Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துத்துவ பயங்கரவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்துத்துவ பயங்கரவாதம்

இந்துத்துவ பயங்கரவாதத்தை பாருங்கள்.... சிங்கள பெளத்த பயங்கரவாதம் இலங்கையில் எப்படி அட்டூழியம் பண்ணுதோ............ அதப்போல இந்தியாவில இந்துத்துவ வெறியும் அதின்ர பயங்கரவாதமும் எப்படி இருக்கிறதெண்டு பாருங்கோ..................... என்ன கொடுமை.......................... :rolleyes:

இதுபோல சாதிய ரீதியாவும் மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கும்.................... மதப்பயங்கரவாதத்துக்கும் ஒவ்வொருநாளும் ஆளாகிக்கொண்டிருக்கினம் இந்தியாவில...................................

collage.jpg

கட்டுரைய படிக்க இங்க போங்கோ........

http://www.nyu.edu/classes/keefer/joe/reuben2.html

இந்துத்துவ பயங்கரவாதத்த பற்றி வேற தெரிஞ்சிருந்தா இங்க யாராவது அதப்பற்றி எழுதுங்கோ............ எவ்வளவு கொடூரமான செயல்கள மதத்தின்ர பேரில செய்யினம்................ அந்தளவுக்கு மதப் பித்து பிடிச்சிருக்கா இவைக்கு????????????????????? மனுசன மனுசனே கொல்லுறதுக்கு பேர்தான் மதமா???????? சீ................ இப்பிடி மதவெறி பிடித்த ஆக்களையும்.............. அவைக்கு வழிகாட்டுறவையையுமு்................. தண்டிக்கோணும்........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் மியோவ்!!!! உங்களுக்கு மற்ற மத பயங்கரவாதிகளை கண்ணுக்கு தெரியேல்லயாக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகள் கிறிஸ்தவ பயங்கரவாதிகள் இப்புடி உலகம் முழுக்க இருக்கினமெல்லோ ஏன் உலக பொலிஸ்காரர் மத்தியகிழக்கிலை பாஞ்சு பாஞ்சு அடிக்குறதுக்கு காரணம் ஜனநாயகத்துக்காகவோ இல்லை தனிய எண்ணைக்காகவோ இல்லையுங்கோ அங்கை முக்கியாமாய் தொக்கி நிக்கிறது மதந்தானுங்கோ பின் லாடன்ரை கோரிக்கைகளை நல்லவடிவாய் அவதானிச்சுப்பாத்தியளண்டால் தெரியும் இப்ப என்ன சண்டை நடக்குதெண்டு

எதுக்கெடுத்தாலும் எல்லாருக்கும் ஒரு இளிச்சவாய் இந்துமதம் எல்லாரும் மத்தளம் மாதிரி அடிக்குறதுக்கு உங்களுக்கு இந்துமதம் பிடிக்கேல்லையெண்டால் ஒரு சூட்கேசும் கோட்டு சூட்டும் காணுந்தானே வீடுவீடாய் போய் கதவை தட்டுங்கோவன் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் மியோவ்!!!! உங்களுக்கு மற்ற மத பயங்கரவாதிகளை கண்ணுக்கு தெரியேல்லயாக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகள் கிறிஸ்தவ பயங்கரவாதிகள் இப்புடி உலகம் முழுக்க இருக்கினமெல்லோ ஏன் உலக பொலிஸ்காரர் மத்தியகிழக்கிலை பாஞ்சு பாஞ்சு அடிக்குறதுக்கு காரணம் ஜனநாயகத்துக்காகவோ இல்லை தனிய எண்ணைக்காகவோ இல்லையுங்கோ அங்கை முக்கியாமாய் தொக்கி நிக்கிறது மதந்தானுங்கோ பின் லாடன்ரை கோரிக்கைகளை நல்லவடிவாய் அவதானிச்சுப்பாத்தியளண்டால் தெரியும் இப்ப என்ன சண்டை நடக்குதெண்டு

எதுக்கெடுத்தாலும் எல்லாருக்கும் ஒரு இளிச்சவாய் இந்துமதம் எல்லாரும் மத்தளம் மாதிரி அடிக்குறதுக்கு உங்களுக்கு இந்துமதம் பிடிக்கேல்லையெண்டால் ஒரு சூட்கேசும் கோட்டு சூட்டும் காணுந்தானே வீடுவீடாய் போய் கதவை தட்டுங்கோவன் :unsure:

அதுசரிங்கோ உங்களுக்கு இதவிட்டா வேற என்ன தெரியும்..................... பார்ப்பன மதத்தின் (இந்துத்துவத்தின்ர) போலித்தனத்த சொன்னோடன ஏன் அந்த மதத்தில இல்லையா இந்த மதத்தில இல்லையா எண்டு அழுகுண்ணி ஆட்டம் ஆடுறத விட்டா வேற என்ன தெரியும்.......................... :D:D

எல்லா மதப் பயங்கரவாதத்தையும் தான் எதிர்க்கிறம்..... இஸ்லாமிய பயங்கரவாதம்: மட்டும் தான் இருக்கெண்டு நினைக்கிற ஆக்களுக்கு இந்துத்துவ பயங்கரவாதத்தையும் சொல்லணுமில்ல..... அதுக்குத்தான் இது............... நான் கோர்ட் சூட் ஒண்டும் போடத் தேவைல்ல..... வீட்டுக் கதவைத் தட்டவும் தேவைல்ல..... நாங்க தான் சொல்லுறமில்ல....... மதம் எண்ட மனுசன மனுசன் கொல்லுற பயங்கரவாதத்துக்கு எதிரியள் நாங்களெண்டு பிறெகன்ன............................ காசுக்காகவும் வயித்துச் சாப்பாட்டுக்காகவும் அற்ப சுகங்களுக்காகவும் பார்ப்பன மதத்துக்கு (இந்து எண்டு சொல்லுற மதம்) மாறின ஆக்கள் மாதிரி பிறகு அந்த பார்ப்பன மதத்தில இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறின ஆக்கள் மாதிரி......................... நாங்கள் மாற மாட்டம்................... இந்துத்தவப் பயங்கரவாதத்தையும்..... அதினஇர போலித் தனங்களையுமஇ....................... அது தமிழற்ற வரலாற்று சிதைச்சு தமிழற்ற தனித்துவத்த சிதைக்க முற்படுற சதியள அம்பலப்படுத்தத் தான் இந்தத் தலைப்பு......................... :D:D:lol::lol:

பார்பஆன மதம் (இந்து மதம் எண்டு சொல்லிக்கொள்ளுற மதம்) இளிச்சவாய் மதமில்ல......... அது தமிழர இளிச்சவாயளாக்கியிருக்கிற மதம்........................... :rolleyes:

Edited by poonai_kuddy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்துத்துவ (பார்ப்பன மதம்) பயங்கரவாதத்தின்ர கொடூரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிணத்துத்தவளை மாதிரி ஒரு சுற்றுவட்டத்துக்குள் நிண்டு கத்தாமல் பரவலாய் நிண்டு யோசியுங்கோ நீங்கள் குறிப்பிடும் இடங்களில் அரசியல்தான் மத உருவில் தலைவிரித்தாடுகின்றது அதே போல்தான் அரசியல்வாதிகள் தங்கள் இலாபத்திற்காக மதத்தையும் சாதியையும் கையிலெடுத்துள்ளார்கள் இதில் பலிக்காடா ஆவது மியாவ் போன்ற உங்களைப்போன்றவர்களே

இந்து மதம் என்னும் அடையாளத்தின் மூலம் தான் இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன.இந்தியா உயர் சாதி ஆளும் வர்க்கம் அதன் மூலம் தான் இந்தியாவை ஆண்டு வருகிறது.இந்திய காலனி ஆதிக்கத்தின் பின் இந்தியா என்னும் நாட்டை ஆளுவதற்காகத் தான் இந்து மதம் உருவாக்கப்பட்டது.மக்களிடம் இருந்த பல்வேறு மதங்களை பார்ப்பனர்கள் தமது ஆகம மத்திற்க்கு சுவீகரிதுக் கொண்டார்கள்.அதற்கு எதிராக நிற்பது ஒரு சில தேசிய இனங்கள் தான்.

