொல்லுறன். நீங்கள் பாலா அண்ணாவிற்கு எப்படிக் கவிதை எழுதியது தொடர்பாக நியாயப்படுத்தலைச் செய்கின்றியளோ, அதே செய்கையைத் தான் மற்றய பெண்களும் செய்தவை, செய்கினம்.

சிலவேளை சபேசனுக்கு கவிதை எழுதுவது வராமல் இருக்கலாம். அந்தக் கோபத்தில் அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம் கண்டிளோ.

பாலா அண்ணாவிற்கு கவிதை எழுதினதை நான் குறை சொல்லல்ல. அதைப் பாராட்டுறன். ஆனா சபேசனின் தலைப்பில நீங்கள் வாதாடினது தொடர்பாகத் தான் என்ர வருத்தம்.

சிவப்பால போட்டது ஒப்பாரியில்லாமல் இருக்கலாம். ஆனால் இது....

ஈர்விழிகள் நீர் கசிய

இதயப்பூக் கனக்கிறது.

மார்தட்டி நிமிர்ந்த இனம்

மௌனித்துக் கிடக்கிறது.

வேர் வெம்பி விம்மும் ஒலி

காற்றேறி அலைகிறது.

சீர் ஓங்கும் தமிழீழச்

சின்னமதும் உறைகிறது.

முதலில் மற்றயப் பெண்களுக்கும் இதே உணர்வோடு தான், எழுச்சி பெறவேணும் எண்டு எண்ணத்தில் தான் கவிதையை வடிக்கின்றவையைப் புரிஞ்சு கொள்ளுங்கோ. புலத்தில் இருந்து செய்யக் கூடியது அதுவாகத் தான் இருக்கலாம். அது உங்களுக்கும், சபேசனுக்கு;ம கூடப் பொருந்தும். என்ன நான் சொல்லுறது சரியோ!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'ஈர்விழிகள் நீர் கசிய

இதயப்பூக் கனக்கிறது.

மார்தட்டி நிமிர்ந்த இனம்

மௌனித்துக் கிடக்கிறது.

வேர் வெம்பி விம்மும் ஒலி

காற்றேறி அலைகிறது.

சீர் ஓங்கும் தமிழீழச்

சின்னமதும் உறைகிறது."

இதன் பொருளை நீங்கள் எப்படி புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று எனக்குப் புரிய வைக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

களமும், புலமும் கைகோர்த்தே உந்தும் பெருமூச்சை உருவாக்கவேண்டும்

வலுவும், வளமும் இணைவதில் வரலாற்றின் கதவுகள் திறக்கும்.

எடுக்கும் கைகள் கொடுக்கப் பணிய,

உந்தும் வலு உச்சமடையும்.

பிறப்பின் வாசல் விரிவடைய தெய்வத்திரு கண் விழிக்கும்.

பலமான மூச்சு வேண்டும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

காலந்தாழ்த்தி stillbirth ஆகவிடாமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு தமிழனனினதும் தலையாய கடமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களைச் சீண்டணும் எண்டு எழுதவில்லை. சில விடயங்களை ஊருக்கு அறிவுரை செய்யக்க நாங்களும் அப்படி நடக்க முடியுமா எண்டு சிந்திக்கவேணும் என்பதைத் தான் சொல்லுறன். நீங்கள் பாலா அண்ணாவிற்கு எப்படிக் கவிதை எழுதியது தொடர்பாக நியாயப்படுத்தலைச் செய்கின்றியளோ, அதே செய்கையைத் தான் மற்றய பெண்களும் செய்தவை, செய்கினம்.

சிலவேளை சபேசனுக்கு கவிதை எழுதுவது வராமல் இருக்கலாம். அந்தக் கோபத்தில் அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம் கண்டிளோ.

பாலா அண்ணாவிற்கு கவிதை எழுதினதை நான் குறை சொல்லல்ல. அதைப் பாராட்டுறன். ஆனா சபேசனின் தலைப்பில நீங்கள் வாதாடினது தொடர்பாகத் தான் என்ர வருத்தம்.

சிவப்பால போட்டது ஒப்பாரியில்லாமல் இருக்கலாம். ஆனால் இது....

