Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கத் தளங்கள் மீது அணுகுண்டு வீசுவோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கத் தளங்கள் மீது அணுகுண்டு வீசுவோம்: ரஷியா எச்சரிக்கை

லண்டன், டிச. 18: ஐரோப்பிய கண்டத்தில் ஏவுகணைத் தளங்களை அமைத்தால் அதை ஏவுகணை மூலம் அணுகுண்டுகளை வீசித் தாக்கி அழிப்போம் என அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரஷியாவின் ஏவுகணைப் பிரிவு பொறுப்பு அதிகாரி நிகோலை சோலோத்சோவ் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

ஐரோப்பிய கண்டத்தில் இரு இடங்களில் ஏவுகணைத் தளங்களை அமைக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அமெரிக்கா தனது இந்தத் திட்டத்தைக் கைவிடாவிட்டால், போலந்து, செக் குடியரசு ஆகிய இரு இடங்களில் நாங்களும் ஏவுகணைத் தளங்களை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இந்தத் திட்டம் ஏற்கெனவே தீவிரப் பரிசீலனையிலும் உள்ளது.

தாங்கள் அமைக்கவுள்ள ஏவுகணைத் தளத்தில் ஒரு சில ஏவுகணைகள் மட்டுமே இடம்பெறும் என்றும் மேலும் அந்த ஏவுகணைத் தளங்கள் ஈரான் போன்ற ரெüடி நாடுகளிடம் இருந்து வரும் ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அமெரிக்கா கூறிவருகிறது. அமெரிக்காவின் இந்தக் கருத்தை எவ்விதத்திலும் நாங்கள் நம்பத் தயாராக இல்லை.

ரஷியாவை சுற்றி ஏவுகணைத் தளங்களை அமைத்து எங்களை மிரட்ட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்பது அதன் நடவடிக்கை மூலமே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

எங்களுடன் உடன்பாடு ஏற்படுத்தினால்...: ஒருவேளை, எங்களுடன் (ரஷியா) அமெரிக்கா உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால் கூட போலந்திலும், செக் குடியரசிலும் எதிரி நாட்டு ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் 10 ஏவுகணைகளையும், ஒரு ரேடாரையும் மட்டுமே இடம்பெற அனுமதிக்கப்படும். ஏதாவது ஒரு நிலையில் இந்த உடன்பாட்டை அமெரிக்கா மீறும் பட்சத்தில் உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யவும் ரஷியா தயங்காது.

நாங்கள் ரஷியாவை மிரட்ட முயற்சிக்கவில்லை என அமெரிக்கா கூறிவருகிறது. ஆனால், இதுபோன்ற வெற்று வாக்குறுதிகளையும் நாங்கள் நம்பத் தயாராக இல்லை.

கடந்த காலத்தில் இதுபோன்று நம்பியதால்தான் நேட்டோ படை ரஷியாவை சுற்றி வளைத்தது. தற்போது அமெரிக்கா கூறுவதை நாங்கள் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்பினால் அதே நிலைமை மீண்டும் ஏற்படலாம்.

துண்டுபட்டுக்கிடந்த இரு ஜெர்மனிகளும் இணைந்தவுடன் அங்கு ஒரு நேட்டோ படை வீரர் கூட இருக்கமாட்டர்கள் என அமெரிக்கா வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அமெரிக்கா அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு ரஷியாவை ஏமாற்றியது என்றார் நிகோலை.

