Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலிற்கு வந்த கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டுக்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் இறந்த பின்னருமா உங்களின் கேவலம் கெட்ட விமர்சனத்தை நிறுத்தவில்லை?

நாம் வைத்தது அவர் பற்றிய தனிப்பட்ட விமர்சனமல்ல. மக்கள் பிரதிநிதியாக உள்ள ஒருவர் பற்றிய மக்களின் எண்ணங்களில் எழத்தக்கவையே...!

கதிர்காமரோ நீலனோ இறந்த போது.. கண்ணீரா விட்டோம்...???! ஒரு மனிதன் இறந்த பின்னும் விமர்சனங்களை அடுக்கினோம் தானே..???! அதற்காக கதிர்காமரோ நீலனோ தமிழ் மக்களின் தொண்டர்கள் என்ற கருத்தியலைப் புகுத்த விளைவதாகவோ மகேஸ்வரனையும் அவர்களுக்கு இணையாக்குவதாகவோ காட்டாதீர்கள்..!

தினமும் எமது போராளிகள் வீரச்சாவடைகின்றனர். வீரச்சாவு நிகழ்வுகள் நடக்கின்றன. யாழில் வீரச்சாவு அறிவித்தல் 10 செய்தியோட ஒன்றாய்க் கிடக்கிறது. யாரும் அழுகிறோமா.. அதற்காக...??! ஆனால் பக்கம் பக்கமாக போராளிகள் வீரச்சாவடைந்து பெற்றுத்தரும் வெற்றிகளைப் பற்றி விமர்சிக்கிறோமா இல்லையா..???!

நீதி என்றால் அது எங்கும் எப்பவும் சமனாக இருக்க வேண்டும். நடுநிலை என்பது எப்பவும் அமைய வேண்டும்..! :rolleyes:

  • Replies 78
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். நீங்கள் இதை வைத்து நீதியையும் நடுநிலைமையமு; காப்பாற்றிக் கொலைகாரன் டக்ளசைத் தப்பிக்க விடுங்கள். அல்லது மறந்து விடுங்கள்.

ஒவ்வொன்றுக்கும் காரணமும் கதையும் சொல்வதொன்றும் கடினமானதல்ல. உங்களைப் பற்றி ஒரு குற்றச்சாட்டை வைத்து அதை நிருபிப்பது எனபதும் கடினமானதல்ல. ஆனால் அது எதிரிகளைத் தான் எமக்கு ஏற்படுத்தும்.

புரியும் என நினைக்கின்றேன். உங்களுக்கு விவாதம் தேவை என்றால் பிறிதொரு நாள் சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தனிப்பட்ட கருத்துக்கள் அப்புறம் எதிரிக்கு புலிகள் தான் கொலையைச் செய்துவிட்டு தங்கள் தளங்களில் நியாயம் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்று காட்ட ஏதுவாகிடும்..! இதனால் உண்மையான கொலையாளிகளும் சூத்திரதாரிகளும் இலகுவில் தப்பித்துப் போய்விடுவர்.

ஏலவே சிறீலங்கா இராணுவமும் பாதுகாப்பமைச்சும் புலிகள் மீது பழிபோட கடும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றன..! அதனால் தொடர்ந்து இது பற்றி விவாதிப்பதைத் தவிர்ப்போம்.

----------------------

மகேஸ்வரனின் இறுதி நேர்காணலே அவரைப் படுகொலை செய்யத் தீர்மானித்தது.

2007ம் ஆண்டு டிசம்பர் 30ம் நாள் கொழும்பில் உள்ள தனியார் தமிழ்த் தொலைக்காட்சியின் ஒன்றில் நடைபெறும் அரசியல் நிகழ்சியில் கலந்துகொண்ட ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன், யாழ் குடாநாட்டில் சிறீலங்காப் படையினர் மற்றும் துணை இராணுவக் குழுவான ஈபிடிபியினரின் நடவடிக்கைகள் குறித்து பகிரங்கமாகவே விமர்சித்திருந்தார்.

குறிப்பாக யாழ் குடாநாட்டில் அரச படைகள் மற்றும் ஈபிடிபியினர் அரங்கேற்றும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணமல் போதல்கள் போன்ற விடயங்களைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அன்றைய நிகழ்சியில் ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தாவையும் மகேஸ்வரன் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சராக வருவதற்காக ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தயாரித்த டக்ளஸ் தேவானந்தா, பெளத்த பீடாதிபதிகளிடம் ஆசீர்வாதம் பெற்று வந்தமை ஒரு வெட்கம் கெட்ட செயல் எனவும் இதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனவும் விமர்சித்திருந்தார்.