முதலில் மற்றயப் பெண்களுக்கும் இதே உணர்வோடு தான், எழுச்சி பெறவேணும் எண்டு எண்ணத்தில் தான் கவிதையை வடிக்கின்றவையைப் புரிஞ்சு கொள்ளுங்கோ. புலத்தில் இருந்து செய்யக் கூடியது அதுவாகத் தான் இருக்கலாம். அது உங்களுக்கும், சபேசனுக்கு;ம கூடப் பொருந்தும். என்ன நான் சொல்லுறது சரியோ!

நான் பெண்களுக்கு எதிரியல்ல...என்பதைச் பெண்சமூகம் உணரும்.

யதார்த்தங்களை சொல்ல எத்தனிக்கும் போதுதான் பல சந்தர்ப்பங்களில் நான் சாதாரண பெண்களுக்கு எதிரியாக தோற்றபாடு அடைகிறேன். கடந்த கால உரையாடல்களில் ஊடகங்களில் பெண்கள் வந்து கவிதைகளை எழுதிக் குவிக்கிறார்கள் என்பதைப்பற்றிப் பேசியிருந்தோம். வரவேற்கிறோம்;. மகிழ்ச்சியும் அடைகிறோம். அவர்களின் கருத்துக்கள் எல்லாம் வானலைகளில் உலா வருவதுடன் மரணித்து விடுகின்றன. செயற்பாட்டிற்கான உருவம் பெறுவதில்லை. கூடுதலாக அவர்கள் உணர்ந்து எழுதுவது ஒப்பாரிகளை மாத்திரமே..... அதிலிருந்து மாறுபட்டு அவர்கள் எழுதிய எழுத்துக்கள் ஏட்டுச் சுரைக்காய்களாகத் தான் தென்படுகிறது. இவற்றை இல்லை என்று நீங்கள் வாதாடினால் அத்தகையவர்களை இக்களத்தில் அடையாளங்காட்டுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலமான மூச்சு வேண்டும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

காலந்தாழ்த்தி stillbirth ஆகவிடாமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு தமிழனனினதும் தலையாய கடமை.

நாங்கள் எங்களின் முழுமையான ஆதரவை நல்கப் பிந்தும் ஒவ்வொரு கணமும் வலியை வளர்க்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது அவா.

உங்களின் கருத்திற்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ... மதனராசா காத்திருந்து கல்லெறிகிறீர்களோ?

காத்திருந்து கவ்லெறிவதாக என்ன சொல்ல வாறியள். ஏதோ உங்களில் பழைய பகையால் தான் எழுதுவது மாதிரியல்லலோ அர்த்தம் திரிக்கப்படுது.

நான் பெண்களுக்கு எதிரியல்ல...என்பதைச் பெண்சமூகம் உணரும்.

யதார்த்தங்களை சொல்ல எத்தனிக்கும் போதுதான் பல சந்தர்ப்பங்களில் நான் சாதாரண பெண்களுக்கு எதிரியாக தோற்றபாடு அடைகிறேன். கடந்த கால உரையாடல்களில் ஊடகங்களில் பெண்கள் வந்து கவிதைகளை எழுதிக் குவிக்கிறார்கள் என்பதைப்பற்றிப் பேசியிருந்தோம். வரவேற்கிறோம்;. மகிழ்ச்சியும் அடைகிறோம். அவர்களின் கருத்துக்கள் எல்லாம் வானலைகளில் உலா வருவதுடன் மரணித்து விடுகின்றன. செயற்பாட்டிற்கான உருவம் பெறுவதில்லை. கூடுதலாக அவர்கள் உணர்ந்து எழுதுவது ஒப்பாரிகளை மாத்திரமே..... அதிலிருந்து மாறுபட்டு அவர்கள் எழுதிய எழுத்துக்கள் ஏட்டுச் சுரைக்காய்களாகத் தான் தென்படுகிறது. இவற்றை இல்லை என்று நீங்கள் வாதாடினால் அத்தகையவர்களை இக்களத்தில் அடையாளங்காட்டுங்கள்.
அந்தப் பெண்களை மட்டுமல்ல உங்களைக் கூட என்னால காட்ட முடியாது. அறிமுகமே இல்லாமல் எப்படிச் செய்கிறது. சந்தர்ப்பம் பார்த்துச் சவால் விடுங்கோவன். மற்றய பெண்களை விட நீங்கள் வித்தியாசம், புதுமை எண்டால் என்ன சொல்லவாறிகள்? காதலில் புதுமையைத் தவிர வேற ஏதும் இருந்தால் சொல்லுங்கோ.