http://www.dinamani.com/

Edited by குமாரசாமி

:wub::wub: :rolleyes:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் ரஸ்சியா. ஏற்கனவே ஒரு முறை ஒரு ஏவுகணை பரிசோதனையின் போது ரஸ்சிய ஜனாதிபதியும் வந்திருந்தார் என கூறப்படுகின்றது. ஆனால் அந்த பரிசோதனை வெற்றிபெறாமல் கடலுக்குள் விழுந்தும் மற்றயது இயங்காமல் விட்டதாக சொல்லப்படுகின்றது. இதற்கு காரணம் அமெரிக்க scramble என்று சொல்லப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி சொல்கிறீகள் ரஸ்யன் தான்(anti missile jamming system) கொண்டுவந்தவர்கள்.அவர்கட்கு சில வேளை பண பிரச்சனை இருக்கலாம். தொழில் நுட்பம் என்று வருகையில் அவர்கள் எப்பொழுதுமே சிம்மசொப்பனம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் ரஸ்சியா. ஏற்கனவே ஒரு முறை ஒரு ஏவுகணை பரிசோதனையின் போது ரஸ்சிய ஜனாதிபதியும் வந்திருந்தார் என கூறப்படுகின்றது. ஆனால் அந்த பரிசோதனை வெற்றிபெறாமல் கடலுக்குள் விழுந்தும் மற்றயது இயங்காமல் விட்டதாக சொல்லப்படுகின்றது. இதற்கு காரணம் அமெரிக்க scramble என்று சொல்லப்படுகின்றது.

இதற்கான ஆதாரத்தைத் தர முடியுமா..??!

உலகிலேயே விண்ணுக்குப் பாய்ந்த முதல் நாடு ரஷ்சியா..! அவர்களுக்கு தொழில்நுட்பம் சொல்லிக் கொடுப்பது..???! :wub::rolleyes:

ஏவுகணை எதிர்ப்புத் திட்டம் என்பது அமெரிக்க ஜனநாயக இராணுவ விரிவாக்கத்தின் ஓர் அம்சம்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஜனநாயக மாயைக்குள் வீழ்த்தி தனது இராணுவ விரிவாக்கத்தை அமெரிக்கா தொடர்ச்சியாக செய்து வரும் நிலையில்... ரஷ்சியா இது குறித்து சிந்திப்பது அவசியமே..!

அமெரிக்கா ரஷ்சியாவை மட்டுமல்ல.. சீனா இந்தியா போன்ற வளர்ந்து வரும் வல்லரசுகளையும் சூழ்ந்தே நிற்கிறது. இந்தியா விடயத்தில் இஸ்ரேலின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தைப் புகுத்தி இந்தியாவின் ஏவுகணை வல்லமையை அமெரிக்கா அளவிட்டு வருவதால் அங்கு அமெரிக்காவுக்கு தற்போதைக்கு ஆபத்துக் குறைவே..!

அமெரிக்காவின் உலக இராணுவ வல்லாதிக்கத்திக்கு சவாலாக ரஷ்சியாவும் சீனாவும் மட்டுமே விளங்குகின்றன. இந்த அடிப்படையில்.. அமெரிக்காவின் நகர்வுகளை ரஷ்சியா குறிப்பா புட்டின் உன்னிப்பாகக் கவனிப்பது அவசியமானதே..!

அமெரிக்கா ஒன்றும் யோக்கியமான நாடன்று. அது ஏமாற்றுப் பேர்வழி நாடே..! அதற்கு அதன் உலக இராணுவ வல்லாதிக்க சக்தி என்ற நிலையை தக்க வைப்பதே ஒரே குறிக்கோள்..! அதற்கு ஏற்றவகையில் ஒருங்கிணைந்த செயற்பாடாக ஜனநாயகம் என்ற அரசியல் கொள்கையையும் முதலாளித்துவம் என்ற கவர்சிகர பொருளாதாரக் கொள்கையையும் அது பயன்படுத்தி வருகிறது. :wub:

Edited by nedukkalapoovan

இது ஜம்மு பேபிக்கு வலைஞன் மாமா தாற எச்சரிக்கை மாதிரி அல்லோ இருக்கு :rolleyes: என்ன கு.சா தாத்தா நான் சொல்லுறது சரி தானே!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வெளிப்படையாகவே சொல்வது இது தான். என் நாட்டிற்குத் தேவையானதற்காக எதையும் அது செய்யும் என்பதே. இன்றைக்குச் சோவியத் ஒன்றியம் உடையாது இருந்தால் தன்னுடைய கால்களை உலகெங்கும் அமெரிக்கா போலப் பரப்பியிருக்கும். ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்து ஆக்கிரமிக்க முயன்றதும், இந்திரா காந்தி காலத்தில் நட்புநாடான இந்தியாவில் கூட தன்னுடைய ஆள்களை நியமித்து, சட்டதிட்டங்களுக்கு இசைவாக்க முயன்றதும் அதற்கு நல்ல உதாரணம்.

