Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்

இரவுகளின் நிசப்தம் மீறி

உன் விசும்பல்

நீ விட்டுப்போன

நினைவுகளின் எதிரொலி

காதலி

மானம்

பணம் இருந்தால்

பட்டுச்சேலைக்குள்

இல்லாதவளின்

தாவணிக் கிழிஞ்சல்களில்

என் அப்பாவுக்கு

மகனாக பிறந்திருந்தால்

அரிச்சந்திரன் கூட

பொய் பேசக் கற்றுக்கொண்டிருப்பான்

அர்ச்சனை அடுக்குகளில்

மனசாட்சி

போதை தெளியாதவரை

ஒளிந்திருக்கும்

மரணபயணம்

உனக்குள்ளும்..

  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தினசரி தூறல்களில் நனைய வைத்த விகடகவிக்கு நன்றி. தொடருங்கள்.

  • தொடங்கியவர்

வண்ணம் தெரிவதற்கும்

வாழ்க்கை தெளிவதற்கும்

ஒளி வேண்டும்..இறக்கும்வரை

ஞானம் பெறாமல்

போவது போல்

வாழ்வதாய் உணர்ந்திடல்

இருட்டில் குறுடன்

காணும் சுடுகாட்டு ஞானம்.

அந்தப்புரம்

வைத்திருப்பதற்கும்

அங்கே..

ஆனந்தப்பட்டுக்கொள்ளவும்

அரசனுக்கு அருகதை

உண்டு அவன்

போரென்றால்

வீறுண்டு கிளம்பிடும்

ஆண்மகனாயில்

சற்றே திறந்த ஜன்னல்

வெளியே அசையும்

மரத்தின் கிளைகள்

கொஞ்சிமகிழும் ஜோடிக்கிளிகள்

மெல்லெனத் தென்றல்

இப்படி ஆரம்பிக்கும்

எல்லா கதையின்

முடிவிலும் ஏந்தான்

கொலையும் குத்துச்சண்டையும்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தூரலில் நனைய கிடைத்ததில் மகிழ்ச்சி. :)

  • தொடங்கியவர்

காதலியைத் தொடாமல் விட்டாலும்

காதல் மறப்பதில்லை

தமிழை நான் மறக்கவில்லை

உள்ளுக்குள் கிழிந்த

மின்னல் கீற்று

காதலாகியது

நம் பார்வை மேகங்கள்

பங்களித்தது..

நண்பன் வாழ

நான் உழைப்பதும்

நான் வாழ

அவன் உழைப்பதும்

நல்ல நட்புதான்

உழைப்பை எதிர்பார்க்காத

மனதுள்ளவரை

  • தொடங்கியவர்

இரசனை பெண்ணின்

வளைவிலும் வாசனையிலும்

அறிவு காமவிம்பங்களில்

நகைச்சுவை அடுத்தவர் அந்தரங்கத்தில்

இளைஞர்களுக்கு உள்ளத்தில்

அழுக்குச் சேற்றை

அள்ளித்தூவும் எழுத்துகளும் தலைப்புகளும்..

எனக்குள் வலி

பகுத்தறிவு

பயத்தை அழித்ததா..

பண்பாட்டை அழிக்கிறதா..

மதங்கள் ஒழுக்கம்

கொண்டாடுமா..

உடலஙகளைத்

துண்டாடுமா..

கண்டுபிடிப்புகள்..

உயிர்களை காவுகொண்டு

உயரம் கொண்டு செல்லுமா..

சிந்திப்புகள்..

வாழ்வை சீர்படுத்துமா

சித்தத்தை பாழ் படுத்துமா

நான் நானாகவும்

நீ நீயாகவும்

இருந்து காட்டி

காற்றில் பறக்கும்

கனமில்லா காகிதமே

பணமென்று உணர்வோமா

மாற்றங்களில் நமை நுழைத்து

பணமே பத்துமென்று

பாறாங்கற்களுக்குள்

நசுங்கிப்போவோமா..

இடைவெளிகள்

விழுவதால்

குழப்பங்கள்

இடைவேளைகள் வருவதால்

விளக்கங்கள்

தடுமாறினாலும்

தடம்மாறாவிட்டால்

நிம்மதி நிலைக்கும்

  • தொடங்கியவர்

அமுதசுரபி

ஆலவிசம்

இரண்டும் இருக்கலாம்..

கலிகால இதயங்களில்

அலைகளின் உரசல்களால்

கரைக்கு வரும் காதலை

பார்வை விலகாமல்

மூடிக்காக்கின்ற

ஆகாயத்தின் காதல்

கடலுக்கு கானல்

கற்றுக்கொண்டிருக்கிறேன்

காயங்கள் படாமல்

வார்த்தைகளை

எய்வதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

கற்றுக்கொண்டிருக்கிறேன்

காயங்கள் படாமல்

வார்த்தைகளை

எய்வதற்கு

அழகு :)

  • தொடங்கியவர்

நன்றி க..பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவியை மீண்டும் கண்டதில் சந்தோசம்.

  • தொடங்கியவர்

எனக்கும் மீண்டும் வருவதில் சந்தோசம் குமாரசாமி

  • தொடங்கியவர்

போகும்போது சாம்பலும்

வாராது உன்னோடு..

சாம்ராஜ்ஜியமா வரும்

கதிர்கள் எறிந்து

காதல் வளர்க்கும்

கதிரவனும் மாலை

வந்தால் மடியில்

விழுகிறானே..