இங்கே இந்து மதம் என்பதே இந்துதுவா என்னும் அரசியல் வடிவமாக இருக்கிறது.மதம் என்பது எங்கும் தனித்து இயங்குவதில்லை, அரசியலினூடாகவே இயங்குகிறது.இந்திய துணை ஜனாதிபதி ஏன் ஜயானந்த சரஸ்வதி என்னும் கொலைகாரனின் காலில் விழுந்து வணங்க வேண்டும்? அது சிறிலங்காவில் பவுத்தமதமாகவும் ,இந்தியாவில் இந்து மதமாகவும் அமெரிக்காவில் அடிப்படைவாத கிரிதுவமாகட்டும் ஆப்கானிஸ்தானில் இசுலாம் ஆகட்டும்.எங்கெல்லாம் மதம் அரசியல் அரியணையில் இருக்கிறதோ அங்கெல்லாம் அடக்குமுறையும் பயங்கரவாதமும் நிலவுகிறது.

இந்து மத நாடா இருந்த நேபாளம் இப்ப மதச் சார்பற்ற நாடாகி அரசரின் ஆளும் உரிமை பறிக்கப்பட்டு மக்கள் ஜன நாயகாமாகி இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து மத நாடா இருந்த நேபாளம் இப்ப மதச் சார்பற்ற நாடாகி அரசரின் ஆளும் உரிமை பறிக்கப்பட்டு மக்கள் ஜன நாயகாமாகி இருக்கு.

அங்கு சனநாயகம் முளைத்து மூன்று இலை இன்னும் விடவில்லை அதற்குள் முடிவெடுத்து விடாதீர்கள் :)

The Real face of India, Gujarat massacre of Muslims and Modi

Ban The Hindu RSS In The United Kingdom

The RSS- Rashtriya Swaymsevak Sangh is a Hindu Extreamist Organisation in India and across the World..They aim to create a Hindu Superstate within India,they have openly Oppressed Sikhs,Muslims,Christians along with Dalits,GENOCIDE HAS BEEN CARRIED OUT ON ALL THESE MINORITIES WITHIN INDIA, Amnesty International and other groups document this http://www.awaazsaw.org/

Minorities are brutally killed by this group and their funding comes from Various sources across the UK.Groups such as Sewa International Hindu Swaymsevak Sangh,Bajrang Dal,and the VHP fund these groups openly.THEIR FUNDING NEEDS TO STOP,IF THE OPPRESION OF MUSLIMS ,SIKHS, CHRISTIANS, & DALITS(LOWER CASTE PEOPLE)IS TO END

Ban The RSS In The UK - Dalit Oppresion

Edited by narathar

Hindu Extremists Killing minorities in India (Part 1of 5)

This documentary shows the true face of Indian democracy and how the minorities are treated there.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

1984: Hindus even killed 3 years old Sikh children

1984 Indian State TERRORISM against minorities

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Brahmins terrorism in India against low cast people 1/7

பார்ப்பனப் பயங்கரவாதம் - இரத்த சாட்சியங்கள்

Unreported world india - "the broken people" part 1/3

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதத்தின் பெயரால் பல ஆண்டுகள் யுத்தமே செய்துள்ளனர் செய்து கொண்டும் இருக்கின்றனர். ஆனால் இந்துக்கள் மதத்தின் பெயரால் மதத்தைக் காக்க யுத்தம் என்று மனிதப் பேரழிவுகளை தந்தவர்கள் அல்ல..!

இந்து தர்மம்.. கொல்லாமை என்பதை முன்னிறுத்தும் ஒரு தர்மமாகும். உண்மையான இந்து தர்மத்தைக் கற்றுணர்ந்தவன்/ள் ஒருபோதும் உயிர்களைக் கொல்லுதல் மற்றும் வதைத்தலைச் செய்யான்/ள்..!

ஈழத்தில் ஆக்கிரமிப்புப் போர் புரியும் தரப்பில் சிங்கள பெளத்தர்களும் பிற சிங்களவர்களும் உள்ளனர்.. ஆனால் பெளத்தம் கொலை வெறி மிக்க மதம் என்று எந்த சிங்களவனும் பிரச்சாரம் செய்ததில்லை. ஏன் இந்துக்களோ அல்லது மதம் அற்றவர்கள் என்று சொல்வோரோ பெளத்த சிங்களவரின் கொலையை பெளத்தம் சார்ந்து கண்டித்ததில்லை. மாறாக பெளத்ததுக்குப் புகழ்பாடித் திரிகின்றனர்.

ஆனால் விடுதலைக்காகப் போராடும் தரப்பில் இந்துக்கள் மிகுந்து இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். முஸ்லீம்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்க... இந்து மதம் கொலை வெறி மிக்கது என்று சிங்களவன் சொல்ல நினைக்காவிட்டாலும் போராடும் தரப்புக்கு தம்மை சாதகமானவர்கள் என்று காட்டிக் கொள்ளும் துரோகிகள்; போராளிகள் தழுவும் மதத்தின் பெயரைக் கொண்டு இவ்வகையான பிரச்சாரங்களை முன்னெடுப்பது போராளிகள் தொடர்பில் அவர்களைக் கொலை வெறியர்கள் என்று காட்டிட வலுச் சேர்க்கிறது..!

உலகமே அறியும் ஈழத்தில் தமிழர்களில் இந்துக்களே அதிகம் என்று. இப்படியான விசமத்தனமான.. மதம் எதிர்ப்பு என்ற வெறிபிடித்த சுயநல ஓநாய்க் கூட்டம்.. எமது போராட்டத் தார்ப்பரியத்தை உணராமல்.. எமது போராளிகள் பெரும்பாலானோர் சார்ந்துள்ள மதத்தை பயங்கரவாதமாக்கி எமது எதிரியின் "தமிழர்கள் பயங்கரவாதிகள்" என்ற பிரச்சாரத்துக்கு மறைமுக ஆதரவு வழங்கி தமிழ் தேசிய தளத்திலேயே பிரச்சாரங்களை முன்னெடுப்பது மிகவும் கொடிய துரோகச் செயல் என்றே கருத வேண்டும்.