அவ்வாறே வடகொரியா விடயத்தில் முன்பு அது கொண்டிருந்த ஈடுபாடும், அதன் அமெரிக்கா போன்றதொரு தோற்றத்திற்குக் காரணம். முதலாளித்துவமோ, சமவுடமையோ எல்லோமே தங்களுடைய நாட்டு;ககாக என்னவும் செய்வோம் என்ற அடிப்படையைக் கொண்டதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கான ஆதாரத்தைத் தர முடியுமா..??!

உலகிலேயே விண்ணுக்குப் பாய்ந்த முதல் நாடு ரஷ்சியா..! அவர்களுக்கு தொழில்நுட்பம் சொல்லிக் கொடுப்பது..???! :lol::rolleyes:

உலகிலேயே விண்ணுக்குப் பாய்ந்த முதல் நாடு ரஷ்சியா..! அவர்களுக்கு தொழில்நுட்பம் சொல்லிக் கொடுப்பது..???! :lol::wub:

இந்த வசனத்தை பார்த்த பின்பும் பதில் அளித்தால்?????????? :wub::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nedukkalapoovan

உண்மையாக இவை பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாதா????? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே விண்ணுக்குப் பாய்ந்த முதல் நாடு ரஷ்சியா..! அவர்களுக்கு தொழில்நுட்பம் சொல்லிக் கொடுப்பது..???! :lol::rolleyes:

இந்த வசனத்தை பார்த்த பின்பும் பதில் அளித்தால்?????????? :wub::wub:

ரெம்பத்தான் பிகு பண்ணுறீங்க..

நாமறிஞ்ச வரலாறுகள் இதில இருக்குது... நீங்கள் அறிஞ்சதுகளை ஆதாரத்தோட தாங்க.. சும்மா பிகு பண்ணி காமெடி பண்ணாதேங்க..! :lol:

http://en.wikipedia.org/wiki/Space_exploration

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே? ஆகா ஓகோ என்று புழுகாமல்.அங்கே வாசிச்சன் இங்கை வாசிச்சன் என்று பம்மாத்து விடாமல் (தலைவரின் பாதுகாப்புக்கே அச்சுறுதல் விட்டாளாய்யா நீங்கள்) ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரெம்பத்தான் பிகு பண்ணுறீங்க..

நாமறிஞ்ச வரலாறுகள் இதில இருக்குது... நீங்கள் அறிஞ்சதுகளை ஆதாரத்தோட தாங்க.. சும்மா பிகு பண்ணி காமெடி பண்ணாதேங்க..! :rolleyes:

http://en.wikipedia.org/wiki/Space_exploration

இது பற்றிய செய்தி இணைப்பை தேடி தருகிறேன். அல்லது ரிசியிடம் கேட்டு பாருங்கள். அவர் பக்கத்தில் படங்களுடன் முன்பு போட்டு இருந்தார் என்று நினைக்கிறேன்??? (சரியாக ஞாபகம் இல்லை)

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்சியா, அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளிடம் உள்ள ABM systems (ஏவுகணை எதிர்ப்பு திட்டங்கள்) களை முறியடித்துத் எதிரி இலக்குகளை தாக்கவல்ல ஏவுகணைகளைத் தான் கொண்டிருப்பதாக பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது. நீங்க என்னடான்னா.. ரஷ்சியா கடலுக்க விழுந்திட்டுது என்றீங்க..??! அதுதான் கேட்டன்.! :rolleyes:

Russian strategic rockets can pass through any ABM systems - commander (Part 2)

VLASIKHA (Moscow region). Dec 17 (Interfax-AVN) - Russian strategic rockets are capable of passing through any existent and prospective missile defense systems, including the one deployed by the United States, Strategic Rocket Forces Commander Col. Gen. Nikolai Solovtsov said on Monday in response to an Interfax-AVN question.