இந்த அரசியல் நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியத்திற்காகக் குரல் கொடுத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேர்காணலின் காட்சிகள் இடையிடையே போடப்பட்ட நிலையில், காட்சிகளில் பிரகாரம் பொதுமக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மகேஸ்வரன் நேரடியாகவே பதில்களை வழங்கியிருந்தார். குறிப்பாக ஆயுததாரி டக்ளஸ் தொடர்பில் அதிகளவு விமர்சனங்களை எழுப்பியிருந்தார்.

தியாகராஜா மகேஸ்வரனால் இறுதியாக வழங்கப்பட்ட தொலைக்காட்சி நேர்காணலே இவரின் படுகொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என கொழும்பில் உள்ள அரசியல் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல கெகலியவின் புழுகு கேட்டு கேட்டு புளித்து போய் விட்டது.

மைக்ரோ ரக பிஸ்டலே பயன்படுத்தப்பட்டுள்ளது அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

[Tuesday January 01 2008 02:55:17 PM GMT] [யாழ் வாணன்]

ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாராஜா மகேஸ்வரனை கொலைச்செய்வதற்கு மைக்ரோ ரக பிஸ்டலே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பராளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் மீது அவரது மெய்பாதுகாவலர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் அவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த துப்பாக்கிதாரி வத்தளையில் வாடகை வீடொன்றிலேயே தங்கியிருந்துள்ளார் அந்த வீடும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரøன கொலைச்செய்வதற்கு மைக்ரோ ரக பிஸ்டலே பயன்படுத்தப்பட்டுள்ளது விடுதலைப்புலிகள் மட்டுமே இந்த பிஸ்டலை பயன்படுத்துகின்றனர் புலிகளிடமே விசேட பிஸ்டல் குழுக்கள் இருக்கின்றது

ஊடக மத்திய நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

தன்னுடன் ஒத்துவராத (தமிழ்) அரசியல்வாதிகளை, தமிழர்களின் எஞ்சியிருக்கும் ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்ற முற்படும் மனிதாபிமானச் செயற்பாட்டாளர்களை பழிவாங்குவதில், ஈவு இரக்கமில்லாமல் தலைவிரித்தாடும் அளவுக்கு மகிந்தவின் கொடுங்கோல் ஆட்சி சென்றுவிட்டது. "பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்ற மகாகவி பாரதியார் வாக்கின் உண்மைப் பொருளை மகிந்தவும் அவரது ஏவல் நாய்களாகச் செயற்படும் ஒட்டுக்கும்பல்களும் உணர வைக்கின்றன.

90களின் இறுதிகளில் யாழில் சிறிலங்காப்படைகளுடன், ஈபிடிபி கூலிகள் இரத்த வெறி பிடித்து பத்திரிகையாளர்கள், வர்த்தகர்கள், அப்பாவிப் பொதுமக்கள் என வேட்டையாடித் திரிந்த வேளையில், தனி மனிதனாக யாழிலிருந்து ஈபிடிபி கூலிகளுக்கு சிம்ம சொப்பனமாக வலம் வந்தவன் இந்த மகேஸ்வரன்.

பல தடவை ஈபிடிபி கூலிகளின் கொலை முயற்சியில் தப்பியவன். அவனது வியாபார பின்னனி ஒரு புறத்தே இருந்தாலும், எந்த தமிழ் அரசியல்வாதியும் அப்போது செய்யத் துணியாததை செய்து முடித்த சாதனையாளன். ஈபிடிபியின் அட்டகாசங்களை வெளியுலகிற்கு தனியே அம்பலப்படுத்தியவன்.

பின்னாளில் மகேஸ்வரனின் பெயரில் யாழிற்கு பொருட்களை கொழும்பிலிருந்து ஏற்றிய கப்பல் வியாபாரத்தில் வரும் வருமானத்தில் அரைவாசியை ஈபிடிபி கூலிக்கும்பலுக்கு கொடுத்தது என்பது உண்மையே. அப்படி கொடுத்திராவிடில் அங்கு ஈபிடிபி கூலிகள் பொருட்களை கொண்டு செல்ல விட்டிருக்காது.

