Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 20 படையினர் பலி- 50க்கும் மேற்பட்டோர் காயம்

Featured Replies

மன்னாரில் சிறிலங்காப் படையினரின் பாரியளவிலான முன்நகர்வு நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 20-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

"nedukkalapoovan "

"சிறீலங்காவின் பிரதம மந்திரி இன்று நிகழ்ந்த ஒரு நிகழ்வில் பேசும் போது 2008 தமது தேசத்துக்கு வெற்றியாண்டாக அமையும் என்று பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு அது இல்லாதொழிக்கப்படும் அதி உன்னத ஆண்டாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே பாதுகாப்பமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அவர்களோ புலிகளை அழிக்கும் காலம் கனிந்து விட்டது என்றும் எனவே அவர்களை சிறீலங்காவில் தடை செய்துவிட்டு நகைப்புக்கிடமான.. ஏட்டில் மட்டும் உள்ள போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கிழித்தெறிய வேண்டும் என்று அரசுத் தலைவரைக் கேட்டுள்ளார்..!"

இவர்களுக்கு இப்படிப்பட்ட பதில்தான் கிடைக்கப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் 50 க்கு மேற்பட்டோர் காயப்பட மேலும் பலர் இறக்கும் போது எப்படி 2008ம் ஆண்டு வெற்றி ஆண்டாக அமையும்? . வெற்றிக்குரிய எந்த அறிகுறியையும் காணவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

20 SLA soldiers killed, 40 wounded in Mannaar - LTTE

[TamilNet, Saturday, 29 December 2007, 14:46 GMT]

At least 20 Sri Lanka Army (SLA) soldiers were killed and 40 wounded Saturday morning when heavy fighting broke out in Uyilangku'lam - Parappaangka'ndal area between the SLA and the Liberation Tigers of Tamileelam (LTTE), Tiger officials told media in Ki'linochchi. Three LTTE fighters were killed in action. Meanwhile, an infiltration attempt by the Sri Lanka Army Deep Penetration Unit (DPU) was thwarted by the Tigers at LTTE Forward Defence Line at Mukamaalai, the Tigers said.

The Tigers said the three-pronged SLA offensive was thwarted.

Exchange of heavy artillery fire was reported in Parappaangka'ndal area in Mannaar.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வவுனியாவில் இடம்பெற்ற இராணுவ உயர்மட்ட களந்துரையாடல்

புலிகளின் தாக்குதளுக்கு இலக்காகி விடாமல் இருப்பதற்காக

புலிகளை திசை திருப்பப மன்னாரில் களமொண்று திறக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நாளைக்கு மகிந்த இப்படி புதிய களமுனையைத் திறக்கிறதும் முன்னகர்வு முயற்சியும் எண்டு தெரியேல்லை. இவங்களை அடிச்சுக்கொண்டுபோய் வன்னி நிலத்தின்ரை எல்லையிலை விடாமை இனி கொழும்புக்கும் அங்காலை கொண்டே விடுங்கராசா. இப்ப சண்டைகள் எங்கடை வாசல்படிக்கை நடக்கிறது எனக்கு நல்லதாய் படேல்லை. கெதியாய் இடத்தை மாத்தவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் களமுனை திறப்பு விவகாரமெல்லாம் புலிகளை தற்காப்பு யுத்தத்திற்குள் வைத்திருக்கத்தான். புலிகள் நடத்தப்போவதாக சிங்களமே எதிர்பார்க்கும் ஒரு பெரிய நடவடிக்கையின் ஏற்பாடுகளிலிருந்து புலிகளின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த புதிய களமுனைகள். மற்றும்படி இம்மோதல்களில் இறக்கும் சிங்களச் சிப்பாய்களின் எண்ணிக்கையெல்லாம் அவர்களைப் பொறுத்தவரையில் தேவையானவை, தவிர்க்கப்பட முடியாதவை. புலிகள் நடத்தப் போகும் அழித்தொழிப்புச் சமரில் ஏற்படப்போகும் அழிவுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியவை. ஆகவே இதுவே சிங்களத்தின் இன்றைய போர்த் திட்டம் !

  • கருத்துக்கள உறவுகள்

பரப்பாங்கண்டலில் புலிகளின் முக்கிய இடம் ஒன்றைக் கைப்பற்றியதாகச் செய்தி வந்துள்ளது.. இப்படியே போனால் 2008 இல் எப்படி இருக்கும்?