"The combat gear we are receiving and will receive several years from now will allow our missiles to pass through any missile defense systems," he said.

The missiles are being upgraded with test launches, he said.

"We have been holding test launches for years," he added.

The Forces' development plan takes into consideration the new threats to Russian security that arise with the deployment of U.S. missile defense elements, including a radar station in the Czech Republic and a site of anti-missile missiles in Poland, Solovtsov said. te sm

http://www.interfax.ru/e/B/politics/28.htm..._issue=11931147

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஷ்சியா, அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளிடம் உள்ள ABM systems (ஏவுகணை எதிர்ப்பு திட்டங்கள்) களை முறியடித்துத் எதிரி இலக்குகளை தாக்கவல்ல ஏவுகணைகளைத் தான் கொண்டிருப்பதாக பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது. நீங்க என்னடான்னா.. ரஷ்சியா கடலுக்க விழுந்திட்டுது என்றீங்க..??! அதுதான் கேட்டன்.!

நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் சிலவற்றை அப்படியே முதலில் மறைத்துவிடுவார்கள். பின்பு தான் வெளிவரும் :rolleyes: . அனால் இணையத்தில் இது இருக்கின்றது. மேலும் பல விபரங்களை நான் மறந்துவிட்டேன்.

அமெரிக்கா ஒரு சின்ன ஊசியை செய்தா அதை பெரிதாக விளம்பரபடுத்தும். ஆனால் பெரிய உலக்கையை செய்தால் மெளனமாக இருக்கும். :wub: .

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் சிலவற்றை அப்படியே முதலில் மறைத்துவிடுவார்கள். பின்பு தான் வெளிவரும் :rolleyes: . அனால் இணையத்தில் இது இருக்கின்றது

இணையத்தில் அமெரிக்க உளவுத்துறையும் நாசாவும் அமெரிக்க பாதுகாப்புத்துறையும் எல்லா வகையான பிரச்சாரங்களையும் அமெரிக்கா பற்றிய மிகைப்படுத்தல்களையும் வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றன..!

ரஷ்சியா எப்பவுமே அமைதியா இருந்து சாதிக்கிற நாடு..! அமெரிக்கா பிற்றீட்டு.. இருக்கிற நாடு தன்னைப் பற்றி உலகில் ஒரு அச்சுறுத்தலான பார்வை இருக்கனும் என்று விரும்பிற நாடு..! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையத்தில் அமெரிக்க உளவுத்துறையும் நாசாவும் அமெரிக்க பாதுகாப்புத்துறையும் எல்லா வகையான பிரச்சாரங்களையும் அமெரிக்கா பற்றிய மிகைப்படுத்தல்களையும் வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றன..!

ரஷ்சியா எப்பவுமே அமைதியா இருந்து சாதிக்கிற நாடு..! அமெரிக்கா பிற்றீட்டு.. இருக்கிற நாடு தன்னைப் பற்றி உலகில் ஒரு அச்சுறுத்தலான பார்வை இருக்கனும் என்று விரும்பிற நாடு..! :rolleyes:

ஆனால் இப்போ ரச்சியாவின் நிலைமை?? அதே நேரம் ரச்சியாவும் மறைமுகமாக பல வேலைகளை செய்யும்

KGB ஊடாக. The Main Enemy என்ற புத்தகத்தை படித்து பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இப்போ ரச்சியாவின் நிலைமை?? அதே நேரம் ரச்சியாவும் மறைமுகமாக பல வேலைகளை செய்யும்

KGB ஊடாக. The Main Enemy என்ற புத்தகத்தை படித்து பாருங்கள்

ரஷ்சியா அரசியல் பொருளாதார மாற்றத்தைச் சந்தித்து நிற்கிறது. அமெரிக்கா அப்படியன்று. அந்த வகையில் ரஷ்சியாவின் உலக முக்கியத்துவம் என்பது மறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது இன்னும் உலக முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை என்பது முக்கியமான ஒன்று..!