எதிர்வாதங்கள்

அறிவை வளர்க்கிறது

ஓரமாய்

ஆணவமும்

  • தொடங்கியவர்

ஏவலுக்கு கூலி

கொடுத்து அப்பா வாங்கி

தந்த ஆம்பிளை

பொம்மை

கணவன்

ஆசிரியர்

விதைத்தது

பண்பட்ட நிலத்தில்

பயிராகும்

பாழ்பட்ட நிலத்தில்

விழலாகும்

பயணங்கள் தொடங்குமிடத்தில்

முடியாவிட்டாலும்

பயணிப்பவன் ஜனிக்குமிடத்தில்

மரிப்பான்

தாடிக்குள் புதைந்திருந்த

அந்த முகத்தில்

சோகம் படரந்து

கோபம் சிவந்து

வாரத்தைகள் வெடித்த போது

இயாலாமை வெம்பி வெடித்தது

விடுதலை கேட்டவனுக்கு

உலகம் செய்த சவரம்

முகமெல்லாம் முளைத்து நிற்கிறது

  • தொடங்கியவர்

இணையவனும் இணைந்ததில் சந்தோசம்.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கவிதை :rolleyes:

இன்றைய கவிதை :rolleyes:

ஈரம் கொண்டுவரும்

தமிழ்க் கவியின்

இன்றைய தூறலின்றி

தாகம் கொண்டு நிற்கும்

யாழ் களத்தின்

சோகம் அறிந்துடனே

மேகத்துடன் கருக்கொண்டு

விகட கவி

வேகம் எடுத்துங்கள்

வானம் விட்டிறங்கி

வந்தெங்கள்

தாகம் தீர்த்துடனே

தமிழ் வாசம்

தாருமைய்யா...

போதுமா கறுப்பி... :)

Edited by நீலமேகம்

  • தொடங்கியவர்

யாருமறியாமல்

குலவும் உன் கண்கள்

காலனையும் காவு

கொல்லும்

ஜாலமறிந்தவை

காதலை ஏலமிடும்

இளைஞனின் இதயம்

தோல்வி தாங்காமல்

துவளும் மீளும்

வியாபாரம்...

அன்பு நிறைந்த

பால் குடத்தில்

வீழும் துளி

விசம்தான்

சந்தேகம்

  • தொடங்கியவர்

வரலாறுகளை திருப்பி

எழுதுவதற்கு

சாதனை நாயகர்கள்

தேவையில்லை

பத்திரிகையாளன் பேனா

போதும்.

பேனா அழுத கண்ணீர்

சிரிக்க வைத்தது

வானம் அழுத

கண்ணீர் வாழ வைத்தது

நீயழுத கண்ணீர் அன்பே

உயிர் கரைத்தது

உயிர் என்றொரு

பொருள்

இருக்கிறதா இல்லையா

யாருக்கும் தெரியாது

ஆனால் அதற்கு நிகரான

பொருள் ஒன்று

உலகில் உண்டு அது

அம்மா

  • தொடங்கியவர்

கண்களுக்குத்தான்

கறுப்பும் வெள்ளையும்

இதயங்களுக்கில்லை

இதயம் அதிக

குருதிப்பாய்ச்சுதலால்

செயலிந்துபோகும்

நிதானம் தேவை

துன்பத்திலும்

இன்பத்திலும்

இன்பத்தில் நீ

பங்கு கொள் இல்லை

முழுதாய்க் கொள்

துன்பத்தில் துளியும் தரேன்

காதல்

காதலை கடவுள் வெறுக்கிறார்

அதனால்தான்

போற்றப்படும் காதல்

கல்லறைகளில் பூஜிக்கப்படுகிறது

  • தொடங்கியவர்

மைபோட்டு விழி அகட்டி

சிணுங்கி சிரித்து

திரும்பி பார்த்து

பின்னல் எறிந்து

போன பெண் நிழலில்

நின்ற நினைவுகள்

இருட்டுச் சிந்தையில்

இருபது வருடமாய்

இன்னும்...

இன்னும் இழுபறியாய்...

நம்முத்த கொடுக்கல் வாங்கல்..

கொடுக்க தயாராக நானும்

வாங்க மறுப்பவளாய் நீயும்..

நீயும் நல்லவன்தான்

காலமும் சூழலும்

உன்னை குற்றக்கூண்டில் ஏற்றியது

ஆனால் குற்றக்கூண்டில்

சுகப்பட்ட நீ

இறங்காமல் இருக்கிறாயே..

அங்குதான் நீ

வாழ்க்கயில் சறுக்கினாய்..

  • தொடங்கியவர்

இரவின் உதவி

இல்லாவிட்டால்

தூக்கத்தின் சுகம்

பகலில்

பகலில் தெரியும்

நிலா நீ என்றதாலோ

என்னவோ..

இரவில் கனவில் கூட

வரமறுக்கிறாய்

வரமறுப்பது உன்னுரிமை

ஆனால்

உன்னை பாராதிருப்பது

பெருங் கொடுமை

ஒரு ஏழைக்கு செய்யும்

உதவியாக

உன் முகம் காட்டி விட்டு போ

நிலா

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி, கவிதைகளை இன்று தான் வசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது, நன்றாக இருக்கிறது, தொடர்த்து எழுதுங்கள்

  • தொடங்கியவர்

நன்றி உடையார்

  • தொடங்கியவர்

கவுந்து கிடக்கும்

ஆகாயகடலில்

மூன்றாம் பிறை ஓடத்தை

ஆனாதரவாய்விட்டது

யார்..

யார் யாருக்கென்ற விதியின்

வரைவுகளை

கலாச்சார கலப்புகள்

அழித்து மாற்றுவது

சமுதாய சீரழிவா..

சந்தோச தேடல்களா..

தேடல்கள் நிறைந்த

வாழ்வை தேடி முடிப்பதற்குள்

நீயும் நானும்

கண்டெடுத்த காதலை

வாழ்ந்து முடிக்காமல்

வாழ்த்தி தொலைத்த

வலி மிகுந்த பொழுதுகள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.