நாளை இப்படங்கள் சிங்களத் தளங்களில் "இந்துத் தமிழ் புலிகளின் இரத்தத்தில் ஊறிய கொலை வெறி" என்று தலைப்புடன் வெளிவந்தால் கூட ஆச்சரியப்பட முடியாது.

ஈழத்தமிழர்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க முனையும் புலம்பெயர்ந்த துரோகிகள் சிலர் அண்மைக்காலமாக "ஈழத்தில் தலித்தியம்" "இந்துப் பயங்கரவாதம்" "பார்பர்னிய எதிர்ப்பு" "யாழ் குடா வன்னி மட்டக்களப்பு என்ற பிரதேச வாதம்" "கலாசார மாற்றம் நாகரிகம் இழந்த மிருக வாழ்க்கைக்குக் கொண்டு செல்லும் புரட்சி நிலை" என்ற மறைமுக வடிவங்களூடு தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளனர்..!

இது குறித்து மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். இவர்கள் வெளிப்படையாக ஈழப்போராட்டத்தை எதிர்த்தால் தாம் மக்களால் வெளிப்படையாக இனங்காணப்படுவோம் என்பதால்.... மறைமுகமாக தமிழ் தேசிய ஆதரவு என்ற போர்வையில் குழப்பம் விளைவிக்கத்தக்க அரசியல் கருத்துக்களையும் மற்றும் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தும் வகையில் தமிழ் மக்களைப் பிரித்தாளும் யுக்திகளையும் விதைத்து வளர்த்து வருகின்றனர்.

உலகில் தனிமனிதன் செய்யும் தவறுகளுக்காக அவன் தழுவும் மதமோ நாகரிகமோ பொறுப்பேற்க முடியாது. பிள்ளை செய்யும் தவறுக்காக அப்பாவிப் பெற்றோர் தண்டனை அனுபவிப்பது போன்ற ஈனச் செயலை மத எதிர்ப்பு வெறி கொண்ட மனித நாகரிக சிந்தனைக்கு அப்பாற்பட்ட மனித உருவில் அலையும் விலங்குக் கூட்டங்கள் அரங்கேற்றி வருகின்றன..! :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே இந்து மதத்திற்கெதிராக கருத்தெழுதுபவர்களே ஒளிப்படம் இணைப்பவர்களே !!!கொஞ்சம் கவனியுங்கள் ஒருகாலத்தில் ஒல்லாந்தர்,போர்த்துக்கீசர்,

இங்லாந்துக்காரர் ஆசிய நாடுகளை கைப்பற்றிய பின் மதரீதியாக மொழிரீதியாக அம் மக்களை துன்புறுத்தி சித்திரவதை செய்ததை நீங்கள் அறியவில்லையா?அவர்கள் தங்கள் மதத்தை திணிப்பதற்கு எவ்வளவோல்லாம் செய்தார்கள் சிங்களவனை விட கொடுமை செய்தவர்கள் பழைய வரலாறுகளை புரட்டிப்பாருங்கள் அதற்காக இன்று நடக்கும் அதர்மங்களுக்கு வக்காளத்து வாங்கவில்லை

இந்தியாவில் நிலவும் இந்துதுவா என்னும் இந்து மதம் தழுவிய பயங்கரவாதாம் பற்றியே மேல் உள்ள இணைப்புக்கள் சொல்கின்றன.அவை பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம் இந்துத்வா என்னும் கொடிய அரசியல் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.ஈழத்திலும் தமிழர் என்னும் அடையாளத்தைத் தவிர்த்து இந்து என்னும் அடையாளத்தின் மூலம் இந்த இந்துத்வாக் கொள்கையைக் கொண்டு வந்து ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்களைடையேயும் பிளவுகளை உண்டு பண்ணும் சக்திகளை அடையாளம் காட்டவே மேற் குறிப்பிட சக்திகள் இந்தியாவில் ஆடும் ஆட்டம் என்ன என்பதைத் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

போராளிகளில் நான் இந்து நான் கிரிதுவன் நான் இசுலாமியன் என்று எவரும் சொல்வதில்லை. நான் தமிழன், எனது மொழி தமிழ் ,எனது தேசம் தமிழீழம் என்பதுவே தமிழ்த் தேசியம்.இதனை இங்கு வரும் இந்து மதவாதா சாதிய நாசிகள் இந்துப்போராளி கிருதுவப்போராளி என்று பாகுபாட்டை உருவாக்க முயலுகிறார்கள்.அத்தோடு பெரும்பான்மையாவர்கள் இந்துப் போராளிகளாம்.களத்தில் நிற்கும் எந்தப் போராளியும் தன்னை இந்து என்று அடையாளம் காண்பதில்லை.ஆனால் இவர்கள் அவ்வாறான பாகுபாட்டை உருவாக்கிறார்கள்.இந்த நச்சுக் கிருமிகள் முளையிலையே களையப் பட வேண்டியவை.இவர்களுக்கு யாழ்க் களம் தொடர்ந்தும் களம் அமைத்துக் கொடுப்பது ,மேலும் மேலும் இவ்வகையான பிளவுகளையே உருவாக்கும்.தமிழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை யாழ் சைவ உயர் குடியின் போராட்டமாகக் காட்ட விழையும் சில சக்திகளுக்கும் ,சிறிலங்கா அரசின் புலனாய்வு அமைப்புக்களுடன் இயங்கும் சில சக்திகளுக்கும் இவ்வாறான சாதிய சமய வேறுபாட்டை உருவாக்கும் கருதுக்கள் வெகு வாய்ப்பாக அமையும்.

நாம் தமிழர், எமது மொழி தமிழ், எமது தேசம் தமிழ் ஈழம்.

இங்கே இந்து மதத்திற்கெதிராக கருத்தெழுதுபவர்களே ஒளிப்படம் இணைப்பவர்களே !!!கொஞ்சம் கவனியுங்கள் ஒருகாலத்தில் ஒல்லாந்தர்,போர்த்துக்கீசர்,

இங்லாந்துக்காரர் ஆசிய நாடுகளை கைப்பற்றிய பின் மதரீதியாக மொழிரீதியாக அம் மக்களை துன்புறுத்தி சித்திரவதை செய்ததை நீங்கள் அறியவில்லையா?அவர்கள் தங்கள் மதத்தை திணிப்பதற்கு எவ்வளவோல்லாம் செய்தார்கள் சிங்களவனை விட கொடுமை செய்தவர்கள் பழைய வரலாறுகளை புரட்டிப்பாருங்கள் அதற்காக இன்று நடக்கும் அதர்மங்களுக்கு வக்காளத்து வாங்கவில்லை

ஒருவன் அன்று செய்தான் என்பதற்காக இன்றும் அதையே செய்யலாம் என்று சொல்வது என்ன நியாயம்.ஒரு அனியாயத்தின் மூலம் இன்னொரு அனியாயத்தை நியாயப்படுத்தி விட முடியாது.இந்தியாவில் இந்துத்வா இது தான் என்பதையே மேல் உள்ள இணைப்புக்கள் காட்டுகின்றன.உண்மைகள் உறைக்கும் தான்.