உதாரணத்துக்கு அமெரிக்கா தடைகள் விதித்தும் ஐநா கத்தியும் ரஷ்சியா திட்டமிட்டபடி ஈரானில் அணு உலை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துவிட்டிருக்கிறது..!

நூல்களில் வரும் செய்திகளையோ இணையத்தில் வரும் செய்திகளையோ 100% அப்படியே நம்பி விட முடியாது. அவரவர் தங்கள் தேவைகள் சித்தாந்தங்கள் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு ஏற்ப அவற்றை வடிமைத்து விடுகின்றனர்..! அதில் மக்கள் கவர்ச்சி.. மக்கள் சிந்தனைத் தூண்டல் திசை தீர்மானம் என்று பல விடயங்கள் அடங்கி இருக்கும்..!

அமெரிக்க உளவுப்படைக்கு நிகராக ரஷ்சியாவும் செயற்படுகின்ற அதேவேளை ரஷ்சிய ரகசிய நகர்வுகளையே அதிகம் செய்கிறது..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதாரணத்துக்கு அமெரிக்கா தடைகள் விதித்தும் ஐநா கத்தியும் ரஷ்சியா திட்டமிட்டபடி ஈரானில் அணு உலை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துவிட்டிருக்கிறது..!

அமெரிக்க உளவுப்படைக்கு நிகராக ரஷ்சியாவும் செயற்படுகின்ற அதேவேளை ரஷ்சிய ரகசிய நகர்வுகளையே அதிகம் செய்கிறது..! :wub:

ஆனால் ஒன்றை மறந்துவிட்டிர்கள். ஈராக்கை அமெரிக்கா தாக்கும் போது இந்த நாடுகள் என்ன செய்தன?

ஆனால் சிலர் சொல்லலாம் இப்போ அது தான் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நல்லா வாங்கி கட்டுறதா.

அனேகமாக ஈரானுக்கு அமெரிக்காவின் பதில் பலஸ்மாவாக இருக்கலாம் :wub: . அப்போ ரஸ்சியா மெளனம் தான் காக்கும்.

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒன்றை மறந்துவிட்டிர்கள். ஈராக்கை அமெரிக்கா தாக்கும் போது இந்த நாடுகள் என்ன செய்தன?

ஆனால் சிலர் சொல்லலாம் இப்போ அது தான் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நல்லா வாங்கி கட்டுறதா.

அனேகமாக ஈரானுக்கு அமெரிக்காவின் பதில் பலஸ்மாவாக இருக்கலாம் :wub: . அப்போ ரஸ்சியா மெளனம் தான் காக்கும்.

ஆப்கானிஸ்தானும் ஈரான் ஈராக்கும் நெடுங்காலமாகவே வல்லரசுகளின் கவனத்துக்குள் இருந்த நாடுகள்.

பழைய வரலாற்றைப் படிச்சீங்கன்னா புரியும்..முன்னர் அமெரிக்கா சோவியத்தை உள்ளிளுத்து மோதவிட்டு தலிபானை வளர்த்தது ஆப்காகிஸ்தானில்.. பாகிஸ்தானை செல்லப் பிள்ளை ஆக்கியது. அன்று சோவியத் கொடுத்த விலைகளை இன்று அமெரிக்கா கொடுக்கிறது.. இதெல்லாம் சும்மா நடக்கேல்ல.. எல்லாத்துக்குப் பின்னாலும் ரகசிய நகர்வுகள் இருந்திட்டே இருக்குது..! :lol::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆப்கானிஸ்தானும் ஈரான் ஈராக்கும் நெடுங்காலமாகவே வல்லரசுகளின் கவனத்துக்குள் இருந்த நாடுகள்.