பொருள் கேட்டியள். ஆனால் அந்தக் கவிதை தொடர்பாக உங்களைப் பாராட்டுறன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். நீங்கள் அவரில்லாத சோகத்தைக் கொட்டுறியள். இதைத் தான் மற்றய பெண்களும் செய்கினம். உங்களில் இருந்து அவைகள் எப்படி வேறுபடுகினம்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காத்திருந்து கவ்லெறிவதாக என்ன சொல்ல வாறியள்.

காத்திருந்து கல்லெறிவதாக நான் கூறியது, உங்கள் கருத்தைக் கூறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படக் கூடிய காலத்தை...

ஆனால் 'காத்திருந்து கல்லெறிந்தது" என்பதற்கு உங்கள் பார்வை கோணலாகப் போவது என்குற்றம் அல்ல.

ஏதோ உங்களில் பழைய பகையால் தான் எழுதுவது மாதிரியல்லலோ அர்த்தம் திரிக்கப்படுது.

என்னுடன் உங்களுக்கு ஏதேனும் பகை உள்ளதா? என்வரைக்கும் உங்களுடன் எனக்குப் பகை ஏதும் இல்லை. உங்கள் கருத்திற்கு நான் பதில் கருத்து வரைகிறேன் அவ்வளவுதான்.

அந்தப் பெண்களை மட்டுமல்ல உங்களைக் கூட என்னால காட்ட முடியாது. அறிமுகமே இல்லாமல் எப்படிச் செய்கிறது. சந்தர்ப்பம் பார்த்துச் சவால் விடுங்கோவன். மற்றய பெண்களை விட நீங்கள் வித்தியாசம், புதுமை எண்டால் என்ன சொல்லவாறிகள்? காதலில் புதுமையைத் தவிர வேற ஏதும் இருந்தால் சொல்லுங்கோ.

சந்தர்ப்பம் பார்த்து சவால் விடுவது எனக்குத் தெரியாது. அதற்கு நான் சந்தர்ப்பவாதியுமல்ல.

வித்தியாசம், புதுமை என்று எதைக் கேட்கிறீர்கள் என்று எனது சிற்றறிவிற்கு விளக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட எத்தனிக்கும் வித்தியாசம், புதுமை என்பது எத்தகைய வரையரைக்குள் இருக்கிறது என்று தெளிவாக உணர்ந்தால் மாத்திரமே உங்கள் கேள்விக்குப் பதில் அளிக்க முடியம்.

காதலில் புதுமையைத் தவிர வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ என்று கேட்கிறீர்கள். இக்கேள்வியையும் நீங்கள் எந்நோக்கில் கேட்கிறீர்கள் என்பதை கொஞ்சம் தெளிவாகக் கூறினால் நான் மட்டுமல்ல இக்களத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களும் பதில் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

பொருள் கேட்டியள். ஆனால் அந்தக் கவிதை தொடர்பாக உங்களைப் பாராட்டுறன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். நீங்கள் அவரில்லாத சோகத்தைக் கொட்டுறியள். இதைத் தான் மற்றய பெண்களும் செய்கினம். உங்களில் இருந்து அவைகள் எப்படி வேறுபடுகினம்??

முதலில் பெண்களையும் உயர்திணையில் அழைக்கப் பழகுங்க. ஆக மந்தைகளை அழைப்பது போன்று அவை, வேறுபடுகினம் என்று கிறுக்கும் உங்கள் வார்த்தைப் பிரயோகங்களை நிறுத்துங்க.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் பெண்களையும் உயர்திணையில் அழைக்கப் பழகுங்க. ஆக மந்தைகளை அழைப்பது போன்று அவை, வேறுபடுகினம் என்று கிறுக்கும் உங்கள் வார்த்தைப் பிரயோகங்களை நிறுத்துங்க.