இவை எமக்கு பாடமாக இருக்கட்டும். நாம் தமிழர், நமது தேசம் தமிழீழம் என்பதன் அடிப்படையில் ஒன்று படுவதன் மூலமே சாதிய சமய ரீதியில் மக்களை பிளவு படுத்த முனையும் இந்த இந்துத்வாச் சக்திகளை இனங் கண்டு ஒதுக்குவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் நிலவும் இந்துதுவா என்னும் இந்து மதம் தழுவிய பயங்கரவாதாம் பற்றியே மேல் உள்ள இணைப்புக்கள் சொல்கின்றன.அவை பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம் இந்துத்வா என்னும் கொடிய அரசியல் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.ஈழத்திலும் தமிழர் என்னும் அடையாளத்தைத் தவிர்த்து இந்து என்னும் அடையாளத்தின் மூலம் இந்த இந்துத்வாக் கொள்கையைக் கொண்டு வந்து ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்களைடையேயும் பிளவுகளை உண்டு பண்ணும் சக்திகளை அடையாளம் காட்டவே மேற் குறிப்பிட சக்திகள் இந்தியாவில் ஆடும் ஆட்டம் என்ன என்பதைத் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

போராளிகளில் நான் இந்து நான் கிரிதுவன் நான் இசுலாமியன் என்று எவரும் சொல்வதில்லை. நான் தமிழன், எனது மொழி தமிழ் ,எனது தேசம் தமிழீழம் என்பதுவே தமிழ்த் தேசியம்.இதனை இங்கு வரும் இந்து மதவாதா சாதிய நாசிகள் இந்துப்போராளி கிருதுவப்போராளி என்று பாகுபாட்டை உருவாக்க முயலுகிறார்கள்.அத்தோடு பெரும்பான்மையாவர்கள் இந்துப் போராளிகளாம்.களத்தில் நிற்கும் எந்தப் போராளியும் தன்னை இந்து என்று அடையாளம் காண்பதில்லை.ஆனால் இவர்கள் அவ்வாறான பாகுபாட்டை உருவாக்கிறார்கள்.இந்த நச்சுக் கிருமிகள் முளையிலையே களையப் பட வேண்டியவை.இவர்களுக்கு யாழ்க் களம் தொடர்ந்தும் களம் அமைத்துக் கொடுப்பது ,மேலும் மேலும் இவ்வகையான பிளவுகளையே உருவாக்கும்.தமிழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை யாழ் சைவ உயர் குடியின் போராட்டமாகக் காட்ட விழையும் சில சக்திகளுக்கும் ,சிறிலங்கா அரசின் புலனாய்வு அமைப்புக்களுடன் இயங்கும் சில சக்திகளுக்கும் இவ்வாறான சாதிய சமய வேறுபாட்டை உருவாக்கும் கருதுக்கள் வெகு வாய்ப்பாக அமையும்.

நாம் தமிழர், எமது மொழி தமிழ், எமது தேசம் தமிழ் ஈழம்.

இந்திய மக்களுக்கு தங்களை தலைமையினை தீர்மானிக்க ஜனநாயக உரிமை உண்டு. அவர்கள் தங்கள் வாக்குகளால் தீர்மானிப்பார்கள்..இந்து மதம் சார்ந்த கட்சியா அல்லது காங்கிரஸ் போன்ற கடைந்தெடுத்த பிற்போக்குவாதக் கட்சிகளால் வளர்க்கப்படும் வர்க்க பாகுப்பாட்டு அடிப்படையில் மக்களை பிரித்தாளும் கட்சிகளா தம்மை ஆள வேண்டும் என்று.

பி ஜே பி இன்று இந்திய அரசிலில் பலமான எதிர்க்கட்சியாக மட்டுமன்றி இந்திய மக்களின் அபிமானத்தைப் பெற்ற கட்சியாகவும் மிளிர்கிறது..!

அதுமட்டுமன்றி பி ஜே பிக்கு ஈழத்தமிழர்கள் தொடர்பில் காங்கிரசை விட அனுதாபப் பார்வை உண்டு..! இந்துத்துவா பற்றி ஈழத்தில் இருந்து போராடப் பயந்து அந்நிய நாடுகளுக்கு ஓடி வந்தவர்கள் கொக்கரிக்க வேண்டிய நிலை இல்லை. இந்திய மக்கள் தாமாகவே தமக்குள்ள ஜனநாயக உரிமையைப் பாவித்துத் தீர்மானிப்பார்கள். இந்து மதத்தைப் பின்பற்றும் தலைவர்களால் கூட தாம் ஆளப்பட வேண்டுமா இல்லையா என்று..! அதை யாழ் களத்தில் வெட்டிக்கு சுய விளம்பரத்துக்கு இந்து மத எதிர்ப்புப் காழ்ப்புணர்ச்சிப் பிரச்சாரம் செய்வோரால் தடுக்க முடியாது.

-----------

ஈழத்தில் போராளிகள் போர்களத்தில் தாம் எம்மதத்தவர் என்பதை இனங்காட்டா விட்டாலும் அவர்களுக்குரிய மத உரிமை மறுக்கப்படுவதில்லை. கோயிலுக்குப் போகிறார்கள்... நூல் கட்டுகிறார்கள்.. கிறிஸ்தவ மதப் போராளிகள் தேவாலயங்களுக்குப் போகின்றார்கள்.. ஆசீர்வாதங்கள் பெறுகின்றனர். இந்து முறைப்படி திருமணம் செய்கின்றனர்.. கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்கின்றனர்..! ஆக மத எதிர்ப்பு என்ற நிலை அங்கில்லை..! மதத்திணிப்பும் அங்கில்லை. அவரவர் விரும்பும் மதத்தை அவரவர் பின்பற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உதாரணத்துக்கு மதவதனி அக்கா கூட பொட்டு அணிந்திருக்கிறார். பொட்டைத் தூக்கி எறி என்று தூக்கி எறியவில்லை. தமிழ்செல்வன் அண்ணாவின் துணைவியார் தாலியே அணிந்திருந்திருக்கிறார். இப்படிப் பல..!

அநேகர் பிறப்பால் இந்துக்களாகையால் இந்து மத அனுட்டானங்களைச் செய்கின்றனர்..! இதை போராளிகளோடு வாழ்ந்தால் இலகுவாக அறிந்து கொள்ளலாம். எந்தப் போராளியும் இன்னொரு போராளியின் மத உணர்வைப் பாதிக்க மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதில்லை..!

சாதி அடிப்படையில் கருத்துருவாக்கம் செய்பவர்களே.. அதற்கு எதிராகவும் தாம் உள்ளதாகக் காட்டிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. முன்னொரு தலைப்பில் தலித்தியம் பற்றிப் பேச வேண்டும் அப்படி ஒன்றிருக்கிறது ஈழத்தில் என்று வக்காளத்து வாங்கியவர்கள் இன்று.. சாதியம் பற்றிப் பேச இந்து மதத்தை அல்லது மதங்களை ஆதரிப்பது உதவுதாம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

இவர்களின் கபடநோக்கமே புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் எதிரும் புதிருமான சிந்தனைகளை விதைத்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களைப் பிளவுபடுத்தி பலவீனமான நிலையில் வைத்திருப்பதும்.. கலாசாரம் பண்பாடு என்று மக்கள் தாயக உணர்வோடு இருப்பதைக் கலைத்து மக்களை மேற்குலக சுயநல நாகரிகத்துக்குள் தள்ளிவிட்டு தாயக உணர்வை சீரழித்து இம்மக்களின் ஆதரவை தாயகத்தின் பால் இருந்து சிறுகச் சிறுக அகற்றுவதே.