பழைய வரலாற்றைப் படிச்சீங்கன்னா புரியும்..

ரஸ்சியாவை எப்படி துண்டம் துண்டமாக உடைத்தார்கள் என்றா :wub: . இதற்காக எவ்வளவு நீண்டதுரம் பயணம் செய்தார்கள். அதே போல இந்தியாவையும் ....... :wub:

அமெரிக்கா ஒரு சிறிய ஊசியை செய்தால் பெரிதாக விளம்பர படுத்தும்.

ஆனால் பெரிய உலக்கையை செய்தால் மெளனமாக இருக்கும்.

உதாரணமாக நாசாவை(NASA) நன்றாக விளம்பர படுத்தும். ஆனால் ஏ51(A51) பற்றி வாயையே திறக்காது.

அப்படியிருந்தும் சில செய்திகள் ஏ51 பற்றி வெளிவருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்சியாவை எப்படி துண்டம் துண்டமாக உடைத்தார்கள் என்றா :wub: . இதற்காக எவ்வளவு நீண்டதுரம் பயணம் செய்தார்கள். அதே போல இந்தியாவையும் ....... :D

அமெரிக்கா ஒரு சிறிய ஊசியை செய்தால் பெரிதாக விளம்பர படுத்தும்.

ஆனால் பெரிய உலக்கையை செய்தால் மெளனமாக இருக்கும்.

உதாரணமாக நாசாவை(NASA) நன்றாக விளம்பர படுத்தும். ஆனால் ஏ51(A51) பற்றி வாயையே திறக்காது.

அப்படியிருந்தும் சில செய்திகள் ஏ51 பற்றி வெளிவருகின்றன.

அமெரிக்கா ரஷ்சியாவை உடைத்தது என்பதிலும் அதன் இரும்புத்திரைக்குப் பின்னாலிருந்த பலவீனம் உடைத்தது என்பதுதான் நிஜம். :D

நீங்கள் ரஷ்சியர்களின் தளங்களைப் பார்ப்பதில்லை போலும். நம்மவர்கள் போல அவர்கள் பெண்களைப் பற்றி மானே தேனே என்று கவிதை எழுதிட்டு இருக்கிறதில்ல.. அவர்கள் அமெரிக்காவின் ரகசிய நகர்வுகளைப் பற்றிய ஆதாரங்களைத் திருடி.. பப்ளிக்கிள வைத்துப் பேசிட்டு இருப்பார்கள்..! நான் நிறைய ரகசிய சஞ்சிகைகளை எடுத்திருக்கிறேன் (நண்பர்கள் மூலமும்). பல இராணுவ சஞ்சிகைகள் கூட இருக்கின்றன..!

பரபரப்பு ரிசி கூட இப்படியான தளங்களில் வரும் சஞ்சிகைகளில் இருந்துதான் தகவல்கள் மற்றும் படங்களைப் பெற்றிருக்கிறார் என்பதை ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது. அதை வைச்சே காசு பார்க்கிறாங்க..! :wub::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா ரஷ்சியாவை உடைத்தது என்பதிலும் அதன் இரும்புத்திரைக்குப் பின்னாலிருந்த பலவீனம் உடைத்தது என்பதுதான் நிஜம். :lol:

நீங்கள் ரஷ்சியர்களின் தளங்களைப் பார்ப்பதில்லை போலும். நம்மவர்கள் போல அவர்கள் பெண்களைப் பற்றி மானே தேனே என்று கவிதை எழுதிட்டு இருக்கிறதில்ல.. அவர்கள் அமெரிக்காவின் ரகசிய நகர்வுகளைப் பற்றிய ஆதாரங்களைத் திருடி.. பப்ளிக்கிள வைத்துப் பேசிட்டு இருப்பார்கள்..! நான் நிறைய ரகசிய சஞ்சிகைகளை எடுத்திருக்கிறேன் (நண்பர்கள் மூலமும்). பல இராணுவ சஞ்சிகைகள் கூட இருக்கின்றன..!