மகேஸ்வரன் இன்று சிங்கள ஆட்சியாளர்களினால், அவர்களை ஒட்டி வாழும் கூலிகளை வைத்தே படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.

எம்மினத்திற்காக சிங்கள இனவெறியர்களினாலும், கூலிக்கும்பல்களினாலும் படுகொலை செய்யப்பட்டவர்கள், செய்த தியாகங்களுக்கு ஈடான தியாகத்தையே மகேஸ்வரனும் செய்திருக்கிறான். காலத்தில் அவன் செய்தவைகள் மறக்கப்பட முடியாதை.

எனக்கு ஒரு உறுதியான நம்பிக்கை எப்பவும் இருக்கிறது, எம்மின விடுதலையை எமக்கு எம்மின துரோகிகளே பெற்றுத்தருவார்கள் என்று. விடுதலை பெற்ற கிழக்குத்தீமோர், பொஸ்னியா, .. ஆகட்டும், அன்றி விடுதலைக்காக காத்திருக்கும் தென்சூடான் ஆகட்டும், விடுதளை அவர்களை நெருங்க வழி சமைத்தவைகள் அவ் அவ்வினத்து துரோகிகளே!! நாளை மலரும் நாட்டில் இவர்களது எச்சங்கள் கூட இருக்க இடமளிக்கக் கூடாது. கருவறுப்பதென்ன, கருவறையையே இல்லாது ஒழிக்க வேண்டும்.

இன்று எம்மினத்து துரொக்கக்கூலிகளினால் படுகொலை செய்யப்பட்ட எம்மவன் மகேஸ்வரனுக்கு அஞ்சலிகளை தெரிவிப்பதோடு, அக்குடும்பத்துக்கும் ஆழத்துயரிலிருந்து மீள் ஆண்டவன் வழி செய்வானாக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேடுகெட்டவர்கள் வழிபாட்டுத்தலங்களைக்கூட கொலைகூடமாக மாற்றுகின்றார்கள் அன்னாருக்கு என் அஞ்சலிகள்

மகேஸ்வரனின் இழப்பு தற்ப்போது எங்களுக்கு பெரும் இழப்பே .......

டக்கிளசை விட்டு வைப்பது தமிழர்களூக்கு நல்லது இல்லை.....

  • தொடங்கியவர்

Edited by மோகன்

2082Maheshwaran_body_Hospital_J.jpg

மேலே உள்ள படத்தில் மகேஸ்வரனை சுட்டவர் என சந்தேகப்படும்

யாழ்நகரைச் சேர்ந்த வசந்தன் என்பவர் சத்திர சிகிச்சைக்கு பின்

வைத்தியசாலையில் இருப்பதையும்

கீழே

மகேஸ்வரனின் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும்

அரசியல் கட்சி நண்பர்கள் ஆகியோரையும் காண்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர், அவர் எந்தப் பேரினவாதக் கட்சியில் இருந்தாலும் இன அழிப்பில் இருந்து தப்ப முடியாது என்பதற்கு இம்மரணம் ஒரு சான்று.

ஆரம்பத்தில் தன்னை தமிழ்த் தேசியத்துடன் அடையாளப்படுத்த மறுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் தனது இறுதி நாட்களில் முற்று முழுதான தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக் கொண்டதால் சந்திரிக்காவால் கொல்லப்பட்டர். அவ்வாறே இவரும் தமிழர்க்காக குரல் கொடுக்க ஆரம்பித்ததால் மகிந்த டக்கிள்சு மூலமாகக் கொன்றுவிட்டான்.

அவரது தனிப்பட்ட வியாபார விஷயங்கள் பற்றி இப்போது பேசுவது நாகரீகமில்லை. அவர் ஒரு சிங்கள்ப் பேரினவாதக் கட்சியில் இருந்தாலும் அவர் அண்மையில் செய்த செயல்களை நாம் மறுக்க முடியாது.

சிங்களம் இன்னொரு தமிழ்க் குரலை அறுத்து எறிந்திருக்கிறது. இதைச் செய்வதற்கு இன்னொரு தமிழ்க் கோடரிக்காம்பு பயன்பட்டிருக்கிறது.

அவர் பிரிவால் துயருரும் அவரது மனைவி பிள்ளைகளுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த சிங்கள பேரினவாத கட்சிகளுடன் தமிழர்கள் கூட்டுச் சேர்ந்தாலும் இது தான் நிலமை.