எனவே இப்படியான பிரச்சார யுக்திகளோடு இலவச களங்களிலும் வலைப்பூக்களிலும் உலாவும் மத எதிர்ப்பு தலித்தியவாத வக்காளத்துக்கு குழுவினர் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருப்பதுடன் இவர்களுடைய கருத்துக்களின் நோக்கங்களை அடையாளம் கண்டு உள்வாங்க வேண்டும்.

வலைப்பூ ஒன்றில் காணப்பட்ட (தமிழ் தேசிய விரோதிகளால் இயக்கப்படும் வலைப்பூவில்) ஒரு கருத்தின் அடிப்படையில் அமையும் மோசமான கருத்தொன்றை மறைமுகமாக ஈழப் போராட்டத்தை உயர் சாதியினரின் விடுதலைப் போராட்டம் என்று இங்கு ஒருவர் உச்சரிப்பதானது அநாவசியமாக அக்கருத்தை இங்கு வெளிப்படுத்தி மறைமுகமாக அதை பரப்புவதை செய்ய விளைவதாகவே கருத நேரிடுகிறது. தலித்தியம் பேசும் குழுவினரின் முக்கிய குறிக்கோளும் இதுவே..! இங்கு நேரிடையாகச் செய்ய முடியாததை இப்படியான மத எதிர்ப்பு வாதம் என்ற போர்வையில்.. நாசூக்காக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இங்கு இந்துப் பயங்கரவாதம் என்று தலைப்பிட்டு பேசிக்கொண்டு அதே இடத்தில் எதற்கு இழுக்க வேண்டும் உயர்சாதியினர் நடத்தும் போராட்டம் என்ற வாதத்தை..???! இப்படியான கருத்துக்களை நேரடியாக இங்கு வைக்க முடியாததால்.. மறைமுகமாக அக்கருத்துக்களை இப்படியான விவாதங்களூடு திணித்துவிட சிலர் முற்படுகின்றனர். இப்படிப்பட்ட கபடத்தனங்கள் தொடர்பில் எல்லோரும் விழிப்போடு இருப்பது அவசியம். இவ்வாறான இந்துப் பயங்கரவாதம் என்ற கருத்துக்கள் தலித்தியம் பேசும் பெரியாரிசும் பேசும் இடங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதையும் மக்கள் இனங்காண வேண்டும். இவர்களே கலாசாரம் நாகரிகமற்ற விலங்கு நடத்தை உள்ள மக்கள் கூட்டத்தை உருவாக்கும் வகையில் சமூகப் புரட்சி என்று ஊளையிட்டும் வருகின்றனர். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குஜாராத் மற்றும், அதற்கு அருகே உள்ள பகுதியில் மட்டும் தான் பெரும்பாலன இவர்கள் சொல்லுகின்ற நடவடிக்கைகள் நடக்கின்றதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. ஒருவன் குறித்த மதத்தைக் கொண்டிருந்தால் அவன் தழுவியிருக்கின்ற மதப்பிரிவினர் அனைவரையும் குற்றம் சாட்டுவது எவ்வகை நியாயமானது என்பதை இப்பகுத்தறிவாளர்களிடம் இருந்து பகுத்தறிய முடியவில்லை. அதை ஏதோ மதக் கொள்கை போலக் காட்டுகின்ற வார்த்தை நயவஞ்சகர்கள்.

குஜராத்தில் நடக்கின்ற கலவரங்கள் அது சார்ந்த கொலைகள் என்பன இந்தியா பாகிஸ்தான் முரண்பாடாகவே வெளிப்படுவதுண்டு இந்தியாவில் ஒரு குண்டு வெடித்தால் பதிலுக்கு பாகிஸ்தானிலும் குண்டுகள் வெடிக்கும். இது வழமையானவை. ஆனால் இரு தரப்பும் தங்களுக்குத் தெரியாதது போலவும், அனுதாபமும் தெரிவித்துக் கொள்ளும்.. மும்பாய் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பாக இருந்த தாவூத் இப்ராககிம் இந்தியாவில் இனக்கலவரங்களைத் தூண்டி விடுவதன் மூலம், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களைக் குழப்பமடையச் செய்து, நாட்டைப் பிளவுபண்ணும் வேலைகளில் ஈடுபடுபவன். அவனது குழுவில் நடிகை நக்மா, சஞ்சய் தத் போன்ற இந்து நடிகர்களும் இருப்பதை உணர்ந்து கொள்வதன் மூலம், அவர்கள் பாகிஸ்தானின் தேவைகளுக்காகச் செயற்படுகின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் தலையிடி, காய்ச்சல் வந்தாலே உடனே இந்துக்கள் தான் பொறுப்பு என்று ஒப்பாரி வைக்கின்ற திராவிடக் கும்பல்கள் இதை மட்டும் விட்டு வைப்பார்களா?

சோபா சக்தி போன்ற சிலர் தலித் என்ற பதத்தை வைத்து அரசியல் குளிர்காய முனைந்தது போன்றே, பார்ப்பானத்தின் மீதான குற்றச்சாட்டாகச் சிலர் சொல்லியிருப்பதும் பொருந்துகின்றது.

சைவ வைணவ முறைகள் வேறு வேறானவை. கிராமங்களில் வழிபடும் லட்சக்கணக்கான குலதெய்வங்கள் வேறு வேறானைவை. அவைகளை வழிபடும் முறையும் வேறு வேறானவை. அந்தந்த சாதிகளுக்கு என்று தெய்வங்கள் உண்டு வழிபடும் முறைகள் உண்டு. சித்தர்கள் வழி வேறுவகையானது. ஒவ்வொரு தரப்பின் வாழக்கை முறையும் வேறுவேறானது. வேதங்கள் ஆதிக்கம் செலுத்தியது எல்லவிடத்திலும் இல்லை. இந்து மதம் என்னும் மாயக்குடைக்குள் மேற்கண்ட அனைத்து தரப்புக்களையும் அடக்கிவிட முடியாது.

ஏனைய மதங்களின் தோற்றுவாய்கள் ஒரு மூலத்தை கொண்டுள்ளது. யேசுநாதரரை மூலமாக கொண்ட கிறிஸ்தவம் நபிகளை மூலமாக கொண்ட இஸ்லாமிய மதம் புத்தரை மூலமாக கொண்ட பொளத்த மதம் போன்றனவற்றை குறிப்பிடலாம். காலப்போக்கில் இந்த மதங்கள் சில பிரிவுகளாக மாறி (உதாரணமாக கிறிஸ்தவ மதத்தில் சில பிரிவுகள் உள்ளன. ) உள்ளது என்பவைகளுக்கு ஒரு நதி மூலத்தை இனம் காண முடியும்.

இந்து மதம் என்பது மேற்கண்ட மதங்களின் அடிப்படைத்தன்மையை கொண்ட ஒன்றல்ல. அதற்கென்று ஒரு நதிமூலம் கிடையாது. பல மக்கள் பிரிவுகளையும் அவர்கள் வழிபாடுகள் வாழக்கை முறைகளையும் ஒரு குடைக்குள் அடக்க முற்படும் ஒரு அதிகார மையத்தின் அடயாளப்பொருள் தான் இந்து மதம் .