Military-Army in fierce battle at Mannar

The Defence Ministry says the military captured a key LTTE location in Parappakandal, Mannar today following a clash which lasted several hours. The LTTE confirmed that a fierce battle had erupted in the area today.

The Defence Ministry claimed that LTTE leaders including 'Adavan master' and Susilan were among the terrorist casualties following the clash.

The LTTE meanwhile said that both sides used heavy artilleries, Multi-Barrel Rocket Launchers and small mortars during the battle.

Meanwhile Defence Secretary Gotabhaya Rajapaksa, Chief of Defence Staff Air Chief Marshal Donald Perera and Commander of the Army Lieutenant General Sarath Fonseka flew to Vavuniya today to review the latest development of the security situation in Wanni.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=2544

எத்தனை நாளைக்கு திசை திருப்ப போறினம்

மன்னாரில் பரப்பான்கண்டல் பகுதியில் இரண்டாவது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமையும் கடும் சமர் நடைபெற்று வருவதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் முருங்கனுக்கும் உயிலங்குளத்திற்குமிடையிலான இந்தப் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை படையினர் பாரிய நகர்வொன்றை மேற்கொண்டனர்.

இதையடுத்து இரு தரப்புக்குமிடையே சனிக்கிழமை முழுநாளும் உக்கிர சமர் நடைபெற்றது. இரு தரப்பும் கனரக ஆயுதங்களுடன் இடைவிடாது இந்தச் சமரில் ஈடுபட்டிருந்தனர்.

சனிக்கிழமை சமரையடுத்து பரப்பான்கண்டலில் குறிப்பிட்டளவு தூரம் முன்னேறிச்சென்ற படையினர் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளைத் தகர்த்து அவற்றைக் கைப்பற்றி தங்கள் வசப்படுத்திவிட்டதாக படையினர் தெரிவித்தனர்.

எனினும் படையினரின் இந்த அறிவிப்பை முற்றாக மறுத்த புலிகள், பரப்பான்கண்டல் பகுதியில் மூன்று முனைகளில் முன்நகர்ந்த படையினர் மீது தாங்கள் கடும் தாக்குதலை நடத்தி இருமுனைகளில் மேற்கொண்ட நகர்வை முற்றாக முறியடித்து விட்டதாகவும் ஒரு முனையில் மட்டும் கடும் சமர் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்தச் சமரில் 33 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டும் 38 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த புலிகளில் முக்கிய தலைவர்களும் அடங்குவரெனவும் படையினர் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தப் படை நடவடிக்கை மூலம் புலிகளின் பகுதிக்குள் சுமார் 800 மீற்றர் தூரம் சென்று ஒரு சதுரக் கிலோ மீற்றர் பிரதேசத்தை கைப்பற்றியுள்ளதாகவும் படையினர் தெரிவித்தனர்.

இந்தச் சமரில் தங்கள் தரப்பில் ஆறுபேர் மட்டுமே காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம், படையினர் இந்தப் பகுதியை தம்வசப்படுத்தியுள்ளதாகக் கூறுவதை நிராகரித்துள்ள விடுதலைப்புலிகள் இந்தச் சமர் பற்றி கூறுகையில்;

மன்னாரில் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சிகள் எமது படையணிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் படையினருக்கு பாரிய இழப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதில் 20 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் உயிலங்குளம், பரப்பான்கண்டல் பகுதிகளிலேயே படையினர் இந்த மும்முனை நகர்வில் பாரியளவில் ஈடுபட்டனர்.

ஆட்லறிஷெல்கள், பல்குழல்ரொக்கட்டுகள் மற்றும் மோட்டார்த் தாக்குதலுடன் யுத்த டாங்கிகள், கவசவாகனங்கள் சகிதம் இந்தப் படைநகர்வுகள் இடம்பெற்றன.

விசேட கமாண்டோ படையணிகளின் இந்த மும்முனை நகர்வுக்கெதிராக எமது படையணிகளும் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதல்களையடுத்து சனிக்கிழமை மாலை இரு முனைப் படை நகர்வு முறியடிக்கப்பட்டு படையினர் பழைய நிலைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

மற்றொரு முனையில் முறியடிப்புத் தாக்குதல் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இந்தச் சமரில் 20 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.