அப்படி இருந்தும் மகேஸ்வரன் தனது ஊரான காரைநகருக்கு பல உதவிகளை செய்துள்ளார் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

உணவு பற்றாக் குறையான நாட்களில் தனது சொந்த செலவிலேயே காரைநகர் மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொண்டவர்.

அவரது குடுப்பத்தாருக்கு ஈழத் தமிழரின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் அவசரமாக இன்று நாடு திரும்புகின்றார்

1/2/2008 12:18:31 AM

வீரகேசரி நாளேடு - இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை காலை நாட்டிற்கு திரும்ப விருக்கின்றார்.ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் துப்பாக்கி பிரயோகத்தில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கட்சி முக்கியஸ்தர்கள் தொலைப்பேசியூடாக அவருக்கு நேற்றுக்காலையிலேயே தகவல்களை தெரிவித்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பலவீனம் காரணமாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலைச்செய்யப்பட்டுள்ளார

இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை காலை நாட்டிற்கு திரும்ப விருக்கின்றார்.ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் துப்பாக்கி பிரயோகத்தில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கட்சி முக்கியஸ்தர்கள் தொலைப்பேசியூடாக அவருக்கு நேற்றுக்காலையிலேயே தகவல்களை தெரிவித்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பலவீனம் காரணமாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலைச்செய்யப்பட்டுள்ளார

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கரி, சித்தார்த்தன் போன்றோரின் பட்டியலில் இடம்பெற வேண்டிய இன்னொரு இனத்துரோகி டக்ளசின் பெயரை ஏனோ மறந்து விட்டீர்கள் போல் இருக்கிறது.

இனத்தை விற்றுப்பிழைக்கும் இந்த ஈனத்துரோகிகளை பற்றிய மறதி தமிழர்களுக்கு வரக்கூடாத மறதி

ஐயா நான் மறக்கவில்லை. சங்கரியும் சித்தாத்தரும் ஜனநாயகத்துக்கு திரும்பியவர்கள் டக்ளஸ் இதுவரை ஐனநாயகத்துக்கு திரும்பாதவர். அத்துடன் அரசில் அங்கம் வகிப்பவர்.

மகேஸ்வரனின் யு.என்.பி யில் இருந்தாலு தமிழனாகவே வாழ்ந்தான்... யு.என்.பி யுடனும் தமிழர் விடயத்தில் விட்டுக்கொடுக்காமல் இருந்தவர். இவருடய சுயவா ழ்க்கையை விடுத்து பொதுவாழ்க்கையின் சிறப்பைப் பற்றிப் பேசுங்கள்

மனோ கனேசன் இருந்திருந்தால் நிச்சயம் இதே கொடுரத்தைத் தான் சிங்களம் செய்து இருக்கும்

கடந்த ஆண்டு தான் தமிழ் மக்களிற்கு மிகுந்த வேதனைகளையும் சோகங்களையும் இழப்புக்களையும் தந்து இன்றுடன் விடிகின்ற காலையுடன் தமிழ் மக்களிற்கு ஓரு உன்னதமான சந்தோசம் தருகின்ற நாளாக மலரட்டும் என்று எல்லோருமே எதிர்பார்த்து இயங்கத் தொடங்கி எண்ணி வெறும் 10 மணித்தியாலங்கள் கடந்திருக்கவில்லை

வெளிவந்த செய்தி முக்கியமாக பேரிடியாக இறங்கிவிட்டது.

ஆனால் நம்பத்தான் வேண்டியாகிவிட்டது …….

மீண்டும் கொலைகார வெறியர்களின் தமது தாய் மானங்களையே விற்றவர்களின் கொலைகார வெறியில் எமது மகேசுவரைனை நாமெல்லாம் இழந்துவிட்டோம்…..

அன்று வெள்ளிக்கிழமை எமது அண்ணைனை ( தமிழ்செல்வன்) இழந்த பொழுது இந்த வெள்ளிக்கிழமை விடியாமலேயே இருந்திருக்கலாம் என்று அங்கலாத்திருந்தோம்……

இன்று இந்த வருடமே பிறக்காமல் இருந்திக்கலாம் போல் உள்ளது…….

அதுவும் கோயில் வாசலில் …….

துமக்கு முன்னாலேயே மக்கள் துயர் துடைப்பவனை அழிக்கின்ற கடவுளரை கையெடுத்து தான் கும்பிட வேண்டுமா ????? ச்சி … கேவலம்….