இந்து மதம் என்ற ஒரு குடைக்குள் ஒரு தலித்தையும் ஒரு பிராமணனையும் சரிசமனாக உட்கார வைக்க முடியுமா? கீழ்சாதிகளின் கடவுள் என்ற கருப்பண்ண சாமியையும் கிருஷ்ணனனையும் அருகருகே வைக்க முடியுமா? முடியாதளவுக்கு வேதம் கோட்பாடுகளை விதித்து வைத்துள்ளது. அந்த வேதம் இந்துமதத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இந்த அடிப்படையில் இந்து மதம் என்னும் குடைக்குள் வாழவேண்டிய கட்டாயம் 17 மில்லியன் தலித்துக்களுக்கு இல்லை. அவர்கள் வழிபடும் சாமிகளுக்கு இந்து மதத்துக்குள் இடம் தேவை இல்லை. இருப்பில் இடமும் இல்லை.

ஒருவன் தனது மன அமைதிக்காக தனது குலதெய்வத்தை வணங்கினால் அவனது குலதெய்வமும் அவனது வண்க்க முறைகளும் இந்துமதமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு அது இந்து மத வழிபாடு தான் என்பதை நிறுவக்கூடிய நதிமூலம் எதுவும் இல்லை.

முருகன் என்ற ஒரு கருப்பொருளின் நதிமூலத்தை எடுத்தால் ஒன்று சரவணப்பொய்கையில் பிறந்ததாக சொல்லப்படுகின்றது. என்னுமொன்று தென்னாட்டு சித்தர்கள் வழியில் முருகு என்பது கெந்தகத்தை குறிப்பது. உயிர்காக்கும் மருந்துக்கு பயன்பட்ட மூலப்பொருள். அதில் இருந்து தோற்றம் பெற்றதாக சொல்லப்படுகின்றது. என்னுமொன்று வேலுடன் நிற்கும் காவல் தெய்வம். என்னுமொன்று தமிழ்ச்சங்கத்தில் புலவராக இருந்த தமிழ்ப்புலவர் என்று சொல்லப்படுகின்றது. நதிமூலங்களின் முரண்பாடுகள் இவ்வாறு இருக்க அவற்றை ஆராய்ந்து ஒரு உண்மைத்தன்மையுடன் வரையறை செய்வதை விட்டு விட்டு முருகனை தூக்கி கொண்டு போய் இந்து மதத்துக்குள் வைத்துவிட்டால் சரி என்று நினைப்பவர்களை என்னவென்று சொல்வது? முருகன் கடவுளாக இருந்தாலும் அவன் குறத்தியை கலியாணம் கட்டினான் ஆனால் மனிதனாக பிறந்த ஒரு பிராமணணன் குறத்தியை தொட்டால் தீட்டு என்கின்றானே. இது தானே இந்து மதம்.

ஈழத்தில் எத்தனையோ கோயில்கள் உண்டு. உதாரணமாக வன்னியில் ஏராளமான கோயில்களில் உள்ளன அதன் வழிபாட்டு முறைகளுடன் வேதங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. வேதத்தில் வரும் கடவுள்களான இந்திரன் வருணன் அக்கினி போன்றவைகளை அறிந்ததில்லை. புத்தகங்களுடாக புராணக்கதைகள் ஊடாக அறிந்துகொள்ளப்படும் வேதங்களுக்கும் அவரவர் தாம் தாம் வழிபடும் சிறுதெய்வ வழிபாட்டுக்கும் என்ன சம்மந்தம்? ஈழத்தில் இன்னும் எத்தனையோ கோயில்களில் பிராமணன் பூசை செய்வதும் இல்லை வேத மந்திரங்கள் ஓதப்படுவதும் இல்லை.

இந்து மதம் என்னும் பதம் காலனித்துவ காலத்தின் பின்னரான தோற்றப்பாடு என்பதை யாவரும் அறிவார்கள். அதற்கு முந்திய நெடுங்காலமாக மக்கள் வழிபாடுகள் செய்து வருகின்றார்கள். அவைகள் எல்லாம் வேதங்களுடன் சம்மந்தப்பட்டவை அன்று.

வன்னியில் ஒருவன் ஒரு மரத்தின் கீழ் இருக்கும் தெய்வத்தை விதைக்கும் போதும் அறுவடை செய்யும் போதும் வணங்கி வருகின்றான் என்றால் அது அவனது மனசாந்தி. அவனுடடைய தன்மைக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்மந்தம்? இந்து என்ற குடைக்கு கீழ் அவனும் நரேந்திர மோடியும் ஒன்றாக வேண்டுமா?

மனுதர்மம் என்றால் என்னவென்று அறியாத மக்கள் பலர் ஈழத்தில் வாழ்கின்றனர். இந்துத்துவம் என்ற போர்வையில் அவர்களையும் ஒரு தவறான பாதைக்குள் தள்ளிவிடும் பதகத்தை அவரவர் சுயநலத்திற்காக ஏற்படுத்துவது நல்லதல்ல. இந்துத்துவமோ அல்லது மனுதர்ம கோட்பாடுகளோ இந்த நவீன காலத்திலும் மாற்றத்தை மறுக்கும் ஒன்று.

மேட்டுக்குடிகள் சைவத்துக்கென்று இருந்த தனித்துவங்களை இந்துத்துவமாக மாற்றுவது ஒன்றும் ஆச்சரியப்படவைக்கும் விடயம் அல்ல. அதற்காக இறைவழிபாட்டில் பற்றுக்கொண்டவன் எல்லம் இந்துத்துவத்தை தலையில் கட்டிக்கொண்டு அழவேண்டிய அவசியம் இல்லை.

எமக்கான வழிபாடுகளும் ஆன்மீக நெறிமுறைகளும் எமது தேசத்துக்குரியதாய் இனம்காணப்படுதல் அவசியமானது. அது அனைத்து தரப்பு மக்களையும் மதிப்பதாகவும் அன்பை போதிப்பதாகவும் இருத்தல் அவசியமானது. இந்துத்துவத்தின் கறை படிந்த பக்கங்களுக்கு சாட்சியாக பல கோடி கொடுமைகள் நாளாந்தம் தொடர்கின்றது. 17 மில்லியன் தாழ்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்களாக இந்தியாவில் வாழ்கின்றனர். இந்துத்துவம் குஜராத்தில் கோரதாண்டவம் ஆடுகின்றது. வழியில் போகும் சனியனை மடியில் தூக்கி போடுவது போல் இந்துத்துவத்தை இழுத்து எமது தேசதுள் போடாதீர்கள்.