அது இரும்பென்றபடியால் துருப்பிடித்து உக்கி உடைந்து இருக்கும். நீங்கள் சொல்வது 100% உண்மை தான் :wub: சிவ சிவா :D

ஆனால் இப்படி ரகசிய சஞ்சிகை படிப்பவர் என்றால் சில சிறிய விடயங்கள் கூட தெரியாமலா இருக்கும்??? :wub: .

உங்களிடம் அப்படியென்றால் ஒன்றை கேட்கலாம். KGB அமெரிக்க CIA ஒருவருக்கு கொடுத்த பணம் எந்த வங்கி முலம் பரிமாறப்பட்டது. இது பற்றி சரியான தகவல்கள் ஏதும் உண்டா??

மக்கள் வங்கி, பாமன் கடை கிளை, கொழும்பு 6. சிறீலங்கா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் வங்கி, பாமன் கடை கிளை, கொழும்பு 6. சிறீலங்கா.

எப்பவும் அந்த கள்ளுகடை புத்தி போகாது என்பது இது தான் :lol::D . தரும் போது பணக்கார இடமா கொழும்பு-7 என்ற தந்தா என்னவாம் :wub::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nedukkalapoovan இதை பாருங்கள். இப்போ தான் வந்த செய்தி

Japan’s Missile Shield

Concerns Growing Over Arms Race in East Asia

The Japanese Maritime Self-Defense Force has successfully conducted a test to intercept a missile in an effort to build its own missile defense system. The test took place off a Hawaiian island on Monday when a Japanese naval vessel, the JS Kongo, tracked and destroyed a dummy ballistic missile fired by the U.S. Navy about 160 kilometers above the Pacific Ocean.

Japan has become the first U.S. ally to develop such a missile interception capability. We positively assess the test as it can boost Japan's security. In 2003, the country started a project to devise the missile shield in cooperation with the U.S. following North Korea's 1998 test-firing of a Taepodong-1 ballistic missile.

The one-trillion-yen project is apparently aimed at defending Japan from possible missile attacks from North Korea. And the test will likely strengthen the defense alliance between the U.S. and Japan. However, it is raising concerns about an escalating arms race in East Asia. China showed a mild reaction to test, saying that it hoped Japan would not cause instability in the region.

Military experts say China might fear that Japan could use the missile interception technology to help the U.S. defend Taiwan in case of military conflict with China. They do not rule out the possibility of Beijing using force to subjugate the island to its rule. China is trying to modernize its military, aided by its fast growing economy. The Asian giant is developing radar-evading fighter jets and plans to deploy them in 2015. It is also building up its naval force.

Thus, Japan's missile shield is feared to further prompt China and other neighboring countries to plunge into a new arms race. The Tokyo government deployed its first ground-based Patriot Advanced Capability-3 (PAC-3) interceptor system in March, launching its own ballistic missile defense initiative. Monday's test was designed for a Standard Missile-3 (SM-3) to intercept incoming ballistic missiles outside the earth's atmosphere, while the PAC-3 is intended to intercept missiles missed by the SM-3.

Russia is also struggling to improve its military capabilities amid a dispute over a U.S. plan to deploy its missile shield in Poland and the Czech Republic. The Russian military plans to double its test launches of intercontinental ballistic missiles (ICBMs) after 2009. According to reports, Russia's Tula submarine launched a new ICBM from the Barents Sea in the Arctic toward the Kura test range in Kamchatka on Monday. Sources say the new missile called Sineva can reach its target without being detected by the missile shield.

The ongoing weapons buildup by the U.S., Japan, China and Russia might have negative implications for the Korean Peninsula. South Korea is trying to create a permanent peace regime with North Korea, which is taking steps toward denuclearization. We hope the two Koreas will make efforts to ensure that national reconciliation and peace will prevail over the arms race.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.