எனக்குப் பெண்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கெணும் எண்டு தெரியும். கிளாஸ் வேண்டாம்.

பேச்சுத் தமிழில எழுNதுக்க கதைக்கின்ற மாதிரித் தான் சொன்னேன். மற்றும்படி பெண்களைக் குறைப்பதற்காக அல்ல. அவை, இவை, உவை எண்டு பாவிக்கின்றது பொதுவாகப் பலர் பாலுக்குப் பேச்சுத் தமிழில பாவிப்பினம்.

வணக்கம் சகாரா

காலத்தின் தேவை உணர்ந்து வரைந்த கவிதை அருமை. .

அத்துடன் கீழே எழுதிய இந்த வரிகள் உண்மையுடன் பல உத்தரவுகளையும் பிறப்பிக்கின்றது.

ஒவ்வொரு இழப்பிற்கும் ஒப்பாரி பாடுதல்தான் முடிவென்றால் ஈழத்தமிழர் நாளாந்தம் அல்ல, ஒவ்வொரு நாழிகைக்கும் ஒப்பாரிப்பாடலையே எழுதிக் கொண்டிருக்க வேண்டியதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாரா, கவிதை அருமை. மன்னிக்க வேண்டும், மதனராசா பெண்களை "அவை" என்று விளித்தது கீழ்தரமாகப் தெரியவில்லை. ஆனால் நீங்கள் மதனராசாவை "அது" என்று (ஒரு உதாரணத்துக்குத் தான்) அழைத்தது கீழ்தரமாகத் தெரிகிறது. தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்தல் நன்று என நினைத்ததால் எழுதினேன்.மன்னிக்கவும்.

பரணீ உங்கள் கருத்திற்கு நன்றிகள்.

எங்களின் பணிக்காக காலங்கள் காத்துக் கிடப்பதில்லை. நாங்கள்தான் காலத்தோடு பயணிக்க வேண்டும். இந்த இணையத்தளங்கூட ஒரு வலுவான பயணிப்பிற்கு ஆயத்தப்படவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாரா, கவிதை அருமை. மன்னிக்க வேண்டும், மதனராசா பெண்களை "அவை" என்று விளித்தது கீழ்தரமாகப் தெரியவில்லை. ஆனால் நீங்கள் மதனராசாவை "அது" என்று (ஒரு உதாரணத்துக்குத் தான்) அழைத்தது கீழ்தரமாகத் தெரிகிறது. தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்தல் நன்று என நினைத்ததால் எழுதினேன்.மன்னிக்கவும்.

வணக்கம் அய்யா ஜஸ்ரின்,

அது என்ன உங்கள் கருத்து இப்படித் தடம் புரள்கிறது. பெண்களை அவை என்று அழைப்பது உங்களுக்குக் கீழ்த்தரமாகப் படவில்லை, நான் மதனராசாவை அது என்று உதாரணப்படுத்தியது கீழ்த்தரமாக இருக்கிறதா?

அது என்பதன் பன்மைதானே அவை அப்படி இருக்க, அது எப்படி அது கீழ்த்தரமாகவும், அவை என்பது உறுத்தல் இல்லாமலும் உங்களுக்குத் தெரிகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாரா, மீண்டும் மன்னிக்க வேண்டும். அருமையான கவிதையெழுதியிருக்கும் உங்களுக்கு பேச்சு வழக்குத் தமிழில் "அவை" என்பதற்கும் எழுத்துத் தமிழில் "அவை" என்பதற்கும் வித்தியாசம் தெரியாதிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.பேச்சுத் தமிழில் "அவை" என்பது அவர்கள் என்பதற்குச் சமானமாகப் பயன்படும் ஒரு பதம். நீங்கள் பேச்சுத் தமிழில் "அது, இது" என்றால் அது தான் ஒருவரைப் கேவலமாக விளிப்பதைக் குறிக்கும். இத்துடன் நான் இதை விட்டு விடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரசவ வலியில் துடிக்கும் தாய்க்கு அனுசரணையாக இருக்கும்படிதான் அழைத்தார் சகாரா. விதண்டாவாதங்களை விடுத்து விடுதலைக்கு கரம் சேர்ப்போம். நன்றி.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உணர்விற்கு நன்றிகள் காவலூர்க் கண்மணி.