இந்தியாவின் இந்துத்துவம் ஈழத்தில் நுளைந்தால் தான் ஒற்றுமைகள் மேலும் குலையும். இஸ்லாமியர் கிறீஸ்தவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் இடையிலான விரிசல் வளரும். பகை வளரும். ஈழத்தமிழர் என்ற ஒருமைப்பாட்டுக்கு இந்தியாவின் இந்துதுவம் தீ வைக்கும் செயலை எக்காரணம் கொண்டும் ஈழத்தமிழர்கள் அனுமதிக்க கூடாது. மேட்டுக்குடிகள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும் அதுவானது இந்துத்துவம் என்று வக்காலத்து வாங்கினாலும் பிரம்மாவின் நெற்றியல் இருந்து பிறந்ததாக வேதம் ஏற்றுக்கொள்ளாது. இதற்கு நல்ல உதாரணம் இந்துக்கள் இந்துத்துவம் என்று கூத்தாடினாலும் இந்திய அதிகார வர்க்கம் இலங்கை அரசுக்கு உங்களை அழிக்க ஆயுதம் வழங்கிக்கொண்டுதான் உள்ளது.

எமது தேசவிடுதலைப்போராட்டத்தின் மீது இந்துத்துவ பயங்கரவாத சாயத்தையோ அல்லது பார்ப்பன பயங்கரவாத சாயத்தையோ பூசிவிட்டு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போராட்டத்திற்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்த அரசு சார்பான மேட்டுக்குடிகளை சிங்கள அரசு பயன்படுத்தலாம் ஆனால் ஈழத்தமிழர்கள் விழிப்பாய் இருத்தல் வேண்டும். இந்தியாவின் இந்துத்துவ அதிகார வர்க்கமும் பார்பானியமும் எவ்வாறு சிங்களத்திற்கு உதவுகின்றது. தமிழர்களை அழிப்பதில் எவ்வளவு பங்கு வகிக்கின்றது என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்து நாளேட்டையும் ராம் சோ சாமி போன்றவர்களை எண்ணிப்பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்து என்ற சொல்லே இல்லை. இந்துக்கள் எனப் பெயர் வைக்கப்பட்டது பிறகு என இந்துக்கள் எனக் குறித்தவர்களை அழைப்பதைத் தப்பு என வாதிட்ட நாரதர் இப்போது, இத்தலைப்பில் இந்துத்துவம் பயங்கரவாதம் என தன்னுடைய வழமையான புகைச்சலை வெளிக்காட்டுகின்றார்.

எமது தேசவிடுதலைப்போராட்டத்தின் மீது இந்துத்துவ பயங்கரவாத சாயத்தையோ அல்லது பார்ப்பன பயங்கரவாத சாயத்தையோ பூசிவிட்டு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போராட்டத்திற்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்த அரசு சார்பான மேட்டுக்குடிகளை சிங்கள அரசு பயன்படுத்தலாம் ஆனால் ஈழத்தமிழர்கள் விழிப்பாய் இருத்தல் வேண்டும். இந்தியாவின் இந்துத்துவ அதிகார வர்க்கமும் பார்பானியமும் எவ்வாறு சிங்களத்திற்கு உதவுகின்றது. தமிழர்களை அழிப்பதில் எவ்வளவு பங்கு வகிக்கின்றது என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்து நாளேட்டையும் ராம் சோ சாமி போன்றவர்களை எண்ணிப்பார்க்கவேண்டும்.

இங்கே தான் இவர்களின் வேடிக்கைப் பேச்சு உண்டு. இஸ்லாமியரையும் கிறிஸ்தவர்களையும் சிங்களவர் மூட்டி விடுவது போல ஈழத்தமிழர்களையும், பார்ப்பானர்களையும், தமிழ் சாராத இந்துக்களுக்கிடையேயும் பகையை மூட்டி விட இத்திராவிடக் கும்பல்கள் முயல்கினறார்களே, அதை எங்கனம் சொல்வது?

இந்துத்துவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானது எனக்காட்டுவதற்கே இந்தத் திராவிடப் பூசாரிகள் முயல்வது மட்டும் தெரிகின்றது. இக்கருத்தாளரும் சில துரோகிகளைக் காட்டி அனைத்து இந்துக்களும் தமிழீழ விடுதலைப் போருக்கு எதிரானவர் போலக் காட்ட முனைகின்றார்.

அதிமுக தலைவியும் ஒரு திராவிடக்கட்சி சார்ந்தவர் தானே, அவ்வாறே ராமசாமியின் பேரன் இளங்கோவன் மதச்சார்பற்ற கட்சியில் இருக்கின்றார். பாலசுப்பிரமணியன், போன்ற மதச்சார்பற்றவர்களைச் சுட்டிக்காட்டி, நாஸ்திகவாதிகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் என நிறுவலாமே, திரு: சுகன்.

தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்றோம் என்று சொன்ன திருமாவளவன் போன்ற ஆதரவாளர்கள், இலா. கணேசன் போன்றவர்கள் ஈழமக்களுக்கு ஆதரவாக உணவுப்பண்டம் சேர்க்க முயன்றபோது, அதைத் தடுக்க அரும்பாடும், எதிர்த்தும் அறிக்கையும் விட்டார்கள். இவர்களின் இப்படியான செயற்பாடுகளால் மனம் நொந்து போன அவர்கள் வேறு பணிகளில் கவனம் செலுத்த் தொடங்கிவிட்டனர். ஒரு இந்திய மட்டத்துக் கட்சி, தம்மாலான உதவிகளைச் செய்ய முன்வந்தபோது தடுக்க முனைந்த இவர்களின் நோக்கம் என்ன?

திராவிடம் சார்ந்த அமைப்புக்கள் தான் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும், அல்லது அப்படி நம்ம வைக்க வேண்டும் என்ற எண்ணமா?

திருமாவளவன் மேலே நல்ல மரியாதையும், மதிப்பும் உண்டு. அவர் உணர்வுபூர்வமாக தரும் ஆதரவுக்குத் தலை வணங்குகின்றேன். ஆனால் இவ்விடயத்தில் எனக்குத் தெளிவாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தவறான புரிதல்களுக்காக கருத்துக்கள் சுகன் என்பவரால் இடப்பட்டுள்ளது.

இந்தியா ஈழப் பிரச்சனை தொடர்பாக பார்பர்னிய.. இந்துத்துவ அடிப்படையில் அணுகவில்லை. தனது பொருளாதார பிராந்திய வல்லாதிக்கம் என்பதை முன்னிறுத்தியே அணுகுகிறது.

ஒரு காலத்தில் சுப்பிரமணியம் சுவாமியும் சோவும் புலிகளுக்காக வக்காளத்தும் வாங்கியவர்கள் தான். அண்மையில் கலைஞர் கூறியது போல ஜெயலலிதா கூட வக்காளத்துக்கு வாங்கினவர் தான். ஏன் எதற்காக.. பார்பரினிய சிந்தனையுடனோ.. அல்லது இந்துத்துவ சிந்தனையின் பாலோ அன்றி.. தமது அரசியல் தேவைகளுக்காக.

இன்று காங்கிரஸ் எதிர்க்கிறது. அன்று இந்திரா ஆதரித்தார். அத்வாணி கூட ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் அக்கறை கொண்டிருந்த காலமும் உண்டு. ஆனால் இன்றைய மாறிவரும் உலக ஒழுங்கிற்கேற்ப இந்தியாவின் ஈழப்பிரச்சனை தொடர்பான அணுகுமுறை மாறி இருப்பதுடன் அதனை சிறீலங்கா அரசு தனக்குச் சாதகமாக்கி வருகிறது.