ஏத்தனை நண்பர்கள் பிடிபட்ட பொழுதில் மீட்டெடுத்தவனுக்கு இன்று உயிர்; பறிப்பு ………..

ஓரேயொரு செய்தி மிக மிக தெளிவாக சொல்லப்படுகின்றது அது வேறெதுமில்லை சிங்களவனை நிம்மதியாக இருக்கவிடக்குடாது என்பதே.

தமிழ் மக்களின் கலாச்சாரத்தை மிகவும் சிறப்பாக சீரழித்து வரும்

சுpறிரங்கா போன்றவர்களின் கேவலங் கெட்ட தந்திரத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

குறிப்பாக தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து விதண்டாவாத கேள்விகளை கேட்டு அதன் முலம் அவர்கள் முலமாகவே அவர்களை கொலை செய்வதற்குரிய காரணத்தை அல்லது சுழலை

சுpங்கள அரசிற்கும் கூலிப்பட்டாளத்திற்கும் ஏற்படுத்திவருகின்றான். ஆகவே இப்படிப்பட்ட இனத்துரோகியின் செயலை இனங்கண்டு இவனை ஓதுக்குவதும் இவனுடைய இந்த கேவலங் கெட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதையும் நிறுத்திக் கொள்ளவது சிறந்தது.

எமது இனத்திற்காக தன்னாலான உதவிகளை சிங்கள வெறியர்களின்

சூழ்ச்சியில் இருந்தும் உதவிசெய்த ஓருவர் படுகொலை செய்யப்பட்ட பொழுதும் கூட தமது வழமையான கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகளை குறைத்ததாகவோ அல்லது நிறுத்தவோ முடியவில்லை இது போலத்ததான் ரவிராஐpயிற்கும் நிகழ்ந்தது.

இப்படிபட்ட கேலவ கலாச்சாரத்தை சீரழிக்கின்ற நிகழ்ச்சியை நிகழ்த்துபவர் வேறுயாருமல்ல ரங்காவே தான்.

இப்படியானவற்றை நிறுத்துவதற்கு ஓரேவழி தான் இவர்களை தனிப்பட்ட முறையில் நெருங்கி தண்டிப்பது தான்.

கடந்த மாதத்தில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்து சிறைக்கு அனுப்பப்ட்டனர் அப்பொழுது கூட அதனை செய்தியில் கூட வெளியிட முடியாத கேவலமானவர்கள் இந்த சக்தி தொலைக்காட்சியினர்.

அடுத்து எத்தனை பேரிற்கு நேற்றைய வருடப்பிறப்பை நிறுத்த முடிந்தது அ;ல்லது குறைக்கமுடிந்தது

தமிழினத்திற்காக செயற்பட்ட ஓருவனை ஈ.பி.டீ.பி படுகொலை செய்ந்தும் நேற்றைய வருடப்பிறப்பை

எத்தனை பேர் குறைத்திருப்போம் ?????

நான் எவர் மீதும் குறைசொல்லவில்லை இதற்கு சான்று நேற்று மாலை கொழுபில் உள்ள ஆலயங்களில்

கூடியிருந்த மக்களின் தொகையே சுட்டிக் காட்டும். குறிப்பாக பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலி; கூடியிருந்தவர்களின் எண்ணிக்கையே போதும் ????????

நெடுகாலபோவான் தயவு செய்து உங்களது தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களிற்கான அதி உயர்வு மதிப்பிடடை இறுதி மகேசுவரனின் இறுதிக்கிரிகை நடைபெறும் வரையாவது நிறுத்தும் இது அவரிற்காக அவரின் நட்புக்காக கேட்கவில்லை முக்கியமாக தமிழினத்திறகாக தன்னாலான உதவிகளை படுகொலை செய்யப்படும் வரை செய்து கொண்டிருந்த ஒருவருக்காக அல்லது ஒரு தமிழனிற்காக கேட்கிறேன் .

இவ்வாறு நான் கேட்பதற்கு நீர் விமர்சித்து எழுதலாம் பரவாயில்லை அதற்கு பதில் எழுதி இந்த வேதனையான வேளையில் கீழ்த்தரமாக செயற்றபடவிரும்பவில்லை என்பதுடன் ஓரு தமிழனின் படுகொலையின் முலமாக ஈ.பி.டி.பி அல்லது சிங்கள வெறி அரசின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு ஓரு போதும் தயாராக இல்லை

இவ்வாறான அதி உயர் மதிப்pடு சில வேளைகளில் இவரை தமிழரிற்கு எதிரானவராகவும் அடையாளம் காணப்பட உதவி செய்துவிடும்.