ஜஸ்ரின் உங்கள் கருத்தை அறியாதவள் அல்ல, கருத்தாடுவதில் எச்சங்கடமும் கொள்ளத் தேவையில்லை. புரிந்துணர்விருந்தால் கருத்தாடல் நட்பை வளர்க்கும்.

  • 10 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

x63140278526732505.jpg

எச்சரிக்கை மடல்

மனதால்த் தன்னும் தாய்மை வலியுணராப் பெண்டிரும்,

தாவி அன்னை திருமடியில் தவழ்ந்து மகிழா ஆடவரும்

தயவு செய்து மேற்கொண்டு,

இக்கவியின் இரத்த ஓடையை

இரணமாக்கி இரசிக்க உள் நுழையாதீர்!

ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில் தேசத்து ஆன்மா துடிக்கிறது.

நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில் தங்கிவிட முடியாது.

உந்தும் வலு உறுதியாக வேண்டும்.

ஒவ்வொரு மணித்துளியும் வலியின் வேகம்

வரப்புடைத்து பெருகி எல்லாப் பாகத்திலும் விரிகிறது.

பனிக்குடம் உடைந்தபின், முக்குதற்கு நீண்ட நேரம் எடுத்தால்

எல்லாமே உறைந்து போகும்., உலர்ந்தும் போகும்.

வலியின்றி வளர்ச்சி இல்லை.

வலுவின்றி வலியைச் சந்தித்தால் பலவீனம் பாயில் கிடத்தும்.

வலுவினூடே வலியைச் சந்தித்தால் நலிவு நாணி ஓடும்.

இருந்து வியாக்கியானம் பேசும் மணித்துளிகள்

வலி வளர்க்கும் வேறொன்றும் செய்யாது.

பந்தமாய் ஆவதற்குப் பலவீனம் வாசலோரம் முண்டியடித்து நிற்கிறது.

அதை ஊளையிட்டு ஓடவைத்தல் என்பது உந்தும் வேகத்தில் இருக்கிறது.

உயிர்ப்பின் வலியும், உயிர்ப்பின் ஒலியும்

பிறப்பின் வாசலிலே பின்னி நலிகிறது.

வலியை ஒழிப்பதும், ஒலியை வளர்ப்பதும்

எம் இருப்பின் இயல்பில் இறைத்துக் கிடக்கிறது.

உந்தூ!

இல்லாவிட்டால் மூச்சுத் திணறும்

இத்தனை காலம் எத்தனை இழந்து வளர்த்த திரு இது.

முந்நூறு நாள் வளர்ந்த முத்தல்ல,

60 ஆண்டுகளாய் அவதியுறும் வலியில்

தமிழினம் சுமந்த கருவில் வளர்ந்த தெய்வசிசு.

தெய்வ சிசுவின் பிறப்பையே மறுக்கும்

பிசாசுத்தனங்கள் புளுகுக்கதைகள் அல்ல - அவற்றை

நிசத்தில் நாமும் தரிசிக்கும் நிகழ்காலம் இது.

உலகும் வலுவை நோக்கியே தலைவணங்கும் என்பது

வரலாறுகள் உணர்த்தும் பாடம்.

எம் வலிக்கு மருந்து எம்கையில்,

மண்டியிட்டாலும் மாற்றார் எமக்குதவார்.

களமும், புலமும் கைகோர்த்தே உந்தும் பெருமூச்சை உருவாக்கவேண்டும்

வலுவும், வளமும் இணைவதில் வரலாற்றின் கதவுகள் திறக்கும்.

எடுக்கும் கைகள் கொடுக்கப் பணிய,

உந்தும் வலு உச்சமடையும்.

பிறப்பின் வாசல் விரிவடைய தெய்வத்திரு கண் விழிக்கும்.

இதற்குப் பின்னும் காலந்தாழ்த்தல்

என்னையும், உன்னையும் இழிவாக்கும்.

புரிவாயா?.

  • கருத்துக்கள உறவுகள்

வலி உணர்ந்து ......துணிச்சலுடன் ..கவி வரி காட்டி வந்த வரிகள் நிஜம். நன்றி சகாரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.