இதை அடிப்படையாகக் கொண்டு ஈழத்தில் போராடும் தமிழ் மக்களை இந்தியாவின் நிரந்தர விரோதிகளாக்க சிலர் பார்பர்னிய எதிர்ப்பு இந்து மத எதிர்ப்பு என்று ஈழப்போரட்டத்தின் தன்மையை இந்தியாவுக்கு எதிரானதாகக் காட்ட முனைகின்றனர்.

ஆனால் அண்மையில் த தே கூட்டமைப்பினரில் இருந்து புதிய அரசியல் துறைத்தலைவராக பதவியேற்ற பா. நடேசன் உட்பட இந்தியா ஈழத்தமிழரின் பிரச்சனையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனரே தவிர.. இந்தியா பார்பர்ன ஆதிக்க நாடு.. இந்துமத நாடு அது நமக்கு உதவாது. உதவும் என்று எதிர்பார்ப்பது வீண்.. என்று அறிக்கை விடவில்லை.. என்பதைக் கூர்ந்து நோக்க வேண்டும்.

சிறீலங்கா எவ்வாறு இந்தியாவின் நகர்வுகளை தனக்குச் சாதகமாக்க இராஜதந்திரக் காய்நகர்த்தலைச் செய்கிறதோ.. அதற்கு ஏற்றாற் போல் சிறீலங்காவுக்கு நலனாக அமையத்தக்கதாக.. புகலிடத்தில் உள்ள சில தமிழ் கூலிக்கும்பல்களும் இந்துமத எதிர்ப்பு, பார்பர்னிய எதிர்ப்பு என்ற பிரச்சாரங்களை முடுக்கிவிட்டு.. ஈழத்தமிழ் மக்கள் பற்றியும் அவர்களின் போராட்டம் பற்றியும் இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய மக்களிடம் ஒரு தவறான எண்ணக் கருவை ஊட்டி வருகின்றனர். இது சிறீலங்காவுக்கு மறைமுகமாக உதவும் ஒரு செயலே.

சிறீலங்கா மற்றும் சில முக்கிய நாடுகளின் உளவுக்குழுக்கள், தமிழ் கூலிகளைப் பயன்படுத்தி புலம்பெயர்தமிழ்களை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களை மட்டும் செய்யவில்லை. தமிழர்களுக்கு சாதகமான சர்வதேசச் சூழ்நிலை எழ விடாமலும் தடுக்க முயல்கிறது. அதன் பிரதான பணிக்கு தற்போது யாழ் களமும் இலக்காகி விட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

எமது போராட்டம் பிராந்திய மட்ட மற்றும் சர்வதேச ஆதரவை வேண்டி நிற்கும் இச்சந்தர்ப்பத்தில் 30 வருடகாலமாகப் போராடி வரும் காலத்தில் எழாதவை எல்லாம் ஏன் எழுகின்றன இன்று..! ஏன் எழ வேண்டும் ஈழத்துத் தலித்தியம்.. ஏன் எழ வேண்டும் இந்துமத எதிர்ப்பு.. ஏன் முனைப்புப் பெற வேண்டும் பார்பர்னிய எதிர்ப்பு.. ஏன் பெருக வேண்டும் மேலைத்தேய கலாசார பண்பாட்டுத் திணிப்புக் கருத்துகள்..???! ஏன் எழ வேண்டும் யாழ் குடா வன்னி மட்டக்களப்பு என்ற உச்சரிப்புக்கள்..???! ஏன் ஈழத்தமிழர்கள் அதிகம் கடைப்பிடிக்கும் இந்துமதம் கொலை வெறிபிடித்த மதமாகக் காட்டப்பட வேண்டும்..??! (அமெரிக்கா இஸ்லாமிய உலகை அப்படித்தான் இஸ்லாம் சார்ந்து காட்டி வருகிறது.. கொலை வெறியர்கள் என்று.. காரணம் தனது கடுமையான மனித உரிமைகளைக் கவனிக்காத இராணுவ நடவடிக்கைக்கு ஏதுவாக.. உலக மக்களின் மனிதாபிமானப் பார்வையை தனது செயலில் இருந்து திசை திருப்ப..!)

இதன் பின்னணிகளை ஆராய்ந்து பார்த்தால்.. அதன் பின்னால் சிறீலங்காவின் நலங்கள் பாதுகாக்கப்படுவது முதன்மை பெற்றிருப்பதை அவதானிக்கலாம்..! ஈழப் போராட்டம் இந்துமதத்தால் சந்தித்த நெருக்கடி என்ன..??! 30 வருடமாக ஈழத்தில் இல்லாத தலித்தியதை இன்று இருப்பதாக் காட்டி நிற்பது எதற்கு..??! பிரதேச வாதம் இன்றி 30 வருடம் எடுத்துச் செல்லப்பட்ட போராட்டம் இன்று எதற்காக இவ்வாறு உச்சரிக்கப்பட செய்யப்படுகிறது..??! இவற்றின் பின்னணி என்ன..??!

இவ்வாறான நிலைப்பாடுகள் கொண்ட சிலர் அதிக தமிழ் தேசியப் பற்றை வெளியிடுவதன் நோக்கம் என்ன..??! தமிழ் தேசியப் பற்று என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் பலவீனமாகச் சிந்திக்கத் தூண்டும் அரசியல் அறிக்கைகளைத் தயாரித்து பத்திரிகைகளுக்கு வழங்கி தமிழ் மக்கள் எதிர்பாராத கள நிகழ்வுகளைச் சந்திக்கும் போது சோர்வடையைச் செய்வதன் நோக்கம் என்ன..???!

இவற்றுக்கு எல்லாம் ஒரு காரணம் உண்டு...! அதை நாம் தெளிவாக உணர வேண்டும். எவரையும்.. எளிதில் நம்பி எமது போராட்டம் இன்று அடைந்துள்ள முக்கியமான இந்தச் சூழலில் அதனை நாசம் செய்பவர்கள் எம்முடனேயே வாதம் என்ற போர்வையில் தமது நாசகாரக் கருத்துக்களை நாசூக்காக விதைக்க அனுமதிப்பது குறித்தும் சிந்திக்க வேண்டியவர்களாகி விட்டிருக்கின்றோம். எல்லா விதத்திலும் எதிரியும் உளவாளிகளும் எம்மை அணுகிக் கொண்டிருப்பர் என்ற காலக்கணிப்பின் எண்ணத்தை நாம் ஒரு தடவை சிந்தித்துச் செயற்படுதல் நன்று..! :icon_idea:

Edited by nedukkalapoovan

ஆர் எஸ் எஸ் பிஜேபி ஆகியவற்றின் இந்துத்வா பயங்கரவாதம் என்ன செய்கிறது இந்தியாவில் என்று உண்மைகளைக் காட்டினால் ,இங்கிருக்கும் சிலருக்கு ஏன் குடையுது? :icon_idea:

இந்து மதமும் இந்துத்வாவும் அப்படியாயின் ஒன்றா? இவர்களுக்கும் ஆர் ஆர் எசுக்கும் பிஜேபிக்கும் என்ன சம்பந்தம்? :D

இந்து மதம் அப்படியானது இல்லை என்றால் ஏன் இவர்கள் உண்மைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள்?

Gujrat massacre

Edited by narathar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.