தமிழரில் எவர் கொல்லப்படாலும் கவலைப்படுவேன் ஆனால் சிங்களவனில் ஓரு அப்பாவி செய்தாலும் சந்தோசம்.

2001 ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் முதன் முதலா 17 ஆம் திகதி பெப்ரவரி பொங்கு தமிழ்

நுpகழ்விற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது தான முதன் முதன் முதலாக பழகின்ற

சந்தர்ப்பம் கிடைத்தது.;

சில பேர் இந்தக் களத்தில் கNஐந்திரனையும் ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களையும்

இந்த வேதனையான வேளையில் விமர்சிப்பது கவiயான விடயம் ஆனாலும் பலபேருக்கு தெரியாமல்

மகேசுவரனும் கNஐந்திரனும் தமிழ் மக்களிற்கும் ஆற்றிய பணிகளை இறுதியாக ரவிராயின் இறுதி நிகழ்வின் பொழுது நணபன் கNஐந்திரன் நினைவு கூர்ந்திருந்தார்.

2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக சில இடங்களில் கNஐந்திரனுடன் மகேசுவரனுக்காக வேலை செய்கின்ற ஓரு நிலைவந்திருந்த பொழுது எனக்குள் சில சந்தேகம் எழுந்திருந்தது அதாவது ஓரு சிங்கள

கட்சியை வளர்க்க இவர் ஏன் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் நிற்பான் என்று

இந்த கேள்வியை நண்பர் கNஐந்திரனிடம் கேட்கிறேன்.

ஆந்த நேரத்தில் யாழில் டக்கிளசின் கும்பலின் அட்டகாசம் தலை விரித்தாடிய நேரம் சிங்கள இராணுவ

கூலிகளின் கைகளில் மாணவர்கள் மாட்டுவார்களாக இருந்தால் மிச்சம் இல்லை சிங்களவனுக்கு அதரவு போல நடித்துக் கொண்டு சிங்கள கட்சியில் இருந்து கொண்டு செயற்படும் பொழுது சில சில காரியங்களை இலகுபடுத்திக் கொள்ளமுடியும் அதற்காக சிங்கள கட்சியை யாழ்பாணத்தில வளர்க்கமுடியாது. இதை அவர் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பொழுது எடுத்த முடிவோ போதுமானது.

அன்றைய நாட்களில் காரைநகரிற்கு ஏனைய கட்சி உறுப்பினர்கள் செல்வது என்பது நினைத்திட முடியாத விடயம் இதற்கு சிறந்த உதாரணம் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலுக்காக புளொட்

(1998 ஆண்டு வவுனியாவில் புளொட்காரர் அதே இராணுவத்டன் சேர்ந்து செய்த அட்டகாசங்கள் கொஞ்சமல்ல) உறுப்பினர்கள் தீவுப்பகுதிக்குள் நுழைய மறுத்த இராணுவம் பின்பு தீடிரென அரைகுறை சிங்களத்தில் பேசிய ஓரு தமிழ் குரலின் பின்பு தீவுப்பகுதிக்குள் உள் நுழைய விட்டு புளொட் உறுப்பினர்களை தாக்கியதில் அவர்கள் சென்ற வாகனத்தையும் பறித்திருந்தது டக்கிளசின் கும்பல்.

இதே போல 2000 ஆண்டு மகேசுவரனின் ஆதரவாளர்கள் சென்ற பொழுது ஆரம்பத்தில் எதிர்ப்பு காட்டிய பொழுது காவலரணில் .இருந்த டக்கிளசின் கும்பலின ஒருவன் சொன்னாம் இங்கு வருவது எனில் சவப்பெட்டிகளுடன் வரும்படி உடனேயே பெட்டிகளையும் எடுத்து ஆட்களை அனுப்பிவிட்டு கொழும்புக்கு தொடர்பு கொண்டு கதைக்கிறார் மகேசுவரன் பின்பு ஓருவாறு சிங்களய இராணுவ பாதுகாப்புடன் பிரச்சாரம் செய்துவிட்டு பாதுகாப்பாக வந்திருந்தனர் அவரது ஆதரவாளர்கள்.

இவ்வாறான வேளையில் டக்கிளசை எதிhத்து செயற்கூடிய வகையில் அடியாட்கள் எதுவும் அற்ற நிலையில் இருந்து செயற்பட்டிருந்தார்.

தயவு செய்து விமர்சனர்ங்களை நிறுத்தி அன்னாரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்Nபுhhம்.

பல வேளைகளில்

தமிழருக்காக குரல் கொடுத்த ஒரு ஆத்மா..........

Maheswaran_1.jpg

அன்னாரின் மறைவுக்கு அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவனின் கருத்துக்கள் அனைத்தும் உண்மை. ஸ்ரீ ரங்கா பற்றி பலருக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தையில் அவர் இருந்த வீடு கூடப் பாதுகாப்பற்ற ஒன்றே. அவரை வியாபாரி, அது இது என்று எல்லாம் சொல்வார்கள். ஆனால் அவர் தங்கியிருந்தது, ஒரு மாடி வீட்டின் கடைசி மாடியில்.

மகேஸ்வரன் வியாபாரியாக இருக்கலாம். ஆனால் அவர் தமிழரை விற்கவில்லை என்ற கருத்து மட்டும் உண்மை.

அவருக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரனின் இறுதி யாத்திரையில் அனைவரும் பங்குபற்ற வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் அழைப்பு

1/2/2008 10:06:56 PM

வீரகேசரி நாளே - மகேஸ்வரன் எம்.பி.யின் இறுதி யாத்திரையில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையின் தனித்துவத்திற்காக மனோதிடத்துடன் செயலாற்றி, தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக பரிந்து செயலாற்றிய தி.மகேஸ்வரன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இத்துரதிஷ்டவசமான மரணத்திற்கு வித்திட்ட பிரதான காரணி மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரசாங்கத்தின் மூலம் நீக்கப்பட்டமையேயாகும். தான் நம்பிக்கைகொண்டிருந்த கொள்கைகளுக்குப் புறம்பாக செயற்படாது வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின்போது அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தார். இதனால் தனது உயிரையே தியாகம் செய்ய வேண்டியேற்பட்டது.

மகேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இறுதிக்கிரியைகள் இன்று வியாழக்கிழமை நடைபெறும். மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நம் நாட்டு பெருமகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அன்றைய தினம் மாலை 4.00 மணிக்கு பொரளை பொதுமயான பூமிக்கு அனைவரையும் வருமாறு பணிவாக வேண்டி நிற்கின்றேன்.

தற்போது ரங்கா பற்றி பலரும் சந்தேகங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

சக்தி தொலைக்காட்சியல் தன்னைபற்றி தானே 90 வினாடிகள் ஒரு விளம்பரத்தை "Super Man" போன்ற வேடங்களில் தோன்றி காண்பித்து வருகின்றார்!

மலையக கட்சிகளுடன் பசில் மோதிய போது இவர் மலையகமெங்கும் விஜயம் செய்து"மின்னல் ரங்கா வாழ்க" என்ற பெயரில் சொந்தப்பணத்தில் (சக்தி தொலைக்காட்சியின் அனுசரனையில்) ஒழுங்கு செய்த ஊர்வலங்கள் கூட்டங்களில் மாலைகளுடன் வலம் வந்து மக்களின் கட்சிக்கெதிரான கருத்துகளை பதிவு செய்து தன் அரசியல் அபிலாசையை வெளிப்படுத்தியிருந்தமை அனைவரும் அறிந்ததே!

இறுதிப் பேச்சுவார்த்தைக்குக் கூட தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரும் அனுமதி மறுக்கப்பட்ட போதும் இவரை மட்டும் அரசு அனுமதித்தது!

தனக்கு போட்டியான அரசியல்வாதிகளை இவர் அரசுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டுகிறாரா?

இவர் குறித்து பொதுமக்கள் அரசியல்வாதிகள் அவதானத்துடன் செயற்படுவது நல்லது!

Edited by சாணக்கியன்

என்னதான் சிங்கள கட்சியில் இருந்தாலும் போராடும் தமிழர்களுக்கு ஆதரவாக ஓங்கி குரல் கொடுத்த மகேஸ்வரனுக்கு வரவேண்டிய இடத்தில் இருந்து அனுதாப அறிக்கையோ , அஞ்சலி அறிக்கையோ வரவில்லை. கொஞ்சம் மனதிற்கு நெருடலான வருத்தம் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.